இன்னும் தெளிவாக இருக்கும் வகையிலும் Roblox எப்படிச் செயல்படுகிறது என்பதை இன்னும் சிறப்பாக விவரிக்கும் வகையிலும் எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளைப் புதுப்பிக்கிறோம். நாங்கள் செய்கின்ற மாற்றங்களின் முக்கிய சுருக்கவுரை பின்வருமாறு:
- பயனர் விதிமுறைகள் மற்றும் கிரியேட்டர் விதிமுறைகள் உட்பட, பயன்பாட்டு விதிமுறைகளின் மொழியை எளிமையாக்கவும், அதன் பிரிவுகளை மறுசீரமைக்கவும் முயன்றுள்ளோம்.
- பிளாட்ஃபார்மில் பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் (UGC) உங்களுக்கு எப்படி வழங்கப்படுகிறது என்பதில் Roblox நிறுவனத்தின் பங்களிப்பைத் தெளிவுபடுத்துகிறோம். பொதுவாக, Roblox மூலம் செய்யப்படும் பர்ச்சேஸ்களுக்கு Roblox நிறுவனமே முதன்மை விநியோகஸ்தராகவும் ஆவணங்களின்படி விற்பனையாளராகவும் செயல்படுகிறது. அதாவது, Roblox பிளாட்ஃபார்மில் நீங்கள் எந்தவொரு உள்ளடக்கத்தையும் அணுகும்போது அல்லது வாங்கும்போது, அந்த உள்ளடக்கத்தை Roblox நிறுவனத்திடமிருந்தே பெறுகிறீர்கள். அந்தப் பர்ச்சேஸ்களுக்காக பயனர்களும் கிரியேட்டர்களும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பரிவர்த்தனையில் ஈடுபட மாட்டார்கள். Robux, பேமெண்ட்டுகள், வரி மற்றும் கிரியேட்டர் கட்டணம் தொடர்பான பிரிவுகளையும் நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
- EEA பகுதியில் உள்ள பயனர்களுக்கு மட்டும், நுகர்வோருக்கான விலகுதல் உரிமையைச் சேர்த்துள்ளோம்.
கிரியேட்டர் விதிமுறைகள்
பிற்சேர்க்கை A (ஜப்பான்)
பிற்சேர்க்கை B (தென் கொரியா)
பிற்சேர்க்கை C (வியட்நாம்)
பிற்சேர்க்கை D (ஆஸ்திரேலியா)
சமீபத்திய மாற்றங்களின் சுருக்கவுரை
பயனர் விதிமுறைகள்
அறிமுகவுரை
Roblox-க்கு வரவேற்கிறோம்! மக்கள் ஒன்று கூடும் முறையை முற்றிலும் புதிதாக மாற்றுவதே எங்கள் இலட்சியமாகும், மேலும் இந்த விதிமுறைகள் நமக்கிடையேயான பரஸ்பரம் உள்ள சட்டப்பூர்வக் கடமைகளை விளக்குகின்றன. இந்த Roblox பயனர் விதிமுறைகள் (“பயனர் விதிமுறைகள்”) Roblox இணையதளமான (www.roblox.test1709.icu) மற்றும் அதனுடன் தொடர்புடைய தளத்தை (ஒட்டுமொத்தமாக, “தளம்”) நீங்கள் பயன்படுத்துவதற்கும் அணுகுவதற்கும் பொருந்தும். மேலும், பயனர்கள் (“பயனர்கள்,” “உங்கள்,” அல்லது “நீங்கள்”) விளையாடவும், உருவாக்கவும், தொடர்புகொள்ளவும் அனுமதிக்கும் வகையில் Roblox Corporation (“நாங்கள்,” “எங்களை,” “எங்கள்”) வழங்கும் இணையதளங்கள், பயன்பாடுகள், மன்றங்கள், உள்ளடக்கம், செயல்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மற்றும் சேவைகளுக்கும் (தளத்துடன் சேர்த்து, “சேவைகள்”) இந்த விதிமுறைகள் பொருந்தும்.
எங்கள் சமூகத் தரநிலைைகளில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் எங்கள் பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிவில் ஆன்லைன் சூழலை உருவாக்குவதை Roblox நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீங்கள் Roblox Studio, கிரியேட்டர் ஸ்டோர், கிரியேட்டர் ஹப், DevForum, Roblox APIகள் அல்லது பிற டெவலப்பர் தயாரிப்புகள், சேவைகள் அல்லது தொடர்புடைய மென்பொருளை (ஒட்டுமொத்தமாக, “Roblox கிரியேட்டர் பிளாட்ஃபார்ம்” என்று குறிப்பிடப்படும்) பயன்படுத்தினால், கிரியேட்டர் பயன்பாட்டு விதிமுறைகளும் (“கிரியேட்டர் விதிமுறைகள்”) அந்தப் பயன்பாட்டிற்குப் பொருந்தும். இந்தப் பயனர் விதிமுறைகள், கிரியேட்டர் விதிமுறைகள், டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் விதிமுறைகள், சமூகத் தரநிலைகள், தனியுரிமைக் கொள்கை, பின்னிணைப்புகள், பெயர் மற்றும் லோகோ வழிகாட்டுதல்கள் மற்றும் EU டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிமுறைகள், பிளாட்ஃபார்மில் உங்களுக்குக் காட்டப்படக்கூடிய பிற விதிமுறைகள் (ஒட்டுமொத்தமாக, “Roblox விதிமுறைகள்” என்று குறிப்பிடப்படும்) ஆகியவற்றோடு இணைந்து செயல்படுவதுடன், குறிப்பு வடிவில் அவற்றைக் கொண்டுள்ளன. அனைத்து விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் நகல்களை https://en.help.roblox.test1709.icu/hc/categories/45348186499220-Legal-Documents என்ற இணைப்பில் பெறலாம்.
நீங்கள் சேவைகளை அணுகும் அதிகார வரம்பைப் பொறுத்து, நாட்டிற்கேற்ப விதிமுறைகள் மற்றும் இணைப்புகள் உள்ளிட்ட கூடுதல் விதிமுறைகள் பொருந்தக்கூடும். உதாரணமாக, ஐக்கிய இராச்சியம் / ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) அல்லது சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, மற்றும் வியட்நாம் ஆகியவை இதில் அடங்கும். அந்த அதிகார வரம்பு சார்ந்த விதிமுறைகளுக்கும் இந்த Roblox விதிமுறைகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால், பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே மற்றும் அந்த அதிகார வரம்பில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே அந்த அதிகார வரம்பு சார்ந்த விதிமுறைகள் செல்லுபடியாகும்.
U.S. மற்றும் மற்றும் (கியூபெக்கில் வசிப்பவர்களைத் தவிர்த்து) கனடாவில் வசிப்பவர்களுக்கு, உங்களுக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையே ஏற்படும் சர்ச்சைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என்பதை Roblox-இன் நடுவர் தீர்வு ஒப்பந்தம் (பிரிவு 11.2.2) விவரிக்கிறது. குறிப்பாக, இந்த Roblox விதிமுறைகள் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு தனிப்பட்ட நடுவர் தீர்வு மற்றும் கூட்டுச் செயல்பாட்டு விலக்கை உள்ளடக்கியுள்ளன. அதாவது, தனிநபராகவோ கூட்டுச் செயலாகவோ நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கும் உரிமையை நீங்கள் விட்டுக்கொடுக்கிறீர்கள் என்றாகும்.
மக்கள் நம்பிக்கையோடும் கண்ணியத்தோடும் நட்பை வளர்க்கக்கூடிய இடமாக Roblox-ஐ உருவாக்குவதற்கு இந்த விதிகள் மிகவும் அவசியமானவை. யாரேனும் விதிகளைப் பின்பற்றவில்லை என்று நீங்கள் நினைத்தால், எங்கள் தவறான பயன்பாட்டைப் புகாரளிக்கும் அம்சத்தைப் பயன்படுத்தி உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் கணக்கு
சேவைகளை அணுக, நீங்கள் ஒரு Roblox கணக்கை (“கணக்கு”) உருவாக்க வேண்டும். ஒரு கணக்கை உருவாக்குவதன் மூலம், கேம்கள், டெவலப்பர் தயாரிப்புகள், மார்க்கெட்பிளேஸ் உருப்படிகள், சொத்துகள், பயனரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள், கிரியேட்டர் ஸ்டோர் அசெட்டுகள், கேம்களுக்குள் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள், படங்கள், வீடியோக்கள், ஆடியோ, உரை (எ.கா., DevForum கருத்துகள், செய்திகள்), AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் அல்லது பயனர்கள், கிரியேட்டர்கள் அல்லது Roblox வழங்கிய பிற மெட்டீரியல்கள் உள்ளிட்ட (ஒட்டுமொத்தமாக, “உள்ளடக்கம்” என்று குறிப்பிடப்படும்) சேவைகளை நீங்கள் அணுக முடிகிறது.
2.1 யாரெல்லாம் கணக்கு வைத்திருக்கலாம்
5 அல்லது மேற்பட்ட வயதுடைய பயனர்கள் கணக்கை உருவாக்கலாம், ஆனால் சேவைகளுக்கான சில குறிப்பிட்ட அம்சங்களை எங்கள் பெற்றோர் கட்டுப்பாடுகள் மூலமாகப் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
2.1.1 18 வயதுக்குட்பட்ட பயனர்கள்
நீங்கள் 18 வயதுக்குட்பட்ட பயனராக இருந்தால் (“சிறார்”), உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலருடன் சேர்ந்தே கணக்கை உருவாக்க வேண்டும். உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் உங்கள் சார்பில் இந்த Roblox விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு, நீங்கள் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அவர்களை உங்களுடன் சேர்ந்து இந்த Roblox விதிமுறைகளைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் 18 வயதுக்குட்பட்ட பயனரின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலராக இருந்து, உங்கள் சிறார் இந்த சேவைகளைப் பயன்படுத்த அனுமதித்தால், நீங்களும் இந்த Roblox விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவராவீர்கள்; மேலும் சேவைகளில் உங்கள் சிறாரின் செயல்பாடுகளுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். Roblox-இல் உங்கள் குடும்பத்தின் அனுபவத்தை நிர்வகிக்க உங்களுக்குத் தேவையான கருவிகளையும் ஆதாரங்களையும் பெற்றோர் கட்டுப்பாடுகள் என்ற பிரிவில் பார்க்கலாம்.
2.1.2 பெற்றோரின் இணைக்கப்பட்ட கணக்குகள்
நீங்கள் ஒரு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலராக இருந்தால், ஒரு “பெற்றோரின் இணைக்கப்பட்ட கணக்கை” உருவாக்கி நிர்வகிக்கலாம்; இது பெற்றோர் உரிமைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்ட இணைக்கப்பட்ட ஒரு கணக்காகும், இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறார்களின் கணக்குகளைப் பயனர்கள் மேற்பார்வையிட அனுமதிக்கிறது. ஒரு பெற்றோரின் இணைக்கப்பட்ட கணக்கை அமைத்துப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பின்வருவனவற்றை உறுதிசெய்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள்:
- நீங்கள் இணைக்கும் எந்தவொரு சிறாரின் கணக்கிற்கும் நீங்களே பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்;
- உங்கள் சிறாரின் சார்பிலும் இந்த Roblox விதிமுறைகளை நீங்கள் ஏற்கிறீர்கள்;
- எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் சிறாரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் சம்மதம் தெரிவிக்க உங்களுக்குச் சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது; மற்றும்
- அவர்களின் கணக்கின்கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயல்பாடுகள் உட்பட, உங்கள் சிறார் இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் ஏற்கிறீர்கள்.
2.1.3 அமைப்புகள்; பிசினஸ் பயனர்கள்
நீங்கள் ஒரு அமைப்பின் சார்பில் இந்தச் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த அமைப்பை இந்த Roblox விதிமுறைகளுக்குக் கட்டுப்படுத்த உங்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதை உறுதிசெய்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள்; மேலும் இந்த Roblox விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், அந்த அமைப்பின் சார்பாகவே இதைச் செய்கிறீர்கள்.
2.2 கணக்கை உருவாக்குதல்
ஒரு கணக்கை உருவாக்க, பயனர் பெயர், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் போன்ற அங்கீகார முறையை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். உண்மையான, துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவல்களை Roblox-க்கு வழங்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் கணக்கிற்காக நீங்கள் வழங்கும் தகவலைச் சரிபார்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை Roblox-க்கு உண்டு.
2.3 உங்கள் பொறுப்புகள்
சேவைகளைப் பயன்படுத்தும்போது, இந்த Roblox விதிமுறைகள் (சமூக நெறிமுறைகள் மற்றும் Roblox விதிமுறைகளில் இணைக்கப்பட்டுள்ள பிற கொள்கைகள் உட்பட) மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் உரிமைகள் ஆகியவற்றிற்கு இணங்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
2.4 கணக்குப் பாதுகாப்பு
உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிலும் சேவைகளிலும் மேற்கொள்ளப்படும் எந்தச் செயலுக்கும் நீங்களே பொறுப்பு வகிப்பீர்கள். உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு, உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருங்கள் என்ற பக்கத்தைப் பார்க்கவும். உங்கள் கணக்கை விற்பது, உங்கள் அணுகல் ைவிவரங்களை விற்பது அல்லது உங்கள் கணக்கை அங்கீகரிக்கப்படாத விதத்தில் பயன்படுத்துவதற்குத் துணைபுரிவது ஆகியவை கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. உங்கள் கணக்கைப் பயன்படுத்த முடியாதபடி சிக்கல் ஏற்பட்டால், Roblox கணக்கு மீட்புப் பக்கத்தைப் பார்க்கவும்.
2.5 பாதுகாப்பு இழந்த கணக்குகள்
உங்கள் கணக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இழந்ததாக அல்லது அங்கீகரிக்கப்படாத விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீங்கள் சந்தேகித்தால், Roblox உதவிக் குழுவைத் தொடர்புகொண்டு Roblox-க்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். வேறொரு பயனர் உங்கள் கடவுச்சொல் அல்லது ஏதேனும் தனிப்பட்ட தகவல்களைக் கேட்டால், “தவறான பயன்பாட்டைப் புகாரளிக்கும்” அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் அவர்களைப் பற்றி உடனடியாகப் புகாரளிக்க வேண்டும்.
2.6 உங்கள் கணக்கை செயலிழக்கச் செய்தல் அல்லது நீக்குதல்
உங்கள் கணக்கைச் செயலிழக்கச் செய்வது, உங்கள் கணக்கை முடக்கி உங்கள் சுயவிவரத்தை மறைக்கும். உங்கள் கணக்கை நீங்கள் நீக்கவும் செய்யலாம்; இது உங்கள் கணக்கு, உங்கள் உள்ளடக்கம், உங்கள் Robux மற்றும் இந்தச் சேவைகளில் நீங்கள் அணுகிய அல்லது பயன்படுத்திய எந்தவொரு உள்ளடக்கத்திற்கான அணுகலையும் முடித்துவிடும். மேலும், Roblox-இன் தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவுத் தக்கவைப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டு, உங்கள் கணக்குடன் தொடர்புடைய தரவை நீக்கும் நடைமுறையை நாங்கள் தொடங்குவோம். உங்கள் கணக்கைச் செயலிழக்கச் செய்ய அல்லது நீக்க, எனது கணக்கை எப்படிச் செயலிழக்கச் செய்வது அல்லது நீக்குவது என்ற பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் கணக்கு செயலிழக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இந்த Roblox விதிமுறைகள் தொடர்ந்து செல்லுபடியாகும். பிரிவு 15.2-இல் (முடித்தலும் தொடர்தலும்) கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் கணக்கு செயலிழக்கப்பட்டாலும் அல்லது நீக்கப்பட்டாலும் Roblox விதிமுறைகளின் குறிப்பிட்ட சில விதிகள் தொடர்ந்து செல்லுபடியாகும்.
உள்ளடக்கம்
உள்ளடக்கமானது அறிவுசார் சொத்துரிமை மற்றும் பிற சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. உள்ளடக்கத்தை அணுகுவதன் மூலமாகவோ அல்லது கட்டணச் சேவைகளைவாங்குவதன் மூலமாகவோ மற்றவரின் எந்தவொரு உள்ளடக்கத்தின் மீதும் உங்களுக்கு எந்தவிதமான உடைமை உரிமையும் கிடைக்காது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தப் பயனர் விதிமுறைகளில் வெளிப்படையாக வழங்கப்படாத உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளையும் Roblox தன்னிடம் வைத்துள்ளது. அனைத்து உள்ளடக்கமும் "உள்ளபடியே" மற்றும் "கிடைக்கும்படியே" வழங்கப்படுகிறது; மேலும் உள்ளடக்கம் தொடர்பாக, வெளிப்படையான அல்லது மறைமுகமான எந்த வகை உத்தரவாதங்களையும் நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம்.
உள்ளடக்கம் மற்றும் அம்சங்கள் கிடைக்கும் தன்மை வெவ்வேறு நாடுகளுக்கு இடையே மாறுபடலாம்; உங்கள் நாட்டில் சில உள்ளடக்கம் அல்லது அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். Roblox பிளேயரில் குறிப்பிட்ட சில உள்ளடக்கம் அல்லது அம்சங்களை அணுக, மின்னஞ்சல் முகவரி, ஃபோன் எண் அல்லது அரசாங்கம் வழங்கிய புகைப்பட அடையாளச் சான்று போன்ற தகவல்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். நீதிமன்றம், நிர்வாக அமைப்பு அல்லது ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அல்லது தடையாணை போன்ற சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை காரணங்களுக்காக சில பிராந்தியங்களில் நாங்கள் உள்ளடக்கங்களைத் தடுக்கவோ, நீக்கவோ அல்லது அழிக்கவோ கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் தகவலுக்கு அம்சங்கள் மற்றும் உள்ளடக்கததின் மீதான பிராந்தியக் கட்டுப்பாடுகள் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
3.1 நீங்கள் வழங்கும் உள்ளடக்கம்
உங்களுடைய உள்ளடக்கத்தை Roblox-க்கு உரிமமளிப்பதன் மூலம் சேவைகளில் மற்றும் சேவைகளுக்கு நீங்கள் வழங்கலாம். இதை நாங்கள் “பயனர் உருவாக்கிய உள்ளடக்கம்” (“UGC”) என்று அழைக்கிறோம், மேலும் AI அம்சங்களில் உள்ளிடப்படும் ப்ராம்ப்ட்டுகள் மற்றும் AI அம்சங்களால் உருவாக்கப்படும் வெளியீடுகள் உட்பட ஆனால் அவை மட்டுமின்றி, சேவைகளில் நீங்கள் உருவாக்கும், பதிவேற்றும், பதிவிடும் அல்லது பிற வழிகளில் கிடைக்கச் செய்யும் ஏதேனும் வகை உள்ளடக்கம் என்று வரையறுக்கிறோம். Roblox-க்கு நீங்கள் உரிமம் அளிக்கும் UGC-க்கு நீங்களே முழுமையான மற்றும் சட்டப்பூர்வப் பொறுப்பாவீர்கள். சேவைகளுக்கு UGC-ஐ வழங்க நீங்கள் தேர்வுசெய்தால், பின்வருபவற்றை உறுதிசெய்துகொள்வது உங்கள் பொறுப்பாகும்:
- அவ்வாறு செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது;
- உங்கள் UGC சட்டப்பூர்வமானது;
- உங்கள் UGC Roblox விதிமுறைகளுக்கு, குறிப்பாக சமூகத் தரநிலைகளுக்கு இணங்க உள்ளது; மேலும்
- கீழே உள்ள பிரிவு 3.2-இல் குறிப்பிட்டுள்ள உரிமங்களை வழங்குவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
உதாரணமாக, நீங்கள் மூன்றாம் தரப்பிடமிருந்து அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது உரிமம் வழங்க உங்களுக்கு சட்டப்பூர்வமாக உரிமை இருந்தாலோ தவிர, Roblox-க்கு நீங்கள் உரிமம் அளிக்கும் UGC-இல் மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் சொத்துகள் (காப்புரிமை பெற்ற உள்ளடக்கம் போன்றவை) இடம்பெறக்கூடாது.
சட்டம் அனுமதித்துள்ளவாறு, உங்கள் உள்ளடக்கத்தின் மீதான அனைத்து உடைமை உரிமை, உரிமை, தலைப்பு மற்றும் ஆதாயங்களை நீங்களே தக்கவைத்துக் கொள்கிறீர்கள்; இருப்பினும், இது Roblox விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ள பிரத்தியேகமற்ற உரிமத்திற்கு உட்பட்டதாகும்.
3.2 Roblox-க்கான உரிமம்
நீங்கள் சேவைகளுக்கு UGC-ஐ வழங்கினால், நீங்கள் ஒரு “கிரியேட்டர்” ஆவீர்கள், மேலும் நீங்கள் வழங்கும் உள்ளடக்கம் எதுவும் கிரியேட்டர் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும். சேவைகளை வழங்குவதற்கும், பிரிவு 9-இல் விவரிக்கப்பட்டுள்ள உரிமத்தை மற்ற பயனர்களுக்கு வழங்குவதற்கும், Roblox-க்கு கிரியேட்டர்களிடமிருந்து அதற்கான உரிமம் தேவைப்படுகிறது. ஒரு கிரியேட்டராக, Roblox-க்கு நீங்கள் வழங்கும் UGC மற்றும் எங்கள் சேவைகளுடனான உங்கள் செயல்பாடு தொடர்பான பிற தகவல்கள் மற்றும் தரவு அனைத்தையும் அல்லது அதன் பகுதிகளை, சட்டப்பூர்வமான எந்தவொரு வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்த, ஹோஸ்ட் செய்ய, சேமிக்க, பரிமாற்ற, நகலெடுக்க, மறுஉருவாக்கம் செய்ய, விநியோகிக்க, மாற்றியமைக்க, தகவமைக்க, தருவிப்புப் படைப்புகளைத் தயார்செய்ய, காட்சிப்படுத்த, பகிரங்கமாக நிகழ்த்திக் காண்பிக்க, வெளியிட மற்றும் பிற வழிகளில் பயன்படுத்த உலகளாவிய, பிரத்தியேகமற்ற, ராயல்டி அற்ற (கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4.2 (Roblox-இன் பணமாக்கும் உரிமை) மற்றும் பிரிவு 6 (Roblox பொருளாதாரம்) ஆகியவற்றிற்கு உட்பட்டு), நிரந்தரமான, திரும்பப்பெற முடியாத, முழுமையாகத் துணை உரிமம் வழங்கக்கூடிய மற்றும் மாற்றத்தக்க உரிமத்தை (மற்ற பயனர்கள் உட்பட) நீங்கள் Roblox-க்கு வழங்குகிறீர்கள்; இதில் பின்வருவன அடங்கும், ஆனால் இவை மட்டுமே அல்ல:
- தற்போதைய அல்லது எதிர்கால சேவைகளின் அனைத்துப் பகுதிகளையும் அல்லது சில பகுதிகளை விளம்பரப்படுத்துதல்;
- பிற பயனர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சேவைகளுக்குள் UGC-ஐ கிடைக்கப்பெறச் செய்தல், பயனர்கள் அந்த UGC-உடன் ஈடுபட உதவுதல் (கீழே உள்ள பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.3-இல் (UGC-உடன் ஈடுபடுதல்) மேலும் விவரிக்கப்பட்டுள்ளவாறு), அந்த ஈடுபாட்டைப் பணமாக்குதல் (கீழே உள்ள கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 6-இல் (Roblox பொருளாதாரம்) மேலும் விவரிக்கப்பட்டுள்ளவாறு), மற்றும் சேவைகளை இயக்குதல் மற்றும் வழங்குவதன் பகுதியாக, உரிமம் பெற்ற உள்ளடக்கத்திலிருந்து வருவாயை உருவாக்குதல்; மேலும்
- ஏதேனும் AI அல்லது மெஷின் லேர்னிங் மாடல்களை உருவாக்குதல், மேம்படுத்துதல் அல்லது பயிற்சி அளித்தல் தொடர்பாக.
கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 6-இன் படி (Roblox பொருளாதாரம்) நீங்கள் தனியாகத் தகுதிபெறும் சூழல்கள் தவிர, இந்த உரிமம் Roblox-இடமிருந்து எந்தவொரு பேமெண்ட்டுகளையும் பெற உங்களுக்கு உரிமை அளிக்கவில்லை.
மேலும், UGC-ஐ மூன்றாம் தரப்பினருக்குக் கிடைக்கப்பெறச் செய்வதற்கும், மூன்றாம் தரப்பினர் அந்த UGC-ஐப் பயன்படுத்துவதை எதிர்ப்பதற்கும், இடைநிறுத்துவதற்கும் அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் நீங்கள் Roblox-க்கு அனுமதியளிக்கிறீர்கள். மேலே கூறப்பட்டவை எப்படி இருப்பினும், UGC-இல் வெளிப்படுத்தப்படும் கருத்துகள் எதுவும் உங்களுடையவை மட்டுமே என்றும், அவை Roblox-இன் கருத்துகளைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நீங்கள் ஒப்புக்கொண்டு உடன்படுகிறீர்கள்; நீங்கள் UGC-ஐ வழங்க வழிவகை செய்வதன் மூலமாகவோ அல்லது சேவைகள் மூலம் UGC-ஐக் கிடைக்கப்பெறச் செய்வதன் மூலமாகவோ, UGC எதையும் அல்லது அதில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் எதையும் Roblox ஆதரிக்கவோ அல்லது சான்றளிக்கவோ இல்லை. நீங்கள் வழங்கிய UGC எதையும் எந்த நேரத்திலும் நீக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம்; இருப்பினும், பயனர் மார்க்கெட்பிளேஸ் தயாரிப்புகளாகவோ அல்லது பிற வழிகளிலோ சேவைகள் வழியாக மற்ற பயனர்கள் அந்த UGC-ஐ அணுகியிருக்கும் பட்சத்தில், நீங்கள் அதை நீக்கிய பிறகும் அத்தகைய பயனர்கள் அந்த UGC-ஐத் தொடர்ந்து பயன்படுத்தலாம்; மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் நீங்களோ அல்லது Roblox நிறுவனமோ உங்கள் கணக்கை இடைநிறுத்தினாலும் அல்லது முடக்கினாலும், இதில் நீங்கள் Roblox-க்கு வழங்கும் நிரந்தர உரிமத்தின் விதிமுறைகளின்படி, நீங்கள் நீக்கிய UGC எதையும் Roblox தானாகவே தொடர்ந்து பயன்படுத்தலாம்.
3.3 UGC-ஐ அணுகுதல்
ஆடைகள், ஆபரணங்கள் அல்லது பிற டிஜிட்டல் பொருட்கள் (“பயனர் மார்க்கெட்பிளேஸ் தயாரிப்புகள்”) போன்ற, உங்கள் அவதாருடன் பயன்படுத்துவதற்கான, பிற பயனர்களால் உருவாக்கப்பட்ட UGC-ஐ எங்கள் சேவைகள் காண்பிக்கக்கூடும். இந்தப் பயனர் விதிமுறைகளின் கீழ், இன்-கேம் நாணயம், கேம் பாஸ்கள் அல்லது போஷன்கள் (“டெவலப்பர் தயாரிப்புகள்”) போன்ற கிரியேட்டர்களிடமிருந்தான பொருட்கள் அல்லது திறன்களை நீங்கள் அணுகலாம் அல்லது பயன்படுத்தலாம்; இவற்றை முதன்மைத் தரப்பாக Roblox விநியோகித்து உங்களுக்குக் கிடைக்கப்பெறச் செய்கிறது. அத்தகைய UGC முக்கியமாக நீங்களோ அல்லது பிற பயனர்களோ சேவைகளுக்குள்ளேயே பயன்படுத்துவதற்காக மட்டுமே உள்ளதாகும்; சேவைகளின் அம்சங்கள் அனுமதிக்கும் வகையில் மட்டுமே நீங்கள் அத்தகைய UGC-ஐக் கண்டறியவோ பயன்படுத்தவோ முடியும், சேவைகளிலிருந்து தனித்து அல்ல.
சேவைகள் மூலமாக நீங்கள் அணுகக்கூடிய மற்றும் உரையாடக்கூடிய UGC-ஐ Roblox கிடைக்கப்பெறச் செய்கிறது. சேவைகளில் UGC எதையும் பெறுவது உங்கள் தனிப்பட்ட பொழுதுபோக்கிற்காக மட்டுமே ஆகும்.
இந்தப் பயனர் விதிமுறைகளின் பிரிவு 5-க்கு இணங்க, Roblox கிடைக்கப்பெறச் செய்யும் UGC-ஐக் கண்டறியவோ அல்லது அணுகவோ Robux-ஐப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை Roblox உங்களுக்கு வழங்கக்கூடும்.
3.4 Roblox-க்குச் சொந்தமான உள்ளடக்கம்
சேவைகள் Roblox நிறுவனத்திற்குச் சொந்தமானவை, அந்த நிறுவனத்தாலேயே இயக்கப்படுகின்றன. Roblox-ஆல் உருவாக்கப்பட்ட மற்றும்/அல்லது சொந்தமாகக் கொண்ட உரை, படங்கள், விளக்கப்படங்கள், காட்சி இடைமுகங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், வீடியோ கிளிப்புகள், ஐகான்கள், வடிவமைப்பு, எழுத்துருக்கள், தொகுப்புகள், தகவல்கள், தரவு, கணினி குறியீடு, தயாரிப்புகள், வர்த்தக முத்திரைகள், அவதார் மாதிரிகள், ஆடை பொருட்கள், Roblox-ஆல் வெளியிடப்பட்ட கேம்கள் மற்றும் சேவைகளின் பிற கூறுகள் (ஒட்டுமொத்தமாக, “Roblox-க்குச் சொந்தமான உள்ளடக்கம்”) இந்த Roblox விதிமுறைகளுக்கு இணங்க மட்டுமே சேவைகளுடன் பயன்படுத்துவதற்காக உங்களுக்கு வழங்கப்படுகின்றன. தெளிவுபடுத்துவதற்காக, “Roblox-க்குச் சொந்தமான உள்ளடக்கம்” என்பது Roblox நிறுவனத்திற்குச் சொந்தமான அல்லது உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் குறிக்கும்; மேலும் இது கிரியேட்டர்கள் Roblox-க்கு உரிமம் வழங்கும் மற்றும் Roblox முதன்மைத் தரப்பாகப் பயனர்களுக்கு உரிமம் வழங்கும் UGC-இலிருந்து வேறுபட்டதாகும். Roblox கிளாசிக் அவதார்களில் (Roblox-இன் பெயர் மற்றும் லோகோ வழிகாட்டுதல்களில் வரையறுக்கப்பட்டுள்ள அவதார் மாடல்கள்) (ஒவ்வொன்றும், “மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்”) எதையும் நீங்கள் மாற்றியமைக்கும், விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கும் அல்லது தருவிப்புப் படைப்புகளை உருவாக்கும் அளவிற்கு, இந்த Roblox விதிமுறைகளின் முந்தைய பதிப்புகளின் கீழ் நீங்கள் உருவாக்கிய மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்கள் உட்பட, அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார் மீதான அனைத்து அறிவுசார் சொத்துரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகள், பங்கு உரிமைகள் மற்றும் ஆதாயங்களை Roblox-க்கு மீளப்பெற முடியாத வகையில் பொறுப்பளிக்கிறீர்கள். இந்த Roblox விதிமுறைகளுக்கு இணங்க, சேவைகளில் மட்டுமே ஒவ்வொரு மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதாரையும் பயன்படுத்துவதற்கான வரையறுக்கப்பட்ட, தனிப்பயனற்ற, திரும்பப் பெறக்கூடிய, மாற்ற முடியாத உரிமத்தை Roblox உங்களுக்கு வழங்குகிறது. தெளிவுபடுத்துவதற்காக, நீங்கள் ஒரு மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதாரில் சேர்க்கின்ற, Roblox கிளாசிக் அவதார்களிலிருந்து தருவிக்கப்படாத UGC-க்கு இந்த நியமனம் பொருந்தாது.
ஆடைகள், அணிகலன்கள் அல்லது பிற டிஜிட்டல் பொருட்கள் (ஒட்டுமொத்தமாக, “Roblox மார்க்கெட்பிளேஸ் தயாரிப்புகள்” மற்றும் பயனர் மார்க்கெட்பிளேஸ் தயாரிப்புகளுடன் சேர்த்து, “மார்க்கெட்பிளேஸ் தயாரிப்புகள்”) போன்ற உங்கள் அவதாருடன் பயன்படுத்துவதற்கான குறிப்பிட்ட Roblox-க்குச் சொந்தமான உள்ளடக்கங்களை அணுக நமது சேவைகள் உங்களுக்கு வழிவகை செய்யக்கூடும். Roblox மார்க்கெட்பிளேஸ் தயாரிப்புகளைப் பெறுவதற்கு நீங்கள் Robux-ஐப் பயன்படுத்தக்கூடும். Robux-இன் எந்தவொரு பயன்பாடும் கீழே உள்ள பிரிவு 5.1-இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.
3.4.1 தடைசெய்யப்பட்ட பயன்பாடுகள்
(a) Roblox-ஆல் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டு, மற்றும் (b) Roblox-இன் பெயர் மற்றும் லோகோ வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாக அமைந்திருந்தாலே அன்றி, Roblox-க்குச் சொந்தமான உள்ளடக்கத்தை சேவைகளுக்கு வெளியே பயன்படுத்தக்கூடாது. Roblox-க்குச் சொந்தமான உள்ளடக்கத்தின் அனுமதியற்ற பயன்பாடு எதும் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வர்த்தக நடவடிக்கைகள் (திருடப்பட்ட பொருட்களை வர்த்தகம் செய்வது அல்லது பெறுவது உட்பட), Roblox-இன் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் கணக்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
3.4.2 Roblox சந்தாக்கள்
சந்தாக்கள். கட்டண சந்தாக்கள் மூலம் (“Roblox சந்தா”) கூடுதல் பலன்களுக்கான அல்லது Roblox வழங்கும் பிற டிஜிட்டல் தயாரிப்புகளுக்கான அணுகலை Roblox உங்களுக்கு வழங்கலாம். Roblox சந்தாவை நீங்கள் வாங்குவதும் பயன்படுத்துவதும் Roblox சந்தா விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.
3.5 பரிந்துரைகள் மற்றும் ரேங்கிங்
Roblox அம்சத்தைப் பொறுத்து, பயனர்களுக்கு மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க Roblox பல்வேறு காரணிகளைப் பயன்படுத்துகிறது. தேடல் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள், மேலும் அவற்றை நீங்கள் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது குறித்த விவரங்களுக்கு, Roblox-இல் பரிந்துரைகள் மற்றும் ரேங்கிங் என்பதைப் பார்க்கவும்.
பாதுகாப்பு மற்றும் நாகரிகம்
4.1 Roblox-இல் உள்ளடக்கக் கட்டுப்பாடு
சட்டவிரோதமான அல்லது சமூகத் தரநிலைகள் உட்பட Roblox விதிமுறைகளை மீறுகின்ற உள்ளடக்கங்களை எவ்வாறு புகாரளிக்கலாம் என்பதை Roblox-இல் உள்ளடக்கக் கட்டுப்பாடு பக்கமும் சமூகத் தரநிலைகளும் விளக்குகின்றன. Roblox-இன் உள்ளடக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், செயல்பாடுகள் மற்றும் கருவிகள் உட்பட, Roblox எவ்வாறு உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும், Roblox-இன் உள்ளடக்கக் கட்டுப்பாட்டு முடிவை நீங்கள் எவ்வாறு மேல்முறையீடு செய்யலாம் என்பது பற்றிய விவரங்களையும் Roblox-இல் உள்ளடக்கக் கட்டுப்பாடு பக்கம் வழங்குகிறது.
நீங்கள் உரிமையாளராக இருந்து, உங்கள் அறிவுசார் சொத்துரிமைகளை (பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரை போன்றவை) மீறும் UGC-ஐப் புகாரளிக்க விரும்பினால், பிரிவு 10.2-ஐப் பார்க்கவும்.
மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, உள்ளடக்கம் எங்களது சமூகத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதையும், Roblox விதிமுறைகளுக்கு இணங்குவதையும் கண்காணிக்க, தகவல்தொடர்பு அம்சங்கள் வழியாகப் பகிரப்படும் உள்ளடக்கம் மற்றும் பிற பொதுவெளியில் இல்லாத உள்ளடக்கம் உட்பட அனைத்து உள்ளடக்கத்தையும் Roblox அணுகலாம், பரிசீலிக்கலாம்.
பிளாட்ஃபார்ம் முழுவதும் மற்றும் Roblox கிரியேட்டர் பிளாட்ஃபார்ம் முழுவதும் பயனர்கள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள பல்வேறு வழிகளை (மொத்தமாக, “தகவல்தொடர்பு அம்சங்கள்”) Roblox வழங்குகிறது. தகவல்தொடர்பு அம்சங்களைப் பயன்படுத்தும் முன்பு நீங்கள் வயதுச் சோதனையை நிறைவு செய்ய வேண்டும்.
4.2 நாங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்
Roblox விதிமுறைகள் (எங்களது சமூகத் தரநிலைகள் மற்றும் Roblox விதிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துக் கொள்கைகளும் உட்பட) அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தை மீறும் ஏதேனும் UGC அல்லது நடத்தையை நாங்கள் கண்டறிந்தால், அது குறித்து மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் பின்வருவன உள்ளிட்ட (ஆனால் அவை மட்டுமே அல்லாமல்) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்:
- எச்சரிக்கை வழங்குதல்;
- UGC-ஐத் தடுத்தல், அகற்றுதல், நீக்குதல்;
- சேவைகளுக்கான உங்கள் அணுகலை நீக்குதல் அல்லது கட்டுப்படுத்துதல்;
- UGC அல்லது உங்கள் கணக்கின் பயன்பாட்டினை நிறுத்துதல் அல்லது இடைநிறுத்துதல்; அல்லது
- சட்ட அமலாக்கத் துறையைத் தொடர்புகொள்ளுதல்.
சேவைகளில் உள்ள UGC எதையும் கண்காணிக்க, மாற்றியமைக்க, அதற்கான அணுகலை முடக்க அல்லது அகற்ற Roblox-க்கு உரிமை உள்ளது, ஆனால் கடப்பாடு இல்லை, உங்களுக்கோ எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கோ அறிவிப்போ கடப்பாடோ இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் இந்த உரிமைகளை அது பயன்படுத்தலாம்.
4.3 அறிவிப்பு
இந்தப் பிரிவு 4-இன் படி நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கான காரணத்தை Roblox உங்களுக்குத் தெரிவிக்கும். உங்களுக்கு அறிவிப்பது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தும் என நாங்கள் நியாயமாக நம்பும் சூழல்களில், Roblox அறிவிப்பைத் தாமதப்படுத்தலாம் அல்லது தவிர்க்கலாம்:
சட்டத்தை அல்லது ஒரு அதிகார அமைப்பின் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் அல்லது வேறு விதத்தில் Roblox-க்கு சட்டப்பூர்வப் பொறுப்பை ஏற்படுத்தும்;
ஒரு விசாரணையையோ அல்லது சேவையின் நம்பகத்தன்மையையோ செயல்பாட்டையோ பாதிக்கும்;
ஏதேனும் ஒரு பயனருக்கு, பிற மூன்றாம் தரப்பினருக்கு அல்லது Roblox-க்கு பாதிப்பை ஏற்படுத்தும்;
தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் காரணமாகச் சாத்தியமில்லாதது; அல்லது
பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அவசியமில்லாதது.
நாங்கள் அறிவிப்பைத் தாமதப்படுத்தினால், தாமதத்திற்கான காரணம் இல்லாமல் போனதும் அறிவிப்பை வழங்குவோம்.
4.4 மேல்முறையீடு
Roblox வெளிப்படைத்தன்மையை மதிப்பவதோடு, நாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கான பின்னணியை உங்களுக்கு வழங்க கடினமாக உழைக்கிறது. எந்தவொரு முடிவையும் மறுபரிசீலனை செய்யக் கோரவும் மேல்முறையீடு செய்யவும், Roblox உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளவும்.
தொடர்புடைய Roblox கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் உட்பட மேல்முறையீடு செய்வது எப்படி என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் உள்ளடக்கம் அல்லது கணக்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேல்முறையீடு செய்தல் மற்றும் Roblox-இல் உள்ளடக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பார்க்கவும்.
பொருந்தக்கூடிய இடங்களில், Roblox-இல் உள்ளடக்கக் கட்டுப்பாடு என்ற பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, சிக்கல்களுக்குத் தீர்வுகாண நீதிமன்றத்திற்கு வெளியே சர்ச்சைகளைத் தீர்க்கும் அமைப்பைத் தேர்ந்தெடுக்கும் தேர்வும் உங்களுக்கு இருக்கலாம். பயனர் விதிமுறைகளின் பிரிவுகள் 11 மற்றும் 14-க்கு உட்பட்டு, நீதிமன்றத்திலும் நீங்கள் முடிவுகளை மேல்முறையீடு செய்யலாம்.
அறிவுசார் சொத்து தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மீதான மேல்முறையீடுகளுக்கு, பிரிவு 10.2-ஐப் பார்க்கவும்.
4.5 தவறான பயன்பாடு
Roblox-இன் மேல்முறையீடு அமைப்பு அல்லது சட்டவிரோத உள்ளடக்க அறிவிப்புப் படிவத்தை தொடர்ந்து மோசமாகத் தவறாகப் பயன்படுத்தியுள்ள பயனர்கள் அல்லது பயனர் அல்லாதவர்கள் சமர்ப்பிக்கும் (i) மேல்முறையீடுகள் அல்லது (ii) சட்டவிரோத உள்ளடக்கப் புகார்களைச் செயலாக்க Roblox மறுக்கலாம். இத்தகைய தவறான பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டுகள்: அடிக்கடி ஆதாரமற்ற அறிவிப்புகள் அல்லது மேல்முறையீடுகளை வழங்குதல், அல்லது எந்த தகவலும் இல்லாமல் அதிக அளவு மேல்முறையீடுகள் அல்லது அறிவிப்புகளை சமர்ப்பித்தல் உட்பட, மேல்முறையீடுகள் அல்லது அறிவிப்பு அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை. பயனர் மேல்முறையீட்டு முறைமையையோ அல்லது சட்டவிரோத உள்ளடக்க அறிவிப்புப் படிவத்தையோ கடந்த காலத்தில் பயன்படுத்திய விதம் மற்றும் தவறான பயன்பாட்டின் தீவிரத்தன்மை போன்ற காரணிகளை இத்தகைய மறுப்புகள் கருத்தில் கொள்ளலாம். மீறலின் அளவைப் பொறுத்து மறுப்பின் கால அளவு மாறலாம்.
ஒரு பயனர் சட்டவிரோதமான அல்லது Roblox விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தை வெளியிடுவதன் மூலம் இந்தச் சேவையைத் தவறாகப் பயன்படுத்தினால், பிரிவு 4.2-இல் விவரிக்கப்பட்டுள்ளபடி Roblox நடவடிக்கையும் எடுக்கலாம். விதிமீறலின் தன்மை, தீவிரத்தன்மை மற்றும் விளைவுகள், பயனரின் கடந்த காலச் சேவைகள் உபயோகம், முந்தைய விதிமீறல்கள் மற்றும் பயனரின் நோக்கம் போன்றவற்றை உதாரணமாகக் கொண்டு, தவறான பயன்பாட்டை Roblox ஒவ்வொரு நிகழ்வின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்கிறது. உதாரணமாக, வெறுப்புப் பேச்சை வெளியிடும் ஒரு பயனருக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கலாம் அல்லது 1 நாள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு இடைநீக்கம் செய்யலாம்; அந்த பயனர் அதை ்தொடர்ந்து செய்தால் அவரது கணக்கை மூடலாம். கடுமையான விதிமீறல்களுக்கு, முன்னறிவிப்பின்றி உடனடியாக நாங்கள் கணக்கை மூடலாம். ஒரு பயனர் Roblox விதிமுறைகளையோ அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தையோ மீறும் பட்சத்தில், பிரிவு 4.2-இன் கீழ் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கான Roblox-இன் உரிமையை இந்தப் பிரிவில் உள்ள எதுவுமே கட்டுப்படுத்தாது.
உங்கள் சேவைகளின் உபயோகம்
மக்கள் நம்பிக்கையோடும் கண்ணியத்தோடும் நட்பை வளர்க்கக்கூடிய இடமாக Roblox-ஐ உருவாக்குவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த இலைக்கை நோக்கி முன்செல்ல உதவ, கீழே விவரிக்கப்பட்டுள்ள சேவைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
Roblox-ஐப் பயன்படுத்துவதற்குத் தேவையான கணினி வன்பொருள் & ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவைகளையும் பார்வையிடவும்.
5.1 Robux
சேவைகளில் பயன்படுத்துவதற்காக வாங்கக் கிடைக்கக்கூடிய Robux-ஐ Roblox வழங்குகிறது. நீங்கள் Robux-ஐப் பெறும்போது அல்லது வாங்கும்போது, சேவைகளில்Roblox வழங்கிய உள்ளடக்கத்தை அணுக அல்லது பயன்படுத்த Robux-ஐப் பயன்படுத்தவும், Roblox விதிமுறைகளுக்குட்பட்டு நடக்கவுமான ஒரு வரையறுக்கப்பட்ட, மாற்ற முடியாத, ரத்து செய்யக்கூடிய உரிமத்தை பெறுகிறீர்கள். Roblox வழங்கிய அல்லது அங்கீகரித்த சேனல்கள் மற்றும் வழிமுறைகள் மூலமாகத் தவிர, Robux-ஐ வாங்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ, விநியோகிக்கவோ அல்லது வேறு வழிகளில் பயன்படுத்தவோ கூடாது.
Robux-க்கு சமமான அரசுப் பண மதிப்பு அல்லது ரொக்க மதிப்பு எதுவும் இல்லை, மேலும் இது பணம் அல்லது பண மதிப்பைக் கொண்டதல்ல. Robux பணத்தை அனுப்புவதற்கான ஒரு வழிமுறையாகவோ, மூன்றாம் தரப்பு பேமெண்ட் வழிமுறையாகவோ, அல்லது நன்கொடை அல்லது திரள் நிதிக் கருவியாகவோ பயன்படுத்த வடிவமைக்கப்படவில்லை, அவ்வாறு பயன்படுத்தப்படவும் கூடாது. பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்படும் அளவைத் தவிர, Robux-ஐக் ரொக்கமாகவோ (அதாவது, “உண்மையான” பணம்), சட்டப்பூர்வப் பணமாகவ அல்லது எந்தவொரு கடன்/கிரெடிட் வடிவிலோ ரீடீம் செய்யவோ, திருப்பியளிக்கவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ முடியாது. (Roblox விதிமுறைகளால் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளபடி தவிர) Robux-ஐ மறுவிற்பனை செய்யவோ, மதிப்பிற்காக மாற்றவோ, வர்த்தகம் செய்யவோ அல்லது இரண்டாம் நிலை மார்க்கெட்டுகளில் விற்கவோ முடியாது.
5.1.1 Robux-ஐப் பயன்படுத்துதல்
நீங்கள் Robux-ஐ சேவைகளுக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். பயன்படுத்தப்பட்ட Robux-ஐ உங்கள் கணக்கிலிருந்து Roblox கழித்துக் கொள்ளும்.
நீங்கள் சேவைகளில்Roblox வழங்கிய உள்ளடக்கத்தை அணுக அல்லது பயன்படுத்த Robux-ஐப் பயன்படுத்தவும், Roblox விதிமுறைகளுக்குட்பட்டு நடக்கவம் உங்கள் கணக்கில் உள்ள Robux-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம். Robux-இல் உங்களுக்கு எந்தவொரு உரிமையோ, தகுதியோ அல்லது பிற சட்ட நலனோ அல்லது உடைமை உரிமையோ இல்லை.
Robux காலாவதியாகாது. இருப்பினும், உங்கள் கணக்கை நீங்கள் நீக்கினால் அல்லது ஏதேனும் காரணத்திற்காக உங்கள் கணக்கு மூடப்பட்டால், பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்படும் அளவைத் தவிர, உங்கள் கணக்கிலுள்ள Robux அனைத்தும் செல்லாததாகிவிடும், மேலும் நீங்கள் புதிய கணக்கை உருவாக்கினாலும் அவை மீண்டும் வழங்கப்படாது.
5.1.2 Robux-ஐ ரத்து செய்தல்
பின்வரும் நிகழ்வுகள் உட்பட, எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு, பணம் திருப்பியளித்தல் அல்லது இழப்பீடு எதுவுமின்றி தனது முழு விருப்புரிமையின் பேரில், உங்கள் கணக்குடன் தொடர்புடைய Robux-ஐ தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய Roblox உரிமை கொண்டுள்ளது:
- Robux வழங்குதல் இடைநிறுத்தப்பட்டால் அல்லது நிறுத்தப்பட்டால்;
- உங்கள் கணக்குடன் மோசடி அல்லது பிற சட்டவிரோதச் செயல்கள் தொடர்புடையதாக இருப்பதாக Roblox தீர்மானித்தால்;
- ஏதேனும் காரணத்திற்காக உங்கள் கணக்கு இடைநிறுத்தப்பட்டால் அல்லது மூடப்பட்டால்;
- பொருந்தக்கூடிய சட்டத்திற்கு அல்லது நீதிமன்றம் அல்லது தகுதியான ஒழுங்குமுறை அல்லது அரசாங்க அதிகார அமைப்பின் உத்தரவு அல்லது கோரிக்கைக்குக் கட்டுப்பட நாங்கள் அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால்; அல்லது
Roblox விதிமுறைகளுக்குப் புறம்பாக, பொருந்தக்கூடிய சட்டத்திற்கு மாறாக அல்லது Roblox-இன் அனுமதி அல்லது கட்டுப்பாட்டிற்கு வெளியே உட்பட அனுமதிக்கப்படாத முறையில் Robux பெறப்பட்டிருந்தால்.
5.1.3 Robux-இல் மாற்றங்கள்
UGC-ஐப் பெறுவது தொடர்பாக Robux-இன் ஒப்பீட்டு மதிப்பை மாற்றுவது உட்பட, Robux-இன் தன்மை, கிடைக்கும் தன்மை மற்றும் பயன்பாடுகளை மாற்றியமைக்கும் உரிமையை Roblox கொண்டுள்ளது. Roblox-ஐப் பயன்படுத்தி நீங்கள் அணுகக்கூடிய அல்லது தொடர்பு கொள்ளக்கூடிய உள்ளடக்கம் மற்றும் சேவைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை; உள்ளடக்கம் அல்லது சேவைகளைத் தொடர்புகொள்ள அல்லது அணுகத் தேவைப்படும் Robux-இன் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.
5.2 சமூகங்கள், மன்றங்கள், குழுக்கள்
“சமூகம்” என்பது கிரியேட்டர்களும் பயனர்களும் கேம்களைப் பற்றிப் பேசவும், சிக்கல்களைப் பற்றிப் புகாரளிக்கவும், இன்னும் உறுதியான தொடர்புகளை உருவாக்கவும் உதவும் இடமாகும். “மன்றம்” என்பது உரையாடல்கள் கிளையமைப்பு் உரையாடல் தொடர்களாகச் சேமிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட ஒரு சமூக வெளியாகும். குறிப்பிட்ட பொறுப்புகளின் அடிப்படையில் மன்றத்தின் தெரியும் தன்மை மற்றும் அணுகலை உரிமையாளர்கள் நிர்வகிக்கலாம். ஒவ்வொரு சமூகத்துடனும் இணைக்கப்பட்டுள்ள அந்தந்த “குழுவை”, கிரியேட்டர் விதிமுறைகளுக்கு உட்பட்டு, UGC-ஐ உருவாக்கவும் வழங்கவும் கிரியேட்டர்கள் இணைந்து பணியாற்றப் பயன்படுத்தலாம்.
5.2.1 சமூகங்கள், மன்றங்கள், குழுக்கள்
ஒரு குழு/சமூகத்தை உருவாக்கினால் அல்லது அதில் இணைந்தால், அந்தக் குழு/சமூகத்திற்கு உறுப்பினர்களை அழைப்பது மற்றும் அதில் இணைவதற்கான கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்வது போன்ற கூடுதல் அம்சங்களுக்கான அணுகலை நீங்கள் பெறுவீர்கள். மேலும் தகவலுக்கு சமூக வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.
5.2.2 உரிமையாளர் பொறுப்புகள்
ஒரு குழு/சமூகத்தின் “உரிமையாளராக” இருப்பது என்பது சேவைகளின் பயனர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஓர் அதிகாரப்பூர்வமற்ற, தன்னார்வப் பொறுப்பாகும். நீங்கள் உரிமையாளர் ஆகும்பட்சத்தில், இவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள்:
- குழு/சமூகத்திற்குள் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலைப் பராமரிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது;
- நீங்கள் தனிப்பட்ட முறையில் உருவாக்காத UGC உட்பட, குழு/சமூகத்தால் உருவாக்கப்பட்ட, பதிவேற்றப்பட்ட, வெளியிடப்பட்ட, அல்லது வேறு வழியில் கிடைக்கப்பெறச் செய்யப்பட்ட, சொந்தமான, அல்லது தொடர்புடைய அனைத்து UGC-க்கும் பொறுப்பேற்பதற்கும், அத்தகைய UGC அனைத்தும் Roblox விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதை உறுதிசெய்வதற்கும்;
- குழு/சமூகம் மற்றும் மன்றங்கள் சமூகத் தரநிலைகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதை உறுதிசெய்வதற்கும்; மற்றும்
- Roblox சார்பாகச் செயல்பட உங்களுக்கு அதிகாரம் உள்ளது போல் நீங்கள் காட்டிக்கொள்ளக் கூடாது.
ஒரு குழுவின் உரிமையாளர், தனதுகுழு உறுப்பினர்களுக்குப் பொறுப்புகளை ஒதுக்கலாம். மேலும் தகவலுக்கு குழு வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.
5.2.3 உரிமையாளர்களுக்கான விளைவுகள்
உரிமையாளர்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு Roblox பொறுப்பேற்காது; மேலும், ஒரு உரிமையாளர் Roblox விதிமுறைகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தை மீறியதாக நாங்கள் நியாயமாக நம்பினால், ஒரு பயனர் உரிமையாளராக இருக்கும் திறனைத் திரும்பப் பெற அல்லது கட்டுப்படுத்த எங்களுக்கு உரிமை உள்ளது. மேலும், ஓர் உரிமையாளராக உங்கள் பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றத் தவறினால், Roblox இவற்றைச் செய்யக்கூடும்:
- எச்சரிக்கை வழங்குதல்;
- உங்களிடமிருந்தோ அல்லது சமூகம், மன்றம், அல்லது குழுவிலிருந்தோ உள்ளடக்கத்தை அகற்றுதல்;
- குழு/சமூகத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்குக் கொண்டுவருதல்;
- ஒரு புதிய உரிமையாளரை நியமித்தல்; மற்றும்/அல்லது
- உங்கள் கணக்கை முடக்குதல் அல்லது இடைநீக்குதல்.
5.2.4 உரிமையாளர் உரிமையை மாற்றுதல்
ஒரு உரிமையாளர் குழு/சமூகத்தின் உரிமையாளர் உரிமையை ஒரு புதிய உரிமையாளருக்கு மாற்றுமாறு கோரலாம். புதிய உரிமையாளர் தொடர்பான நியாயமான தகுதித் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், Roblox அந்த மாற்றத்தை நிராகரிக்கலாம்.
5.2.5 முடக்குதல் அல்லது இடைநீக்குதல
இந்தப் பயனர் விதிமுறைகள் அல்லது பிற பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி ஒரு உரிமையாளரின் கணக்கு இடைநீக்கப்பட்டால் அல்லது முடக்கப்பட்டால், குழு/சமூகத்திற்கு ஒரு புதிய உரிமையாளரை Roblox நியமிக்கலாம்.
5.3 AI அம்சங்கள்
கிரியேட்டர் விதிமுறைகளின் AI தொழில்நுட்பங்கள் மற்றும் AI கருவிகள் பிரிவில் கிரியேட்டர்களுக்கான AI கருவிகள் உட்பட, எங்கள் சேவைகளின் பகுதியாக நீங்கள் பயன்படுத்தத் தேர்வுசெய்யக்கூடிய, செயற்கை நுண்ணறிவைப் ("AI") பயன்படுத்தும் குறிப்பிட்ட சில விருப்பத்தேர்வு அம்சங்களையும் உருவாக்கக் கருவிகளையும் (மொத்தமாக, "AI அம்சங்கள்") Roblox வழங்குகிறது. செயலாக்குவதற்கும், உங்கள் ப்ராம்ப்ட்டுகளின் அடிப்படையில் AI உருவாக்கிய பதில்களை வழங்குவதற்கும் (“வெளியீடுகள்”) உள்ளீடாக உரை மற்றும் பிற தகவல்களை சமர்ப்பிக்க (“ப்ராம்ப்ட்டுகள்”) சில AI அம்சங்கள் உங்களை அனுமதிக்கின்றன.
5.3.1 AI அம்சங்களின் பொறுப்பு
AI அம்சங்களின் ப்ராம்ப்ட்டுகள் மற்றும் வெளியீடுகளுக்கு Roblox பொறுப்பேற்காது. AI அம்சங்களுடனான உங்கள் தொடர்புகள் மற்றும் நீங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து ப்ராம்ப்ட்டுகளுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். AI அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் உறுதியளித்து உத்தரவாதமளிக்கிறீர்கள்:
AI அம்சங்களை நீங்கள் பயன்படுத்துவது பொருந்தக்கூடிய சட்டத்தையோ, Roblox விதிமுறைகளையோ மற்றும் சமூகத் தரநிலைகளையோ மீறாது என்றும்; மற்றும்
AI அம்சங்களுக்கு ப்ராம்ப்ட்டுகளை சமர்ப்பிப்பதற்கும், உங்களுக்கு AI அம்சங்களை வழங்குவதற்காகவும், Roblox விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பிற வழிகளிலும் ப்ராம்ப்ட்டுகளைப் பயன்படுத்துவதற்கான எல்லா உரிமங்களையும் Roblox-க்கு வழங்குவதற்கும், தேவையான உரிமைகள், உரிமங்கள், அனுமதிகள் அனைத்தும் உங்களுக்கு உள்ளது என்று நீங்கள் தெரிவித்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.
தெளிவுபடுத்தலுக்காக, ஆனால் பிரிவு 3.2-இல் வழங்கப்பட்ட உரிமத்தை வரையறைக்கு உட்படுத்தாமல், உங்களுக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையே, பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அளவில், ப்ராம்ப்ட்டுகளிலும் வெளியீடுகளிலும் உங்களுக்கு இருக்கும் ஏதேனும் உரிமை, சொந்தம், பங்கை நீங்களே தக்கவைத்துக் கொள்வீர்கள். உங்கள் வெளியீடுகளில் உருவாக்கப்படும் புதிய அறிவுசார் சொத்துரிமைகள் எதிலும் Roblox எந்தவொரு உரிமையாளர் உரிமையையும் கோராது.
5.3.2 வெளியீடுகளைச் சார்ந்திருத்தல்
AI அம்சங்களும் அவற்றுக்கு அடிப்படையாக உள்ள AI தொழில்நுட்பங்களும் தொடர்ச்சியாகப் பரிணமித்து வருகின்றன. AI அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இவற்றைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்:
- வெளியீடுகள் கணினியால் உருவாக்கப்படுபவை, அவை நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கலாம், முழுமையற்றவையாக இருக்கலாம் அல்லது பிழைகள், துல்லியமின்மைகள், பாரபட்சமான தன்மைகள் அல்லது Roblox-இன் கருத்துக்களுக்கு ஒத்துப்போகாத புண்படுத்தும் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கலாம்.
- வெளியீடுகளைப் பயன்படுத்தும் முன்பு அல்லது பகிரும் முன்பு அவற்றின் துல்லியம், சட்டப்பூர்வத் தன்மை மற்றும் உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றை நீங்கள் மதிப்பீடு செய்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
- வெளியீடுகளைப் பயன்படுத்துவது தீங்கு, காயம், மரணம் அல்லது பிற இழப்புகளுக்கு வழிவகுக்கும் வகையிலான எந்தவொரு முடிவு, அமைப்பு அல்லது பயன்பாட்டிற்கும் அல்லது தொழில்முறை ஆலோசனையாகவும் நீங்கள் வெளியீடுகளைச் சார்ந்திருக்கக் கூடாது;
- AI அம்சங்களின் இயல்பு மற்றும் பொதுவாக AI-இன் இயல்பு காரணமாக, வெளியீடுகள் தனித்துவமானவையாக இல்லாமல் இருக்கலாம் மேலும் பிற பயனர்கள் AI அம்சங்களிலிருந்து ஒரே மாதிரியான வெளியீடுகளைப் பெறக்கூடும்; மற்றும்
- வெளியீட்டின் உங்கள் உபயோகம் மற்றும் அவை தொடர்பாக மற்றும் AI அம்சங்களால் உருவாக்கப்படும் பிற உள்ளடக்கம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும், நீங்கள் மட்டுமே முற்றிலும் பொறுப்பு, Roblox அல்ல.
5.3.3 தடைசெய்யப்பட்ட பயன்பாடுகள்
எங்கள் AI அம்சங்களைப் பயன்படுத்தும்போது, நீங்கள் இந்த நோக்கங்களுக்காக அவற்றை அணுகவோ, பயன்படுத்தவோ கூடாது அல்லது மற்றவர்களை அணுகவோ பயன்படுத்தவோ அனுமதிக்கக் கூடாது:
- பிறரின் பண்புகள், சமூக நடத்தை அல்லது தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது உட்பட, சட்டவிரோதமான, தீங்கு விளைவிக்கின்ற, பாகுபாடு காட்டக்கூடிய அல்லது முறைகேடான செயல்களை ஊக்குவித்தல், எளிதாக்குதல் அல்லது அவற்றில் ஈடுபடுதல்;
- பொருந்தக்கூடிய சட்டம், Roblox விதிமுறைகள் அல்லது சமூகத் தரநிலைகளை மீறுதல் அல்லது மீறுவதற்கு வழிவகுக்கும் எதையேனும் செய்தல்;
- மற்றவர்களின் சமூக நடத்தை அல்லது தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்ற, நியாயமற்ற அல்லது பாதகமான நடத்தையை ஏற்படுத்தும் விதத்தில் அவர்களை மதிப்பிடுவது, வகைப்படுத்துவது, ஸ்கோரிங் செய்வது அல்லது ரேட்டிங் செய்வது;
- பாதுகாக்க வேண்டிய, ரகசியமான அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட ப்ராம்ப்ட்டுகளை சமர்ப்பித்தல்;
- மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அல்லது பிற பாதுகாக்க வேண்டிய தகவல்களைப் பெறுதல் அல்லது ஊகித்தல்;
- வெளியீடு ஒரு மனிதரால் உருவாக்கப்பட்டது என்று எண்ண வைப்பது உட்பட, எந்தவொரு வழியிலும் பிறரை வேண்டுமென்றே ஏமாற்றுவது அல்லது தவறாக வழிநடத்துவது;
- வயது, உடல் குறைபாடுகள் அல்லது குறிப்பிட்ட சமூக அல்லது பொருளாதார சூழ்நிலைகள் போன்ற காரணிகளால் பிறரின் பலவீனங்களைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வது, பிறரை ஏமாற்றுவது அல்லது கையாள முயல்வது, மற்றவர்கள் தாங்கள் எடுத்திருக்காத முடிவுகளை எடுக்கும் வகையில் அவர்களின் நடத்தையை கணிசமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன் செயல்படுவது மற்றும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துவது அல்லது ஏற்படுத்த வாய்ப்புள்ளது;
- தொழில்முறை ஆலோசனை கேட்பது (மருத்துவம், உளவியல், பணம் அல்லது சட்ட ஆலோசனை உட்பட, ஆனால் இவை மட்டுமே அல்ல);
- ஏதேனும் மூல அல்லது மெட்டாடேட்டா குறிச்சொற்களை அகற்றுதல், மாற்றுதல் அல்லது முடக்குதல்;
- தனிநபர்கள் மீது குறிப்பிடத்தக்க சட்டப்பூர்வ அல்லது அதே போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தானியங்கு முடிவெடுத்தலைச் செயல்படுத்துதல்; அல்லது
- பின்வருபவற்றைச் செய்வதன் மூலம் உட்பட, எந்த வழியிலும் AI அம்சங்களை மோசமாக பாதிப்பது:
- AI அம்சங்களைத் திருத்துதல், நகலெடுத்தல், குத்தகைக்கு விடுதல், விற்பனை செய்தல் அல்லது விநியோகித்தல்;
- AI அம்சங்களை ரிவர்ஸ் எஞ்சினீயரிங் செய்தல், டிகம்பைல் செய்தல் அல்லது டிஸ்-அசெம்பிள் செய்தல்;
- Roblox அல்லது அது வழங்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகளில் ஏதேனும் ஒன்றுடன் போட்டியிடும் மாடல்கள் அல்லது சேவைகளை உருவாக்க AI அம்சங்களைப் பயன்படுத்துதல்; அல்லது
- ஏதேனும் பாதுகாப்பு அல்லது தனியுரிமை வடிகட்டிகள், கட்டுப்பாடுகள் அல்லது இயங்கம்சங்கள் உள்ளிட்ட AI அம்சங்களைச் சீர்குலைப்பது அல்லது பிற வழிகளில் பாதிப்பது.
5.4 Roblox Commerce
அசல் பொருட்களை விற்பனை செய்வதற்காக வர்த்தக வழங்குநர்களால் கேம்களில் விளம்பரங்களை வைக்க Roblox அனுமதிக்கலாம். வர்த்தக வழங்குநர்களுடன் தொடர்பு கொள்வது, Roblox உடன் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு சேவைகளுக்கு உங்களை வழிநடத்தும். விதிமுறைகள், பொருட்கள் அல்லது வணிகப்பொருட்களின் வாங்குதல்கள், திருப்பி அளிப்புகள், விலைகள், பேமெண்ட்டுகள், கையாளுதல், வாடிக்கையாளர் சேவை மற்றும் தொடர்புடைய விசாரணைகள் உட்பட, வர்த்தக வழங்குநர்களால் வழக்கப்பட்ட எந்தவொரு உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை, சட்டப்பூர்வத்தன்மை, வணிகத்தன்மை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி அல்லது மீறாத்தன்மை ஆகியவற்றிற்கு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ Roblox உறுதியளிக்கவோ அல்லது உத்தரவாதமளிக்கவோ இல்லை. வர்த்தக வழங்குநர்களுடனான எந்தவொரு பரிவர்த்தனைகளும் அல்லது அவர்கள் மூலமாகச் செய்யப்படும் பேமெண்ட்டுகளும் அவர்களின் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும், மேலும் எந்தவொரு பரிவர்த்தனைகளுக்கும் Roblox பொறுப்பேற்காது அல்லது அதில் ஒரு தரப்பாக இருக்காது.
5.5 டெவலப்பர் சந்தாக்கள்
“டெவலப்பர் சந்தாக்கள்” என்பவைு, ஒரு கிரியேட்டர் அல்லது கேமுடன் தொடர்புடைய, தானாகவே புதுப்பிக்கப்படும் சந்தாக்களாகும்; இவை பயனர்களுக்கு கிரியேட்டர்களால் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட பலன்களை வழங்குகின்றன. நீங்கள் ஒரு டெவலப்பர் சந்தாவை வாங்கும்போது, உங்கள் சந்தா தானாகப் புதுப்பிக்கப்படும் என்பதையும், நீங்கள் டெவலப்பர் சந்தாவை ரத்துசெய்யும் வரை அதற்கேற்ப தனது பேமெண்ட் வழங்குநர் மூலமாக Robloxஉங்கள் பேமெண்ட் முறையில் கட்டணம் விதிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் அமைப்புகளில் உள்ள 'சந்தாக்கள்' பகுதிக்குச் சென்று, உங்களின் டெவலப்பர் சந்தாவை நீங்கள் ரத்து செய்யலாம். டெவலப்பர் சந்தாக்களின் பர்ச்சேஸ்கள் அனைத்தும் இறுதியானவை மற்றும் Roblox அனுமதித்தால் தவிர, அல்லது சட்டத்தின்படி அவசியமானால் தவிர பணம் திருப்பித் தரப்படாதவை மற்றும் பிறருக்க மாற்றித்தர முடியாதவை ஆகும்.
கட்டணச் சேவைகள்
சில சேவைகள் மற்றும் உள்ளடக்கங்கள் ஒருமுறை செலுத்தும் கட்டணம் அல்லது ரொக்கமாக வசூலிக்கப்படும் அல்லது Robux-ஐப் பயன்படுத்திப் பெறப்படும் சுழற்சிமுறைக் கட்டணங்களுக்குக் கிடைக்கக்கூடும் (“கட்டணச் சேவைகள்”).
6.1 பதிவு செய்யப்பட்ட வணிகர்
Roblox விதிமுறைகளில் வேறுவிதமாகக் குறிப்பிட்டிருந்தால் தவிர (Roblox Commerce அல்லது கிரியேட்டர் ஸ்டோர் போன்றவை), நீங்கள் Roblox அல்லது கட்டணச் சேவைகளைப் பெறுவது என்பது உங்களுக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையிலான பரிவர்த்தனையாகும். அதாவது, நீங்கள் Robux அல்லது ஒரு கட்டணச் சேவையை பெறும்போது, அந்த Robux அல்லது கட்டணச் சேவையை நேரடியாக Roblox இடம் இருந்தே பெறுகிறீர்கள். பிளாட்ஃபார்மில் உள்ள UGC மற்றும் பிற கட்டணச் சேவைகளை அணுக, அவற்றுடன் ஊடாட அல்லது பயன்படுத்த Robux-ஐப் பயன்படுத்துவது உட்பட, Robux-இன் அனைத்துப் பயன்பாடுகளும் முதன்மை விநியோகஸ்தர் மற்றும் பதிவு செய்யப்பட்ட வணிகரான Roblox நிறுவனத்திற்கும் உங்களுக்கும் இடையே நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் மட்டுமே நிகழ்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். உள்ளடக்கம் ஒரு கிரியேட்டரால் உருவாக்கப்படுகிறதா அல்லது Roblox நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறதா அல்லது மேம்படுத்தப்படுகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், Roblox அத்தகைய உள்ளடக்கத்தை உங்களுக்கு வழங்குகிறது மற்றும் உரிமம் அளிக்கிறது. இந்தப் பயனர் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, உள்ளடக்கத்தை அணுகவும் பயன்படுத்தவும் Roblox உங்களுக்கு உரிமை அளிக்கிறது. Roblox விதிமுறைகளில் வேறுவிதமாகக் குறிப்பிட்டிருந்தால் தவிர, நீங்கள் Robux-ஐ அல்லது கட்டணச் சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக, உங்களுக்கும் எந்தவொரு கிரியேட்டருக்கும் இடையே நேரடி ஒப்பந்த உறவோ, பரிவர்த்தனையோ, விற்பனையோ அல்லது உரிமமோ உருவாகாது.
6.2 பேமெண்ட் முறைகள்
நான் எந்தப் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தலாம் என்ற பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளவாறு, குறிப்பிட்ட பேமெண்ட் முறைகளை Roblox ஏற்றுக்கொள்கிறது. Robux அல்லது கட்டணச் சேவைகளை வாங்குவதற்கோ, அல்லது கட்டணச் சேவைகள் தொடர்பான கட்டணமில்லா சோதனைச் சலுகைகள் அல்லது பிற கட்டணமில்லா சலுகைகளில் பங்கேற்பதற்கோ, உங்களிடம் செல்லுபடியாகும், ஏற்றுக்கொள்ளப்பட்ட பேமெண்ட் முறை பதிவில் இருக்க வேண்டும். ஏதேனும் பர்ச்சேஸ்களைச் செய்வதற்கு முன், உங்கள் கணக்கிலுள்ள அமைப்புகள் பக்கத்தில் உள்ள “பேமெண்ட் முறை” பிரிவில் உங்கள் பேமெண்ட் முறைகளைப் புதுப்பிக்கலாம். நீங்கள் ஆர்டர் செய்யும் எந்தவொரு Robux அல்லது கட்டணச் சேவைக்கும் கட்டணம் செலுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். பொருந்தக்கூடிய வரிகள் (கீழே உள்ள பிரிவு 8 (வரிகள்) என்பதில் குறிப்பிட்டுள்ளவாறு), வங்கிக் கட்டணங்கள் மற்றும் நாணய மதிப்பு மாற்றங்கள் தொடர்பான கூடுதல் தொகைகளுடன் சேர்த்து, Robux அல்லது கட்டணச் சேவைக்கான பொருந்தக்கூடிய விலையானது உங்கள் பேமெண்ட் முறையின் மூலம் பிடித்தம் செய்யப்படும்.
6.3 மாற்று பேமெண்ட் முறை
Robux அல்லது கட்டணச் சேவைக்கான ஏதேனும் பேமெண்ட்டை நீங்கள் நியமித்த பேமெண்ட் முறையின் மூலம் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் நியமித்த பேமெண்ட் முறையில் இருந்தோ அல்லது உங்கள் கணக்கில் நீங்கள் சேமித்து வைத்துள்ள வேறு எந்தவொரு பேமெண்ட் முறையில் இருந்தோ அந்தப் பேமெண்ட்டையும் (மற்றும் அத்தகைய தோல்வியடைந்த பேமெண்ட் தொடர்பான எந்தவொரு கட்டணங்களையும்) வசூலிக்க Roblox மற்றும்/அல்லது அதன் சேவை வழங்குநருக்கு நீங்கள் அதிகாரமளிக்கிறீர்கள். Roblox நிறுவனத்தால் Robux அல்லது கட்டணச் சேவைக்குக் கட்டணம் பிடித்தம் செய்ய முடியாவிட்டால், உங்கள் பேமெண்ட் முறையை (முறைகளை) நீங்கள் புதுப்பிக்கும் வரை, சூழலுக்கு ஏற்ப, அந்த Robux அல்லது கட்டணச் சேவையை உங்களால் அணுக முடியாமல் போகலாம். இது நிகழும்போது, சாத்தியமான போது உங்களுக்கு அறிவிப்பை வழங்குவோம். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து நியாயமான காலத்திற்குள் உங்கள் பேமெண்ட் முறையை (முறைகளை) நீங்கள் புதுப்பிக்கத் தவறினால், Roblox நிறுவனம் தொடர்புடைய Robux அல்லது கட்டணச் சேவைக்கான உங்கள் அணுகலை ரத்து செய்யலாம் அல்லது இடைநிறுத்தலாம்.
6.4 பேமெண்ட் பிராசசர்கள்
பேமெண்ட் பிராசசிங் சேவைகளுக்காக (எ.கா., கார்டு பேமெண்ட்டுகளை ஏற்றுக்கொள்வது, மெர்ச்சன்ட் செட்டில்மென்ட் மற்றும் தொடர்புடைய சேவைகள்) Roblox நிறுவனம் தனது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களைப் ("மூன்றாம் தரப்பு பேமெண்ட் பிராசசர்") பயன்படுத்துகிறது. நீங்கள் Robux அல்லது கட்டணச் சேவைகளை வாங்குவதாக இருந்தால், உங்கள் ஆர்டர்களைப் பூர்த்தி செய்யத் தேவையான உங்கள் பேமெண்ட் விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை Roblox நிறுவனத்திற்கோ அல்லது நேரடியாக எங்களின் மூன்றாம் தரப்பு பேமெண்ட் பிராசசருக்கோ வழங்க வேண்டியிருக்கும். நீங்கள் அந்தப் பிராசசருடன் நேரடியாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டியிருக்கலாம்.
6.5 அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மற்றும் ரீஃபண்டுகள்
நீங்கள் அங்கீகரிக்காத Robux அல்லது கட்டணச் சேவைகள் தொடர்பான கட்டணங்களை உங்கள் பேமெண்ட் முறையில் கண்டறிந்தால், உடனடியாக Roblox உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளவும். Roblox விதிமுறைகளில் (அதிகார வரம்பு சார்ந்த விதிமுறைகளைக் குறிப்பிடும் பின்னிணைப்புகள் உட்பட) வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலோ அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தால் கோரப்பட்டிருந்தாலோ தவிர, Robux அல்லது கட்டணச் சேவைகளின் அனைத்துப் பர்ச்சேஸ்களும் இறுதியானவை, ரீஃபண்ட் செய்ய முடியாதவை மற்றும் உரிமை மாற்ற முடியாதவை. பயன்படுத்தப்படாத Robux அல்லது கட்டணச் சேவைகள், அல்லது ஒருமுறை பர்ச்சேஸ்களுக்கு நாங்கள் ரீஃபண்டுகளையோ அல்லது கிரெடிட்களையோ வழங்குவதில்லை. விவரங்களுக்கு அங்கீகரிக்கப்படாத கட்டணங்கள் மற்றும் ரீஃபண்ட் கோரிக்கைகள் பக்கத்தைப் பார்க்கவும்.
6.6 விலைகளில் மாற்றம் செய்தல்
பணவீக்கம், பொருந்தக்கூடிய வரிகளில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது மாறும் பிசினஸ் தேவைகளைப் பிரதிபலிப்பது போன்ற காரணங்களுக்காக, Robux அல்லது கட்டணச் சேவைகளுக்கான விலைகள் அவ்வப்போது மாறக்கூடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
Robux மற்றும் கட்டணச் சேவைகள் உள்ளிட்ட சேவைகளில் மாற்றங்கள்
Roblox நிறுவனம், பயனர் அனுபவம் மற்றும் பயனர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகச் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்தியும் மாற்றியமைத்தும் வருகிறது. இதன் காரணமாக, Robux உள்ளடங்கிய அம்சங்கள் உட்பட சேவைகள் அல்லது சேவைகளின் பகுதிகளை Roblox மாற்றியமைக்கலாம், இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம். உதாரணத்திற்கு, Roblox நிறுவனம் (i) அம்சங்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம், (ii) புதிய உள்ளடக்கங்கள் அல்லது சேவைகளை வழங்கலாம், (iii) சேவைகளை நிறுத்தலாம் அல்லது (iv) உங்கள் கணக்கில் வாங்கக் கூடிய அல்லது வைத்திருக்கக் கூடிய Robux தொகையின் வரம்புகளை மாற்றலாம், அல்லது (v) பிரிவு 6.6-இல் குறிப்பிட்டுள்ளபடி Robux அல்லது கட்டணச் சேவைகளின் விலையை மாற்றலாம், ஆனால் இவை மட்டுமே அல்ல.
பொருந்தக்கூடிய சட்டப்படி தேவையின்படி, Roblox உங்களுக்கு நியாயமான முன்னறிவிப்பை வழங்கும்.
வரிகள்
8.1 கட்டணச் சேவைகள்
விளம்பர விதிமுறைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் போன்ற திட்டம் சார்ந்த விதிமுறைகளில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலோ தவிர, Roblox சந்தாக்கள், டெவலப்பர் சந்தாக்கள் அல்லது கட்டண அணுகல் கேம்களின் பர்ச்சேஸ்கள் உட்பட, Roblox இடமிருந்து ஃபியட் கணக்குச் செலாவணி மூலம் Robux அல்லது சில கட்டணச் சேவைகளை நீங்கள் வாங்கும்போது, செலுத்த வேண்டிய விலையானது பர்ச்சேஸ் செய்த நேரத்தில் குறிப்பிடப்பட்ட விலையுடன், உங்கள் பர்ச்சேஸின் மீது Roblox மதிப்பிடும் பொருந்தக்கூடிய விற்பனை மற்றும்/அல்லது பயன்பாட்டு வரிகள், மதிப்பு கூட்டப்பட்ட வரி (“VAT”) அல்லது சரக்கு மற்றும் சேவை வரி (“GST”) அல்லது அதுபோன்ற வரிகள் மற்றும் கட்டணங்கள் (மொத்தமாக “வரிகள்”) அனைத்தையும் உள்ளடக்கியதாகும். U.S. மற்றும் கனடாவில் வாங்குபவர்களுக்கு, காண்பிக்கப்பட்ட விலையுடன் பொருந்தக்கூடிய ஏதேனும் விற்பனை வரி தனியாகக் குறிப்பிடப்பட்டு சேர்க்கப்படும; VAT அல்லது GST-க்கு Roblox பதிவுசெய்துள்ள மற்ற நாடுகளில் வாங்கும்போது, வாங்கும் சமயத்தில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, செலுத்த வேண்டிய விலையானது அந்தப் பகுதியில் பொருந்தக்கூடிய விகிதத்தில் ஏதேனும் VAT அல்லது GST வரியையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
செக்-அவுட்டின் போது, உங்கள் பர்ச்சேஸிற்கான சரியான வரித் தொகையைத் தீர்மானிக்க Roblox நிறுவனம் உங்கள் இருப்பிடத் தகவலைக் கேட்கக்கூடும். எதிர்கால பர்ச்சேஸ்களுக்காக இந்தத் தகவலை உங்கள் அமைப்புகளில் சேமிக்க முடியும், ஆனால் அவ்வாறு செய்வது எப்போதும் உங்கள் விருப்பத்திற்குட்பட்டது.
8.2 கட்டண அணுகல்
கட்டண அணுகல் என்பது, பயனர் ஒருமுறை செலுத்தும் கட்டணத்தின் மூலம், Robux அல்லது உள்ளூர் நாணயம் அல்லது USD-இல் குறிப்பிட்ட கேம்களை அணுகுவதற்கான வசதியை வழங்கும் கட்டணச் சேவையாகும் (“கட்டண அணுகல்”). கேமைப் பொறுத்து, நீங்கள் கட்டண அணுகலை Robux அல்லது உண்மையான நாணயத்தில் மட்டுமே வாங்க முடியும். டெஸ்க்டாப்பில் நீங்கள் கட்டண அணுகலை உங்கள் உள்ளூர் நாணயத்தில் வாங்கலாம், உங்கள் உள்ளூர் நாணயம் இல்லை என்றால், USD-இல் வாங்கலாம். வாங்கிய 48 மணி நேரத்திற்குள் USD அல்லது உள்ளூர் நாணயத்தில் செலுத்தப்பட்ட கட்டண அணுகலுக்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோரலாம். Robux-இல் செலுத்தப்பட்ட கட்டண அணுகலுக்கான பணம் இறுதியானது; மேலும், Roblox அனுமதித்தாலோ அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவ்வாறு செய்ய வேண்டியிருந்தாலோ தவிர, பணத்தைத் திரும்பப்பெறவோ மற்றொருவருக்கு மாற்றவோ முடியாது.
ஏதேனும் வரிகள், சுங்க வரிகள் மற்றும் தொடர்புடைய அபராதங்கள் அல்லது வட்டிகள் உள்ளிட்ட எந்தவொரு வரிகளும் உட்பட்ட பிடித்தம் செய்யப்படும் வரிகள் உள்ளூர் நாணயத்தில் கட்டண அணுகல் கேம்களின் கிரியேட்டர்களுக்குப் பொருந்தும் அளவில், அவை உங்களுக்குச் செலுத்த வேண்டிய கிரியேட்டர் பேமெண்ட்டுகளில் (கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 6-இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி கிரியேட்டர் விதிமுறைகள்) பிடித்துக்கொள்ளப்படும். ஏதேனும் கிரியேட்டர் பேமெண்ட்டைப் பெறுவதற்கு முன் Roblox நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பொருந்தக்கூடிய வரிப் படிவங்கள் உட்பட, கிரியேட்டர் பேமெண்ட்டுகளிலிருந்து கழிக்கப்படும் அல்லது பிடித்தம் செய்யப்படும் வரிகள் பற்றிய மேலும் தகவலுக்கு, கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 6.2-ஐப் பார்க்கவும்.
8.3 கிரியேட்டர் ஸ்டோர்
கிரியேட்டர் ஸ்டோரில் நடைபெறும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் மூன்றாம் தரப்புப் பேமெண்ட் பிராசசரால் செயலாக்கப்படுகின்றன. கிரியேட்டர் ஸ்டோர் பரிவர்த்தனையில் ஈடுபடுவதன் மூலம், மூன்றாம் தரப்புப் பேமெண்ட் பிராசசரின் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்குக் கட்டுப்படவும் அவற்றுக்கு இணங்கி நடக்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள். மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் பேமெண்ட் செயலாக்கத் தோல்விகள் அல்லது தாமதங்களுக்கு Roblox பொறுப்பேற்காது.
நீங்கள் வசிக்கும் மாநிலத்திலோ அல்லது உங்கள் அதிகார வரம்பிலோ சட்டப்பூர்வ வயதுக்குக் கீழ் உள்ளவர் எனில், எங்கள் மூன்றாம் தரப்புப் பேமெண்ட் பிராசசரிடம் தொடர்புடைய கணக்கை உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் உருவாக்க வேண்டும்; மேலும் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் விதிமுறைகளுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறாரின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் எனில், உங்கள் சிறாரால் கிரியேட்டர் ஸ்டோரில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும், அத்தகைய பர்ச்சேஸ்களுக்கு நீங்கள் அனுமதி அளித்திருந்தாலும் அளிக்காவிட்டாலும், நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள்.
கிரியேட்டர் ஸ்டோரிலுள்ள ஒரு அசெட்டின் விற்பனை விலையானது, பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் ஏதேனும் நாடு, மாநிலம் அல்லது உள்ளூரில் வழங்கப்படும் சப்ளைகள் தொடர்பாக விதிக்கப்படும் பிற வரிகள் அல்லது எந்த வகையான கட்டணங்களையும் சேர்க்காதது ஆகும். கிரியேட்டர் ஸ்டோரை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக எழும் வரிகளை அறிக்கையிடுதல் மற்றும் செலுத்துதல் உட்பட, பொருந்தக்கூடிய அனைத்து வரிச் சட்டங்களுக்கும் இணங்க கிரியேட்டர் ஒப்புக்கொள்கிறார்; மேலும் பொருந்தக்கூடிய அத்தகைய வரிகளை அறிக்கையிடுவதும் செலுத்துவதும் கிரியேட்டரின் பொறுப்பாகும். பொருந்தக்கூடிய சட்டத்தின்கீழ் அவ்வாறு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்படும் பட்சத்தில், உங்களுக்குச் செய்யப்படும் எந்தவொரு பேமெண்ட்டுகளில் இருந்தும் வரிகளைக் கழிப்பதற்கோ அல்லது பிடித்து வைப்பதற்கோ Roblox அல்லது அதன் மூன்றாம் தரப்புப் பேமெண்ட் பிராசசர்களுக்கு உரிமை உண்டு.
Roblox வழங்கும் உரிமம்
9.1 உள்ளடக்கம் மற்றும் சேவைகளுக்கான உரிமம்
இந்தப் பயனர் விதிமுறைகளுக்கு நீங்கள் தொடர்ந்து இணங்குவதற்கு உட்பட்டு, பிளாட்ஃபார்ம் தொடர்பாக உள்ளடக்கத்தையும் சேவைகளையும் அணுகவும் பயன்படுத்தவும் வரையறுக்கப்பட்ட, பிரத்தியேகமற்ற, முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய, துணை உரிமம் வழங்க முடியாத, உரிமை மாற்ற முடியாத, ஒப்படைக்க முடியாத, திரும்பப்பெறக்கூடிய உரிமத்தை உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம். இந்த சமூக தரநிலைகள் உட்பட இந்தப் பயனர் விதிமுறைகளால் அனுமதிக்கப்பட்டுள்ள வழியில், Roblox வழங்கிய உள்ளடக்கத்தையும் சேவைகளையும் நீங்கள் பயன்படுத்துவதையும் அதன் பலனைப் பெறுவதையும் சாத்தியமாக்குவதற்காக மட்டுமே இந்த உரிமம் வழங்கப்படுகிறது. அனைத்து உள்ளடக்கங்களும் முதன்மையாளராக Roblox நிறுவனத்தால் மட்டுமே உங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன; எந்தவொரு கிரியேட்டராலும் அல்ல. Roblox விதிமுறைகளில் வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகள், தலைப்பு மற்றும் விருப்பங்களை நாங்கள் தனியுரிமையாக்குகிறோம்; மேலும் Roblox விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அன்றி, நீங்கள் உள்ளடக்கத்தையோ அல்லது சேவைகளையோ அணுகவோ பயன்படுத்தவோ கூடாது. சேவைகளிலிருந்து பதிப்புரிமை அல்லது பிற தனியுரிமை அறிவிப்புகள் எதையும் நீங்கள் அகற்றக்கூடாது.
9.2 பயன்படுத்துவதற்கான வரம்புகள்
நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, பின்வருவனவற்றைச் செய்யக்கூடாது (மேலும் செய்ய முயற்சிக்கவோ, அனுமதிக்கவோ அல்லது மற்றவர்களைச் செய்ய வைக்கவோ கூடாது):
- பின்வருவனவற்றைத் தவிர்த்து, சேவையின் எந்தப் பகுதியையும் (சேவையை வழங்கப் பயன்படும் எந்தவொரு உரிமைத்துவமுள்ள மென்பொருளின் மூலக் குறியீடு உட்பட) அல்லது எந்தவொரு உள்ளடக்கத்தையும் அணுகுவது, மறுஉருவாக்கம் செய்வது, பதிவிறக்குவது, விநியோகிப்பது, காட்சிப்படுத்துவது, பகிரங்கமாக நிகழ்த்துவது, விற்பனை செய்வது, உரிமம் அளிப்பது, மாற்றுவது, திருத்துவது அல்லது வேறு விதமாகப் பயன்படுத்துவது:
- சேவையால் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டவாறு; அல்லது
- Roblox மற்றும், பொருந்தக்கூடிய பட்சத்தில், உரிய உரிமைதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட முன் எழுத்துப்பூர்வ அனுமதியுடன்;
- மூலக் குறியீட்டை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்வது, பிரித்தெடுப்பது, டிகம்பைல் செய்வது, டிகோட் செய்வது, மாற்றி அமைப்பது அல்லது வேறு வழியில் பெறுவதற்கு அல்லது அணுகலைப் பெறுவதற்கு முயற்சிப்பது;
- சேவையின் எந்தவொரு பகுதியையும் ஏய்த்துச் செயல்படுவது, முடக்குவது, மோசடி முறையில் பயன்படுத்துவது, அல்லது சேவையின் எந்தவொரு பகுதிக்கும் அல்லது சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள பிற அமைப்புகள் அல்லது நெட்வொர்க்குகளுக்கு அனுமதி பெறாத அணுகலைப் பெற வேறு வழியில் முயற்சிப்பது;
- மெஷின் லேர்னிங் மாதிரிகள் அல்லது AI ஆகியவற்றின் பயிற்சி, உருவாக்கம் அல்லது பயன்பாடு தொடர்பாக, எந்தவொரு வழியிலும் (எடுத்துக்காட்டாக, டேட்டா மைனிங், ரோபோக்கள், கிராலர்கள், ஸ்கிராப்பர்கள் அல்லது பிற தானியங்கி தரவு சேகரிப்பு மற்றும் பிரித்தெடுக்கும் கருவிகள் மூலம்) சேவைகளை அணுகுவது;
- மெஷின் லேர்னிங் மாடல்கள் அல்லது AI ஆகியவற்றின் பயிற்சி, உருவாக்கம் அல்லது பயன்பாடு உட்பட, எந்தவொரு நோக்கத்திற்காகவும் சேவைகளில் உள்ள எந்தவொரு உள்ளடக்கத்தையும் அல்லது தரவையும் சேகரிப்பது;
- Roblox விளம்பர விதிமுறைகள், விளம்பர ஒருங்கிணைப்புகள் விதிமுறைகள், அல்லது Roblox உடன் ஒப்புக்கொள்ளப்படக்கூடிய பிற விளம்பர விதிமுறைகள் வழியாக அனுமதிக்கப்பட்டதைத் தவிர, சேவை அல்லது உள்ளடக்கத்திலோ, அது பற்றியோ அல்லது அதற்குள்ளேயோ செய்யப்படும் விளம்பரங்கள், ஸ்பான்சர்ஷிப்கள் அல்லது புரொமோஷன்களை விற்பனை செய்ய சேவையைப் பயன்படுத்துவது;
- சமூகக் கட்டுப்பாடுகள் அல்லது Roblox விதிமுறைகளின் பிற விதிகளை மீறி சேவைகளைப் பயன்படுத்துவது; அல்லது
- சேவைகளுக்கு வெளியிலோ அல்லது சேவைகளுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு வணிகப் பொருட்கள், திரைப்படம், வெளியீடு அல்லது பிற தருவிப்புப் படைப்புகள் தொடர்பாகவோ Roblox-க்குச் சொந்தமான உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது.
9.3 பயன்பாட்டுக்கான உரிமை ஒதுக்கீடு
AI பயிற்சி உட்பட வணிக நோக்கங்களுக்காக உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது பொருந்தக்கூடிய சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படும் வரையறைக்கு உட்பட்டு, Roblox, தனது சார்பிலும் தனது பயனர்களின் சார்பிலும், சேவை மீதுள்ள எந்தவொரு உள்ளடக்கத்தையும் அத்தகைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான அனைத்து உரிமைகளையும் வெளிப்படையாகத் தக்கவைத்துக்கொள்கிறது.
9.4 மூன்றாம் தரப்புச் சேவைகள்
AI அம்சங்கள் உட்பட, சேவைகளின் சில பகுதிகளில் வெளிப்புற APIகள், உள்ளடக்கம், கருவிகள், மென்பொருள் குறியீடு அல்லது மூன்றாம் தரப்பினரின் பிற சேவைகளை (“மூன்றாம் தரப்புச் சேவைகள்ˮ) உள்ளடங்கியிருக்கலாம் அல்லது உட்பொதிக்கப்பட்டிருக்கலாம். இந்த மூன்றாம் தரப்புச் சேவைகளைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்பதும், இவற்றை உள்ளடக்கிய கேம்கள் அல்லது பிற அம்சங்களில் பங்கேற்பதா என்பது உங்களின் விருப்பமாகும். மூன்றாம் தரப்பினர் உங்கள் தகவல்களை எவ்வாறு சேகரிக்கலாம், பயன்படுத்தலாம் அல்லது சேமிக்கலாம் என்பது உட்பட, இந்த மூன்றாம் தரப்புச் சேவைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம், மேலும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் மாட்டோம். எங்கள் சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்புச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் கட்டுப்படுத்தாத அவர்களின் தனிப்பட்ட விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளுக்குக் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அவர்களின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் இந்த மூன்றாம் தரப்பு விதிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்து ஏற்பதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்; மேலும் மூன்றாம் தரப்பினருக்குச் செலுத்த வேண்டிய தொடர்புடைய கட்டணங்கள் எவற்றுக்கும் நீங்களே முழுப்பொறுப்பாவீர்கள். Roblox எந்தவொரு மூன்றாம் தரப்புச் சேவைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கவோ அல்லது ஒப்புதல் அளிக்கவோ செய்யாது, மேலும் அவற்றுக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.
9.5 திறந்த மூல மென்பொருள்
சேவைகளின் சில பகுதிகள், தனிப்பயன் திறந்த மூல உரிம விதிமுறைகளுக்கு உட்பட்ட மென்பொருளைக் கொண்டுள்ளன; மேலும், பொருந்தக்கூடிய சந்தர்ப்பங்களில், அந்த உரிம விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்குவதற்கு உட்பட்டே அந்தச் சேவைகளின் உங்கள் உபயோகம் அமையும். திறந்த மூல மென்பொருள் உரிமங்கள் உங்களுடனான தனிப்பட்ட ஒப்பந்தங்களாக அமைகின்றன, எனவே அவற்றை மதிப்பாய்வு செய்யுமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். திறந்த மூல மென்பொருள் உரிமமானது இந்த பயனர் விதிமுறைகளை வெளிப்படையாக மேலோங்கும் வரம்பிற்குட்பட்ட அளவிற்கு, அந்தத் திறந்த மூல மென்பொருள் உரிமமே பொருந்தக்கூடிய திறந்த மூல மென்பொருளுக்காக மட்டுமே Roblox-உடனான உங்கள் ஒப்பந்தத்தை அமைக்கிறது.
- பின்வருவனவற்றைத் தவிர்த்து, சேவையின் எந்தப் பகுதியையும் (சேவையை வழங்கப் பயன்படும் எந்தவொரு உரிமைத்துவமுள்ள மென்பொருளின் மூலக் குறியீடு உட்பட) அல்லது எந்தவொரு உள்ளடக்கத்தையும் அணுகுவது, மறுஉருவாக்கம் செய்வது, பதிவிறக்குவது, விநியோகிப்பது, காட்சிப்படுத்துவது, பகிரங்கமாக நிகழ்த்துவது, விற்பனை செய்வது, உரிமம் அளிப்பது, மாற்றுவது, திருத்துவது அல்லது வேறு விதமாகப் பயன்படுத்துவது:
Roblox அறிவுசார் சொத்துரிமை
10.1 Roblox வர்த்தக முத்திரைகள்
கீழே உள்ள பிரிவு 10.1.2-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்கு பொருந்தினாலன்றி, எந்தவொரு கேம்களின் தலைப்புகள், பயனர் பெயர்கள், காட்சிப் பெயர்கள் மற்றும் குழு/சமூகப் பெயர்களில் “Roblox”, “Blox” மற்றும் Roblox போன்றே இருக்கின்ற எந்தவொரு பெயரையும் நீங்கள் பயன்படுத்தத் தடைசெய்யப்பட்டுள்ளது.
10.1.1 வரம்புக்குட்பட்ட உரிமம்
மேலே உள்ள பிரிவு 10.1-க்கு உட்பட்டும், Roblox பெயர் மற்றும் லோகோ வழிகாட்டுதல்களைப் நீங்கள் பின்பற்றுவதற்கு உட்பட்டும், பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவுசெய்யப்படாத Roblox வர்த்தக முத்திரைகளை, சேவைகளில் உள்ள உங்களின் UGC-க்குள் பயன்படுத்துவதற்காக மட்டுமே, ஒரு பிரத்தியேகமற்ற, தனிப்பட்ட, வரம்பிற்குட்பட்ட, ரத்துசெய்யப்படக்கூடிய, மாற்றியமைக்க முடியாத உரிமத்தை Roblox உங்களுக்கு வழங்குகிறது. எந்தவொரு Roblox வர்த்தக முத்திரைகளையும் நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உருவாகும் அனைத்து நன்மதிப்பும், Roblox-இன் பிரத்தியேகப் பயனுக்காக மட்டுமே அமையும். சேவைகளுக்கு வெளியே எந்தவொரு Roblox வர்த்தக முத்திரைகளையும் நீங்கள் பயன்படுத்துவது (ஒரு கேமின் தலைப்பில் இடம்பெறக்கூடிய வர்த்தக முத்திரை உட்பட), Roblox பெயர் மற்றும் லோகோ வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மட்டுமே அனுமதிக்கப்படும்.
10.1.2 விதிவிலக்கு
ஜூன் 22, 2022-க்கு முன்னர், கேமின் தலைப்புகளில் “Roblox”, “Blox” அல்லது அதுபோன்ற பெயர்களைக் கொண்ட ஒரு கேமை நீங்கள் வெளியிட்டிருந்தால், நீங்கள்: (a) உங்கள் கேமின் பெயரைத் தொடர்ந்து வைத்திருக்கலாம்; மற்றும் (b) பொருந்தக்கூடிய வகையில், அந்த கேமுடன் தொடர்புடைய எந்தவொரு பயனர் பெயர்களையும் அல்லது குழு/சமூகப் பெயர்களையும் வைத்திருக்கலாம்.
10.2 பதிப்புரிமை, வர்த்தக முத்திரை மற்றும் அகற்றுதல்கள்
Roblox பிறரின் அறிவுசார் சொத்துரிமையை மதிக்கிறது, மேலும் நமது சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது. எங்கள் சமூகத் தரநிலைகளில் விளக்கப்பட்டவாறு, உரிமைதாரரிடமிருந்து செல்லுபடியாகும் அகற்றுதல் கோரிக்கை பெறப்படும்பட்சத்தில், சேவைகளிலிருந்து UGC-ஐ நாங்கள் அகற்றுவோம். பொருத்தமான சூழ்நிலைகளில், விதிமீறலில் தொடர்ந்து ஈடுபடுபவர்களின் கணக்குகளையும் நாங்கள் முடக்குவோம். பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரை விதிமீறல் அறிவிப்பைச் சமர்ப்பிப்பது பற்றிய மேலும் விவரங்களுக்கு, எங்கள் IP வழிகாட்டுதல்கள் மற்றும் மேலே உள்ள பிரிவு 4.1-ஐப் பார்க்கவும்.
10.3 கருத்து
சேவைகள் குறித்து அல்லது அது தொடர்பாக நீங்கள் வழங்கும் எந்தவொரு கருத்தும் முற்றிலும் உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது, மேலும் உங்களின் கருத்துகளை நாங்கள் பொருத்தமெனக் கருதும் எந்தவொரு நோக்கத்திற்காகவும், உங்களுக்கு எவ்விதப் பொறுப்பும் இன்றியும் பயன்படுத்துவதற்கான ஒரு நிரந்தரமான, ரத்துசெய்யப்பட முடியாத, ராயல்டி அற்ற, முழுமையாகக் கட்டணம் செலுத்தப்பட்ட, உலகளாவிய உரிமத்தை இதன்மூலம் எங்களுக்கு வழங்குகிறீர்கள். சேவைகள் பற்றிய கருத்துகளும் பரிந்துரைகளும் ரகசியமற்றவையாகவும் பிரத்தியேக உரிமையற்றவையாகவும் கருதப்படும். மேலும், அவற்றை எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவதற்கான உரிமையை Roblox கொண்டுள்ளது.
முரண்பாடுகளும் தகராறுகளும்
11.1 பயனர்களுக்கு இடையிலான முரண்பாடுகள்
ஒரு கேமில் நீங்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் அல்லது ஒரு குறிப்பிட்ட கேமிலிருந்து கிரியேட்டர் உங்களைத் தடைசெய்திருந்தால், உதவிக்காகத் தொடர்புகொள்ள நேரடியாக கிரியேட்டரை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும். கிரியேட்டர்களுக்கும் பயனர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, உதவிக்காக கேமின் கிரியேட்டர்களைத் தொடர்புகொள்ளுதல் என்பதைப் பார்க்கவும்.
11.1.1 கேம் விதிகள்
சமூகத் தரநிலைகள் மற்றும் Roblox விதிமுறைகளுடன் முரண்படாமலும் அவற்றை பலவீனப்படுத்தாமலும் இருக்கும் வரை, ஒரு கேமையும் அதில் பயனர்களின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் தனிப்பயன் விதிகளை (“கேம் விதிகள்”) உருவாக்க கிரியேட்டர்களுக்கு Roblox அனுமதியளிக்கிறது. கேம் விதிகள் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன, Roblox-ஆல் அல்ல; எனவே, கேம் விதிமீறல்கள் குறித்து Roblox இடம் புகாரளிக்கக் கூடாது. கேம் விதிமீறல்கள் குறித்து அந்த கேமின் கிரியேட்டரிடம் மட்டுமே நேரடியாகப் புகாரளிக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படவும் வேண்டும். கேம் விதிகளுக்கான மதிப்பாய்வு நடவடிக்கைகள் கேமின் சார்பில் கிரியேட்டரால் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கேம் விதிகளை நடைமுறைப்படுத்தும் கிரியேட்டரின் நடவடிக்கைகளுக்கோ அல்லது கேம் விதிகளின் உள்ளடக்கத்திற்கோ Roblox பொறுப்பேற்காது மற்றும் எவ்விதப் பொறுப்பையும் கொண்டிருக்காது.
11.1.2 Roblox-க்கு மேல் புகாரளித்தல்
கேம் விதிகளின் அடிப்படையில் ஒரு கிரியேட்டரின் நடவடிக்கைகள் அல்லது மதிப்பாய்வுகளுக்கு Roblox பொறுப்பேற்காது என்ற போதிலும், அனைவரும் சேவைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதை உறுதியாக வழங்க Roblox விரும்புகிறது. அதற்கேற்ப, பயனர்களுக்கும் கிரியேட்டர்களுக்கும் இடையே எழும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண உதவுவதற்காக முயற்சிக்கத் தலையிடுவதற்கு Roblox-க்கு உரிமை உள்ளது (ஆனால் கடப்பாடு அல்ல). பயனர்கள் அத்தகைய சிக்கல்கள் எதையும் குறித்து Roblox இடம் மேல் புகார் அளிப்பதற்கு முன், சிக்கலைத் தீர்ப்பதற்கு உண்மையான, நியாயமான முயற்சியை எடுத்திருக்க வேண்டும். பயனர்கள் Roblox உதவிக் குழுவைத் தொடர்புகொள்வதன் மூலம் இந்தச் சிக்கலை மேல் புகாரளிக்கலாம். ஏதேனும் ஒரு சர்ச்சையில் தலையிடவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ Roblox தேர்வுசெய்தால், சம்பந்தப்பட்ட பயனர்கள் பின்வருவனவற்றிற்கு உடன்படுகிறார்கள்: (a) சர்ச்சையைத் தீர்ப்பதற்குத் தகுந்த காலத்தில் Roblox உடன் இணைந்து பணியாற்றுவது; மற்றும் (b) சிக்கலைத் தீர்ப்பது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் உரிமையை Roblox-க்கு வழங்குவது.
11.2 உங்களுக்கும் Roblox-க்கும் இடையேயான சர்ச்சைகள்
பயனர் விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி தவிர, பயனர் விதிமுறைகள் அல்லது சேவைகளின் கீழ் அல்லது அவை தொடர்பாக எந்த விதத்திலும் எழுகின்ற, Roblox உடன் உங்களுக்குள்ள சர்ச்சை, கிளைம் அல்லது முரண்பாடு எதுவும் (“சர்ச்சை”) கட்டாய சர்ச்சைத் தீர்வுச் (“MIDR”) செயல்முறையின் மூலமே நிர்வகிக்கப்படும் மற்றும் தீர்க்கப்படும் (கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி).
U.S-இல் மற்றும் கனடிய குடியிருப்பாளர்களுக்கு மட்டும் (கியூபெக் குடியிருப்பாளர்கள் தவிர்த்து): MIDR செயல்முறை நிறைவடைந்த பிறகும் சர்ச்சை தீர்க்கப்படாமல் இருந்தால், அத்தகைய சர்ச்சை உரிமையியல் நீதிமன்றங்களின் விசாரணைகள் மூலமாக அல்லாமல் கட்டுப்படுத்தும் நடுவர் மன்றத் தீர்ப்பு வழியே (கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி) தீர்மானிக்கப்படும் என்பதற்கு நீங்கள் உடன்படுகிறீர்கள். சர்ச்சையில் சம்பந்தப்பட்டுள்ள சட்டக் கோட்பாடுகள் எதையும் பொருட்படுத்தாமலும், சர்ச்சை Roblox நிறுவனத்துடனா அல்லது அதன் துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள் அல்லது தாய் நிறுவனம் அல்லது சேவைகளுடன் தொடர்புடைய ஏதேனும் சப்ளையர்கள் அல்லது சேவை வழங்குநர்களுடனா அல்லது அவர்களின் அதிகாரிகள், இயக்குநர்கள், பணியாளர்கள், ஏஜென்ட்டுகள் அல்லது வாரிசுகளுடனா என்பதைப் பொருட்படுத்தாமலும் இந்த ஒப்பந்தம் பொருந்தும். கீழே உள்ள நடுவர் தீர்ப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு எந்த சர்ச்சைகளுக்கும், குழு நடவடிக்கையில் ஈடுபடுவது உட்பட, ஒரு நீதிபதி அல்லது நடுவர் குழுவின் முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் உரிமையை நீங்கள் விட்டுக்கொடுப்பதாக புரிந்து ஏற்றுக்கொள்கிறீர்கள்.
11.2.1 கட்டாயத் தகவல் சர்ச்சைத் தீர்வு
எங்களுக்கும் எங்கள் பயனர்களுக்கும் இடையே எந்தவொரு சர்ச்சையும் ஒருபோதும் எழாது என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி எழுந்தால், நல்ல நம்பிக்கை சார்ந்த, முறை சாரா முயற்சிகளே சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு பல சமயங்களில் விரைவான, செலவு குறைந்த, இரு தரப்புக்கும் அனுகூலமான விளைவுகளைத் தரக்கூடியவையாக இருக்கும் என்று Roblox மற்றும் எங்கள் பயனர்கள் என இரு தரப்பும் உணர்ந்து கொண்டு ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே, கீழே பிரிவு 10.2.1(f)-இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தவிர, பயனரோ அல்லது Roblox நிறுவனமோ நடுவர் மன்ற விசாரணையைத் தொடங்க அல்லது நீதிமன்றத்தில் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைப்பதற்கு முன்பு பயனரும் Roblox நிறுவனமும் பின்வரும் MIDR செயல்முறையில் ஈடுபடுவார்கள் என்பதற்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்:
(a) அறிவிப்பு. MIDR செயல்முறையைத் தொடங்குவதற்கு, சர்ச்சை உள்ள தரப்பினர் முதலில் மற்ற தரப்பினருக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும்.
Roblox நிறுவனத்திற்கு அறிவிக்க, சான்றளிக்கப்பட்ட U.S. அஞ்சல் அல்லது Federal Express (அல்லது அதற்கு இணையான சர்வதேச அஞ்சல்) மூலம் Roblox Corporation, Legal Department, 3150 S. Delaware St., San Mateo, CA 94403 என்ற முகவரிக்கு நீங்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்பை அனுப்ப வேண்டும்; அதில் பின்வருவனவற்றை வழங்க வேண்டும்: (a) பயனரின் முழுப் பெயர், Roblox பயனர் பெயர், மற்றும் பயனரின் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் அல்லது கட்டண முகவரி; (b) பயனர் சட்ட ஆலோசகர் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டால், பயனரின் சட்ட ஆலோசகரின் பெயர் மற்றும் தொடர்புத் தகவல்கள்; (c) பயனரின் சர்ச்சை மற்றும் கோரப்பட்ட தீர்வு பற்றிய சுருக்கமான விவரணை; மற்றும் (d) சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முந்தைய முயற்சிகளைக் கண்காணிப்பதற்காக Roblox உதவிமையத்தால் வழங்கப்பட்ட டிக்கெட் அல்லது கேஸ் எண் (ஏதேனும் இருப்பின்).
ஒரு பயனருக்கு அறிவிக்க, நீங்கள் Roblox நிறுவனத்திற்கு வழங்கிய மின்னஞ்சல் முகவரி அல்லது கட்டண முகவரிக்கு Roblox நிறுவனம் எழுத்துப்பூர்வ அறிவிப்பை அனுப்பும் (அல்லது, எதுவும் வழங்கப்படவில்லை என்றால்,
Roblox சேவையில் உள்ள செய்தி அனுப்பும் முறைமை வாயிலாக அனுப்பும்); அந்த அறிவிப்பில் (a) Roblox நிறுவனத்தின் சட்ட ஆலோசகரின் பெயர் மற்றும் தொடர்புத் தகவல்கள்; மற்றும் (b) Roblox நிறுவனத்தின் சர்ச்சை மற்றும் கோரப்பட்ட தீர்வு பற்றிய சுருக்கமான விவரணை ஆகியவை அடங்கியிருக்கும்.
(b) செயல்முறை. பிறகு இரு தரப்பும் MIDR செயல்முறையில் ஈடுபடுவார்கள். MIDR செயல்முறைக்கு, சர்ச்சையை முறைசாரா செயல்முறை மூலம் நல்ல நம்பிக்கையின் அடிப்படையிலான முயற்சியாக, எழுத்துப்பூர்வ உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லது இரு தரப்பில் ஒருவர் கோரினால் டெலிகான்ஃபிரன்ஸ் அல்லது வீடியோ கான்ஃபிரான்ஸ் மூலம் அது நடந்திருக்க வேண்டும். இரு தரப்பில் ஒருவருக்கு ஒரு கவுன்சில் பிரதிநிதியாகச் செயல்பட்டால், அந்தக் கவுன்சில் பங்கேற்கலாம்.
(c) இரகசியத் தன்மை. MIDR செயல்முறையின் போது ஏதேனும் தரப்பு, அதன் ஏஜென்ட்டுகள், பணியாளர்கள், வழக்கறிஞர்கள் அளிக்கும் சலுகைகள், வாக்குறுதிகள், நடத்தை மற்றும் அறிக்கைகள் அனைத்தும் ரகசியத் தன்மை வாய்ந்தவை, அதன் பிறகான வழக்கில் எந்த நோக்கத்திற்காகவும் அவை ஏற்கத்தக்கதல்ல, ஆனால், MIDR செயல்முறையில் பயன்படுத்தாமல் இருந்தால் வழங்கக்கூடியதும் கண்டறியக்கூடியதுமாக இருக்கக்கூடிய ஏதேனும் ஆதாரத்தை, அந்தச் செயல்முறையில் பயன்படுத்திவிட்டதன் காரணமாக மட்டுமே, மீண்டும் வழங்க முடியாது அல்லது கண்டறிய முடியாது என்று வாதிட முடியாது.
(d) கால வரம்பு. இரு தரப்பினரும் நீட்டிப்புக்கு ஒப்புக்கொள்ளாதபட்சத்தில், மேலே உள்ள துணைப் பிரிவு (a)-இல் விவரிக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற அறுபது (60) நாட்களுக்குள் MIDR செயல்முறை நடைபெற வேண்டும். எனினும், ஒரு தரப்பு அவசர நிலை அடிப்படையில் (உதாரணமாக ஆரம்பநிலைத் தடையாணை நிவாரணம் அல்லது தற்காலிகத் தடையாணை) தடையாணை நிவாரணம் கோரினால், அந்த நிவாரணத்தின் அடிப்படையில் இரு தரப்பினரும் நீட்டிப்புக்கு ஒப்புக்கொள்ளாதபட்சத்தில், மேலே உள்ள துணைப் பிரிவு (a)-இல் விவரிக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற மூன்று (3) நாட்களுக்குள் MIDR செயல்முறை நடைபெற வேண்டும். தரப்பினர் இந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள முறைசாரா சர்ச்சைத் தீர்வுச் செயல்முறையில் ஈடுபடும்போது, சட்டப்பூர்வ காலக்கெடு எதுவும் இடைநிறுத்தப்படும்.
(e) நடுவர் தீர்வு அல்லது வழக்கு தொடுத்தலுக்கு MIDR கட்டாய முன்தேவையாகும். MIDR செயல்முறையில் பங்கேற்ற பிறகு, சர்ச்சைக்கு தரப்பினரால் தீர்வு காண முடியாமல் போனால், இரு தரப்பில் யாரேனும் நடுவர் தீர்வு நடவடிக்கை எடுக்கலாம் (அல்லது நடுவர் தீர்வு ஒப்பந்தத்திற்கான விதிவிலக்குக்குள் அந்தக் கிளைம் வருமானால் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) வழக்கு தொடுக்கலாம்). இருப்பினும், இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி MIDR செயல்முறையில் தரப்பினர்கள்ஈடுபடாமல் இருந்தால், MIDR செயல்முறை நடைபெறும் வரை நடுவர் தீர்வுக்காக சர்ச்சையைச் சமர்ப்பிக்க முடியாது, நீதிமன்றத்தில் அதற்காக கிளைமையும் தாக்கல் செய்ய முடியாது. பின்வருபவற்றை பயனரும் Roblox நிறுவனமும் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறார்கள்: முதலில் MIDR செயல்முறையில் கையாளப்படாத சர்ச்சை எதுவும்:
- நடுவர் தீர்ப்பு வழங்குநரால் ஏற்கப்படாது, மேலும் சிவில் செயல்முறைக்கான ஃபெடரல் விதி 11(b)-இன் படி ஆதாரமற்றதாகக் கருதப்படும்; அதோடு இந்தப் பிரிவு 10.2.1-ஐ மீறும் வகையில் ஆதாரமற்ற க்ளைமைத் தாக்கல் செய்யும் எந்தத் தரப்பிற்கும், நடுவர் தீர்வுக் கட்டணம் மற்றும்/அல்லது செலவுகளை நடுவர் விதிக்கக்கூடும்; மேலும்
- நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டால் நிராகரிப்புக்கு உட்படலாம்.
(f) விதிவிலக்குகள். காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தகமுத்திரை அல்லது வர்த்தக ரகசிய உரிமைகளின் மீறல் நிகழ்ந்துள்ளதாகக் கூறும் கிளைம் ஒன்று சர்ச்சையில் சம்பந்தப்பட்டிருந்தால், பயனரும் Roblox நிறுவனமும் இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள MIDR செயல்முறையில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை.
11.2.2 நடுவர் தீர்வு ஒப்பந்தம்
பின்வருபவை U.S. பயனர்கள் மற்றும் கனடாவைப் சேர்ந்த பயனர்களுக்கு மட்டும் (கியூபெக் குடியிருப்பாளர்களைத் தவிர்த்து). Roblox நிறுவனத்திற்கும் ஒரு பயனருக்கும் இடையே சர்ச்சை ஏதேனும் ஏற்பட்டு, மேலே பிரிவு 10.2.1-இல் விவரிக்கப்பட்டுள்ள MIDR செயல்முறையின் மூலம் தரப்புகளால் அதைத் தீர்க்க முடியாவிட்டால், அந்தச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கான செயல்முறையை இந்த உட்பிரிவு விரிவாக விளக்குகிறது. இந்தப் பிரிவை கவனமாகப் படிக்கவும், இது மிகவும் முக்கியம்.
(a) நடுவர் தீர்வு ஒப்பந்தம் மற்றும் குழு நடவடிக்கையை விலக்கிக் கொள்ளுதல். பயனர் விதிமுறைகளில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, , MIDR மூலம் தீர்வு காண முடியாத ஏதேனும் சர்ச்சைஇருந்தால், அது நீதிமன்றத்தில் அல்லாமல் கட்டுப்படுத்துகின்ற, தனிநபர் நடுவர் தீர்வு மூலமே தீர்க்கப்படும் என்பதை பயனரும் ROBLOX நிறுவனமும் ஒப்புக்கொள்கின்றனர். இதன் மூலம் நடுவர் குழு வழக்கிற்கான ஏதேனும் உரிமையை விலக்கிக்கொள்வதாக பயனரும் ROBLOX நிறுவனமும் ஒப்புக்கொள்கின்றனர், மேலும் பயனரும் ROBLOX நிறுவனமும் ஒருவருக்கொருவர் எதிராக தனிநபர் என்ற முறையில் மட்டுமே கிளைம்களை எழுப்பலாமே தவிர, ஒரு குழுவிற்கான நடவடிக்கை அல்லது குழுவிற்கான நடுவர் தீர்வில் ஏதேனும் வாதியாகவோ அல்லது வர்க்க உறுப்பினராகவோ அல்ல.
இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தமும் குழு நடவடிக்கை விலக்கமும் (“நடுவர் தீர்வு ஒப்பந்தம்”) இவற்றைப் பொருட்படுத்தாமல் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் மற்றும் கனடாவில் வசிக்கின்ற (கியூபெக்கில் வசிப்பவர்கள் தவிர்த்து) எல்லாப் பயனர்களுக்கும், கீழே வழங்கப்பட்டுள்ளது போல் தவிர, எல்லா சர்ச்சைகளுக்கும் பொருந்தும்: (a) சர்ச்சையில் சம்பந்தப்பட்ட சட்டக் கோட்பாடுகள், (b) சர்ச்சை எப்போது எழுந்தது, மற்றும் (c) சர்ச்சை Roblox உடனா, Roblox-இன் துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள் அல்லது தாய் நிறுவனத்துடனா அல்லது சேவைகளுடன் தொடர்புடைய ஏதேனும் சப்ளையர்கள் அல்லது சேவை வழங்குநர்களுடனா (அவர்களின் அதிகாரிகள், இயக்குநர்கள், பணியாளர்கள், ஏஜென்ட்டுகள் அல்லது வாரிசுகள் உட்பட).
(b) ஃபெடரல் நடுவர் தீர்வுச் சட்டம்; புரிதல் விளக்கம்; மற்றும் அமலாக்கம். இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தம், எல்லா விஷயங்களிலும் அதன் செயல்முறை விதிமுறைகள் உட்பட, அதன் ஃபெடரல் நடுவர் தீர்வுச் சட்டத்தால் (9 U.S.C. § 1 et seq.) (“FAA”) நிர்வகிக்கப்படுகிறது. அதாவது, பல விஷயங்களுடன் சேர்த்து, இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தத்தின் புரிதல் விளக்கம் மற்றும் அமலாக்கத்தையும், குழு நடவடிக்கைக்கான விளக்கம் உட்பட (ஆனால் அது மட்டுமே அல்ல) அதன் எல்லா விதிமுறைகளையும் FAA நிர்வகிக்கிறது. எந்த வகையிலும் மாநில நடுவர் தீர்வுச் சட்டங்கள் நிர்வகிக்காது. அதோடு, மாநிலங்களுக்கு இடையிலான ஒரு வணிகப் பரிவர்த்தனைக்கு Roblox விதிமுறைகளே ஆதாரமாக விளங்குகின்றன என்பதையும், சாத்தியமான முழு அளவிற்கு ஃபெடரல் சட்டத்தின்படியே நிர்வகிக்கப்படும் மற்றும் புரிந்துகொள்ளப்படும் என்பதையும் பயனர், Roblox நிறுவனம் ஆகிய இரு தரப்பும் ஒப்புக்கொள்கின்றனர்.
(c) பொதுவாக நடுவர் தீர்வு; நிவாரணம் கிடைக்கும். நடுவர் தீர்வில் நீதிபதியோ நடுவர் குழுவோ கிடையாது, FAA-இன் படி நடுவர் தீர்வில் கிடைக்கும் தீர்வுகளுக்கு நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்வது குறைவு. இருப்பினும், ஒரு நடுவரும் நீதிமன்றம் வழங்குவதைப் போன்ற அதே சேதங்கள் மற்றும் நிவாரணங்களை தனிநபர் அடிப்படையில் வழங்கலாம் (தடையாணை மற்றும் அறிவிக்கப்பட்ட நிவாரணம் மற்றும் சட்டப்பூர்வ சேதங்கள் உட்பட), நீதிமன்றத்தைப் போலவே Roblox விதிமுறைகளை அவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நடுவரின் தீர்ப்புகள் அல்லது வழங்கப்பட்ட எந்தவொரு நிவாரணமும் உங்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டும், மேலும் அது வேறு எந்தவொரு வாடிக்கையாளருக்கும் பொருந்தாது அல்லது அவர்களை பாதிக்காது. ஒரு குறிப்பிட்ட கோரிக்கை அல்லது கோரிக்கைக்கான நிவாரணத்திற்கான குறிப்பிட்ட கிளைம் (பொதுத் தடை உத்தரவுக்கான கிளைம் போன்றவை) தொடர்பாக இந்த உட்பிரிவின் வரம்புகளில் எதையும் செயல்படுத்துவதைப் பொருந்தக்கூடிய சட்டம் தடுக்குமேயானால், அந்த குறிப்பிட்ட கோரிக்கை அல்லது நிவாரணத்திற்கான குறிப்பிட்ட கிளைம் (மற்றும் அந்த குறிப்பிட்ட கோரிக்கை அல்லது நிவாரணத்திற்கான குறிப்பிட்ட கிளைம் மட்டுமே) நீதிமன்றத்தில் தொடரலாம் என்றும், எந்தவொரு நடுவர் மன்ற விசாரணையிலிருந்தும் பிரிக்கப்பட வேண்டும் என்றும் தரப்பினர் உடன்படுகிறார்கள்.
(d) நடுவர் மன்ற விசாரணைகள் மற்றும் விதிகள். Roblox விதிமுறைகளால் மாற்றம் செய்யப்பட்டால் தவிர, FedArb-இன் விரைவுபடுத்தப்பட்ட நடுவர் தீர்வு விதிகள் மற்றும் (பொருந்துமென்றால்) ஃபிரேம்வொர்க் ஃபார் மாஸ் ஆர்பிட்ரேஷன் ப்ரொசீடிங்ஸ் ADR/MDL-க்கு இணங்க நடுவர் தீர்வுகள் FedArb-ஆல் நிர்வகிக்கப்படும். குறிப்பாக, பொதுவான உண்மைத் தன்மையான அல்லது சட்டப்பூர்வ சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நடுவர் தீர்வுக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால், மற்றும் அந்தக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் தரப்பினருக்கான கவுன்சில் ஒன்றாக அல்லது ஒருங்கிணைக்கப்பட்டவையாக இருந்தால், ஃபிரேம்வொர்க் ஃபார் மாஸ் ஆர்பிட்ரேஷன் ப்ரொசீடிங்ஸ் ADR/MDL பொருந்தும். https://www.fedarb.com/ என்ற தளத்தில் அல்லது 1-650-328-9500 என்ற எண்ணை அழைத்து பயனர்கள் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.சட்டத்தால் அவசியமாக்கப்பட்டால் தவிர, தரப்பினர் இருவரும் எழுத்துப்பூர்வமாக வேறுவிதமாக பரஸ்பரம் ஒப்புக்கொண்டால் தவிர, வாய்வழி விவாதங்கள் உட்பட நடுவர் தீர்வு விசாரணைகள் எதுவும் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலமே நடத்தப்படும். நடுவர் தீர்வு விசாரணை நேரடியாக நடத்தப்பட்டால், பயனருக்கு சௌகரியமான இடமாக இருந்தால், அது கலிபோர்னியாவில் உள்ள சான் மேட்டியோ கவுண்ட்டியில் நடைபெறும் அல்லது பயனர் வசிக்கின்ற கவுண்ட்டி அல்லது பாரிஷில் நடைபெறும்.
நடுவர் தீர்வின் இறுதியில், நடுவர் தனது முடிவை எத்தன அடிப்படையில் எடுத்தார் என்ற புரிதல்கள் மற்றும் இறுதிக் கருத்துகளை விவரித்து, தனது எழுத்துப்பூர்வ முடிவை வழங்குவார்.
பொருந்தக்கூடிய சட்டம் வேறுவிதமாகக் கூறினால் தவிர, நடுவர் தீர்வுச் செயல்முறையும், நடுவர் தீர்வுச் செயல்முறை, விசாரணை, முடிவு, நடுவர் தீர்வின் தீர்ப்பு தொடர்பாக தயார் செய்யப்பட்ட அல்லது சமர்ப்பிக்கப்பட்ட ஏதேனும் ஆவணங்கள் உள்ளிட்ட (ஆனால் அவை மட்டுமே அல்ல) அது தொடர்பான எல்லாப் பதிவுகளும், நடுவர் தீர்வின் தீர்ப்பை நீதிமன்ற உறுதிப்படுத்தலைப் பெறுவதற்குத் தேவைப்பட்டால் தவிர, ரகசியத்தன்மை வாய்ந்தவையாக இருக்கும், எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கும் வெளிப்படுத்தப்படாது.
(e) நடுவர் தீர்வை நடத்துதல். மேலே விவரிக்கப்பட்ட MIDR செயல்முறைக்கு இணங்கிய ஒரு தரப்பு, நடுவர் தீர்வுச் செயல்முறையைத் தொடங்க விரும்பினால், அவர்கள் https://fedarb.my.salesforce-sites.com/Roblox_DemandForm என்ற முகவரியில் நடுவர் தீர்வுக்கான கோரிக்கையையும், பயனர் விதிமுறைகளின் ஒரு நகலையும் FedArb இடம் சமர்ப்பிக்க வேண்டும்.
(f) கட்டணங்களும் செலவுகளும். Roblox விதிமுறைகள் மற்றும் நடுவர் தீர்வு ஒப்பந்தத்திற்கு இணங்க நீங்கள் ஒரு நடுவர் தீர்வைத் தொடங்கினால், FedArb-இன் தாக்கல் கட்டணத்தில் முதல் $50 USD தொகையை நீங்கள் செலுத்த வேண்டும். பிரிவு 10.2.1 மற்றும் இந்த துணைப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி தவிர, நடுவர் தீர்வுக்காக தாக்கல் கட்டணம் தவிர வேறு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்குக் கிடையாது; தாக்கல் கட்டணம் தவிர FedArb விதிக்கும் பிற எல்லாக் கட்டணங்களையும் செலவுகளையும் Roblox செலுத்தும். அதோடு, தாக்கல் கட்டணத்தின் ஏதேனும் ஒரு பகுதியை உங்களால் செலுத்த முடியாது என்று FedArb தீர்மானித்தால், அந்தப் பகுதியையும் Roblox செலுத்தும்.
பொருந்தக்கூடிய சட்டம் வேறு விதமாக அவசியப்படுத்தினால் தவிர, மற்றபடி பயனர்களின் சொந்த செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணங்களுக்கு பயனர்களே பொறுப்பு; அத்தகைய செலவுகள் அல்லது வழக்கறிஞர் கட்டணங்களை Roblox செலுத்தாது (நடுவர் அப்படிச் செய்ய உத்தரவிட்டால் தவிர).
கிளைமின் சாரம் அல்லது கோரப்படும் நிவாரணம் தீவிரமற்றதாக இருப்பதாக அல்லது சரியில்லாத நோக்கத்திற்காக எழுப்பப்பட்டதாக நடுவர் கண்டறிந்தால், வழக்கறிஞருக்கான நியாயமான கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட, வெல்லும் தரப்பிற்கு ஏற்படும் நடுவர் தீர்வுக் கட்டணங்கள் அனைத்தையும் தோற்கும் தரப்பே செலுத்த வேண்டும் என்று நடுவர் ஆணையிடலாம் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதோடு, வெல்லும் தரப்பே வழக்கறிஞர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஒரு சட்டம் கூறினால், அந்தச் சட்டத்திற்கு ஏற்ப வழக்கறிஞர் கட்டணத்தை நடுவர் வழங்கலாம்.
பொருந்தக்கூடிய ஏதேனும் விதிகள் அல்லது கட்டண காலத் திட்டங்களின் கீழ், ஏதேனும் கட்டணங்களின் தொகை அல்லது நேர வரம்பில் சொந்த விருப்புரிமையின் பேரில் மாற்றம் செய்ய FedArb-க்கு உரிமையுள்ளது. ஆனால் அந்த மாற்றங்கள் எந்தத் தரப்பும் செலுத்த வேண்டிய கட்டணங்களை அதிகரிக்காத பட்சத்தில், நேர வரம்பு அல்லது செலுத்த வேண்டிய கட்டணங்களின் தொகையில் செய்யப்படும் ஏதேனும் மாற்றங்களை எதிர்க்காமல் இருக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொள்கின்றனர்.
(g) பிரநிதி நியமிப்பு; புரிதல் விளக்கம். சட்டம் அனுமதிக்கின்ற அதிகபட்ச அளவில், Roblox விதிமுறைகளின் அனைத்து அல்லது ஏதேனும் பகுதியளவு செல்லாது அல்லது செல்லாததாகக் கருதத்தக்கது என்ற கிளைம் உட்பட (ஆனால் அது மட்டுமே அல்ல), Roblox விதிமுறைகளின் புரிதல் விளக்கம், பொருந்தும் தன்மை, அமலாக்கத் தன்மை அல்லது உருவாக்கத்தில் இருந்து எழுகின்ற அல்லது அது தொடர்பாக எழுகின்ற சர்ச்சைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான பிரத்தியேக அங்கீகாரம் நடுவருக்கே உள்ளதே தவிர, ஃபெடரல், மாநில அல்லது உள்ளூர் நீதிமன்றம் அல்லது ஏஜென்சி எதற்கும் கிடையாது; இருப்பினும், குறிப்பாக Roblox விதிமுறைகளின் எந்தப் பதிப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்பது தொடர்பாக ஏதேனும் சர்ச்சை எழுந்தால், நடுவர் தீர்வு நடத்தப்படும் முன்பு, அந்தக் குறிப்பிட்ட கேள்வி பற்றி ஒரு நீதிமன்றம் முடிவெடுக்கும். இந்தநடுவர் தீர்வு ஒப்பந்தம் பரந்துபட்ட புரிதல் விளக்கத்திற்கு உட்பட்டது, Roblox விதிமுறைகள் முடிந்த பிறகும் இவை செல்லுபடியாகும்.
(h) தீவிரத்தன்மை. இந்த ஒப்பந்தத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், தவிர இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தத்தின் ஏதேனும் விதிமுறை நடைமுறைப்படுத்த முடியாதது என்று தெரியவந்தால், அந்த விதிமுறை மட்டும் அகற்றப்படும், நடுவர் தீர்வு ஒப்பந்தத்தின் மீதமுள்ள பகுதிகள் முழு நடைமுறையில் இருக்கும். ஏதேனும் குறிப்பிட்ட ஒரு கிளைம் அல்லது நிவாரணத்திற்கான கோரிக்கைக்கு இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை பொருந்தக்கூடிய சட்டம் தடுப்பதாக ஒரு நீதிமன்றம் முடிவு செய்தால், அந்தக் கிளைம் அல்லது நிவாரணத்திற்கான கோரிக்கை நடுவர் தீர்வில் இருந்து அகற்றப்பட வேண்டும், இருப்பினும் மீதமுள்ள கிளைம்கள் கட்டுப்படுத்தும் நடுவர் தீர்வு மூலம் தீர்க்கப்படும்.
(i) விலகுதல். நீங்கள் நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் இருந்து முற்றிலுமாக விலகிக்கொண்டு, முதல் முறை சேவைகளுக்குப் பதிவுசெய்ததில் இருந்து 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ அறிவிப்பை Roblox-க்கு அனுப்புவதன் மூலம் எங்களிடம் ஏதேனும் சர்ச்சைக்காக வழக்கு தொடுக்கலாம். அதன் பிறகு, நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் செய்யப்படும் முக்கியமான மாற்றங்கள் குறித்து Roblox அறிவிப்பை வழங்கியதில் இருந்து 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ அறிவிப்பை அனுப்புவதன் மூலம் மட்டுமே இருந்து நீங்கள் அவற்றிலிருந்து விலகிக்கொள்ள முடியும் (பொருந்தக்கூடிய சட்டத்தின்படி கூடுதல் நாட்கள் தேவை என்றால் மட்டுமே இதற்கு விலக்கு உள்ளது). இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், நடுவர் தீர்வு முறையில் இருந்து விலகிக்கொள்வதற்கு பயனர் எழுத்துப்பூர்வ அறிவிப்பை Roblox Corporation, Legal Department, 3150 S. Delaware St., San Mateo, CA 94403 என்ற முகவரிக்கு சான்றளிக்கப்பட்ட U.S. மெயில் அல்லது ஃபெடரல் எக்ஸ்பிரஸ் (அல்லது அதற்கு சமமான சர்வதேச சேவையின் மூலம்) அனுப்ப வேண்டும். விலகல் அறிவிப்பு செல்லுபடியானதாக இருக்க வேண்டுமானால், விலக விரும்புகின்ற பயனரிடம் இருந்து (அல்லது அந்தப் பயனரின் சட்டப்பூர்வப் பாதுகாவலரிடம் இருந்து) Roblox-க்கு அனுப்பப்பட வேண்டும், மேலும் அதில் இவை இருக்க வேண்டும்: (a) பயனரின் முழுப் பெயர், Roblox பயனர் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி, (b) பயனர் நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்ள விரும்புகிறார் அல்லது பொருந்தக்கூடிய வகையில் நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட முக்கிய மாற்றத்திலிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறார் என்று தெரிவிக்கின்ற ஒரு தெளிவான அறிக்கை மற்றும் (c) பயனரின் கையொப்பம் (அல்லது பயனர் சிறாராக இருந்தால் பயனரின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரின் கையொப்பம்). முக்கிய மாற்றத்தில் இருந்து விலகிக்கொள்வதாக இருந்தால், பயனர் குறிப்பாக எந்த முக்கிய மாற்றத்தில் இருந்து விலக விரும்புகிறார் என்பதையும் அந்த அறிக்கை அடையாளம் காட்ட வேண்டும். நடுவர் தீர்வு ஒப்பந்தத்திற்கு மட்டுமே விலகல் அறிவிப்பு பொருந்தும்; Roblox விதிமுறைகளின் மற்ற பகுதிகள் அனைத்தும் அப்போதும் பயனருக்கும் Roblox-க்கும் பொருந்தும்.
அதோடு, விலகல் அறிவிப்பை அனுப்புவதால், நடுவர் தீர்வு ஒப்பந்தத்தை முன்னர் ஏற்றுக்கொண்டது எதுவும் திரும்பப்பெறப்படாது அல்லது பிற வழிகளில் ரத்தாகாது. நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் செய்யப்படும் முக்கிய மாற்றத்திலிருந்து விலகிக்கொள்வதன் மூலம், சர்ச்சை எதையும் நீங்கள் ஏற்றுக்கொண்ட நடுவர் திரிவு ஒப்பந்தத்தின் கடைசிப் பதிப்பிற்கு இணங்கவே சர்ச்சைக்கு நடுவர் தீர்வை நாட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.(j) விதிவிலக்குகள். நடுவர் தீர்வு ஒப்பந்தம் பின்வரும் விதிவிலக்குகளுக்கு உட்பட்டது:
- கிளைம்களுக்கான குழு அளவிலான தீர்வில் பங்குபெறுவதற்கான பயனர்களின் மற்றும் Roblox நிறுவனத்தின் உரிமை தக்கவைக்கப்படும்.
- யுனைட்டெட் ஸ்டேட்ஸ், கனடாவில் (கியூபெக்கில் வசிப்பவர்கள் தவிர) வசிக்கின்ற பயனர்களுக்கு, அல்லது முதல் முறை சேவைகளுக்குப் பதிவுசெய்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நடுவர் தீர்வு ஒப்பந்தம் முழுதிலும் இருந்து (மேலே உள்ள துணைப் பிரிவு (i)-க்கு இணங்க) சரியாக விலகிக்கொண்ட பயனர்களுக்குநடுவர் தீர்வு ஒப்பந்தம் பொருந்தாது.
- ஒரு சர்ச்சை சிறு கிளைம்களுக்கான நீதிமன்றத்தின் சட்ட எல்லைக்குள் இருக்கும்பட்சத்தில், பயனர் அல்லது Roblox ஆகிய இருவரில் ஒரு தரப்பு (MIDR செயல்முறையில் ஈடுபட்ட பிறகு) சர்ச்சையை பயனர் வசிக்கும் நாட்டில் உள்ள சிறு கிளைம்களுக்கான நீதிமன்றத்திற்கு அல்லது சான் மேட்டியோ கவுண்ட்டியில் உள்ள சுப்பீரியர் கோர்ட் ஆஃப் கலிபோர்னியாவிற்குக் கொண்டு செல்லலாம்.
- காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தகமுத்திரை அல்லது வர்த்தக ரகசிய உரிமைகளின் மீறல் நிகழ்ந்துள்ளதாகக் கூறும் க்ளைம் ஒன்று சர்ச்சையில் சம்பந்தப்பட்டிருந்தால், பயனரோ Roblox நிறுவனமோ இந்தப் பிரிவு 10 மற்றும் பிரிவு 15.9-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி க்ளைமை ஃபெடரல் அல்லது மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.
11.2.3 சர்ச்சைகளை எழுப்புவதற்கான காலவரையறை
பொருந்தக்கூடிய சட்டம் வேறு விதமாக அவசியப்படுத்தினால் தவிர, சேவைகளில் இருந்து அல்லது அவை தொடர்பாக எழும் எந்தச் செயல் நோக்கமும், அந்தச் செயல் நடந்த பிறகு அல்லது ஆரம்பநிலையில் அது தடுக்கப்பட்ட பிறகு ஒரு 1 வருடத்திற்குள் நடைபெற வேண்டும் என்பதை பயனரும் ROBLOX நிறுவனமும் ஒப்புக்கொள்கின்றனர்.
இழப்பீடு செய்தல்
நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நீங்களே பொறுப்பேற்பீர்கள் என்று உடன்படுகிறீர்கள்; மேலும் நியாயமான வழக்கறிஞர் கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட, பின்வருவனவற்றால் எழுகின்ற அல்லது ஏதேனும் ஒரு வழியில் அவற்றோடு தொடர்புடைய ஒவ்வொரு கோரிக்கை, பொறுப்பு, சேதம், இழப்பு மற்றும் செலவினங்களிலிருந்தும் Roblox நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், அலுவலர்கள், இயக்குநர்கள், ஊழியர்கள், ஆலோசகர்கள், வழிகாட்டிகள், முகவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிசினஸ் பார்ட்னர்களை (ஒட்டுமொத்தமாக, “சார்புத் தரப்பினர்”) நீங்கள் பாதுகாப்பீர்கள் என்றும் இழப்புக் காப்பளிப்பீர்கள் என்றும் மேலும் உடன்படுகிறீர்கள்:
- உங்கள் அணுகல், பயன்பாடு அல்லது சேவைகளின் கூறப்படும் பயன்பாடு;
- இந்த பயனர் விதிமுறைகளின் எந்தவொரு பகுதியையும், பயனர் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உறுதிமொழி, உத்தரவாதம் அல்லது ஒப்பந்தத்தை, அல்லது பொருந்தக்கூடிய எந்தவொரு சட்டம் அல்லது விதியை நீங்கள் மீறுதல்;
- எந்தவொரு அறிவுசார் சொத்துரிமை, விளம்பரம் அல்லது தனியுரிமை உரிமை, சொத்துரிமை அல்லது ரகசியத்தன்மைப் பொறுப்பு உட்பட எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் உரிமையையும் நீங்கள் உண்மையில் அல்லது சாட்டப்படும் வகையில் மீறுதல்; அல்லது
- உங்களுக்கும் ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்கும் இடையிலான எந்தவொரு சர்ச்சை அல்லது சிக்கல். இழப்பீட்டிலிருந்து நீங்கள் பாதுகாக்க வேண்டிய விஷயம் எதிலும் Roblox-இன் சொந்த செலவில் பிரத்தியேகமாக தற்காப்பு நிலையை எடுத்து, கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள Roblox-க்கு முழு உரிமை உள்ளது (அந்த விஷயத்தில் இழப்பீட்டிலிருந்து காக்க வேண்டிய உங்கள் கடமையை இது வரம்புக்கு உட்படுத்தாது), அப்படி நடக்கும் பட்சத்தில், அந்தக் கிளைம் தொடர்பாக Roblox-இன் தற்காப்பு நடவடிக்கைக்கு நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
கலிபோர்னியாவில் வசிப்பவர்களுக்கான அறிவிப்பு
13.1 புகார்கள்
நீங்கள் கலிபோர்னியாவில் வசிப்பவராக இருந்தால், கலிபோர்னியா சிவில் சட்டத்தின் பிரிவு 1789.3-இன் படி, சேவைகள் தொடர்பான உகார்களைத் தீர்க்க அல்லது சேவைகளின் உங்கள் பயன்பாடு பற்றி கூடுதல் தகவல்களைப் பெற, 1625 N. Market Blvd., Suite S-202, Sacramento, CA 95834 என்ற முகவரியில் அஞ்சல் மூலம் அல்லது (800) 952-5210 என்ற எண்ணில் ோதொலைபேசி மூலம், கலிபோர்னியா நுகர்வோர் விவகாரத் துறையின் நுகர்வோர் சேவைகள் பிரிவின் புகார் உதவி யூனிட்டைத் தொடர்புகொள்ளலாம்.
13.2 சிறார்கள்
நீங்கள் 18 வயதிற்குட்பட்ட கலிஃபோர்னியா குடியிருப்பாளராக இருந்தால், சேவைகளில் நீங்கள் பகிரங்கமாகப் பதிவிட்டுள்ள சில தனிப்பட்ட உள்ளடக்கங்களை அகற்றுமாறு Roblox இடம் கோரலாம்; மேலும் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட மற்றும்/அல்லது கோரப்பட்ட அளவுக்கு Roblox அத்தகைய கோரிக்கைக்குக் கீழ்ப்படியும். அத்தகைய உள்ளடக்கத்தில் தனிப்பட்ட தகவல்கள் அடங்கலாம் ஆனால் இவை அடங்காது: (a) பெயர் அடையாளம் நீக்கப்பட்ட தகவல்கள் அல்லது (b) சேவைகளில் நீங்கள் பதிவேற்றிய உள்ளடக்கம் (அவற்றை வழங்குவதற்கு நீங்கள் தகுந்த பலன்களைப் பெற்றுள்ளீர்கள் என்பதால்). அத்தகைய கோரிக்கையை சமர்ப்பிக்க, Roblox உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளவும். அந்தக் கோரிக்கையில் உங்கள் பயனர் பெயர், நீங்கள் அகற்றப்பட விரும்புகின்ற உள்ளடக்கத்தின் தெளிவான விளக்கம் ஆகியவை இருக்க வேண்டும், அவற்றைக் கொண்டே Roblox உள்ளடக்கத்தைக் கண்டறிய முடியும். அஞ்சல்,தொலைபேசி அல்லது தொலைநகல் மூலம் வரும் கோரிக்கைகளை Roblox ஏற்காது, மேலும் நீங்கள் முழுமையற்ற தகவல்களை வழங்கியிருந்தால் பதிலளிக்கவும் முடியாமல் போகலாம். கோரிக்கையை சமர்ப்பித்தால் மட்டுமே, நீங்கள் வெளியிட்ட தகவல் அகற்றப்பட்டுவிடும் என்று உத்தரவாதம் இல்லை, அப்படி நீங்கள் கோரிக்கை சமர்ப்பித்தாலும் அகற்ற வேண்டியது சட்டப்படி அவசியமில்லை அல்லது அகற்ற அனுமதியில்லை என்பது போன்ற சூழ்நிலைகளும் ஏற்படலாம்.
பொறுப்புத் துறப்பு மற்றும் கடப்பாட்டின் வரம்பு
14.1 வாரண்டி பொறுப்புதுறப்பு
சேவைகள் மற்றும் சேவைகளின் மூலம் கிடைக்கப்பெறும் உள்ளடக்கங்கள், வெளிப்படையான அல்லது மறைமுகமான எவ்வித உத்தரவாதமும் அல்லது நிபந்தனையும் இன்றி, "உள்ளபடியே" மற்றும் "கிடைக்கும்படியே" வழங்கப்படுகின்றன. சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவில், ROBLOX மற்றும் (மொத்தமாக, “இணை நிறுவனத் தரப்புகள்” எனப்படும்), சேவைகள் மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கின்ற மெட்டீரியல்கள் மற்றும் உள்ளடக்கம் அனைத்தும் தொடர்பாக, பின்வருபவை உட்பட வெளிப்படையான அல்லது மறைமுகமான வாரண்டி எதையும் மறுக்கின்றனர்: (A) வர்த்தகத் தன்மை, குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும் தன்மை, தலைப்பு, முழுமையாக அனுபவித்து மகிழ்தல் அல்லது மீறலற்ற தன்மைக்கான ஏதேனும் மறைமுகமான வாரண்டி; மற்றும் (B) கையாளுதல், பயன்படுத்துதல் அல்லது டிரேடிங் செய்தல் போன்ற செயல்களில் இருந்து எழும் ஏதேனும் வாரண்டி. சேவைகளோஅல்லது சேவைகளின் ஏதேனும் பகுதியோ அல்லது உள்ளடக்கத்தின் ஏதேனும் மொழிபெயர்ப்புகள் உட்பட (ஆனால் அது மட்டுமே அல்ல) சேவைகளின் மூலம் வழங்கப்படும் ஏதேனும் மெட்டீரியல்கள் அல்லது உள்ளடக்கமோ தடையின்றிக் கிடைக்கும் என்றோ, பாதுகாப்பானது என்றோ அல்லது பிழைகள், வைரஸ்கள் அல்லது தீங்கு விளைவிக்கின்ற பிற விஷயங்கள் எதுவும் இல்லாதிருக்கும் என்றோ இணை நிறுவனத் தரப்புகள் வாரண்டி அளிக்கவில்லை, மேலும் அத்தகைய சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவை சரிசெய்யப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கவில்லை.
பயனர் Roblox-இடமிருந்தோ அல்லது சார்புத் தரப்பினரிடமிருந்தோ பெறுகின்ற வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வமான எந்தவொரு ஆலோசனையோ தகவலோ, அல்லது சேவைகளின் மூலம் கிடைக்கப்பெறும் எந்தவொரு பொருட்களோ உள்ளடக்கமோ, இந்த பயனர் விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாத எந்தவொரு உத்தரவாதத்தையும் Roblox அல்லது சார்புத் தரப்பினர் தொடர்பாக உருவாக்காது. சேவைகளைப் பயன்படுத்துவது அல்லது அணுகுவது, சேவைகளில் உள்ள பிற பயனர்களுடன் பயனரின் தொடர்பு/பரிவர்த்தனைகள், சேவைகளின் மூலம் கிடைக்கும் ஏதேனும் மெட்டீரியல்கள் அல்லது உள்ளடக்கம் விளைவாக நேரக்கூடிய சேதம் எதையும், நீங்கள் துணிந்தே ஏற்பதாக ஒப்புக்கொள்கிறீர்கள். பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவிற்கு இந்த வரம்புகள் பொருந்தும்.
14.2 கடப்பாட்டிற்கான வரம்புகள்
பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவிற்கு, எந்தச் சூழ்நிலையிலும் சேவைகள் அல்லது சேவைகளில் உள்ள ஏதேனும் மெட்டீரியல்கள் அல்லது உள்ளடக்கத்தை அணுகுதல், பயன்படுத்துத்துதல் அல்லது அவற்றைப் பயன்படுத்த அல்லது அணுக முடியாமல் போவதன் காரணமாக நேரும் மறைமுகமான, தற்செயலான, பிரத்தியேகமான, விளைவான அல்லது தண்டனையாக நேருகின்ற சேதங்கள் (இலாபங்கள், நற்பெயரின் இழப்பு அல்லது வேறு ஏதேனும் புலனாகாத இழப்புக்கான சேதங்கள் உட்பட) எதுவும், வாரண்டி, ஒப்பந்தம், உரிமைத் தீங்கு (அலட்சியம் உட்பட), சட்டம் சார்ந்த அல்லது வேறு ஏதேனும் சட்டப்பூர்வக் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தாலும், மேலும் சேதம் குறித்து ROBLOX-க்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், பயனருக்கு ROBLOX நிறுவனம் அல்லது இணை நிறுவனத் தரப்புகளும் பொறுப்பாக மாட்டார்கள்.
பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவிற்கு, சேவைகளின் ஏதேனும் பகுதியின் பயன்பாடு அல்லது பயன்படுத்த முடியாமல் போவதில் இருந்து அல்லது அது தொடர்பாக எழுகின்ற அல்லது பிற வகையில் ROBLOX விதிமுறைகளின் கீழ் எழுகின்ற க்ளைம்கள் அனைத்திற்கும், அவை ஒப்பந்தப்படி இருந்தாலும், உரிமைத் தீங்கு அடிப்படையில் இருந்தாலும் அல்லது பிற வகைகளில் இருந்தாலும், பயனருக்கான ROBLOX மற்றும் இணை நிறுவனத் தரப்புகளின் ஒட்டுமொத்தக் கடப்பாடு $1,000 USD தான் என்று பயனர் ஒப்புக்கொள்கிறார்.
பிற முக்கியமான சட்ட விவகாரங்கள்
15.1 நியமித்தல்
Roblox-இன் முன்கூட்டிய எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், இந்த Roblox விதிமுறைகள் அல்லது அதன் கீழ் உங்களுக்குள்ள ஏதேனும் உரிமைகள் எதையும் நீங்கள், சட்டத்தின் இயல்பான செயல்முறைப்படி அல்லது பிற வழிகளில் யாருக்கும் மாற்றிக்கொடுக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும், அறிவிப்போ ஒப்புதலோ இல்லாமல், Roblox விதிமுறைகளை யாருக்கு வேண்டுமானாலும் Roblox மாற்றிக்கொடுக்க முடியும். இந்த Roblox விதிமுறைகள் Roblox மற்றும் உங்களின் முறையான உரிமையாளர்கள் மற்றும் உரிமை ஒப்படைப்பளர்களைக் கட்டுப்படுத்தும், மேலும் அவர்களின் நலனுக்காகப் பயன்படும்.
15.2 முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் தொடர் நடைமுறை
பிரிவு 2.6-இல் விவரிக்கப்பட்டுள்ளபடி உங்கள் கணக்கை நீக்குவதன் மூலம் அல்லது எங்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்குவதன் மூலம் இந்த விதிமுறைகளை எந்த நேரத்திலும் நீங்கள் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக இந்த Roblox விதிமுறைகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தை நீங்கள் கணிசமாக மீறுவது உட்பட, தகுந்த காரணம் காரணமாக ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் தவிர, உங்களுக்குப் நியாயமான முன் கூட்டிய எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்குவதன் மூலம் Roblox இந்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம்; அத்தகைய தகுந்த காரணம் இருக்கும் பட்சத்தில், காரணங்கள் அடங்கிய அறிக்கையுடன் கூடிய உடனடி அறிவிப்பின் மூலம் Roblox ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம்.
பொருந்தக்கூடிய வகையில் Roblox விதிமுறைகள் முடிவுக்கு வரும் பட்சத்தில், Roblox மற்றும் பயனர் ஆகியோருக்கு இடையிலான உரிமைகளும் கடமைகளும் முடிவுக்கு வரும்; இருப்பினும், பிரிவுகள் 3, 9, 10, 11, 12, 13-15 உட்பட, இயல்பிலேயே முடிவுக்குப் பிறகும் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டிய பயனர் விதிமுறைகளின் எந்தவொரு பகுதியும் தொடர்ந்து அமலில் இருக்கும்.
15.3 சட்டங்களுக்குக் கட்டுப்படுதல்
சேவைகளைப் பயன்படுத்தும்போது பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்களுக்கும் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு நாட்டிற்கோ, நிறுவனத்திற்கோ அல்லது தனிநபருக்கோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, நீங்கள் சேவைகளை அணுகவோ, ஏற்றுமதி செய்யவோ, மறுஏற்றுமதி செய்யவோ அல்லது மாற்றவோ கூடாது. ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் பொருளாதாரத் தடைகள் பற்றிய சட்டங்கள். சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் (a) அமெரிக்க அரசாங்கத்தின் வர்த்தகத் தடைகளுக்கு உட்பட்ட அல்லது "பயங்கரவாதத்தை ஆதரிக்கும்" நாடாகக் குறிக்கப்பட்ட எந்தவொரு நாட்டிலும் அமைந்திருக்கவில்லை; மற்றும் (b) அமெரிக்க அரசாங்கத்தின் தடைசெய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட தரப்பினரின் எந்தவொரு பட்டியலிலும் அடையாளம் காணப்படவில்லை என்று உறுதி அளித்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.
15.4 விசாரணைகள் மற்றும் சட்ட அமலாக்கத்துடனான ஒத்துழைப்பு
Roblox விதிமுறைகளின் சந்தேகத்திற்குரிய அல்லது உண்மையான மீறல்கள் எதையும் விசாரிப்பதற்கும் வழக்குத் தொடர்வதற்கும் Roblox உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறது. ஏதேனும் சட்டம், ஒழுங்குமுறை, சட்டச் செயல்முறை அல்லது ஆணையம், நீதிமன்றம் அல்லது அரசாங்கக் கோரிக்கைக்குத் தேவையானால் அல்லது அவற்றை நிறைவேற்ற அது சரியாக இருக்குமானால் எந்தத் தகவலையும் Roblox வெளிப்படுத்தக்கூடும். நபரின் உயிருக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளச் சட்டப்படி தேவைப்படும் பட்சத்தில், தகுதியான அதிகாரிகளிடம் தகவல்தொடர்புகளின் உள்ளடக்கங்களை வெளிப்படுத்துவது இதில் அடங்கும், ஆனால் இவை மட்டுமே அல்ல.
15.5 புரிதல் விளக்கம்
Roblox விதிமுறைகளில், “சேர்க்கவும்” அல்லது “சேர்க்கப்பட்டுள்ளது உட்பட” என்பது “உள்ளடக்கியது, ஆனால் இது மட்டுமே எல்லை அல்ல” என்று பொருள்படும், மேலும் நாங்கள் வழங்கும் எந்தவொரு எடுத்துக்காட்டுகளும் விளக்க நோக்கங்களுக்காகவே வழங்கப்படுகின்றன. Roblox விதிமுறைகளில் உள்ள பிரிவுத் தலைப்புகள் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, மேலும் அவை Roblox விதிமுறைகளின் விளக்கத்தைப் பாதிக்காது. Roblox விதிமுறைகளின் கீழ் முடிவெடுக்க Roblox அனுமதிக்கப்பட்ட எல்லாச் சூழ்நிலைகளிலும், அந்த முடிவு முற்றிலும் Roblox-ஐச் சார்ந்தது மற்றும் அதன் சொந்த விருப்புரிமையின் பேரிலானது. Roblox விதிமுறைகள் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டவை, அதாவது பொருந்தக்கூடிய சட்டம் பிற வகையில் தடுத்தால் அல்லது அந்தச் சட்டப்படி அவசியமானால் தவிர, அவை பொருந்தும். சூழல் வேறு விதமாக இருந்தால் தவிர, “உட்பட” அல்லது அது போன்ற வார்த்தைகள் Roblox விதிமுறைகளில் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும், "உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல)" என்பதே அவற்றின் அர்த்தம் ஆகும், மேலும் Roblox விதிமுறைகளில் "அல்லது" என்ற சொல் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் "மற்றும்/அல்லது" என்பதே அதன் அர்த்தம் ஆகும்.
15.6 பொறுப்பு விலகல் மற்றும் உரிமைத் துறப்பு இன்மை
Roblox விதிமுறைகளின் ஒரு குறிப்பிட்ட நிபந்தனை ஏதேனும் ஒரு காரணத்திற்காகச் செயல்படுத்தப்பட முடியாதது எனத் தெரியவந்தால், அது மற்ற எந்த விதிமுறைகளையும் பாதிக்காது. நீங்கள் Roblox விதிமுறைகளுக்குக் கட்டுப்படத் தவறி, நாங்கள் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், எங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளை (எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் உரிமை போன்றவை) நாங்கள் விட்டுக் கொடுக்கிறோம் என்று அர்த்தமல்ல.
15.7 முதன்மை மொழி
Roblox விதிமுறைகள் எதுவும் பல மொழிகளில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ள அளவில், Roblox விதிமுறைகளின் ஆங்கிலப் பதிப்பிற்கும் பிற மொழிப் பதிப்பிற்கும் வித்தியாசங்களோ முரண்பாடுகளோ இருந்தால், ஆங்கிலப் பதிப்பே கட்டுப்படுத்தும் மற்றும் மேலோங்கிக் கருத்தில் கொள்ளப்படும்.
15.8 விதிமுறை மாற்றங்களும் ஏற்றுக்கொள்ளுதலும்
Roblox விதிமுறைகளைத் அவ்வப்போது திருத்துவதற்கு Roblox நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
எந்தவொரு முக்கியமான மாற்றங்களும் நடைமுறைக்கு வருவதற்கு முன், நியாயமான எந்தவொரு வழியிலும் (மின்னஞ்சல் அல்லது செயலியின் அறிவிப்பு உட்பட) போதுமான முன்கூட்டிய அறிவிப்பை Roblox உங்களுக்கு வழங்கும். உடனடிப் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கையாள்வதற்கோ, பிணைக்கும் சட்ட அல்லது ஒழுங்குமுறைத் தேவைக்கு இணங்குவதற்கோ அல்லது பயனர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கோ ஓர் அவசரத் திருத்தம் தேவைப்படும் இடங்களில், குறுகிய கால அறிவிப்புடனோ அல்லது எவ்வித முன்னறிவிப்புமின்றியோ Roblox அதை நடைமுறைப்படுத்தலாம்; மேலும் நியாயமான சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப அதன் பின்னர் விரைவாக உங்களுக்கு அறிவிக்கும்.
பொருந்தக்கூடிய அறிவிப்புக் காலத்திற்குப் பிறகும் நீங்கள் தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது திருத்தப்பட்ட Roblox விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக அமையும். ஒரு திருத்தத்தை நீங்கள் ஏற்கவில்லை எனில், திருத்தப்பட்ட Roblox விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு உங்கள் கணக்கை நீக்க வேண்டும்.
15.9 நிர்வகிக்கும் சட்டம் மற்றும் இடம்
சட்ட முரண்பாட்டு விதிகள் எப்படி இருப்பினும், Roblox விதிமுறைகள் அல்லது சேவை சார்ந்து அல்லது அது தொடர்பாக எழும் அனைத்து உரிமைகோரல்களும் கலிபோர்னியா சட்டத்தால் நிர்வகிக்கப்படும்; மேலும் அவை அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் மேடியோ கவுண்டியின் கூட்டாட்சி அல்லது மாநில நீதிமன்றங்களில் மட்டுமே பிரத்தியேகமாக விசாரிக்கப்படும். நீங்களும் Roblox-உம் அந்த நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு இணங்க ஒப்புக்கொள்கிறீர்கள்.
15.10 ஆன்லைன் தகவல்தொடர்புகள்
மேலும், மின்னணு வடிவத்தில் Roblox உங்களுக்கு அனுப்புகின்ற அறிவிப்புகள், ஒப்பந்தங்கள், தகவல் வெளிப்படுத்தல்கள் அல்லது பிற செய்திகள் எதுவும், அத்தகைய தகவல் பரிமாற்றம் எழுத்துப்பூர்வமாகப் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற ஏதேனும் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதையும் நீங்கள் மேற்படி ஒப்புக்கொள்கிறீர்கள். சேவைகள் வழியாக நீங்கள் மின்னணு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, ஏதேனும் ஏற்றுக்கொள்ளும்போது அல்லது ஒப்புதல் அளிக்கும்போதெல்லாம், நீங்கள் தாள் ஆவணத்தில் கையொப்பமிட்டது போலவே கட்டுப்படுத்தும் வகையில் அவை மின்னணுக் கையொப்பத்துடன் பயன்படுத்த உருவாக்கப்பட்டவையே என்பதையும் மேற்படி நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
15.11 மூன்றாம் தரப்பு தளம் சார்ந்த விதிமுறைகள்
15.11.1 Apple
நீங்கள் iOS சாதனத்தில் Roblox Player-ஐப் பயன்படுத்தினால், இந்தப் பிரிவின் நிபந்தனைகளுக்கும் நீங்கள் உடன்படுகிறீர்கள். உங்கள் ஒப்பந்தம் Apple, Inc. ("Apple") நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள். Apple அல்ல, Roblox மட்டுமே சேவைகளுக்கு முழுப் பொறுப்பாகும். சேவைகளைப் பொறுத்தவரையில், பராமரிப்பு அல்லது உதவி வழங்கும் கடமைகள் எதுவும் Apple நிறுவனத்திற்கு இல்லை. சேவைகள் தொடர்பாகச் சட்டத்தால் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ உணர்த்தப்படும் எந்தவொரு தயாரிப்பு உத்தரவாதங்களுக்கும் Apple பொறுப்பேற்காது.
சேவைகள் பொருந்தக்கூடிய உத்தரவாதத்தைப் பூர்த்தி செய்யத் தவறினால், நீங்கள் Apple நிறுவனத்திற்கு அறிவிக்கலாம், மேலும் மொபைல் செயலிகளுக்காக நீங்கள் செலுத்திய பொருந்தக்கூடிய வாங்குதல் தொகையை Apple உங்களுக்குத் திரும்ப அளிக்கலாம். சேவைகள் தொடர்பாக வேறு வாரண்டி பொறுப்பு எதுவும் Apple நிறுவனத்திற்கு இல்லை. சேவைகள் அல்லது சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான உங்கள் அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்பினரின் கோரிக்கைகளைக் கையாள்வதற்கு Apple பொறுப்பாகாது; இதில் பின்வருவன அடங்கும்: (a) தயாரிப்புப் பொறுப்புக் கோரிக்கைகள்; (b) பொருந்தக்கூடிய ஏதேனும் சட்ட அல்லது ஒழுங்குமுறைத் தேவைகளை சேவைகள் பூர்த்தி செய்யத் தவறின என்ற கோரிக்கை; மற்றும் (c) நுகர்வோர் பாதுகாப்பு அல்லது அது போன்ற சட்டங்களின் கீழ் எழும் கோரிக்கைகள்.
வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, Roblox விதிமுறைகளின் தரப்பினரைத் தவிர வேறு எந்தவொரு நபருக்கும் இந்த Roblox விதிமுறைகள் எந்த உரிமையையோ அல்லது பரிகாரத்தையோ வழங்காது என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள். Apple மற்றும் Apple-இன் துணையமைப்புகள் ஆகியவை Roblox விதிமுறைகளின் மூன்றாம் தரப்புப் பயனாளிகள் ஆவர்; மேலும், நீங்கள் Roblox விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும்போது, ஒரு மூன்றாம் தரப்புப் பயனாளியாக உங்களுக்கு எதிராக Roblox விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை Apple நிறுவனத்திற்கு இருக்கும் (மேலும் அந்த உரிமையை ஏற்றுக்கொண்டதாகவும் கருதப்படும்).
15.11.2 Autodesk
Roblox Studio-இல் Autodesk, Inc. நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Autodesk® FBX® குறியீடு உள்ளது. பதிப்புரிமை 2025 Autodesk, Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
15.11.3 Sony Playstation
நீங்கள் Sony PlayStation® சாதனத்தில் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்தப் பிரிவு உங்களுக்குப் பொருந்தும். பொருட்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் Sony PlayStation சேவை விதிமுறைகள் மற்றும் பயனர் ஒப்பந்தத்திற்கு உட்பட்டவை. இந்த ஆன்லைன் சேவைக்கான உரிமத்தை அமெரிக்காவைச் சேர்ந்த Sony Interactive Entertainment நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது. கேமிற்குள் உள்ள கடையில் வாங்கப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் Sony Interactive Entertainment Network Europe Limited நிறுவனத்திடமிருந்தே வாங்கப்படும், மேலும் அது PlayStation™ Store-இல் கிடைக்கக்கூடிய PlayStation™ Network சேவை விதிமுறைகள் மற்றும் பயனர் ஒப்பந்தத்திற்கு உட்பட்டதாகும். உபயோக உரிமைகள் ஒவ்வொரு ஐட்டத்திற்கும் மாறுபடலாம், ஆகவே ஒவ்வொரு பர்ச்சேஸிற்கும் உபயோக உரிமைகளைச் சரிபார்த்துக்கொள்ளவும். வேறுவிதமாகக் காட்டப்பட்டால் தவிர, கேமின் வயது ரேட்டிங்கே கேமுக்குள் உள்ள ஸ்டோரில் கிடைக்கும் உள்ளடக்கத்திற்கும் இருக்கும்.
15.12 தொடர்புத் தகவல்
கருத்துகள், கேள்விகள், கவலைகள் அல்லது பரிந்துரைகளை Roblox வரவேற்கிறது. Roblox ஆதரவு வாயிலாக நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது ஆதரவைப் பெறலாம். Roblox Corporation என்பது 3150 South Delaware Street, San Mateo, California, 94403 என்ற முகவரியில் அமைந்துள்ள, நெவாடாவின் சட்டங்களின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். சேவைகள் பற்றிய கருத்துகளும் பரிந்துரைகளும் ரகசியமற்றவையாகவும் பிரத்தியேக உரிமையற்றவையாகவும் கருதப்படும். மேலும், அவற்றை எந்தவொரு நோக்கத்திற்காகவும் உங்களுக்குக் கட்டணம், ராயல்டிகள் அல்லது பிற தொகை செலுத்த வேண்டி இல்லாமல், பயன்படுத்துவதற்கான உரிமையை Roblox கொண்டுள்ளது.
கிரியேட்டர் விதிமுறைகள்
அறிமுகவுரை
வரவேற்கிறோம்! இந்த Roblox கிரியேட்டர் பயன்பாட்டு விதிமுறைகள் ("கிரியேட்டர் விதிமுறைகள்") நீங்கள் ("கிரியேட்டர்") சேவைகளில் UGC-ஐ உருவாக்கும்போது, பதிவேற்றும்போது, வெளியிடும்போது, உற்பத்தி செய்யும்போது அல்லது பிற வழிகளில் கிடைக்கச் செய்யும்போது, அல்லது Creator Store உட்பட கிரியேட்டர் தளத்தைப் பயன்படுத்தும்போது உங்களுடன் பொருந்தும்; மேலும் இவை பின்வருவனவற்றுடன் கூடுதலாகப் பொருந்தும்: (a) Creator Hub-இல் உள்ள ஆவணங்கள் ("ஆவணங்கள்") உட்பட Roblox கிரியேட்டர் தளத்துடன் பயன்படுத்துவதற்காக Roblox கிடைக்கச் செய்யும் பொருந்தக்கூடிய ஆவணங்கள்; மற்றும் (b) Roblox பயன்பாட்டு விதிமுறைகள் ("பயனர் விதிமுறைகள்"). கிரியேட்டர் விதிமுறைகளுக்கும் பயனர் விதிமுறைகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், Roblox கிரியேட்டர் தளத்திற்கான உங்கள் அணுகல் மற்றும் பயன்பாடு தொடர்பாக இந்த கிரியேட்டர் விதிமுறைகளே முதன்மை பெறும்.இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல்
இந்த கிரியேட்டர் விதிமுறைகளை ஏற்பதன் மூலமாகவோ, UGC-ஐ உருவாக்குவதன் மூலமாகவோ அல்லது பிற வழிகளில் எங்கள் API-களை அணுகுவதன் அல்லது பயன்படுத்துவதன் மூலமாகவோ, நீங்கள் கிரியேட்டர் விதிமுறைகளுக்கு இணங்க ஏற்கிறீர்கள். ஒரு அமைப்பின் சார்பில் நீங்கள் Roblox கிரியேட்டர் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த அமைப்பை இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளுக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் உங்களுக்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்; மேலும் கிரியேட்டர் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், அந்த அமைப்பின் சார்பாகவே நீங்கள் அவ்வாறு செய்கிறீர்கள். பின்வருவனவற்றையும் நீங்கள் உறுதிசெய்து ஒப்புக்கொள்கிறீர்கள்: (a) உங்களுக்குக் குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்துள்ளது; மற்றும்/அல்லது (b) உங்கள் நாட்டில் இந்த உருவாக்குநர் விதிமுறைகளுக்குச் சம்மதம் தெரிவிப்பதற்கான தகுதியான வயது உங்களுக்கு இல்லை என்றால், Roblox Creator Platform-ஐப் பயன்படுத்துவதற்கு உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரின் அனுமதி உங்களுக்கு உள்ளது. நீங்கள் ஒரு வயதுவராதவராக இருந்தால், கூடுதல் விவரங்கள் மற்றும் மேலதிகத் தேவைகளுக்குப் பயனர் விதிமுறைகளின் பிரிவு 2.1 பொருந்தும்.
உங்கள் Roblox கிரியேட்டர் பிளாட்ஃபார்ம் உபயோகம்
மக்கள் நம்பிக்கையோடும் கண்ணியத்தோடும் நட்பை வளர்க்கக்கூடிய இடமாக Roblox-ஐ உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். இந்த இலைக்கை நோக்கி முன்செல்ல உதவ, கீழே விவரிக்கப்பட்டுள்ள Roblox கிரியேட்டர் பிளாட்ஃபார்ம் சேவையை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
3.1 Roblox Studio
கேம்கள், பயனர் சந்தைப் பொருட்கள் அல்லது டெவலப்பர் தயாரிப்புகள் உட்பட, ஆனால் வரம்புகளின்றி, UGC-ஐ உருவாக்க நீங்கள் Roblox Studio-ஐப் பயன்படுத்தலாம். Roblox Studio-இல் அம்சங்கள் கிடைக்கும் தன்மை வெவ்வேறு நாடுகளுக்கு இடையே மாறுபடலாம்; உங்கள் நாட்டில் சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். Roblox Studio-வை அணுகுவதற்கோ அல்லது Roblox Studio-வில் உள்ள சில அம்சங்களை அணுகுவதற்கோ மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது அரசால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை போன்ற பிற தகவல்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
3.2 கிரியேட்டர் ஸ்டோர்
சொத்துகளை வெளியிடுதல், விற்பனை செய்தல் மற்றும் அணுகுதல் உள்ளிட்ட கிரியேட்டர் ஸ்டோரை நீங்கள் பயன்படுத்துவது கிரியேட்டர் ஸ்டோர் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். கிரியேட்டர் ஸ்டோரில் நீங்கள் ஒரு சொத்தை வெளியிட்டால் அல்லது விற்றால், வாங்கும் கிரியேட்டர்களுக்கு அந்த உரிமத்தை வழங்குவதற்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள். உங்கள் சொத்து(களு)க்கும், வாங்கும் கிரியேட்டர்களுக்கு நீங்கள் உரிமைகளை வழங்கியதன் மூலம் எழும் எந்தவொரு உரிமைகோரல்களுக்கும் நீங்களே தொடர்ந்து பொறுப்பாவீர்கள். கிரியேட்டர் ஸ்டோரில் நீங்கள் சொத்துகளை வாங்கினால், பயனர் விதிமுறைகளின் பிரிவு 6 உங்களுக்கும் பொருந்தும்.
3.3 கிரியேட்டர் பகுப்பாய்வு
கிரியேட்டர் பகுப்பாய்வு என்பது, கிரியேட்டர்களுக்கு தங்கள் கேம்களின் செயல்திறன், பயனர் ஈடுபாடு, தக்கவைப்பு மற்றும் பணமாக்கம் தொடர்பான விரிவான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக கிரியேட்டர் ஹப்பில் உள்ள கருவிகளின் ஒரு தொகுப்பாகும். கிரியேட்டர் பகுப்பாய்வைப் பயன்படுத்துவதன் மூலம், ஒருங்கிணைந்த பகுப்பாய்வைக் கணக்கிடுவதற்காக உங்கள் கேம் தொடர்பான தரவு செயலாக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் பின்வருபவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள்: (a) கிரியேட்டர் பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட அனைத்து பெஞ்ச்மார்க்கிங் தகவல்களையும் ரகசியமாகப் பராமரிப்பீர்கள், அத்தகைய தகவல்களை உங்கள் கேமின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்துவீர்கள்; மற்றும் (b) பெஞ்ச்மார்க்கிங் தகவல்களைப் பொதுவில் பகிரவோ, விற்கவோ, வெளியிடவோ அல்லது பரப்பவோ மாட்டீர்கள்.
3.4 DevForum
"DevForum" என்பது Roblox டெவலப்மென்ட்டுக்கான அதிகாரப்பூர்வக் கலந்துரையாடல் மற்றும் உதவி மன்றமாகும். இது கிரியேட்டர்களுடன் தொடர்புகொள்வதற்கும் அவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கும் உள்ள பிரதான வழியாகும். பதிவுகளில் கருத்து தெரிவிப்பது போன்ற DevForum-இன் சில அம்சங்களுக்கான அணுகலானது Roblox தீர்மானிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அமைந்தது.
3.5 Roblox நீட்டிக்கப்பட்ட சேவைகள்
Roblox நீட்டிக்கப்பட்ட சேவைகள் என்பது மிகப்பெரிய கேம்களைக் கொண்ட கிரியேட்டர்கள், இயல்புநிலை தள வரம்புகளுக்கு அப்பால் கூடுதல் சேவைப் பயன்பாட்டை வாங்கவும் பெறவும் உதவும் ஒரு சேவையாகும். Roblox நீட்டிக்கப்பட்ட சேவைகள் மூலம் செய்யப்பட்ட பர்ச்சேஸ்களுக்கு பயனர் விதிமுறைகளின் பிரிவு 6 பொருந்தாது. Roblox நீட்டிக்கப்பட்ட சேவைகள் தொடர்பான அனைத்துக் கொடுப்பனவுகளும் பொருந்தக்கூடிய விதிமுறைகளும் Roblox நீட்டிக்கப்பட்ட சேவைகள் திட்ட பயன்பாட்டு விதிமுறைகளில் உள்ள கூடுதல் விதிமுறைகளுக்குள் இடம்பெற்றுள்ள விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
இயல்புநிலை பிளாட்ஃபார்ம் வரம்புகளை நீங்கள் மீறிவிட்டு, நீட்டிக்கப்பட்ட சேவைகளுக்கு நீங்கள் பதிவுசெய்யாமல் இருந்தால், கூடுதல் உபயோகத்திற்கு ஏற்ற அளவில் உங்கள் Robux பேலன்ஸில் இருந்து Robux-ஐக் கழித்துக்கொள்ள நீங்கள் Roblox-ஐ அங்கீகரிக்கிறீர்கள். அப்படிக் கழித்துக்கொள்வது பற்றி Roblox உங்களுக்கு அறிவிப்பை வழங்கும். உங்கள் Robux பேலன்ஸ் நீங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு போதுமானதாக இல்லாவிட்டால், நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தும் வரை Roblox (a) Robux செலவிடும் வசதியை இடைநிறுத்தி வைக்கலாம் மற்றும் (b) பொருந்தக்கூடிய சேவை வரம்புகளை மீறிவிட்ட கேம்களை தனிப்பட்டவையாக மாற்றி அமைக்கலாம். இயல்புநிலை பிளாட்ஃபார்ம் வரம்புகளுக்குக் கூடுதலாக சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தினால், அது இந்த இழப்பீட்டு அங்கீகரிப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.
3.6 AI தொழில்நுட்பங்கள் & AI கருவிகள்
பயனர் விதிமுறைகளின் பிரிவு 5.3-இல் உள்ள எங்கள் AI அம்சங்களின் ஒரு பகுதியாக, சேவைகளில் (“AI கருவிகள்”) கேம்கள் அல்லது உள்ளடக்கத்தை உருவாக்கும்போது AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த, அவற்றுடன் இண்டராக்ட் செய்ய அல்லது உட்பொதிக்க உங்களை அனுமதிக்கும் சில கருவிகள் மற்றும் APIகளை நாங்கள் கிரியேட்டர்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம். பயனர்களின் குறிப்பிட்ட வயதுக் குழுக்கள் தொடர்பாக உட்பட, AI கருவிகளின் உங்கள் உபயோகத்தை Roblox அதன் சொந்த விருப்புரிமையின்பேரில் கட்டுப்படுத்தலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.
3.6.1 உங்கள் பொறுப்புகள்
பயனர் விதிமுறைகளின் பிரிவு 5.3-இல் விவரிக்கப்பட்டுள்ள AI அம்சங்கள் தொடர்பான தேவைகளுக்குக் கூடுதலாக, Roblox-இன் AI கருவிகள் அல்லது AI தொழில்நுட்பங்களை உள்ளடக்கக் கூடிய பிற மூன்றாம் தரப்புச் சேவைகளைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கும் உருவாக்குநர்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
- பொருந்தக்கூடிய ஏதேனும் கட்டணங்களைச் செலுத்துவது உட்பட, அந்த மூன்றாம் தரப்பு சேவைகளின் பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகளுக்கும் கொள்கைகளுக்கும் இணங்கி நடத்தல்;
- தங்கள் கேம்களுக்குள் AI-இன் பயன்பாடு குறித்து பயனர்களுக்குத் தெளிவான வெளிப்படுத்தல்களை வழங்குதல்; இதில் பின்வருவன அடங்கும்:
AI என்பது மனிதர் அல்ல; மற்றும்
AI வெளியீடு என்பது செயற்கையாக உருவாக்கப்படுவது, அது ஒரு மனிதரின் கருத்துகளையோ ஆலோசனைகளையோ பிரதிபலிக்காது, மேலும் அது உண்மை அடிப்படையில் துல்லியமற்றதாக இருக்கலாம்; மற்றும்
- பயனர்கள் ஓர் AI அமைப்புடன் தான் உரையாடுகிறார்கள் என்பது அந்த உரையாடலின் மூலமாகவோ அல்லது சூழ்நிலையின் மூலமாகவோ அவர்களுக்குத் உடனடியாகத் தெளிவாகத் தெரியவராத வரையில், பயனர்களுடனான நேரடித் தொடர்புகளுக்கு AI-ஐப் பயன்படுத்தும் எந்தவொரு மூன்றாம் தரப்புச் சேவைகளையும் பயன்படுத்தக் கூடாது;
- பொருந்தக்கூடிய சட்டம் மற்றும் Roblox விதிமுறைகளுக்கு இணங்க மட்டுமே AI பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்தல்; மற்றும்
- AI அமைப்புகளின் பயன்பாடு தொடர்பான அபாயங்களைத் தடுக்க நியாயமான, விகிதாசார மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல்.
3.7 Roblox API-களின் பயன்பாடு
உங்கள் கேம்கள் மற்றும் செயலிகளை (“API கிளையண்ட்(கள்)”) மேம்படுத்த உங்களுக்கு உதவும் வகையிலேயே Roblox-இன் APIகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் வழங்கும் சில API-களை அணுகுவதற்கு, பதிவுச் செயல்முறையின் ஒரு பகுதியாகவோ அல்லது API-களைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்காகவோ சில தகவல்களை (அடையாளம் அல்லது தொடர்பு விவரங்கள் போன்றவை) நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம். எங்களுக்கு நீங்கள் வழங்கும் எந்தவொரு பதிவுத் தகவலையும் துல்லியமாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் வைத்திருக்க வேண்டும். எங்கள் APIகளைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் APIகளில் அல்லது அவற்றின் வழியாக அணுகப்படும் உள்ளடக்கத்தில் உள்ள எந்த உரிமைகளையும் நீங்கள் பெற்றுக்கொள்வதில்லை.
தரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காகவும், ROBLOX விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்குவதைச் சரிபார்ப்பதற்காகவும், APIகளின் உபயோகத்தை ROBLOX கண்காணிக்கலாம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். உதாரணத்திற்கு Roblox அல்லது அதன் பயனர்களை பாதிக்கக்கூடிய பாதுகாப்பு சிக்கல்களை அடையாளம் காண்பது போன்றவற்றுக்காக Roblox உங்கள் API கிளையன்ட்டை அணுகுவது மற்றும் பயன்படுத்துவது போன்றவை இதிலடங்கும். நீங்கள் ஏதேனும் Roblox விதிமுறைகளை மீறுகிறீர்கள் என்று நாங்கள் நியாயமான வகையில் நம்பினால், உங்களின் அல்லது உங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் API கிளையன்ட்டிற்கோ உள்ள APIகளுக்கான அணுகலை Roblox முன்னறிவிப்பின்றி இடைநீக்கலாம். இவற்றையும் செய்வீர்கள்:
- உங்கள் இறுதிப் பயனர்கள் பொருந்தக்கூடிய எந்தவொரு சட்டம், ஒழுங்குமுறை மற்றும் Roblox விதிமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யுங்கள், மேலும் அவற்றை மீறுவதற்கு அவர்களுக்குத் தெரிந்தே வழிவகை செய்யாதீர்கள்.
- அந்த API-இன் ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் மூலம் மட்டுமே அதை அணுக வேண்டும், மேலும் API-களைப் பயன்படுத்தும்போது உங்கள் அடையாளத்தையோ அல்லது உங்கள் API கிளையன்ட்டின் அடையாளத்தையோ தவறாகக் குறிப்பிடுவதையோ அல்லது மறைப்பதையோ தவிர்க்கவும்;
- Roblox-இன் கண்காணிப்புச் செயல்முறையில் குறுக்கிடாமல் இருப்பது.
- உங்கள் API கிளையன்ட் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட பயனர் தகவல்களை, அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க, வணிகரீதியாக தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மேலும், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி தேவைப்படும் அளவில், அத்தகைய தகவல்களின் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது பயன்பாட்டையும் குறித்து உங்கள் பயனர்களுக்கு உடனடியாகத் தெரிவியுங்கள்.
- மூன்றாம் தரப்பு பயன்படுத்துவதற்காக API-ஐ துணை உரிமத்தை வழங்கக் கூடாது.
3.8 கிரியேட்டர் மூன்றாம் தரப்பு செயலிகள்
Roblox அமைப்புகள், தரவு அல்லது சேவைகளுடன் தொடர்பு கொள்ளும் அல்லது அவற்றைப் பயன்படுத்தும் ஏதேனும் செயலியை (ஏதேனும் OAuth 2.0 செயலி அல்லது API கிளையன்ட் உட்பட) நீங்கள் உருவாக்கினால் அல்லது இயக்கினால், நீங்கள் கிரியேட்டர் மூன்றாம் தரப்பு செயலி கொள்கைக்கு இணங்க ஏற்கிறீர்கள். உங்கள் செயலியைப் பயன்படுத்துவதற்குப் பயனர்களிடமிருந்து தேவைப்படும் அனைத்து அனுமதிகளையும் சம்மதங்களையும் உங்கள் செயலி துல்லியமாகப் பெறவும் வெளிப்படுத்தவும் வேண்டும். இறுதிப் பயனர்களுக்கு உங்கள் செயலியை Roblox கிடைக்கச் செய்வதற்கு ஏதுவாக, உங்கள் செயலியுடன் தொடர்புடைய அனைத்து இலச்சினைகள், வர்த்தக முத்திரைகள், சேவை முத்திரைகள் அல்லது வணிகப் பெயர்கள் உட்பட, ஆனால் வரம்புகளின்றி, உங்கள் செயலி மற்றும் அது தொடர்பான உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்ய, சேமிக்க, இறக்குமதி செய்ய, உள்ளூர்மயமாக்க, காட்சிப்படுத்த, நிகழ்த்த, விநியோகிக்க மற்றும் பயன்படுத்த எக்காலத்திற்குமான, ரத்துசெய்ய முடியாத, மாற்றத்தக்க, உள்-உரிமம் வழங்கக்கூடிய, உலகளாவிய, பிரத்தியேகமற்ற, ராயல்டியற்ற உரிமையையும் உரிமத்தையும் Roblox-க்கு நீங்கள் வழங்குகிறீர்கள். உங்கள் செயலி மற்றும் அது தொடர்பான உள்ளடக்கத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிமைகளை வழங்குவதற்கு நீங்கள் உரிமையாளராகவோ அல்லது முழு அங்கீகாரம் பெற்றவராகவோ இருக்க வேண்டும். சேவைகள் வாயிலாக உங்கள் செயலியையும் அது தொடர்பான உள்ளடக்கத்தையும் நீங்கள் பதிவேற்றுவதன் அல்லது கிடைக்கச் செய்வதன் விளைவாக எந்தவொரு நபருக்கும் செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளையும் செலுத்த நீங்கள் ஏற்கிறீர்கள்.
3.8.1 பிரதிநிதித்துவம் மற்றும் உத்தரவாதங்கள்
உங்கள் செயலிக்கு நீங்களே பொறுப்பாவீர்கள், மேலும் பின்வருவனவற்றை உறுதிசெய்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள்:
- நீங்கள் Roblox-க்கு வழங்கும் உரிமத்தை உருவாக்கியவராகவும் அதன் உரிமையாளராகவும் இருக்கிறீர்கள், அல்லது அந்த உரிமத்தைப் பயன்படுத்துவதற்கும், அதைப் பயன்படுத்த Roblox-க்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் தேவையான உரிமைகளையும் அனுமதிகளையும் பெற்றுள்ளீர்கள்;
- உங்கள் செயலி மற்றும் உங்கள் செயலியின் பயன்பாடு பின்வருவனவற்றைச் செய்யாது, இனிமேலும் செய்யப்போவதில்லை:
- எந்தவொரு மூன்றாம் தரப்பு உரிமையையும் மீறுதல், ஆக்கிரமித்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல்;
- வேறொரு நபரின் தனியுரிமை, விளம்பரம் அல்லது பிற சொத்துரிமைகளை அவதூறு செய்தல், இழிவுபடுத்துதல் அல்லது ஆக்கிரமித்தல்;
- எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் Roblox உரிமங்கள், அனுமதிகள் அல்லது சம்மதங்களைப் பெறவேண்டிய நிலையை ஏற்படுத்துதல், அல்லது அவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ உரிமைக் கடன் வழங்கவோ கட்டாயப்படுத்துதல்;
- உங்களுக்கும் மூன்றாம் தரப்பினருக்கும் இடையே ஒப்பந்த மீறலை ஏற்படுத்துதல்; அல்லது
- Roblox ஏதேனும் சட்டம், சட்டப்பிரிவு, விதி அல்லது ஒழுங்குமுறையை மீறும் நிலையை உண்டாக்குதல்;
- உங்கள் செயலி மற்றும் அது தொடர்பான எந்தவொரு பொருட்களிலும் வைரஸ்கள், மால்வேர்கள் அல்லது வேறு ஏதேனும் தீங்கிழைக்கும் அல்லது ஆபத்தான உள்ளடக்கங்கள் இருக்காது;
- Roblox, அதன் தளப் பயனர்கள் அல்லது வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல், வெளிப்படுத்துதல், தொடர்ந்து மாற்றுதல் மற்றும் பிற வழிகளில் செயலாக்குதல் ஆகியவற்றிற்குப் பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், விதிகள், சட்டப்பிரிவுகள், ஒழுங்குமுறைகள், ஒப்பந்தக் கடப்பாடுகள் மற்றும் சுய ஒழுங்குமுறைக் கடமைகளுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பீர்கள்; மற்றும்
- பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்கள், சட்டப்பிரிவுகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கும் நீங்கள் கட்டுப்பட்டு நடப்பீர்கள்
3.8.2 செயலி நடத்தை
சேவைகளின் எந்தவொரு கணினி அளவிலான அம்சங்கள் அல்லது பிற கணினி நடத்தையை நீங்கள் முடக்கவோ, மீறவோ அல்லது வேறுவிதமாக மாற்றவோ கூடாது; மேலும் உங்கள் செயலிக்கும் Roblox-இன் அமைப்பிற்கும் அல்லது சேவைகளுக்கும் இடையேயான வேறுபாட்டைப் பயனர்கள் அறிந்துகொள்வதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அம்சங்கள், செயல்பாடுகள் அல்லது கூறுகளை உங்கள் செயலி கொண்டிருக்கக்கூடாது. தரவுகள், பயன்பாட்டுத் தகவல்கள் மற்றும் அளவீடுகளை நீங்கள் சேகரிப்பதும் பயன்படுத்துவதும் உங்கள் செயலியின் பயனர்களால் அனுமதிக்கப்பட்டவாறு மட்டுமே இருக்க வேண்டும்; மேலும் உங்கள் செயலி மூலமாக அத்தகைய தரவுகள், தகவல்கள் அல்லது அளவீடுகளைச் சேகரிப்பது அல்லது ஒன்றிணைப்பது, அல்லது செயல்பாட்டை மதிப்பிடுவதற்காக உங்கள் செயலி அல்லது சேவைகளைப் பயன்படுத்துவது அல்லது Roblox-இன் பயன்பாடு, வருவாய் அல்லது Roblox-இன் வணிகம் அல்லது செயல்பாடுகளின் வேறு ஏதேனும் அம்சங்களைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவது ஆகியவை உங்களுக்குத் திட்டவட்டமாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.
3.8.3 பொறுப்பு மறுப்பும் நீக்குதலும்
உங்கள் செயலி மற்றும் அது தொடர்பான எந்தவொரு பொருட்களையும் திரையிடவோ, அங்கீகரிக்கவோ, திருத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ Roblox கடமைப்பட்டிருக்கவில்லை, மேலும் அதற்கு Roblox பொறுப்பேற்காது. கிரியேட்டர் மூன்றாம் தரப்பு செயலி கொள்கை, இந்த கிரியேட்டர் விதிமுறைகள், Roblox விதிமுறைகளின் வேறு ஏதேனும் பகுதி அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தை இது மீறுகிறது என்று Roblox கருதினால், அல்லது வேறுவிதமாக ஆட்சேபனைக்குரியதாகவோ அல்லது Roblox-க்கு சேதம் விளைவிப்பதாகவோ இருந்தால், பயனர் விதிமுறைகளின் பிரிவு 4-இல் விவரிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை Roblox எடுக்கலாம். அத்தகைய நடவடிக்கைகளில் செயலியை இடைநிறுத்துதல், முடக்குதல் மற்றும்/அல்லது நீக்குதல் மற்றும் Roblox-க்குக் கிடைக்கக்கூடிய உரிமைகள் மற்றும் பரிகாரங்களுக்கு ஏற்ப பிற பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவை அடங்கும். மேலும் விவரங்களுக்கு, பயனர் விதிமுறைகளின் பிரிவு 4-ஐப் பார்க்கவும்.
3.9 கேம் தரவு
நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு கேமிற்கும், அந்தக் கேமை உருவாக்குவது மற்றும் இயக்குவது தொடர்பான தரவை அணுகும் வாய்ப்பு உங்களுக்கும் Roblox-க்கும் இருக்கலாம். கேமை ஆதரிப்பதற்கும் வணிகப் பகுப்பாய்வுகளுக்கும் உங்களுடைய முறையான வணிக நோக்கங்களுக்காக நீங்களும் Roblox-உம் அந்தத் தரவைப் பயன்படுத்தலாம்; அதாவது: (a) கேம் மற்றும் சேவைகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக; (b) அதிகாரிகளிடமிருந்து வரும் சட்டப்பூர்வக் கோரிக்கைகள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்குவதற்காக; (c) கேம் மற்றும் சேவைகளுக்குள் பாதுகாப்பையும் பத்திரத்தையும் உறுதிசெய்வதற்காக; மற்றும் (d) மோசடியைத் தடுப்பதற்காக அல்லது இடரைக் குறைப்பதற்காக.
உரிமங்கள்
4.1 Roblox உரிமங்கள்
Roblox கிரியேட்டர் தளம் உட்பட சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான உரிமங்களை பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2 மற்றும் 9 நிர்வகிக்கின்றன.
4.2 பணமாக்குவதற்கான Roblox-இன் உரிமை
முதன்மைத் தரப்பாக சேவைகளில் உங்கள் உள்ளடக்கத்தைப் பணமாக்குவதற்கும் விநியோகிப்பதற்குமான உரிமை Roblox-க்கு உண்டு; இதில் உங்கள் UGC-ஐ அணுக அல்லது பயன்படுத்த பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பதும் அடங்கலாம். இந்த கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 6-இல் வெளிப்படையாக வழங்கப்பட்டுள்ளதைத் தவிர, வேறு எந்தவொரு பேமெண்ட்டையும் பெறுவதற்கான உரிமையை இந்த கிரியேட்டர் விதிமுறைகள் தங்களுக்கு வழங்காது. இருப்பினும், உங்கள் உள்ளடக்கத்தைப் பணமாக்குவது தொடர்பாக Roblox இடமிருந்து நீங்கள் பெற உரிமையுடைய எந்தவொரு பேமெண்ட்டுகளும் (DevEx விதிமுறைகள், கிரியேட்டர் ரிவார்டுகள் மற்றும் இந்த கிரியேட்டர் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள பிற திட்டங்களின் கீழ் உட்பட), உரிமம் பெற்ற உங்கள் உள்ளடக்கத்தை Roblox பயன்படுத்துவதற்காகச் செலுத்தப்படும் ராயல்டியாகவே கருதப்படும்; மேலும் பொருந்தக்கூடிய சட்டத்தின்படி தேவைப்படும் வரிப்பிடித்தங்களை Roblox அத்தகைய தொகைகளிலிருந்து செய்யும்.
பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-இல் வழங்கப்பட்ட உரிமத்தின் ராயல்டியற்ற தன்மை எப்படி இருப்பினும், முதன்மைத் தரப்பாக உங்கள் உள்ளடக்கத்தைப் பணமாக்குவதற்காக தனக்கு உரிமம் வழங்கப்பட்ட பதிப்புரிமைகளை (மறுவுருவாக்கம், விநியோகம், கிளைப் படைப்புகளை உருவாக்குதல், பொது நிகழ்த்தல் மற்றும் பொதுக் காட்சிப்படுத்துதல் உட்பட) Roblox செயல்படுத்தும் அளவிற்கு, அதன்மூலம் உங்கள் UGC-ஐப் பயனர்கள் பெறுவது, அணுகுவது அல்லது பயன்படுத்துவதனால் கிடைக்கப்பெறும் வருவாயை உருவாக்கும் அளவிற்கு, பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2 (மேலே உள்ள பிரிவு 4.1-இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு), அத்தகைய பணமாக்குதலுக்கு மட்டுமே மற்றும் அந்த அளவிற்கு மட்டுமே ராயல்டிக்குரியதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 6-க்கு இணங்கத் தீர்மானிக்கப்படும் கிரியேட்டர் பேமெண்ட்டை Roblox உங்களுக்கு வழங்கும்; மேலும் அத்தகைய கிரியேட்டர் பேமெண்ட்டே, அத்தகைய பணமாக்குதல் தொடர்பாக உரிமம் பெற்ற பதிப்புரிமைகளை Roblox பயன்படுத்துவதற்கான ஒரே இழப்பீடாகும். உரிமத்தை வழங்குவதற்காகவோ அல்லது உங்கள் UGC-இன் பணமாக்கப்படாத எந்தவொரு பயன்பாட்டிற்காகவோ எந்தவொரு கிரியேட்டர் பேமெண்ட்டோ அல்லது பிற கட்டணமோ செலுத்தப்பட வேண்டியதில்லை.
சட்டம் அனுமதித்துள்ளவாறு, உங்கள் உள்ளடக்கத்தின் மீதான அனைத்து உடைமை உரிமை, உரிமை, தலைப்பு மற்றும் ஆதாயங்களை நீங்களே தக்கவைத்துக் கொள்கிறீர்கள்; இருப்பினும், இது Roblox விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ள பிரத்தியேகமற்ற உரிமத்திற்கு உட்பட்டதாகும்.
4.3 Roblox APIகள் மற்றும் ஆவணங்களுக்கான உரிமம்
இந்த கிரியேட்டர் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்குவதற்கு உட்பட்டு, இந்த கிரியேட்டர் விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு சேவைகளை அணுகுவதற்குத் தேவையான வரம்பிற்குள் மட்டுமே, நாங்கள் உங்களுக்கு வழங்கும் Roblox API-கள் மற்றும் ஆவணங்களை அணுகவும் பயன்படுத்தவும் வரம்பிற்குட்பட்ட, பிரத்தியேகமற்ற, உள்-உரிமம் வழங்க முடியாத, மாற்ற முடியாத, பிறருக்கு உரிமையளிக்க முடியாத, ரத்துசெய்யப்படக்கூடிய உரிமத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த கிரியேட்டர் விதிமுறைகளில் வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகள், தலைப்பு மற்றும் நலன்களை நாங்கள் தக்கவைத்துக்கொள்கிறோம்; மேலும் இந்த கிரியேட்டர் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தவிர பிற வழிகளில் நீங்கள் API-கள் அல்லது ஆவணங்களை அணுகவோ பயன்படுத்தவோ கூடாது. நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக்கூடாது (மேலும் செய்ய முயற்சிக்கவோ அல்லது பிறரைச் செய்ய அனுமதிக்கவோ அல்லது அதற்கு உதவவோ கூடாது):
- பொருந்தக்கூடிய சட்டங்களால் இந்தக் கட்டுப்பாடு தடைசெய்யப்படும் அளவைத் தவிர்த்து, API-களிலிருந்து மூலக் குறியீடு, வர்த்தக ரகசியங்கள் அல்லது தொழில்நுட்ப அறிவை ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்தல் அல்லது வேறுவிதமாகப் பெறுதல்;
- API-களுக்கான அணுகலை மாற்றுதல், அதன் கிளைப் படைப்புகளை உருவாக்குதல், நகலெடுத்தல், மறுவுருவாக்கம் செய்தல், மறுவிநியோகம் செய்தல், வாடகைக்கு விடுதல், குத்தகைக்கு விடுதல், விற்பனை செய்தல் அல்லது கூட்டமைப்பாக வழங்குதல்; அல்லது
- பின்வரும் முறைகளில் API-களை அணுகுதல் அல்லது பயன்படுத்துதல்:
- பொருந்தக்கூடிய ஆவணங்களுக்கு இணங்காமல் இருத்தல்;
- எங்களின் ஏதேனும் தொழில்நுட்பச் செயல்முறைகள் அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமரசம் செய்தல், உடைத்தல் அல்லது முறியடித்தல்;
- பயனர்கள், நாங்கள் (எங்கள் அமைப்புகள் அல்லது நெட்வொர்க்குகள் உட்பட) அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல்; அல்லது
- எங்கள் தனிப்பட்ட விருப்புரிமையின்படி நாங்கள் நிர்ணயிக்கும் அல்லது அதிகப்படியான அல்லது முறைகேடான பயன்பாடாக நாங்கள் கருதும் எந்தவொரு API விகிதம், அழைப்பு அல்லது பிற பயன்பாட்டு வரம்புகளை மீறுதல்.
4.4 திறந்த மூல மென்பொருள்
Roblox API-களுக்குத் தேவைப்படும் அல்லது அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சில மென்பொருள்கள் ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளவாறு திறந்த மூல உரிமத்தின் கீழ் வழங்கப்படலாம். திறந்த மூல மென்பொருள் உரிமங்கள் தனித்தனி ஒப்பந்தங்களை உருவாக்குவதால், அவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். திறந்த மூல மென்பொருள் உரிமமானது இந்த கிரியேட்டர் விதிமுறைகளை வெளிப்படையாக மேலோங்கும் வரம்பிற்குட்பட்ட அளவிற்கு, அந்தத் திறந்த மூல மென்பொருள் உரிமமே பொருந்தக்கூடிய திறந்த மூல மென்பொருளுக்காக மட்டுமே Roblox-உடனான உங்கள் ஒப்பந்தத்தை அமைக்கிறது.
ஒரு கிரியேட்டராக உங்கள் பொறுப்புகள்
5.1 பொதுவான பொறுப்புகள்
ஒரு கிரியேட்டராக, நீங்கள் Roblox-க்கு உரிமம் வழங்கும் UGC ஆனது Roblox விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வதற்கும், நீங்கள் வழங்கும் UGC-ஐப் பயனர்கள் அணுகுவதையோ அல்லது அனுபவிப்பதையோ தடுக்கும் முக்கியமான சிக்கல்களைக் கையாள்வதற்கும் தீர்ப்பதற்கும் நீங்களே முதன்மையான பொறுப்பாவீர்கள். உங்கள் UGC-க்கான பயனர் மதிப்பாய்வு முறையை நீங்கள் செயற்கையாகக் கையாளக்கூடாது. உங்கள் UGC கிடைக்கப்பெறும் அனைத்து அதிகார வரம்புகளிலும், பொருந்தக்கூடிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உட்பட Roblox விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் பிற பயனர்களுக்கான தனது கடமைகளை Roblox நிறைவேற்றும் வகையில், நீங்கள் UGC-ஐ வழங்கவும் பராமரிக்கவும் வேண்டும்.
5.2 பிற கிரியேட்டர்களின் உள்ளடக்கம்
கிரியேட்டர்கள் அனைவரும் அவர்களாகவே சொந்தமாக யோசனைகளை உருவாக்க வேண்டும் என்று Roblox விரும்புகிறது. பயனர் விதிமுறைகளின் பிரிவு 3-க்கு இணங்க, தொடர்புடைய கிரியேட்டர்(களிடமிருந்து) வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதி பெறாத வரையில், அல்லது கிரியேட்டர் ஸ்டோரில் ஒரு சொத்தாக மீண்டும் பயன்படுத்துவதற்கோ, நகலெடுப்பதற்கோ அல்லது மாற்றுவதற்கோ அந்த UGC வெளிப்படையாகக் கிடைக்கப்பெறாத வரையில், சேவைகளில் உள்ள மற்றொரு கிரியேட்டரின் UGC-ஐ நீங்கள் நகலெடுக்கவோ அல்லது அதில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யவோ கூடாது.
5.3 கேம்களுக்கான பொறுப்புகள்
ஒரு கேமின் கிரியேட்டராக நீங்கள் பின்வருவனவற்றை உறுதிசெய்யும் பொறுப்பைக் கொண்டுள்ளீர்கள்: (a) உங்கள் கேம் Roblox விதிமுறைகளுக்கு இணங்குகிறது; மற்றும் (b) உங்கள் கேமில் உள்ள பயனர்கள் சமூகத் தரநிலைகள் உட்பட Roblox விதிமுறைகளை மீறவில்லை. பயனர்களால் Roblox விதிமுறைகள் சாத்தியமான அல்லது உண்மையான மீறல்களுக்கு உள்ளாகிறதா என்பதைக் கண்டறிய உங்கள் கேமைக் கண்காணிக்கவும், அத்தகைய மீறல்கள் குறித்து உடனடியாக Roblox-க்குத் தெரிவிக்கவும் நீங்கள் ஏற்கிறீர்கள்.
5.3.1 முதிர்ச்சி மற்றும் இணக்க கேள்வித்தாள்
எந்தவொரு பயனருக்கும் உங்கள் கேம் கிடைக்கச் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு "முதிர்ச்சி மற்றும் இணக்க கேள்வித்தாளை" பூர்த்தி செய்ய வேண்டும்; இது உங்கள் கேமிற்குள் பயனர்கள் எத்தகைய உள்ளடக்கத்தை எதிர்கொள்ளக்கூடும் என்பது பற்றிய தொடர் கேள்விகளைக் கொண்டுள்ளதுடன், உங்கள் கேமிற்கு ஒரு உள்ளடக்க முதிர்ச்சி லேபிளை ஒதுக்க Roblox-க்கு வழிவகை செய்கிறது. நீங்கள் Roblox-க்குச் சமர்ப்பிக்கும் எந்தவொரு முதிர்ச்சி மற்றும் இணக்க கேள்வித்தாளிலும் துல்லியமான, முழுமையான மற்றும் புதுப்பித்த தகவல்களை வழங்குவீர்கள் என உறுதி அளிக்கிறீர்கள் மற்றும் உத்தரவாதம் அளிக்கிறீர்கள். குறிப்பிட்ட எந்தவொரு உள்ளடக்க முதிர்ச்சி லேபிளையும் கோருவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உள்ளடக்க முதிர்ச்சி நிலை லேபிள்களின் துல்லியம், முழுமைத் தன்மை, செல்லுபடித் தன்மை அல்லது தரத்திற்கு Roblox பொறுப்பல்ல என்பதை நீங்கள் அறிந்து ஏற்றுக்கொள்கிறீர்கள். தன் சுய விருப்பத்தின்படி, உள்ளடக்க முதிர்ச்சி லேபிள்களை அவ்வப்போது உருவாக்க மற்றும்/அல்லது மாற்றியமைக்க Roblox-க்கு உரிமை உண்டு. எந்தெந்த கேம்களைத் தேடலாம் மற்றும் விளையாடலாம் என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு கேமின் மதிப்பீடும் பயனரின் கணக்குடன் தொடர்புடைய வயதுத் தகவலுடன் பொருத்தப்படுகிறது; மேலும் பெற்றோர் கட்டுப்பாடுகள் 13 வயதுக்குட்பட்ட கணக்குகளுக்கான அணுகலைக் கூடுதலாகக் கட்டுப்படுத்தலாம்.
5.3.2 கேம் விதிகள்
கேம் விதிகளை உருவாக்குவது விருப்பத்திற்குரியதாகும்; மேலும் நீங்கள் உருவாக்கும் எந்தவொரு கேம் விதிகளும் Roblox விதிமுறைகளுடன் (சமூகத் தரநிலைகள் உட்பட) முரண்படாது அல்லது அவற்றைப் பலவீனப்படுத்தாது என நீங்கள் ஏற்கிறீர்கள். கேம் விதிகளை பயனர் பின்பற்றுவதைக் கண்காணிப்பதற்கும், கேம் விதிகளை மீறும் பயனர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உங்களுடைய சொந்த அமைப்புகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். கேம் விதிகளைக் கண்காணித்து நெறிப்படுத்தும் செயல்பாட்டின் போது, Roblox விதிமுறைகளை (சமூகத் தரநிலைகள் உட்பட) மீறும் உள்ளடக்கத்தையோ அல்லது நடத்தையையோ நீங்கள் அறிய நேர்ந்தால், அதை உடனடியாக Roblox-க்குத் தெரிவிக்க வேண்டும். Roblox சார்பாக பயனர்களை மதிப்பாய்வு செய்ய உங்களுக்கு அதிகாரம் உள்ளது போல் நீங்கள் காட்டிக்கொள்ளக் கூடாது.
5.4 பயனர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள்
சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதன் வாயிலாக, பயனர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய தரவை நீங்கள் செயலாக்க நேரிடலாம். Roblox விதிமுறைகளால் தடைசெய்யப்பட்ட முறையில் ஒரு பயனர் அல்லது வேறொருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக, நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தவோ, ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்யவோ, டீகம்பைல் செய்யவோ அல்லது பிற வழிகளில் மாற்றியமைக்கவோ கூடாது. ஒரு பயனரைப் பற்றிய ஏதேனும் தனிப்பட்ட தகவலை நீங்கள் பெற்றால், மூன்றாம் தரப்பினர் அங்கீகரிக்கப்படாத வகையில் அணுகுவதிலிருந்து அத்தகைய தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க நியாயமான அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். கூடுதலாக, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக்கூடாது:
- இந்த கிரியேட்டர் விதிமுறைகளில் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டிருந்தாலன்றி, தனிப்பட்ட தகவலை விற்பனை செய்தல், வெளிப்படுத்துதல் அல்லது பிற வழிகளில் மூன்றாம் தரப்பினருடன் பகிர்தல்; மற்றும்
- தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துதல்:
- எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்துதல்;
- சேவைகள் அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் அல்லது தளங்கள் முழுவதிலும் உள்ள ஏதேனும் தனிப்பட்ட பயனர், சாதனம் அல்லது உலாவியின் மீது ஏதேனும் பிரிவுகள், சுயவிவரங்கள் அல்லது அதுபோன்ற பதிவுகளை உருவாக்குதல், உருவாக்க உதவுதல், கண்காணித்தல் அல்லது கூடுதல் விவரங்களைச் சேர்த்தல்;
- ஏதேனும் தனிப்பட்ட சாதனம் அல்லது உலாவியின் நடத்தையை ஏதேனும் பிரிவு, சுயவிவரம் அல்லது அதுபோன்ற பதிவுடன் தொடர்புபடுத்துதல், அல்லது பயனர்களின் தரவின் அடிப்படையில் அத்தகைய ஏதேனும் பதிவில் கூடுதல் விவரங்களைச் சேர்த்தல்;
- பயனர்களின் ஏதேனும் தரவை அந்தப் பயனரின் பிற தனிப்பட்ட தகவல்களுடன் தொடர்புபடுத்துதல்; அல்லது
- தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் உட்படப் பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டத்தை மீறும் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நோக்கத்திற்காகவும் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்படாத நோக்கத்திற்காகவும் பயன்படுத்துதல்;
- பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டத்தில் (கலிபோர்னியா நுகர்வோர் தனியுரிமைச் சட்டம் போன்றவை) வரையறுக்கப்பட்டுள்ளவாறு, ஒரு பயனருக்குச் சொந்தமான ஏதேனும் தனிப்பட்ட தகவலை விற்பனை செய்தல் அல்லது பகிர்தல்.
5.5 நாங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்
இந்த கிரியேட்டர் விதிமுறைகளின் கீழ் உள்ள உங்கள் பொறுப்புகளை நீங்கள் நிலைநிறுத்தவில்லை என்றோ அல்லது உங்கள் கேமின் பயனர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர் எங்கள் சமூகத் தரநிலைகள் உட்பட எங்கள் Roblox விதிமுறைகளை மீறுகிறார்கள் என்றோ நாங்கள் அறிய நேர்ந்தால், பின்வரும் நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கலாம்:
- இந்த கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 6-இன் (Roblox பொருளாதாரம்) கீழான ஏதேனும் பணமாக்குதல் உட்பட, UGC-இன் முழுப் பகுதியையோ அல்லது பகுதிகளையோ தடுப்பது, அகற்றுவது அல்லது நீக்குவது;
- சேவைகளுக்கான உங்கள் அணுகலை நீக்குதல் அல்லது கட்டுப்படுத்துதல்;
பயனர் விதிமுறைகளின் பிரிவு 4.2-இன் படி உங்கள் கணக்கை ரத்து செய்யவோ அல்லது இடைநிறுத்தவோ செய்யக்கூடும்; அல்லது
- அமலாக்கத் துறையைத் தொடர்புகொள்ளுதல்.
முதிர்ச்சி மற்றும் இணக்க வினாத்தாள நீங்கள் பூர்த்தி செய்யத் தவறினால், அல்லது துல்லியமற்ற அல்லது முழுமையற்ற பதில்களை வழங்கினால், உங்கள் கேமைப் பயனர்களுக்குக் கிடைக்கப்பெறாமல் செய்வது உட்பட, ஆனால் வரம்புகளின்றி, Roblox தனது தனிப்பட்ட விருப்புரிமையின்படி நெறிப்படுத்தல் நடவடிக்கைகளை எடுக்கலாம்.
5.6 அறிவு சார் சொத்துக் கருவிகள்
சேவைகளில் உரிமையாளர்கள் தங்களது அறிவுசார் சொத்துகளைக் கண்டறியவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கும் அறிவுசார் சொத்துக் கருவிகளின் தொகுப்பை Roblox வழங்குகிறது. ஒரு உரிமையாளர் தனது அறிவுசார் சொத்து உங்களது UGC-இல் பயன்படுத்தப்படுவதாக நம்பினால், அவர் தனது அறிவுசார் சொத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை உங்களுக்கு வழங்கலாம் அல்லது உங்களது UGC-ஐ அகற்றுமாறு கோரலாம்.
5.6.1 கேம்களுக்கு உரிமம் அளித்தல்
உங்கள் UGC-இல் பயன்படுத்தப்படுவதற்காக இந்தப் பிரிவு 5.6.1-இன் கீழ் ஓர் அறிவுசார் சொத்துரிமையாளர் தனது அறிவுசார் சொத்துரிமத்தை வழங்கும்போது, அந்த உரிமையாளர் உங்கள் UGC-இல் தொடர்ந்து இணைப்பதற்காகத் தனது அறிவுசார் சொத்திற்கு உரிமம் வழங்குகிறார்; மேலும் சேவைகள் வாயிலாக அந்த UGC தொடர்ந்து இருப்பதற்கும், விநியோகிக்கப்படுவதற்கும் மற்றும் பணமாக்கப்படுவதற்கும் கீழே விவரிக்கப்பட்டுள்ள உரிமத்தை Roblox-க்கு வழங்குகிறார் ("உரிமம் பெற்ற UGC"). முதலாவதாக, உரிமம் பெற்ற UGC மூலம் கிடைக்கும் எந்தவொரு Robux வருவாயின் ஒரு பகுதியை உரிமையாளர் பெறுவார். அத்தகைய பங்கு என்பது ஒரு கிரியேட்டர் பேமெண்ட் ஆகும்; மேலும் அது இந்த கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 6 மற்றும் DevEx விதிமுறைகளுக்கு இணங்க Roblox-ஆல் உரிமையாளருக்குச் செலுத்தப்படுகிறது. இரண்டாவதாக, உரிமையாளர் உரிமம் பெற்ற UGC-ஐக் கண்காணிக்கலாம், அத்தகைய சூழ்நிலையில், உரிமம் பெற்ற UGC பற்றிய திரட்டப்பட்ட ஈடுபாட்டுத் தரவ அவர் பெறக்கூடும். மூன்றாவதாக, கூடுதல் உள்ளடக்கத் தரநிலைகளுக்கு இணங்குவதற்குக் நியாயமான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிமையாளர் உங்களைக் கோரலாம்.
அவ்வாறு செய்வதன் மூலம், உரிமையாளர் உங்களுக்கு வழங்கிய உரிமம் நடைமுறையில் இருக்கும் காலம் வரை மட்டுமே, மற்றும் வர்த்தக முத்திரைகளுக்கும் நீட்டிக்கும் வகையில், பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-இன் விதிமுறைகளின்படி, உரிமம் பெற்ற UGC-இல் இணைக்கப்பட்டுள்ள தனது அறிவுசார் சொத்துரிமைக்கான உரிமத்தை உரிமையாளர் Roblox-க்கு வழங்குகிறார். உரிமையாளர் ஒரு சம்பாதிக்கும் தரப்பு ஆவார்; அவருக்கு Roblox வழங்கும் தொகைகள் பிரிவு 4.2, 6 மற்றும் 6.2 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் கிரியேட்டர் பேமெண்ட்டுகள் ஆகும்; மேலும் அவை எந்தவொரு தவிர்ப்புரிமை, உரிமைகோரல் தள்ளுபடி அல்லது வழக்கைத் தவிர்ப்பதற்கான உடன்படிக்கைக்கான இழப்பீடாகக் கருதப்படாது.
உரிமம் பெற்ற UGC-க்கான உங்கள் கிரியேட்டர் பேமெண்ட்டைத் தீர்மானிக்கும்போது உரிமையாளரின் பங்கு கழிக்கப்படும். Roblox உங்களுக்கும் உரிமையாளருக்கும் அவரவருக்குரிய தனிப்பட்ட உரிமையின் அடிப்படையில் பணம் செலுத்துகிறது; மேலும் சேவைகளில் உரிமம் பெற்ற UGC-ஐ Roblox விநியோகிப்பது அல்லது பணமாக்குவது தொடர்பாக உரிமையாளருக்குப் பணம் செலுத்தும் கடமை உங்களுக்குக் கிடையாது. சேவைகளுக்கு வெளியே உரிமையாளருடன் உங்களுக்கு ஏதேனும் கடப்பாடுகள் இருப்பின், அவை உங்களுக்கும் உரிமையாளருக்கும் இடையிலான விவகாரமாகவே தொடரும்.
5.6.2 தகராறுகளும் மேல்முறையீடுகளும்
ஒரு உரிமையாளர் உங்களுக்கு உரிமத்தை வழங்கினால், உங்களது UGC தவறுதலாகக் கண்டறியப்பட்டதாக நீங்கள் கருதினால் அல்லது தொடர்புடைய UGC-ஐ நீங்கள் அகற்றியிருந்தால், அதனையெதிர்த்து வாதிட அல்லது மேல்முறையீடு செய்ய உங்களுக்குக் வரம்பிற்குட்பட்ட கால அவகாசம் இருக்கும். உரிமச் சலுகை வழங்கப்படும் நேரத்தில், அதனையெதிர்த்து வாதிடுவது அல்லது மேல்முறையீடு செய்வது எப்படி என்பது குறித்த கூடுதல் தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் நீங்கள் பெறுவீர்கள்.
5.6.3 உரிமைகோரல்களைத் தள்ளுபடி செய்தல்
உங்களது UGC இந்த முறையில் உரிமம் பெற்றிருக்கும் காலத்தில், எந்தவொரு தர்க்கம் அல்லது மேல்முறையீட்டுச் செயல்பாட்டின் போது உட்பட, உங்களது UGC-இல் அவர்களின் அறிவுசார் சொத்து அமைந்திருப்பதால் எழும் எந்தவொரு கோரிக்கைகளுக்காகவும் உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களது உரிமம் பெற்ற UGC-க்கும் (குறிப்பாக உரிமையாளரின் அறிவுசார் சொத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வழித்தோன்றல் கூறுகளுக்கும்) உரிமையாளரின் எதிர்காலப் படைப்புகளுக்கும் இடையே காணப்படும் எந்தவொரு ஒற்றுமைக்கும் உரிமையாளர் பொறுப்பேற்க மாட்டார் என நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
Roblox எகானமி
"சம்பாதிக்கும் தரப்பு/தரப்புகள்" என்பது: (a) பயனர்கள் Robux-ஐப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது மாற்றாக, சேவைகள் வாயிலாக Roblox-க்கு பணம் செலுத்துவதன் மூலமாகவோ அணுகி தொடர்புகொள்ளக்கூடிய வகையில், பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-க்கு இணங்க UGC-ஐ உருவாக்கும் ஒரு கிரியேட்டர், குழு/சமூகம் அல்லது அதன் உறுப்பினர்கள், மற்றும் (b) பிரிவு 5.6.1-இன் கீழ் உரிமம் பெற்ற UGC தொடர்பாக Robux வருவாயில் ஒரு பங்கைப்பெற உரிமையுடைய மூன்றாம் தரப்பு அறிவுசார் சொத்துரிமையாளர் ஆகியோரைக் குறிக்கும்.
தளத்தில் UGC-ஐப் பதிவேற்றுவது அல்லது வெளியிடுவதன் மூலம், பயனர்களுக்கு அத்தகைய பயனர் உள்ளடக்கத்தின் முதன்மை விநியோகஸ்தராகவும் வழங்குநராகவும் செயல்பட நீங்கள் வெளிப்படையாக Roblox-ஐ நியமிக்கிறீர்கள். தளத்தில் UGC-ஐப் பதிவேற்றுவது அல்லது வெளியிடுவதன் மூலம், பயனர்களுக்கு அத்தகைய பயனர் உள்ளடக்கத்தின் முதன்மை விநியோகஸ்தராகவும் வழங்குநராகவும் செயல்பட நீங்கள் வெளிப்படையாக Roblox-ஐ நியமிக்கிறீர்கள். பயனர் விதிமுறைகளின் 3.2வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை (மறுஉருவாக்கம், விநியோகம், வழித்தோன்றல் படைப்புகளை உருவாக்குதல், பொது நிகழ்த்தல் மற்றும் காட்சிப்படுத்துதல்) Roblox பயன்படுத்துவதற்கான உரிமைக்கு ஈடாகவும், பயனர் உள்ளடக்கம் தொடர்பாக படைப்பாளர் விதிமுறைகளின் 4.2வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள ராயல்டி வழங்குதலுக்கு உட்பட்ட மாற்றங்களின் அடிப்படையிலும், Roblox உங்களுக்கு ராயல்டி தொகையைச் செலுத்தும் (அத்தொகை “படைப்பாளர் பேமெண்டுகள்” எனப்படும்). இந்த பிரிவு 6 அல்லது பிரிவு 5.6.1-இல் விவரிக்கப்பட்டுள்ள எந்தவொரு திட்டத்தின் கீழும் Roblox-ஆல் வருவாய் ஈட்டும் தரப்பினருக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்துத் தொகைகளும், பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-இன் கீழ் Roblox-க்கு உங்களது UGC-ஐ உரிமம் அளித்ததற்கான எதிர்மாற்றாகச் செலுத்தப்படும் படைப்பாளர் பேமெண்ட்டுகளாகக் கருதப்படும்; மேலும் இவை படைப்பாளர் விதிமுறைகளின் பிரிவு 4.2-இல் குறிப்பிடப்பட்டுள்ள ராயல்டி நடைமுறைக்கு உட்பட்டவை, மாறாக நீங்கள் செய்த சேவை, பரிந்துரை அல்லது சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான இழப்பீடு அல்ல. கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4.2 மற்றும் 6, மற்றும் பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-இன் கீழ் Roblox பெறும் முதன்மையான பலனும் மதிப்பும் என்னவென்றால், UGC-ஐ மறுவுருவாக்கம் செய்வதற்கும், பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கும், அதன் கிளைப் படைப்புகளைத் தயாரிப்பதற்கும், பொதுவில் நிகழ்த்துவதற்கும், பொதுவில் காட்சிப்படுத்துவதற்குமான உரிமையே ஆகும். UGC தொடர்பாக ஒரு கிரியேட்டரால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயல்பாடும் அந்த உரிமத் தேர்வுக்குத் துணைநிற்பதே ஆகும்; அதற்கேற்ப, இந்த ஏற்பாட்டின் முதன்மைப் பண்பு UGC-இன் மீதான பதிப்புரிமைகளை மாற்றித் தருவதே ஆகும். கிரியேட்டர்கள் UGC மீதான அனைத்து பதிப்புரிமைகளையும் தங்களுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்கிறார்கள்; மேலும் UGC தொடர்பாக Roblox-க்கு எந்தவொரு மேம்பாட்டுச் சேவைகளையோ அல்லது மாற்றியமைக்கும் சேவைகளையோ வழங்குவதில்லை. பொருந்தக்கூடிய சட்டத்தின்படி தேவைப்படும் வரிப்பிடித்தங்களை Roblox அத்தகைய தொகைகளிலிருந்து செய்யும்.
கிரியேட்டர் ஸ்டோர் மற்றும் Roblox Commerce ஆகியவற்றிற்குள் நடக்கும் பரிவர்த்தனைகளைத் தவிர்த்து, தளத்தில் உள்ள அனைத்து UGC-இன் விநியோகம் மற்றும் பணமாக்குதலுக்கு Roblox முதன்மையான மற்றும் பதிவுசெய்யப்பட்ட ஒரே விற்பனையாளராகச் செயல்படுகிறது.
கிரியேட்டர் ஸ்டோருக்குள் சொத்துகளை வாங்குவதற்கு, Roblox ஒரு சந்தை அல்லது தள வசதியளிப்பாளராகச் செயல்படுகிறது; மேலும் எங்கள் மூன்றாம் தரப்பு கட்டணச் செயலாக்க சேவை மூலம் கிரியேட்டர் சார்பாகப் பணப்பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த உதவுகிறது Roblox Commerce-ஐப் பொறுத்தவரை, பொருந்தக்கூடிய வர்த்தக வழங்குநரே பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர் ஆவார். எனவே, மேலே விவரிக்கப்பட்டுள்ள கிரியேட்டர் பேமெண்ட்டுகள் மீதான வரிப்பிடித்தமானது, Roblox முதன்மையாகச் செயல்படும் பணமாக்குதல் மற்றும் விநியோகத்திற்கான பேமெண்ட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்; கிரியேட்டர் ஸ்டோர் அல்லது Roblox Commerce-க்குள் நீங்கள் ஈட்டும் நேரடி விற்பனை வருவாய்க்கு இது பொருந்தாது.
6.1 கிரியேட்டர் பேமெண்ட்டுகள்
பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-இன் கீழ் நீங்கள் Roblox-க்கு வழங்கும் உரிமத்திற்கு இணங்க, சேவைகள் மூலம் பயனர்களுக்கு UGC-ஐ Roblox கிடைக்கச் செய்கிறது. பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-இல் உள்ள உரிம அனுமதியின்படி, உள்ளடக்கத்தின் மீதோ அல்லது உள்ளடக்கத்திற்குள்ளோ விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவது உட்பட, சேவைகளில் உங்கள் UGC-ஐக் கொண்டு Roblox நேரடி வருவாயை ஈட்டலாம் அல்லது வேறு வழிகளில் பணமாக்கலாம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் Roblox-க்கு வழங்கும் உரிம அனுமதியோ அல்லது இந்த விதிமுறைகளில் உள்ள வேறு எந்த விதியோ, Roblox ஈட்டும் வருவாய்க்கான எந்தவொரு உரிமையையும் உங்களுக்குத் தானாகவே வழங்கிவிடாது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை எவ்வாறாயினும், Robux மூலமாகவோ அல்லது பொருந்தக்கூடிய பணப் பரிவர்த்தனைகள் மூலமாகவோ Roblox கிடைக்கச் செய்யும் உங்கள் UGC-ஐ பயனர் அணுகுவது அல்லது பயன்படுத்துவதன் அடிப்படையில் Roblox உருவாக்கும் வருவாயில் ஒரு பங்கைப் பெற நீங்கள் தகுதிபெறலாம். உங்கள் UGC-க்காகப் பணம் சம்பாதிக்கவும், பேமெண்ட்டுகளைப் பெறவும் நீங்கள் Roblox விதிமுறைகள் மற்றும் அதன் சமூகத் தரநிலைகளுக்கு இணங்கி நல்ல நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு தகுதிபெறும் அளவிற்கு, பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-இல் வழங்கப்பட்ட உரிமமானது அத்தகைய பணமாக்குதலுக்கு மட்டுமே மற்றும் அந்த அளவிற்கு மட்டுமே ராயல்டிக்குரியதாக மாறுகிறது. Roblox இடமிருந்து நீங்கள் பெற உரிமையுள்ள எந்தவொரு தொகையும், பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-க்கு இணங்க UGC-ஐ ஹோஸ்ட் செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் Roblox-க்கு வழங்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் உரிமைகளுக்கான இழப்பீடாக Roblox உங்களுக்குச் செலுத்தும் ராயல்டியாகவே அதனால் கருதப்படும்.
6.2 வரிகளும் வரிப்பிடித்தமும்
உங்கள் கிரியேட்டர் பேமெண்ட்டுகள் Roblox-ஆல் செலுத்தப்படுகின்றன (இந்தப் பிரிவு 6.2-இன் நோக்கங்களுக்காக, Roblox-இன் ஏதேனும் துணை நிறுவனங்கள் அல்லது முகவர்கள் இதில் அடங்குவர்). எந்தவொரு கிரியேட்டர் பேமெண்ட்டுகளும் செய்யப்படுவதற்கு முன்பு Roblox-க்கு இது அவசியம்: ஒரு IRS படிவம் W-9 (அமெரிக்க வரி செலுத்துவோருக்கு), IRS படிவம் W-8 (அமெரிக்கர் அல்லாத வரி செலுத்துவோருக்கு) அல்லது அவ்வப்போது நாங்கள் கோரக்கூடிய பிற ஆவணங்களை (ஒட்டுமொத்தமாக, “வரிப் படிவங்கள்”) எங்களிடம் தாக்கல் செய்து வைத்திருக்க வேண்டும். பயனர்களுக்குச் செய்யப்படும் அனைத்து படைப்பாளர் பேமெண்ட்டுகளும் (அறிக்கையிடல் தேவைகள் காரணமான சில குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட விதிவிலக்குகள் தவிர்த்து) பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்படுவது போல், பொருந்தக்கூடிய IRS படிவத்தைப் பயன்படுத்தி IRS-க்கும் உங்களுக்கும் அறிக்கையிடப்படும்.
பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தான் அவ்வாறு செய்யவேண்டுமெனத் தீர்மானிக்கும் அளவிற்கு, ஏதேனும் கிரியேட்டர் பேமெண்ட்டுகள் அல்லது பிற பேமெண்ட்டுகளிலிருந்து வரிகளைக் கழிக்கவோ அல்லது வரிப்பிடித்தம் செய்யவோ Roblox-க்கு உரிமை உண்டு. தேவையான ஆவணங்கள் வழங்கப்படாவிட்டால் அல்லது IRS அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின்படி தேவைப்பட்டால், பயனர்களுக்கான பேமெண்ட்டுகளிலிருந்து வரிகளைக் கழிக்கவோ அல்லது வரிப்பிடித்தம் செய்யவோ Roblox கூடுதலாகக் கோரப்படலாம். அத்தகைய ஏதேனும் பேமெண்ட்டிலிருந்து கழிக்கப்பட்ட அல்லது பிடித்தம் செய்யப்பட்ட எந்தவொரு தொகையும் IRS-க்குச் செலுத்தப்படும்; மேலும் பொருந்தக்கூடிய சட்டத்தின்படி தேவைப்படும் அளவிற்குப் பொருந்தக்கூடிய வரி அறிக்கையிடல் படிவங்களில் பிரதிபலிக்கும். அவ்வாறு கழிக்கப்பட்ட அல்லது பிடித்தம் செய்யப்பட்ட அனைத்துத் தொகைகளும் இந்த கிரியேட்டர் விதிமுறைகளுக்கு இணங்க உங்களுக்குச் செலுத்தப்பட்டதாகவே கருதப்படும்; மேலும் அத்தகைய வரிப்பிடித்தங்கள் தொடர்பாக Roblox உங்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணத்தையும் செலுத்தாது.
பின்வருவனவற்றிற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்: (a) உங்கள் வரிப் படிவங்களில் வழங்கப்பட்ட தகவல்கள் துல்லியமாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்தல், மற்றும் (b) காலாவதியான, பயன்பாட்டில் இல்லாத அல்லது துல்லியமற்றதாகிவிட்ட வரிப் படிவங்கள் அல்லது Roblox-க்கு வழங்கப்பட்ட பிற தகவல்களைப் புதுப்பித்தல் தேவையான எந்தவொரு வரிப் படிவம், தகவல் அல்லது பிற ஆவணங்களை வழங்கத் தவறினால் பேமெண்ட்டுகள் தாமதமாகலாம் அல்லது பிடித்தம் செய்யப்படலாம்.
6.3 DevEx திட்டம் மற்றும் ஈட்டப்பட்ட Robux
சம்பாதிக்கும் தரப்புகள்: (a) எங்கள் டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் ("DevEx") பதிவுசெய்யலாம்; மற்றும் (b) உங்கள் உரிமம் பெற்ற UGC-ஐ மறுவுருவாக்கம் செய்ய, பொதுமக்களுக்கு விநியோகிக்க, அதன் கிளைப் படைப்புகளைத் தயாரிக்க, பொதுவில் நிகழ்த்த மற்றும் பொதுவில் காட்சிப்படுத்துவதற்கான உரிமைகளுக்கான இழப்பீடாகப் பணத்தைப் பெறத் தகுதிபெறலாம். DevEx திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கிரியேட்டர் பேமெண்ட்டுகள் DevEx விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
"சம்பாதித்த Robux" என்பது, சம்பாதிக்கும் தரப்புகள் Roblox இடமிருந்து பெறக்கூடிய தொகைகளைக் கண்காணிக்கவும் கணக்கிடவும் Roblox பயன்படுத்தும் ஒரு வழிமுறையாகும். Creator Hub-இன் பணமாக்குதல் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள வழிகளில் மட்டுமே அல்லது கிரியேட்டர் விதிமுறைகளின் இந்தப் பிரிவு 6-இல் வழங்கப்பட்டுள்ளவாறு மட்டுமே சம்பாதித்த Robux-ஐச் சேர்க்க முடியும். சம்பாதிக்கும் தரப்புகள், ஒவ்வொன்றிலும் சம்பாதித்த Robux தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதற்கேற்ப:
- பிரிவு 6.1-இல் (கிரியேட்டர் பேமெண்ட்டுகள்) விவரிக்கப்பட்டுள்ளபடி பணத்தைப் பெற DevEx-இல் பதிவுசெய்யலாம்; அல்லது
- சேவைகளில் பயன்படுத்தக்கூடிய Robux-ஐப் பெறத் தேர்ந்தெடுக்கலாம்.
6.4 வாலெட்
உங்கள் கிரியேட்டர் பேமெண்ட்டுகளைப் பணமாகப் பெறுவதற்கான வாய்ப்பை Roblox உங்களுக்கு வழங்கினால், எந்தவொரு பேமெண்ட் சேவைகளும் அதன் கூட்டாளரான Airwallex US LLC மற்றும் அதன் துணை நிறுவனங்களால் வழங்கப்படும்; மேலும் நீங்கள் Roblox வாலெட் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். நீங்கள் Roblox வாலெட்டில் பதிவுசெய்தால், பதிவுசெய்த பிறகு நீங்கள் சம்பாதிக்கும் கிரியேட்டர் பேமெண்ட்டுகள் மேலே உள்ள பிரிவு 6.3-க்கு (DevEx திட்டம் மற்றும் சம்பாதித்த Robux) உட்பட்டிருக்காது மற்றும் DevEx-க்குத் தகுதிபெறாது.
6.5 கிரியேட்டர் ரிவார்டுகள்
"கிரியேட்டர் ரிவார்டுகள்" என்பது ஒரு ஊக்கத்தொகைத் திட்டமாகும்; இதன் மூலம் சம்பாதித்த Robux ஆகக் கண்காணிக்கப்பட்டு Roblox இடமிருந்து நீங்கள் பெறக்கூடிய கூடுதல் தொகைகளை Roblox கிரெடிட் செய்கிறது. கிரியேட்டர் ரிவார்டுகள் என்பவை Roblox-இல் நடக்கும் சில தொடர்புகள் மற்றும் வாங்குதல்களின் அடிப்படையிலும், உங்கள் UGC-ஐ Roblox விநியோகிப்பது மற்றும் பொதுவில் நிகழ்த்துவது ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவும் இருக்கும்.
கிரியேட்டர் வெகுமதிகளின் ஒரு பகுதியாக நீங்கள் பெறத் தகுதியுள்ள எந்தவொரு தொகையும், பயனர் விதிமுறைகளின் பிரிவு 3.2-இன் கீழ் உரிமம் பெற்ற பதிப்புரிமைகளை Roblox பயன்படுத்துவதற்கான எதிர்மாற்றாகச் செலுத்தப்படுகின்றன; மேலும் இவை படைப்பாளர் விதிமுறைகளின் பிரிவுகள் 4.2 மற்றும் 6-க்கும் அதில் விவரிக்கப்பட்டுள்ள ராயல்டி நடைமுறைக்கும் உட்பட்ட கிரியேட்டர் பேமெண்ட்டுகளாகக் கருதப்படும், மாறாக நீங்கள் செய்த எந்தவொரு சேவை, பரிந்துரை அல்லது மார்க்கெட்டிங் நடவடிக்கைகளுக்கானது அல்ல. ஈடுபாடு மற்றும் வாங்குதல் அளவீடுகள் உரிமம் பெற்ற UGC-ஐ Roblox பயன்படுத்துவதன் மதிப்பை அளவிடுவதற்கு மட்டுமே பயன்படுகின்றன; மேலும் அவை கிரியேட்டர் செய்யும் எந்தவொரு செயல்பாட்டிற்குமான இழப்பீட்டைக் குறிக்காது. கிரியேட்டர் ரிவார்டுகள் திட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டால், Roblox இடமிருந்து கூடுதல் தொகைகளைப் பெற நீங்கள் தகுதிபெறலாம்; அவை கிரியேட்டர் ரிவார்டுகள் திட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி சம்பாதித்த Robux ஆகக் கண்காணிக்கப்பட்டுக் கணக்கிடப்படும். கிரியேட்டர் ரிவார்டுகளைப் பெறத் தகுதியுடையவராக இருக்க, இந்த கிரியேட்டர் விதிமுறைகள் மற்றும் சமூகத் தரநிலைகள் உள்ளிட்ட Roblox விதிமுறைகள் ஆகியவற்றுக்கு நீங்கள் எந்நேரமும் முழுமையாக இணங்கி நடக்க வேண்டும். முறைகேடான அல்லது மோசடியானவை என நாங்கள் கருதும் பின்வரும் நடத்தைகளை நாங்கள் கண்டறியும் சந்தர்ப்பங்களில், உங்களை மதிப்பாய்வு செய்வதற்கும், விசாரிப்பதற்கும் மற்றும் கிரியேட்டர் ரிவார்டுகளிலிருந்து இடைநிறுத்துவதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு:
- பல கணக்குகளைத் தொடங்குவது, வெவ்வேறு மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவது, வெவ்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவது அல்லது பாட்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் சம்பாதித்த Robux-ஐப் பெற முயற்சிப்பது;
- Roblox போலவோ, வேறொரு நபர் போலவோ ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் அல்லது ஒரு நபர் அல்லது நிறுவனத்துடனான உங்கள் தொடர்பைத் தவறாகச் சித்தரிப்பதன் மூலம் பரிந்துரை வெகுமதியைப் பெற முயற்சிப்பது;
- தற்போதுள்ள பிளேயர்களை மாற்று கணக்குகளுக்குப் பதிவுசெய்ய ஊக்குவிப்பதன் மூலம் பயனர்களைப் பெற முயற்சிப்பது; அல்லது
- Roblox-இன் தனிப்பட்ட விருப்புரிமையின்படி தீர்மானிக்கப்படும் அளவுக்குப் பொருத்தமற்ற அதிக சதவீதத்திலான சார்ஜ்பேக்குகளைக் கொண்டிருப்பது. கூடுதல் தகவலுக்கு கிரியேட்டர் ரிவார்டுகள் திட்டத்தை பார்க்கவும்.
Roblox-இல் இசை
7.1 உரிமம் பெற்ற இசை
மூன்றாம் தரப்பு உரிமங்கள் மூலம், சேவைகளில் உங்கள் UGC-இல் பயன்படுத்துவதற்காக ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளை (ஒலிச் சிறப்புவிளைவுகள் உட்பட) உங்களுக்குக் கிடைக்கச் செய்ய Roblox தேர்வுசெய்யலாம் ("உரிமம் பெற்ற இசை"). நீங்கள் உரிமம் பெற்ற இசையைப் பயன்படுத்துவது பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
Roblox உங்களுக்கு வழங்குவது: (a) Roblox அத்தகைய உரிமம் பெற்ற இசையைக் கிடைக்கச் செய்யும் காலத்தில் மட்டுமே மற்றும் சேவைகளில் மட்டுமே ஒரு கேம் அல்லது பிற உள்ளடக்கத்தில் உரிமம் பெற்ற இசையை ஒருங்கிணைப்பதற்கான பிரத்தியேகமற்ற, தனிப்பட்ட, வரம்பிற்குட்பட்ட, திரும்பப்பெறக்கூடிய, மாற்ற முடியாத உரிமம்; மற்றும் (b) Roblox அந்த உரிமம் பெற்ற இசையைக் கிடைக்கச் செய்யும் காலத்தில் மட்டுமே மற்றும் சேவைகளில் மட்டுமே உரிமம் பெற்ற இசையைக் கொண்ட உள்ளடக்கத்தை இயக்குவதற்கும், கேட்பதற்கும், அதனுடன் தொடர்புகொள்வதற்கும் உள்ள உரிமை. மூன்றாம் தரப்பு உரிமங்களின் கீழ் Roblox கிடைக்கச் செய்யும் உரிமம் பெற்ற இசை என்பது, இந்தப் பிரிவில் உள்ள விதிமுறைகளின்படி Roblox-க்கு உரிமம் வழங்கப்பட்டதாகும். "நிகழ்த்தல் உரிமைகள் அமைப்பு (""PRO”) அல்லது வெளியீட்டாளர் கடப்பாடுகளுக்கு உட்பட்ட இசையை நீங்கள் பதிவேற்றினால், Roblox வழங்கிய உரிமம் பெற்ற இசை தவிர்த்து, உங்களுக்கும் உரிமையாளருக்கும் இடையேயான அந்தக் கடப்பாடுகளுக்கு நீங்களே தொடர்ந்து பொறுப்பாவீர்கள்."
7.1.1 250 டிராக் வரம்பு
ஒரே நேரத்தில் ஒரு கேம் அல்லது பிற உள்ளடக்கத்தில் 250 வரையிலான தனித்துவமான உரிமம் பெற்ற இசைத் தடங்களை வைக்கவும், இயக்கவும், இயக்க வைக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. ஒரு கேம் அல்லது பிற உள்ளடக்கத்தில் உள்ள உரிமம் பெற்ற இசையின் தற்போதைய தடங்களை எந்த நேரத்திலும் புதிய தடங்களைக் கொண்டு நீங்கள் மாற்றலாம்; இருப்பினும், ஒரே நேரத்தில் அந்த கேம் அல்லது உள்ளடக்கத்தில் உரிமம் பெற்ற இசையைக் கொண்ட 250-க்கும் மேற்பட்ட தடங்கள் இருக்கக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டது.
7.1.2 ஒத்திசைவு
உரிமம் பெற்ற இசையை ஒரு கேமில் நீங்கள் ஒருங்கிணைக்கலாம். நீங்கள் உரிமம் பெற்ற இசை டிராக்கின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம் அல்லது உரிமம் பெற்ற இசையின் பகுதிகளை மாதிரிகளாகப் பயன்படுத்தலாம்.
7.1.3 கட்டுப்பாடுகள்
சேவைகளில் நீங்கள் உரிமம் பெற்ற இசையைப் பயன்படுத்தும்போது, பின்வருவனவற்றை நீங்கள் செய்யக்கூடாது (மேலும் செய்ய முயற்சிக்கவோ அல்லது பிறரைச் செய்ய அனுமதிக்கவோ அல்லது அதற்கு உதவவோ கூடாது):
- ஒரு கேம் அல்லது பிற உள்ளடக்கத்திற்குள் ஸ்ட்ரீமிங் சேவையையோ அல்லது இசை நூலகத்தையோ உருவாக்க உரிமம் பெற்ற இசையைப் பயன்படுத்தக்கூடாது, அத்துடன் உரிமம் பெற்ற இசையின் ஒரு குறிப்பிட்ட டிராக்கைக் கேட்பதற்குப் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கவும் கூடாது; அல்லது
உரிமம் பெற்ற இசையை சேவைகளுக்கு வெளியே எக்ஸ்போர்ட செய்தல், பிரித்தெடுத்தல், பதிவிறக்கம் செய்தல், அல்லது மற்றவர்கள் யாரும் எக்ஸ்போர்ட் செய்ய, பிரித்தெடுக்க அல்லது பதிவிறக்க ஏதேனும் வழியை வழங்குதல்.
7.1.4 அங்கீகாரம்
அங்கீகாரம் வழங்குதல் என்பது ஒன்றை உருவாக்கிய நபருக்குப் பெருமை சேர்ப்பதைக் குறிக்கும். எந்தவொரு கேம் அல்லது பிற உள்ளடக்கத்திலும் உரிமம் பெற்ற இசைக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை; இருப்பினும், உங்கள் விருப்பப்படி அதை நீங்கள் செய்து கொள்ளலாம். உதாரணமாக, உரிமம் பெற்ற இசையின் உரிமையாளராக APM Music-ஐ Roblox அடையாளம் காட்டினால், அந்த உரிமம் பெற்ற இசை "Courtesy of APM Music" எனக் குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது என்று நீங்கள் செய்தியாகத் தெரிவிக்கலாம்.
7.1.5 உர்மத்தை இழத்தல்
உரிமம் பெற்ற இசை மூன்றாம் தரப்பினரிடமிருந்து Roblox-ஆல் உரிமம் பெறப்பட்டதால், உரிமம் பெற்ற இசையைப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமைகள் எந்நேரத்திலும், எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது எந்தக் காரணமும் இன்றியும், Roblox-இன் தனிப்பட்ட விருப்பத்தின்படி திரும்பப்பெறத்தக்கவை. கூடுதலாக, பின்வரும் சூழல்களில் உரிமம் பெற்ற இசையின் முழுப் பகுதி அல்லது பகுதிக்கான உங்கள் உரிமையை (அறிவிப்புடனோ அல்லது அறிவிப்பின்றியோ) Roblox ரத்துசெய்யலாம்:
- உரிமம் பெற்ற இசையை நீங்கள் பயன்படுத்துவது கிரியேட்டர் விதிமுறைகள் மற்றும் சமூகத் தரநிலைகள் உட்பட Roblox விதிமுறைகளை மீறக்கூடும் என்று Roblox தீர்மானித்தால்;
- உரிமம் பெற்ற இசையானது சேவைகளுக்கோ அல்லது Roblox-இன் நற்பெயருக்கோ தீங்கு விளைவிக்கக்கூடும் என்று Roblox மற்றபடி தீர்மானித்தால்;
- சேவைகளிலிருந்து உரிமம் பெற்ற இசையின் பயன்பாட்டை நீக்குமாறு பதிப்புரிமையாளரால் Roblox கேட்டுக்கொள்ளப்பட்டால்; அல்லது
- அந்தச் சேவையில் விநியோகிப்பதற்கு உரிமம் பெற்ற இசை இனி கிடைக்கப்பெறாது என்ற நிலை ஏற்பட்டால்.
7.1.6 அறிவிப்பும் உங்கள் பொறுப்புகளும்
உங்களுக்கு Roblox முன்பே அறிவிப்பை வழங்க முயற்சிக்கும் ஏதேனும் உரிமம் பெற்ற இசையின் உபயோக உரிமையைத் திரும்பப் பெரும் முன்பு, ஆனால் முன்கூட்டிய அறிவிப்பு இல்லாமல் அப்படிச் செய்ய Roblox-க்கு உரிமை உள்ளது. Roblox உரிமம் பெற்ற இசையைப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமையை (எந்தக் காரணத்திற்காகவும்) திரும்பப் பெற்றால், நீங்கள் உடனடியாக: (a) சம்பந்தப்பட்ட உரிமம் பெற்ற இசையை உங்கள் கேம் அல்லது பிற உள்ளடக்கத்திலிருந்து அகற்றுவதற்கும்; மற்றும் (b) சேவைகளில் சம்பந்தப்பட்ட உரிமம் பெற்ற இசையின் அனைத்துப் பயன்பாட்டையும் நிறுத்துவதற்கும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
7.2 கிரியேட்டர்களால் எழுதப்பட்ட/கிரியேட்டர்களுக்குச் சொந்தமான இசை
சேவைகளில் பயன்படுத்துவதற்காக உங்களால் (மற்றும்/அல்லது நீங்கள் இணைந்து பணியாற்றிய மற்றவர்களால்) எழுதப்பட்ட அல்லது வேறு வழிகளில் உங்களுக்கு சொந்தமான இசைப் படைப்புகளுக்கு பின்வருபவை பொருந்தும்.
7.2.1 கிரியேட்டர் மட்டுமே தனி இசையமைப்பாளராக இருத்தல்்
சேவைகளில் நீங்கள் வெளியிடும் ஒரு இசைப் படைப்பின் தனி இசையமைப்பாளர் மற்றும்/அல்லது எழுத்தாளராக இருந்து, அந்த இசைப் படைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு PROஉடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள்:
- பயனர் விதிமுறைகளின் பிரிவு 3-இன் வாயிலாக நீங்கள் Roblox-க்கு வழங்கும் ராயல்டியற்ற உரிமம் குறித்து PRO-க்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்; மற்றும்
- PRO-இன் அறிக்கை சமர்ப்பிக்கும் கடமைகளுக்குக் கட்டுப்படுவதற்கான பொறுப்பைக் கொண்டிருக்கிறீர்கள்.
7.2.2 கிரியேட்டர் அல்லாத பிறருடன் இணைந்த இசையமைப்பாளர்
சேவைகளில் நீங்கள் வெளியிடும் ஒரு இசைப் படைப்பின் தனி இசையமைப்பாளர் மற்றும்/அல்லது எழுத்தாளர் இல்லை என்றால், மேலும் நீங்களும் (மற்றும்/அல்லது இணை இசையமைப்பாளர்கள் அல்லது இணை எழுத்தாளர்களும்) அந்த இசைப் படைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு PROஉடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள்:
- அனைத்து இணை இசையமைப்பாளர்கள் மற்றும்/அல்லது இணை எழுத்தாளர்களும் தத்தமது PRO-க்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்பதை உறுதிசெய்வதற்குப் பொறுப்பாவீர்கள்; மற்றும்
- சேவைகளில் அந்த இசைப் படைப்பை வெளியிடவும் பயன்படுத்தவும் இணை இசையமைப்பாளர்கள் மற்றும்/அல்லது இணை எழுத்தாளர்களின் ஒப்புதலுக்கான எழுத்துப்பூர்வ ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும்.
7.2.3 இசை வெளியீட்டாளருக்கு உரிமைகளை ஒப்படைத்தல்
ஒரு இசைப் படைப்பில் உள்ள உங்கள் உரிமைகளை ஒரு இசை வெளியீட்டாளருக்கு நீங்கள் ஒப்படைத்திருந்தால், பயனர் விதிமுறைகளின் பிரிவு 3-இல் குறிப்பிடப்பட்டுள்ள ராயல்டி இல்லாத உரிமங்களை வழங்குவதற்கு அந்த இசை வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ சம்மதம் அல்லது ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
7.2.4 ரெக்கார்டு லேபிள்
நீங்கள் ஒரு இசைப் பதிவு நிறுவனத்துடன ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு பதிவுப் பாடகராக/இசைக்கலைஞராக இருந்தால், சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது அந்த இசைப் பதிவு நிறுவனத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதிசெய்வதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.
7.2.5 சவுண்ட் ரெக்கார்டிங்குகள்
ஒலிப்பதிவிற்கான உரிமைகளை நீங்கள் கொண்டிருந்தாலும், அந்த ஒலிப்பதிவிற்கோ அல்லது அந்த ஒலிப்பதிவுகளில் சேர்க்கப்பட்டுள்ள அடிப்படைக் இசைப் படைப்புக்கோ (இசைப் படைப்புகளுக்கோ) உரிமம் வழங்குவதற்கு உங்களுக்கு அதிகாரமளிக்கப்படவில்லை என்றால், அந்த ஒலிப்பதிவுகளை நீங்கள் பதிவேற்றவோ அல்லது சேவைகளில் பிற வழிகளில் கிடைக்கச் செய்யவோ முடியாது.
7.2.6 அனுமதிச் சான்றுகள்
சேவைகளில் உங்கள் அசல் சவுண்ட் ரெக்கார்டிங்குகள் மற்றும்/அல்லது இசைப் படைப்புகளை பயன்படுத்துவது மற்றும் ஒத்திசைப்பது தொடர்பாக எழக்கூடிய, ஏதேனும் மற்றும் அனைத்து விநியோக உரிமைகள், மெக்கானிக்கல் உரிமைகள், பொதுவில் நிகழ்த்திக் காட்டுவது தொடர்பான உரிமைகள், ஒத்திசைப்பதற்கான உரிமைகள் மற்றும்/அல்லது மூன்றாம் தரப்பு உரிமை கோரக்கூடிய மற்ற ஏதேனும் உரிமைகள் உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல), எந்தத் தன்மையும் கொண்ட தேவையான அனுமதிகள் மற்றும் கட்டணங்கள் அனைத்திற்கும் கிரியேட்டராகிய நீங்களேேமுற்றிலும் பொறுப்பாவீர்கள்்ு. சேவைகளில் சவுண்ட் ரெக்கார்டிங்குகள் மற்றும்/அல்லது இசைப் படைப்புகளை வெளியிடுதல், பதிவேற்றுதல், விநியோகம் செய்தல், ஒத்திசைத்தல் மற்றும் பிற வழிகளில் பயன்படுத்துதல் தொடர்பான யூனியன் மற்றும்/அல்லது கில்டு ஒப்பந்தங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, ஏதேனும் புதிய உபயோகம் அல்லது மறு உபயோகத்திற்கான யூனியன் கட்டணங்களுக்கும் நீங்களே முற்றிலும் பொறுப்பாவீர்கள்
முரண்பாடுகளும் தகராறுகளும்
8.1 உங்களுக்கும் ஒரு பயனருக்கும் இடையேயான முரண்பாடுகள்
கேம் விதிகள் தொடர்பாக ஒரு கிரியேட்டர் எடுத்த நடவடிக்கை அல்லது முடிவானது: (a) எங்கள் சமூகத் தரநிலைகள் உட்பட எங்கள் Roblox விதிமுறைகளுடன் முரண்படுகிறது; அல்லது (b) Roblox அல்லது Roblox சமூகத்தின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்று Roblox தனது தனிப்பட்ட விருப்புரிமையின்படி கருதினால், அத்தகைய நடவடிக்கை அல்லது முடிவை மாற்றி அமைப்பதற்கான உரிமையை Roblox தனக்கு உரித்தாக்கிக் கொள்கிறது, ஆனால் அவ்வாறு செய்ய அதற்கு எந்தக் கட்டாயமும் இல்லை.
8.2 உங்களுக்கும் Roblox-க்கும் இடையேயான தகராறுகள்
பயனர் விதிமுறைகளின் பிரிவு 11.2 உங்களுக்கும் Roblox-க்கும் இடையிலான தகராறுகளுக்குப் பொருந்தும்.
இழப்பீடு வழங்குதல், பொறுப்பு மறுப்பு மற்றும் பொறுப்பு வரம்பு மற்றும் பிற முக்கியமான சட்ட விஷயங்கள்
இந்த கிரியேட்டர் விதிமுறைகள், பயனர் விதிமுறைகளுடன் கூடுதலாகப் பொருந்தும். குறிப்பாக மற்றும் எந்தக் வரம்பும் இல்லாமல், பயனர் விதிமுறைகளின் பிரிவுகள் 12 முதல் 14 வரை கிரியேட்டர் விதிமுறைகளுக்கும் பொருந்தும்.
பிற்சேர்க்கை A (ஜப்பான்)
இந்த ஜப்பான் இணைப்பு, ஜப்பானில் உள்ள பயனர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கான Roblox விதிமுறைகளை திருத்துகிறது மற்றும் கூடுதலாக வழங்குகிறது. Roblox Godo Kaisha ("Roblox Japan") நிறுவனம், ஜப்பானில் உள்ள பயனர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்குச் சேவைகளை வழங்குகிறது. "Roblox", "நாங்கள்" அல்லது "எங்களை" எனக் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் Roblox Japan-ஐக் குறிக்கும் வகையில் திருத்தப்பட்டு மாற்றியமைக்கப்படுகின்றன.
இந்த ஜப்பான் இணைப்புக்கும் Roblox விதிமுறைகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால், பொருந்தக்கூடிய சட்டத்தால் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே மற்றும் ஜப்பானில் உள்ள பயனர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு மட்டுமே இந்த ஜப்பான் இணைப்பு முதன்மை வகிக்கும்.
நியமனம் மற்றும் நியமன ஏற்பு
மார்ச் 31, 2021 முதல் ("நடைமுறைத் தேதி"), ஜப்பானில் உள்ள பயனர்கள் தொடர்பாக, Robux-ஐ வழங்கும் அமைப்பாகவும் சேவைகளின் சேவை வழங்குநராகவும், Roblox Corpopration நிறுவனத்தின் ஒப்பந்தமிடும் தரப்பு என்ற அந்தஸ்து, உரிமைகள், கடமைகள், நன்மைகள், கிளைம்கள், கடப்பாடுகள் அனைத்தும் Roblox Godo Kaisha ("Roblox Japan") நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்டு நியமன ஏற்பு நடைபெற்றுள்ளது. சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர் மேலே கூறப்பட்ட உரிமை மாற்றத்தையும் நியமனத்தையும் ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கிறார். நடைமுறைத் தேதி அன்று அல்லது அதற்குப் பிறகு, Robux வழங்குநராகவும், ஜப்பானில் உள்ள பயனர்களுக்கு சேவைகளை வழங்கும் சேவை வழங்குநராகவும் Roblox Japan நிறுவனமே கருதப்பட வேண்டும்.பயனர் விதிமுறைகளின் கீழ் Robux, UGC மற்றும் கட்டணச் சேவைகளுக்கான கூடுதல் விதிமுறைகள்
பயனர் விதிமுறைகளின் பிரிவு 5 எப்படி இருப்பினும், Robux தொடர்பான ஏதேனும் ரத்துசெய்தல், மாற்றியமைத்தல் அல்லது பிற மாற்றங்கள், பொருந்தக்கூடிய இடங்களில் கட்டணச் சேவைகள் சட்டம் (2009-ஆம் ஆண்டின் சட்டம் எண் 59) உட்பட ஜப்பானிய சட்டத்தின் பொருந்தக்கூடிய கட்டாயத் தேவைகளுக்கு உட்பட்டதாகவும், அவற்றின்படி செயல்படுத்தப்படுவதாகவும் இருக்கும்.ஜப்பானில், பிளாட்ஃபார்மில் Roblox Japan நிறுவனம் வழங்குகின்ற சேவைகளை வாங்குவதற்காக மட்டுமே Robux-ஐப் பயன்படுத்த முடியும். UGC மற்றும் பிற கட்டணச் சேவைகள் தொடர்பாக, தளத்தில் UGC அல்லது கட்டணச் சேவைகளைக் கிடைக்கச் செய்வதற்காக Roblox Japan வழங்கும் சேவைகளை வாங்க பயனர் Robux-ஐப் பயன்படுத்தலாம். இந்த சந்தர்ப்பத்தில், சேவைகள் என்பது பிளாட்ஃபார்மில் UGC அல்லது கட்டணச் சேவைகளுக்கான அணுகல் மற்றும் பயன்பாட்டை இயலச்செய்வதற்காக Roblox Japan-ஆல் வழங்கப்படும் சேவைகளைக் குறிக்கும். எந்தப் பயனரும் எந்தப் பொருளையும் அல்லது சேவைகளையும் Roblox Japan நிறுவனம் தவிர வேறு எந்தக் கிரியேட்டரிடம் இருந்தும் அல்லது வேறு எந்த நபரிடம் இருந்தும் வாங்கக்கூடாது. மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு Roblox Japan-ஆல் வழங்கப்படும் சேவைகளுக்கு Roblox Japan நிறுவனமே பொறுப்பாகும். இருப்பினும், UGC மற்றும் கட்டணச் சேவைகள் "உள்ளபடியே" வழங்கப்படுகின்றன, மேலும் UGC-இன் உள்ளடக்கங்கள் தொடர்பாக Roblox Japan நிறுவனம் எந்தவொரு உறுதியளிப்புகளையோ அல்லது உத்தரவாதங்களையோ வழங்காது. மேலே கூறப்பட்ட கோட்பாட்டின் பிரதிபலிப்பாக இருக்கும் வகையில் மட்டுமே Roblox விதிமுறைகள் புரிதல் விளக்கமளிக்கப்பட வேண்டும்.நிர்வகிக்கும் சட்டம் மற்றும் இடம்
நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் (ஒரு வணிகமாக அல்லது வணிக நோக்கங்களுக்காக Roblox விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் நபர் தவிர), பயனர் விதிமுறைகளின் பிரிவு 15.9 நுகர்வோர் ஒப்பந்தச் சட்டத்தின் விதி 10 மீறலின் அளவிற்கு, அது உங்கள் நலன்களை அகற்றிவிடும் என்று கருதப்படுவதால், அந்தப் பிரிவு உங்களுக்குப் பொருந்தாது.கடப்பாட்டிற்கான வரம்புகள்
நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் (ஒரு வணிகமாக அல்லது வணிக நோக்கங்களுக்காக Roblox விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் நபர் தவிர), பயனர் விதிமுறைகளின் பிரிவு 14-இல் வழங்கப்பட்டுள்ளபடி "பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவில்" என்ற வாக்கியம் "எங்கள் நோக்கத்துடன் கூடிய செயல் அல்லது அப்பட்டமான அலட்சியத்தின் காரணமாக நாங்கள் பொறுப்பானால் தவிர" என்றே புரிந்துகொள்ளப்படும்.விலை மற்றும் வரி
நீங்கள் roblox.test1709.icu தளத்தில் Robux மற்றும் கட்டணச் சேவைகளை வாங்கும்போது, பதிவுகளின்படி Roblox Japan நிறுவனமே வர்த்தகராக இருக்கும். வாங்கிய நேரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விலையே செலுத்த வேண்டிய விலையாக இருக்கும், மேலும் வாங்கிய சமயத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, Roblox Japan நிறுவனம் கணக்கிட்டபடி பொருந்தக்கூடிய ஜாப்பனீஸ் நுகர்வோர் வரி சேர்க்கப்பட்டதாகவே இருக்கும்.
பிற்சேர்க்கை B (தென் கொரியா)
கடப்பாட்டிற்கான வரம்புகள்
A. Roblox விதிமுறைகளில் இதற்கு மாறாக என்ன கூறப்பட்டிருந்தாலும், Roblox-இன் வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறான நடத்தை அல்லது பெரும் கவனக்குறைவால் ஏற்படும் எந்தவொரு சேதங்களுக்கும் Roblox பொறுப்பேற்கும்.
B. பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவிற்கு, ஒரு பயனரின் வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறான நடத்தை அல்லது கவனக்குறைவால் ஏற்படும் எந்தவொரு சேதங்களுக்கும் அந்தப் பயனரே பொறுப்பாவார்.
விலகுவதற்கான உரிமை போன்றவை
A. பொருந்தக்கூடிய சட்டங்களின்படி ஒரு பயனர் நுகர்வோராகக் கருதப்பட்டால், அத்தகைய பயனர் எந்தவொரு கூடுதல் கட்டணமும் அல்லது அபராதமும் இன்றி, வாங்கிய தேதியிலிருந்து ஏழு (7) நாட்களுக்குள் பயன்படுத்தப்படாத பொருட்கள் தொடர்பான திரும்பப் பெறும் உரிமையைப் பெறுவார்.
B. ஒரு சிறார் பயனரால் மேற்கொள்ளப்படும் பர்ச்சேஸிற்கு சிறார் பயனரின் சட்டப்பூர்வப் பாதுகாவலர் சம்மதிக்காத பட்சத்தில், அந்தப் பரிவர்த்தனைகள் அந்த சிறார் பயனராலோ அல்லது அந்த சிறார் பயனரின் சட்டப்பூர்வப் பாதுகாவலராலோ ரத்துசெய்யப்படலாம்.
C. பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் பயனர்கள் கொண்டிருக்கக்கூடிய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு சட்டப்பூர்வ உரிமையும் Roblox விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படவோ அல்லது வரம்பிற்குட்படுத்தப்படவோ கூடாது.
D. Roblox விதிமுறைகளில் இதற்கு மாறாக என்ன கூறப்பட்டிருந்தாலும், Roblox விதிமுறைகளில் உள்ள எதுவும், பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு அப்பால் பயனர்களின் கருத்துகள் தொடர்பான உரிமத்தை Roblox-க்கு வழங்குவதாகக் கருதப்படக்கூடாது.
சேவைகளுக்கான மாற்றங்களும், விதிமுறைகளுக்கான திருத்தங்களும்
A. சேவைகளை சீராக வழங்குவதற்காகச் செயல்பாட்டு அல்லது தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப, அல்லது சட்ட அல்லது ஒழுங்குமுறை காரணங்களுக்காகத் தேவைப்படும் இடங்களில், சேவைகளின் முழுப் பகுதியையோ அல்லது ஒரு பகுதியையோ Roblox மாற்றலாம் அல்லது நிறுத்திவைக்கலாம். கட்டணச் சேவைகளைப் பொறுத்தவரை, அனைத்து மாற்றங்களும் சேவைகளுக்குள் முன்கூட்டியே அறிவிக்கப்படும்; ஆயினும், பிழைகள் அல்லது தவறுகளைத் திருத்துதல் அல்லது அவசரப் புதுப்பிப்புகள் போன்ற தவிர்க்க முடியாத மாற்றங்கள் ஏற்படும்போது, அல்லது ஒரு மாற்றம் முக்கியமான மாற்றமாக இல்லாத பட்சத்தில், மாற்றம் செய்யப்பட்ட பின்னரும் அறிவிப்பு வெளியிடப்படலாம்.
B. பயனர்களுக்குப் பாதகமான அல்லது முக்கியமான ஏதேனும் திருத்தங்கள் Roblox விதிமுறைகளில் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் மற்றும் அவை நடைமுறைக்கு வரும் தேதியைக் குறிப்பிட்டு, நடைமுறைக்கு வரும் தேதிக்குக் குறைந்தபட்சம் முப்பது (30) நாட்களுக்கு முன்னதாக தளத்திற்குள் (அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட திரையில்) Roblox ஓர் அறிவிப்பை வெளியிடும்; மேலும் மின்னஞ்சல் அல்லது செயலியின் அறிவிப்பு வாயிலாகப் பயனர்களுக்குத் தனித்தனியாக அறிவிக்கும். அத்தகைய சூழ்நிலைகளில், பயனர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் திருத்தத்திற்கு முந்தைய மற்றும் திருத்தத்திற்குப் பிந்தைய விதிகளுக்கு இடையிலான தெளிவான ஒப்பீட்டை Roblox காண்பிக்கும்.
C. முந்தைய பத்தியின்படி வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பு அல்லது தகவல் குறிப்பில், "நடைமுறைக்கு வரும் தேதிக்குள் பயனர்கள் தங்கள் மறுப்புத் தெரிவிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தாவிட்டால், அவர்கள் திருத்தப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுவார்கள்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்து, அந்த நடைமுறைக்கு வரும் தேதிக்குள் ஒரு பயனர் தனது மறுப்பைத் தெரிவிக்கத் தவறினால், அந்தப் பயனர் திருத்தப்பட்ட விதிமுறைகளுக்குச் சம்மதித்தவராகக் கருதப்படுவார்.
உள்நாட்டு முகவர்
விளையாட்டுத் துறை மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட உள்நாட்டு முகவர்
GIPA-இன் பிரிவு 31-2-இன் படி, எங்கள் உள்நாட்டு முகவர்:
பெயர்: Roblox Korea Ltd. (பிரதிநிதி: மார்க் ரெயின்ஸ்ட்ரா)
முகவரி: 13-105 WeWork Yeoksam Station II, 14 Teheran-ro 26-gil, Gangnam-gu, Seoul, Republic of Korea
தொலைபேசி எண்: 02-6204-7999
மின்னஞ்சல்: Robloxkorea@roblox.test1709.icu
பிற்சேர்க்கை C (வியட்நாம்)
இந்தப் பகுதி A-இல் உள்ள துணை விதிகள் வியட்நாமில் உள்ள பயனர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்குப் பொருந்தும். Roblox விதிமுறைகளுக்கும் இந்தக் கூடுதல் விதிகளுக்கும் இடையே வேறுபாடுகள் அல்லது முரண்பாடு இருந்தால், கூடுதல் விதிகளே செல்லுபடியாகும்.
பகுதி A – வியட்நாமில் உள்ள பயனர்கள்
- வியட்நாம் பிளேயர் விதிமுறைகள் வியட்நாமில் உள்ள பயனர்கள் Roblox-VNG செயலி மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் (“Roblox Vietnam”). Roblox Vietnam நிறுவனம் வியட்நாமில் Minh Phuong Thinh Communication Company Limited ("வியட்நாம் வெளியீட்டாளர்") நிறுவனத்தால் வெளியிடப்பட்டு இயக்கப்படுகிறது, இது Roblox Vietnam உபயோகத்திற்குப் பொருந்தும் தனித்தனி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் Roblox பயனர் விதிமுறைகள் என்பதற்குப் பதிலாக உள்ளது. அனைத்துப் பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, Roblox Vietnam-இல் உங்கள் செயல்பாடுகள் சமூகத் தரநிலைகளுக்கு இணங்க வேண்டும்.
-
வியட்நாமில் உள்ள கிரியேட்டர்கள்வியட்நாமில் உள்ள கிரியேட்டர்கள் Roblox Studio மற்றும் தொடர்புடைய சேவைகளைப் பயன்படுத்தி அனுபவங்களையும் விர்ச்சுவல் உள்ளடக்கத்தையும் உருவாக்கலாம். Roblox Studio மற்றும் தொடர்புடைய சேவைகள் Roblox Corporation நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. நீங்கள் வியட்நாமில் ஒரு கிரியேட்டராக இருந்தால், Roblox Studio மற்றும் தொடர்புடைய சேவைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் கிடைக்கச் செய்யும் ஏதேனும் அனுபவங்கள் மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கம் ஆகியவற்றின் உபயோகமானது, Roblox கிரியேட்டர் விதிமுறைகளால் (Roblox VNG-இல் உள்ள வெளியீட்டைப் பொறுத்து, இந்தக் கூடுதல் விதிகளின் பகுதி B-ஆல் திருத்தப்பட்டபடி) நிர்வகிக்கப்படுகிறது.
Roblox வழங்கும் சில கிரியேட்டர் தொடர்பான சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது, டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் கிரியேட்டர் ஸ்டோர் விதிமுறைகள் போன்ற (ஆனால் அவை மட்டுமே அல்ல) அந்த சேவைகளுக்குப் பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.
பகுதி B - Roblox VIETNAM வழியாக கிரியேட்டரின் UGC-ஐ வெளியிடுதல்
Roblox Vietnam மூலம் கிரியேட்டரின் UGC-ஐ வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் இந்தப் பகுதி B-இல் உள்ள கூடுதல் விதிகள் பொருந்தும். வியட்நாமுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எல்லாக் கிரியேட்டர்களுக்கும் இவை பொருந்தும். Roblox கிரியேட்டர் விதிமுறைகளுக்கும் இந்தக் கூடுதல் விதிகளுக்கும் இடையே வேறுபாடுகள் அல்லது முரண்பாடு இருந்தால், கூடுதல் விதிகளே செல்லுபடியாகும்.
- வெளியீடு. உள்ளூர் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதற்காக, Roblox Vietnam மற்றும் அதனுடன் தொடர்புடைய UGC ஆகியவை வியட்நாம் வெளியீட்டாளரால் வியட்நாமில் வெளியிடப்பட்டு இயக்கப்படுகின்றன. உங்கள் கிரியேட்டரின் UGC, Roblox Vietnam பயனர்களுக்கு ("வியட்நாம் பயனர்கள்") Roblox-இன் துணை உரிமதாரராக Roblox கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2(b)ii இன் கீழ் வியட்நாம் வெளியீட்டாளரால் கிடைக்கச் செய்யப்படலாம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.
- பர்ச்சேஸ்கள். உள்ளூர் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதற்காக, வியட்நாம் பிளேயர்கள் UGC-ஐ நேரடியாக கிரியேட்டரிடம் இருந்து வாங்க முடியாது. அதற்கு பதிலாக அவர்கள் வியட்நாம் வெளியீட்டாளரிடமிருந்தே வாங்க வேண்டும். ஒரு வியட்நாம் பிளேயர் வியட்நாம் வெளியீட்டாளரிடமிருந்து கிரியேட்டரின் UGC-ஐ (Robux-க்காகவோ அல்லது கட்டணம் இல்லாமலோ) வாங்கினால், வியட்நாம் பிளேயர் கிரியேட்டரின் UGC-ஐ வாங்கியதால் கிரியேட்டருக்கும் அந்த வியட்நாம் பிளேயருக்கும் இடையே எந்த வகையான ஒப்பந்த உறவும் ஏற்படாது. அதற்கு பதில், கிரியேட்டரின் UGC வியட்நாம் வெளியீட்டாளரால் வியட்நாம் பிளேயருக்கு உள் உரிமத்திற்கு வழங்கப்படும். ஈட்டிய Robux மற்றும் தொடர்புடைய Robux ஒதுக்கீடு ஆகியவற்றைப் பெறுவதற்கான படைப்பாளரின் தகுதியைக் கணக்கிடும் நோக்கங்களுக்காக, Roblox கிரியேட்டர் விதிமுறைகள் பிரிவு 4(b)-இன் கீழ், அத்தகைய பர்ச்சேஸ் பரிவர்த்தனை வியட்நாமுக்கு வெளியே உள்ள பிளேயருக்கு கிரியேட்டரிடம் இருந்து நேரடி விற்பனைக்குப் பொருந்தும் அதே விதத்தில் நடத்தப்படும். Roblox கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2(b) மற்றும் 4 ஆகியவை, இந்தக் கூடுதல் விதிகளுடன் முரண்படும் அளவிற்கு, Roblox Vietnam-இன் கீழ் கிரியேட்டரின் UGC-இன் வெளியீடு, விநியோகம் அல்லது பர்ச்சேஸ் தொடர்பாக அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றன.
- Roblox வியட்நாமை மார்க்கெட்டிங் செய்வதற்காக கிரியேட்டரின் UGC-ஐப்பயன்படுத்துவதற்கான உரிமம். கிரியேட்டரின் UGC-இல் கிரியேட்டருக்கு இருக்கக்கூடிய அனைத்துப் பதிப்புரிமைகளும் கிரியேட்டருக்கே இருக்கும். இதன் மூலம் கிரியேட்டர் Roblox-க்கு ஒரு நிரந்தரமான, திரும்பப்பெற முடியாத, பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத, பிறருக்கு மாற்றித்தரக்கூடிய உரிமத்தை வழங்க ஒப்புக்கொள்கிறார். இதில் எந்தவொரு நபர் அல்லது அமைப்புக்கும் (வியட்நாம் பதிப்பாளர் உட்பட, ஆனால் அதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை) பல நிலைகளில் உள் உரிமமளிக்கும் அதிகாரத்துடன், கிரியேட்டர் GDPR அல்லது பிற தனியுரிமைச் சட்டங்களின் கீழ் மறக்கப்படும் உரிமையைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, Roblox வியட்நாம் அல்லது சேவைகளின் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பாக தற்போதுள்ள அல்லது இனிமேல் உருவாக்கப்படக்கூடிய எந்தவொரு ஊடகம் அல்லது விநியோக சேனலிலும் கிரியேட்டரின் UGC மற்றும் தொடர்புடைய பயனர்பெயரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தலாம். Roblox Vietnam அல்லது சேவைகளை விளம்பரப்படுத்துவதற்காக வணிகநோக்கற்ற மற்றும் கல்விப் பயன்பாடுகளுக்காக கிரியேட்டரின் UGC-ஐ Roblox பயன்படுத்தலாம் (மேலும் அந்தப் பயன்பாடு வணிக நோக்கற்றதா அல்லது கல்வி சார்ந்ததா என்பதை Roblox நியாயமான வகையில் தீர்மானிக்கும்).
- கிரியேட்டரின் UGC மதிப்பாய்வு. சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, Vietnam-இல் எந்தவொரு கிரியேட்டரின் UGC வியட்நாம் வெளியீட்டாளரால் விநியோகிக்கப்படுவதை அனுமதிக்க எந்தக் கடப்பாடும் Roblox-க்கு இல்லை, மேலும் Roblox Vietnam-இல் கிரியேட்டரின் UGC எதையும் வெளியிட வேண்டிய கடப்பாடு வியட்நாம் வெளியீட்டாளருக்கும் இல்லை. அனுபவங்கள் மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கம் வியட்நாமில் வெளியிடப் பொருத்தமாக உள்ளதா என்று பார்க்க, Roblox, வியட்நாம் வெளியீட்டாளர் மற்றும்/அல்லது உள்ளூர் ஒழுங்குமுறை அதிகாரிகள் மதிப்பாய்வு செய்யக்கூடும் (வெளியீட்டிற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகு ஏதேனும் நேரத்திலோ). Roblox மற்றும் வியட்நாம் வெளியீட்டாளர் ஆகிய இரு தரப்பும், எப்போது வேண்டுமானாலும் மற்றும் எந்தக் காரணத்திற்காகவும், Roblox Vietnam-இல் கிரியேட்டரின் UGC-ஐ வடிகட்ட, அதன் விநியோகம் மற்றும் வெளியீட்டை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடைநிறுத்த அல்லது நிறுத்த முழுமையான விருப்புரிமையைக் கொண்டிருப்பார்கள். அத்தகைய நடவடிக்கை தொடர்பான Roblox மற்றும் வியட்நாம் வெளியீட்டாளரின் தீர்மானமே இறுதியானது. Roblox தனது தனிப்பட்ட விருப்புரிமையின் பேரில், இந்தப் பிரிவிற்கு இணங்க எடுக்கப்பட்ட ஏதேனும் நடவடிக்கை தொடர்பாக கிரியேட்டரைத் தொடர்புகொள்ளக்கூடும், மேலும் கிரியேட்டரின் UGC-ஐச் சரிசெய்ய அல்லது திருத்தவும், அதனை Roblox Vietnam-இல் வெளியிடுவதற்காக மீண்டும் சமர்ப்பிக்கவும் கிரியேட்டருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.
பிற்சேர்க்கை D (ஆஸ்திரேலியா)
முன்னுரிமை
Roblox விதிமுறைகளுக்கும் இந்தக் கூடுதல் விதிகளுக்கும் இடையே வேறுபாடுகள் அல்லது முரண்பாடு இருக்கும் அளவிற்கு, கூடுதல் விதிகளே செல்லுபடியாகும்.ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்குதல்
- ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், 2021 (Cth)-இன் கீழ் (“AU OSA”), எங்கள் இறுதிப் பயனர்களை சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடுகள் Roblox-க்கு உள்ளன. AU OSA கட்டமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்ட உள்ளடக்கம் பின்வருமாறு பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
-
“வகை 1A மெட்டீரியல்”, இது பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றாகும்:
- குழந்தை பாலியல்நோக்கு சார்ந்த மெட்டீரியல்;
- பயங்கரவாத ஆதரவு மெட்டீரியல்; அல்லது
- அதீத குற்றம் மற்றும் வன்முறை சார்ந்த மெட்டீரியல்.
Roblox-இன் "குழந்தைகளின் பாலியல் நோக்கு பயன்பாடு", "பயங்கரவாதம் மற்றும் வன்முறையான தீவிரவாதம்", "வன்முறை உள்ளடக்கம் மற்றும் கோரம்" ஆகிய சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்ட வகை 1A உள்ளடக்கத்தையும் உள்ளடக்கியது.
-
“வகை 1B மெட்டீரியல்”, இது பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றாகும்:
- குற்றம் மற்றும் வன்முறை சார்ந்த மெட்டீரியல்; அல்லது
- போதைப்பொருள் தொடர்பான மெட்டீரியல்.
Roblox-இன் “வன்முறை உள்ளடக்கம் மற்றும் கோரம்” மற்றும் “சட்டவிரோத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பொருட்கள்” ஆகிய சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ள வகை 1B மெட்டீரியலையும் உள்ளடக்குகின்றன.
-
“வகை 1C மெட்டீரியல்”, என்பது குறிப்பிட்ட பாலியல் ஈர்ப்புப் பழக்கவழக்கங்கள் அல்லது கற்பனைகளை விவரிக்கும் அல்லது சித்தரிக்கின்ற, மற்றும் வகை 1A மெட்டீரியலாக இல்லாத எந்தவொரு வகை 1 மெட்டீரியலையும் குறிக்கும்.
Roblox-இன் "தொந்தரவு மற்றும் பாரபட்சம்", "ரொமாண்டிக் மற்றும் பாலியல் உள்ளடக்கம்", “வன்முறை உள்ளடக்கம் மற்றும் கோரம்” மற்றும் “சட்டவிரோத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பொருட்கள்”, "தற்கொலை, சுய தீங்கு மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தை" ஆகிய சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ள வகை 1C மெட்டீரியலையும் உள்ளடக்குகின்றன.
-
“வகை 2A மெட்டீரியல்”, என்பது பரஸ்பர சம்மதத்துடன் வயதுவந்தோர் இடையே நடைபெறும் உண்மையான (நடிப்பு அல்ல) பாலியல் செயல்பாட்டைச் சித்தரிக்கும் ஒரு திரைப்படமாகும்.
Roblox-இன் “ரொமாண்டிக் மற்றும் பாலியல் உள்ளடக்கம்” சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ள வகை 2A மெட்டீரியலையும் உள்ளடக்குகின்றன.
-
“வகை 2B மெட்டீரியல்”, என்பது அதிகத் தாக்கமுள்ள பாலியல் ரீதியான வெளிப்படையான செயல்பாட்டைச் சித்தரிக்கும் (அத்கத் தாக்கமுள்ள நிர்வாணம் உட்பட) வகை 2 மெட்டீரியல் ஆகும்.
Roblox-இன் “ரொமாண்டிக் மற்றும் பாலியல் உள்ளடக்கம்” சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ள வகை 2B மெட்டீரியலையும் உள்ளடக்குகின்றன.
-
- AU OSA-இன் கீழ், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளில் சில விதிகளைச் சேர்க்க வேண்டும். இந்த விதிகள் Roblox விதிமுறைகளில் (சமூகத் தரநிலைகளை உள்ளடக்கியது) உள்ளன.
- சமூகத் தரநிலைகள், வகை 1A, வகை 1B, வகை 1C, வகை 2A, வகை 2B மெட்டீரியல் உள்ளிட்ட சில வகை உள்ளடக்கங்களையும், மேலும் சேவைகளில் ஒருவரின் அனுமதியின்றி அந்தரங்கப் படங்களைப் பகிர்தல், குழந்தைகளைத் தவறான வழியில் வழிநடத்துதல் அல்லது பாலியல் ரீதியாக மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது, சேவை வழியாக மெட்டீரியலைப் பகிர்வதையும் தடை செய்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு, நீங்கள் அல்லது உங்கள் கணக்கைப் பயன்படுத்தும் வேறொரு நபர் இவற்றைச் செய்ய சேவைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்:
- வகை 1A மெட்டீரியல், வகை 1B மெட்டீரியல், வகை 1C மெட்டீரியல், வகை 2A மெட்டீரியல் அல்லது வகை 2B மெட்டீரியல் ஆகியவற்றைக் கோருதல், அணுகுதல், விநியோகித்தல் அல்லது சேமித்து வைத்தல்; அல்லது
- சேவைகளில் ஒருவரின் அனுமதியின்றி அந்தரங்கப் படங்களைப் பகிர்தல், குழந்தைகளைத் தவறான வழியில் வழிநடத்துதல் அல்லது பாலியல் ரீதியாக மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது, சேவை வழியாக மெட்டீரியலைப் பகிர்தல்.
- பயனர் விதிமுறைகளின் பிரிவு 2(c)-க்கு இணங்க, உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிலும் சேவைகளிலும் மேற்கொள்ளப்படும் எந்தச் செயலுக்கும் நீங்களே பொறுப்பு. ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு, உங்கள் கணக்கின் மூலம் சேவைகளைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரும் Roblox விதிமுறைகளுக்கு இணங்குவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
- Roblox விதிமுறைகளின் கீழ் உங்கள் மற்ற கடமைகளை இந்தப் பிற்சேர்க்கை F எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.
- ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், 2021 (Cth)-இன் கீழ் (“AU OSA”), எங்கள் இறுதிப் பயனர்களை சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடுகள் Roblox-க்கு உள்ளன. AU OSA கட்டமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்ட உள்ளடக்கம் பின்வருமாறு பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
சமீபத்திய மாற்றங்களின் சுருக்கவுரை
பயன்பாட்டு விதிமுறைகள்
- இன்னும் தெளிவாக இருக்கும் வகையிலும் Roblox எப்படிச் செயல்படுகிறது என்பதை இன்னும் சிறப்பாக விவரிக்கும் வகையிலும் எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளைப் புதுப்பிக்கிறோம். நாங்கள் செய்கின்ற மாற்றங்களின் முக்கிய சுருக்கவுரை பின்வருமாறு:
- பயனர் விதிமுறைகள் மற்றும் கிரியேட்டர் விதிமுறைகள் உட்பட, பயன்பாட்டு விதிமுறைகளின் மொழியை எளிமையாக்கவும், அதன் பிரிவுகளை மறுசீரமைக்கவும் முயன்றுள்ளோம்.
- பிளாட்ஃபார்மில் பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் (UGC) உங்களுக்கு எப்படி வழங்கப்படுகிறது என்பதில் Roblox நிறுவனத்தின் பங்களிப்பைத் தெளிவுபடுத்துகிறோம். பொதுவாக, Roblox மூலம் செய்யப்படும் பர்ச்சேஸ்களுக்கு Roblox நிறுவனமே முதன்மை விநியோகஸ்தராகவும் ஆவணங்களின்படி விற்பனையாளராகவும் செயல்படுகிறது. அதாவது, Roblox பிளாட்ஃபார்மில் நீங்கள் எந்தவொரு உள்ளடக்கத்தையும் அணுகும்போது அல்லது வாங்கும்போது, அந்த உள்ளடக்கத்தை Roblox நிறுவனத்திடமிருந்தே பெறுகிறீர்கள். அந்தப் பர்ச்சேஸ்களுக்காக பயனர்களும் கிரியேட்டர்களும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பரிவர்த்தனையில் ஈடுபட மாட்டார்கள். Robux, பேமெண்ட்டுகள், வரி மற்றும் கிரியேட்டர் கட்டணம் தொடர்பான பிரிவுகளையும் நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
- EEA பகுதியில் உள்ள பயனர்களுக்கு மட்டும், நுகர்வோருக்கான விலகுதல் உரிமையைச் சேர்த்துள்ளோம்.