இன்னும் தெளிவாக இருக்கும் வகையிலும் Roblox எப்படிச் செயல்படுகிறது என்பதை இன்னும் சிறப்பாக விவரிக்கும் வகையிலும் எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளைப் புதுப்பிக்கிறோம். நாங்கள் செய்கின்ற மாற்றங்களின் முக்கிய சுருக்கவுரை பின்வருமாறு:
- பயனர் விதிமுறைகள் மற்றும் கிரியேட்டர் விதிமுறைகள் உட்பட, பயன்பாட்டு விதிமுறைகளின் மொழியை எளிமையாக்கவும், அதன் பிரிவுகளை மறுசீரமைக்கவும் முயன்றுள்ளோம்.
- பிளாட்ஃபார்மில் பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் (UGC) உங்களுக்கு எப்படி வழங்கப்படுகிறது என்பதில் Roblox நிறுவனத்தின் பங்களிப்பைத் தெளிவுபடுத்துகிறோம். பொதுவாக, Roblox மூலம் செய்யப்படும் பர்ச்சேஸ்களுக்கு Roblox நிறுவனமே முதன்மை விநியோகஸ்தராகவும் ஆவணங்களின்படி விற்பனையாளராகவும் செயல்படுகிறது. அதாவது, Roblox பிளாட்ஃபார்மில் நீங்கள் எந்தவொரு உள்ளடக்கத்தையும் அணுகும்போது அல்லது வாங்கும்போது, அந்த உள்ளடக்கத்தை Roblox நிறுவனத்திடமிருந்தே பெறுகிறீர்கள். அந்தப் பர்ச்சேஸ்களுக்காக பயனர்களும் கிரியேட்டர்களும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பரிவர்த்தனையில் ஈடுபட மாட்டார்கள். Robux, பேமெண்ட்டுகள், வரி மற்றும் கிரியேட்டர் கட்டணம் தொடர்பான பிரிவுகளையும் நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
- EEA பகுதியில் உள்ள பயனர்களுக்கு மட்டும், நுகர்வோருக்கான விலகுதல் உரிமையைச் சேர்த்துள்ளோம்.
வரவிருக்கும் மாற்றங்களைப் பார்க்க">இங்கே பயனர் விதிமுறைகள்
அறிமுகவுரை
பயனர் விதிமுறைகள்
கிரியேட்டர் விதிமுறைகள்
பிற்சேர்க்கை A (சீனா)
பிற்சேர்க்கை B (ஜப்பான்)
பிற்சேர்க்கை C (ஐரோப்பிய யூனியன்/ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி)
பிற்சேர்க்கை D (வியட்நாம்)
பிற்சேர்க்கை E (யுனைட்டெட் கிங்டம்)
பிற்சேர்க்கை F (ஆஸ்திரேலியா)
OSA பின்னிணைப்பு
அறிமுகவுரை
கற்பனைத் திறனும் படைப்புத் திறனும் ்மேலோங்கி நிற்கும் Roblox உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்!
பயனர்கள் (“பயனர்கள்,” “உங்கள்” அல்லது “நீங்கள்”) விளையாடவும் உருவாக்கவும் பிறருடன் தொடர்புகொள்ளவும் உதவும் வகையில் Roblox இணையதளத்தையும் (www.roblox.test1709.icu) அது தொடர்பான தயாரிப்புகளையும் (மொத்தமாக “தயாரிப்புகள்” என்று குறிப்பிடப்படும்), இணையதளங்கள், செயலிகள், மன்றங்கள் உள்ளடக்கம், வசதிகள், தயாரிப்பு மற்றும் சேவைகள் உட்பட பல்வேறு பிற அம்சங்களையும் சேவைகளையும் (மொத்தமாக தயாரிப்புகள், “சேவைகள்” என்று குறிப்பிடப்படும்) Roblox Corporation மற்றும் நியமிக்கப்பட்ட துணை நிறுவனங்கள் (“Roblox”, “நாங்கள்” அல்லது “எங்கள்”) வழங்குகின்றன.
இந்தப் பயனர் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், பின்வருபவற்றுக்குக் கட்டுப்படவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்:
- சேவைகளை அணுகுகின்ற பயனர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய Roblox கிரியேட்டர் விதிமுறைகள். Roblox Studio உபயோகம், வழங்கக்கூடிய அனுபவங்கள் ை, விர்ச்சுவல் உள்ளடக்கம் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி), சேவைகளில் இசையின் உபயோகம் போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.
- Roblox தனியுரிமைக் கொள்கை - நாங்கள் உங்களைப் பற்றி சேகரிக்கும் தகவல்கள், அந்தத் தகவல்களை நாங்கள் பாதுகாக்கும் விதம், அந்தத் தகவல்களை நாங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தக்கூடும் என்ற விவரம் ஆகியவற்றை இது விவரிக்கிறது.
- பயனர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நடத்தையின் தரநிலைகளைப் பற்றி விவரிக்கின்ற மற்றும் சேவைகளில் தடைசெய்யப்பட்ட நடத்தைகளைப் பற்றி Roblox சமூகத் தரநிலைகள்-ஐவிளக்குகிறது.
- உள்ளடக்க முதிர்ச்சி ரேட்டிங்குகள் - இவை உள்ளடக்கத்தின் முதிர்ச்சி நிலை பற்றிய தகவலையும் அனுபவங்களுடன் இணைந்த உள்ளடக்க விளக்கங்களையும் வழங்குகிறது.
- U.S. பயனர்களுக்கான, Roblox-இன் நடுவர் தீர்வு ஒப்பந்தம (பிரிவு 13), உங்களுக்கும Roblox-க்கும இடையிலான சர்ச்சைகள் தீர்க்கப்படும் விதம் பற்றி இது குறிப்பிடுகிறது. குறிப்பாக, இந்த Roblox விதிமுறைகள் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு தனிப்பட்ட நடுவர் தீர்வு மற்றும் கூட்டுச் செயல்பாட்டு விலக்கை உள்ளடக்கியுள்ளன. அதாவது, தனிநபராகவோ கூட்டுச் செயலாகவோ நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கும் உரிமையை நீங்கள் விட்டுக்கொடுக்கிறீர்கள் என்றாகும்.
சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்பு, ROBLOX விதிமுறைகளை கவனமாகப் படிக்கவும், ஏனெனில் அவையே உங்களுக்கும் ROBLOX-க்கும் இடையிலான சட்டப்படிக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன. சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சட்ட எல்லை மற்றும் வசிக்கும் மாநிலத்தில், முதிர் வயது என்பதற்கான சட்டப்பூர்வ வயதை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் என்றும், ROBLOX விதிமுறைகளைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, அவற்றுக்குக் கட்டுப்பட ஒப்புக் கொள்கிறீர்கள் என்றும் உறுதிப்படுத்துகிறீர்கள். நீங்கள் ROBLOX விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், சேவைகளை நீங்கள் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.
உங்கள் சட்ட எல்லையில் அல்லது வசிக்கும் மாநிலத்தில் நீங்கள் முதிர்வயது என்பதைவிடக் குறைந்த வயதுடையவராக இருந்தால் (“சிறுவர்”), சேவைகளைப் பயன்படுத்தும் முன்பு, ROBLOX விதிமுறைகளை உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் கட்டாயம் படித்து ஒப்புதல் வழங்க வேண்டும். சேவைகளைப் பயன்படுத்த சிறுவர் ஒருவரை அனுமதிப்பதன் மூலம், சிறுவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ROBLOX விதிமுறைகளுக்கு உட்பட்டவராகிறார், அதோடு ஏதேனும் விர்ச்சுவல் உள்ளடக்கத்தை வாங்குவது உட்பட, சேவைகளில் அந்தச் சிறுவர் செய்யும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
Roblox விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டவையாகும். பொருந்தக்கூடிய சட்டத்திற்குத் தேவையான அளவில், முக்கியமான புதுப்பிப்புகள் அல்லது மாற்றங்கள் பற்றி, தகுந்த அறிவிப்பு முறை ஏதேனும் ஒன்றின் வழியாக பயனருக்கு Roblox தகுந்த முன்னறிவிப்பை வழங்கும், அதே சமயம் முக்கியமல்லாத மாற்றங்கள், அம்சங்களுக்கான புதுப்பிப்புகள் அல்லது சட்டக் காரணங்களுக்காக செய்யப்படும் மாற்றங்கள் (Roblox தீர்மானிக்கும்படி) அறிவிப்பு இல்லாமல் உடனடியாகவே நடைமுறைக்கு வருவதாகவே கருதப்படும். இந்தப் பக்கத்தின் மேல் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள "கடைசியாகப் புதுப்பித்த" தேதி முதல் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். கடைசியாகப் புதுப்பித்த தேதிக்குப் பிறகும் நீங்கள் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், அந்த மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக் கொள்வதாகக் கருதப்படும்.
Roblox விதிமுறைகளில் உள்ளடங்குபவை:
- பயனர் விதிமுறைகள். சேவைகளை அணுகும் எந்த நபருக்கும் பயனர் விதிமுறைகள் பொருந்தும்.
- கிரியேட்டர் விதிமுறைகள். கிரியேட்டர் விதிமுறைகள் சேவைகளை அணுகும் எல்லாப் பயனர்களுக்கும் பொருந்தும். Roblox Studio உபயோகம், வழங்கக்கூடிய அனுபவங்கள் ை, விர்ச்சுவல் உள்ளடக்கம் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி), சேவைகளில் இசையின் உபயோகம் போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.
- Roblox சமூகத் தரநிலைகள். Roblox சமூகத் தரநிலைகள் எல்லாப் பயனர்களுக்கும் பொருந்தும், மேலும் சேவைகளைப் பயன்படுத்தும்போது என்னென்ன வகையான நடவடிக்கைகள் ஏற்கக்கூடியவை, எவை தடை செய்யப்பட்டவை என்பதை விவரிக்கின்றன.
- Roblox தனியுரிமை & குக்கீ கொள்கை.Roblox தனியுரிமை & குக்கீ கொள்கை சேவைகளைப் பயன்படுத்தும்போது Roblox சேகரிக்கும் தகவல்கள், அந்தத் தகவல்களை நாங்கள் பாதுகாக்கும் விதம், அந்தத் தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.
-
கூடுதல் விதிமுறைகள்.
- சீன மக்கள் குடியரசு. இந்த விதிமுறைகள் சீனாவில் உள்ள, Luobu Studio பயன்படுத்தும் பயனர்களும் டெவலப்பர்களும் உருவாக்கிய, UGC உடன் ஒரு பயனரின் ஊடாடலுக்கும், சீன மக்கள் குடியரசில் விநியோகிப்பதற்காக Luobulesi Game-க்கு ஒரு கிரியேட்டரின் UGC சமர்ப்பிப்புக்கும் பொருந்தும்.
- ஜப்பான். இந்த விதிமுறைகள் ஜப்பானில் உள்ள பயனர்களுக்குப் பொருந்தும்.
- ஐரோப்பா. இந்த விதிமுறைகள் ஐரோப்பிய யூனியன்/ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள பயனர்களுக்குப் பொருந்தும்.
- யுனைட்டெட் கிங்டம். இந்த விதிமுறைகள் யுனைட்டெட் கிங்டமில் உள்ள பயனர்களுக்குப் பொருந்தும்.
- வியட்நாம். இந்த விதிமுறைகளில் உள்ள பகுதி A வியட்நாமில் உள்ள பயனர்களுக்குப் பொருந்தும். வியட்நாமில் கிரியேட்டர் UGC-இன் வெளியீட்டை இந்த விதிமுறைகளில் உள்ள பகுதி B நிர்வகிக்கிறது, மேலும் வியட்நாமுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எல்லாக் கிரியேட்டர்களுக்கும் இவை பொருந்தும்.
- ஆஸ்திரேலியா. இந்த விதிமுறைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்குப் பொருந்தும்.
நீங்கள் சேவைகளை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, குறிப்பிட்ட பிற கூடுதல் விதிமுறைகளும் பொருந்தக்கூடும். இவற்றில் உள்ளடங்குபவை ஆனால் இவை மட்டுமே அல்ல:
- விளம்பர ஒருங்கிணைப்புகளுக்கான விதிமுறைகள். விளம்பர ஒருங்கிணைப்புகளுக்கான விதிமுறைகள், Roblox-இல் தங்களது அனுபவங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட விளம்பரங்களை வைக்கும் கிரியேட்டர்களுக்குப் பொருந்தும்.
- விளம்பரத் தரநிலைகள். Roblox-இல் விளம்பரங்களை இடம்பெறச் செய்கின்ற விளம்பரதாரர்களுக்கும், தங்கள் அனுபவங்களில் மூன்றாம் தரப்பு விளம்பரங்களை அனுமதிக்கும் கிரியேட்டர்களுக்கும் விளம்பரத் தரநிலைகள் பொருந்தும்.
- விளம்பரப்படுத்தல் விதிமுறைகள். ads.roblox.com தளத்தில் Roblox விளம்பர நிர்வாகியைப் பயன்படுத்தி Roblox-இல் விளம்பரங்களை இடம்பெறச் செய்கின்ற விளம்பரதாரர்களுக்கு விளம்பரப்படுத்தல் விதிமுறைகள் பொருந்தும்.
- முகத்திற்கான மீடியா பதிவுசெய்தல் கொள்கை அறிவிப்பு. Roblox-இல் ஒருவரின் கேமராவைப் பயன்படுத்த வேண்டியிருக்கின்ற அல்லது ஒரு நபரின் முக வடிவமைப்பைக் கொண்டிருக்கும் (வயதுச் சரிபார்ப்பு உட்பட) கோப்புகளைப் பதிவேற்ற வேண்டியிருக்கின்ற ஏதேனும் கூடுதல் அம்சங்களைப் பயன்படுத்தும் எந்தவொரு பயனருக்கும் முகத்திற்கான மீடியா பதிவுசெய்தல் கொள்கை அறிவிப்பு பொருந்தும், மேலும் நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது Roblox எப்படி உங்கள் பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, தக்கவைத்துக் கொள்கிறது மற்றும் அழிக்கிறது என்பதையும் விளக்குகிறது.
- DevEx விதிமுறைகள். டெவலப்பர் எக்சேஞ்ச் திட்டத்திற்கு (“DevEx திட்டம்”) விண்ணப்பித்து, ஏற்கப்பட்ட எந்தவொரு கிரியேட்டருக்கும் DevEx விதிமுறைகள்பொருந்தும்.
- முகத்திற்கான அனிமேஷன் தனியுரிமை அறிக்கை. சேவையில் அனிமேஷன் பதிவுசெய்தல்-முகம் அல்லது அரட்டை அம்சம் உள்ளிட்ட கருவிகளைச் செயல்படுத்தி, இயக்குகின்ற எந்தவொரு பயனருக்கும் முக அனிமேஷன் தனியுரிமை அறிக்கை பொருந்தும், மேலும் இது நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது Roblox எப்படித் தரவைச் சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, பகிர்கிறது, தக்கவைத்துக் கொள்கிறது மற்றும் அழிக்கிறது என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.
- Roblox பெயர் மற்றும் லோகோ வழிகாட்டல்கள். Roblox-இல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை பிற சேவைகளில் விளம்பரப்படுத்தும் எந்தவொரு கிரியேட்டர் அல்லது பிராண்டு பார்ட்னருக்கும் Roblox பெயர் மற்றும் லோகோ வழிகாட்டல்கள் பொருந்தும்.
- Roblox நீட்டிக்கப்பட்ட சேவைகள். இங்கு விவரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சேவைகளுக்கான Roblox-இன் இயல்புநிலை வரம்புகளைத் தாண்டி, சேவை உபயோக நிர்வாகம் மற்றும் பேமெண்ட்டுக்காக இந்த அம்சத்தைச் செயல்படுத்தும் எந்தவொரு கிரியேட்டருக்கும் Roblox நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள்பொருந்தும்.
- Roblox சந்தா. Roblox மூலம் சந்தாவை வாங்கும் பயனர் அல்லது கிரியேட்டர் யாருக்கும் Roblox சந்தா விதிமுறைகள் பொருந்தும்.
- ஸ்கிரீன் ரெக்கார்டிங் கூடுதல் விதிமுறைகள். ஸ்கிரீன் ரெக்கார்டிங் இயக்கப்பட்டுள்ள ஓர் அனுபவத்திற்குள் நுழைகின்ற எந்தவொரு பயனருக்கும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் கூடுதல் விதிமுறைகள் பொருந்தும்.
பயனர் விதிமுறைகள்
மற்ற விஷயங்களுடன் பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் அல்லது “UGC” என்று அழைக்கப்படும் உள்ளடக்கத்தையும், கூடுதல் கிரியேட்டர் விதிமுறைகளுடன் சேர்ந்து இந்தப் பயனர் விதிமுறைகள் நிர்வகிக்கின்றன. UGC என்பது சேவைகளில் பயனர் உருவாக்குகின்ற, பதிவேற்றுகின்ற, சமர்ப்பிக்கின்ற, வெளியிடுகின்ற, காட்சிப்படுத்துகின்ற, ஜெனரேட் செய்கின்ற, அனுப்புகின்ற அல்லது பிற வழிகளில் கிடைக்கச் செய்கின்ற எந்த விதமானதும், இயல்பைக் கொண்டதுமான, மெட்டீரியல், சொத்துகள் அல்லது மற்ற விஷயங்களாகும். எல்லாப் பயனர்களும் இந்தப் பயனர் விதிமுறைகள் மட்டுமின்றி, இங்கு குறிப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கூடுதல் கிரியேட்டர் விதிமுறைகளுக்கும் உட்பட்டவர்களாவர்.
வரையறைகள்.
இங்கு வரையறுக்கப்படாத பெரிய எழுத்துகளில் உள்ள சொற்கள் ஏதேனும் இருந்தால், அவை Roblox அகராதியில் வரையறுக்கப்பட்டிருக்கும்.பயனர் கணக்குகள், சேவைகளுக்கான அணுகல்.
- ஒரு கணக்கை உருவாக்குதல். சேவைகளின் குறிப்பிட்ட சில பகுதிகளையும் அம்சங்களையும் அணுகுவதற்கு நீங்கள் Roblox கணக்கை (“கணக்கு”) உருவாக்க வேண்டும். கணக்கை உருவாக்க, பயனர் பெயர், பிறந்த தேதி, அணுகப்படும் ரிசோர்ஸ்களைப் பொறுத்து, கடவுச்சொல் போன்ற உங்கள் கணக்கை அங்கீகரிக்கும் முறை ஆகியவற்றை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படும், சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி, சரிபார்க்கப்பட்ட ஃபோன் எண் அல்லது அரசாங்கம் வழங்கிய புகைப்பட அடையாளச் சான்றை வழங்குமாறும் உங்களிடம் கேட்கப்படலாம். Roblox-க்கு வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் சரியாகவும், துல்லியமாகவும், சமீபத்தியவையாகவும் இருக்கும் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் கணக்கு தொடர்பாகRoblox-க்கு நீங்கள் வழங்கும் தகவல் எதுவும் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு Roblox-க்கு உரிமை உள்ளது.
- கணக்கைப்பாதுகாத்தல். உங்கள் கணக்கை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு உள்நுழைவுச் சான்றின் (எ.கா. பயனர் பெயர், கடவுச்சொல்) ரகசியத்தன்மையையும் பாதுகாப்பையும் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும். அத்தகைய உள்நுழைவுச் சான்றுகளை நீங்கள் மற்றவர்களுடன் பகிரவோ வெளிப்படுத்தவோ கூடாது (சிறுவர் பயனருக்காக பாதுகாவலர் பயன்படுத்துவது மட்டும் விதிவிலக்கு).
- கணக்கு பொறுப்புகள் மற்றும் தடைகள். உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிலும் சேவைகளிலும் மேற்கொள்ளப்படும் எந்தச் செயலுக்கும் நீங்களே பொறுப்பு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, ஒப்புக்கொண்டு, ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்கள் சொந்தக் கணக்கின் மூலம் மட்டுமே நீங்கள் சேவைகளை அணுகலாம். உங்கள் கணக்கையோ அணுகல் உள்நுழைவுச் சான்றுகளையோ வேறொரு பயனருக்கு விற்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வேறொரு பயனரின் கணக்கு அல்லது உள்நுழைவுச் சான்றுகளை வாங்குவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு கணக்கின் மூலம் உருவாக்கப்பட்ட விர்ச்சுவல் உள்ளடக்கத்தின் விற்பனையில் இருந்து Robux-ஐப் பெறுவதற்கான உரிமையை விற்பது தொடர்பாக, தகுந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின்படி ஒரு கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்வது அனுமதிக்கப்படும். சேவைகளுக்கு வெளியே Robux அல்லது விர்ச்சுவல் உள்ளடக்கத்தை விற்பதை இந்த விதிவிலக்கு அனுமதிக்கவில்லை.
- பாதுகாப்பிழந்த கணக்குகள். உங்கள் கணக்கு பாதுகாப்பிழந்துவிட்டது, அது பாதுகாப்பாக இல்லை அல்லது அங்கீகரிக்கப்படாத உபயோகத்திற்கு ஆட்பட்டுவிட்டது என்று நம்பும்படியான காரணம் உங்களுக்கு இருந்தால் Roblox உதவிக்குழுவைத் தொடர்புகொள்வதன் மூலம் Roblox-க்கு நீங்கள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். வேறொரு பயனர் உங்கள் கடவுச்சொல் அல்லது ஏதேனும் தனிப்பட்ட தகவல்களைக் கேட்டால், “தவறான உபயோகத்தைப் புகாரளி” அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் அவர்களைப் பற்றி உடனடியாகப் புகாரளிக்க வேண்டும். மேலும், வேறு கணக்கின் அங்கீகரிக்கப்படாத உபயோகத்தில் நீங்கள் தெரிந்தே பங்குபெறவோ, அதைச் சாத்தியமாக்கவோ கூடாது.
- ஒரு கணக்கை இடைநீக்குதல் அல்லது நிறுத்துதல். நீங்கள் இந்தப் பயனர் விதிமுறைகள் அல்லது Roblox சமூகத் தரநிலைகள் உட்பட ஏதேனும் Roblox விதிமுறைகளை மீறினால், நீங்கள் உருவாக்குகின்ற அல்லது உருவாக்கியுள்ள ஏதேனும் மாற்றுக் கணக்கு(களை) இடைநீக்குதல் அல்லது நிறுத்துவதன் மூலம் உட்பட, தனது சொந்த விருப்புரிமையின்பேரில் (i) உங்கள் கணக்கையும் (ii) Roblox சேவைகளைப் பயன்படுத்துவதற்கான மற்றும் அணுகுவதற்கான உங்களது உரிமையையும் நிறுத்த அல்லது இடைநீக்க Roblox-க்கு உரிமை உள்ளது. கணக்கை இடைநீக்குதல் அல்லது நிறுத்துதல் நடவடிக்கையின்போது, Robux, அனுபவ அணுகல், அனுபவம் சார்ந்த ஐட்டங்கள், விர்ச்சுவல் ஐட்டங்கள் உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல) சேவைகளில் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய மற்ற ஏதேனும் உள்ளடக்கத்திற்கான அணுகலை இடைநீக்குவது அல்லது நிறுத்துவதும் கூட நடக்கலாம். டிஜிட்டல் மில்லேனியம் பதிப்புரிமைச் சட்டத்தின்படி (“DMCA”) நீங்கள் தொடர்ந்து விதிமீறுபவர் என்று Roblox தனது விருப்புரிமையின்படி தீர்மானித்தாலும், Roblox உங்கள் கணக்கை நிறுத்தக்கூடும். சிறார் பயனரின் பாதுகாவலர் Roblox உதவிக் குழுவைத் தொடர்பு கொண்டு சிறாரின் கணக்கை நிறுத்துமாறு Roblox இடம் கோரலாம்.
- அறிவிப்பு மற்றும் மேல்முறையீடு. Roblox விதிமுறைகளை மீறியது தொடர்பாக அல்லது சட்ட அமலாக்கம் அல்லது பிற சட்டக் கோரிக்கைக்கான பதில்வினையாக, Roblox (i) உங்கள் கணக்கு அல்லது சேவைகளுக்கான அணுகலை இடைநீக்கினால் அல்லது நிறுத்தினால் அல்லது (ii) சேவைகளில் நீங்கள் வைத்திருக்கும் Robux, UGC அல்லது பிற உள்ளடக்கத்தை அகற்றினால் Roblox உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், அதோடு Roblox எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்க (“மேல்முறையீடு”) உங்களுக்கு ஒரு வாய்ப்பையும் கொடுக்கக்கூடும். மேல்முறையீட்டுச் செயல்முறையைத் தொடங்க,Roblox உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளவும். சம்பந்தப்பட்ட Roblox கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கு பார்க்கவும்.
- சேவைகளுக்கான அணுகல். சட்டங்களுக்கு இணங்குதல், பயனர்களைப் பாதுகாத்தல் அல்லது Roblox-இன் மதிப்பைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக, சட்டப்படி அவசியமானால் தவிர உங்களுக்கு எந்த அறிவிப்பையும் வழங்காமலும், பயனர்களுக்கு எந்தக் கடப்பாடும் இல்லாமலும், தனது விருப்புரிமையின்பேரில் சேவைகளை (அல்லது அவற்றின் எந்தப் பகுதியையும்) மாற்றுவதற்கு அல்லது இடைநீக்குவதற்கு Roblox-க்கு உரிமை உள்ளது.
Robux மற்றும் Roblox சந்தா
- “Robux” என்பது Roblox சேவைகளின்அதிகாரப்பூர்வ நாணயமாகும், சேவைகளில் விர்ச்சுவல் ஐட்டங்கள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) அல்லது “அனுபவங்கள்” என்று அழைக்கப்படும் இண்டராக்ட்டிவ் உள்ளடக்கத்திற்கான அணுகலைப் பெற அதைப் பயன்படுத்தலாம். Robux என்பவை உண்மையான நாணயத்திற்கு ஈடானவை அல்ல, அவை வட்டியைப் பெற்றுத் தராது, உண்மையான நாணயத்தில் அவற்றுக்கு சமமான மதிப்பும் கிடையாது. DevEx திட்டத்திற்கு விண்ணப்பித்து, ஏற்கப்பட்ட கிரியேட்டர்கள் தொடர்பான DevEx விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி தவிர பிற வகைகளில், Robux-ஐ உண்மையான நாணயம் எதற்கும் ஈடாக ரிடீம் செய்ய முடியாது, ஒரு பயனரின் Robux-க்குப் பரிமாற்றாக எதையும் வழங்க வேண்டிய பொறுப்பும் Roblox-க்கு கிடையாது.
- Robux-ஐப்பயன்படுத்துவதற்கான வரம்புக்குட்பட்ட உரிமம் . உண்மையான நாணயத்தில் Robux-க்கு சமமான மதிப்பு எதுவும் கிடையாது. கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4 அல்லது சேவைகளின் உங்கள் உபயோகத்தைப் பொறுத்துRobux-க்குப் பொருந்துவதாகக் கருதப்படும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் எதிலும், நீங்கள் Robux-ஐப் பெறும்போது அல்லது வாங்கும்போது, (i) சேவைகள் தொடர்பாக, (ii) உங்கள் தனிப்பட்ட பொழுதுபோக்கிற்காக மட்டும், (iii) பொருந்தக்கூடிய விதிமுறைகள் உட்பட, பொருந்தக்கூடிய Roblox விதிமுறைகளின் கீழ் Roblox அனுமதித்துள்ள வழிகளில்Robux-ஐப் பயன்படுத்துவதற்கான வரம்புக்குட்பட்ட, பிறருக்கு மாற்றிக்கொடுக்க முடியாத, திரும்பப்பெறக்கூடிய உரிமத்தைப் பெறும் தகுதியையே நீங்கள் பெறுகிறீர்கள். (i) நீங்கள் Roblox விதிமுறைகளை மீறினால், (ii) உங்கள் கணக்கு இடைநீக்கப்பட்டால் அல்லது நிறுத்தப்பட்டால், அல்லது (iii) இந்தப் பயனர் விதிமுறைகள் அல்லது சேவைகள் நிறுத்தப்பட்டால் Robux-ஐப் பயன்படுத்துவதற்கான உங்கள் வரம்புக்குட்பட்ட உரிமமானது முடிவடையலாம்.
-
Robux-ஐப்பெறுதல் மற்றும் பயன்படுத்துதல். பல வழிகளில் ஒன்றின் மூலம் சேவைகளில் Robux-ஐப் பெறலாம். ஒரு பயனர் பின்வரும் வழிகளில் Robux-ஐப் பெறலாம்: (i) Roblox இடம் இருந்து Robux-ஐ வாங்குவதன் மூலம் அல்லது பிற வழிகளில் பெறுவதன் மூலம்; (ii) பயனரின் சார்பாக மற்றொருவர் Robux-ஐ வாங்குவதன் மூலம்; (iii) ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு Robux தொகையை வழங்குகின்ற ஒரு மெம்பர்ஷிப்பை வாங்குவதன் மூலம் (கீழே பிரிவு 3f-இல் முழுவதுமாக விவரிக்கப்பட்டுள்ளபடி “Roblox சந்தா”); (iv) பிற பயனர்களுடன் விர்ச்சுவல் ஐட்டங்களை டிரேடிங் செய்துகொள்வதன் மூலம் (கீழே பிரிவு 4c-இல் விவரிக்கப்பட்டுள்ளபடி); அல்லது (v) Roblox அறிமுகப்படுத்தக்கூடிய பிற வழிகளில். கூடுதலாக, கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4-இல் இன்னும் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளபடி ஒரு கிரியேட்டர் Robux-ஐப் பெறலாம்.
Robux அல்லது விர்ச்சுவல் உள்ளடக்கத்தை சேவைகள்வழியாகவும், ஏதேனும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் உட்பட, இந்த Roblox விதிமுறைகளின் கீழ் வெளிப்படையாக Roblox அனுமதிக்கின்ற விதங்கள் தவிர பிற வழிகளில் நீங்கள் பயன்படுத்தவோ, பெறவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. அப்படிச் செய்ய ஏதேனும் முயற்சி செய்வது, Roblox விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கருதப்படும், பரிவர்த்தனை செல்லாததாகிவிடும், மேலும் உங்கள் கணக்கு மற்றும் Robux அல்லது விர்ச்சுவல் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமம் இடைநீக்கப்படும் அல்லது நிறுத்தப்படும் Robux அல்லது விர்ச்சுவல் உள்ளடக்கத்தை விற்பதற்கு, டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு, வாங்குவதற்கு அல்லது பிற வழியில் பயன்படுத்துவதற்குப் பயனர்களை அனுமதிக்கின்ற மூன்றாம் தரப்பு சேவைகளை Roblox அங்கீகரிக்காது அல்லது பொறுப்பேற்காது, மேலும் அப்படி பயனர் ஏதேனும் பயன்படுத்தினால் அது Roblox விதிமுறைகளை மீறியதாகும். இருப்பினும், ஒரு கணக்கின் மூலம் உருவாக்கப்பட்ட விர்ச்சுவல் உள்ளடக்கத்தின் விற்பனையில் இருந்து Robux-ஐப் பெறுவதற்கான உரிமை தொடர்பாக, தகுந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின்படி ஒரு கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்வது அனுமதிக்கப்படும். சேவைகளுக்கு வெளியே Robux அல்லது விர்ச்சுவல் உள்ளடக்கத்தை விற்பதை இந்த விதிவிலக்கு அனுமதிக்கவில்லை. தங்கள் சட்ட எல்லையில் அல்லது வசிக்கும் மாநிலத்தில் முதிர் வயதை அடைந்துள்ள பயனர்கள் மட்டுமே சேவைகளில் Robux-ஐ வாங்கவோ அல்லது உண்மையான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடவோ முடியும்.
- Robux என்பவை பணத்தைத் திரும்பப்பெற முடியாதவை. சட்டத்தால் அவசியமானால் தவிர, Robux-க்காக செய்யப்படும் பேமெண்ட்டுகள் அனைத்தும் இறுதியானவை மற்றும் திரும்பப்பெற முடியாதவை ஆகும்.
-
Robux மாற்றத்திற்கு உட்பட்டவையாகும். Roblox தனது விருப்புரிமையின்பேரில், Robux-இல் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்களைச் செய்யலாம். ஒரு பயனர் பெறக்கூடிய Robux அளவிற்கு வரம்பை அமைப்பது அல்லது Robux-ஐ வாங்குவதற்கான விலையைக் குறைப்பது போன்றவை இதில் அடங்கக்கூடும்.
Roblox விதிமுறைகளின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்புக்குட்பட்ட உரிமங்கள் தவிர, Robux-இல் மற்றும் அதற்கான எல்லா உரிமைகளையும் Roblox கொண்டுள்ளது மற்றும் தக்கவைத்துள்ளது. அறிவிப்பு, பேமெண்ட் அல்லது உங்களுக்கு எந்தக் கடப்பாடும் இல்லாமல், Robux-ஐப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமத்தில் மாற்றம் செய்தல், திரும்பப் பெறுதல் அல்லது நிறுத்துதல் இதில் அடங்கும். Robux அல்லது அவை கிடைக்கும் தன்மை அல்லது மதிப்பு தொடர்பாக Roblox உத்தரவாதங்கள் அல்லது வாரண்டிகள் எதையும் வழங்கவில்லை.
- சந்தாக்கள். கட்டண சந்தாக்கள் மூலம் (“Roblox சந்தா”) கூடுதல் பழங்களுக்கான அணுகலை Roblox உங்களுக்கு வழங்கலாம். Roblox சந்தாவை நீங்கள் வாங்குவதும் பயன்படுத்துவதும் Roblox சந்தா விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.
விர்ச்சுவல் உள்ளடக்கம், UGC சந்தாக்கள் மற்றும் Roblox Economy.
-
விர்ச்சுவல் உள்ளடக்கத்தைப் பெறுதல். Roblox மற்றும்/அல்லது கிரியேட்டர்கள் வழங்கும் “விர்ச்சுவல் ஐட்டங்களையும்” (உங்கள் அவதாருக்கான உடைகள் அல்லது டிஜிட்டல் ஐட்டங்கள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல)), “அனுபவத்திற்குள் கிடைக்கும் ஐட்டங்களையும்” (கேம் பாஸ்கள், சிறப்புத் திறன்கள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல)), பிற உள்ளடக்கத்தையும் (அனுபவம் மற்றும் தனிப்பட்ட சர்வர் அணுகல் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல)) (மொத்தமாக “விர்ச்சுவல் உள்ளடக்கம்” என்று குறிப்பிடப்படும்) சேவைகளில் மட்டுமே நீங்கள் பெறலாம். சேவைகளில் விர்ச்சுவல் உள்ளடக்கத்தைப் பெறுவது உங்கள் தனிப்பட்ட பொழுதுபோக்கிற்காக மட்டுமே, மேலும் பொருந்துமென்றால் ஏதேனும் கூடுதல் விதிமுறைகளில் பிற விதமாகக் குறிப்பிட்டால் தவிர, (i) உங்களுக்கும் Roblox நிறுவனத்திற்கும் அல்லது (ii) உங்களுக்கும் எந்தவொரு கிரியேட்டருக்கும் இடையே அது சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பந்தம் எதையும் உருவாக்குவதில்லை. விர்ச்சுவல் உள்ளடக்கம் நிஜ உலகில் சம மதிப்பு கொண்டதல்ல, மேலும் சேவைகளில் செய்யும் எந்தப் பரிவர்த்தனையின் அடிப்படையிலும் எந்தவொரு விர்ச்சுவல் உள்ளடக்கத்திலும் உள்ளடக்கத்திற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய அறிவுசார் உரிமைகள் எதையும் நீங்கள் பெறுவதில்லை.
நீங்கள் மார்க்கெட்பிளேஸ், அனுபவத்தின் விவரங்கள் பக்கம் அல்லது அனுபவத்திற்குள்ளான சூழலில் விர்ச்சுவல் உள்ளடக்கத்தைப் பெற Robux-ஐ செலவிடும்போது, Robux சேவைகளால் சேகரிக்கப்பட்டு, உங்கள் கணக்கின் பேலன்ஸில் இருந்து உடனடியாகக் கழிக்கப்படும். அத்தகைய டிரான்ஸ்ஃபர்கள் அனைத்தும் இறுதியானவை மற்றும் Roblox தனது கொள்கைகள் அல்லது நடைமுறைகள் மூலம் அனுமதித்தால் தவிர, அல்லது சட்டத்தின்படி அவசியமானால் தவிர பணம் திருப்பித் தரப்படாதவை மற்றும் மீட்க முடியாதவை ஆகும்.
- UGC சந்தாக்கள் என்பவை, பயனர்களுக்கு குறிப்பிட்ட சில கூடுதல் பலன்களை வழங்குவதற்காக ஒரு கிரியேட்டர் வழங்கும் தானாகப் புதுப்பிக்கப்படும் சந்தாக்களாகும். நீங்கள் ஒரு UGC சந்தாவை வாங்கும்போது, உங்கள் சந்தா தானாகப் புதுப்பிக்கப்படும் என்பதையும், நீங்கள் UGC சந்தாவை ரத்துசெய்யும் வரை அதற்கேற்ப தனது பேமெண்ட் வழங்குநர் மூலமாக Robloxஉங்கள் பேமெண்ட் முறையில் கட்டணம் விதிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். சந்தாக்கள் அமைப்புகள் பக்கத்திற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் UGC சந்தாவை ரத்துசெய்துகொள்ளலாம். உங்கள் UGC சந்தாவை நீங்கள் ரத்துசெய்தாலும், நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்திய நாட்கள் வரை அந்தப் பலன்களைப் பெற்று மகிழலாம். UGC சந்தாக்களின் பர்ச்சேஸ்கள் அனைத்தும் இறுதியானவை மற்றும் Roblox தனது கொள்கைகள் அல்லது நடைமுறைகள் மூலம் அனுமதித்தால் தவிர, அல்லது சட்டத்தின்படி அவசியமானால் தவிர பணம் திருப்பித் தரப்படாதவை மற்றும் பிறருக்க மாற்றித்தர முடியாதவை ஆகும்.
-
விர்ச்சுவல் உள்ளடக்கத்தையும் UGC சந்தாக்களையும் விற்பனை செய்தல்.
- பயனர்களுக்கு. Roblox சந்தாவை வைத்திருக்கும் பயனர்கள் குறிப்பிட்ட சில Roblox உருவாக்கிய விர்ச்சுவல் உள்ளடக்கங்களை சேவைகளில் மறுவிற்பனை செய்ய (“மறுவிற்பனை”) Roblox அனுமதிக்கிறது. ஒரு பயனர் மார்க்கெட்பிளேஸிற்குள் மட்டுமே அத்தகைய விர்ச்சுவல் உள்ளடக்கத்தின் மறுவிற்பனையில் ஈடுபடலாம். மறுவிற்பனைகள் அனைத்தும் இறுதியானவை, சட்டத்தால் அவசியமானால் தவிர திரும்பப்பெற முடியாதவை ஆகும். (விர்ச்சுவல் உள்ளடக்கத்தை எப்படி மறுவிற்பனை செய்வது என்பது பற்றிய விரிவான விளக்கத்திற்கு இங்கே பார்க்கவும்.)
- கிரியேட்டர்களுக்கு. ஒரு கிரியேட்டர் கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4-இல் மற்றும் UGC சந்தா பயன்பாட்டு விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி விர்ச்சுவல் உள்ளடக்கத்தையும் UGC சந்தாக்களையும் உருவாக்கி விற்பனை செய்யலாம்.
- விர்ச்சுவல் உள்ளடக்கத்தை டிரேடிங் செய்தல். Roblox சந்தாவை வைத்திருக்கும் பயனர்கள் குறிப்பிட்ட சில விர்ச்சுவல் உள்ளடக்கங்களை சேவைகளில் டிரேடிங் செய்ய (“டிரேடிங்”) Roblox அனுமதிக்கிறது. இந்த விர்ச்சுவல் உள்ளடக்கத்தை பிற விர்ச்சுவல் உள்ளடக்கங்களுக்காக அல்லது Robux மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கம் இரண்டையும் சேர்த்துப் பெறுவதற்காக டிரேடிங் செய்யலாம். சேவைகளில் பயனர்கள் Robux பரிமாற்றம் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு டிரேடிங்கில் ஈடுபடும்போது, அதற்காக ஒரு கட்டணத்தைப் பெற Roblox-க்கு உரிமையுள்ளது. இருப்பினும், டிரேடிங்கின் ஒரு பகுதியாகRobux எதுவும் பரிமாற்றிக்கொள்ளப்படவில்லை என்றால், அந்தப் பரிவர்த்தனை தொடர்பாக Roblox எந்தக் கட்டணத்தையும் பெறாது. (Roblox-இன் டிரேடிங் சிஸ்டம் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டணங்கள் பற்றிய விரிவான விளக்கத்திற்கு இங்கே பார்க்கவும்.)
- விர்ச்சுவல் உள்ளடக்கத்தை அகற்றுதல். தனது விருப்புரிமையின்பேரில் (அனுபவங்கள், விர்ச்சுவல் உள்ளடக்கம், UGC சந்தாக்கள், UGC உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல)) எந்தவொரு உள்ளடக்கத்தின் கிடைக்கும் தன்மையையும் இடைநீக்கம் செய்வதற்கு அல்லது சேவைகளில் இருந்தும் உங்கள் கணக்கில் இருந்தும் அகற்றுவதற்கு Roblox-க்கு உரிமையுள்ளது. அத்தகைய இடைநீக்கம் அல்லது அகற்றல் காரணமாக ஏற்படும் எந்த இழப்புகளுக்கும் எந்தப் பயனருக்கும் Roblox பொறுப்பாகாது, மேலும் சட்டப்படி அவசியமானால் தவிர, அகற்றப்பட்ட அல்லது இடைநீக்கப்பட்ட உள்ளடக்கத்திற்காக பயனர் செலவிட்ட Robux அல்லது பிற நிதிகள் எதையும் Roblox திருப்பியளிக்க வேண்டியதில்லை.
-
கட்டண அணுகல். ஒரு கிரியேட்டர் வழங்கும் கட்டண அணுகல் அனுபவங்களைப் பொறுத்தவரை, அவற்றை அணுகுவதற்கு (“கட்டண அணுகல்”) Robux அல்லது உள்ளூர் நாணயத்தில் ஒரு முறை பேமெண்ட் செய்ய வேண்டியது அவசியம். Robux-இல் கட்டண அணுகல் அனுபவங்களை Robux பயன்படுத்தி மட்டுமே வாங்க முடியும், மேலும் உள்ளூர் நாணயத்தில் கட்டண அனுபவங்களை உண்மையான நாணயத்தைப் பயன்படுத்தி மட்டுமே வாங்க முடியும். நீங்கள் ஒரு கட்டண அணுகல் அனுபவத்தை டெஸ்க்டாப்பில் உள்ளூர் நாணயத்தில் வாங்கலாம், அல்லது உங்கள் உள்ளூர் நாணயம் கிடைக்காவிட்டால USD-இல் வாங்கலாம். நீங்கள் உள்ளூர் நாணயத்தில் ஒரு கட்டண அணுகல் அனுபவத்தை வாங்கிய 48 மணிநேரத்திற்குள் அதற்கான பணத்தைத் திரும்ப வழங்கக் கோரலாம். Robux-இல் வாங்கப்படும் கட்டண அணுகல் அனுபவங்கள் அனைத்தும் இறுதியானவை மற்றும் Roblox தனது கொள்கைகள் அல்லது நடைமுறைகள் மூலம் அனுமதித்தால் தவிர, அல்லது சட்டத்தின்படி அவசியமானால் தவிர பணம் திருப்பித் தரப்படாதவை மற்றும் பிறருக்க மாற்றித்தர முடியாதவை ஆகும்.
- வரம்புக்குட்பட்ட உரிமம். ஒரு கட்டண அணுகல் அனுபவத்தை வாங்குவதன் மூலம், இந்த விதிமுறைகளுக்கு இணங்க, அந்த அனுபவங்களுக்கான ஒரு உரிமம் வழங்கப்படுகிறது. தனது முழு விருப்புரிமையின்பேரில் உங்கள் அணுகலை ரத்துசெய்யும் உரிமை Roblox-க்கு உள்ளது.
-
Roblox காமர்ஸ். சேவைகளில் உள்ள அனுபவங்களும் பிற அம்சங்களும் காமர்ஸ் வழங்கும் நிறுவனத்திற்கு உண்மையான நாணயத்தில் பணம் செலுத்தும் வசதி உட்பட (மொத்தமாக “காமர்ஸ் வழங்குனர் செயல்படுத்தல்(கள்)” என்று குறிப்பிடப்படும்), Roblox-க்கு வெளியே உள்ளவற்றை ஷாப்பிங் செய்தல், வாங்குதல் மற்றும்/அல்லது பெறுதல் ஆகிய வசதிகளை வழங்கலாம். இந்த விதிமுறைகளில் வரையறுக்கப்படாத, பெரிய எழுத்துகளில் உள்ள சொற்கள் Roblox அகராதியில் வரையறுக்கப்பட்டுள்ளன.
- சாதனம், வயது மற்றும் பிராந்தியம் சார்ந்த கட்டுப்பாடுகள். ஒரு காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தலை அணுக, நீங்கள் குறைந்தது 13 வயது நிறைந்தவராகவும் யுனைட்டெட் ஸ்டேட்ஸில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும், மேலும் காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தலலின் சில அம்சங்கள் சாதனத்தின் வகையின் அடிப்படையில் தகுதிபெறும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கலாம்.
-
காமர்ஸ் வழங்குநர்களிடம் இருந்து வாங்குதல்.
- காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தலில் நீங்கள் ஏதேனும் வாங்கத் தேர்வுசெய்தால் (“வாங்கு” அல்லது “ஷாப் செய்” பட்டன், விளம்பரம், “மேலும் அறிக” அல்லது பிற இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது பர்ச்சேஸ் முறைகளைப் பயன்படுத்தி வாங்குவது உட்பட), உங்கள் பர்ச்சேஸை நிறைவு செய்வதற்கு, மூன்றாம் தரப்பு ரீடெய்லர், இ-காமர்ஸ் சேவை, மார்க்கெட்பிளேஸ், பிராண்டு, டெவலப்பர் மற்றும்/அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இயக்குகின்ற செயலி அல்லது இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவீர்கள், தொடர்புகொள்வீர்கள் (மொத்தமாக "காமர்ஸ் வழங்குநர்" என்றும், அந்தச் செயலி அல்லது இணையதளம் "காமர்ஸ் வழங்குநர் இணையதளம்" என்றும் குறிப்பிடப்படும்). காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தை அணுக, பயன்படுத்த, அதில் பரிவர்த்தனை மேற்கொள்ள அல்லது பிற வழிகளில் அதனுடன் தொடர்புகொள்ள நீங்கள் தேர்வுசெய்தால், பொருந்தக்கூடிய மூன்றாம் தரப்பு சேவைகளை உங்களுக்குக் கிடைக்கும்படி செய்யுமாறு காமர்ஸ் வழங்குநரிடம் கேட்கிறீர்கள் என்று அர்த்தம்.
- காமர்ஸ் வழங்குநருடனனான உங்கள் பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. காமர்ஸ் வழங்குநர் இணையதளம் சேகரித்துச் செயலாக்குகின்ற தகவல்கள் உட்பட, காமர்ஸ் வழங்குநருடனான உங்கள் பரிவர்த்தனை மற்றும் காமர்ஸ் வழங்குநர் இணையதளத்திலான உங்கள் எல்லா செயல்பாடுகளையும் காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தல் அல்லது காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய, காமர்ஸ் வழங்குநர் அவசியமாக்கியிருக்கக் கூடிய விற்பனைக்கான விதிமுறைகள், விதிகள், கொள்கைகள், தனியுரிமை அறிக்கைகள் உள்ளிட்ட காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளே ("காமர்ஸ் வழங்குநர் விதிமுறைகள்") நிர்வகிக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தின் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகள் காமர்ஸ் வழங்குநரால் நிர்வகிக்கப்படுபவை என்பதால், எந்தவொரு பரிவர்த்தனையிலும் Roblox ஒரு தரப்பல்ல. பொருந்தக்கூடிய பரிவர்த்தனைகள் உட்பட காமர்ஸ் வழங்குநர் இணையதளம் தொடர்பான எந்தக் கிளைமும் காமர்ஸ் வழங்குநர் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவிற்கு, அத்தகைய கிளைம்களுக்கு Roblox பொறுப்பேற்காது. காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தைப் பயன்படுத்தும்போது அல்லது அணுகும்போது உங்கள் அல்லது உங்கள் சிறார் பிள்ளையின் (பொருந்துமென்றால்) நடத்தைக்கு நீங்களே பொறுப்பு என்பதையும், காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தை நீங்கள் அணுகினால் அல்லது பயன்படுத்தினால் காமர்ஸ் வழங்குநர் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்கி நடக்க வேண்டியது கட்டாயம் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த காமர்ஸ் விதிமுறைகளுக்கும் காமர்ஸ் வழங்குநர் விதிமுறைகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு இருந்தால், காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தில் நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு செயல்பாடு அல்லது பரிவர்த்தனை தொடர்பாகவும், காமர்ஸ் வழங்குநர் விதிமுறைகளே முற்றிலும் பொருந்தும்.
- “காமர்ஸ் தயாரிப்பு(கள்)” என்பது Roblox-க்கு வெளியே பயன்படுத்தி மகிழ்வதற்காக காமர்ஸ் வழங்குநரால் வழங்கப்படும் பொருட்கள், வர்த்தகப் பொருட்கள் அல்லது தயாரிப்புகள் மற்றும் சேவைகள் எதையும் குறிக்கும் (எ.கா. ஆடைகள், நேரலை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள், உணவு டெலிவரி சேவைகள் போன்றவை). காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தின் வழியாக வழங்கப்படும் காமர்ஸ் ஐட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை, எப்போது வேண்டுமானாலும் அவை முழுவதுமாக அல்லது பகுதியளவில் மாற்றப்படலாம், இடைநீக்கப்படலாம், முடக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம். காமர்ஸ் ஐட்டங்களின் செயல்திறனில் ஏதேனும் சிக்கல்கள், சமர்ப்பிக்கப்பட்ட ஏதேனும் ஆர்டர்கள், டெலிவரி சிக்கல்கள், பேமெண்ட் செயலாக்கம் அல்லது காமர்ஸ் ஐட்டங்கள் தொடர்பாக பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் உட்பட, காமர்ஸ் வழங்குநருடனான உங்கள் பரிவர்த்தனைகளுக்கு Roblox எந்தப் பொறுப்பு அல்லது கடப்பாட்டையும் ஏற்காது. காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் காமர்ஸ் ஐட்டங்களின் ஃபுல்பில்மெண்ட் உட்பட, எந்தவொரு பரிவர்த்தனையின் எல்லா அம்சங்களுக்கும் பொறுப்பேற்கும் தரப்பு காமர்ஸ் வழங்குநர் மட்டுமே என்பதை நீங்கள் புரிந்துகொண்ட ஏற்றுக்கொள்கிறீர்கள்.
-
வரிகள். பயனர்கள் விர்ச்சுவல் அனுபவத்தில் காமர்ஸ் வழங்குநரின் பிராண்டை நன்கு பார்த்துத் தெரிந்துகொள்ள உதவுகின்ற தனித்துவமான மற்றும் மனம் லயிக்கச்செய்யும் பிராண்டு அனுபவத்தை Roblox வழங்குகிறது. பிராண்டு இன்டராக்ஷன்(களுக்கான) அனுபவத்தை மட்டுமே Roblox வழங்குகிறது.
Roblox மார்க்கெட்பிளேஸாகவோ மார்க்கெட்பிளேஸ் ஆதரவுத் தரப்பாகவோ செயல்படவில்லை, மேலும் காமர்ஸ் தயாரிப்புகளின் பர்ச்சேஸ்கள், விற்பனைகள் அல்லது டெலிவரியைச் ("காமர்ஸ் வழங்குநர் பரிவர்த்தனைகள்") செயல்படுத்துவதில் ஈடுபடவில்லை. காமர்ஸ் தயாரிப்புகள் தொடர்பான காமர்ஸ் வழங்குநர் பரிவர்த்தனைகள் அனைத்தும் நேரடியாக காமர்ஸ் வழங்குநர் இணையதளம் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. Roblox Corporation நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேமெண்ட்டுகளைக் கையாள்வதோ, செயலாக்குவதோ அல்லது ஏற்பதோ, ரசீதுகளைச் சேகரிப்பதோ, விலைகளைத் தீர்மானிப்பதோ அல்லது எவ்விதத்திலும் இந்தக் காமர்ஸ் வழங்குநர் பரிவர்த்தனைகளை மேற்பார்வையிடுவதோ இல்லை. திருப்பியளித்தல், வாடிக்கையாளர் சேவை அல்லது தொடர்புடைய விசாரணைகள் அல்லது காமர்ஸ் தயாரிப்புகள் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் காமர்ஸ் வழங்குநருக்கே அனுப்பப்படும், அவை அவர்களின் பொறுப்பே ஆகும்.
தங்கள் தனித்தனி காமர்ஸ் வழங்குநர் இணையதளங்களை Roblox-ஐச் சாராமல், காமர்ஸ் வழங்குநர்களே சுயாதீனமாக இயக்குகிறார்கள. விற்பனையை நிறைவுசெய்தல் (எ.கா. பேமெண்ட் செயலாக்கச் சேவைகள், விலைகளை நிர்ணயித்தல், ஆர்டர்களைப் பெறுதல், திருப்பியளித்தல் அல்லது எக்ஸ்சேஞ்சில் உதவுதல்), இன்வென்ட்ரியை நிர்வகித்தல், பிரத்தியேகமாக்கப்பட்ட பிராண்டிங், வாடிக்கையாளர் சேவை, காமர்ஸ் தயாரிப்புகளின் ஃபுல்பில்மெண்ட் மற்றும் டெலிவரி ஆகியவையும் இந்தச் சுயாதீனத் தன்மையில் அடங்கும், ஆனால் இவை மட்டுமே அல்ல. காமர்ஸ் வழங்குநர் பரிவர்த்தனைகள் அனைத்தும் காமர்ஸ் வழங்குநருக்கும் பயனருக்கும் இடையே நேரடியாகச் செயலாக்கப்படுகின்றன.
இந்தக் காமர்ஸ் விதிமுறைகளின்கீழ் நடைபெறும் காமர்ஸ் தயாரிப்பு(களின்) விற்பனை மற்றும் காமர்ஸ் வழங்குநர் பரிவர்த்தனைகள் தொடர்பான விற்பனை, VAT, GST மற்றும் அதுபோன்ற வரிகள் ("வரிகள்") அனைத்தையும் செலுத்துவதற்கு காமர்ஸ் வழங்குநரே பொறுப்பாவார்.
- விர்ச்சுவல் ஐட்டங்கள். காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தல்கள் அனைத்துமே டிஜிட்டல் ட்வின் அல்லது மற்ற டிஜிட்டல் ஐட்டத்தை வழங்குவதில்லை. காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தில் செய்யப்பட்ட ஒரு பர்ச்சேஸஸில் டிஜிட்டல் ட்வின் அல்லது பிற ஐட்டமும் சேர்ந்து வருகிறது என்று காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தல் குறிப்பிட்டால், அந்த டிஜிட்டல் ட்வின்/ஐட்டம் விர்ச்சுவல் உள்ளடக்கம் ஆகும். காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தின் மூலம் காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தலில் விளம்பரம் செய்யப்பட்ட தொடர்புடைய மற்றும் தகுதிபெறும் காமர்ஸ் ஐட்ட(ங்களுக்கான) பர்ச்சேஸ் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று காமர்ஸ் வழங்குநர் உறுதிப்படுத்தினால் மட்டுமே, பொருந்தக்கூடிய விர்ச்சுவல் உள்ளடக்கத்திற்கான உரிமை அல்லது அதற்கான உரிமையை ரிடீம் செய்துகொள்வதற்கான வழி வழங்கப்படும். காமர்ஸ் வழங்குநர் விதிமுறைகள் அல்லது இந்தக் காமர்ஸ் விதிமுறைகள் அல்லது Roblox பயன்பாட்டு விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளவற்றுக்கு இணங்காமல் ஏதேனும் செயல்பாடுகள் நடைபெற்ற காரணத்திற்காக, காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தின் மூலம் நீங்கள் செய்த ஆர்டர் ரத்தானால் அல்லது திரும்பப்பெறப்பட்டால், பொருந்தக்கூடிய விர்ச்சுவல் உள்ளடக்கத்திற்கான உங்கள் உரிமையை மறுக்க அல்லது அதை அகற்ற Roblox-க்கு உரிமை உள்ளது. காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தல் வழியாக வழங்கப்படும் விர்ச்சுவல் உள்ளடக்கம் மாற்றத்திற்கு உட்பட்டது, எப்போது வேண்டுமானாலும் அவை முழுவதுமாக அல்லது பகுதியளவில் மாற்றப்படலாம், இடைநீக்கப்படலாம், முடக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம். வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, ஒவ்வொரு விர்ச்சுவல் உள்ளடக்கத்திலும் அதிகபட்சம் ஒன்று (1)மட்டுமே வழங்கப்படும். தகுதிபெறும் காமர்ஸ் ஐட்டதை(ங்களை) பல முறை வாங்குவதால், ஒரே விர்ச்சுவல் உள்ளடக்கம் பல எண்ணிக்கையில் கிடைக்காது.
- காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை. காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தல்கள் எதிலும் முழுமையாக அல்லது பகுதியளவில் எப்போது வேண்டுமானாலும் எங்கள் சொந்த விருப்புரிமையின்பேரில் மாற்றம் செய்ய, இடைநீக்க, அதற்கான அணுகலை முடக்க அல்லது தொடர்வதை நிறுத்த எங்களுக்கு உரிமை உள்ளது. தனது சொந்த விருப்புரிமையின்பேரில் எப்போது வேண்டுமானாலும் இந்த விதிமுறைகளில் மாற்றம் செய்ய Roblox-க்கு உரிமை உள்ளது.
- வாரண்டி பொறுப்புதுறப்பு. பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவில், எந்தவொரு காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தல், காமர்ஸ் வழங்குநர் இணையதளம் மற்றும் காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தின் மூலம் பர்ச்சேஸ் செய்வதற்குக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ள அல்லது காமர்ஸ் வழங்குநரிடம் இருந்து பெறப்பட்ட காமர்ஸ் ஐட்டங்கள் தொடர்பாக, வர்த்தகத்திற்கு ஏற்ற தன்மை, குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும் தன்மை மற்றும் திருப்திகரமான தரம் குறித்த மறைமுக வாரண்டிகள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல), வெளிப்படையான அல்லது மறைமுகமான, சட்டப்பூர்வமான அல்லது பிற வகையிலான, அந்த வகையான அல்லது தன்மை கொண்ட எந்தவொரு மற்றும் அனைத்து வாரண்டிகளையும் ROBLOX வெளிப்படையாகப் பொறுப்புதுறக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். காமர்ஸ் வழங்குநரால் கிடைக்கச் செய்யப்பட்டுள்ள அல்லது காமர்ஸ் வழங்குநர் இணையதளத்தில் வாங்கப்பட்ட காமர்ஸ் ஐட்டங்களுக்கான பரிவர்த்தனைகள் மற்றும் அவற்றின் ஃபுல்பில்மெண்ட்டுக்கு காமர்ஸ் வழங்குநரே பொறுப்பாவார், அத்தகைய காமர்ஸ் ஐட்டங்களின் டிசைன், உற்பத்தி, வழங்கல் அல்லது டெலிவரியில் ROBLOX-க்கு ஈடுபாடு எதுவுமில்லை என்பதை நீங்கள் புரிந்துகொண்ட ஏற்றுக்கொள்கிறீர்கள்.
- கடப்பாட்டிற்கான வரம்பு. பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவில், எந்தவொரு காமர்ஸ் வழங்குநர் செயல்படுத்தல், காமர்ஸ் வழங்குநர் இணையதளம், காமர்ஸ் ஐட்டங்கள் அல்லது இந்தக் காமர்ஸ் விதிமுறைகளில் இருந்து அல்லது அவை தொடர்பாக எழும் எந்தவொரு நேரடியான அல்லது மறைமுகமான, பிரத்தியேகமான, தற்செயலான, உதாரணமான, விளைவான எந்த இழப்பு, சேதம் அல்லது எந்த வகையான காயம், அல்லது புலனாகாத பிற இழப்புகளுக்கும் எந்தச் சூழ்நிலையிலும் ROBLOX பொறுப்பாக இருக்காது, அவை ஒப்பந்தத்தில், தீங்கு, கண்டிப்பான கடப்பாடு, சட்டப்பூர்வ அல்லது பிற ஏதேனும் சட்ட அல்லது பிற தகுந்த கோட்பாடுகளில் இருந்து எழுந்தாலும், இல்லாவிட்டாலும் இது பொருந்தும்.
-
பேமெண்ட்டுகள் மற்றும் பணம் திரும்ப வழங்கல்கள்.
- பொது. தங்கள் சட்ட எல்லையில் அல்லது வசிக்கும் மாநிலத்தில் முதிர் வயதை அடைந்துள்ள பயனர்கள் மட்டுமே சேவைகளில், Robux அல்லது Roblox சந்தா அல்லது UGC சந்தாக்களை வாங்குவது போன்ற நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம்.
-
பயனர் பொறுப்புகள். Robux, Roblox சந்தா அல்லது ஒரு UGC சந்தாவை நீங்கள் வாங்கும்போது, நீங்கள் (அல்லது பொருந்தினால் உங்கள் பாதுகாவலர்) தேர்ந்தெடுத்த உங்கள் பேமெண்ட் முறையைப் பயன்படுத்த உங்களுக்கு உரிமை உள்ளது என்றும், பொருந்தக்கூடிய பரிவர்த்தனையை நிறைவுசெய்வதற்குப் போதுமான கிரெடிட் உங்கள் பேமெண்ட் முறையில் உள்ளது என்றும் நீங்கள் தெரிவித்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள. மேலும், பொருந்தக்கூடிய ஏதேனும் கூடுதல் விதிமுறைகளை நீங்கள் படித்துவிட்டீர்கள் மற்றும் அவற்றுக்குக் கட்டுப்பட ஒப்புக்கொள்கிறீர்கள் என்றும், தேர்ந்தெடுத்த பேமெண்ட் முறையை வழங்குதல் உட்பட (அனால் அது மட்டுமே அல்ல) சேவைகளில் மேற்கொள்ளப்படும் ஏதேனும் நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக நீங்கள் வழங்கும் எந்தவொரு தகவலும், அந்த நிதிப் பரிவர்த்தனைக்கான பொருந்தக்கூடிய பேமெண்ட் சேவை வழங்குநர் குறிப்பிட்டுள்ளபடி தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
- உங்கள் அனுமதியில்லாமல் உங்கள் கணக்கிற்கான அணுகலை யாரோ பெற்றுள்ளார்கள் அல்லது பயன்படுத்தியுள்ளார்கள் என்று நீங்கள் நம்பினால், Roblox உதவிக் குழுவைத் தொடர்புகொண்டு Roblox-க்கு நீங்கள் கூடிய விரைவில் தெரிவிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத கட்டணங்கள் மேற்கொள்ளப்பட்ட எந்தக் கணக்கையும் அல்லது இடைநீக்க அல்லது Robux-ஐ வாங்குதல், டிரேடிங்கில் ஈடுபடுதல், மற்றும்/அல்லது விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் UGC சந்தாக்களை வாங்குதல் ஆகிய செயல்களைச் செய்வதற்கான கணக்கின் திறனைக் கட்டுப்படுத்த Roblox-க்கு உரிமை உள்ளது. (கீழே உள்ள அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் என்பதைப் பார்க்கவும்.)
- அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள். உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு, PayPal அல்லது Google Play கணக்கில் சேவைகள் தொடர்பாக நீங்கள் அங்கீகரிக்காத கட்டணங்களை நீங்கள் கவனித்தால், உடனடியாக Roblox உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளவும். உங்கள் அனுமதியின்றி அந்தக் கட்டணங்கள் விதிக்கப்பட்டதாக நீங்கள் நம்பினால் உடனடியாக Roblox-க்குத் தெரிவிக்கவும். உங்கள் பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு உரிய நேரத்திற்குள் உதவுவதே எங்கள் குறிக்கோள் ஆகும். ஏதேனும் கட்டணங்கள் பற்றி நீங்கள் உங்கள் பேமெண்ட் பிராசசரரிடம் நேரடியகப் புகாரளித்தால், பேமெண்ட் வழங்குநரின் புகார் செயல்முறையின் கீழ் உள்ள தடைகளின் காரணமாக, ஏதேனும் பணம் திரும்பப்பெறுதல் தொடர்பாக Roblox வழங்கக்கூடிய உதவியில் Roblox-க்குக் கட்டுப்பாடுகள் இருக்கலாம். மோசடி மற்றும் பிற தீங்குகளில் இருந்து Roblox மற்றும் பயனர்களைப் பாதுகாப்பதற்காக, அங்கீகரிக்கப்படாத கட்டணங்கள் மேற்கொள்ளப்பட்ட எந்தக் Roblox கணக்கையும் இடைநீக்க அல்லது Robux-ஐ வாங்குதல், டிரேடிங்கில் ஈடுபடுதல், மற்றும்/அல்லது விர்ச்சுவல் உள்ளடக்கத்தை வாங்குதல் ஆகிய செயல்களைச் செய்வதற்கான கணக்கின் திறனைக் கட்டுப்படுத்த Roblox-க்கு உரிமை உள்ளது. Roblox-இன் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பை Roblox உங்களுக்கு வழங்கக்கூடும். மேல்முறையீடு செயல்முறை பற்றியமேலும் தகவல்களுக்கு, மேலே உள்ள பயனர் விதிமுறைகளின் பிரிவு 2-ஐப் பார்க்கவும்.
- விலை மற்றும் வரி. நீங்கள் Roblox இடம் இருந்து Robux, Roblox சந்தா, UGC சந்தா அல்லது கட்டண அணுகலை உள்ளூர் நாணயத்தில் வாங்கும்போது, நீங்கள் செலுத்த வேண்டிய விலை என்பது, வாங்கும் சமயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலை, உங்கள் பர்ச்சேஸிற்கு Roblox மதிப்பிடும் பொருந்தக்கூடிய அனைத்து விற்பனை மற்றும்/அல்லது பயன்பாட்டு வரிகள், மதிப்புக்கூட்டு வரி (“VAT”) அல்லது சரக்கு மற்றும் சேவைகள் வரி (“GST”) ஆகியவற்றின் கூடுதலாகும் ("வாங்கும் விலை"). U.S. மற்றும் கனடாவில் வாங்குபவர்களுக்கு, காண்பிக்கப்பட்ட விலையுடன் பொருந்தக்கூடிய விற்பனை வரி தனியாகக் குறிப்பிடப்பட்டு சேர்க்கப்படும; VAT அல்லது GST-க்கு Roblox பதிவுசெய்துள்ள மற்ற நாடுகளில் வாங்கும்போது, வாங்கும் சமயத்தில் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, வாங்குதல் விலையானது அந்தப் பகுதியில் பொருந்தக்கூடிய விகிதத்தில் VAT அல்லது GST வரியையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
அறிவுசார் சொத்து மற்றும் UGC.
- Roblox IP. இடைமுகங்கள், கிராஃபிக்ஸ் (கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2-இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி Roblox கிளாசிக் அவதார்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்கள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல)), வர்த்தகமுத்திரைகள், டிசைன்கள், தகவல்கள், கலைப் படைப்புகள், தரவு, குறியீடு, தயாரிப்புகள், மென்பொருள் மற்றும் சேவைகளின் பிற எல்லாக் கூறுகள், அவற்றுக்கான உரிமைகள் மற்றும் தருவிப்புப் பொருட்கள் உட்பட, (“Roblox அறிவுசார் சொத்து” அல்லது “Roblox IP”) அனைத்தும் சட்டம் மற்றும் Roblox விதிமுறைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளன. Roblox IP அனைத்தும் Roblox மற்றும் Roblox-இன் உரிமதாரர்களின் சொத்துக்களாகும். Roblox IP என்பதில் கிரியேட்டர் விதிமுறைகளின் கீழ் கிரியேட்டர்கள் Roblox-க்கு உரிமம் வழங்கிய UGC அனைத்தும் உள்ளடங்கும். Roblox விதிமுறகள் மற்றும் பொருந்தக்கூடிய ஏதேனும் கூடுதல் விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டபடி தவிர, ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் உரிமையாளரிடம் இருந்து தனியாக அனுமதி பெறாதபட்சத்தில், நீங்கள் சேவைகளில் உள்ள Roblox IP-ஐப் பயன்படுத்தக் கூடாது. இந்த Roblox விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளில் எங்கேனும் வழங்கப்படாத Roblox IP-இல் மற்றும் அதற்கு எல்லா உரிமைகளும் Roblox-க்கு உள்ளது.
-
UGC. சேவைகளில் UGC-ஐ உருவாக்க, பதிவேற்ற, சமர்ப்பிக்க, வெளியிட, காட்சிப்படுத்த, ஜெனரேட் செய்ய, அனுப்ப அல்லது பிற வழிகளில் கிடைக்கச் செய்ய (“வெளியிடுதல்”) அனுமதிக்கும் பல்வேறு மன்றங்கள், அம்சம், மென்பொருள், மற்றும் பிற இன்டராக்ட்டிவ் அம்சங்கள் சேவைகளில் உள்ளன. இந்த அம்சங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2-ஐயும் பார்க்கவும்.
சேவைகளில் வெளியிடப்பட்ட UGC எதுவும் Roblox சமூகத் தரநிலைகள் உட்பட Roblox விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும், மேலும் அவை சட்டவிரோதமானவையாக, மோசடியானதாக, ஏமாற்றுவதாக, ஆபாசமானதாக, அச்சுறுத்துவதாக, இழிவுபடுத்துவதாக, தனியுரிமையை அத்துமீறுவதாக, அறிவுசார் சொத்து உரிமைகளை மீறுவதாக அல்லது பிற வழிகளில் மூன்றாம் தரப்பினருக்கு தீங்கு விளைவிப்பதாக அல்லது ஆட்சேபிக்கத்தக்கதாக இருக்கக்கூடாது, மேலும் மென்பொருள் வைரஸ்கள், வணிகரீதியான கோரிக்கைகள், சங்கிலித் தொடர் கடிதங்கள், மொத்த அஞ்சல்கள் அல்லது எந்த வடிவிலுமான "ஸ்பேம்" ஆகியவற்றைக் கொண்டிருக்கக் கூடாது.
Roblox-இன் தனியுரிமைக் கொள்கை அல்லது பொருந்தக்கூடிய ஏதேனும் கூடுதல் விதிமுறைகளில் வேறு விதமாக விவரிக்கப்பட்டிருந்தால் தவிர, (i) நீங்கள் வெளியிடுகின்ற UGC எதுவும் ரகசியத்தன்மை அற்றதாகவும் உரிமையுடைமை அற்றதாகவுமே கருதப்படும் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் சேவைகளை இயக்குவது, வழங்குவது, பிரபலப்படுத்துவது அல்லது மேம்படுத்துவது தொடர்பாக, மெஷின் லேர்னிங் மற்றும் அது தொடர்பான மாடல்களுக்குப் பயிற்சியளிப்பது தொடர்பாக உட்பட (ஆனால் அது மட்டுமே அல்ல) எந்த வணிக நோக்கத்திற்காகவும், சேவைகளில் உள்ள அத்தகைய UGC மற்றும் ஏதேனும் தொடர்புடைய இன்டராக்ஷன் தரவை, உலகம் முழுவதும், எந்த மீடியாவிலும் வழங்க, பயன்படுத்த, நகலெடுக்க, மறுஉருவாக்கம் செய்ய, மாற்றியமைக்க, தகுந்தபடி மாற்ற, வெளியிட, மொழிபெயர்க்க, இயக்க, அதிலிருந்து தருவிப்புப் பொருட்களை உருவாக்க, த்ரூ-டு-தி-ஆடியன்ஸ் முறையில் உட்பட மக்களுக்குத் தெரிவிக்க, பொதுமக்கள் மத்தியில் காண்பிக்க அல்லது காட்சிப்படுத்த (ii) பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத, நிரந்தரமான, திரும்பப்பெற முடியாத மற்றும் முழுவதும் உப உரிமம் வழங்கப்படக்கூடிய உரிமையை Roblox-க்கு நீங்கள் வழங்குகிறீர்கள , இருப்பினும் Roblox-இன் தனியுரிமைக் கொள்கைக்கு இணக்கமான முறையில் மட்டுமே Roblox உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்.
UGC-ஐ வெளியிடும் நேரத்தில், (i) UGC-இன் மீதான அனைத்து உரிமைகளும் உங்களுக்கு உள்ளது அல்லது அவை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும்; (ii) UGC துல்லியமானது என்றும், அது மோசடியானதோ ஏமாற்றுவதாகவோ இல்லை என்றும்; (iii) UGC இந்த விதிமுறைகள், பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டங்களை மீறவில்லை, அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பின் அறிவுசார் சொத்து, தனியுரிமை மற்றும் பிரபலப்படுத்துதல் தொடர்பான உரிமைகளை மீறவில்லை என்றும், அந்தவொரு நபருக்கோ அமைப்புக்கோ இது காயத்தை ஏற்படுத்தாது என்றும் நீங்கள் தெரிவித்து உறுதியளிக்கிறீர்கள். குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நீங்கள் சேவைகளில் வெளியிடுகின்ற அல்லது அவற்றில் அல்லது அவற்றின் மூலம் கிடைக்கச் செய்கின்ற UGC-ஐ சேவைகளின் பிற பயனர்கள் நகலெடுக்கவோ பயன்படுத்தவோ மாட்டார்கள், சேவைகளுக்கு வெளியே அவற்றைப் பற்றிப் பேச மாட்டார்கள் என்று Roblox உத்தரவாதமளிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் . அத்தகைய உபயோகத்திற்காக UGC-ஐ சமர்ப்பிக்க உங்களுக்கு உரிமை இல்லையென்றால், அவற்றை சமர்ப்பிப்பது உங்களுக்குக் கடப்பாட்டை ஏற்படுத்தக்கூடும். நீங்களோ எந்தவொரு மூன்றாம் தரப்போ வெளியிடும் UGC எதற்கும் Roblox எந்தப் பொறுப்பையும் ஏற்காது, கடப்பாட்டையும் ஏற்காது. தனது சேவைகளில் உள்ள UGC எதையும் கண்காணிக்க, மாற்றியமைக்க, அதற்கான அணுகலை முடக்க அல்லது அகற்ற Roblox-க்கு உரிமை உள்ளது, ஆனால் கடப்பாடு இல்லை, உங்களுக்கோ எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கோ அறிவிப்போ கடப்பாடோ இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் இந்த உரிமைகளை அது பயன்படுத்தலாம்.
- அனுபவத்திற்குள்ளானUGC. சில அனுபவங்கள் அனுபவத்திற்குள் UGC-ஐவெளியிட அந்த அனுபவத்தின் பயனர்களை அனுமதிக்கும். ஓர் அனுபவத்திற்குள்தனியாக UGC-ஐ வெளியிடும் பயனர்கள், மெஷின் லேர்னிங் மற்றும் தொடர்புடைய மாடல்களின் பயிற்சி, மேம்பாடு மற்றும் உபயோகம் தொடர்பாக உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல), எந்த நபருக்கோ தரப்புக்கோ ராயல்டிகள் அல்லது பிற ஈட்டுத்தொகை எதுவும் வழங்க வேண்டிய கடப்பாடு உட்பட எந்தக் கடப்பாடும் இல்லாமல், எந்த விதத்திலும் அல்லது மீடியாவிலும் UGC-ஐப் பயன்படுத்தவும், சொந்த ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் உலகளாவிய, நிரந்தரமான, ராயல்டி இல்லாத, திரும்பப்பெற முடியாத உரிமையையும், பிரத்தியேகமற்ற உரிமத்தையும் Roblox மற்றும் பொருந்தக்கூடிய அனுபவத்தின்கிரியேட்டர் ஆகிய இருவருக்கும் இதன் மூலம் வழங்குகிறார்கள். அத்தகைய பயனர்கள் (கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2-இல் வரையறுக்கப்பட்டபடி) ஒரு மாற்றம் செய்யப்பட்ட கிளாசிக் அவதாரை உருவாக்கினால், இதன்மூலம் அந்தப் பயனர் அந்த மாற்றம் செய்யப்பட்ட கிளாசிக் அவதாரிலான உரிமை, சொந்தம், ஆதாயம் அனைத்தையும் Roblox-க்கு ஒப்படைப்பதாக ஒப்புக்கொள்கிறார்; இதற்கு மாறாக எந்த நபருக்கும் ராயல்டிகளையோ பிற ஈட்டுத்தொகைகளையோ வழங்க வேண்டிய கடப்பாடு உட்பட, எந்தக் கடப்பாடும் இல்லாமல் (இந்த Roblox விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர), அந்த மாற்றம் செய்யப்பட்ட கிளாசிக் அவதாரை சேவைகளில் பயன்படுத்திக் கொள்ளவும் சொந்த ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் பிரத்தியேகமற்ற உரிமத்தை பயனருக்கும் கிரியேட்டருக்கும் Roblox வழங்குகிறது.
-
பதிப்புரிமை மீறல் / டிஜிட்டல் மில்லேனியம் பதிப்புரிமைச் சட்டம் (DMCA).
-
அறிவிப்பு. மற்றவர்களின் அறிவுசார் சொத்து உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம், நீங்களும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் ஒரு பதிப்புரிமை உரிமையாளர் அல்லது பதிப்புரிமை உரிமையாளரின் ஏஜென்டாக இருந்து, சேவைகளில் இருக்கும் ஏதேனும் உள்ளடக்கம் உங்கள் பதிப்புரிமைகளை மீறுவதாக நம்பினால், copyright_agent@roblox.test1709.icu என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது Legal, 3150 S. Delaware St., San Mateo, CA 94403 என்ற முகவரியில் அஞ்சல் மூலம் எங்கள் பதிப்புரிமை ஏஜென்ட்டைத் தொடர்புகொண்டு DMCA-க்கு இணங்க ஓர் அறிவிப்பை நீங்கள் சமர்ப்பிக்கலாம். (888) 858-2569 என்ற எண்ணில் தொலைபேசியிலும் எங்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம். பதிப்புரிமை உரிமையாளர் 13 வயதுக்குக் கீழ் உள்ளவராக இருந்தால், DMCA அறிவிப்பை அவரது பெற்றோர், பாதுகாவலர் அல்லது வேறு வயது நிறைந்த பிரதிநிதியே சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் அறிவிப்பில் பின்வரும் தகவல்கள் கட்டாயம் இருக்க வேண்டும்:
- பதிப்புரிமை அல்லது மீறப்படுகின்ற பிற உரிமையின் உரிமையாளர் சார்பாகச் செயல்பட அங்கீகரிக்கப்பட்ட நபரின் எலக்ட்ரானிக் அல்லது உண்மையான கையொப்பம்;
- பதிப்புரிமையால் பாதுகாக்கப்படும் படைப்பு அல்லது மீறப்பட்டுள்ளதாக நீங்கள் கூறும் அறிவுசார் சொத்து உரிமையின் விளக்கம்;
- மீறுவதாக நீங்கள் கூறும் மெட்டீரியலின் விளக்கம் மற்றும் அது எங்கே உள்ளது என்ற விவரம்;
- உங்கள் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி;
- அந்த மெட்டீரியல்களைப் பயன்படுத்த பதிப்புரிமை உரிமையாளர், அவரது ஏஜென்ட் அல்லது சட்டம் அங்கீகரிக்கவில்லை என்று நல்ல எண்ணத்தில் நீங்கள் நம்புவதாகக் குறிப்பிடும் ஓர் அறிக்கை; மற்றும்
- உங்கள் அறிவிப்பில் இருக்கும் மேற்கூறிய தகவல்கள் துல்லியமானவை என்றும், துல்லியமின்மைக்கு தண்டனை உண்டு என்ற நிபந்தனையின் கீழ், நீங்கள் தான் பதிப்புரிமை அல்லது அறிவுசார் சொத்து உரிமையாளர் அல்லது பதிப்புரிமை அல்லது அறிவுசார் சொத்து உரிமையாளர் அல்லது உரிமையாளர் சார்பாகச் செயல்பட அங்கீகரிக்கப்பட்டவர் என்றும் குறிப்பிடும் ஓர் அறிக்கை.
இந்தப் பிரிவில் உள்ள எல்லாத் தேவைப்பாடுகளுக்கும் நீங்கள் இணங்கத் தவறினால், உங்கள் DMCA அறிவிப்பு செல்லாததாகிவிடும் என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள். மேலும் விவரங்களுக்கு 17 U.S.C. § 512(c)(3)-ஐப் பார்க்கவும். நீங்கள் வழங்கக்கூடிய ஏதேனும் தொடர்புத் தகவல் உட்பட, உங்கள் DMCA அறிவிப்பின் ஒரு நகலை, புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்திற்குப் பொறுப்பான நபருக்கு நாங்கள் அனுப்பக்கூடும்.
- எதிர் அறிவிப்பு. ஒரு DMCA அறிவிப்பின் விளைவாக உங்கள் உள்ளடக்கம் அகற்றப்படும்பட்சத்தில் அல்லது முடக்கப்படும்பட்சத்தில், உங்கள் உள்ளடக்கம் மீறலில் ஈடுபடவில்லை என்று, அல்லது மெட்டீரியலை உங்கள் உள்ளடக்கத்தில் வெளியிடவும் பயன்படுத்தவும் பதிப்புரிமை உரிமையாளர் அல்லது பதிப்புரிமை உரிமையாளரின் ஏஜென்ட்டிடம் இருந்து அல்லது சட்டப்படி முறையான அங்கீகரிப்பு உங்களிடம் இருக்கிறது என்று நீங்கள் நம்பினால், copyright_agent@roblox.test1709.icu என்ற முகவரியில் மின்னஞ்சல் மூலமோ Legal, 3150 S. Delaware St., San Mateo, CA 94403 என்ற முகவரியில் அஞ்சல் மூலமோ எங்கள் பதிப்புரிமை ஏஜென்ட்டுக்கு நீங்கள் எதிர் அறிவிப்பை அனுப்பலாம். 13 வயதுக்குக் கீழ் உள்ள பயனரின் சார்பாகச் சமர்ப்பிக்கப்படும் ஏதேனும் எதிர் அறிவிப்பை அவரது பெற்றோர், பாதுகாவலர் அல்லது வேறு வயது நிறைந்த பிரதிநிதியே சமர்ப்பிக்க வேண்டும். எங்கள் பதிப்புரிமை ஏஜென்ட் ஓர் எதிர் அறிவிப்பைப் பெறும்போது, நீங்கள் வழங்கியிருக்கக்கூடிய ஏதேனும் தொடர்புத் தகவல் உட்பட, எதிர் அறிவிப்பின் ஒரு நகலை முதலில் புகாரளித்த தரப்புக்கு நாங்கள் அனுப்பக்கூடும், அதோடு அகற்றப்பட்ட உள்ளடக்கத்தை நாங்கள் 10 வணிக தினங்களில் மீண்டும் இடம்பெறச் செய்வோம் அல்லது முடக்கத்தை நிறுத்துவோம் என்று அந்தத் தரப்புக்குத் தெரிவிப்போம் உள்ளடக்கத்தை வழங்கியவருக்கு எதிராக நீதிமன்ற ஆணையைப் பெறுவதற்காக பதிப்புரிமை உரிமையாளர் நடவடிக்கை தாக்கல் செய்யாதவரை, எதிர் அறிவிப்பை நாங்கள் பெற்ற பிறகு 10 முதல் 14 வணிக தினங்களுக்குள் எங்கள் சொந்த விருப்புரிமையின்பேரில், அகற்றப்பட்ட உள்ளடக்கம் மீண்டும் இடம்பெறச் செய்யப்படலாம் அல்லது அதற்கான அணுகல் மீண்டும் வழங்கப்படலாம்.
-
-
வர்த்தகமுத்திரை மீறல். நீங்கள் ஒரு வர்த்தகமுத்திரை உரிமையாளராக அல்லது வர்த்தகமுத்திரை உரிமையாளரின் ஏஜென்ட்டாக இருந்து, சேவைகளில் இருக்கும் ஏதேனும் உள்ளடக்கம் உங்கள் பதிவுசெய்யப்பட்ட வர்த்தகமுத்திரை(களை) மீறுவதாக நம்பினால், trademark_agent@roblox.test1709.icu என்ற முகவரியில் மின்னஞ்சல் மூலம் அல்லது Legal, 3150 S. Delaware St., San Mateo, CA 94403 என்ற முகவரியில் அஞ்சல் மூலம் எங்கள் வர்த்தகமுத்திரை ஏஜென்ட்டைத் தொடர்புகொண்டு வர்த்தகமுத்திரை மீறல் அறிவிப்பைச் சமர்ப்பிக்கவும். நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளும் போது, உங்கள் அறிவிப்பில் பின்வரும் தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்:
- வர்த்தகமுத்திரை உரிமையாளர் சார்பாகச் செயல்பட அங்கீகரிக்கப்பட்ட நபரின் எலக்ட்ரானிக் அல்லது உண்மையான கையொப்பம்;
- வர்த்தகமுத்திரை பதிவுசெய்யப்பட்டுள்ள நாடு, பொருந்துமென்றால் பதிவு எண் உட்பட, மீறப்பட்டுள்ளதாக நீங்கள் கூறும் வர்த்தகமுத்திரை உரிமையின் விளக்கம்;
- மீறுவதாக நீங்கள் கூறும் உள்ளடக்கத்தின் விளக்கம் மற்றும் அது எங்கே உள்ளது என்ற விவரம்;
- உங்கள் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி;
- அத்தகைய உள்ளடக்கத்தைப் பயன்படுத்த வர்த்தமுத்திரை உரிமையாளர், அவரது ஏஜென்ட் அல்லது சட்டம் அங்கீகரிக்கவில்லை என்று நல்ல எண்ணத்தில் நீங்கள் நம்புவதாகக் குறிப்பிடும் ஓர் அறிக்கை; மற்றும்
- உங்கள் அறிவிப்பில் இருக்கும் மேற்கூறிய தகவல்கள் துல்லியமானவை என்றும், துல்லியமின்மைக்கு தண்டனை உண்டு என்ற நிபந்தனையின் கீழ், நீங்கள் தான் வர்த்தகமுத்திரை உரிமையாளர் அல்லது வர்த்தகமுத்திரை உரிமையாளர் சார்பாகச் செயல்பட அங்கீகரிக்கப்பட்டவர் என்றும் குறிப்பிடும் ஓர் அறிக்கை.
பயனர்களுக்கும் வர்த்தகமுத்திரை உரிமைகளின் உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்படும் சச்சரவுகளில் இடையீடு செய்யும் நிலையில் Roblox இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். இருப்பினும், அறிவுசார் சொத்து உரிமைகளை நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம், செல்லுபடியான வர்த்தகமுத்திரை மீறல் அறிக்கையைப் பெறும்போது, நாங்கள் விசாரித்து வர்த்தகமுத்திரை மீறலில் ஈடுபடும் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றக்கூடும். வர்த்தகமுத்திரை மீறலைப் புகாரளிக்க, நீங்கள் பதிவுசெய்யப்பட்ட வர்த்தகமுத்திரையின் உரிமையாளராக அல்லது அவர்களின் ஏஜென்ட்டாக இருக்க வேண்டும், நிலுவையில் உள்ள வர்த்தகமுத்திரை விண்ணப்பங்கள் போதுமானதல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.
- தொடர் மீறல் தொடர்பான கொள்கை. Roblox-இன் அறிவுசார் சொத்து தொடர்பான கொள்கை பின்வருமாறு: (i) மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் சொத்து உரிமைகளை மீறுவதாக Roblox அறிகின்ற அல்லது செல்லுபடியான பதிப்புரிமை உரிமையாளர் அல்லது அவரது ஏஜென்ட் சமர்ப்பித்த செல்லுபடியான DMCA அறிவிப்பில் அடையாளம் காணப்பட்டுள்ள உள்ளடக்கத்தை அகற்றுதல் அல்லது அதற்கான அணுகலை முடக்குதல்; மற்றும தகுந்த சூழ்நிலைகளில், மூன்றாம் தரப்பினரின் பதிப்புரிமைகள் அல்லது பிற அறிவுசார் சொத்து உரிமைகளை மீண்டும் மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் மீறுகின்ற ஏதேனும் பயனரின் கணக்குகளை இடைநீக்குதல் அல்லது நிறுத்துதல் மற்றும் அவர்களுக்குள்ள சேவைகளுக்கான அணுகலை முடக்குதல்.
- கருத்துகள். சேவைகள் குறித்து அல்லது அவை தொடர்பாக நீங்கள் வழங்கக்கூடிய ஏதேனும் கருத்துகள், கருத்துரைகள் அல்லது ஆலோசனைகள் (மொத்தமாக "கருத்துகள்") முற்றிலும் தன்னார்வத்தின் பேரில் ஆனவையாகும், இதன்மூலம் அத்தகைய கருத்துகளைப் பயன்படுத்த நிரந்தரமான, திரும்பப்பெற முடியாத, ராயல்டி இல்லாத, முழுவதும் கட்டணம் செலுத்தப்பட்ட, உலகளாவிய உரிமத்தை எங்களுக்கு நீங்கள் வழங்குகிறீர்கள், மேலும் தகுந்தது என்று நாங்கள் கருதும் விதத்திலும், உங்களுக்கு எந்தக் கடப்பாடும் இல்லாமலும் அத்தகைய கருத்துகளைப் பயன்படுத்த எங்களுக்கு சுதந்திரம் உள்ளது.
ஆன்லைன் பாதுகாப்பு.
நல்லவிதமான, பாதுகாப்பான, மரியாதை மிக்க ஓர் ஆன்லைன் சூழலை வளர்த்தெடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் Roblox அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இதைச் சாதிப்பதற்கு, நாங்கள் பிரத்தியேக பாதுகாப்பு அணிகளைப் பயன்படுத்துகிறோம், வெளிப்புற பார்ட்னர்களுடன் சேர்ந்து பணிபுரிகிறோம், எங்கள் சேவைகளை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளைக் கண்டறியவும், தடுக்கவும், கட்டுப்படுத்தவும், மதிப்பீடு செய்யவும் உதவும் சிஸ்டங்களை உருவாக்குகிறோம். மீறல், தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்டவிரோதமான உள்ளடக்கம், மோசமான நடத்தை, இந்தப் பயனர் விதிமுறைகளில் குறிப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள எங்கள் சமூகத் தரநிலைகளின் பிற மீறல்களைக் கண்டறிய உதவுவதற்காக, உள்ளடக்கத்தையும் நடத்தையையும் பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்கின்ற மனித மதிப்பீட்டுச் செயல்முறையையும் தானியங்கு அமைப்புகளையும் நாங்கள் சேர்த்துப் பயன்படுத்துகிறோம். எங்கள் சமூகத் தரநிலைகளை மீறக்கூடியதாகத் தோன்றும் ஏதேனும் உள்ளடக்கம் அல்லது தகவல்களை சேவைகளில் நீங்கள் பார்த்தால், Roblox உதவிக் குழுவைத் தொடர்புகொண்டு பயனரையும் சூழ்நிலையையும் உடனே புகாரளிக்க "பயனர் பாதுகாப்புப் பிரச்சனை" என்ற உதவி வகையைத் தேர்ந்தெடுக்கவும். பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்.
- சமூகத் தரநிலைகள். Roblox தனது பயனர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக சேவைகளில் பயனர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், சேவைகளில் எப்படிப்பட்ட நடத்தை அனுமதிக்கப்படும் எப்படிப்பட்ட நடத்தை அனுமதிக்கப்படாது என்பதை விவரிப்பதற்காக குறிப்பிட்ட சில சமூகத் தரநிலைகளை உருவாக்கியுள்ளது. இந்த விதிமுறைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த சமூகத் தரநிலைகளை இங்கே பார்க்கலாம். சமூகத் தரநிலைகளை மீறுவது Roblox விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படும், மேலும் கணக்கு இடைநீக்கம் அல்லது நிறுத்தத்திற்கு வழிவகுக்கலாம். Roblox சமூகத்தின் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்துவதற்காக, சட்டம் அல்லது ஒழுங்குமுறைப்படி அப்படிச் செய்வது அவசியம் என்றோ, நபர் ஒருவருக்கு தீங்கு நேராமல் தடுக்க அல்லது Roblox-இன் உரிமைகள் மற்றும் சொத்துகளைப் பாதுகாக்க அவசியம் என்றோ, நல்ல நம்பிக்கையின் பேரில் Roblox நினைத்தால், உங்கள் உள்ளடக்கத்தை மூன்றாம் தரப்பிற்கு Roblox வெளிப்படுத்தக்கூடும்.
- பெற்றோர் கட்டுப்பாடுகள். Roblox சமூகம் என்பது எல்லா வயதுப் பயனர்களையும் கொண்டது. எல்லோருக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான சூழலை வழங்குவதற்காக நாங்கள் கடுமையாகப் பணியாற்றி வருகிறோம். இந்த சமூகத்தை உருவாக்குவதற்காக, பயனர்களுக்கும் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கும் எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்களையும் கட்டுப்பாடுகளையும் நாங்கள் வழங்குகிறோம். இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய கூடுதல் தகவல் இங்கே கிடைக்கும்.
- உள்ளடக்க முதிர்வு நிலை ரேட்டிங்குகள். Roblox உள்ளடக்க முதிர்வு நிலை ரேட்டிங்குகளைப் பயன்படுத்துகிறது, இது பயனர்கள் தாங்கள் அணுகும் அனுபவங்களைப் பற்றி விவரமாக முடிவுகளை எடுக்க உதவுகிறது, அவர்கள் பார்க்க விரும்பாத உள்ளடக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது. எங்கள் உள்ளடக்க முதிர்வு நிலை ரேட்டிங்குகளும் (குறைவு, நுண்மையானது, நடுத்தரமானது, கட்டுப்படுத்தப்பட்டது) Minimal, Mild, Moderate, Restricted) உள்ளடக்க விளக்கங்களும் அனுபவப் பக்கங்களில் காண்பிக்கப்படும், மேலும் வயது வரம்பு மற்றும் பிராந்திய உள்ளடக்கக் கொள்கைகளின் அடிப்படையில் பயனர்களுக்கு அனுபவங்களைப் பரிந்துரைக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.
-
தகவல்தொடர்பு அம்சங்கள். பயனர்கள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள பார்ட்டி அரட்டை, அனுபவத்தின் அரட்டை, நேரடி அரட்டை, குரல் அரட்டை, தீம் கிரியேட் இன் ஸ்டுடியோ உள்ளிட்ட பல்வேறு வழிகளை (மொத்தமாக, “தகவல்தொடர்பு அம்சங்கள்”) Roblox வழங்குகிறது. தகவல்தொடர்பு அம்சங்களைப் பயன்படுத்தும் முன்பு நீங்கள் வயதுச் சோதனையை நிறைவு செய்ய வேண்டும். சமூகத் தரநிலைகளை மீறக்கூடிய நடத்தைகளை அடையாளம் காண்பதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான தானியங்கு சிஸ்டங்களை Roblox பயன்படுத்துகிறது, அவற்றில் அடங்குபவை: (a) வடிகட்டப்பட்ட உரை அரட்டைக்கு, மீறக்கூடிய தகவல் பரிமாற்றங்களை அடையாளம் கண்டு, பயனர்களுக்கு அவை தோன்றாமல் தடுப்பதற்காக உரை வடிகட்டிகள் மற்றும் முக்கிய சொற்களின் பட்டியலைப் பயன்படுத்துதல்; மற்றும்
(b) குரல் அரட்டைக்கு, மீறல் தன்மை கொண்ட மொழிப் பிரயோகங்களை அடையாளம் கண்டு வகைப்படுத்துவதற்காக தானியங்கு பேச்சு கண்டறிதல் அம்சம் மற்றும் இன்-ஹவுஸ் AI மாடலைப் பயன்படுத்துதல்.
AI அம்சங்கள்.
- கிரியேட்டர் விதிமுறைகளின் AI தொழில்நுட்பங்கள் மற்றும் AI கருவிகள் பிரிவில் கிரியேட்டர்களுக்கான AI கருவிகள் உட்பட (மொத்தமாக, "AI அம்சங்கள்"), எங்கள் சேவைகளின் பகுதியாக நீங்கள் பயன்படுத்தத் தேர்வுசெய்யக்கூடிய, செயற்கை நுண்ணறிவைப் ("AI") பயன்படுத்தும் குறிப்பிட்ட சில விருப்பத்தேர்வு அம்சங்களையும் உருவாக்கக் கருவிகளையும் Roblox வழங்குகிறது. செயலாக்குவதற்கும், உங்கள் ப்ராம்ப்ட்டுகளின் அடிப்படையில் AI உருவாக்கிய பதில்களை வழங்குவதற்கும் (“வெளியீடுகள்”) உள்ளீடாக உரை மற்றும் பிற தகவல்களை சமர்ப்பிக்க (“ப்ராம்ப்ட்டுகள்”) சில AI அம்சங்கள் உங்களை அனுமதிக்கின்றன.
- AI அம்சங்களின் பொறுப்பு. AI அம்சங்களின் உங்கள் உபயோகம் மற்றும் அவற்றுடனான உங்கள் ஈடுபாட்டிற்கும், நீங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து ப்ராம்ப்ட்டுகளுக்கும், வெளியீட்டின் உங்கள் உபயோகத்திற்கும் நீங்கள் தான் பொறுப்பு, Robloxஅல்ல. AI அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், AI அம்சங்களுக்கு ப்ராம்ப்ட்டுகளை சமர்ப்பிப்பதற்கும், உங்களுக்கு AI அம்சங்களை வழங்குவதற்காகவும், இந்தப் பயனர் விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பிற வழிகளிலும் ப்ராம்ப்ட்டுகளைப் பயன்படுத்துவதற்கான எல்லா உரிமங்களையும் Roblox-க்கு வழங்குவதற்கும், தேவையான உரிமைகள், உரிமங்கள், அனுமதிகள் அனைத்தும் உங்களுக்கு உள்ளது என்று நீங்கள் தெரிவித்து உத்தரவாதம் அளிக்கிறீர்கள். உங்களுக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையே, பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அளவில், ப்ராம்ப்ட்டுகளிலும் வெளியீடுகளிலும் உங்களுக்கு இருக்கும் ஏதேனும் உரிமை, சொந்தம், பங்கை நீங்களே தக்கவைத்துக் கொள்வீர்கள்.
- உரிமம். மாடல்களுக்குப் பயிற்சி அளிப்பது உட்பட, சேவைகளை இயக்குதல், வழங்குதல் அல்லது மேம்படுத்துதல் தொடர்பான எந்தவொரு வணிக நோக்கத்திற்காகவும், சேவைகளுக்குள் உங்கள் ப்ராம்ப்ட்டுகள், வெளியீடுகள், இன்டராக்ஷன் தரவு தொடர்பான பிற தகவல்களைப் பயன்படுத்துவதற்கான பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத, நிரந்தரமான, திரும்பப்பெற முடியாத மற்றும் நிரந்தரமான, துணை உரிமம் வழங்கக்கூடிய உரிமையையும் உரிமத்தையும் Robloxக்கு நீங்கள் வழங்குகிறீர்கள். தெளிவுபடுத்துவதற்காக, மேற்கூறியவை அனுபவங்கள் மற்றும் அவதார் சொத்துத் தரவு உட்பட, மாடல் பயிற்சி தொடர்பாக நீங்கள் அமைத்துள்ள எந்தத் தரவுப் பகிர்வு விருப்பங்களையும் மேலே கூறியவை பாதிக்காது.
-
தடைசெய்யப்பட்ட பயன்பாடுகள் AI அம்சங்களைப் பயன்படுத்தும்போது, நீங்கள் இந்த நோக்கங்களுக்காக அவற்றை அணுகவோ, பயன்படுத்தவோ கூடாது அல்லது மற்றவர்களை அணுகவோ பயன்படுத்தவோ அனுமதிக்கக் கூடாது:
- பிறரின் பண்புகள், சமூக நடத்தை அல்லது தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது உட்பட, சட்டவிரோதமான, தீங்கு விளைவிக்கின்ற, பாகுபாடு காட்டக்கூடிய அல்லது முறைகேடான செயல்களை ஊக்குவித்தல், எளிதாக்குதல் அல்லது அவற்றில் ஈடுபடுதல்;
- பொருந்தக்கூடிய சட்டம், Roblox விதிமுறைகள் அல்லது சமூகத் தரநிலைகளை மீறுதல் அல்லது மீறுவதற்கு வழிவகுக்கும் எதையேனும் செய்தல்;
- மற்றவர்களின் சமூக நடத்தை அல்லது தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்ற, நியாயமற்ற அல்லது பாதகமான நடத்தையை ஏற்படுத்தும் விதத்தில் அவர்களை மதிப்பிடுவது, வகைப்படுத்துவது, ஸ்கோரிங் செய்வது அல்லது ரேட்டிங் செய்வது;
- உணர்வை பாதிக்கக்கூடிய, ரகசியமான அல்லது தனிப்பட்ட முறையில் ஒருவரை அடையாளம் காணக்கூடிய தகவல்களைக் கொண்ட ப்ராம்ப்ட்டுகளை சமர்ப்பித்தல்;
- மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அல்லது பிற அந்தரங்க அல்லது உணர்வை பாதிக்கக்கூடிய விஷயங்கள் பற்றிய தகவல்களைப் பெறுதல் அல்லது ஊகித்தல்;
- ஏதேனும் வெளியீட்டை மனிதரால் உருவாக்கப்பட்டது என்று மற்றவர்களை நம்பவைப்பது உட்பட, எந்த வகையிலும் தெரிந்தே ஏமாற்றுவது அல்லது தவறாக வழிநடத்துவது அல்லது தீங்கு விளைவிக்கும் வகையில் மற்றவர்களின் நடத்தையைக் கையாள செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பயன்படுத்துவது;
- தொழில்முறை ஆலோசனை கேட்பது (மருத்துவம், உளவியல், பணம் அல்லது சட்ட ஆலோசனை உட்பட, ஆனால் இவை மட்டுமே அல்ல);
- ஏதேனும் வெளியீட்டிலிருந்தும் மூல அல்லது மெட்டாடேட்டா குறிச்சொற்களை அகற்றுதல், மாற்றுதல் அல்லது முடக்குதல்;
- தனிநபர்கள் மீது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தானியங்கு முடிவெடுத்தலைச் செயல்படுத்துதல்; அல்லது
- பின்வருபவற்றைச் செய்வதன் மூலம் உட்பட, எந்த வழியிலும் AI அம்சங்களை மோசமாக பாதிப்பது:
- AI அம்சங்களைத் திருத்துதல், நகலெடுத்தல், குத்தகைக்கு விடுதல், விற்பனை செய்தல் அல்லது விநியோகித்தல்;
- AI அம்சங்களை ரிவர்ஸ் எஞ்சினீயரிங் செய்தல், டிகம்பைல் செய்தல் அல்லது டிஸ்-அசெம்பிள் செய்தல்;
- Roblox அல்லது அது வழங்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகளில் ஏதேனும் ஒன்றுடன் போட்டியிடும் மாடல்கள் அல்லது சேவைகளை உருவாக்க AI அம்சங்களைப் பயன்படுத்துதல்; அல்லது
- ஏதேனும் பாதுகாப்பு அல்லது தனியுரிமை வடிகட்டிகள், கட்டுப்பாடுகள் அல்லது இயங்கம்சங்கள் உள்ளிட்ட AI அம்சங்களைச் சீர்குலைப்பது அல்லது பிற வழிகளில் பாதிப்பது.
-
பொறுப்புதுறப்பு. AI அம்சங்களும் அவற்றுக்கு அடிப்படையாக உள்ள AI தொழில்நுட்பங்களும் தொடர்ச்சியாகப் பரிணமித்து வருகின்றன. AI அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இவற்றைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்:
- வெளியீடுகள் கணினியால் உருவாக்கப்படுபவை, அவை நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கலாம், முழுமையற்றவையாக இருக்கலாம் அல்லது பிழைகள், துல்லியமின்மைகள், பாரபட்சமான தன்மைகள் மற்றும்/அல்லது Roblox-இன் கருத்துக்களுக்கு ஒத்துப்போகாத புண்படுத்தும் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கலாம்.
- வெளியீடுகளைப் பயன்படுத்தும் முன்பு அல்லது பகிரும் முன்பு அவற்றின் துல்லியம், சட்டப்பூர்வத் தன்மை மற்றும் உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றை நீங்கள் மதிப்பீடு செய்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
- அந்த வெளியீடுகளைப் பயன்படுத்துவதால் தீங்கு, காயம், மரணம் அல்லது பிற இழப்புகள் ஏற்படக்கூடிய வகையிலான முடிவுகள், அமைப்புகள் அல்லது பயன்பாடுகளுக்கும் நீங்கள் வெளியீடுகளைச் சார்ந்திருக்கக் கூடாது; மற்றும்
- வெளியீட்டின் உங்கள் உபயோகம் மற்றும்/அல்லது அவை தொடர்பாக மற்றும் AI அம்சங்களால் உருவாக்கப்படும் பிற உள்ளடக்கம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும், நீங்கள் மட்டுமே முற்றிலும் பொறுப்பு, Roblox அல்ல.
கிரியேட்டர் பகுப்பாய்வு.
கிரியேட்டர் பகுப்பாய்வு என்பது, கிரியேட்டர்களுக்கு தங்கள் அனுபவங்களின் செயல்திறன், பயனர் ஈடுபாடு, தக்கவைப்பு மற்றும் பணமாக்கம் தொடர்பான விரிவான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக கிரியேட்டர் ஹப்பிள் உள்ள கருவிகளின் ஒரு தொகுப்பாகும். கிரியேட்டர் பகுப்பாய்வைப் பயன்படுத்துவதன் மூலம், ஒருங்கிணைந்த பகுப்பாய்வைக் கணக்கிடுவதற்காக உங்கள் அனுபவம் தொடர்பான தரவு செயலாக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறீர்கள்: (a) கிரியேட்டர் பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட அனைத்து பெஞ்ச்மார்க்கிங் தகவல்களையும் ரகசியமாகப் பராமரிப்பீர்கள், அத்தகைய தகவல்களை உங்கள் அனுபவத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்துவீர்கள்; மற்றும் (b) பெஞ்ச்மார்க்கிங் தகவல்களைப் பொதுவில் பகிரவோ, விற்கவோ, வெளியிடவோ அல்லது பரப்பவோ மாட்டீர்கள்.
உரிமம் மற்றும் சேவைகளில் கட்டுப்பாடு.
- சேவைகளுக்கான உரிமம். இந்தப் பயனர் விதிமுறைகள் அல்லது ஏதேனும் Roblox விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்குவதற்கு உட்பட்டு, உங்கள் பொழுதுபோக்கு உபயோகத்திற்காக உங்களுக்குச் சொந்தமான அல்லது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சாதனங்களில் சேவைகளைப் பயன்படுத்த பிரத்தியேகமற்ற, வரம்புக்குட்பட்ட, திரும்பப்பெறக்கூடிய, பிறருக்கு மாற்றிக் கொடுக்க முடியாத உரிமத்தை Roblox உங்களுக்கு வழங்குகிறது, முற்றிலும் சேவைகள் தொடர்பாக சேவைகளின் பகுதியாக Roblox பதிவிறக்கக் கிடைக்கச் செய்கின்ற மென்பொருளை ஆப்ஜெக்ட் கோடு வடிவத்தில் மட்டும் பதிவிறக்குவதற்கான உரிமையும் இதிலடங்கும்.
- உபயோகத்திற்கான கட்டுப்பாடு. Roblox விதிமுறைகள் அல்லது ஏதேனும் கூடுதல் விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் பிற கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக, பயனர்கள் இவற்றையும் செய்யக்கூடாது: (a) சேவைகளின் எந்தப் பகுதியையும் குத்தகைக்கு விடுதல், இரவல் கொடுத்தல், விற்பனை செய்தல், மறுவிநியோகம் செய்தல், உள் உரிமமளித்தல்; (b) சேவைகள் அல்லது அவற்றில் செயல்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை நகலெடுத்தல், மாற்றியமைத்தல், விநியோகம் செய்தல், பொதுவில் நிகழ்த்திக் காட்டுதல் அல்லது காட்சிப்படுத்துதல், ரிவர்ஸ் எஞ்சினீயரிங் செய்தல் டிஸ்-அசெம்பிள் செய்தல், மாற்றம் செய்தல், அல்லது அவற்றிலிருந்து தருவிப்புப் படைப்புகளை உருவாக்குதல்; (c) சேவைகள் அல்லது சேவைகள் தொடர்பான தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வசதி எதையும் ஏய்த்து வெல்லுதல்; (d) மெஷின் லேர்னிங் மாடல்கள் அல்லது செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சியளித்தல், உருவாக்குதல் அல்லது பயன்படுத்துதல் தொடர்பாக விர்ச்சுவல் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் நோக்கத்தில் எந்த வழிகளையும் பயன்படுத்தி சேவைகளை அணுகுதல்; (e) சேவைகள் எவற்றின் சோர்ஸ் கோடையும் முழுவதுமாக அல்லது பகுதியளவில் ரிவர்ஸ் எஞ்சினீயரிங் செய்தல், டி-கம்பைல் செய்தல், டி-கோடு செய்தல், தழுவலாக பிற படைப்புகளை உருவாக்குதல் அல்லது பிற வழிகளில் அவற்றிலிருந்து தருவிப்புப் படைப்புகளை உருவாக்க முயற்சித்தல் அல்லது அவற்றுக்கான அணுகலைப் பெறுதல் (சேவைகளில் உள்ள சோர்ஸ் கோடின் ஒரு பகுதி ஒப்பன் சோர்ஸ் முறையில் வெளியிடப்பட்டு, ரிவர்ஸ் எஞ்சினீயரிங் செய்தல், நகலெடுத்தல் அல்லது பிற மாற்றங்களைச் செய்தல் ஆகியவற்றை ஒப்பன் சோர்ஸ் உரிமம் வெளிப்படையாக அனுமதித்தால் தவிர); (f) தீங்கு விளைவிக்கின்ற அல்லது தவறான உபயோகமுள்ள உள்ளடக்கத்தை (இதை Roblox தனது சொந்த விருப்புரிமையின்பேரில் தீர்மானிக்கும்) உருவாக்க அல்லது இந்த Roblox விதிமுறைகள், கூடுதல் விதிமுறைகள், வழிகாட்டல்கள் அல்லது கொள்கைகளை மீறுகின்ற உள்ளடக்கம் எதையும் உருவாக்க சேவைகளைப் பயன்படுத்துதல்; அல்லது (g) எந்தவொரு நபரின் ஏதேனும் அறிவுசார் சொத்து உரிமை அல்லது பிற உரிமையை மீறுகின்ற, தவறாகப் பயன்படுத்துகின்ற அல்லது பிற வழிகளில் அத்துமீறுகின்ற எந்த விதத்திலும் அல்லது பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டங்களை மீறுகின்ற எந்த விதத்திலும் சேவைகளைப் (அல்லது அவற்றின் ஏதேனும் பகுதியை அல்லது அவற்றில் உள்ள ஏதேனும் தொழில்நுட்பத்தை) பயன்படுத்துதல்.
மூன்றாம் தரப்பு சேவைகள்.
- மூன்றாம் தரப்பு சேவைகள். சேவைகளின் சில பகுதிகள் மூன்றாம் தரப்பிடமிருந்து (Roblox அல்லாத பிற நபர்கள் அல்லது நிறுவனங்கள்) பெற்ற அனுபவங்கள் உள்ளிட்ட (ஆனால் அவை மட்டுமே அல்ல) உள்ளடக்கம், கருவிகள் அல்லது பிற மெட்டீரியல்களைக் கொண்டிருக்கலாம் அல்லது கிடைக்கச் செய்யலாம் (“மூன்றாம் தரப்பு சேவைகள்”). பிரிவு 11-இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, மூன்றாம் தரப்பு சேவைகள் எதையும் Roblox கட்டுப்படுத்துவதும் இல்லை, ஒரு மூன்றாம் தரப்பு பயனர் தகவல்களை எப்படிச் சேகரிக்கலாம், பயன்படுத்தலாம் அல்லது சேமித்து வைக்கக்கூடும் என்பவை உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல) எதற்கும் பொறுப்பேற்பதும் இல்லை. சேவைகளையும் அவற்றின் நீட்சியாக மூன்றாம் தரப்பு சேவைகளையும் நீங்கள் பயன்படுத்துவது, Roblox-ஆல் கட்டுப்படுத்தப்படாத கட்டணங்கள், விதிமுறைகள், மற்றும்/அல்லது தனியுரிமைக் கொள்கை போன்ற கொள்கைகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம். சேவைகளையும் அவற்றில் ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்பு சேவைகளையும் பயன்படுத்துவதன் மூலம், அந்த மூன்றாம் தரப்பு சேவைகள் விதிக்கும் ஏதேனும் கட்டணங்களைச் செலுத்தவும், அவர்கள் வழங்கும் ஏதேனும் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்றவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
- பொறுப்புதுறப்பு. சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பின்வரும் விதத்திலான மூன்றாம் தரப்பு சேவைகளை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும்: (i) மனதைப் புண்படுத்தக்கூடியது அல்லது ஆட்சேபிக்கத்தக்கது என்று கருதப்படக்கூடியது; (ii) பாலியல் ரீதியாக வெளிப்படையான மொழிப் பிரயோகத்தைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்டிருப்பது அல்லது அப்படி அடையாளம் காணப்படாதது; (iii) ஆட்சேபிக்கத்தக்க மெட்டீரியலுக்கான இணைப்புகள் அல்லது குறிப்புகளைக் கொண்டிருக்கக்கூடியது; (iv) மீறலில் ஈடுபடுகின்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கக்கூடியது; (v) சரியாக அல்லது எதிர்பார்த்தபடி செயல்படாமல் போகக்கூடியது; வைரஸ்கள், மால்வேர் அல்லது பிற தீங்கிழைக்கும் கோடைக் கொண்டிருக்கக்கூடியது; மற்றும்/அல்லது (vi) சில நாடுகள் அல்லது மொழிகளில் கிடைக்காதிருக்கக்கூடியது. அபாயங்களை ஏற்றுகொண்டு சேவைகளை நீங்கள் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். அத்தகைய மூன்றாம் தரப்பு சேவைகளின் உள்ளடக்கம், துல்லியம், முழுமைத் தன்மை, கிடைக்கும் தன்மை, காலம் தவறாத தன்மை, செல்லுபடியாகும் தன்மை, பதிப்புரிமை, இணக்கம், சட்டப்பூர்வத் தன்மை, கண்ணியம், தரம் அல்லது வேறு எந்த அம்சத்தையும் ஆராய்வதற்கோ அல்லது மதிப்பீடு செய்வதற்கோ Roblox பொறுப்பல்ல என்பதை பயனர் ஒப்புக்கொள்கிறார். மூன்றாம் தரப்பு சேவை எதற்கும் Roblox உத்தரவாதம் அளிக்கவில்லை அல்லது பரிந்துரைக்கவில்லை. அதோடு, அத்தகைய மூன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக நீங்கள் எதிர்கொள்ளும் ஏதேனும் இழப்புகள் உட்பட, அத்தகைய மூன்றாம் தரப்பு சேவைகள் தொடர்பாக Roblox எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்காது அல்லது உங்களுக்குக் கடன்பட்டிருக்காது என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
-
அறிவிப்புகள்.
- Apple. ஒரு பயனர் Roblox மொபைல் செயலியை (“செயலி”) ஒரு iOS சாதனத்தில் பயன்படுத்தினால்,இந்தப் பிரிவின் விதிமுறைகளையும் பயனர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார். Roblox விதிமுறைகள் பயனருக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையில் மட்டுமே, Apple உடன் அல்ல, சேவைகளுக்கும் சேவைகளின் உள்ளடக்கத்திற்கும் Apple பொறுப்பல்ல. சேவைகள் தொடர்பாக பராமரிப்பு அல்லது உதவிச் சேவை போன்ற எதையும் வழங்க வேண்டிய பொறுப்பு Apple நிறுவனத்திற்கு இல்லை. பொருந்தக்கூடிய வாரண்டியை சேவைகள் நிறைவேற்றத் தவறினால், பயனர் Apple நிறுவனத்திற்குத் தெரிவிக்கலாம், அப்படிச் செய்தால் செயலிக்கான பொருந்தக்கூடிய ஏதேனும் பர்ச்சேஸிற்கான தொகையை பயனருக்கு Apple நிறுவனம் திரும்ப வழங்கும். சேவைகள் தொடர்பாக வேறு வாரண்டி பொறுப்பு எதுவும் Apple நிறுவனத்திற்கு இல்லை. பயனர் சேவைகள் அல்லது பயனரின் சேவைகள் உபயோகம் தொடர்பாக (a) தயாரிப்புக் கடப்பாட்டு கிளைம்கள்; (b) பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறைத் தேவை எதையேனும் சேவைகள் நிறைவேற்றத் தவறிவிட்டன என்ற ஏதேனும் கிளைம்; (c) நுகர்வோர் பாதுகாப்பு அல்லது அது போன்ற சட்டங்களின்கீழ் சமர்ப்பிக்கப்படும் கிளைம்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு Apple நிறுவனத்திற்கு இல்லை. சேவைகள் அல்லது பயனரின் செயலி உபயோகம் மூன்றாம் தரப்பின் அறிவுசார் சொத்து உரிமைகளை மீறுகின்றன என்ற கிளைம்கள் எதையும் விசாரித்தல், ஆதரவாக எதிர்த்துப் பேசுதல், தீர்வுகாணுதல் மற்றும் நிராகரித்தல் எதற்கும் Apple நிறுவனம் பொறுப்பல்ல. சேவைகளைப் பயன்படுத்தும்போது பொருந்தக்கூடிய ஏதேனும் மூன்றாம் தரப்பு விதிமுறைகளுக்கு இணங்கி நடக்க பயனர் ஒப்புக்கொள்கிறார். Apple மற்றும் Apple-இன் துணை நிறுவனங்கள் Roblox விதிமுறைகளின் மூன்றாம் தரப்புப் பயனாளர்கள் ஆகும், பயனர் ஒருவர் Roblox விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் பயனருக்கு எதிராக மூன்றாம் தரப்புப் பயனாளராக , Roblox Roblox விதிமுறைகளைச் செயல்படுத்தும் உரிமை Apple நிறுவனத்திற்கு உள்ளது. (a) U.S. அரசாங்கத்தின் தடை ஆணைக்குட்பட்ட அல்லது “தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும்” நாடு என்று அரசாங்கம் அறிவித்துள்ள நாட்டில் பயனர் வசிக்கவில்லை என்றும் (b) U.S. அரசாங்கத்தின் தடைசெய்யப்பட்ட அல்லது தடுக்கப்பட்ட தரப்புகளின் பட்டியல் எதிலும் பயனர் இல்லை என்றும் பயனர் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறார், உறுதியளிக்கிறார்.
- Autodesk. Roblox Studio-இல் Autodesk, Inc. உருவாக்கிய Autodesk® FBX® கோடு உள்ளது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்தக் குறியீடு “உள்ளது உள்ளபடி” வழங்கப்படுகிறது, மேலும் வர்த்தகம் செய்வதற்கேற்ற தன்மை, குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பொருந்தும் தன்மை அல்லது மூன்றாம் தரப்பு உரிமைகளை மீறாத தன்மைக்கான மறைமுக வாரண்டிகள் உட்பட, வெளிப்படையான அல்லது மறைமுக வாரண்டிகள் ஏதேனும் மற்றும் அனைத்தையும் Autodesk, Inc. மறுக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் அத்தகைய கோடில் இருந்து ஏற்படும் நேரடியான, மறைமுகமான, தற்செயலான, பிரத்தியேகமான, உதாரணமான அல்லது விளைவான சேதங்கள் (பதிலீட்டுப் பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுதல், உபயோகம், தரவு அல்லது லாபங்களில் இழப்பு அல்லது பிசினஸில் குறுக்கீடு உட்பட) எதுவும் எப்படி ஏற்பட்டாலும், ஒப்பந்தம், கண்டிப்பான கடப்பாடு அல்லது தீங்கு (அலட்சியம் அல்லது பிற வகைகள் உட்பட) போன்ற கடப்பாட்டிற்கான எந்தக் கோட்பாட்டின் கீழும், Autodesk, Inc. பொறுப்பாகாது.
- PlayStation. சேவைகளை Sony PlayStation® சாதனத்தில் அணுகும் பயனர்களுக்கு இந்தப் பிரிவு பொருந்தும். ஐட்டங்களை வாங்குவதும், பயன்படுத்துவதும் நெட்வொர்க் விதிமுறைகள் மற்றும் பயனர் ஒப்பந்தங்களுக்கு உட்பட்டதாகும். இந்த ஆன்லைன் சேவைக்கான உரிமத்தை அமெரிக்காவைச் சேர்ந்த Sony Interactive Entertainment நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது. கேமுக்குள் உள்ள ஸ்டோரில் இருந்து எந்த உள்ளடக்கத்தை வாங்கினாலும் அது Sony Interactive Entertainment Network Europe Limited (“SIENE”) நிறுவனத்திடம் இருந்தே வாங்கப்படுகிறது, மேலும் அது PlayStation™Network சேவை விதிமுறைகள் மற்றும் PlayStation™ஸ்டோரில் கிடைக்கின்ற பயனர் ஒப்பந்தத்திற்கு உட்பட்டதாகும். உபயோக உரிமைகள் ஒவ்வொரு ஐட்டத்திற்கும் மாறுபடலாம், ஆகவே ஒவ்வொரு பர்ச்சேஸிற்கும் உபயோக உரிமைகளைச் சரிபார்த்துக்கொள்ளவும். வேறுவிதமாகக் காட்டப்பட்டால் தவிர, கேமின் வயது ரேட்டிங்கே கேமுக்குள் உள்ள ஸ்டோரில் கிடைக்கும் உள்ளடக்கத்திற்கும் இருக்கும். Roblox விதிமுறைகள் பயனருக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையில் மட்டுமே உள்ளன, Sony Computer Entertainment, Inc., Sony Computer Entertainment America LLC, Sony Computer Entertainment Europe Ltd. ஆகிய எந்த நிறுவனத்துடனும் அல்ல. (மொத்தமாக “SCE”) ஆகிய நிறுவனங்களுடன் இல்லை. சேவைகளுக்கு Roblox நிறுவனமே பொறுப்பே தவிர SCE அல்ல. பயனர் சொந்தமாக வைத்துள்ள அல்லது அவரது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு "சிஸ்டம்" (PlayStation, PlayStation 2, PlayStation 3, PlayStation 4, PlayStation 5, PlayStation Portable (PSP), PlayStation Vita (PS Vita), PlayStation Vita TV (PS Vita TV) மற்றும் இவை ஒவ்வொன்றின் எல்லாப் பதிப்புகள் மற்றும் சர்வர் எமுலேஷன்கள் உட்பட), அல்லது SCE அல்லது அதன் இணை நிறுவனங்களால் இயக்கப்படுகின்ற உரிமைத்துவமுள்ள ஆன்லைன் நெட்வொர்க்கால் சேவைகள் டெலிவரி செய்யப்பட்ட அத்தகைய பிற சிஸ்டத்தில் மட்டுமே சேவைகளைப் பயன்படுத்த பயனருக்கு வரம்புக்குட்பட்ட உரிமம் வழங்கப்படுகிறது. SCE நிறுவனம் ஒவ்வொன்றும் Roblox விதிமுறைகளின் மூன்றாம் தரப்புப் பயனாளர்களாகும்.
அனுபவத்தின் விதிகள் + சர்ச்சைத் தீர்வு (பயனர்களுக்கும் கிரியேட்டர்களுக்கும் இடையே அல்லது கிரியேட்டர்களுக்கு இடையே).
ஒரு பயனருக்கு ஏதேனும் கிரியேட்டர் UGC-இல் (அனுபவங்கள் அல்லது பிற விர்ச்சுவல் உள்ளடக்கம் உட்பட) ஏதேனும் சிக்கல் இருந்தால், முதலில் பயனர்கள் சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முதலில் நேரடியாக UGC-இன்கிரியேட்டரையே தொடர்புகொள்ள வேண்டும்.
-
அனுபவம் விதி மீறல்கள். அனுபவங்களையும் அனுபவங்களுக்குள் பயனர்களின் செயல்களையும் நிர்வகிப்பதற்காக தனிப்பயன் விதிகளை உருவாக்கிக்கொள்ள (“அனுபவத்திற்கான விதிகள்”) கிரியேட்டர்களை Roblox அனுமதிக்கிறது. அனுபவத்திற்கான விதிகளை உருவாக்கி, நிர்வகித்து, செயல்படுத்துவது அனுபவத்தின் கிரியேட்டரே, Roblox அல்ல. அப்படியிருக்க, அனுபவத்திற்கான விதிகள் மீறப்படுவது குறித்து நேரடியாக அனுபவத்தின் கிரியேட்டரிடமே புகாரளிக்கப்பட வேண்டும் (அவர்களே அவற்றைக் கையாளுவார்கள்). தவறான உபயோகத்தைப் புகாரளிப்பதற்கான Roblox-இன் சிஸ்டத்தின் மூலம் அவற்றைப் புகாரளிக்கக்கூடாது.
(i) அனுபவத்திற்கான விதிகளுக்கு பயனர் இணங்குவதைக் கண்காணிக்கவும் (ii) அவற்றை மீறும் பயனர்களை தணிக்கை செய்யவும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் சொந்தமாக சிஸ்டம் வைத்திருக்கும். விதி மீறுகின்ற பயனர் ஓர் அனுபவத்தை அணுக முடியாதபடி தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் தடுப்பதும் இந்தத் தணிக்கையில் அடங்கும் அந்த அனுபவத்தில் அவர்கள் பெற்ற விர்ச்சுவல் உள்ளடக்கம் இழக்கப்படுவதும் இதில் அடங்கலாம். அத்தகைய தணிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் அனுபவத்தின் சார்பாக அந்தக் கிரியேட்டராலேயே செய்யப்படுகின்றன, இது தொடர்பாக ஒரு கிரியேட்டர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு Roblox பொறுப்பல்ல.
- சர்ச்சைத் தீர்வு. ஒரு பயனருக்கு ஏதேனும் கிரியேட்டர் UGC-இல் (அனுபவங்கள், அனுபவத்திற்கான விதிகள் அல்லது பிற விர்ச்சுவல் உள்ளடக்கம் உட்பட) ஏதேனும் சிக்கல் இருந்தால், முதலில் பயனர் சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முதலில் நேரடியாக UGC-இன் கிரியேட்டரையே தொடர்புகொள்ள வேண்டும். கிரியேட்டர்களுக்கும் பயனர்களுக்கும் இடையிலான சர்ச்சைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.
- Roblox-க்கு மேல் புகார் செய்தல். அனுபவத்திற்கான விதிகளின் அடிப்படையில் ஒரு கிரியேட்டரின் செயல்கள் அல்லது தணிக்கை நடவடிக்கைகளுக்கு அல்லது பயனர்களுக்கும் கிரியேட்டர்களுக்கும் அல்லது கிரியேட்டர்களுக்கு இடையில் ஏற்படும் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு Roblox பொறுப்பல்ல என்றாலும், எல்லோரும் சேவைகளைப் பயன்படுத்தி மகிழ்வதை Roblox உறுதிசெய்துகொள்ள விரும்புகிறது. அதற்கேற்ப, பயனர்களுக்கும் கிரியேட்டர்களுக்கும் இடையே அல்லது கிரியேட்டர்களுக்கு இடையே எழும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண உதவுவதற்காக முயற்சிக்கத் தலையிடுவதற்கு Roblox-க்கு உரிமை உள்ளது (ஆனால் கடப்பாடு அல்ல). பயனர்கள் அத்தகைய சிக்கல்கள் எதையும் குறித்து Roblox இடம் மேல் புகார் அளிப்பதற்கு முன், முதலில் கிரியேட்டருடன் சேர்ந்து சிக்கலைத் தீர்ப்பதற்கு உண்மையான, நியாயமான முயற்சியை எடுத்திருக்க வேண்டும். அத்தகைய முயற்சி தோல்வியடைந்தால், Roblox உதவிப் படிவத்தை நிரப்புவதன் மூலம் பயனர் அந்தச் சிக்கல் குறித்து Roblox-இன் வாடிக்கையாளர் சேவைக் குழுவிடம் மேல் புகார் செய்யலாம். ஒரு பயனருக்கும் கிரியேட்டருக்கும் இடையிலான அல்லது கிரியேட்டர்களுக்கு இடையிலான ஏதேனும் சர்ச்சையில் தலையிட அல்லது ஏதேனும் நடவடிக்கை எடுக்க Roblox தேர்வுசெய்தால், Roblox-இன் முடிவே இறுதியானது (கிரியேட்டரிடமிருந்து Robux-ஐக் குறைத்து பயனருக்குRobux-ஐக் கிரெடிட் செய்வதும் இதில் அடங்கலாம்) என்றும், கிரியேட்டரும் பயனரும் அந்த முடிவை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் பயனரும் கிரியேட்டரும் ஒப்புக்கொள்கின்றனர். அத்தகைய எல்லா சிக்கல்களையும் தீர்ப்பதற்காக உரிய நேரத்தில் Roblox உடன் சேர்ந்து செயல்பட பயனர்களும் கிரியேட்டர்களும் ஒப்புக்கொள்கின்றனர், மேலும் அப்படிச் செய்யத் தவறுவது Roblox விதிமுறைகளை மீறுவதாகும்.
-
சர்ச்சைத் தீர்வு (பயனருக்கும் Roblox-க்கும் இடையே); நடுவர் தீர்வு ஒப்பந்தம், குழு நடவடிக்கை விலக்கு.
Roblox விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி தவிர, Roblox விதிமுறைகள் அல்லது சேவைகளின் கீழ் அல்லது அவை தொடர்பாக எந்த விதத்திலும் எழுகின்ற, Roblox உடன் உங்களுக்குள்ள சர்ச்சை, கிளைம் அல்லது முரண்பாடு எதுவும் (“சர்ச்சை”) கட்டாய சர்ச்சைத் தீர்வுச் (“MIDR”) செயல்முறையின் மூலமே நிர்வகிக்கப்படும் மற்றும் தீர்க்கப்படும் (கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி).
U.S-இல் வசிப்பவர்கள் மட்டும்: MIDR செயலாக்கம் நிறைவடைந்துவிட்டது, அனாலும் சர்ச்சை தீர்க்கப்படாமல் உள்ளது என்றால், வழக்கு தொடுத்தலின் மூலம் அல்லாமல் கட்டுப்படுத்தும் நடுவர் தீர்ப்பால் மட்டுமே அத்தகைய சர்ச்சைக்குத் தீர்வு காணப்படும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். சர்ச்சையில் சம்பந்தப்பட்டுள்ள சட்டக் கோட்பாடுகள் எதையும் பொருட்படுத்தாமலும், சர்ச்சை Roblox நிறுவனத்துடனா அல்லது அதன் துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள் அல்லது தாய் நிறுவனம் அல்லது சேவைகளுடன் தொடர்புடைய ஏதேனும் சப்ளையர்கள் அல்லது சேவை வழங்குநர்களுடனா அல்லது அவர்களின் அதிகாரிகள், இயக்குநர்கள், பணியாளர்கள், ஏஜென்ட்டுகள் அல்லது வாரிசுகளுடனா என்பதைப் பொருட்படுத்தாமலும் இந்த ஒப்பந்தம் பொருந்தும். கீழே உள்ள நடுவர் தீர்ப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு எந்த சர்ச்சைகளுக்கும், குழு நடவடிக்கையில் ஈடுபடுவது உட்பட, ஒரு நீதிபதி அல்லது நடுவர் குழுவின் முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் உரிமையை நீங்கள் விட்டுக்கொடுப்பதாக புரிந்து ஏற்றுக்கொள்கிறீர்கள்.
-
கட்டாய முறைசாரா சர்ச்சைத் தீர்வு. நமக்கிடைய ஒருபோதும் சர்ச்சை எதுவும் எழாது என்று நம்புகிறோம். அப்படி எழுந்தால், நல்ல நம்பிக்கை சார்ந்த, முறை சாரா முயற்சிகளே சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு பல சமயங்களில் விரைவான, செலவு குறைந்த, இரு தரப்புக்கும் அனுகூலமான விளைவுகளைத் தரக்கூடியவையாக இருக்கும் என்று நாம் இரு தரப்பும் உணர்ந்து கொண்டு ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே, கீழே உள்ள பிரிவு 13.a.vi-இல் விவரிக்கப்பட்டபடி தவிர, பிற விஷயங்களுக்கு நம்மில் யாரேனும் நடுவர் தீர்ப்பை நாடும் முன்பு அல்லது நீதிமன்றத்தில் ஏதேனும் கிளைமைத் தாக்கல் செய்யும் முன்பு, பின்வரும் MIDR செயல்முறையில் ஈடுபடுவோம் என்று நாம் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்கிறோம்:
- அறிவிப்பு. MIDR செயல்முறையைத் தொடங்குவதற்கு, சர்ச்சையை எழுப்புகின்ற தரப்பு முதலில் எதிர் தரப்பிற்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும்.
- Roblox-க்கு அறிவிப்பை வழங்க, நீங்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்பை சான்றளிக்கப்பட்ட U.S. அஞ்சல் சேவை அல்லது ஃபெடரல் எக்ஸ்பிரஸ் மூலம (அல்லது அதற்குச் சமமான சர்வதேச சேவை மூலம்) Roblox Corporation, Legal Department, 3150 S. Delaware St., San Mateo, CA 94403 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், அதில் பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும்: (a) பயனரின் முழுப் பெயர், Roblox பயனர் பெயர், பயனரின் Roblox கணக்குடன் இணைந்த ஏதேனும் மின்னஞ்சல் முகவரி அல்லது பில்லிங் முகவரி; (b) பயனரின் பிரதிநிதியாக ஒரு கவுன்சில் இருந்தால், பயனரின் கன்வுசிலின் பெயர் மற்றும் தொடர்புத் தகவல்; (c) பயனரின் சர்ச்சை மற்றும் கோரும் தீர்வு பற்றிய சுருக்கமான விளக்கம்; மற்றும் (d) இதற்கு முன்பே சர்ச்சையைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருந்தால், அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக, Roblox உதவிக் குழு வழங்கிய டிக்கெட் அல்லது கேஸ் எண்
- ஒரு பயனருக்கு அறிவிப்பை வழங்க, Roblox-க்கு நீங்கள் வழங்கியிருந்த மின்னஞ்சல் முகவரி அல்லது பில்லிங் முகவரிக்கு (அல்லது அப்படி ஒன்றை வழங்காவிட்டால், Roblox சேவையில் உள்ள மெசேஜிங் சேவையின் வழியாக) எழுத்துப்பூர்வ அறிவிப்பை Roblox அனுப்பும்; அந்த அறிவிப்பில் பின்வரும் விவரங்கள் இருக்கும்: (a) Roblox-இன் கவுன்சிலின் பெயர் மற்றும் தொடர்புத் தகவல்; மற்றும் (b) Roblox-இன் சர்ச்சை மற்றும் கோரும் தீர்வு பற்றிய சுருக்கமான விளக்கம்.
- செயல்முறை. பிறகு இரு தரப்பும் MIDR செயல்முறையில் ஈடுபடுவார்கள். MIDR செயல்முறைக்கு, சர்ச்சையை முறைசாரா செயல்முறை மூலம் நல்ல நம்பிக்கையின் அடிப்படையிலான முயற்சியாக, எழுத்துப்பூர்வ உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லது இரு தரப்பில் ஒருவர் கோரினால் டெலிகான்ஃபிரன்ஸ் அல்லது வீடியோ கான்ஃபிரான்ஸ் மூலம் அது நடந்திருக்க வேண்டும். இரு தரப்பில் ஒருவருக்கு ஒரு கவுன்சில் பிரதிநிதியாகச் செயல்பட்டால், அந்தக் கவுன்சில் பங்கேற்கலாம்.
- ரகசியத் தன்மை. MIDR செயல்முறையின் போது ஏதேனும் தரப்பு, அதன் ஏஜென்ட்டுகள், பணியாளர்கள், வழக்கறிஞர்கள் அளிக்கும் சலுகைகள், வாக்குறுதிகள், நடத்தை மற்றும் அறிக்கைகள் அனைத்தும் ரகசியத் தன்மை வாய்ந்தவை, அதன் பிறகான வழக்கில் எந்த நோக்கத்திற்காகவும் அவை ஏற்கத்தக்கதல்ல, ஆனால், MIDR செயல்முறையில் பயன்படுத்தாமல் இருந்தால் வழங்கக்கூடியதும் கண்டறியக்கூடியதுமாக இருக்கக்கூடிய ஏதேனும் ஆதாரத்தை, அந்தச் செயல்முறையில் பயன்படுத்திவிட்டதன் காரணமாக மட்டுமே, மீண்டும் வழங்க முடியாது அல்லது கண்டறிய முடியாது என்று வாதிட முடியாது.
- கால வரம்பு. இரு தரப்பினரும் நீட்டிப்புக்கு ஒப்புக்கொள்ளாதபட்சத்தில், மேலே உள்ள துணைப் பிரிவு i-இல் விவரிக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற அறுபது (60) நாட்களுக்குள் MIDR செயல்முறை நடைபெற வேண்டும். எனினும், ஒரு தரப்பு அவசர நிலை அடிப்படையில் (உதாரணமாக ஆரம்பநிலைத் தடையாணை நிவாரணம் அல்லது தற்காலிகத் தடையாணை) தடையாணை நிவாரணம் கோரினால், அந்த நிவாரணத்தின் அடிப்படையில் இரு தரப்பினரும் நீட்டிப்புக்கு ஒப்புக்கொள்ளாதபட்சத்தில், மேலே உள்ள துணைப் பிரிவு i-இல் விவரிக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற மூன்று (3) நாட்களுக்குள் MIDR செயல்முறை நடைபெற வேண்டும். தரப்பினர் இந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள முறைசாரா சர்ச்சைத் தீர்வுச் செயல்முறையில் ஈடுபடும்போது, சட்டப்பூர்வ காலக்கெடு எதுவும் இடைநிறுத்தப்படும்.
- நடுவர் தீர்வு அல்லது வழக்கு தொடுத்தலுக்கு MIDR கட்டாய முன்தேவையாகும். MIDR செயல்முறையில் பங்கேற்ற பிறகு, சர்ச்சைக்கு எங்களால் தீர்வு காண முடியாமல் போனால்,இரு தரப்பில் யாரேனும் நடுவர் தீர்வு நடவடிக்கை எடுக்கலாம் (அல்லது நடுவர் தீர்வு ஒப்பந்தத்திற்கான விதிவிலக்குக்குள் அந்தக் கிளைம் வருமானால் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) வழக்கு தொடுக்கலாம்). இருப்பினும், இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி MIDR செயல்முறையில் நாம் ஈடுபடாமல் இருந்தால், MIDR செயல்முறை நடைபெறும் வரை நடுவர் தீர்வுக்காக சர்ச்சையைச் சமர்ப்பிக்க முடியாது, நீதிமன்றத்தில் அதற்காக கிளைமையும் தாக்கல் செய்ய முடியாது. பின்வருபவற்றை பயனரும் Roblox நிறுவனமும் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறார்கள்: முதலில் MIDR செயல்முறையில் கையாளப்படாத சர்ச்சை எதுவும்:
- நடுவர் தீர்ப்பு வழங்குநரால் ஏற்கப்படாது, மேலும் சிவில் செயல்முறைக்கான ஃபெடரல் விதி 13(b)-இன் படி ஆதாரமற்றதாகக் கருதப்படும்; அதோடு இந்தப் பிரிவு 13.a-ஐ மீறும் வகையில் ஆதாரமற்ற க்ளைமைத் தாக்கல் செய்யும் எந்தத் தரப்பிற்கும், நடுவர் தீர்வுக் கட்டணம் மற்றும்/அல்லது செலவுகளை நடுவர் விதிக்கக்கூடும்; மேலும்
- நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டால் நிராகரிப்புக்கு உட்படலாம்.
- விதிவிலக்குகள். காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தகமுத்திரை அல்லது வர்த்தக ரகசிய உரிமைகளின் மீறல் நிகழ்ந்துள்ளதாகக் கூறும் கிளைம் ஒன்று சர்ச்சையில் சம்பந்தப்பட்டிருந்தால், பயனரும் Roblox நிறுவனமும் இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள MIDR செயல்முறையில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை.
- அறிவிப்பு. MIDR செயல்முறையைத் தொடங்குவதற்கு, சர்ச்சையை எழுப்புகின்ற தரப்பு முதலில் எதிர் தரப்பிற்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும்.
-
நடுவர் தீர்வு ஒப்பந்தம். பின்வருபவை U.S. பயனர்களுக்கு மட்டும் பொருந்தும். நமக்கிடையே ஒரு சர்ச்சை எழுந்து, மேலே உள்ள பிரிவு a-இல் விவரிக்கப்பட்டுள்ள MIDR செயல்முறையின் மூலம் நம்மால் அதற்குத் தீர்வுகாண முடியாவிட்டால், அந்த சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கான செயல்முறையை இந்தப் பிரவு விரிவாக விளக்குகிறது. இந்தப் பிரிவை கவனமாகப் படிக்கவும், இது மிகவும் முக்கியம்.
-
நடுவர் தீர்வு ஒப்பந்தம் மற்றும் குழு நடவடிக்கையை விலக்கிக் கொள்ளுதல். ROBLOX விதிமுறைகளில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டால் தவிர, , MIDR மூலம் தீர்வு காண முடியாத ஏதேனும் சர்ச்சைஇருந்தால், அது நீதிமன்றத்தில் அல்லாமல் கட்டுப்படுத்துகின்ற, தனிநபர் நடுவர் தீர்வு மூலமே தீர்க்கப்படும் என்பதை பயனரும் ROBLOX நிறுவனமும் ஒப்புக்கொள்கின்றனர். இதன் மூலம் நடுவர் குழு வழக்கிற்கான ஏதேனும் உரிமையை விலக்கிக்கொள்வதாக பயனரும் ROBLOX நிறுவனமும் ஒப்புக்கொள்கின்றனர், மேலும் பயனரும் ROBLOX நிறுவனமும் ஒருவருக்கொருவர் எதிராக தனிநபர் என்ற முறையில் மட்டுமே கிளைம்களை எழுப்பலாமே தவிர, ஒரு குழுவிற்கான நடவடிக்கை அல்லது குழுவிற்கான நடுவர் தீர்வில் ஏதேனும் வாதியாகவோ அல்லது வர்க்க உறுப்பினராகவோ அல்ல.
இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தமும் குழு நடவடிக்கை விலக்கமும் (“நடுவர் தீர்வு ஒப்பந்தம்”) இவற்றைப் பொருட்படுத்தாமல் யுனைட்டெட் ஸ்டேட்ஸில் வரிக்கின்ற எல்லாப் பயனர்களுக்கும், கீழே வழங்கப்பட்டுள்ளது போல் தவிர, எல்லா சர்ச்சைகளுக்கும் பொருந்தும்: (a) சர்ச்சையில் சம்பந்தப்பட்ட சட்டக் கோட்பாடுகள், (b) சர்ச்சை எப்போது எழுந்தது, மற்றும் (c) சர்ச்சை Roblox உடனா, Roblox-இன் துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள் அல்லது தாய் நிறுவனத்துடனா அல்லது சேவைகளுடன் தொடர்புடைய ஏதேனும் சப்ளையர்கள் அல்லது சேவை வழங்குநர்களுடனா (அவர்களின் அதிகாரிகள், இயக்குநர்கள், பணியாளர்கள், ஏஜென்ட்டுகள் அல்லது வாரிசுகள் உட்பட).
- ஃபெடரல் நடுவர் தீர்வுச் சட்டம்; புரிதல் விளக்கம்; மற்றும் அமலாக்கம். இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தம், எல்லா விஷயங்களிலும் அதன் செயல்முறை விதிமுறைகள் உட்பட, அதன் ஃபெடரல் நடுவர் தீர்வுச் சட்டத்தால் (9 U.S.C. § 1 et seq.) (“FAA”) நிர்வகிக்கப்படுகிறது. அதாவது, பல விஷயங்களுடன் சேர்த்து, இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தத்தின் புரிதல் விளக்கம் மற்றும் அமலாக்கத்தையும், குழு நடவடிக்கைக்கான விளக்கம் உட்பட (ஆனால் அது மட்டுமே அல்ல) அதன் எல்லா விதிமுறைகளையும் FAA நிர்வகிக்கிறது. எந்த வகையிலும் மாநில நடுவர் தீர்வுச் சட்டங்கள் நிர்வகிக்காது. அதோடு, மாநிலங்களுக்கு இடையிலான ஒரு வணிகப் பரிவர்த்தனைக்கு Roblox விதிமுறைகளே ஆதாரமாக விளங்குகின்றன என்பதையும், சாத்தியமான முழு அளவிற்கு ஃபெடரல் சட்டத்தின்படியே நிர்வகிக்கப்படும் மற்றும் புரிந்துகொள்ளப்படும் என்பதையும் பயனர், Roblox நிறுவனம் ஆகிய இரு தரப்பும் ஒப்புக்கொள்கின்றனர்.
- பொதுவாக நடுவர் தீர்வு; நிவாரணம் கிடைக்கும். நடுவர் தீர்வில் நீதிபதியோ நடுவர் குழுவோ கிடையாது, FAA-இன் படி நடுவர் தீர்வில் கிடைக்கும் தீர்வுகளுக்கு நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்வது குறைவு. இருப்பினும், ஒரு நடுவரும் நீதிமன்றம் வழங்குவதைப் போன்ற அதே சேதங்கள் மற்றும் நிவாரணங்களை தனிநபர் அடிப்படையில் வழங்கலாம் (தடையாணை மற்றும் அறிவிக்கப்பட்ட நிவாரணம் மற்றும் சட்டப்பூர்வ சேதங்கள் உட்பட), நீதிமன்றத்தைப் போலவே Roblox விதிமுறைகளை அவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சந்தேகத்தைத் தெளிவுபடுத்துவதற்காக, சட்டம் அங்கீகரித்தால் மற்றும் தனிநபர் கிளைம்(கள்) அவசியப்படுத்தினால், பொதுத் தடையாணை நிவாரணத்தை நடுவர் வழங்க முடியும்.
-
நடுவர் தீர்வுச் செயல்முறைகள் மற்றும் விதிகள். Roblox விதிமுறைகளால் மாற்றம் செய்யப்பட்டால் தவிர, FedArb-இன் விரைவுபடுத்தப்பட்ட நடுவர் தீர்வு விதிகள் மற்றும் (பொருந்துமென்றால்) ஃபிரேம்வொர்க் ஃபார் மாஸ் ஆர்பிட்ரேஷன் ப்ரொசீடிங்ஸ் ADR-MDL-க்கு இணங்க நடுவர் தீர்வுகள் FedArb-ஆல் நிர்வகிக்கப்படும். குறிப்பாக, பொதுவான உண்மைத் தன்மையான அல்லது சட்டப்பூர்வ சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நடுவர் தீர்வுக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால், மற்றும் அந்தக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் தரப்பினருக்கான கவுன்சில் ஒன்றாக அல்லது ஒருங்கிணைக்கப்பட்டவையாக இருந்தால், ஃபிரேம்வொர்க் ஃபார் மாஸ் ஆர்பிட்ரேஷன் ப்ரொசீடிங்ஸ் ADR-MDL பொருந்தும். https://www.fedarb.com/ என்ற தளத்தில் அல்லது 1-650-328-9500 என்ற எண்ணை அழைத்து பயனர்கள் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
சட்டத்தால் அவசியமாக்கப்பட்டால் தவிர, தரப்பினர் இருவரும் எழுத்துப்பூர்வமாக வேறுவிதமாக பரஸ்பரம் ஒப்புக்கொண்டால் தவிர, வாய்வழி விவாதங்கள் உட்பட நடுவர் தீர்வு விசாரணைகள் எதுவும் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலமே நடத்தப்படும். நடுவர் தீர்வு விசாரணை நேரடியாக நடத்தப்பட்டால், பயனருக்கு சௌகரியமான இடமாக இருந்தால், அது கலிபோர்னியாவில் உள்ள சான் மேட்டியோ கவுண்ட்டியில் நடைபெறும் அல்லது பயனர் வசிக்கின்ற கவுண்ட்டி அல்லது பாரிஷில் நடைபெறும்.
நடுவர் தீர்வின் இறுதியில், நடுவர் தனது முடிவை எத்தன அடிப்படையில் எடுத்தார் என்ற புரிதல்கள் மற்றும் இறுதிக் கருத்துகளை விவரித்து, தனது எழுத்துப்பூர்வ முடிவை வழங்குவார்.
பொருந்தக்கூடிய சட்டம் வேறுவிதமாகக் கூறினால் தவிர, நடுவர் தீர்வுச் செயல்முறையும், நடுவர் தீர்வுச் செயல்முறை, விசாரணை, முடிவு, நடுவர் தீர்வின் தீர்ப்பு தொடர்பாக தயார் செய்யப்பட்ட அல்லது சமர்ப்பிக்கப்பட்ட ஏதேனும் ஆவணங்கள் உள்ளிட்ட (ஆனால் அவை மட்டுமே அல்ல) அது தொடர்பான எல்லாப் பதிவுகளும், நடுவர் தீர்வின் தீர்ப்பை நீதிமன்ற உறுதிப்படுத்தலைப் பெறுவதற்குத் தேவைப்பட்டால் தவிர, ரகசியத்தன்மை வாய்ந்தவையாக இருக்கும், எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கும் வெளிப்படுத்தப்படாது.
- நடுவர் தீர்வை நடத்துதல். மேலே விவரிக்கப்பட்ட MIDR செயல்முறைக்கு இணங்கிய ஒரு தரப்பு, நடுவர் தீர்வுச் செயல்முறையைத் தொடங்க விரும்பினால், அவர்கள் https://fedarb.my.salesforce-sites.com/Roblox_DemandForm என்ற முகவரியில் நடுவர் தீர்வுக்கான கோரிக்கையையும், பயனர் விதிமுறைகளின் ஒரு நகலையும் FedArb இடம் சமர்ப்பிக்க வேண்டும்.
-
கட்டணங்களும் செலவுகளும். Roblox விதிமுறைகள் மற்றும் நடுவர் தீர்வு ஒப்பந்தத்திற்கு இணங்க நீங்கள் ஒரு நடுவர் தீர்வைத் தொடங்கினால், FedArb-இன் தாக்கல் கட்டணத்தில் முதல் $50 தொகையை நீங்கள் செலுத்த வேண்டும். பிரிவு 13(a)(v) மற்றும் இந்த துணைப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி தவிர, நடுவர் தீர்வுக்காக தாக்கல் கட்டணம் தவிர வேறு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்குக் கிடையாது; தாக்கல் கட்டணம் தவிர FedArb விதிக்கும் பிற எல்லாக் கட்டணங்களையும் செலவுகளையும் Roblox செலுத்தும். அதோடு, தாக்கல் கட்டணத்தின் ஏதேனும் ஒரு பகுதியை உங்களால் செலுத்த முடியாது என்று FedArb தீர்மானித்தால், அந்தப் பகுதியையும் Roblox செலுத்தும்.
மற்றபடி பயனர்களின் சொந்த செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணங்களுக்கு பயனர்களே பொறுப்பு; அத்தகைய செலவுகள் அல்லது வழக்கறிஞர் கட்டணங்களை Roblox செலுத்தாது (நடுவர் அப்படிச் செய்ய உத்தரவிட்டால் தவிர).
கிளைமின் சாரம் அல்லது கோரப்படும் நிவாரணம் தீவிரமற்றதாக இருப்பதாக அல்லது சரியில்லாத நோக்கத்திற்காக எழுப்பப்பட்டதாக நடுவர் கண்டறிந்தால், வழக்கறிஞருக்கான நியாயமான கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட, வெல்லும் தரப்பிற்கு ஏற்படும் நடுவர் தீர்வுக் கட்டணங்கள் அனைத்தையும் தோற்கும் தரப்பே செலுத்த வேண்டும் என்று நடுவர் ஆணையிடலாம் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதோடு, வெல்லும் தரப்பே வழக்கறிஞர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஒரு சட்டம் கூறினால், அந்தச் சட்டத்திற்கு ஏற்ப வழக்கறிஞர் கட்டணத்தை நடுவர் வழங்கலாம்.
பொருந்தக்கூடிய ஏதேனும் விதிகள் அல்லது கட்டண காலத் திட்டங்களின் கீழ், ஏதேனும் கட்டணங்களின் தொகை அல்லது நேர வரம்பில் சொந்த விருப்புரிமையின் பேரில் மாற்றம் செய்ய FedArb-க்கு உரிமையுள்ளது. ஆனால் அந்த மாற்றங்கள் எந்தத் தரப்பும் செலுத்த வேண்டிய கட்டணங்களை அதிகரிக்காத பட்சத்தில், நேர வரம்பு அல்லது செலுத்த வேண்டிய கட்டணங்களின் தொகையில் செய்யப்படும் ஏதேனும் மாற்றங்களை எதிர்க்காமல் இருக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொள்கின்றனர்.
- பிரநிதி நியமிப்பு; புரிதல் விளக்கம். சட்டம் அனுமதிக்கின்ற அதிகபட்ச அளவில், Roblox விதிமுறைகளின் அனைத்து அல்லது ஏதேனும் பகுதியளவு செல்லாது அல்லது செல்லாததாகக் கருதத்தக்கது என்ற கிளைம் உட்பட (ஆனால் அது மட்டுமே அல்ல), Roblox விதிமுறைகளின் புரிதல் விளக்கம், பொருந்தும் தன்மை, அமலாக்கத் தன்மை அல்லது உருவாக்கத்தில் இருந்து எழுகின்ற அல்லது அது தொடர்பாக எழுகின்ற சர்ச்சைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான பிரத்தியேக அங்கீகாரம் நடுவருக்கே உள்ளதே தவிர, ஃபெடரல், மாநில அல்லது உள்ளூர் நீதிமன்றம் அல்லது ஏஜென்சி எதற்கும் கிடையாது; இருப்பினும், குறிப்பாக Roblox விதிமுறைகளின் எந்தப் பதிப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்பது தொடர்பாக ஏதேனும் சர்ச்சை எழுந்தால், நடுவர் தீர்வு நடத்தப்படும் முன்பு, அந்தக் குறிப்பிட்ட கேள்வி பற்றி ஒரு நீதிமன்றம் முடிவெடுக்கும். இந்தநடுவர் தீர்வு ஒப்பந்தம் பரந்துபட்ட புரிதல் விளக்கத்திற்கு உட்பட்டது, Roblox விதிமுறைகள் முடிந்த பிறகும் இவை செல்லுபடியாகும்.
- தீவிரத்தன்மை. இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தத்தின் ஏதேனும் விதிமுறை நடைமுறைப்படுத்த முடியாதது என்று தெரியவந்தால், அந்த விதிமுறை மட்டும் அகற்றப்படும், நடுவர் தீர்வு ஒப்பந்தத்தின் மீதமுள்ள பகுதிகள் முழு நடைமுறையில் இருக்கும். ஏதேனும் குறிப்பிட்ட ஒரு கிளைமுக்கு இந்த நடுவர் தீர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை பொருந்தக்கூடிய சட்டம் தடுப்பதாக ஒரு நீதிமன்றம் முடிவு செய்தால், அந்தக் கிளைம் நடுவர் தீர்வில் இருந்து அகற்றப்பட வேண்டும், இருப்பினும் மீதமுள்ள கிளைம்கள் கட்டுப்படுத்தும் நடுவர் தீர்வு மூலம் தீர்க்கப்படும்.
- விலகுதல். நீங்கள் நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் இருந்து முற்றிலுமாக விலகிக்கொண்டு, முதல் முறை சேவைகளுக்குப் பதிவுசெய்ததில் இருந்து 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ அறிவிப்பை Roblox-க்கு அனுப்புவதன் மூலம் எங்களிடம் ஏதேனும் சர்ச்சைக்காக வழக்கு தொடுக்கலாம். அதன் பிறகு, நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் செய்யப்படும் முக்கியமான மாற்றங்கள் குறித்து Roblox அறிவிப்பை வழங்கியதில் இருந்து 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ அறிவிப்பை அனுப்புவதன் மூலம் மட்டுமே இருந்து நீங்கள் அவற்றிலிருந்து விலகிக்கொள்ள முடியும் (பொருந்தக்கூடிய சட்டத்தின்படி கூடுதல் நாட்கள் தேவை என்றால் மட்டுமே இதற்கு விலக்கு உள்ளது). இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், நடுவர் தீர்வு முறையில் இருந்து விலகிக்கொள்வதற்கு பயனர் எழுத்துப்பூர்வ அறிவிப்பை Roblox Corporation, Legal Department, 3150 S. Delaware St., San Mateo, CA 94403 என்ற முகவரிக்கு சான்றளிக்கப்பட்ட U.S. மெயில் அல்லது ஃபெடரல் எக்ஸ்பிரஸ் (அல்லது அதற்கு சமமான சர்வதேச சேவையின் மூலம்) அனுப்ப வேண்டும். விலகல் அறிவிப்பு செல்லுபடியானதாக இருக்க வேண்டுமானால், விலக விரும்புகின்ற பயனரிடம் இருந்து (அல்லது அந்தப் பயனரின் பாதுகாவலரிடம் இருந்து) Roblox-க்கு அனுப்பப்பட வேண்டும், மேலும் அதில் இவை இருக்க வேண்டும்: (a) பயனரின் முழுப் பெயர், Roblox பயனர் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி, (b) பயனர் நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்ள விரும்புகிறார் அல்லது பொருந்தக்கூடிய வகையில் நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட முக்கிய மாற்றத்திலிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறார் என்று தெரிவிக்கின்ற ஒரு தெளிவான அறிக்கை மற்றும் (c) பயனரின் கையொப்பம் (அல்லது பயனர் சிறாராக இருந்தால் அவரது பாதுகாவலரின் கையொப்பம்). முக்கிய மாற்றத்தில் இருந்து விலகிக்கொள்வதாக இருந்தால், பயனர் குறிப்பாக எந்த முக்கிய மாற்றத்தில் இருந்து விலக விரும்புகிறார் என்பதையும் அந்த அறிக்கை அடையாளம் காட்ட வேண்டும். நடுவர் தீர்வு ஒப்பந்தத்திற்கு மட்டுமே விலகல் அறிவிப்பு பொருந்தும்; Roblox விதிமுறைகளின் மற்ற பகுதிகள் அனைத்தும் அப்போதும் பயனருக்கும் Roblox-க்கும் பொருந்தும். அதோடு, விலகல் அறிவிப்பை அனுப்புவதால், நடுவர் தீர்வு ஒப்பந்தத்தை முன்னர் ஏற்றுக்கொண்டது எதுவும் திரும்பப்பெறப்படாது அல்லது பிற வழிகளில் ரத்தாகாது. நடுவர் தீர்வு ஒப்பந்தத்தில் செய்யப்படும் முக்கிய மாற்றத்திலிருந்து விலகிக்கொள்வதன் மூலம், சர்ச்சை எதையும் நீங்கள் ஏற்றுக்கொண்ட நடுவர் திரிவு ஒப்பந்தத்தின் கடைசிப் பதிப்பிற்கு இணங்கவே சர்ச்சைக்கு நடுவர் தீர்வை நாட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
- விதிவிலக்குகள். நடுவர் தீர்வு ஒப்பந்தம் பின்வரும் விதிவிலக்குகளுக்கு உட்பட்டது:
- கிளைம்களுக்கான குழு அளவிலான தீர்வில் பங்குபெறுவதற்கான பயனர்களின் மற்றும் Roblox நிறுவனத்தின் உரிமை தக்கவைக்கப்படும்.
- யுனைட்டெட் ஸ்டேட்ஸில் வசிக்கின்ற பயனர்களுக்கு அல்லது முதல் முறை சேவைகளுக்குப் பதிவுசெய்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நடுவர் தீர்வு முழுதிலும் இருந்து சரியாக விலகிக்கொண்ட பயனர்களுக்குநடுவர் தீர்வு ஒப்பந்தம் பொருந்தாது.
- ஒரு சர்ச்சை சிறு கிளைம்களுக்கான நீதிமன்றத்தின் சட்ட எல்லைக்குள் இருக்கும்பட்சத்தில், பயனர் அல்லது Roblox ஆகிய இருவரில் ஒரு தரப்பு (MIDR செயல்முறையில் ஈடுபட்ட பிறகு) சர்ச்சையை பயனர் வசிக்கும் நாட்டில் உள்ள சிறு கிளைம்களுக்கான நீதிமன்றத்திற்கு அல்லது சான் மேட்டியோ கவுண்ட்டியில் உள்ள சுப்பீரியர் கோர்ட் ஆஃப் கலிபோர்னியாவிற்குக் கொண்டு செல்லலாம்.
- காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தகமுத்திரை அல்லது வர்த்தக ரகசிய உரிமைகளின் மீறல் நிகழ்ந்துள்ளதாகக் கூறும் க்ளைம் ஒன்று சர்ச்சையில் சம்பந்தப்பட்டிருந்தால், பயனரோ Roblox நிறுவனமோ இந்தப் பிரிவு 17-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி க்ளைமை ஃபெடரல் அல்லது மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.
-
- சர்ச்சைகளை எழுப்புவதற்கான காலவரம்பு. சேவைகளில் இருந்து அல்லது அவை தொடர்பாக எழும் எந்தச் செயல் நோக்கமும், அந்தச் செயல் நடந்த பிறகு அல்லது ஆரம்பநிலையில் அது தடுக்கப்பட்ட பிறகு ஒரு (1) வருடத்திற்குள் நடைபெற வேண்டும் என்பதை பயனரும் ROBLOX நிறுவனமும் ஒப்புக்கொள்கின்றனர்.
-
கட்டாய முறைசாரா சர்ச்சைத் தீர்வு. நமக்கிடைய ஒருபோதும் சர்ச்சை எதுவும் எழாது என்று நம்புகிறோம். அப்படி எழுந்தால், நல்ல நம்பிக்கை சார்ந்த, முறை சாரா முயற்சிகளே சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு பல சமயங்களில் விரைவான, செலவு குறைந்த, இரு தரப்புக்கும் அனுகூலமான விளைவுகளைத் தரக்கூடியவையாக இருக்கும் என்று நாம் இரு தரப்பும் உணர்ந்து கொண்டு ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே, கீழே உள்ள பிரிவு 13.a.vi-இல் விவரிக்கப்பட்டபடி தவிர, பிற விஷயங்களுக்கு நம்மில் யாரேனும் நடுவர் தீர்ப்பை நாடும் முன்பு அல்லது நீதிமன்றத்தில் ஏதேனும் கிளைமைத் தாக்கல் செய்யும் முன்பு, பின்வரும் MIDR செயல்முறையில் ஈடுபடுவோம் என்று நாம் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்கிறோம்:
நிர்வகிக்கும் சட்டம், சட்ட எல்லை மற்றும் இடம்.
- இங்கு வேறு விதமாகக் குறிப்பிட்டால் தவிர, சட்டத்தின் முரண்பாட்டுக் கோட்பாடுகளைப் பொருட்படுத்தாமல், Roblox விதிமுறைகள் கலிபோர்னியா மாநிலத்தின் சட்டங்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன.
- சிறு க்ளைம்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் தவிர, மேலே உள்ள பிரிவு 13-இல் விவரிக்கப்பட்டுள்ளபடி நடுவர் தீர்வு ஒப்பந்தத்திற்கு உட்படாத சர்ச்சை எதுவும் (ஏதேனும் காரணத்தால் நடுவர் தீர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த முடியாததாக ஆவது உட்பட) ஃபெடரல் அல்லது கலிபோர்னியா மாநிலத்தின் சான் மேட்டியோ கவுண்ட்டி நீதிமன்றங்களில் மட்டுமே தாக்கல் செய்யப்பட முடியும். மேலும் ஐரோப்பிய யூனியனின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை வேறுவிதமாகக் குறிப்பிட்டால் தவிர, அத்தகைய நோக்கங்களுக்கு அந்த நீதிமன்றங்களின் சட்ட எல்லைக்கு பயனரும் Roblox நிறுவனமும் ஒப்புக்கொள்கின்றனர்.
பொறுப்புத்துறப்பு, வாரண்டிகள் இல்லை.
- UGC பொறுப்புத்துறப்பு. பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியமானால் தவிர, பயனர்கள், கிரியேட்டர்கள் அல்லது பிறர் சேவைகளில் வெளியிடுகின்ற அல்லது பிற வழிகளில் கிடைக்கச் செய்கின்ற UGC எதையும் சோதனை செய்வது, ஒப்புதல் அழிப்பது, திருத்துவது அல்லது கட்டுப்படுத்துவது எதற்கும்Roblox பொறுப்பாகாது Roblox கடன்பட்டதும் அல்ல. இருப்பினும், Roblox விதிமுறைகளை மீறுகிறது அல்லது பிற வழிகளில் ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளது என்று Roblox கருதுகின்ற UGC எதையும் அவ்வப்போது எந்த அறிவிப்பும் இல்லாமலும் பயனருக்கு எந்தக் கடப்பாடும் இல்லாமலும் Roblox அகற்றலாம், திருத்தலாம், தடுக்கலாம் அல்லது கிடைப்பதை இடைநீக்கலாம். சேவைகளைப் பயன்படுத்தும்போது பயனர் பல்வேறு வகையான ஆதாரங்களில் இருந்து UGC-ஐப் பார்ப்பார் என்றும், UGC துல்லியமற்றதாக, மனதைப் புண்படுத்தக்கூடியதாக அல்லது ஆட்சேபிக்கத்தக்கதாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டுள்ளார் என்பதை பயனர் புரிந்துகொள்கிறார். UGC தொடர்பாக, Roblox-க்கு எதிராக பயனருக்கு உள்ள அல்லது இருக்கக்கூடிய சட்டப்பூர்வ அல்லது நியாயப்பூர்வ உரிமை அல்லது நிவாரணத்திற்கான தனது உரிமையைபயனர் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டு, விட்டுக்கொடுக்கிறார் . Roblox விதிமுறைகளை UGC மீறுவதாகத் தெரிகிறது என்று ஒரு பயனர் அல்லது உள்ளடக்க உரிமையாளர் தெரிவித்தால், Roblox அது குறித்து விசாரணை செய்து, UGC-ஐ அகற்றுவதா அல்லது அதற்கான அணுகலை முடக்குவதா என்று (இதை அறிவிப்பு எதுவுமின்றி Roblox எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்) முடிவெடுக்கலாம். தனது பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் சமூகத் தரநிலைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, தொழிற்துறையில் முன்னணியில் உள்ள தணிக்கை மற்றும் உரை வடிகட்டல் அம்சங்களை சேவைகளில் வழங்குவதே Roblox-இன் குறிக்கோள், அதே சமயம் அது போன்ற சிஸ்டங்கள் எதுவும் முற்றிலும் துல்லியமானவை கிடையாது, Roblox-இன் பயன்பாட்டு விதிமுறைகள் அல்லது சமூகத் தரநிலைகளை மீறுகின்ற உள்ளடக்கத்தை பயனர்கள் எதிர்கொள்ளவே மாட்டார்கள் என்று Roblox உறுதியளிக்க முடியாது.
- உள்ளடக்க ரேட்டிங்குகள் Roblox-க்குத் தெரிவிக்கப்பட்ட கூடுதல் தகவல்களின் அடிப்படையில் அல்லது அனுபவத்தில் ஒரு கிரியேட்டர் செய்த மாற்றம் போன்ற காரணங்களால், ஓர் அனுபவத்திற்கான உள்ளடக்க முதிர்ச்சி நிலை ரேட்டிங்குகள் அல்லது விளக்கங்கள் அவ்வப்போது மாற்றப்படலாம். அப்படி எதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்று தீர்மானிப்பதற்காக, ஓர் அனுபவத்தின் உள்ளடக்க முதிர்ச்சி நிலை ரேட்டிங்குகளையும் விளக்கங்களையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டியது முற்றிலும் பயனரின் பொறுப்பே ஆகும். உள்ளடக்க முதிர்ச்சி ரேட்டிங்குகளின் துல்லியத்திற்கு Roblox உத்தரவாதம் அளிக்கவில்லை. உள்ளடக்க முதிர்ச்சி நிலை ரேட்டிங்குகள் அல்லது விளக்கங்களின் துல்லியம், முழுமைத் தன்மை, செல்லுபடித் தன்மை அல்லது தரத்திற்கு Roblox பொறுப்பல்ல என்பதை பயனர் அறிந்து ஏற்றுக்கொள்கிறார்.
- உள்ளது உள்ளபடி. சேவைகளும் சேவைகளின் மூலம் கிடைக்கின்ற அனைத்து மெட்டீரியல்கள் மற்றும் உள்ளடக்கமும், “உள்ளது உள்ளபடி” என்ற அடிப்படையிலும், “கிடைப்பதற்கு ஏற்ப” என்ற அடிப்படையிலும், வெளிப்படையான அல்லது மறைமுகமான வாரண்டி அல்லது நிபந்தனை எதுவும் இல்லாமலுமே வழங்கப்படுகின்றன. பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவில், ROBLOX மற்றும் ROBLOX-இன் அதிகாரிகள், இயக்குநர்கள், பணியாளர்கள், ஆலோசகர்கள், இணை நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வணிகக் கூட்டாளர்கள், துணை நிறுவனங்கள், ஏஜென்ட்டுகள் (மொத்தமாக, “இணை நிறுவனத் தரப்புகள்” எனப்படும்), சேவைகள் மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கின்ற மெட்டீரியல்கள் மற்றும் உள்ளடக்கம் அனைத்தும் தொடர்பாக, பின்வருபவை உட்பட வெளிப்படையான அல்லது மறைமுகமான வாரண்டி எதையும் மறுக்கின்றனர்: (A) வர்த்தகத் தன்மை, குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும் தன்மை, தலைப்பு, முழுமையாக அனுபவித்து மகிழ்தல் அல்லது மீறலற்ற தன்மைக்கான ஏதேனும் மறைமுகமான வாரண்டி; மற்றும் (B) கையாளுதல், பயன்படுத்துதல் அல்லது டிரேடிங் செய்தல் போன்ற செயல்களில் இருந்து எழும் ஏதேனும் வாரண்டி. சேவைகளோ அல்லது சேவைகளின் ஏதேனும் பகுதியோ அல்லது உள்ளடக்கத்தின் ஏதேனும் மொழிபெயர்ப்புகள் உட்பட (ஆனால் அது மட்டுமே அல்ல) சேவைகளின் மூலம் வழங்கப்படும் ஏதேனும் மெட்டீரியல்கள் அல்லது உள்ளடக்கமோ தடையின்றிக் கிடைக்கும் என்றோ, பாதுகாப்பானது என்றோ அல்லது பிழைகள், வைரஸ்கள் அல்லது தீங்கு விளைவிக்கின்ற பிற விஷயங்கள் எதுவும் இல்லாதிருக்கும் என்றோ இணை நிறுவனத் தரப்புகள் உத்தரவாதம் அளிக்கவில்லை, மேலும் அத்தகைய சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவை சரிசெய்யப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கவில்லை.
- பொறுப்பல்ல. வாய்மொழியாக அல்லது எழுத்துப்பூர்வமாக பயனர் ROBLOX அல்லது சேவைகளின் மூலம் கிடைக்கின்ற ஏதேனும் மெட்டீரியல்கள் அல்லது உள்ளடக்கத்திலிருந்து பெற்ற அறிவுறுத்தல் அல்லது தகவல் எதுவும், ROBLOX விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டவை தவிர இணை நிறுவனத் தரப்புகள் அல்லது ROBLOX நிறுவனம் தொடர்பாக வேறு எந்த வாரண்டியையும் உருவாக்காது. சேவைகளைப் பயன்படுத்துவது அல்லது அணுகுவது, சேவைகளில் உள்ள பிற பயனர்களுடன் பயனரின் தொடர்பு/பரிவர்த்தனைகள், சேவைகளின் மூலம் கிடைக்கும் ஏதேனும் மெட்டீரியல்கள் அல்லது உள்ளடக்கம் விளைவாக நேரக்கூடிய சேதம் எதையும், பயனர் துணிந்தே ஏற்பதாக ஒப்புக்கொள்கிறார். பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவிற்கு இந்த வரம்புகள் பொருந்தும்.
கடப்பாட்டிற்கான வரம்புகள்.
பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவிற்கு, எந்தச் சூழ்நிலையிலும் சேவைகள் அல்லது சேவைகளில் உள்ள ஏதேனும் மெட்டீரியல்கள் அல்லது உள்ளடக்கத்தை அணுகுதல், பயன்படுத்துத்துதல் அல்லது அவற்றைப் பயன்படுத்த அல்லது அணுக முடியாமல் போவதன் காரணமாக நேரும் மறைமுகமான, தற்செயலான, பிரத்தியேகமான, விளைவான அல்லது தண்டனையாக நேருகின்ற சேதங்கள் (இலாபங்கள், நற்பெயரின் இழப்பு அல்லது வேறு ஏதேனும் புலனாகாத இழப்புக்கான சேதங்கள் உட்பட) எதுவும், வாரண்டி, ஒப்பந்தம், உரிமைத் தீங்கு (அலட்சியம் உட்பட), சட்டம் சார்ந்த அல்லது வேறு ஏதேனும் சட்டப்பூர்வக் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தாலும், மேலும் சேதம் குறித்து ROBLOX-க்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், பயனருக்கு ROBLOX நிறுவனமும் இணை நிறுவனத் தரப்புகளும் பொறுப்பாக மாட்டார்கள்.
பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவிற்கு, சேவைகளின் ஏதேனும் பகுதியின் பயன்பாடு அல்லது பயன்படுத்த முடியாமல் போவதில் இருந்து அல்லது அது தொடர்பாக எழுகின்ற அல்லது பிற வகையில் ROBLOX விதிமுறைகளின் கீழ் எழுகின்ற க்ளைம்கள் அனைத்திற்கும், அவை ஒப்பந்தப்படி இருந்தாலும், உரிமைத் தீங்கு அடிப்படையில் இருந்தாலும் அல்லது பிற வகைகளில் இருந்தாலும், பயனருக்கான ROBLOX மற்றும் இணை நிறுவனத் தரப்புகளின் ஒட்டுமொத்தக் கடப்பாடு $1,000 USD தான் என்று பயனர் ஒப்புக்கொள்கிறார் (மேலே பிரிவு 13-இல் குறிப்பிட்டுள்ளபடி தவிர அல்லது கிரியேட்டர் விதிமுறைகளில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர).
இழப்பீடு செய்தல்.
சேவைகளின் உங்கள் பயன்பாட்டிற்கு நீங்களே பொறுப்பேற்பதாக ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் மேலும் எந்த வழிகளிலும் பின்வருபவை தொடர்பாக நேரும் நியாயமான வழக்கறிஞர் கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட எல்லாக் கிளைம்கள், கடப்பாடு, சேதம், இழப்பு மற்றும் செலவிலிருந்தும் Roblox மற்றும் இணை நிறுவனத் தரப்புகளை இழப்பீடுகளில் இருந்து பாதுகாக்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள்: (a) சேவைகளின் உங்கள் அணுகல், பயன்பாடு அல்லது பயன்படுத்தியதாகக் கருதப்படுதல்; (b) Roblox விதிமுறைகள், Roblox விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் பிரதிநிதித்துவம், வாரண்டி அல்லது ஒப்பந்தத்தின் ஏதேனும் பகுதியை, அல்லது பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டம் அல்லது ஒழுங்குமுறையை நீங்கள் மீறுதல்; (c) ஏதேனும் அறிவுசார் சொத்து உரிமை, பொதுவாக்குதல் உரிமை அல்லது ரகசியத்தன்மை காக்கும் கடமை உட்பட ஏதேனம் மூன்றாம் தரப்பு உரிமையை நீங்கள் மீறுதல் அல்லது மீறுவதாகக் கருதப்படுதல் (d) உங்களுக்கும் ஏதேனும் மூன்றாம் தரப்பிற்கும் ஏற்படும் ஏதேனும் சர்ச்சை அல்லது சிக்கல். இழப்பீட்டிலிருந்து நீங்கள் பாதுகாக்க வேண்டிய விஷயம் எதிலும் Roblox-இன் சொந்த செலவில் பிரத்தியேகமாக தற்காப்பு நிலையை எடுத்து, கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள Roblox-க்கு முழு உரிமை உள்ளது (அந்த விஷயத்தில் இழப்பீட்டிலிருந்து காக்க வேண்டிய உங்கள் கடமையை இது வரம்புக்கு உட்படுத்தாது), அபப்டி நடக்கும் பட்சத்தில், அந்தக் கிளைம் தொடர்பாக Roblox-இன் தற்காப்பு நடவடிக்கைக்கு நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.கலிபோர்னியாவில் வசிப்பவர்களுக்கான அறிவிப்பு.
- புகார்கள். நீங்கள் கலிபோர்னியாவில் வசிப்பவராக இருந்தால், கலிபோர்னியா சிவில் சட்டத்தின் பிரிவு 1789.3-இன் படி, சேவைகள் தொடர்பான உகார்களைத் தீர்க்க அல்லது சேவைகளின் உங்கள் பயன்பாடு பற்றி கூடுதல் தகவல்களைப் பெற, 1625 N. Market Blvd., Suite S-202, Sacramento, CA 95834 என்ற முகவரியில் அஞ்சல் மூலம் அல்லது (800) 952-5210 என்ற எண்ணில் தோலைபேசி மூலம், கலிபோர்னியா நுகர்வோர் விவகாரத் துறையின் நுகர்வோர் சேவைகள் பிரிவின் புகார் உதவி யூனிட்டைத் தொடர்புகொள்ளலாம்.
- சிறுவர்கள். நீங்கள் கலிபோர்னியாவில் வசிக்கின்ற 18 வயதிற்குட்பட்ட நபராக இருந்தால், சேவைகளில் நீங்கள் பொதுவில் வெளியிட்டிருக்கக்கூடிய குறிப்பிட்ட தனிப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றுமாறு Roblox இடம் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம், சட்டம் அனுமதிக்கு மற்றும்/அல்லது அவசியமாக்கும் அளவிற்கு அத்தகைய கோரிக்கைக்கு Roblox இணங்க வேண்டும். அத்தகைய உள்ளடக்கத்தில் தனிப்பட்ட தகவல்கள் அடங்கலாம் ஆனால் இவை அடங்காது: (a) பெயர் அடையாளம் நீக்கப்பட்ட தகவல்கள் அல்லது (b) சேவைகளில் நீங்கள் பதிவேற்றிய UGC (அவற்றை வழங்குவதற்கு நீங்கள் தகுந்த பலன்களைப் பெற்றுள்ளீர்கள் என்பதால்). அத்தகைய கோரிக்கையை சமர்ப்பிக்க, Roblox உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளவும். அந்தக் கோரிக்கையில் உங்கள் பயனர் பெயர், நீங்கள் அகற்றப்பட விரும்புகின்ற உள்ளடக்கத்தின் தெளிவான விளக்கம் ஆகியவை இருக்க வேண்டும், அவற்றைக் கொண்டே Roblox உள்ளடக்கத்தைக் கண்டறிய முடியும். அஞ்சல்,தொலைபேசி அல்லது தொலைநகல் மூலம் வரும் கோரிக்கைகளை Roblox ஏற்காது, மேலும் நீங்கள் முழுமையற்ற தகவல்களை வழங்கியிருந்தால் பதிலளிக்கவும் முடியாமல் போகலாம். கோரிக்கையை சமர்ப்பித்தால் மட்டுமே, நீங்கள் வெளியிட்ட தகவல் அகற்றப்பட்டுவிடும் என்று உத்தரவாதம் இல்லை, அப்படி நீங்கள் கோரிக்கை சமர்ப்பித்தாலும் அகற்ற வேண்டியது சட்டப்படி அவசியமில்லை அல்லது அகற்ற அனுமதியில்லை என்பது போன்ற சூழ்நிலைகளும் ஏற்படலாம்.
இன்னபிற விதிமுறைகள்.
- பொதுவானவை.Roblox விதிமுறைகள் அனைத்துடனும் சேர்ந்து இந்தப் பயனர் விதிமுறைகளே, சேவைகள் மற்றும் அவற்றின் உங்கள் பயன்பாடு தொடர்பாக உங்களுக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையிலான முழு ஒப்பந்தத்தையும் உருவாக்குகின்றன. Roblox-இன் முன்கூட்டிய எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல், இந்த Roblox விதிமுறைகள் அல்லது அதன் கீழ் உங்களுக்குள்ள ஏதேனும் உரிமைகள் எதையும் நீங்கள், சட்டத்தின் இயல்பான செயல்முறைப்படி அல்லது பிற வழிகளில் யாருக்கும் மாற்றிக்கொடுக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும், அறிவிப்போ ஒப்புதலோ இல்லாமல், Roblox விதிமுறைகளை யாருக்கு வேண்டுமானாலும் Roblox மாற்றிக்கொடுக்க முடியும். Roblox மற்றும் உங்களது அடுத்து வருபவர்கள் மற்றும் உரிமை மாற்றம் பெற்றவர்களை இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்துகிறது, அவர்களுக்கும் பொருந்தும். இந்த Roblox விதிமுறைகளில் ஏதேனும் பகுதி செல்லுபடியாகாதது அல்லது நடைமுறைப்படுத்த முடியாதது என்றாகிப் போனால், நடைமுறைப்படுத்த முடியாமல் போன பகுதி கூடியமட்டும் அதிகபட்சம் பின்பற்றப்படும் (அல்லது, சட்டப்படி அதை நடைமுறைப்படுத்தவே முடியாது என்றானால், Roblox விதிமுறைகளில் இருந்து அது அகற்றப்படும்), அப்போது மீதமுள்ள பகுதில் தொடர்ந்து செயலிலும் நடைமுறையிலும் தொடரும். Roblox விதிமுறைகளில் எதுவும் ஒரு மூன்றாம் தரப்பினர் மீது ஏதேனும் உரிமைகள் அல்லது பலன்களை வழங்கவில்லை (பிரிவு 11.c-இல் குறிப்பிட்டுள்ளபடி Apple தவிர).
- நிறுத்துதல்; நீடித்திருத்தல். இந்தப் பயனர் விதிமுறைகள் அல்லது ஏதேனும் பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகள் நிறுத்தப்படும்பட்சத்தில், Roblox விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளின் பிரிவுகள் 6, 10, 11, 12, 13, 15, 16 மற்றும் 17 உட்பட, தங்கள் உள்ளார்ந்த இயல்பின்படி ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பிறகும் நீடித்திருக்க வேண்டிய ஏதேனும் பகுதி தவிர, Roblox மற்றும் பயனருக்கு பரஸ்பரம் உள்ள உரிமைகளும் கடமைகளும் முடிவுக்கு வரும்.
- விலக்கு. Roblox விதிமுறைகளில் பயனர் அல்லது Roblox ஏதேனும் பகுதிக்கு விலக்களித்தால், அது Roblox விதிமுறைகளில் உள்ள அத்தகைய ஏதேனும் பகுதி அல்லது வேறு பகுதிக்கும் தொடர்ந்து விலக்களிப்பதாகக் கருதப்பட முடியாது, Roblox விதிமுறைகளின் ஏதேனும் உரிமைகள் அல்லது பகுதியை நடைமுறைப்படுத்த Roblox நிறுவனமோ பயனரோ தவறினால், அத்தகைய உரிமை அல்லது பகுதிக்கு விலக்களிக்கப்பட்டதாகக் கருதப்பட முடியாது, அப்படி ஆகாது.
- புரிதல் விளக்கம். இந்த Roblox விதிமுறைகளில் உள்ள பிரிவுகளின் தலைப்புக்கள் வசதிக்காக உள்ளன, இந்த Roblox விதிமுறைகளின் புரிதல் விளக்கத்தில் அவை தாக்கம் கொண்டிருக்காது. இந்த Roblox விதிமுறைகளின் கீழ் முடிவெடுக்க Roblox அனுமதிக்கப்பட்ட எல்லாச் சூழ்நிலைகளிலும், அந்த முடிவு முற்றிலும் Roblox-ஐச் சார்ந்தது, மற்றும் அதன் சொந்த விருப்புரிமையின் பேரிலானது. Roblox விதிமுறைகள் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டவை, அதாவது பொருந்தக்கூடிய சட்டம் பிற வகையில் தடுத்தால் அல்லது அந்தச் சட்டப்படி அவசியமானால் தவிர, அவை பொருந்தும். சூழல் வேறு விதமாக இருந்தால் தவிர, “உட்பட” அல்லது அது போன்ற வார்த்தைகள் Roblox விதிமுறைகளில் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும், "உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல)" என்பதே அவற்றின் அர்த்தம் ஆகும், மேலும் Roblox விதிமுறைகளில் "அல்லது" என்ற சொல் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் "மற்றும்/அல்லது" என்பதே அதன் அர்த்தம் ஆகும்.
- சட்டத்திற்கு இணங்குதல் சேவைகளைப் பயன்படுத்தும்போது பொருந்தக்கூடிய எல்லா சட்டங்களுக்கும் இணங்கி நடக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். பயனர் தடை செய்யப்பட்ட நாடுகள் அல்லது தனிநபர்களுக்கு சேவைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுமதி செய்யவோ மறு ஏற்றுமதி செய்யவோ அல்லது இடமாற்றவோ கூடாது (அல்லது அவர்கள் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது). இதன் மூலம் பயனர் பின்வருமாறு தெரிவித்து, உத்தரவாதம் அளிக்கிறார்: (i) பயனர் U.S. அரசாங்க வணிகத் தடை விதிக்கப்பட்டுள்ள, அல்லது "தீவிரவாதத்தை ஆதரிக்கும்" நாடு என்று U.S. அரசாங்கம் அறிவித்துள்ள நாட்டில் வசிக்கவில்லை; மற்றும் (ii) பயனர் தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட தரப்புகள் என U.S. அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் இல்லை.
- ஆன்லைன் தகவல் பரிமாற்றத்திற்கான ஒப்புதல். சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், தனியுரிமைக் கொள்கையில் (இந்தப் பயனர் விதிமுறைகளில் குறிப்பிடுவதன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அதைப் படித்துவிட்டதாக உறுதியளிக்கிறீர்கள்) விவரிக்கப்பட்டுள்ளபடி, Roblox இடம் இருந்து மின்னணு வடிவத் தகவல்பரிமாற்றங்களைப் பெற நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும், மின்னணு வடிவத்தில் Roblox உங்களுக்கு அனுப்புகின்ற அறிவிப்புகள், ஒப்பந்தங்கள், தகவல் வெளிப்படுத்தல்கள் அல்லது பிற செய்திகள் எதுவும், அத்தகைய தகவல் பரிமாற்றம் எழுத்துப்பூர்வமாகப் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற ஏதேனும் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அளவிற்கு, சேவைகள் வழியாக நீங்கள் மின்னணு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, ஏதேனும் ஏற்றுக்கொள்ளும்போது அல்லது ஒப்புதல் அளிக்கும்போதெல்லாம், நீங்கள் தாள் ஆவணத்தில் கையொப்பமிட்டது போலவே கட்டுப்படுத்தும் வகையில் அவை மின்னணுக் கையொப்பத்துடன் பயன்படுத்த உருவாக்கப்பட்டவையே என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
- விசாரணைகள்; சட்ட அமலாக்கத் துறையுடன் ஒத்துழைப்பு. இந்த விதிமுறைகள் உண்மையாக மீறப்பட்டால் அல்லது அப்படி சந்தேகிக்கப்பட்டால், அது குறித்து விசாரிக்கவும் வழக்கு தொடரவும் Roblox-க்கு முழு உரிமையுள்ளது. ஏதேனும் சட்டம், ஒழுங்குமுறை, சட்டச் செயல்முறை அல்லது அரசாங்கக் கோரிக்கைக்குத் தேவையானால் அல்லது அவற்றை நிறைவேற்ற அது சரியாக இருக்குமானால் எந்தத் தகவலையும் Roblox வெளிப்படுத்தக்கூடும்.
- மேலோங்கும் மொழி. Roblox விதிமுறைகள் எதுவும் பல மொழிகளில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ள அளவில், விதிமுறைகளின் ஆங்கிலப் பதிப்பிற்கும் பிற மொழிப் பதிப்பிற்கும் வித்தியாசங்களோ முரண்பாடுகளோ இருந்தால், ஆங்கிலப் பதிப்பே கட்டுப்படுத்தும் மற்றும் மேலோங்கிக் கருத்தில் கொள்ளப்படும்.
தொடர்புத் தகவல்.
சேவைகளை 3150 S. Delaware St., San Mateo, CA 94403 என்ற முகவரியில் அமைந்துள்ள Roblox Corporation நிறுவனம் வழங்குகிறது. அந்த முகவரிக்கு ஏதேனும் செய்திகளை அனுப்புவதன் மூலம், Roblox உதவிப் படிவத்தைப் பூர்த்திசெய்வதன் மூலம் நீங்கள் Roblox நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது (888) 858-2569 என்ற எண்ணில் அழைப்பதன் மூலமும் Roblox நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் கலிபோர்னியாவில் வசிப்பவராக இருந்தால், மேலே உள்ள முகவரிக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட்டு ஒரு கோரிக்கையை அனுப்பி, Roblox விதிமுறைகளை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்.
கிரியேட்டர் விதிமுறைகள்
கிரியேட்டர்களே Roblox சமூகத்தின் இதயமாக விளங்குகின்றனர், சேவைகளில் UGC-ஐ உருவாக்குவதற்கும் வெளியிடுவதற்கும், அதேபோல் சேவைகளில்UGC அல்லது பிற Roblox IP அல்லது உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கும் நாங்கள் விதிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குவதற்காக நாங்கள் பின்வரும் விதிமுறைகளை (“கிரியேட்டர் விதிமுறைகள்”) உருவாக்கியுள்ளோம். இந்தக் கிரியேட்டர் விதிமுறைகள் Roblox பயனர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இந்த கிரியேட்டர் விதிமுறைகளுடன் கூடுதலாக, கிரியேட்டர்கள் தாங்கள் கிரியேட்டர் என்ற முறையிலும் மற்றும் சேவைகளை உபயோகிக்கும் ஒரு பயனர் என்ற முறையிலும் பயனர் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். மேலும் பொருந்தக்கூடிய இடங்களைப் பொறுத்து, பிற கூடுதல் விதிமுறைகளையும் (Roblox-இன் விளம்பரத் தரநிலைகள், விளம்பர ஒருங்கிணைப்புகளுக்கான விதிமுறைகள், முக மீடியா கேப்சர் தனியுரிமை அறிவிப்புக் கொள்கை மற்றும் DevEx விதிமுறைகள் போன்றவை) அவர்கள் பின்பற்ற வேண்டும்.
விளம்பர ஒருங்கிணைப்புகளுக்கான விதிமுறைகள், Roblox-இல் தங்களது அனுபவங்களில் கிரியேட்டர்கள் விளம்பரங்களை வைக்கும்போது பொருந்தும்.
கூடுதல் விதிகள் இவற்றுக்குப் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்: (i) Luobu Studio பயன்படுத்தும் கிரியேட்டர்கள் சேவைகளில் வெளியிட்ட UGC-ஐ ஒரு பயனர் அணுகுவதற்கு, மற்றும் சீன மக்கள் குடியரசில் விநியோகிப்பதற்காக Luobulesi Game-க்கு கிரியேட்டர் UGC-ஐ சமர்ப்பிப்பதற்கு (பின்னிணைப்பு A-ஐப் பார்க்கவும்); (ii) ஜப்பானில் உள்ள பயனர்களுக்கு (பின்னிணைப்பு B-ஐப் பார்க்கவும்); (iii) EU/EEA-இல் (மொத்தமாக “ஐரோப்பா” என்று குறிப்பிடப்படும்) உள்ள பயனர்கள் (பின்னிணைப்பு C-ஐப் பார்க்கவும்); (iv) வியட்நாமில் உள்ள பயனர்கள் (பின்னிணைப்பு D-ஐப் பார்க்கவும்); (v) யுனைட்டெட் கிங்டமில் உள்ள பயனர்கள் (பின்னிணைப்பு E-ஐப் பார்க்கவும்); மற்றும் (vi) ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்கள் (பின்னிணைப்பு F-ஐப் பார்க்கவும்).
வரையறைகள்.
இங்கு வரையறுக்கப்படாத, பெரிய எழுத்துகளில் உள்ள சொற்கள் ஏதேனும் இருந்தால், அவை பயனர் விதிமுறைகள் அல்லது Roblox அகராதியில் வரையறுக்கப்பட்டிருக்கும்.அறிவு சார் சொத்து.
-
Roblox சேவைகள்; உரிமைத்துவம்; உரிமம்.
- Roblox IP. Roblox IP-இன் உரிமைத்துவத்தை விவரிக்கும் விதிமுறைகள் பயனர் விதிமுறைகளின் பிரிவு 6.a-இல் உள்ளன.
- Roblox Studio. கிரியேட்டர்களுக்கு Roblox இலவச மென்பொருள் கருவியை வழங்குகிறது (“Studio”), அதைக் கொண்டு அவர்கள் சேவைகளில்அனுபவங்களையும் 3D விர்ச்சுவல் உள்ளடக்கத்தையும் (மொத்தமாக “UGC” என்று அழைக்கப்படும், இந்த வார்த்தை அசலில் பயனர் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளது) உருவாக்கலாம், மேம்படுத்தலாம், மாற்றம் செய்யலாம், இயக்கலாம் மற்றும் வெளியிடலாம். Studio மற்றும் அதிலுள்ள எல்லா அம்சங்களுக்குமான எல்லா உரிமைகளும் Roblox-க்கு உள்ளது மற்றும்/அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளுக்கு கிரியேட்டர் இணங்குவதற்கு உட்பட்டு, சேவைகளில் (“Studio உரிமம்”) Creator-இன் UGC-ஐ உருவாக்குதல், மேம்படுத்துதல், மாற்றம் செய்தல், பதிவேற்றுதல், வெளியிடுதல் ஆகிய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த பிரத்தியேகமற்ற, வரம்புக்குட்பட்ட, திரும்பப்பெறக் கூடிய, உள் உரிமத்திற்கு வழங்க முடியாத, பிறருக்கு மாற்றித்தர முடியாத உரிமத்தை கிரியேட்டருக்கு Roblox வழங்குகிறது. இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளுக்கு இணங்க கிரியேட்டர் Studio-ஐப் பயன்படுத்தலாம்.
- Roblox நீட்டிக்கப்பட்ட சேவைகள். குறிப்பிட்ட சில சேவைகளுக்கு Roblox-இன் இயல்புநிலை வரம்புகளைத் தாண்டி, சேவை உபயோகம் மற்றும் பேமெண்ட்டை நிர்வகிக்கும் வசதியை கிரியேட்டர்களுக்கு Roblox வழங்குகிறது. இயல்புநிலை வரம்புகளை நீங்கள் மீறிவிட்டு, நீட்டிக்கப்பட்ட சேவைகளுக்கு நீங்கள் பதிவுசெய்யாமல் இருந்தால், கூடுதல் உபயோகத்திற்கு ஏற்ற அளவில் உங்கள் Robux பேலன்ஸில் இருந்து Robux-ஐக் கழித்துக்கொள்ள நீங்கள் Roblox-ஐ அங்கீகரிக்கிறீர்கள். அப்படிக் கழித்துக்கொள்வது பற்றி Roblox உங்களுக்கு அறிவிப்பை வழங்கும். உங்கள் Robux பேலன்ஸ் நீங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு போதுமானதாக இல்லாவிட்டால், நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தும் வரை Roblox (a) Robux செலவிடும் வசதியை இடைநிறுத்தி வைக்கலாம் மற்றும் (b) பொருந்தக்கூடிய சேவை வரம்புகளை மீறிவிட்ட அனுபவங்களை தனிப்பட்டவையாக மாற்றி அமைக்கலாம். இயல்புநிலை வரம்புகளுக்குக் கூடுதலாக சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தினால், அது இந்த இழப்பீட்டு அங்கீகரிப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும். நீட்டிக்கப்பட்ட சேவைகள் பற்றி இங்கே மேலும் தெரிந்துகொள்ளலாம்.
- Roblox டெம்ப்ளேட்டுகள். “டெம்ப்ளேட்டுகளை” Roblox (பொதுவாக Studio மூலம்) வழங்குகிறது, UGC-ஐ இன்னும் எளிதாக உருவாக்க துவக்கப் புள்ளியாக கிரியேட்டர்கள் பயன்படுத்துவதற்கு உதவுகின்றன. அனைத்து டெம்ப்ளேட்டுகள் மற்றும் அவற்றில் உள்ள அனைத்து அம்சங்களும் Roblox-க்கு சொந்தம் அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் Studio உரிமத்தின் கீழ் டெம்ப்ளேட்டுகளைக் கிரியேட்டர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது. இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளுக்கு இணங்க மட்டுமே டெம்ப்ளேட்டுகளை கிரியேட்டர்கள் பயன்படுத்தலாம். ஒரு டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துவதால் மட்டுமே கிரியேட்டருக்கு அந்த டெம்ப்ளேட் மீதான உரிமைத்துவ உரிமைகள் எதுவும் கிடைத்துவிடாது.
-
Roblox கிளாசிக் அவதார்கள். குறிப்பிட்ட சில மாடல்களை Roblox உருவாக்கியுள்ளது, அவற்றில் உள்ள அறிவுசார் சொத்துகள் அனைத்தையும் சொந்தமாக வைத்துள்ளது, மேலும் சேவைகளில் மட்டும் கிரியேட்டர்கள் பயன்படுத்துவதற்காகக் கிடைக்கச் செய்கிறது, அவற்றில் அடங்குபவை: (a) 6 பகுதிகளை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மாடலில் இருந்து உருவாக்கப்பட்ட அவதார்கள் (வழக்கமாக “R6” அவதார்கள் என்று அழைக்கப்படும்); (b) 15 பகுதிகளை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மாடலில் இருந்து உருவாக்கப்பட்ட அவதார்கள் (வழக்கமாக “R15” அவதார்கள் என்று அழைக்கப்படும்); மற்றும் (c) கீழே உள்ள உட்பிரிவு 2.b-க்கு இணங்க, Roblox உருவாக்கிய பின்வரும் பாடி ஃபார்ம்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எதுவும் , அல்லது அவற்றை அடிப்படையாகக் கொண்ட, அவ்வப்போது மற்றும் பின்வரும் இணைப்புகளில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி Roblox திருத்தக்கூடிய தருவிப்புப் படைப்புகள் (Roblox-இன் சொந்த விருப்புரிமையின் பேரில் தீர்மானிக்கப்படுவது):
- Roblox Boy: https://www.roblox.test1709.icu/bundles/109/ROBLOX-Boy;
- Roblox Girl: https://www.roblox.test1709.icu/bundles/108/ROBLOX-Girl மற்றும் https://www.roblox.test1709.icu/bundles/282/ROBLOX-Girl;
- RobloxMan: https://www.roblox.test1709.icu/bundles/238/Man;
- Roblox Woman:https://www.roblox.test1709.icu/bundles/239/Woman;
(மொத்தமாக, “கிளாசிக் அவதார்கள்”).
கிரியேட்டர் துணைப் பிரிவு 2-இல் Roblox-க்குபயனர் வழங்கும் உர்மைகளுக்கு உட்பட்டு Roblox கிரியேட்டர்களுக்கு, (a) அத்தகைய கிளாசிக் அவதார்களை சேவைகளில் மட்டும் அவதார்களாகப் பயன்படுத்துவதற்கான உரிமை; (b) சேவைகளில் அல்லது இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி பிற வழிகளில் அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்களைப் (இவை ஒவ்வொன்றும் ஒரு “மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்”) பயன்படுத்தும் நோக்கத்திற்காக மட்டும், அத்தகைய கிளாசிக் அவதார்களில் மாற்றங்கள் செய்வதற்கு, தனிப்பயனாக்குவதற்கு மற்றும் மாற்றியமைப்பதற்கான உரிமை; மற்றும் (c) சேவைகளில் மட்டும் கிளாசிக் அவதார்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்களுக்கு கிரியேட்டரின் UGC-ஐப் பயன்படுத்துவதற்கான பிரகுத்தியேகமற்ற உரிமை.
மேலும் மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார் ஒவ்வொன்றின் Creator-க்கும், சேவைகளிலும் இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளளின் கீழ் அனுமதிக்கப்பட்ட பிற வழிகளில் மட்டும் அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதாரைப் பயன்படுத்துவதற்கான வரம்புக்குட்பட்ட, பிரத்தியேகமற்ற, பிறருக்கு மாற்றிக் கொடுக்க முடியாத ஓர் உரிமத்தை Roblox வழங்குகிறது. கிளாசிக் அவதார்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்களைக் கொண்ட தருவிப்புப் படைப்புகளை உருவாக்குவதற்கான பிரத்தியேக உரிமை உட்பட, கிளாசிக் அவதார்களிலும் மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்களிலும், இங்கு வெளிப்படையாக வழங்கப்படாத எல்லா உரிமைகளும் Roblox-க்கு உள்ளது.
எந்தச் சூழ்நிலையிலும் கிரியேட்டர்கள் சேவைகள் அல்லாத அசல் வடிவ அல்லது டிஜிட்டல் சரக்குப் பொருள், மோஷன் பிக்ச்சர், தொலைகாட்சி நிகழ்ச்சி, அரங்க நாடகம், புத்தகம் அல்லது வெளியீடு தொடர்பாக கிளாசிக் அவதார்கள் அல்லது மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்களைப் (அவற்றின் பகுதிகள் உட்பட) பயன்படுத்தக் கூடாது, இந்த ஒவ்வொரு சூழலிலும் இலவசமாக வழங்குவது அல்லது ஈட்டுத்தொகைக்குப் பரிமாற்றாக அணுகலை வழங்குவது (உரிமம் அல்லது விற்பனை உட்பட) என எதுவாக இருந்தாலும் இது பொருந்தும். இதன் மூலம், கிளாசிக் அவதார்கள் அல்லது மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்களின் அத்தகைய பயன்பாடு எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக கிரியேட்டர் தெரிவித்து உத்தரவாதமளிக்கிறார்.
- பில்டர் ஃபான்ட் ஃபேமிலி. சேவைகளில்UGC-ஐ உருவாக்குவது, மேம்படுத்துவது, மாற்றியமைப்பது, பதிவேற்றுவது மற்றும் வெளியிடுவதற்காக Roblox தனது பில்டர் ஃபான்ட் ஃபேமிலியைக் கிடைக்கச் செய்துள்ளது, மேலும் அவற்றிலுள்ள எல்லா உரிமைகளையும் தனக்குச் சொந்தமாகக் கொண்டுள்ளது. பில்டர் ஃபான்ட்டின் உபயோகம் பில்டர் ஃபான்ட் உரிமத்தால் நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் அதற்கு இணங்கும் நிபந்தனையின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மட்டுமே பில்டர் ஃபான்ட்டை கிரியேட்டர் பயன்படுத்தலாம்.
- பிற Roblox உள்ளடக்கம். Roblox சேவைகளிலும் அவற்றின் வழியாகவும் தனது சொந்த விருப்புரிமையின்பேரில் பிற உள்ளடக்கத்தை (“பிற Roblox உள்ளடக்கம்”) உருவாக்கலாம், மேம்படுத்தலாம், கிடைக்கச் செய்யலாம். இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளுக்கு கிரியேட்டர் இணங்குவதற்கு உட்பட்டு, சேவைகளில் மற்றும் Creator-இன் UGC தொடர்பாக மட்டும் அத்தகைய பிற Roblox உள்ளடக்கத்தைப் பயன்படுத்த பிரத்தியேகமற்ற, வரம்புக்குட்பட்ட, திரும்பப்பெறக் கூடிய, பிறருக்கு மாற்றித்தர முடியாத உரிமத்தை ("பிற உள்ளடக்க உரிமம்") கிரியேட்டருக்கு Roblox வழங்குகிறது. பிற Roblox உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்காக (அவற்றில் செய்யப்படும் ஏதேனும் மாற்றங்கள் அல்லது மேம்பாடுகள் உட்பட) ஏதேனும் பேமெண்ட் அல்லது ஈட்டுத்தொகை பெற கிரியேட்டர் தகுதிபெற மாட்டார்.
-
Roblox வர்த்தக முத்திரைகள். அனுபவங்கள், பயனர் பெயர்கள், காட்சிப் பெயர்கள் அல்லது சமூகத்தின் பெயர்கள் எதிலும் “Roblox”, “Blox” மற்றும் Roblox என்ற வார்த்தையைப் போலவே இருக்கும் (Roblox தனது சொந்த விருப்புரிமையின்பேரில் முடிவு செய்வது) பெயர்களை கிரியேட்டர்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலே குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மற்றும்Roblox பெயர் மற்றும் லோகோ வழிகாட்டல்களுக்கு கிரியேட்டர் இணங்குவதற்கு உட்பட்டு, விர்ச்சுவல் உள்ளடக்கத்தின் உருவாக்கம் தொடர்பாக உட்பட சேவைகளில் கிரியேட்டரின் அனுபவங்களுக்குள், பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவுசெய்யப்படாத Roblox வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு பிரத்தியேகமற்ற, தனிப்பட்ட, வரம்புக்குட்பட்ட, திரும்பப்பெறக் கூடிய, பிறருக்கு மாற்றித்தர முடியாத உரிமத்தை கிரியேட்டருக்கு Roblox வழங்குகிறது (“Roblox வர்த்தக முத்திரை உரிமம்”). Roblox வர்த்தக முத்திரைகளை கிரியேட்டர் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனைத்து நற்பெயர் மற்றும் மரியாதையும் Roblox-க்கு உரிய பலனாகவே இருக்கும். Roblox வர்த்தக முத்திரைகள் எதையும் (கிரியேட்டரின் அனுபவத்தின் தலைப்பில் இருக்கக்கூடிய வர்த்தக முத்திரை உட்பட) Roblox சேவைகளுக்கு வெளியே கிரியேட்டர் பயன்படுத்துவது Roblox பெயர் மற்றும் லோகோ வழிகாட்டல்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஜூன் 22, 2022-க்கு முன்பு வெளியிடப்பட்ட அனுபவங்களுக்கு: மேலே விவரிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கிரியேட்டர் விதிமுறைகள், Roblox பெயர் மற்றும் லோகோ வழிகாட்டல்கள் மற்றும் பிற அனைத்து Roblox விதிமுறைகளுக்குகிரியேட்டர் தொடர்ந்து இணங்குவதற்கு உட்பட்டு, “Roblox”, “Blox” அல்லது அது போன்ற பெயர்களை தங்கள் தலைப்பில் கொண்டுள்ள அனுபவங்களை ஜூன் 22, 2022-க்கு முன்பு சேவைகளில் வெளியிட்ட கிரியேட்டர்கள் அத்தகைய பெயர்களை, மேலும் பொருந்தினால், அத்தகைய அனுபவங்களுடன் தொடர்புடைய கிரியேட்டர் பயனர் பெயர்கள் அல்லது சமூகப் பெயர்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் அத்தகைய அனுபவத்தின் ஒவ்வொரு கிரியேட்டருக்கும், உங்கள் அனுபவத்தின் தலைப்பு தொடர்பாகப் பயன்படுத்துவதையும் அனுமதிக்கும் வகையில் Roblox வர்த்தக முத்திரை உரிமத்தை Roblox நீட்டிக்கிறது.
- உரிமத்தின் நிறுத்தம். எந்தக் காரணத்திற்காகவும், எப்போது வேண்டுமானாலும் Studio உரிமம், டெம்ப்ளேட் உரிமம், பிற Roblox உள்ளடக்க உரிமம் மற்றும் Roblox வர்த்தக முத்திரை உரிமத்தை நிறுத்த அல்லது மாற்றியமைக்க Roblox-க்கு முழு உரிமை உள்ளது.
-
பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் (UGC).
- UGC-இன் உரிமைத்துவம். மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்கள் தவிர மற்றும் கிரியேட்டருக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையிலான அல்லது கிரியேட்டருக்கும் பயனர்களுக்கும் இடையிலான இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளில் (மற்றும் பொருந்தக்கூடிய ஏதேனும் கூடுதல் விதிமுறைகள்), கிரியேட்டர் வழங்குகின்ற உரிமைகள் மற்றும் உரிமங்களுக்கு உட்பட்டு, சேவைகளில் கிரியேட்டர் இதுவரை உருவாக்கியுள்ள அல்லது இனி உருவாக்கப்போகிற (தனியாகவோ பிறருடன் சேர்ந்தோ), வெளியிடுகின்ற அல்லது கிடைக்கச் செய்கின்ற UGC எதற்கும் (அவற்றில் இருக்கக்கூடிய ஏதேனும் UGC அல்லாத Roblox IP தவிர) கிரியேட்டருக்கு இருக்கக்கூடிய பதிப்புரிமைகள் அனைத்தும் கிரியேட்டருக்கே தொடர்ந்து இருக்கும்.
-
UGC-க்கானRoblox உரிமம். குறிப்பிட்ட அம்சத்திற்குப் பொருந்தக்கூடிய ஏதேனும் கூடுதல் விதிமுறைகளில் முரண்படுகின்ற எந்த விதிகளையும் கட்டுப்படுத்தாத வகையில், சேவைகளைப் பயன்படுத்துதல் மற்றும் Robux-ஐ ஈட்டுவதற்கான கிரியேட்டரின் திறனுக்கு ஈடாக, மெஷின் லேர்னிங் மற்றும் அது தொடர்பான மாடல்களுக்குப் பயிற்சியளித்தல், மேம்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பாக உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல)சேவைகள் அல்லது Roblox-ஐ இயக்குதல், வழங்குதல், பிரபலமாக்குதல் அல்லது மேம்படுத்துதல் உட்பட, சேவைகளில் கிரியேட்டர் வெளியிடுகின்ற அல்லது அவற்றின் மூலம் கிடைக்கச் செய்கின்ற சேவைகளில் உள்ள ஏதேனும் UGC மற்றும் அத்தகைய UGC-ஐ உருவாக்குதல் மற்றும் மாற்றியமைத்தல் தொடர்பான, Studio-இல் உள்ள உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகள் உள்ளிட்ட இன்டராக்ஷன் தரவை முழுவதுமாக அல்லது அவற்றின் பகுதியை (அவற்றில் இருக்கும் ஏதேனும் வர்த்தக முத்திரைகள் மற்றும் அடிப்படையாக விளங்கும் சோர்ஸ் கோடு மற்றும் ஸ்கிரிப்ட்டுகள் உட்பட) ஹோஸ்ட் செய்ய, சேமித்து வைக்க, இடமாற்ற, மொழிபெயர்க்க, இயக்க, உள்ளூர்மயமாக்க, பொதுவில் காட்சிப்படுத்த (டிஜிட்டல் ஆடியோ டிரான்ஸ்மிஷன்கள் மூலம் மற்றும் த்ரூ-டு-தி ஆடியன்ஸ் முறையில் உட்பட), மறு-உருவாக்கம் செய்ய (காட்சிப் படங்களுடன் நேர ஒத்திசைவில் உருவாக்குவது உட்பட), மாற்றியமைக்க, தழுவல் படைப்புகளை உருவாக்க, தருவிப்புப் படைப்புகளை உருவாக்க, மேம்படுத்த, விநியோகிக்க, சேவைகள் தொடர்பான ஏதேனும் வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்த ஒரு நிரந்தரமான, உலகளாவிய, பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத உரிமை மற்றும் உரிமத்தை Roblox-க்கு கிரியேட்டர் வழங்குகிறார் (பிற பயனர்கள், கிரியேட்டர்கள் உட்பட (ஆனால் அவர்கள் மட்டுமே அல்ல) எந்தவொரு நபருக்கும் நிறுவனத்திற்கும் உள் உரிமத்திற்கு அளிப்பதற்கான உரிமையுடன்).
மேலே குறிப்பிட்டுள்ளவை இருந்தாலும், சேவைகளில் அல்லது வெளியே கிரியேட்டரின் UGC-ஐ ஒரு கிளாசிக் அவதார் அல்லது மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதாருக்குப் பயன்படுத்துவதற்கான பிரத்தியேகமான, உலகளாவிய, திரும்பப்பெற முடியாத, நிரந்தரமான, முழுவதும் பணம் செலுத்தப்பட்ட, உள் உரிமம் வழங்கத்தக்க உரிமையை Roblox-க்கு கிரியேட்டர் வழங்குகிறார்; இருப்பினும் சேவைகளுக்கு வெளியிலான Roblox-இன் உரிமையில், (a) ஒரு கிரியேட்டர் வடிவமைத்த ஷர்ட்கள், பேன்ட்கள் அல்லது டி-ஷர்ட்களைப் (அவற்றில் இருக்கக்கூடிய ஏதேனும் Roblox IP நீங்கலாக) பயன்படுத்துவதற்கான உரிமையும்; (b) கிரியேட்டருக்குச் சொந்தமான அல்லது அவரால் கட்டுப்படுத்தப்படுகின்ற வர்த்தக முத்திரைகள்; அல்லது (c) சேவைகளில் கிரியேட்டர் வெளியிட்ட நேரத்திற்கு முன்பு சேவைகளுக்கு வெளியே வெளியிடப்பட்ட, ஒரு கிரியேட்டருக்குச் சொந்தமான அல்லது அவரால் கட்டுப்படுத்தப்படுகின்ற பதிப்புரிமை பெற்ற மெட்டீரியல்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையும் சிறப்பாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
இங்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் உரிமங்களுக்கு உட்பட்டு, ஒரு கிரியேட்டர் ஏதேனும் மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதாரில் கொண்டுள்ள அல்லது பெற்றுள்ள ஏதேனும் உரிமை, சொந்தம் அல்லது பலன் உரிமையின் அளவின்படி, இதன் மூலம் அத்தகைய உரிமை, சொந்தம் மற்றும் பலன் உரிமை அனைத்தையும் திரும்பப்பெற முடியாதபடி Roblox-க்கு கிரியேட்டர் ஒப்படைக்கிறார். அத்தகைய கிரியேட்டர் வழங்கியிருக்கக்கூடிய ஏதேனும் உரிமங்களிலான உரிமைகள் உட்பட, அவற்றுக்கான எல்லா அறிவுசார் சொத்து உரிமைகளும் பிற உரிமைத்துவ உரிமைகளும் இந்த ஒப்படைப்பில் அடங்கும். இந்த Roblox விதிமுறைகளின் முந்தைய பதிப்புகளின் கீழ் உருவாக்கப்பட்ட ஏதேனும் மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதாரில் உள்ள உரிமைகளும் இதில் அடங்கும். மேலே விவரிக்கப்பட்டவை இருந்தாலும், Roblox தனது சொந்த விருப்புரிமையின் பேரில், கிளாசிக் அவதார் அல்லது மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார் போல (அல்லது அனைத்தும் Roblox தனது முழு விருப்புரிமையின் பேரில் தீர்மானிக்கும்படி அவற்றின் தருவிப்புப் படைப்பைப் போல) இல்லாதபடிக்கு ஒரு கிளாசிக் அவதார் அல்லது மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதாரைத் தனிப்பயனாக்கியுள்ள கிரியேட்டரை, இந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள நிரந்தரமான, உலகளாவிய, பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத உரிமை மட்ட உரிமத்தை கிரியேட்டர் Roblox-க்கு வழங்குவதற்கு உட்பட்டு அத்தகைய தனிப்பயனாக்கிய கிளாசிக் அவதார் அல்லது மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதாரிலான எல்லா உரிமைகள், சொந்தம் மற்றும் பலன்களைப் பெற அனுமதிக்கலாம்.
கிரியேட்டர் GDPR அல்லது அதற்கு இணையான தனியுரிமைச் சட்டங்களின்படி மறக்கப்படுவதற்கான உரிமையைப் பயன்படுத்தியிருந்தாலும், இங்கே அனுமதிக்கப்பட்டபடி சேவைகள் அல்லது Roblox-இன் பிரபலப்படுத்துதல் மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பாக தற்போதுள்ள அல்லது எதிர்காலத்தில் உருவாக்கப்படக்கூடிய மீடியா அல்லது விநியோக சேனலில் தனது UGC-ஐ கிடைக்கச் செய்ய கிரியேட்டர் ஒப்புக்கொள்கிறார் (இந்தப் பிரிவின் மேலே உள்ள பத்திகளில் மொத்தமாக “UGC உரிமம்” என்று குறிப்பிடப்படும்).
கிரியேட்டரின் UGC-ஐப் (மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்கள் தவிர) ("துணைப் பயன்பாடு") பயன்படுத்தி சேவைகள் அல்லது Roblox-ஐ மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துவதற்கான Roblox-இன் உரிமையில், சேவைகள் அல்லது Roblox-ஐ புரொமோட் செய்வது, மார்க்கெட் செய்வது அல்லது விளம்பரப்படுத்த அத்தகைய UGC-ஐப் பயன்படுத்துவதும் உள்ளடங்கும். சேவைகளை விளம்பரப்படுத்துவதற்காக வணிகநோக்கற்ற கல்விப் பயன்பாடுகளுக்காகவும் (மேலும் அந்தப் பயன்பாடு வணிக நோக்கற்றதா அல்லது கல்வி சார்ந்ததா என்பதை Roblox நியாயமான வகையில் தீர்மானிக்கும்) கிரியேட்டரின் UGC-ஐ Roblox பயன்படுத்தலாம். Robux-ஐப் பெறக்கூடிய திறன் தவிர, பெயர் குறிப்பிடல் அல்லது ஈட்டுத்தொகை எதையும் எந்தக் காரணத்திற்காகவும் கிரியேட்டருக்கு Roblox வழங்க வேண்டியதில்லை , அதோடு இந்தப் பிரிவில் கிரியேட்டர் வழங்குகின்ற உரிமத்தை Roblox பயன்படுத்த வேண்டியதும் இல்லை அல்லது இங்கே குறிப்பிடப்பட்ட உரிமைகள் எதையும் பயன்படுத்த வேண்டியதும் இல்லை.
கிரியேட்டரின் சொந்த விருப்புரிமையின்பேரில், எப்போது வேண்டுமானாலும் ஓர் அனுபவத்தில் உள்ள எந்த மற்றும் எல்லா உள்ளடக்கத்தையும் நீக்கும் அல்லது புதுப்பிக்கும் உரிமை கிரியேட்டருக்கு உள்ளது (மேலும் சட்டத்தால் அவசியமாக்கப்பட்டாலும் அத்தகைய உள்ளடக்கத்தை கிரியேட்டர் நீக்குவார் அல்லது புதுப்பிப்பார்), அதே சமயம் அப்படி நீக்கம் அல்லது புதுப்பிப்பு ஏதேனும் நடந்திருந்தாலும், இந்தக் கிரியேட்டர் விதிமுறைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும் அல்லது கிரியேட்டரின் கணக்கு நிறுத்தப்பட்டிருந்தாலும் அல்லது இடைநீக்கப்பட்டிருந்தாலும்: (i) ஒரு கிரியேட்டர் உருவாக்கி, ஒரு பயனர் செல்லுபடியான முறையில் வாங்கிய அல்லது பிற வழிகளில் செல்லுபடியான முறையில் பெற்ற ஓர் அனுபவம், விர்ச்சுவல் உள்ளடக்கம் நீக்கப்பட்ட காரணத்தால் அதன் பிறகு சாத்தியமல்ல என்ற சூழல் தவிர்த்து பிற சூழல்களில், சேவைகளின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க மற்றும் அவற்றுக்கு உட்பட்டு அந்த உள்ளடக்கம் அத்தகைய பயனர் தொடர்ந்து காலவரையின்றி (அல்லது UGC சந்தாக்களாக இருந்தால், வாங்கப்பட்ட சந்தாக் காலம் வரை) அணுகும்படி மற்றும் பயன்படுத்தும்படி இருக்கும், மேலும் (ii) ஓர் உரிமத்தின்படி அல்லது பிற வழிகளில் இந்த Roblox விதிமுறைகளின்படி ஏற்கனவேRoblox பயன்படுத்திக் கொண்டிருக்கும் அல்லது துணைப் பயன்பாட்டின் ஒரு பகுதியாக Roblox ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஏதேனும் UGC அல்லது பிற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான Roblox-இன் உரிமை நிரந்தரமாகத் தொடரும்.
கிரியேட்டரின் UGC-க்கானஉள் உரிமமளிப்பதற்கு Roblox-க்கு உள்ள உரிமைகளுடன் கூடுதலாக, குறிப்பிட்ட சில UGC-ஐ சேவையில் கிரியேட்டர் வெளியிடும்போது, அத்தகைய UGC-ஐ நேரடியாக பயனர்களுடன் பகிர கிரியேட்டர் விரும்புகிறாரா என்று கேட்கப்படும். கிரியேட்டர் அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் கிரியேட்டர் இந்த உரிமையை வழங்க ஒப்புக்கொண்டால், கிரியேட்டருக்கு மேற்படி கடப்பாடு எதுவும் இல்லாமல் பிற பயனர்கள் சேவைகளில் தங்கள் அனுபவங்கள் மற்றும் பிற UGC-ஐ உருவாக்குவதற்கு கிரியேட்டரின் UGC-ஐப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிரியேட்டரின் விர்ச்சுவல் உள்ளடக்கம் ஒரு பயனருக்கு விற்கப்படும்போது அல்லது பிற வழிகளில் வழங்கப்படும்போது, கிரியேட்டர் ஒப்புக்கொள்கிறார், இதன் மூலம் Roblox-க்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு இணங்க மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கம் கிரியேட்டரால் பயனருக்கு விற்கப்பட்டதா அல்லது வழங்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், சேவைகளில்விர்ச்சுவல் உள்ளடக்கம் அதன் பிறகு அணுக முடியாதபடி இருந்தாலும் கூட, அத்தகைய விர்ச்சுவல் உள்ளடக்கத்தை கால வரையின்றி (Roblox விதிமுறைகளுக்கு இணங்க மற்றும் உட்பட்டு) பயனர் தொடர்ந்து அணுகவும் பயன்படுத்தவும் Roblox அனுமதிக்கக்கூடும்.
இந்தக் கிரியேட்டர் விதிமுறைகள் அல்லது பிற ஏதேனும் Roblox விதிமுறைகளை கிரியேட்டர் மீறுவது அல்லது பின்பற்றாமல் போவதன் காரணமாக கிரியேட்டரின் கணக்கு நிறுத்தப்பட்டாலும் இந்த UGC உரிமத்தின் கீழ் Roblox-க்கு உள்ள உரிமைகள் தொடர்ந்து செயலில் இருக்கும்.
- த்ரூ-டு-தி-ஆடியன்ஸ் உரிமைகள். இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளில் கிரியேட்டர் வழங்கும் உரிமைகள் த்ரூ-டு-ஆடியன்ஸ் முறையில் வழங்கப்படுகின்றன, அதாவது மூன்றாம் தரப்பு சேவைகளின் உரிமையாளர்கள் அல்லது இயக்குபவர்கள், சேவைகளில் கிரியேட்டர் கிடைக்கச் செய்துள்ள அல்லது Roblox-இன் சேவைகளின் வழியாக மூன்றாம் தரப்பு சேவைகளில் பயன்படுத்தப்படுகிற UGC-க்காக கிரியேட்டர் அல்லது வேறு யாருக்கும் கடப்பாடுகளைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
- சேவைகளில் UGC-ஐ வெளியிடுவதற்கான அங்கீகாரம். ஒரு கிரியேட்டர் UGC-இன் உரிமையாளராக அல்லது அதன் எல்லாப் பகுதிகளுக்குமான உரிமைகளை வழங்குவதற்கு முழு அங்கீகாரம் பெற்றவராக இல்லாவிட்டால், சேவைகளில் UGC எதையும் கிரியேட்டர் வெளியிடக்கூடாது அல்லது பிற வழிகளில் கிடைக்கச் செய்யக் கூடாது. இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 11-இன் கீழ் உள்ள கிரியேட்டரின் கடப்பாடுகளை (மற்றும் Roblox விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ள பிற அனைத்துக் கடப்பாடுகளை) வரம்புக்கு உட்படுத்தாமல், சேவைகளில் கிரியேட்டர் UGC-ஐ வெளியிட்டதன் அல்லது கிடைக்கச் செய்ததன் விளைவாக எந்தவொரு நபருக்கும் செலுத்த வேண்டியதான தொகைகள் அனைத்தையும் செலுத்த கிரியேட்டர் ஒப்புக்கொள்கிறார்.
- UGC கிடைப்பின் இடைநீக்கம். ஏதேனும் UGC அல்லது பிற உள்ளடக்கம் ஏதேனும் சட்டங்கள் அல்லது சேவைகளுடன் தொடர்புடைய அறிவுசார் சொத்து உரிமைகள் அல்லது கோட்பாடுகள் அல்லது ஏதேனும் வழிகாட்டல்கள் அல்லது கொள்கைகளை மீறினால், அல்லது பயனர்கள், சேவைகள் அல்லது Roblox-இன் மதிப்பிற்கு அத்தகைய UGC தீங்கு விளைவிக்கிறது அல்லது விளைவிக்கலாம் என்று Roblox தனது சொந்த விருப்புரிமையின்பேரில் தீர்மானித்தால் Roblox தனது சொந்த விருப்புரிமையின்பேரில், சேவைகளில் உள்ள அத்தகைய UGC அல்லது பிற உள்ளடக்கம் எதையும், எப்போது வேண்டுமானாலும், நிரந்தரமாக உட்பட, எவ்வளவு கால அளவிற்கு வேண்டுமானாலும், எந்த அறிவிப்பும் இன்றி கிடைக்கும் நிலையை இடைநீக்கலாம் அல்லது நீக்கலாம். இந்தப் பிரிவிற்கு இணங்க ஏதேனும் UGC-ஐ இடைநீக்குவதற்காக Roblox கிரியேட்டருக்கு எந்தக் கடப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை, கொண்டிருக்காது.
- UGC-ஐப் பயன்படுத்துவதற்கான வரம்புகள். இங்கு வழங்கப்பட்டுள்ள பிற வரம்புகள் எதையும் வரம்புக்கு உட்படுத்தாத வகையில், மேலே விவரிக்கப்பட்டபடி, UGC மீது கிரியேட்டருக்கு உரிமைத்துவம் (மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்கள் மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் பிற UGC-ஐகிளாசிக் அவதார்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கிளாசிக் அவதார்களுக்குப் பயன்படுத்துவது தவிர) இருந்தாலும், கிரியேட்டர் எந்தச் சூழ்நிலையிலும் (சேவைகளுக்குள் மற்றும் வெளியே உட்பட, எந்த ஊடகத்திலும் அல்லது வடிவத்திலும்) கிரியேட்டரின் UGC-ஐப் பின்வரும்படி பயன்படுத்தக கூடாது: (a) மனதைப் புண்படுத்துகின்ற, இழிவுபடுத்துகின்ற, பாலியல் ரீதியாக வெளிப்படையான அல்லது பிற வழிகளில் ஆட்சேபிக்கத்தக்க விதத்தில் (ஒவ்வொரு சூழலிலும், தனது சொந்த விருப்புரிமையின்பேரில் Roblox தீர்மானிக்கும்படி) பயன்படுத்தக்கூடாது; (b) Roblox-ஐ இழிவுபடுத்துகிற அல்லது பழிக்கின்ற விதத்திலான, தவறான, களங்கப்படுத்துகின்ற கருத்துகள் தொடர்பாகப் பயன்படுத்த்தக்கூடாது; அல்லது (c) கிரியேட்டர் Roblox உடன் இணைந்து செயல்படுகிறார் அல்லது கிரியேட்டர் அல்லது பொருந்தக்கூடிய UGC-ஐ அவர்கள் பயன்படுத்துவதை Roblox ஆதரிக்கிறது என்று உள்நோக்கத்துடன் தோன்றச் செய்யக்கூடிய அல்லது அப்படி மறைமுகமாகத் தோன்றச் செய்ய வாய்ப்புள்ள விதத்தில் பயன்படுத்தக்கூடாது.
- மீறல் மற்றும் DMCA. Roblox படைப்புத் திறனை ஊக்குவிக்கிறது, கிரியேட்டர்கள் உட்பட மற்றவர்களின் அறிவுசார் சொத்து உரிமைகளை மதிக்கிறது. பதிப்புரிமை உரிமையாளர் அல்லது ஒரு பதிப்புரிமை உரிமையாளரின் அல்லது வர்த்தக முத்திரை உரிமையாளரின் ஏஜென்ட் (பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரை உரிமையாளர் அல்லது ஏஜென்ட்டாக இருக்கும் பிற கிரியேட்டர்கள் உட்பட (மொத்தமாக “உரிமைதாரர்கள்”))சேவைகளில் இருக்கும் ஏதேனும் உள்ளடக்கம் (UGC உட்பட) அவர்களது பதிப்புரிமைகள் அல்லது வர்த்தக முத்திரை உரிமைகளை மீறுவதாக நம்பினால், பயனர் விதிமுறைகளின் பிரிவு 6.d-இல் விவரிக்கப்பட்டுள்ள புகாரளிப்புச் செயல்முறையின்படி ஓர் அறிவிப்பை சமர்ப்பிக்கலாம். Roblox விதிமுறைகள் முழுவதிலும் குறிப்பிட்டுள்ளபடி, தகுந்த சூழ்நிலைகளில், DMCA விவரிக்கும்படி மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் என்று தனது சொந்த விருப்புரிமையின்பேரில் Roblox தீர்மானிக்கும் பயனர்களின் (அல்லது கிரியேட்டர்களின்) கணக்குகளை Roblox நிறுத்தக்கூடும்.
- அறிவு சார் சொத்து கருவிகள். Robloxசேவையில் உரிமைதாரர்கள் தங்களது அறிவுசார் சொத்துகளை கண்டறியவும் நிர்வகிக்கவும் உதவுகின்ற அறிவுசார் சொத்து சார்ந்த கருவிகளின் தொகுப்பை Roblox வழங்குகிறது. உங்கள் அனுபவத்தில் தனது அறிவுசார் சொத்து பயன்படுத்தப்படுகிறது என்று ஓர் உரிமைதாரர் நம்பினால், உங்கள் அனுபவத்தில் அந்த உள்ளடக்கத்தை உரிமைகோர அவர்கள் தேர்வு செய்யலாம் அல்லது அகற்றுமாறு உங்களுக்குக் கோரிக்கை விடுக்கலாம். உங்களின் அனுபவத்தில் உள்ள உள்ளடக்கத்தை ஓர் உரிமைதாரர் உரிமைகோரும்போது, குறிப்பிட்ட சில பலன்களுக்கு பரிமாற்றாக, உங்கள் அனுபவம் சேவையில் தொடர்ந்து இருக்க உரிமைதாரர் அனுமதிக்கிறார். முதலில், உரிமைதாரர் உங்கள் அனுபவத்தின் பெயரின் கீழ் உள்ள ஏதேனும் Robux ஈட்டல்களின் ஒரு பங்கைப் பெறுவார், விர்ச்சுவல் உள்ளடக்கம், விளம்பரங்கள், ஈடுபாடு அடிப்படையிலான பேமெண்ட்டுகள் ஆகியவற்றின் மூலம் பெற்ற Robux-இன் பங்கும் இதிலடங்கும். இரண்டாவதாக, உங்கள் அனுபவத்தை உரிமைதாரர் கண்காணிக்கலாம், அப்படிச் செய்யும் பட்சத்தில், உங்கள் அனுபவம் பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட ஈடுபாட்டுத் தரவை உரிமைதாரர் பெறக்கூடும், மூன்றாவதாக கூடுதல் உள்ளடக்கத் தரநிலைகளுக்கு இணங்குவதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி உரிமைதாரர் உங்களிடம் கேட்கலாம். உங்கள் அனுபவத்தில் இருக்கும் உள்ளடக்கத்திற்கு ஓர் உரிமைதாரர் உரிமை கோரினால், உங்கள் அனுபவம் தவறுதலாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக நீங்கள் நம்பினால், அல்லது உரிமை கோரப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் அகற்றியிருந்தால் உரிமை கோரலை மறுக்க அல்லது மேல்முறையீடு செய்ய உங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் இருக்கும். உங்கள் அனுபவத்தில் இருக்கும் உள்ளடக்கத்தை ஓர் உரிமைதாரர் உரிமை கோரினால், எப்படி மறுப்பு தெயரிவிப்பது அல்லது மேல்முறையீடு செய்வது என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் வழிமுறைகள் உங்களுக்கு வழங்கப்படும். ஏதேனும் மறுப்பு அல்லது மேல்முறையீடு செயல்முறையின் போது உட்பட, உங்கள் அனுபவத்தில் இருக்கும் உள்ளடக்கத்திற்கு ஓர் உரிமைதாரர் உரிமை கோரும் காலகட்டத்தில், உங்கள் அனுபவத்தில் அவர்களின் அறிவுசார் சொத்து இருப்பதினால் எழும் ஏதேனும் உரிமைகோரல்கள் எதற்காகவும், உரிமைதாரருக்கு எதிராக நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கமாட்டீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் உரிமை கோரும் அனுபவத்திற்கும், குறிப்பாக உரிமைதாரரின் அறிவுசார் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட தருவிப்புக் கூறுகளுக்கும், உரிமையாளரின் எதிர்காலப் படைப்புகளுக்கும் இடையே உள்ள ஏதேனும் ஒற்றுமைக்கு உரிமைதாரர் பொறுப்பேற்க மாட்டார் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
-
Roblox சேவைகள்; உரிமைத்துவம்; உரிமம்.
குழுக்கள் மற்றும் சமூகங்கள்.
-
வரையறைகள்.
- “சமூகம்” என்பது கிரியேட்டர்களும் பயனர்களும் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசவும், சிக்கல்களைப் பற்றிப் புகாரளிக்கவும், இன்னும் உறுதியான தொடர்புகளை உருவாக்கவும் உதவும் இடமாகும். ஒரு சமூகம் விற்கும் மார்க்கெட்பிளேஸ் ஐட்டங்களை, அந்த சமூகத்தின் ஸ்டோர் பிரிவில் பார்க்கலாம்.
- “குழு” என்பது சமூக வகையைச் சேர்ந்தது. இதில், DevEx திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் பயனர் உள்ளடக்கத்தை உருவாக்கவும், வருவாய் ஈட்டவும் இணைந்து செயல்படும் கிரியேட்டர்கள் இருப்பார்கள்.
- குழு/தகவல்தொடர்பு அம்சங்கள். ஒரு குழு/சமூகத்தை உருவாக்கினால் அல்லது அதில் இணைந்தால், அந்தக் குழு/சமூகத்திற்கு உறுப்பினர்களை அழைப்பது மற்றும் அதில் இணைவதற்கான கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்வது போன்ற கூடுதல் அம்சங்களுக்கான அணுகலை நீங்கள் பெறுவீர்கள். ஒரு சமூகத்தை உருவாக்குவது எப்படி என்ற பக்கத்தில் உள்ள வழிமுறைகளையோ அல்லது கிரியேட்டர் ஹப் குழுக்கள் பக்கத்தில் உள்ள வழிமுறைகளையோ பின்பற்றி நீங்கள் ஒரு குழு/சமூகத்தை உருவாக்கலாம்.
- உரிமைகள் மற்றும் அதிகாரம். ஒரு குழுவில் பங்கேற்பதன் மூலம், (i) இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி அல்லது உரிமையாளருக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையே செய்துகொண்டுள்ள ஏதேனும் பிற ஒப்பந்தத்திற்கு இணங்க குழு உருவாக்கிய ஏதேனும் UGC-இன் Roblox-இன் பயன்பாட்டை அங்கீகரிப்பதற்காக; மற்றும் (ii) சேவைகளில் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஏதேனும் செயல்பாடுகள் அல்லது விற்கப்பட்ட UGC-க்காக பேமெண்ட்டுகளைப் பெறுவதற்காக தங்கள் சார்பாகச் செயல்பட உரிமையாளருக்கு கிரியேட்டர் வழங்குகிறார் (அத்தகைய உரிமையாளர் காலப்போக்கில் மாறக்கூடும்) தனிப்பட்ட மற்றும் பிரத்தியேகமான அதிகாரத்தை வழங்குகிறார். இதன் மூலம் குழுவின் சார்பாக ஓர் உரிமையாளருக்கு Roblox செலுத்திய ஏதேனும் பேமெண்ட்டுகளுக்கு எதிராக குழு உறுப்பினர்கள் Roblox-க்கு எதிராக அவர்கள் கொண்டிருக்கக்கூடிய ஏதேனும் கிளைம்களை விலக்கிக்கொள்கிறார்கள், மேலும் குழு உறுப்பினர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் அத்தகைய ஏதேனும் பேமெண்ட்டுகளை குழு உரிமையாளரிடம் இருந்து மட்டுமே பெற முயற்சிக்க ஒப்புக்கொள்கிறார்கள். சமூகத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் குழு உறுப்பினர்களிடையே தனி ஒப்பந்தத்தால் மாற்றப்படலாம். சட்டத்தால் அறிவுறுத்தப்பட்டால் தவிர, ஒரு குழு உரிமையாளருக்கும் குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கணக்குப் பதிவுக் கடமை எதுவும், குழுவினருக்குஇடையே ஏற்படுத்தப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்திற்கு இணங்கவே எழும், அத்தகைய ஏதேனும் ஒப்பந்தத்தால் Roblox கட்டுப்படுத்தப்படாது.
-
உரிமையாளரின் பொறுப்புகள். ஒரு குழு/சமூகத்தின் “உரிமையாளராக” இருப்பது என்பது சேவைகளின் பயனர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஓர் அதிகாரப்பூர்வமற்ற, தன்னார்வப் பொறுப்பாகும். நீங்கள் உரிமையாளர் ஆகும்பட்சத்தில், இவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள்:
- குழு/சமூகத்திற்குள் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலைப் பராமரிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது;
- குழு/சமூகம் சமூகத் தரநிலைகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதை உறுதிசெய்தல்; மற்றும்
- Roblox சார்பாகச் செயல்பட உங்களுக்கு அதிகாரம் உள்ளது போல் நீங்கள் காட்டிக்கொள்ளக் கூடாது.
- ஒரு குழுவின் உரிமையாளர், பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அதன் குழு உறுப்பினர்களுக்குப் பொறுப்புகளை ஒதுக்கலாம், ஈட்டிய Robux விநியோகங்களை நிர்வகிக்கலாம். மேலும் தகவலுக்கு குழு வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.
- உரிமையாளர்களுக்கான விளைவுகள். உரிமையாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு Roblox பொறுப்பேற்காது, மேலும் எந்த நேரத்திலும், இந்தப் பயனர் விதிமுறைகளை மீறுவது உள்ளிட்ட எந்தக் காரணத்திற்காகவும் அல்லது காரணமில்லாமலும் ஒரு பயனரின் உரிமையாளர் தகுதியை ரத்துசெய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ எங்களுக்கு உரிமை உண்டு. மேலும், ஓர் உரிமையாளராக உங்கள் பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றத் தவறினால், Roblox இவற்றைச் செய்யக்கூடும்: (a) ஒரு எச்சரிக்கையை வழங்குதல்; (b) உங்களிடமிருந்தோ அல்லது குழு/சமூகத்திலிருந்தோ உள்ளடக்கத்தை அகற்றுதல்; (c) குழு/சமூகத்தை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு மாற்றுதல்; (d) ஒரு புதிய உரிமையாளரை நியமித்தல்; மற்றும்/அல்லது (e) உங்கள் கணக்கை நிறுத்துதல் அல்லது இடைநீக்குதல்.
-
வரையறைகள்.
Roblox கிரியேட்டர் பொருளாதாரம்.
-
Robux.
- Robux-க்கான உரிமம். சேவைகள் தொடர்பாக கிரியேட்டரின் உரிமம் சார்ந்த Robux உபயோகமானது பயனர் விதிமுறைகளின் பிரிவு 3-இல் விவரிக்கப்பட்டுள்ளது.
-
Robux-ஐப் பெறுதல். கிரியேட்டர்கள் சேவைகளில் உருவாக்கிய குறிப்பிட்ட UGC-ஐ (விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் அனுபவங்களுக்கான அணுகல் உட்பட) விற்பதன் மூலம் Robux-ஐப் (“ஈட்டிய Robux”) பெற Roblox அனுமதிக்கிறது. ஈட்டிய Robux என்பது, Roblox சமூகத் தரநிலைகள் உட்பட Roblox பயன்பாட்டு விதிமுறைகளுக்கு நீங்கள் முழுவதும் இணங்கிய நிலையில், சேவைகளின் மூலம் நீங்கள் உருவாக்கிய (தனியாக அல்லது ஒரு குழுவின் மூலம்) விர்ச்சுவல் உள்ளடக்கம் அல்லது பிற UGC-இன் நேரடி விற்பனை அல்லது பிற பணமாக்கல் முறைகளில் இருந்து (எ.கா., கிரியேட்டர் வெகுமதிகள்) சேவைகளில் பெற்ற Robux அல்லது குறிப்பிட்ட பிரத்தியேக விளம்பரக் கேம்பெயின்களில் Roblox வழங்கிய Robux ஆகியவை மட்டுமே அடங்கும். பின்வருபவற்றிலிருந்து பெறும் Robux கூட இதில் அடங்கும் (ஆனால் இவை மட்டுமே அல்ல):
- மார்க்கெட்பிளேஸ் அல்லது கிரியேட்டர் ஸ்டோரில் உள்ள உங்கள் லிஸ்டிங்குகளில் இருந்து பெறுபவை,
- கிரியேட்டர் வெகுமதிகள்,
- அனுபவத்திற்குள் வாங்கும் விர்ச்சுவல் தயாரிப்புகள்,
- வெளியீட்டாளர் திட்டத்தில் இருந்து பெறும் விளம்பர வருவாய் மற்றும்
- இணை நிறுவன விற்பனைக் கட்டணங்கள்
Robux நீங்கள் உருவாக்கிய இணக்கமான விர்ச்சுவல் உள்ளடக்கத்தைப் பணமாக்கும் முறைகள் தவிர வேறு வழிகளில் பெற்றவை (மெம்பர்ஷிப் பிளான் அல்லது பரிந்துரைப்பு போனஸ் மூலம் பெற்ற Robux, Robux அல்லது கிஃப்ட் கார்டு வாங்குவது, அல்லது நீங்கள் உருவாக்காத விர்ச்சுவல் பொருட்களை டிரேடிங் செய்வது/விற்பது போன்றவை) ஈட்டிய Robux என்று கருதப்படாது. பின்வருபவற்றிலிருந்து பெறும் Robux கூட இதில் அடங்கும் (ஆனால் இவை மட்டுமே அல்ல):
- கிஃப்ட் கார்டை ரிடீம் செய்வது அல்லது மற்றொரு Roblox பயனர் சார்பாக Robux வாங்குவது உட்பட நேரடி Robux பர்ச்சேஸ்
- Roblox சந்தாவின் ஒரு பகுதியாகக் கிடைக்கும் மாதாந்திர Robux மானியம்
- விர்ச்சுவல் தயாரிப்புகளை டிரேடிங் செய்வது அல்லது மறுவிற்பனை செய்வது
- உண்மையான பயனர் வருகைகள் இல்லாத டெம்ப்ளேட் அனுபவங்களுக்காக விற்கப்படும் பாஸ்கள்
- தணிக்கை செய்யப்பட்ட மீறல் உள்ளடக்கம்
Robux ஈட்டிய Robux தானா என்ற முடிவு முற்றிலும் Roblox-இன் விருப்புரிமையின்கீழே உள்ளது.
UGC-ஐப் பணமாக்குவது பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கே உள்ள டெவலப்பர் வழிகாட்டிகளைப் படிக்கவும்.
-
UGC-ஐ விற்பது. பின்வருபவற்றுக்கு உட்பட்டு, சேவைகளில் தாங்கள் உருவாக்கிய (i) அனுபவங்களுக்கான அணுகல்; (ii) உள்ளடக்கம் மற்றும் (iii) பிற UGC-ஐவிற்பனை செய்ய கிரியேட்டர்களை Roblox அனுமதிக்கிறது:
-
Robux ஒதுக்கீடு பொறுப்புகள்: சேவைகளில் UGC அனைத்தையும் (2D விர்ச்சுவல் ஐட்டங்கள் தவிர (“கிளாசிக் குளோத்திங்” என்றும் அழைக்கப்படும்)) விற்பதில் மூன்று பொறுப்புகள் உள்ளன. பொருந்தக்கூடிய ஒரு விற்பனையின் மூலம் பெறப்பட்ட Robux-இல் ஒவ்வொரு பொறுப்பிற்கும் ஒரு பங்கு கிடைக்கும் (“Robux ஒதுக்கீடு”):
- கிரியேட்டர்: விற்பனை செய்யப்படும் UGC-ஐ உருவாக்கிய பயனர் அல்லது குழுவே கிரியேட்டர்.
- விற்பனையாளர்/விநியோகஸ்தர்: விநியோகஸ்தர் என்பது (i) கிரியேட்டர் (அந்தப் பொருள் கிரியேட்டரும் உருவாக்கிய ஓர் அனுபவத்தில் விற்கப்பட்டால்); (ii) சேவைகளில் உள்ள மற்றொரு கிரியேட்டர் (அந்தப் பொருள் கிரியேட்டர் உருவாக்காத ஓர் அனுபவத்தில் விற்கப்பட்டால்); அல்லது (iii) Roblox (அந்தப் பொருள் Marketplace-இல் விற்கப்பட்டால்).
-
சேவை: எப்போதும் Roblox என்பதே சேவையாக இருக்கும்.
மேலே விவரிக்கப்பட்ட Robux ஒதுக்கீடு பேன்ட்டுகள், ஷர்ட்டுகள், தி-ஷர்ட்டுகள் போன்ற கிளசிங் உடைகளின் விற்பனைக்குப் பொருந்தாது. மார்க்கெட்பிளேஸில் விற்கப்படும் ஏதேனும் கிளாசிக் உடைகளுக்கு, Robux ஒதுக்ுகீடு கிரியேட்டருக்கும் சேவைக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படும்.
- Robux ஒதுக்கீட்டிற்கான மாற்றங்கள். Roblox கிரியேட்டருக்கு (ஏதேனும் தகுந்த வழியில்) அறிவித்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் (a) Robux ஒதுக்கீட்டை மாற்றலாம் மற்றும்/அல்லது (b) ஒரு விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பயனாக்கிக்கொள்ளும் வகையில் Robux ஒதுக்கீட்டின் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தனிப்பயனாக்கிக்கொள்ள அனுமதிக்கின்ற அம்சங்களை அறிமுகப்படுத்தலாம்.
- சேவைகளில் விற்பனை செய்வது தொடர்பாக கிரியேட்டருக்கு உள்ள பொறுப்பு. கிரியேட்டர் உருவாக்கிய அனுபவங்கள், உள்ளடக்கம் அல்லது பிற UGC-ஐ சேவைகளில் உள்ள மற்ற பயனர்கள் பயன்படுத்தி மகிழ்வதற்காக கிரியேட்டர் சார்பாக Roblox காட்சிப்படுத்தலாம் மற்றும் ஹோஸ்ட் செய்யலாம் என்று பயனர் அறிந்து ஏற்றுக்கொள்கிறார். அனுபவ விவரங்கள் பக்கத்தின் மூலம் விற்கப்படும் உள்ளடக்கம் அல்லது பிற UGC-ஐ பயனருக்கு வழங்க வேண்டியது முற்றிலும் கிரியேட்டரின் பொறுப்பே ஆகும். UGC-ஐ சேவைகளின் மூலம் ஒரு பயனருக்கு விற்றது தொடர்பாக ஒரு கிரியேட்டர் Robux-ஐப் பெறும்போது, அந்தப் பரிவர்த்தனை கிரியேட்டருக்கும் பயனருக்கும்இடையில் நிகழ்வதே ஆகும்; சேவைகளை வழங்குவதன் மூலம் Roblox அதற்கு உதவ மட்டுமே செய்கிறது. ஏதேனும் UGC-க்காக ஒரு கிரியேட்டர் Robux-ஐப் பெற்றிருந்து, ஒரு சர்ச்சை தொடர்பாக, Roblox Robux அல்லது உண்மையான பணத்தை ஒரு பயனருக்கு (அல்லது மற்றொரு கிரியேட்டருக்கு) திரும்ப வழங்கியிருந்தால் அத்தகைய கிரியேட்டரிடம் அதற்கு சமமான Robux-ஐப் பிடித்துக்கொள்ள அல்லது நிறுத்திவைக்க Roblox-க்கு உரிமை உள்ளது.
-
பிராந்திய விலைகள். குறிப்பிட்ட சில அனுபவத்திற்குள் அமைந்த ஐட்டங்கள் அல்லது விர்ச்சுவல் ஐட்டங்களை பயனர்கள் வசிக்கக்கூடிய பல்வேறு பிராந்தியங்களில் இருந்து இன்னும் அணுகக்கூடிய வகையில் கிரியேட்டர்கள் மாற்றுவதற்கு பிராந்திய விலைகள் வசதி உதவுகிறது (“பிராந்திய விலைகள்”). விர்ச்சுவல் ஐட்டங்கள் அல்லது அனுபவத்திற்குள் அமைந்த ஐட்டங்களின் இயல்புநிலை விலைகளை நிர்ணயிப்பது முற்றிலும் கிரியேட்டர்களின் பொறுப்பே ஆகும், மேலும் இந்த விலைகள் பிராந்தியவாரியாக வெவ்வேறாக இருக்கும்படியும் அவர்கள் முடிவு செய்யலாம்.
கிரியேட்டர் பிராந்திய விலைகளைச் செயல்படுத்தினால், அனுபவத்திற்குள் அமைந்த ஐட்டத்திற்கும் விர்ச்சுவல் ஐட்டத்திற்கும் கிரியேட்டர் முதலில் அமைத்த விலை, தகுதிபெறும் பிராந்தியங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏற்ப சரிசெய்யப்படும். ஆதரிக்கப்படும் ஒவ்வொரு பிராந்தியத்திற்குமான பிராந்திய விலை, இயல்புநிலை விலையின் அடிப்படையில் பிராந்திய விலை எவ்வளவு சதவீதம் இருக்க வேண்டும் என்று கிரியேட்டர் தீர்மானிப்பதன் அடிப்படையில் இருக்கும் (“பிராந்திய விலை”). பிராந்திய விலை நிர்ணய முறையானது (அவ்வப்போது மாற்றப்படலாம்) பிராந்திய பொருளாதாரப் போக்குகள் மற்றும் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் இருக்கும். பிராந்திய விலைகளை தனித்தனியாக கிரியேட்டர்கள் மாற்ற முடியாது, ஆனால் இயல்புநிலை விலையை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும். இயல்புநிலை விலை மாற்றப்பட்டால், ஆதரிக்கப்படும் பிராந்தியங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்ட பிராந்திய விலை மாறும். பிராந்திய விலை அம்சத்தை கிரியேட்டர் மையத்தில் கிரியேட்டர்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.
Roblox எந்தக் கடப்பாடும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும், சில அல்லது அனைத்து அனுபவத்திற்கு உள்ளமைந்த ஐட்டங்கள் அல்லது விர்ச்சுவல் ஐட்டங்களுக்கான பிராந்திய விலைகளை, எந்தக் கிரியேட்டருக்கும் அல்லது அனைத்து கிரியேட்டர்களுக்கும் இடைநீக்கலாம் அல்லது கைவிடலாம். Roblox பிராந்திய விலை அம்சத்தை "உள்ளது உள்ளபடி" வழங்குகிறது, அதோடு அதன் துல்லியம், கிடைக்கும் தன்மை அல்லது வருமானத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பான வெளிப்படையான அல்லது மறைமுகமான வாரண்டிகள் அனைத்தையும் பொறுப்பு துறக்கிறது.
- ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டங்கள். பயனரின் இருப்பிடத்தைப் பொறுத்து, “ரேன்டம்” விர்ச்சுவல் ஐட்டங்களைப் (இவை ஒவ்வொன்றும் “ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டம்” எனப்படும்) பெற (Robux கொண்டு அல்லது பிற வழிகளில்) பயனர்களை அனுமதிக்கின்ற அனுபவங்களை வழங்க கிரியேட்டர் தேர்வு செய்யலாம். ஒரு கிரியேட்டர் பயனருக்கு ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கினால், ஒரு பயனர் ஒரு ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டத்தைப்பெறுவதற்கான பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கு முன்பு, ஒவ்வொரு வகை ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டத்தையும் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பற்றி பயனர்களுக்கு கிரியேட்டர் தெரிவிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு (உதாரணத்திற்கு மட்டும்), ஒரு விர்ச்சுவல் மார்பிளை ஒரு குளத்தில் விர்ச்சுவல் மார்பிளை எறிவதன் மூலம் பயனர் ரெண்டாம் விர்ச்சுவல் ஐட்டத்தைப் பெற முடியும், அத்தகைய ஒரு விர்ச்சுவல் மார்பிளைப் பெற ஒரு கிரியேட்டரின் அனுபவம் பயனரை அனுமதித்தால், பயனர் மார்பிளை குளத்தில் எறியும் முன்பே, ஒவ்வொரு வகை ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டத்தையும் பயனர் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி கிரியேட்டர் தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.
-
Robux ஒதுக்கீடு பொறுப்புகள்: சேவைகளில் UGC அனைத்தையும் (2D விர்ச்சுவல் ஐட்டங்கள் தவிர (“கிளாசிக் குளோத்திங்” என்றும் அழைக்கப்படும்)) விற்பதில் மூன்று பொறுப்புகள் உள்ளன. பொருந்தக்கூடிய ஒரு விற்பனையின் மூலம் பெறப்பட்ட Robux-இல் ஒவ்வொரு பொறுப்பிற்கும் ஒரு பங்கு கிடைக்கும் (“Robux ஒதுக்கீடு”):
- டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் திட்டம். குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கின்ற மற்றும் DevEx திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இங்கு வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (“DevEx விதிமுறைகள்”) ஏற்றுக்கொள்கின்ற கிரியேட்டர்களை டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் (“DevEx Program” பங்கேற்க Roblox அனுமதிக்கிறது). கோடிங் செய்யக் கற்றுக்கொள்ளவும், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்தி மகிழ்வதற்காக அனுபவங்களையும் மற்ற விஷயங்களையும் உருவாக்கவும், Robux ஈட்டவும் கூட எந்தவொரு கிரியேட்டரும் சேவைகளைப் பயன்படுத்தி, அதே சமயம் DevEx மூலம் பணம் சம்பாதிப்பதற்கான உயர் நிபந்தனைகளை வெற்றிகரமான கிரியேட்டர்கள் மட்டுமே பூர்த்திசெய்ய முடியும் (DevEx விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளது). பொதுவாக இந்த அளவு வெற்றி பெறுவதற்கு, அதக நேரமும், உழைப்பும், திறமையும், உத்தியும் அவசியம். அவை எல்லாம் இருந்தாலும், பணம் சம்பாதிக்க முடியும் என்று உத்தரவாதம் கிடையாது. Roblox தனது முழு விருப்புரிமையின்பேரில் உருவாக்கியுள்ள குறிப்பிட்ட சில தேவைப்பாடுகள், கொள்கைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு DevEx திட்டத்தில் பங்கேற்கும் கிரியேட்டர்கள், Roblox தனது முழு விருப்புரிமையின்பேரில் (DevEx விதிமுறைகளின் எக்ஸ்சேஞ்ச் விகிதம் மற்றும் பொதுத் தேவைகள், கொள்கைகள் மற்றும் வரம்புகள் ) தீர்மானிக்கும் தொகைப்படி, உண்மையான பணத்திற்கு மாற்றாக ஈட்டிய Robux-ஐ வழங்கலாம் .
- கிரியேட்டர் வெகுமதிகள். “கிரியேட்டர் வெகுமதிகள்” என்பது Roblox-இல் நீங்கள் செய்யும் சில குறிப்பிட்ட செயல்கள் மற்றும் பர்ச்சேஸ்களின் அடிப்படையில் Robux-ஐப் (“பே-அவுட் வெகுமதிகள்”) பெற உங்களை அனுமதிக்கின்ற ஒரு இன்சென்டிவ் திட்டமாகும். பே-அவுட் அவார்டுகள் ஃபிரேம்வொர்க்கில் வரையறுக்கப்பட்டுள்ள சில குறிப்பிட்ட செயல்களை ("தகுதிபெறும் செயல்கள்") பயனர்கள் செய்தால், பே-அவுட் அவார்டுகள் ஃபிரேம்வொர்க்கிற்கு இணங்க உங்களுக்கு பே-அவுட் அவார்டுகள் வழங்கப்படும், இந்த ஃபிரேம்வொர்க்கை Roblox எப்போது வேண்டுமானாலும், தன் முழு விருப்புரிமையின்பேரில் மாற்றலாம் அல்லது நிறுத்தலாம், அப்படி நிறுத்துவதால் அல்லது மாற்றுவதால் எந்தக் கிரியேட்டருக்கும் கடப்பாடு எதுவும் நிறுவனத்திற்கு இருக்காது. கிரியேட்டர் வெகுமதிகள் திட்டத்தில் சேரத் தகுதிபெற, Roblox சமூகத் தரநிலைகளை உள்ளடக்கிய Roblox பயன்பாட்டு விதிமுறைகளுக்கு நீங்கள் எப்போதும் இணக்கமாக இருக்க வேண்டும். நாங்கள் கண்டறியும் செயல்பாடுகள் மோசடி அல்லது முறைகேடானது என்று நாங்கள் நம்பினால், உங்களை கிரியேட்டர் வெகுமதிகள் திட்டத்திலிருந்து மறுஆய்வு செய்யவும், விசாரணை செய்யவும் மற்றும் இடைநீக்கம் செய்யவும் எங்களுக்கு உரிமை உள்ளது, அத்தகைய செயல்களுக்கான உதாரணங்கள்: (a) பல மின்னஞ்சல் கணக்குகள், வெவ்வேறு தொலைபேசி எண்கள் அல்லது போட்களைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் தொடங்குவதன் மூலம் பே-அவுட் வெகுமதிகளைப் பெற முயற்சித்தல்; (b) Roblox, வேறொரு நபர் போல ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் அல்லது ஒரு நபர் அல்லது அமைப்புடன் உங்களுக்குள்ள தொடர்பைத் தவறாகக் குறிப்பிடுவதன் மூலம் பரிந்துரைப்பு வெகுமதியைப் பெற முயற்சித்தல்; (c) ஏற்கனவே உள்ள பிளேயர்களை மாற்றுக் கணக்குகளுக்குப் பதிவுசெய்ய ஊக்குவிப்பதன் மூலம் பயனர்களைப் பெற முயற்சித்தல்; (d) Roblox-இன் தனிப்பட்ட விருப்புரிமையின்படி தீர்மானிக்கப்படும் விகிதாச்சாரத்திற்கு அதிகமான சதவீத சார்ஜ்பேக்குகளைக் கொண்டிருத்தல்; அல்லது (e) Roblox விதிமுறைகள் மற்றும்/அல்லது திட்டக் கொள்கைகளை மீறுதல். கிரியேட்டர் வெகுமதிகள் திட்டம் பற்றிய விரிவான தகவலை இங்கே பார்க்கலாம்.
- இன்சென்டிவ்: அவ்வப்போது, Roblox இன்சென்டிவ் வெகுமதிகளை வழங்கலாம். இதுபற்றி இங்கே மேலும் தெரிந்துகொள்ளலாம்.
- பொறுப்புத்துறப்பு. பயனர்கள் பயன்படுத்தி மகிழக்கூடிய, நேரம் செலவிடக்கூடிய அனுபவங்கள் அல்லது UGC-ஐ உருவாக்குவது கடினமான விஷயம், அதற்கு அதிக நேரம் எடுக்கலாம். கிரியேட்டரின் அனுபவம் அல்லது UGC அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெறுவதில் வெற்றியடையும் என்றோ, கிரியேட்டர் ஓர் அனுபவத்தை உருவாக்குவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும், அல்லது இயக்குவதற்கும் செலவிட்ட நேரம், உழைப்பு, பணம் ஆகிய எதுவும் நிதிரீதியாக வெற்றிகரமாக இருக்கும் என்றோ Roblox உறுதியளிக்கவில்லை.
-
Robux.
DevForum மற்றும் Talent Hub.
- DevForum. DevForum என்பது Roblox டெவலப்மென்ட்டுக்கான அதிகாரப்பூர்வக் கலந்துரையாடல் மற்றும் உதவி மன்றமாகும். இது கிரியேட்டர்களுடன் தொடர்புகொள்வதற்கும் அவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கும் உள்ள பிரதான வழியாகும். இது devforum.roblox.test1709.icu எனும் தளத்தில் கிடைக்கும்.
-
Talent Hub. Talent Hub என்பது Roblox அனுபவங்களில் சேர்ந்து பணிபுரிவதற்காக கிரியேட்டர்கள் பதிவிடக்கூடிய, திறமை மிக்கவர்களைத் தேடிப் பெறக்கூடிய சேவையாகும். புராஜெக்ட் லிஸ்டிங்கைப் பொறுத்து, Robux, US டாலர் அல்லது புராஜெக்ட்டிலிருந்து கிடைக்கும் வருவாயின் குறிப்பிட்ட சதவீதம் எனப் பல வழிகளில் கிரியேட்டர்கள் பேமெண்ட் பெறலாம். Roblox கிரியேட்டர்கள் அல்லது புராஜெக்ட் லிஸ்டிங்குகளைத் தணிக்கை செய்வதில்லை, குறிப்பிட்ட ஏதேனும் புராஜெக்ட்டுகளை அல்லது பேமெண்ட் ஏற்பாடுகளை ஆதரிப்பதில்லை, அல்லது வேலையின் தரம், சேவைகளுக்கான பேமெண்ட் அல்லது Talent Hub-இல் துவங்கிய ஈடுபாடுகளில் இருந்து தோன்றும் சர்ச்சைகளின் தீர்வு போன்றவற்றுக்கு எந்தக் கடப்பாட்டையும் ஏற்கவில்லை.
- Roblox, Talent Hub-இல் வேலைகளைப் பதிவிடுவதோ, வேலை செய்வதோ, அல்லது பதிவிடப்பட்ட வேலைக்காக தனிநபர்கள் அல்லது குழுக்களைப் பணியமர்த்துவதோ இல்லை, மேலும் Roblox-க்கும் Talent Hub-இல் பங்கேற்கும் ஏதேனும் கிரியேட்டருக்கும் இடையில் வேலைவாய்ப்பு, ஏஜென்சி அல்லது கூட்டு முயற்சி உறவை எதுவும் உருவாக்காது.
- Roblox, வாய்ப்புகளை வழங்கும் கிரியேட்டர்களின் சார்பாக வேலைவாய்ப்பு அல்லது ஆளெடுப்பு முடிவுகளை எடுப்பதில்லை, மேலும் Talent Hub-ஐப் பயன்படுத்தும் கிரியேட்டர்களிடமிருந்து அத்தகைய அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை.
- நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் Roblox ஒரு தரப்பாக இல்லை, மேலும் Talent Hub-இல் அல்லது அதன் மூலம் வழங்கப்படும் சேவைகளின் செயல்திறன், பேமெண்ட் அல்லது பர்ச்சேஸ் ஆகியவற்றை அது மேற்பார்வையிடுவதோ, வழிநடத்துவதோ, கண்காணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ இல்லை.
AI தொழில்நுட்பங்கள் & AI கருவிகள்.
- பயனர் விதிமுறைகளின் பிரிவு 8-இல் உள்ள AI அம்சங்களின் ஒரு பகுதியாக, சேவைகளில் (“AI கருவிகள்”) அனுபவங்கள் அல்லது உள்ளடக்கத்தை உருவாக்கும்போது AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த, அவற்றுடன் இண்டராக்ட் செய்ய அல்லது உட்பொதிக்க உங்களை அனுமதிக்கும் சில கருவிகள் மற்றும் APIகளை நாங்கள் கிரியேட்டர்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம். AI கருவிகள் மூன்றாம் தரப்புச் சேவைகளாக இருக்கக்கூடும். பயனர்களின் குறிப்பிட்ட வயதுக் குழுக்கள் தொடர்பாக AI கருவிகளின் உங்கள் உபயோகத்தை Roblox அதன் சொந்த விருப்புரிமையின்பேரில் கட்டுப்படுத்தலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். AI கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர் விதிமுறைகளின் பிரிவு 8-இல் உள்ள விதிமுறைகளையும் பின்வருவனவற்றையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்:
-
உங்கள் பொறுப்புகள். AI கருவிகள் அல்லது AI தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பிற மூன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்தத் தேர்வுசெய்யும் கிரியேட்டர்கள் இவற்றைச் செய்ய வேண்டும்:
- இவற்றுக்கு முழுமையாக இணங்கிகியே AI கருவிகளையும் பிற AI தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும்:
- பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்கள்;
- Roblox விதிமுறைகள் மற்றும் சமூகத் தரநிலைகள்; மற்றும்
- மூன்றாம் தரப்பு சேவைகளின் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் அனைத்தும்; மற்றும்
- நீங்கள் AI-ஐப் பயன்படுத்துவது அல்லது உங்கள் அனுபவத்தின் மூலம் பயனர்கள் AI-ஐப் பயன்படுத்துவது பற்றிய தெளிவான வெளிப்படுத்தல்களை அவர்களுக்கு வழங்க வேண்டும், இதில் பின்வருபவையும் பொருந்தக்கூடிய சட்டங்களின்படி அவசியமாகின்ற பிற ஏதேனும் வெளிப்படுத்தல்களும் அடங்கும்:
- AI என்பது மனிதர் அல்ல; மற்றும்
- AI வெளியீடு என்பது செயற்கையாக உருவாக்கப்படுவது, அது ஒரு மனிதரின் கருத்துகளையோ ஆலோசனைகளையோ பிரதிபலிக்காது, மேலும் அது துல்லியமற்றதாக இருக்கலாம்; மற்றும்
- பொருந்துமெனில், பயனர் AI-ஐ அணுகத் தொடங்கும் முன்பு அல்லது அணுகத் தொடங்கும்போது, AI-அடிப்படையிலான சாட்பாட் அல்லது விர்ச்சுவல் ஏஜென்ட்டுடன் பயனர் தொடர்புகொள்கிறார்.
- மூன்றாம் தரப்பு சேவைகள் நிர்ணயிக்கும் பொருந்தக்கூடிய கட்டணங்களைச் செலுத்துவதற்கும், விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும்.
- இவற்றுக்கு முழுமையாக இணங்கிகியே AI கருவிகளையும் பிற AI தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும்:
-
தடைசெய்யப்பட்ட பயன்பாடுகள் பயனர் விதிமுறைகளின் பிரிவு 8-இல் தடைசெய்யப்பட்ட பயன்பாடுகளுடன் கூடுதலாக, AI கருவிகள் அல்லது AI தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பிற மூன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்தும் கிரியேட்டர்கள் இவற்றைக் கட்டாயம் செய்யக்கூடாது:
- AI வெளியீடு மனிதருடையது என்று பயனர்களை நம்பவைக்கக் கூடாது; மற்றும்
- பயனர்கள் ஒரு AI சிஸ்டத்துடன் தொடர்புகொள்கிறார்கள் என்பது, அந்தத் தொடர்பிலிருந்தோ அல்லது சூழ்நிலைகளிலிருந்தோ உடனடியாகத் தெரியாதபட்சத்தில், பயனர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு AI எதையும் பயன்படுத்தக்கூடாது.
Roblox APIகள்.
Roblox-இன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (“API(கள்)”) உங்கள் அனுபவங்களையும் செயலிகளையும் (“API கிளையன்ட்(டுகள்)”) மேம்படுத்த உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் API கிளையன்ட்டுகளில் Roblox உரிமையைப் பெறுவதில்லை. எங்கள் APIகளைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் APIகளில் அல்லது அவற்றின் வழியாக அணுகப்படும் உள்ளடக்கத்தில் உள்ள எந்த உரிமைகளையும் நீங்கள் பெற்றுக்கொள்வதில்லை.
[203d] தரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், Roblox விதிமுறைகளுக்கு இணங்குவதைச் சரிபார்ப்பதற்காகவும், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காகவும், APIகளின் உபயோகத்தை Roblox கண்காணிக்கலாம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். உதாரணத்திற்கு Roblox அல்லது அதன் பயனர்களை பாதிக்கக்கூடிய பாதுகாப்பு சிக்கல்களை அடையாளம் காண்பது போன்றவற்றுக்காக Roblox உங்கள் API கிளையன்ட்டை அணுகுவது மற்றும் பயன்படுத்துவது போன்றவை இதிலடங்கும்.
நீங்கள் ஏதேனும் Roblox விதிமுறைகளை மீறுகிறீர்கள் என்று நாங்கள் நியாயமான வகையில் நம்பினால், உங்களின் அல்லது உங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் API கிளையன்ட்டிற்கோ உள்ள APIகளுக்கான அணுகலை Roblox முன்னறிவிப்பின்றி இடைநீக்கலாம். இவற்றையும் செய்வீர்கள்:
- Roblox-இன் கண்காணிப்புச் செயல்முறையில் குறுக்கிடாமல் இருப்பது.
- அந்த API-இன் ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் மூலம் மட்டுமே அதை அணுக வேண்டும், மேலும் API-களைப் பயன்படுத்தும்போது உங்கள் அடையாளத்தையோ அல்லது உங்கள் API கிளையன்ட்டின் அடையாளத்தையோ தவறாகக் குறிப்பிடுவதையோ அல்லது மறைப்பதையோ தவிர்க்கவும்.
- உங்கள் இறுதிப் பயனர்கள் பொருந்தக்கூடிய எந்தவொரு சட்டம், ஒழுங்குமுறை மற்றும் Roblox விதிமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யுங்கள், மேலும் அவற்றை மீறுவதற்கு அவர்களுக்குத் தெரிந்தே வழிவகை செய்யாதீர்கள்.
- உங்கள் API கிளையன்ட் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட பயனர் தகவல்களை, அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க, வணிகரீதியாக தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மேலும், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி தேவைப்படும் அளவில், அத்தகைய தகவல்களின் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது பயன்பாட்டையும் குறித்து உங்கள் பயனர்களுக்கு உடனடியாகத் தெரிவியுங்கள்.
- மூன்றாம் தரப்பு பயன்படுத்துவதற்காக API-ஐ உள் உரிமத்திற்கு வழங்கக் கூடாது.
Roblox-இல் இசை.
-
உரிமம் பெற்ற இசை. சவுண்ட் ரெக்கார்டிங்குகள் மற்றும் அவற்றில் உள்ள இசைப் படைப்புகள் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்டுகளை (“உரிமம் பெற்ற இசை”) கிரியேட்டர் தனது அனுபவங்கள் அல்லது பிற UGC-இல் பயன்படுத்திக்கொள்வதற்காகக் கிடைக்கச் செய்ய Roblox தேர்வுசெய்யக்கூடும். கிரியேட்டரின் உரிமம் பெற்ற இசையின் அத்தகைய உபயோகம் பின்வருபவற்றுக்கு உட்பட்டதாகும்:
- உரிமம். கிரியேட்டருக்கு Roblox இவற்றை வழங்குகிறது: (i) சேவைகள் மூலமும், அவற்றின் வழியாகவும் மட்டும், மற்றும் Roblox அத்தகைய உரிமம் பெற்ற இசையைக் கிடைக்கச் செய்யும் அந்தக் காலகட்டத்தின்போது மட்டும் ஓர் அனுபவம் அல்லது பிற UGC-இல் (“உரிமம் பெற்ற இசையுடன் கூடிய UGC”) உரிமம் பெற்ற இசையை ஒத்திசைக்க மட்டும், ஒரு பிரத்தியேகமற்ற, தனிப்பட்ட, வரம்புக்குட்பட்ட, திரும்பப்பெறக்கூடிய, பிறருக்கு மாற்றிக்கொடுக்க முடியாத உரிமம; மற்றும் (ii) Roblox உரிமம் பெற்ற இசையைக் கிடைக்கச் செய்கின்ற காலகட்டத்தின்போது மட்டும், சேவைகளில் மட்டும் உரிமம் பெற்ற இசையுடன் கூடிய UGC-ஐ பிளே செய்வதற்கும், கேட்பதற்கும், அணுகுவதற்குமான உரிமம். ஏதேனும் அனுபவம் அல்லது பிற UGC-இல் கிரியேட்டர் பயன்படுத்தும் உரிமம் பெற்ற இசைக்கு கிரியேட்டர் பெயர் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் கிரியேட்டர் விரும்பினால் தன் சொந்த விருப்பத்தின்பேரில் கிரியேட்டர் அதைச் செய்யலாம். உதாரணத்திற்கு உரிமம் பெற்ற இசைக்கு APM Music என்ற நிறுவனம் உரிமையாளராக இருக்கிறது என்று Roblox அடையாளம் கண்டால், கிரியேட்டர் உரிமம் பெற்ற இசை வழங்கியது “நன்றி - APM Music” என்று குறிப்பிடலாம்
- உரிமம் திரும்பப்பெறுதல் (இழக்கப்படுதல்). உரிமம் பெற்ற இசைக்கான உரிமத்தை மூன்றாம் தரப்பிடமிருந்து Roblox வாங்குகிறது என்பதால், எந்தக் காரணத்திற்காகவும் அல்லது காரணம் ஏதும் இல்லாமலும் உரிமம் பெற்ற இசையைப் பயன்படுத்துவதற்கான கிரியேட்டரின் உரிமை Roblox-இன் முழு விருப்புரிமையின்பேரில் கிரியேட்டருக்கு எந்தக் கடப்பாடும் இல்லாமல் திரும்பப் பெறக்கூடியதாகும். உரிமம் பெற்ற இசையைப் பயன்படுத்துவதற்கான கிரியேட்டரின் உரிமையை (ஏதேனும் காரணத்திற்காக) Roblox திரும்பப் பெற்றால், கிரியேட்டர் உடனடியாக இவற்றைச் செய்ய ஒப்புக்கொள்கிறார்: (a) அத்தகைய உரிமம் பெற்ற இசையை கிரியேட்டரின் அனுபவம் அல்லது பிற UGC-இல் இருந்து அகற்றுதல் மற்றும் (b) சேவைகளில்அத்தகைய உரிமம் பெற்ற இசையின் எல்லா உபயோகத்தையும் நிறுத்துதல். கிரியேட்டருக்குRoblox முன்பே அறிவிப்பை வழங்க முயற்சிக்கும் ஏதேனும் உரிமம் பெற்ற இசையின் உபயோக உரிமையைத் திரும்பப் பெரும் முன்பு, ஆனால் முன்கூட்டிய அறிவிப்பு இல்லாமல் அப்படிச் செய்ய Roblox-க்கு உரிமை உள்ளது. Roblox தனது சொந்த விருப்புரிமையின்பேரில், அனுபவம் அல்லது உரிமம் பெற்ற இசையைக் கொண்டுள்ள UGC-ஐ கிரியேட்டருக்கு எந்தக் கடப்பாடும் இல்லாமல் சேவைகளில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அகற்றுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. அதோடு, பின்வரும் சூழ்நிலைகளில் கிரியேட்டருக்கு எந்தக் கடப்பாடும் இல்லாமல்,உரிமம் பெற்ற இசை அனைத்தின் அல்லது ஒரு பகுதியின் மீது கிரியேட்டருக்கு உள்ள உரிமையை (அறிவிப்புடன் அல்லது அறிவிப்பு இல்லாமல்) Roblox திரும்பப் பெறலாம், (w) அத்தகைய உரிமம் பெற்ற இசையை கிரியேட்டர் பயன்படுத்துவது ஏதேனும் Roblox விதிமுறைகள், வழிகாட்டல்கள் அல்லது கொள்கைகளை மீறக்கூடும் என்று Roblox தீர்மானித்தால்; (x) அத்தகைய உரிமம் பெற்ற இசை சேவைகள் அல்லது Roblox-இன் மதிப்புக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்று வேறு வழிகளில் Roblox தீர்மானித்தால்; (y) அத்தகைய உரிமம் பெற்ற இசையின் உபயோகத்தை சேவைகளில் இருந்து அகற்ற பதிப்புரிமை உரிமையாளர் அல்லது அவரது நிர்வாகியால் Roblox அவசியப்படுத்தப்பட்டால் அல்லது (z) சேவைகளில் விநியோகம் செய்வதற்கு இனி உரிமம் பெற்ற இசை கிடைக்காமல் போனால்.
- 250 டிராக் வரம்பு. மேலே விவரித்தவை இருப்பினும், உரிமம் பெற்ற இசையை ஓர் அனுபவம் அல்லது பிற UGC-க்குள் ஒரு ஸ்ட்ரீமிங் சேவை அல்லது மியூசிக் லைப்ரரியை உருவாக்குவதற்குகிரியேட்டர் பயன்படுத்தக்கூடாது, உரிமம் பெற்ற இசையின் குறிப்பிட்ட டிராக்கைக் கேட்க கிரியேட்டர் பயனர்களிடம் கட்டணம் விதிக்கவும் கூடாது. ஓர் அனுபவத்தில் அல்லது பிற உரிமம் பெற்ற இசையைக் கொண்டுள்ள UGC-இல் உரிமம் பெற்ற இசையின் வெவ்வேறு 250 வரையான டிராக்குகளை வைத்திருக்க, பிளே செய்ய, பிளே செய்திருக்க கிரியேட்டருக்கு உரிமை உள்ளது. ஓர் அனுபவம் அல்லது பிற UGC-இல் இருக்கும் உரிமம் பெற்ற இசையின் டிராக்குகளை புதிய டிராக்குகள் கொண்டு கிரியேட்டர் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம், ஆனால் அந்த ஒவ்வொரு முறையும் அத்தகைய அனுபவம் அல்லது உரிமம் பெற்ற இசையுடன் கூடிய UGC-இல் 250 டிராக்குகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
- உரிமம் பெற்ற இசையின் ஒத்திசைவு. கிரியேட்டர் உரிமம் பெற்ற இசையை ஓர் அனுபவத்திற்குள் ஒத்திசைக்கலாம். மேலே விவரித்ததை வரம்புக்குட்படுத்தாமல், கிரியேட்டர் உரிமம் பெற்ற இசையின் டிராக்கின் ஒரு பகுதியை அல்லது உரிமம் பெற்ற இசையின் மாதிரிப் பகுதிகளைப் பயன்படுத்தலாம்.
- சேவைகளில் பயன்படுத்துதல். கிரியேட்டர் உரிமம் பெற்ற இசையைசேவைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். உரிமம் பெற்ற இசையை சேவைகளுக்கு வெளியே எக்ஸ்போர்ட செய்ய, பிரித்தெடுக்க, பதிவிறக்க மாட்டேன் என்றும், அல்லது மற்றவர்கள் யாரும் எக்ஸ்போர்ட் செய்ய, பிரித்தெடுக்க அல்லது பதிவிறக்க ஏதேனும் வழியை வழங்க மாட்டேன் என்றும் கிரியேட்டர் ஒப்புக்கொள்கிறார்.
-
கிரியேட்டர் எழுதிய/அவருக்குச் சொந்தமான இசை. சேவைகளில் பயன்படுத்துவதற்காக ஒரு கிரியேட்டர் வெளியிடுகின்ற (அல்லது வெளியிட முயற்சிக்கின்ற), கிரியேட்டர் (மற்றும்/அல்லது அத்தகைய இசைப் படைப்பை உருவாக்குவதில் கிரியேட்டர் உடன் சேர்ந்து பணியாற்றிய பிறர்) உருவாக்கிய அல்லது பிற வழிகளில் அவருக்குச் சொந்தமான இசைப் படைப்புகளுக்கு (“இசைப் படைப்புகள்”) பின்வருபவை பொருந்தும்.
- ஒரு தனிப்பட்ட கம்போசராக கிரியேட்டர். கிரியேட்டர் சேவைகளில் வெளியிடுகின்ற இசைப் படைப்பிற்கு கிரியேட்டரே தனிப்பட்ட கம்போசர் மற்றும்/அல்லது உருவாக்கியவராக இருந்தால், மற்றும் இசைப் படைப்பின் பிரதிநிதியாக இருக்கின்ற நிகழ்த்துக்கலை உரிமை நிறுவனத்துடன் (“PRO”) சேர்ந்து பணிபுரிந்தவராக கிரியேட்டர் இருந்தால், அப்போது இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளின் மூலமாக கிரியேட்டர் Roblox-க்கு வழங்கும் ராயல்டி-இல்லாத உரிமத்தைப் பற்றி கிரியேட்டரின் PRO-க்கு கிரியேட்டர் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். கிரியேட்டரின் PRO-இன் அறிக்கையளிக்கும் பொறுப்புகளுக்கு இணங்குவதற்கு கிரியேட்டரே பொறுப்பு.
- ஒரு தனிப்பட்ட கம்போசராக இல்லாத கிரியேட்டர். கிரியேட்டர் சேவைகளில் வெளியிடுகின்ற இசைப் படைப்பிற்கு கிரியேட்டர் தனிப்பட்ட கம்போசர் மற்றும்/அல்லது உருவாக்கியவராக இல்லை என்றால், மற்றும் இசைப் படைப்பின் பிரதிநிதியாக இருக்கின்ற PRO உடன் சேர்ந்து பணிபுரிந்தவராக கிரியேட்டர் (மற்றும்/அல்லது கோ-கம்போசர்கள் அல்லது கோ-ரைட்டர்கள்) இருந்தால், தந்து கோ-கம்போசர்கள் மற்றும்/அல்லது கோ-ரைட்டர்கள் அனைவரும் அவரவர்களின் PROக்களுக்குத தெரிவிப்பதை உறுதிசெய்துகொள்வது கிரியேட்டரின் பொறுப்பாகும், மேலும் சேவைகளில் இசைப் படைப்பை வெளியிடுவதற்கும் பயன்படுத்துவதற்கும் கோ-கபோசர்கள் மற்றும்/அல்லது கோ-ரைட்டர்களிடம் இருந்து பெற்ற ஒப்புதலுக்கான எழுத்துப்பூர்வ ஆதாரம் கிரியேட்டரிடம் இருக்க வேண்டும.
- இசை வெளியீட்டாளருக்கு ஒப்படைத்தல். ஒரு கிரியேட்டர் ஓர் இசைப் படைப்பில் அல்லது அதற்கான கிரியேட்டரின் உரிமைகளை ஒரு இசை வெளியீட்டாளருக்கு ஒப்படைத்திருந்தால், அப்போது இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள ராயல்டி இல்லாத உரிமங்களை வழங்குவதற்கான எழுத்துப்பூர்வ ஒப்புதல் அல்லது ஒத்துழைப்பை அந்த இசை வெளியீட்டாளரிடம் இருந்து கிரியேட்டர் பெற்றாக வேண்டும்.
- ரெக்கார்டு லேபிள். கிரியேட்டர் ஒரு ரெக்கார்டு லேபிளுடன் ஒப்பந்தம் செய்துள்ள ரெக்கார்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தால், அப்போது கிரியேட்டரின் சேவைகளின் உபயோகம் கிரியேட்டரின் ரெக்கார்டு லேபிளுக்கு கிரியேட்டர் கொண்டுள்ள கடமைகளுடன் இணங்குவதை உறுதிசெய்துகொள்வது கிரியேட்டரின் பொறுப்பாகும். கிரியேட்டர் ஓர் இசைப் படைப்பை உருவாக்கியதால் அல்லது சவுண்ட் ரெக்கார்டிங் செய்துவிட்டதால் மட்டமே, அதைப் பயன்படுத்த Roblox-ஐ அனுமதிக்கும் உரிமை கிரியேட்டருக்கு உள்ளது என்று அர்த்தமல்ல.
- சவுண்ட் ரெக்கார்டிங்குகள். சவுண்ட் ரெக்கார்டிங் அல்லது அந்த சவுண்ட் ரெக்கார்டிங்கில் உள்ள இசைப் படைப்புகளுக்கான உரிமை கிரியேட்டருக்கு இருந்து, உரிமத்தை வழங்குவதற்கு அவருக்கு அங்கீகாரம் இல்லை என்றால், சேவைகளில் அந்த சவுண்ட் ரெக்கார்டிங்குகளை கிரியேட்டர் பதிவேற்றக் கூடாது அல்லது அவர்களின் சேவைகளில் அந்த சவுண்ட் ரெக்கார்டிங்குகளைக் கிடைக்கும்படி செய்யக்கூடாது.
- பிரதிநிதித்துவம் மற்றும் உத்தரவாதங்கள். கிரியேட்டர் ஒரு சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும்/அல்லது இசைப் படைப்பைப் பதிவேற்றினால், ஒத்திசைத்தால், அல்லது வேறு வழிகளில் பயன்படுத்தினால், கிரியேட்டர் இவற்றை உறுதிப்படுத்தி உத்தரவாதம் அளிக்கிறார்: (a) சேவைகளில் சவுண்ட் ரெக்கார்டிங்(குகள்) மற்றும்/அல்லது இசைப் படைப்பு(களை) பதிவேற்ற, ஒத்திசைக்க மற்றும் வேறு வழிகளில் பயன்படுத்தத் தேவையான அனைத்து உரிமியாளும் கிரியேட்டருக்கு உள்ளது; (b) சேவைகளில் பதிவேற்றப்பட்ட சவுன்ட் ரெக்கார்டிங்(குகள்) மற்றும்/அல்லது இசைப் படைப்பு(கள்) மீதான உலகளாவிய உரிமைகளை கிரியேட்டர் முழுமையாகச் சொந்தமாகக் கொண்டுள்ளார் மற்றும் நிர்வகிக்கிறார். மற்றும் (c) அத்தகைய சவுண்ட் ரெக்கார்டிங்(குகள்) மற்றும்/அல்லது இசைப் படைப்பு(கள்) முற்றிலும் அசலானவை என்பதையும், சேவைகளில் அத்தகைய சவுண்ட் ரெக்கார்டிங்(குகள்) மற்றும்/அல்லது இசைப் படைப்பு(களை) வெளியிடுதல், பதிவேற்றுதல், விநியோகித்தல், பயன்படுத்துதல் ஆகியவை வர்த்தகமுத்திரை, பதிப்புரிமை அல்லது பிற ஏதேனும் அறிவுசார் சொத்து உரிமைகள் (ஒரு PRO, ரெக்கார்டிங் நிறுவனம், இசை வெளியீட்டாளர், அல்லது யூனியன் அல்லது குழு உட்பட (அனால் இவை மட்டுமே அல்ல)) போன்ற எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் உரிமைகளையும் மீறாது என்பதையும் உறுதி செய்தல்.
- அனுமதிகள்; கட்டணங்கள். சேவைகளில் தனது அசல் சவுண்ட் ரெக்கார்டிங்குகள் மற்றும்/அல்லது இசைப் படைப்புகளை பயன்படுத்துவது மற்றும் ஒத்திசைப்பது தொடர்பாக எழக்கூடிய, ஏதேனும் மற்றும் அனைத்து விநியோக உரிமைகள், மெக்கானிக்கல் உரிமைகள், பொதுவில் நிகழ்த்திக் காட்டுவது தொடர்பான உரிமைகள், ஒத்திசைப்பதற்கான உரிமைகள் மற்றும்/அல்லது மூன்றாம் தரப்பு உரிமை கோரக்கூடிய மற்ற ஏதேனும் உரிமைகள் உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல), எந்தத் தன்மையும் கொண்ட தேவையான அனுமதிகள் மற்றும் கட்டணங்கள் அனைத்திற்கும் கிரியேட்டரே முற்றிலும் பொறுப்பு. சேவைகளில் சவுண்ட் ரெக்கார்டிங்குகள் மற்றும்/அல்லது இசைப் படைப்புகளை வெளியிடுதல், பதிவேற்றுதல், விநியோகம் செய்தல், ஒத்திசைத்தல் மற்றும் பிற வழிகளில் பயன்படுத்துதல் தொடர்பான யூனியன் மற்றும்/அல்லது கில்டு ஒப்பந்தங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, ஏதேனும் புதிய உபயோகம் அல்லது மறு உபயோகத்திற்கான யூனியன் கட்டணங்களுக்கும் கிரியேட்டரே முற்றிலும் பொறுப்பு.
-
உரிமம் பெற்ற இசை. சவுண்ட் ரெக்கார்டிங்குகள் மற்றும் அவற்றில் உள்ள இசைப் படைப்புகள் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்டுகளை (“உரிமம் பெற்ற இசை”) கிரியேட்டர் தனது அனுபவங்கள் அல்லது பிற UGC-இல் பயன்படுத்திக்கொள்வதற்காகக் கிடைக்கச் செய்ய Roblox தேர்வுசெய்யக்கூடும். கிரியேட்டரின் உரிமம் பெற்ற இசையின் அத்தகைய உபயோகம் பின்வருபவற்றுக்கு உட்பட்டதாகும்:
பயன்படுத்துவதற்கான வரம்புகள்.
பயனர் விதிமுறைகள் (பயனர் விதிமுறைகளின் பிரிவு 10.b. உட்பட) அல்லது ஏதேனும் Roblox விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள வேறு ஏதேனும் வரம்புகளுடன் கூடுதலாக, இந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளவை உட்பட, இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளை மீறும் வகையில் கிரியேட்டர் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. கிரியேட்டர், லூட் பாக்ஸ்கள், டார்க் பேட்டர்ன்கள் அல்லது அடிமையாக்கக்கூடிய பிற அம்சங்கள் தொடர்பான சட்டங்கள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல), தங்களின் அனுபவங்களுக்குப் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களையும் பின்பற்றுவார்கள்.
கிரியேட்டர்கள் அனுபவத்திற்கான விதிகளை உருவாக்கலாம். அனுபவத்திற்கான விதிகள் கட்டாயமல்ல, மேலும் அவை அந்த அனுபவத்தின் கிரியேட்டரின் விருப்புரிமையின் பேரில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அனுபவத்திற்கான விதிகள் விரிவாகலாம், ஆனால் Roblox பயன்பாட்டு விதிமுறைகள், Roblox சமூகத் தரநிலைகள் அல்லது வேறு ஏதேனும் Roblox விதிமுறைகளுடன் ஒருபோதும் அவை முரண்படக்கூடாது. அனுபவத்திற்கான விதிகள் (மற்றும் அவற்றை மீறுவதன் விளைவுகள் ஏதேனும் இருந்தால் அவையும்) அனுபவத்திற்குள் தெளிவாகவும் நன்றாகத் தெரியும் விதத்திலும் வெளியிடப்பட வேண்டும். அனுபவத்திற்கான விதிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.
பயனர்கள் கணிசமான அளவில் Roblox விதிமுறைகளை அப்பட்டமாக மீறுகின்ற அனுபவம், குழு அல்லது சமூகத்தை நாங்கள் கண்டறிந்தால், மீறல் நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நடவடிக்கைகளை கிரியேட்டர் அல்லது குழு/சமூகத்தின் உரிமையாளர்கள் எடுக்காவிட்டால், தனது சொந்த விருப்புரிமையின்பேரில் அனுபவத்தை, குழுவை அல்லது சமூகத்தைத் தணிக்கை செய்வதற்கு Roblox-க்கு உரிமை உள்ளது. ஒரு கிரியேட்டர் அல்லது குழு/சமூகத்தின் உரிமையாளர், தங்களது அனுபவத்திற்கான விதிகள் அல்லது குழு/சமூகத்தைப் பயன்படுத்துவது மற்றும்/அல்லது நிர்வகிப்பதில் Roblox விதிமுறைகளை மீறியுள்ளதாக Roblox தனது சொந்த விருப்புரிமையின்பேரில் தீர்மானித்தால், தனது சொந்த விருப்புரிமையின்பேரில் கிரியேட்டர் அல்லது குழு/சமூகத்தின் உரிமையாளரைத் தணிக்கை செய்வதற்கு Roblox-க்கு உரிமை உள்ளது.
கிரியேட்டர்கள் அனைவரும் அவர்களாகவே சொந்தமாக யோசனைகளை உருவாக்க வேண்டும் என்று Roblox விரும்புகிறது. வேறு யாருடைய ஐட்டம், உள்ளடக்கம் அல்லது UGC எதையும் நகலெடுத்து அல்லது அவற்றில் மாற்றம் செய்து கிரியேட்டரின் சொந்த உள்ளடக்கமாக வெளியிடுவதற்கு, உள்ளடக்க உரிமையாளர்களிடம் இருந்து வெளிப்படையான, எழுத்துப்பூர்வ அனுமதியை கிரியேட்டர் பெற்றிருந்தால் தவிர, கிரியேட்டர் அப்படிச் செய்யக்கூடாது. உள்ளடக்கத்தை சரியற்ற முறையில் நகலெடுத்ததற்காக, ஒரு கிரியேட்டரின் கணக்கை இடைநீக்கம் செய்வது அல்லது நிறுத்துவது உட்பட, கிரியேட்டருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க Roblox-க்கு உரிமை உள்ளது.
சர்ச்சைகள்.
- கிரியேட்டர்களுக்கும் Roblox-க்கும் இடையே. கிரியேட்டர்களுக்கும் Roblox-க்கும் இடையே எழும் சர்ச்சைகள் பயனர் விதிமுறைகளின் பிரிவு 13-க்கு இணங்கக் கையாளப்பட வேண்டும்.
-
கிரியேட்டர்களுக்கும் பயனர்களுக்கும் இடையே அல்லது கிரியேட்டர்களுக்கு இடையே.
- UGC தொடர்பான சிக்கல்கள். சேவைகளில் வெளியிடப்பட்ட தங்களது அனுபவங்கள், விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் பிற UGC தொடர்பான பயனர் புகார்கள் உட்பட எல்லாச் சிக்கல்களையும் (அனுபவத்திற்கான விதிகளை மீறுவது உட்பட) விரைவாகவும் தொழில்முறைத் தன்மையுடனும் கையாள்வது கிரியேட்டர்களின் பொறுப்பாகும்
- Robux-ஐத் திரும்ப வழங்குதல். ஒரு கிரியேட்டர் ஓர் அனுபவம், விர்ச்சுவல் உள்ளடக்கம் அல்லது பிற UGC தொடர்பாக ஈட்டிய Robux-ஐ வைத்திருந்து, அந்த அனுபவம், விர்ச்சுவல் உள்ளடக்கம் அல்லது பிற UGC தொடர்பாக பயனர் அளித்த புகாருக்கு இணங்க Roblox பயனருக்கு Robux-ஐத் திரும்ப வழங்கினால், அத்தகைய கிரியேட்டரிடம் இருந்து அதற்கு சமமான ஈட்டிய Robux-ஐக் கழித்துக்கொள்ள அல்லது பிடித்தம் செய்துகொள்ள Roblox-க்கு உரிமை உள்ளது.
- கிரியேட்டர்கள் அல்லது பயனர்களுடன் சர்ச்சைகள். ஒரு கிரியேட்டருக்கு மற்றொரு கிரியேட்டருடன் அல்லது பயனருடன் சர்ச்சை இருந்தால், வழக்கு ஏதேனும் தொடர்வதற்கு முன்பு, சர்ச்சையை நட்பான முறையில் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பதற்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட இடையீட்டாளர் அல்லது இடையீட்டுச் சேவையின் மூலம் இடையீட்டு நடவடிக்கையில் கிரியேட்டர் முதலில் ஈடுபட வேண்டும். பயனர் விதிமுறைகளின் பிரிவு 6-இன் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அறிவுசார் சொத்து அகற்றல் புகார்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு, அத்தகைய இடையீட்டுத் தேவை பொருந்தாது. கிரியேட்டர்களுக்கு இடையில் அல்லது கிரியேட்டர்களுக்கும் பயனர்களுக்கும் இடையில் எழும் ஏதேனும் சர்ச்சையை தனது சொந்த விருப்புரிமையின்பேரில் தீர்ப்பதற்கான உரிமை Roblox-க்கு உள்ளது. அத்தகைய தீர்வின் விளைவாக, கிரியேட்டரின் கணக்கு இடைநீக்கப்படலாம் மற்றும்/அல்லது குடிமையியல் அல்லது குற்றவியல் வசூல் தண்டனைகள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல) சட்டம் அனுமதிக்கின்ற வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
- Roblox-க்கு மேல் புகாரளிக்கப்படுதல். இந்தப் பிரிவில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள் இருப்பினும், பயனர் விதிமுறைகளின் பிரிவு 12.c-இல் மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி பயனர்கள் கிரியேட்டர்களுடன் உள்ள சர்ச்சைகளைக் குறித்து Roblox இடம் மேல்முறையீடு செய்யலாம். ஒரு பயனருக்கும் கிரியேட்டருக்கும் இடையே (அல்லது கிரியேட்டர்களுக்கு இடையே) இடையீட்டில் ஈடுபட Roblox தேர்வுசெய்தால், பயனர், கிரியேட்டர் இரு தரப்பும் பின்வரும்படி ஒப்புக்கொள்கிறார்கள்:(i) Roblox-இன் முடிவே (கிரியேட்டரிடம் இருந்து Robux-ஐக் கழித்து பயனருக்கு Robux-ஐக் கிரெடிட் செய்வதும் இதில் அடங்கலாம்) இறுதியானதாக இருக்கும், மற்றும் (ii) இறுதி முடிவை இரு தரப்பும் ஏற்றுக்கொள்வார்கள். மேலும் அத்தகைய எல்லா சிக்கல்களையும் தீர்ப்பதற்காக உரிய நேரத்தில் Roblox உடன் சேர்ந்து செயல்படவும் கிரியேட்டர் ஒப்புக்கொள்கிறார், மேலும் அப்படிச் செய்யத் தவறுவது கிரியேட்டர் விதிமுறைகளை மீறுவதாகும் என்பதையும் புரிந்துகொள்கிறார்.
பிரதிநிதித்துவம் மற்றும் உத்தரவாதங்கள்.
கிரியேட்டரின் UGC-க்கு கிரியேட்டரே பொறுப்பாவார், மேலும் பின்வரும்படியும் அவர் உத்தரவாதம் அளிக்கிறார்: (a) கிரியேட்டரே உருவாக்கியவர் மற்றும் உரிமையாளர் அல்லது பிரிவு 2.b.ii-இல் உள்ள உரிமைகள் மற்றும் உரிமத்தை Roblox-க்கு வழங்குவதற்கான தேவையான உரிமைகளையும் அனுமதிகளையும் கொண்டுள்ளார்; (b) கிரியேட்டரின் UGC மற்றும் இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி கிரியேட்டரின் UGC-இன் பயன்பாடு: (i) மூன்றாம் தரப்பு உரிமை எதையும் மீறவில்லை, அத்து மீறவில்லை, அல்லது தவறாகப் பயன்படுத்தவில்லை மற்றும் அப்படிச் செய்யாது; (ii) மற்ற எந்த நபரின் தனியுரிமை, பிரபலம் அல்லது பிற அறிவுசார் சொத்து உரிமைகளுக்குக் களங்கம் ஏற்படுத்தவில்லை, இழிவுபடுத்தவில்லை, இழிவாக்கவில்லை அல்லது எல்லை மீறவில்லை மற்றும் அப்படிச் செய்யாது; (iii) எந்தவொரு மூன்றாம் தரப்பிடம் இருந்தும் உரிமம் பெற, கட்டணம் செலுத்த அல்லது பெயர் உரிமை வழங்க வேண்டிய அவசியத்தை Roblox-க்கு ஏற்படுத்தவில்லை மற்றும் அபப்டிச் செய்யாது; (iv) கிரியேட்டருக்கும் ஒரு மூன்றாம் தரப்பிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மீறலுக்கு வழிவகுக்கவில்லை மற்றும் அப்படிச் செய்யாது; அல்லது (v) எந்தவொரு சட்டம் அல்லது ஒழுங்குமுறையையும் Roblox-ஐ மீறவைக்கவில்லை மற்றும் அப்படிச் செய்யாது; மற்றும் (c) சேவைகளை கிரியேட்டர் பயன்படுத்தும்போது எல்லா சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கும் Roblox விதிமுறைகளுக்கும் (இந்தக் கிரியேட்டர் விதிமுறைகள் உட்பட (ஆனால் இது மட்டுமே அல்ல)) கிரியேட்டர் இணங்குவார்.இழப்பீடு செய்தல்.
சேவைகளின் கிரியேட்டரின் பயன்பாட்டிற்கு கிரியேட்டரே பொறுப்பேற்பதாக கிரியேட்டர் ஒப்புக்கொள்கிறார், மேலும் எந்த வழிகளிலும் பின்வருபவை தொடர்பாகவும் நேரும் நியாயமான வழக்கறிஞர் கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட எல்லாக் கிளைம்கள், கடப்பாடு, சேதம், இழப்பு மற்றும் செலவிலிருந்தும் Roblox மற்றும் இணை நிறுவனத் தரப்புகளை இழப்பீடுகளில் இருந்து பாதுகாக்கவும் ஒப்புக்கொள்கிறார்: (a) சேவைகளின் கிரியேட்டரின் அணுகல், பயன்பாடு அல்லது பயன்படுத்தியதாகக் கருதப்படுதல்; (b) (i) இந்தக் கிரியேட்டர் விதிமுறைகள் உட்பட Roblox விதிமுறைகளின் ஏதேனும் பகுதி, (ii) இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் பிரதிநிதித்துவம், வாரண்டி அல்லது ஒப்பந்தம், அல்லது (iii) பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டம் அல்லது ஒழுங்குமுறையை கிரியேட்டர் மீறுதல்; (c) ஏதேனும் அறிவுசார் சொத்து உரிமை, பொதுவாக்குதல் உரிமை அல்லது ரகசியத்தன்மை காக்கும் கடமை உட்பட ஏதேனும் மூன்றாம் தரப்பு உரிமையை கிரியேட்டர் மீறுதல்; அல்லது (d) கிரியேட்டருக்கும் ஏதேனும் மூன்றாம் தரப்பிற்கும் ஏற்படும் ஏதேனும் சர்ச்சை அல்லது சிக்கல். இழப்பீட்டிலிருந்து கிரியேட்டர் பாதுகாக்க வேண்டிய விஷயம் எதிலும் Roblox-இன் சொந்த செலவில் பிரத்தியேகமாக தற்காப்பு நிலையை எடுத்து, கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள Roblox-க்கு முழு உரிமை உள்ளது (அந்த விஷயத்தில் இழப்பீட்டிலிருந்து காக்க வேண்டிய கிரியேட்டரின் கடமையை இது வரம்புக்கு உட்படுத்தாது), அபப்டி நடக்கும் பட்சத்தில், அந்தக் கிளைம் தொடர்பாக Roblox-இன் தற்காப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக கிரியேட்டர் ஒப்புக்கொள்கிறார்.கடப்பாட்டிற்கான வரம்புகள்.
வாரண்டி, ஒப்பந்தம், உரிமைத் தீங்கு (அலட்சியம் உட்பட), சட்டம் அல்லது வேறு ஏதேனும் சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தாலும், சேதம் பற்றி Roblox-க்குத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், மறைமுகமான, தற்செயலான, பிரத்தியேகமான, விளைவான அல்லது தண்டனையான சேதங்கள் (லாபங்கள், நல்ல மதிப்பு இழப்பு அல்லது பிற ஏதேனும் புலனாகாத இழப்புகள் உட்பட) எதற்கும் கிரியேட்டருக்கு இணை நிறுவனத் தரப்புகள் எந்தச் சூழ்நிலையிலும் பொறுப்பாக மாட்டார்கள்.
இணை நிறுவனத் தரப்புகள் கிரியேட்டருக்குக் கொண்டிருக்கக்கூடிய, எல்லா கிளைம்கள் அல்லது செயல் காரணங்களுக்கான ஒட்டுமொத்தத் தொகையானது இதைத் தாண்டாது: (i) கிரியேட்டர் தனது கிளைம் பற்றி Roblox-க்குத் தெரிவித்ததற்கு முந்தைய பன்னிரண்டு மாத காலத்திற்காக கிரியேட்டருக்கு Roblox இந்த ஒப்பந்தத்தின் கீழ் செலுத்திய அல்லது செலுத்த வேண்டிய மொத்தத் தொகை, அல்லது (ii) கிரியேட்டர் தனது கிளைம் பற்றி Roblox-க்குத் தெரிவித்ததற்கு முந்தைய பன்னிரண்டு மாத காலத்தில் கிரியேட்டருக்கு Roblox எதுவும் செலுத்தாவிட்டால், $1000 USD.தனியுரிமை.
- உங்கள் தரவு. ஒரு கிரியேட்டராக சேவைகளின் மூலம் Roblox-க்கு நீங்கள் வழங்கும் தரவு இங்கு சேர்க்கப்பட்டுள்ள Roblox தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதாகும். மேலும், அனுபவங்கள் அல்லது UGC-ஐ உருவாக்க சேவைகளில் நீங்கள் எந்தக் கருவிகள் அல்லது மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, நீங்கள் Roblox முகம் சார்ந்த மீடியா பதிவுத் தனியுரிமை அறிவிப்பு, Roblox முக அனிமேஷன் தனியுரிமை அறிவிப்பு ஆகியவை உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல) கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கலாம்.
- அனுபவத் தரவு. ஒரு கிரியேட்டர் உருவாக்கிய ஒவ்வொரு அனுபவத்திற்கும், Roblox தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளுக்கு உட்பட்டும், கிரியேட்டர் மற்றும் Roblox ஆகிய இரு தரப்புக்கும், பின்வருபவை போன்றவற்றுக்காக அனுபவத்திற்கு ஆதரவளிக்கவும், வணிகப் பகுப்பாய்வுக்காகவும், நியாயமான வணிக நோக்கங்களுக்காக அந்த அனுபவம் தொடர்பான அல்லது அது தொடர்பாகப் பெறப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கான உரிமை உள்ளது: (i) அனுபவத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக; (ii) பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு (சட்ட அமலாக்கக் கோரிக்கைகள் உட்பட) இணங்குவதற்காக; (iii) அனுபவத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, மற்றும் (iv) மோசடியைத் தடுக்க அல்லது ஆபத்தைக் குறைக்க. இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளில் வெளிப்படையாகக் குரிப்பிடப்படுள்ளபடி தவிர, பயனர் தரவை எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கும் கிரியேட்டர் பயன்படுத்த அல்லது வெளிப்படுத்த மாட்டார் என்று கிரியேட்டர் ஒப்புக்கொள்கிறார்.
- பயனரின் தனிப்பட்ட தகவல்கள். கிரியேட்டர் பயனரின் தனிப்பட்ட தகவல் ("பயனர் PII") எதையேனும் பெற்றால் மற்றும் பெறும் அளவிற்கு, பின்வருபவற்றைச் செய்வதற்காக பயனர் PII தகவல்களை கிரியேட்டர் பயன்படுத்த மாட்டார்: (i) எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கும் சேவைகளை வழங்குதல்; (ii) சேவைகள் அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்பு இணையதளங்கள் அல்லது சேவைகள் முழுவதிலும் எந்தவொரு தனிப்பட்ட பயனர், சாதனம் அல்லது உலாவி செக்மென்ட்டுகள், சுயவிவரங்கள் அல்லது அதுபோன்ற பதிவுகளை உருவாக்குதல், உருவாக்க உதவுதல், கண்காணித்தல் அல்லது வழங்குதல்; (iii) தனிப்பட்ட ஏதேனும் சாதனம் அல்லது உலாவியின் செயல்பாடுகளை ஏதேனும் செக்மென்ட், சுயவிவரம் அல்லது அதுபோன்ற பதிவுகளுடன் இணைத்தல்; (iv) பயனர்களின் எந்தத் தரவையும் பயனரின் தனிப்பட்ட பிற தகவல்களுடன் இணைத்தல்; அல்லது (v) பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டங்கள் உள்ளிட்ட பொருந்தக்கூடிய எந்தச் சட்டத்தையும் மீறும் வகையிலான அங்கீகரிக்கப்படாத நோக்கம் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்படாத நோக்கத்திற்காகப் பயன்படுத்துதல். கூடுதலாக, கிரியேட்டர் பின்வருவனவற்றைச் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளார்: (x) ஒரு பயனரின் PII தகவல்களை மற்றொரு பயனருக்குக் காண்பிக்கக்கூடிய கருவிகளை உருவாக்குவது மற்றும் வெளியிடுவது; அல்லது (y) எந்தவொரு பயனர் PII-ஐயும் விற்பனை செய்வது, வெளிப்படுத்துவது, பகிர்வது, வாடகைக்கு விடுவது, குத்தகைக்கு விடுவது, சிண்டிகேட்டிங் செய்வது, மாற்றியமைப்பது, ரிவர்ஸ் இன்ஜினீயரிங் செய்வது, டி-கம்பைலிங் செய்வது, கடனாக வழங்குவது அல்லது பிற வழிகளில் மாற்றுவது; இருப்பினும், குறிப்பிட்ட அம்சங்களுக்குப் பொருந்தும் கூடுதல் விதிமுறைகளின்படி Roblox சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்து மேற்கூறியவை கிரியேட்டர்களைக் கட்டுப்படுத்தாது.
- கலிபோர்னியா நுகர்வோர் தனியுரிமைச் சட்டம். ஒரு பயனருக்குச் சொந்தமான "தனிப்பட்ட தகவல்கள்" (திருத்தப்படும்படி, கலிபோர்னியா நுகர்வோர் தனியுரிமைச் சட்டம் 2018 இந்தச் சொல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) எதையும் கிரியேட்டர் தெரிந்தே விற்பனை செய்யக்கூடாது, மேலும் Roblox, கிரியேட்டர் ஆகிய இரு தரப்பும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அல்லது தங்களிடம் உள்ள அத்தகைய தனிப்பட்ட தகவல்களை, மூன்றாம் தரப்பினரின் அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாத்திடத் தேவையான தகுந்த நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்துள்ளனர் மற்றும் தொடர்ந்து எடுப்பார்கள்.
இன்னபிற.
- உள்ளடக்க ரேட்டிங்குகள். இங்கு குறிப்பால் இணைக்கப்பட்டுள்ள உள்ளடக்க ரேட்டிங்குகள் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி, சேவைகள் உள்ளடக்க முதிர்ச்சி நிலை ரேட்டிங்கையும், ஓர் அனுபவத்தைப் பற்றிய குறிப்பிட்ட பிற விளக்கங்களையும் காட்டும். கிரியேட்டர் Roblox-க்கு சமர்ப்பிக்கின்ற எந்தவொரு முதிர்வு நிலை இணக்கக் கேள்வித்தாளிலும், துல்லியமான, முழுமையான மற்றும் சமீபத்திய தகவல்களையே வழங்குவதாகத் தெரிவிக்கிறார் மற்றும் உத்தரவாதம் அளிக்கிறார். தனது விருப்புரிமையின்பேரில் அவ்வப்போது உள்ளடக்க ரேட்டிங்குகள் மற்றும் விளக்கங்களை மாற்றியமைக்க Roblox-க்கு உரிமை உள்ளது. வழிகாட்டல்கள் அல்லது விளக்கங்களின் துல்லியத்திற்கு Roblox உத்தரவாதம் அளிக்கவில்லை. உள்ளடக்க முதிர்ச்சி நிலை ரேட்டிங்குகள் அல்லது விளக்கங்களின் துல்லியம், முழுமைத் தன்மை, செல்லுபடித் தன்மை அல்லது தரத்திற்கு Roblox பொறுப்பல்ல என்பதை கிரியேட்டர் அறிந்து ஏற்றுக்கொள்கிறார். மேலும், எந்தவொரு குறிப்பிட்ட ரேட்டிங்கும் பெறுவதற்கு தான் உரிமை பெற்றுவிடவில்லை என்பதை கிரியேட்டர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார். இங்குள்ள அல்லது உள்ளடக்க ரேட்டிங்குகளில் உள்ள எதுவும் கிரியேட்டரின் அனுபவத்தின் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது தீர்மானிக்கவோ இல்லை, அதற்கு கிரியேட்டரே முழுப் பொறுப்பாவார்.
- உள்ளது உள்ளபடி. சேவைகள் "உள்ளது உள்ளபடி" வழங்கப்படுகின்றன, மேலும் பயனர் விதிமுறைகளின் பிரிவு 15 இங்கு குறிப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
- நீடித்திருத்தல். தங்கள் உள்ளார்ந்த இயல்பின்படி ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பிறகும் நீடித்துத் தொடரக்கூடிய, இந்தக் கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவுகள் 2b, 9, 10, 11, 12, 13, 14, 15a உட்பட, ஏதேனும் பகுதி தொடர்ந்து நீடிக்கும்.
பிற்சேர்க்கை A (சீனா)
சீனா UGC-ஐ வாங்குதல்
- சீனா UGC. அவ்வப்போது சீன மக்கள் குடியரசில் (இந்த Roblox விதிமுறைகளின் நோக்கங்களுக்காக, ஹாங்காங், மக்காவு சிறப்பு நிர்வாகப் பிராந்தியங்கள் மற்றும் தைவான் ஆகியவை நீங்கலாக, "PRC") Luobu Studio-ஐப் பயன்படுத்துகின்ற கிரியேட்டர்கள் ("சீனா கிரியேட்டர்கள்") உருவாக்கும் உள்ளடக்கம் (அனுபவங்கள், விர்ச்சுவல் ஐட்டங்கள், அனுபவத்திற்குள்ளான ஐட்டங்கள் உட்பட) சேவைகளில் பயனர்கள் வாங்குவதற்குக் கிடைக்கக்கூடும் ("சீனா UGC"). அத்தகைய சீனா UGC சேவையில் பிரத்தியேகமாக அடையாளம் காணப்படும். சீனா UGC-ஐ சீனா கிரியேட்டர்கள் அல்ல, Roblox நிறுவனமே பிளாட்ஃபார்ம் மற்றும் சேவைகளில் வெளியிடுகின்றன. இதன் விளைவாக ஒரு பயனர் சீனா UGC-ஐ வாங்கும்போது அல்லது பெறும்போது, பயனர் மற்ற UGC-ஐ வாங்குவதிலிருந்து சில விஷயங்கள் வேறுபட்டிருக்கும். கூடுதலாக, சீனா UGC அனைத்தையும் பொறுத்தவரை, Roblox நிறுவனமே கிரியேட்டர் என்று கருதப்பட வேண்டும் (மற்றும் விர்ச்சுவல் ஐட்டங்களை Roblox வழங்குகிறது) என்றாலும், பயனர் ஏதேனும் சீனா UGC பர்ச்சேஸ் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் அல்லது குறைகளைக் கொண்டிருந்தால், நல்ல நம்பிக்கையின் மூலமே சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பதற்காக பயனர் முதலில் பொருந்தக்கூடிய சீனா கிரியேட்டரையே அணுக வேண்டும் என்பதான பிரத்தியேக ஒப்பந்த ஏற்பாடுகளை Roblox செய்துள்ளது. சீனா கிரியேட்டருடனான அத்தகைய ஏதேனும் புகார்கள் அல்லது சிக்கல்களை பயனரால் தீர்க்க முடியாவிட்டால், அப்போது பயனர் உதவிக்காக Roblox இடம் மேல் புகாரளிக்கலாம். ஏதேனும் புகார்கள் அல்லது சிக்கல்களைத் தீர்ப்பதற்காக Roblox நடவடிக்கை எடுத்தால், Roblox எடுக்கும் முடிவே இறுதியானது என்று பயனர் ஏற்றுக்கொள்கிறார், மேலும் அந்த முடிவின்படி நடக்க பயனர் ஒப்புக்கொள்கிறார்.
LUOBULESI கேமில் கிரியேட்டர் UGC
- Luobulesi கேமில் கிரியேட்டரின் சீனா UGC-ஐ விநியோகிப்பதற்கான விருப்பத்தேர்வு. Shenzhen Tencent Computer Systems Company Limited நிறுவனம் PRC-இல் ("Luobulesi கேம்") வெளியிட்டு இயக்குகின்ற பிளாட்ஃபார்ம் மற்றும் சேவைகளின் பதிப்பைக் கொண்டுள்ள பிளேயர்களுக்கு ("சீனா பிளேயர்கள்") கிரியேட்டரின் அனுபவங்கள் மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கத்தைக் கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்பு அவ்வப்போது கிரியேட்டருக்கு வழங்கப்படலாம். கிரியேட்டரின் அனுபவங்கள் மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கத்தை Luobulesi கேமில் வெளியிடுவது முற்றிலும் கிரியேட்டரின் விருப்பத்தேர்வாக இருக்கும், அப்படிச் செய்ய கிரியேட்டருக்கு கடப்பாடு எதுவும் இல்லை. கிரியேட்டர் சீனா பிளேயர்களுக்குக் கிடைக்கச் செய்யத் தேர்வுசெய்யும் அனுபவங்கள் மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கம் ("கிரியேட்டரின் சீனா UGC") கிரியேட்டரின் சீனா UGC துணைப் பிரிவின் மறுஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கும். Luobulesi கேமில் கிடைக்கச் செய்துள்ள அளவிற்கு, கிரியேட்டரின் சீனா UGC சீனா வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டதாகவே கருதப்படும். ஒரு சீனா பிளேயர் கிரியேட்டரின் சீனா UGC-ஐ வாங்கினால் , கீழே உள்ள கிரியேட்டரின் சீனா UGC-க்காக Robux-ஐப் பெறுதல் என்ற துணைப் பிரிவிற்கு இணங்க Roblox இடம் இருந்து Robux-ஐப் பெற கிரியேட்டர் தகுதிபெறக்கூடும். இருப்பினும் சீனா பிளேயர் கிரியேட்டரின் சீனா UGC-ஐ வாங்கினால் கிரியேட்டருக்கும் அந்த சீனா பிளேயருக்கும் இடையில் எந்த ஒப்பந்த உறவையும் அந்தப் பர்ச்சேஸ் உருவாக்காது. அதற்கு பதில், கிரியேட்டரின் சீனா UGC சீனா வெளியீட்டாளரால் சீனா பிளேயருக்கு உள் உரிமத்திற்கு வழங்கப்படும். கிரியேட்டரின் சீனா UGC-இன் உரிமம் மற்றும் கிரியேட்டரின் சீனா UGC-க்காக Robux பெறுதல் ஆகிய துணைப் பிரிவுகளுக்கு முரணாக இருக்குமளவிற்கு, கிரியேட்டரின் சீனா UGC-க்கு கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2(b), 4 ஆகியவை பொருந்தாது.
- கிரியேட்டரின் சீனா UGC-ஐ Luobulesi கேமில் விநியோகம் செய்வதற்கான தேவைப்பாடுகள். கிரியேட்டரின் சீனா UGC-ஐ Luobulesi கேமில் சீனா பிளேயர்களுக்குக் கிடைக்கும்படி செய்வதற்கு, சீனா வெளியீட்டாளரிடம் கிரியேட்டர் உண்மையான பெயர் கொண்டு சரிபார்க்கப்பட்ட கணக்கைப் பதிவு செய்திருக்க வேண்டும் (PRC சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குத் தேவையானபடி), Luobulesi கேமில் UGC சமர்ப்பிப்புக்கான விதிமுறைகளை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் ("சீனா கேம் UGC சமர்ப்பிப்புக்கான விதிமுறைகள்")
- கிரியேட்டரின் சீனா UGC-ஐ சமர்ப்பித்தல். சீனா கேம் UGC சமர்ப்பிப்பு விதிமுறைகளுக்கு இணங்க, Luobulesi கேமில் சாத்தியமாகச் சேர்க்கப்படுவதற்காக கிரியேட்டரின் சீனா UGC-ஐ சீனா வெளியீட்டாளருக்குச் சமர்ப்பிக்க சேவைகளை கிரியேட்டர் பயன்படுத்தலாம். அப்படிச் சேர்ப்பதற்கான கிரியேட்டரின் சீனா UGC சமர்ப்பிப்புகள் அனைத்தும் Roblox-இன், அதன் உரிமதாரர்களின் மற்றும் சீனா வெளியீட்டாளரின் (மொத்தமாக "மதிப்பாய்வுத் தரப்புகள்") மதிப்பாய்வுச் செயல்முறை, சீனா UGC தேவைப்பாடுகள் மற்றும் மதிப்பாய்வுத் தரப்புகள் கிரியேட்டர்களுக்காக நடத்தும் மன்றங்களில் வழங்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கு உட்பட்டவையாகும்.
-
கிரியேட்டரின் சீனா UGC-இன் உரிமம். கிரியேட்டரின் சீனா UGC-இல்அந்தக் கிரியேட்டருக்கு இருக்கக்கூடிய பதிப்புரிமைகள் அனைத்தும் கிரியேட்டருக்கே இருக்கும். இதன் மூலம் கிரியேட்டரின் சீனா UGC முழுவதுமாக அல்லது அதன் பகுதியைப் பொறுத்தவரை, எந்தவொரு நபருக்கும் அல்லது அமைப்புக்கும் பல்வேறு நிலைகளில் உள் உரிமமளிப்பதற்கான அதிகாரத்துடன் (சீனா வெளியீட்டாளர் உட்பட (ஆனால் அவர்கள் மட்டுமே அல்ல)), இவற்றைச் செய்வதற்கான ஒரு நிரந்தரமான, திரும்பப்பெற முடியாத, உலகளாவிய, பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத, பிறருக்கு மாற்றித்தரக் கூடிய வகையிலான உரிமத்தை கிரியேட்டர் Roblox-க்கு வழங்குகிறார்):
- கிரியேட்டர் GDPR-இன் கீழ் மறக்கப்படுவதற்கான உரிமை அல்லது அல்லது பிற தனியுரிமைச் சட்டங்களின் கீழ் கிடைக்கும் அதற்கு இணையான உரிமையைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, சேவைகள் அல்லது Luobulesi கேம், ஏதேனும் UGC மற்றும் சேவைகள் அல்லது Luobulesi கேம் தொடர்பான ஏதேனும் புலனாகும் ஐட்டங்களைப் பிரபலப்படுத்துவதற்காக அல்லது மார்க்கெட்டிங் செய்வதற்காக, சேவைகள் அல்லது Roblox அல்லது Luobulesi கேமைப் பிரபலப்படுத்துதல் மற்றும் மார்க்கெட்டிங் செய்தல் தொடர்பாக தற்போதுள்ள அல்லது இனி உருவாகப்போகின்ற எந்தவொரு மீடியா அல்லது விநியோக சேனலிலும், கிரியேட்டரின் சீனா UGC மற்றும் அதனுடன் இணைந்த பயனர் பெயரைப் பயன்படுத்துதல். சேவைகள் அல்லது Luobulesi கேமை விளம்பரப்படுத்துவதற்காக வணிகநோக்கற்ற மற்றும் கல்விப் பயன்பாடுகளுக்காகவும் (மேலும் அந்தப் பயன்பாடு வணிக நோக்கற்றதா அல்லது கல்வி சார்ந்ததா என்பதை Roblox நியாயமான வகையில் தீர்மானிக்கும்) கிரியேட்டரின் சீனா UGC-ஐ Roblox பயன்படுத்தலாம்.
- த்ரூ-டு-தி-ஆடியன்ஸ் சார்ந்த உரிமைகள். இந்த Roblox விதிமுறைகளில் கிரியேட்டர் வழங்கும் உரிமைகள் அனைத்தும் த்ரூ-டு-தி-ஆடியன்ஸ் முறையில் வழங்கப்படுகின்றன, அதாவது சேவைகள் அல்லது Luobulesi கேம் மூலம் மூன்றாம் தரப்பு சேவைகளில் கிரியேட்டர் கிடைக்கும்படி செய்துள்ள UGC-க்காக, கிரியேட்டர் அல்லது வேறு பிற மூன்றாம் தரப்பினருக்கு Roblox, அதன் உரிமதாரர்கள், சீனா வெளியீட்டாளர் மற்றும் மூன்றாம் தரப்பு சேவைகளின் உரிமையாளர்கள் அல்லது இயக்குபவர்கள் யாரும் தனியான கடப்பாட்டைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
- UGC தேவைப்பாடுகள். இந்த Roblox விதிமுறைகளுக்கு கிரியேட்டர் இணங்க வேண்டியதுடன் கூடுதலாக, கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 8 மற்றும் 11 உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல), கிரியேட்டர் சமர்ப்பிக்கும் கிரியேட்டரின் சீனா UGC-இன் ஒவ்வொரு ஐட்டமும் PRC சட்டங்களுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும், சீனா UGC சமர்ப்பிப்பு சரிபார்ப்புப் பட்டியல் ஆவணத்திற்கும் ("சீனா UGC தேவைப்பாடுகள்") கட்டாயம் இணங்க வேண்டும்.
- கிரியேட்டரின் சீனா UGC-இன் மதிப்பாய்வு. Luobulesi கேமில் வெளியீட்டிற்காக எந்தவொரு சீனா பிளேயருக்கும் கிரியேட்டரின் சீனா UGC-ஐ விநியோகம் செய்யலாமா என்பதை சீனா வெளியீட்டாளர் தீர்மானிக்கும் முன்பு, அதன் சொந்த விருப்புரிமையின்பேரில் அது தகுந்ததாகக் கருதுகின்ற எந்தவொரு மதிப்பாய்வு அமைப்பும் UGC-ஐ மதிப்பாய்வுசெய்யலாம், வடிகட்டலாம் மற்றும் மாற்றங்கள் செய்யலாம். வெளியீடு தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் அமைப்பின் மதிப்பாய்வும், சீனா வெளியீட்டாளரின் முடிவுமே இறுதியானதாகும்.
- கிரியேட்டரின் சீனா UGC-ஐ விநோயோகம் செய்வதற்கான கடப்பாடு இல்லை. சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, Roblox அல்லது அதன் உரிமதாரர்கள் யாருக்கும், Luobulesi கேமில் கிரியேட்டரின் சீனா UGC எதையும் விநியோகம் செய்ய சீனா வெளியீட்டாளரை அனுமதிக்க வேண்டிய எந்தக் கடப்பாடும் கிடையாது, மேலும் Luobulesi கேமில் கிரியேட்டரின் சீனா UGC எதையும் வெளியிட வேண்டிய கடப்பாடு சீனா வெளியீட்டாளருக்கும் கிடையாது.
- கிரியேட்டரின் சீனா UGC-இன் மறுவடிகட்டல். பொருந்தக்கூடிய சட்டங்கள், ஒழுங்குமுறைகள், சீனா UGC தேவைப்பாடுகள், விதிகள், கொள்கைகளில் ஏதேனும் மாற்றம் நடந்தால், அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக, (a) Luobulesi கேமில் வெளியிடப்பட்டுள்ள கிரியேட்டரின் சீனா UGC-இல் மாற்றம் செய்வதற்கு அல்லது வடிகட்டுவதற்கு; மற்றும்/அல்லது (b) Luobulesi கேமில் கிரியேட்டரின் சீனா UGC-ஐ முழுவதுமாக அல்லது அதன் பகுதியின் விநோயோகம் மற்றும் வெளியீட்டை எப்போது வேண்டுமானாலும் இடைநீக்க அல்லது நிறுத்த மதிப்பாய்வு அமைப்புகளுக்கு முழு விருப்புரிமை இருக்கும். இந்தப் பிரிவிற்கு இணங்க எடுக்கப்பட்ட ஏதேனும் நடவடிக்கை தொடர்பாக மதிப்பாய்வு அமைப்பு எதுவும் கிரியேட்டரைத் தொடர்புகொள்ளக்கூடும், கிரியேட்டரின் சீனா UGC-ஐ சரிசெய்து அல்லது திருத்திவிட்டு வெளியிடுவதற்காக மீண்டும் சமர்ப்பிக்க கிரியேட்டருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.
- கிரியேட்டரின் சீனா UGC-க்காக Robux-ஐப் பெறுதல். Luobulesi கேமில் சீனா பிளேயர்கள் கிரியேட்டரின் சீனா UGC-ஐ வாங்குவது தொடர்பாக கிரியேட்டர் Roblox இடம் இருந்து Robux-ஐப் பெறலாம். இந்த Robux DevEx விதிமுறைகளுக்கு இணங்க கணக்கிடப்படும்.
- குழு சீனா UGC. ஒரு குழுவின் உரிமையாளருக்கு, அந்த குழுவால் உருவாக்கப்பட்ட UGC-ஐ இந்த Roblox விதிமுறைகளுக்கு இணங்க சீனா பிளேயர்கள் வாங்குவதற்காக Luobulesi கேமில் கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்பை ஏற்க வேண்டுமா இல்லையா என்பதைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் உள்ளது, மேலும் கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 3 தொடர்ந்து பொருந்தும். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, குழு UGC மூலம் ஈட்டப்படும் Robux ஆனது DevEx விதிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்படும்.
பிற்சேர்க்கை B (ஜப்பான்)
நியமனம் மற்றும் நியமன ஏற்பு
மார்ச் 31, 2021 முதல் ("நடைமுறைத் தேதி"), ஜப்பானில் உள்ள பயனர்கள் தொடர்பாக, Robux-ஐ வழங்கும் அமைப்பாகவும் சேவைகளின் சேவை வழங்குநராகவும், Roblox Corpopration நிறுவனத்தின் ஒப்பந்தமிடும் தரப்பு என்ற அந்தஸ்து, உரிமைகள், கடமைகள், நன்மைகள், கிளைம்கள், கடப்பாடுகள் அனைத்தும் Roblox Godo Kaisha ("Roblox Japan") நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்டு நியமன ஏற்பு நடைபெற்றுள்ளது. சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர் மேலே கூறப்பட்ட உரிமை மாற்றத்தையும் நியமனத்தையும் ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கிறார். நடைமுறைத் தேதி அன்று அல்லது அதற்குப் பிறகு, Robux வழங்குநராகவும், ஜப்பானில் உள்ள பயனர்களுக்கு சேவைகளை வழங்கும் சேவை வழங்குநராகவும் Roblox Japan நிறுவனமே கருதப்பட வேண்டும். கூடுதலாக, தேவைப்பட்டால் Roblox பயன்பாட்டு விதிமுறைகளின் கீழ் "Roblox" என்ற சொல் (DevEx திட்டம் தொடர்பாக இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டால் தவிர) "Roblox Japan" என்று மாற்றப்பட வேண்டும் அல்லது வெளிப்படையாகக் குறிப்பிடப்பட வேண்டும்.Robux-இன் பண்புகள்
ஜப்பானில், பிளாட்ஃபார்மில் Roblox Japan நிறுவனம் வழங்குகின்ற சேவைகளை வாங்குவதற்காக மட்டுமே Robux-ஐப் பயன்படுத்த முடியும். விர்ச்சுவல் ஐட்டங்கள் மற்றும் கிரியேட்டர்கள் உருவாக்கிய பிற விஷயங்களைப் பொறுத்தவரை, பிளாட்ஃபார்மில் கிரியேட்டர் ஐட்டம் கிடைக்கும்படி செய்வதற்காக Roblox சேவைகளை வாங்க பயனர் Robux-ஐப் பயன்படுத்தலாம். இந்தச் சூழ்நிலையில், Roblox சேவைகள் என்பது பிளாட்ஃபார்மில் கிரியேட்டர் ஐட்டத்தின் அணுகல் மற்றும் உபயோகத்தை சாத்தியமாக்குவதற்காக, Roblox Japan நிறுவனம் வழங்கும் சேவைகளையே குறிக்கும். எந்தப் பயனரும் எந்தப் பொருளையும் அல்லது சேவைகளையும் Roblox Japan நிறுவனம் தவிர வேறு எந்தக் கிரியேட்டரிடம் இருந்தும் அல்லது வேறு எந்த நபரிடம் இருந்தும் வாங்கக்கூடாது. மேலே விவரிக்கப்பட்டபடி Roblox Japan நிறுவனமே Roblox சேவைகளுக்குப் பொறுப்பாக இருக்கும். இருப்பினும், கிரியேட்டர் ஐட்டம் “உள்ளது உள்ளபடி” என்ற அடிப்படையிலேயே வழங்கப்படும், மேலும் கிரியேட்டர் ஐட்டத்தின் உள்ளடக்கம் குறித்து எந்தப் பிரதிநிதித்துவங்கள் அல்லது உத்தரவாதங்களையும் Roblox Japan நிறுவனம் அளிக்கவில்லை. மேலே கூறப்பட்ட கோட்பாட்டின் பிரதிபலிப்பாக இருக்கும் வகையில் மட்டுமே Roblox விதிமுறைகள் புரிதல் விளக்கமளிக்கப்பட வேண்டும்.“ஈட்டிய” Robux மற்றும் DevEx திட்டம்
ஒரு கிரியேட்டர் DevEx திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, DevEx திட்டத்தின் கீழ் அவர் ஈட்டிய Robux-ஐப் பெற்றால், கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4c-இல் குறிப்பிட்டுள்ளபடி ஈட்டிய Robux-ஐ கிரியேட்டர் உண்மையான நாணயத்திற்குப் பரிமாற்றிக்கொள்ளலாம். கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4c ஈட்டிய Robux-க்கு மட்டுமே பொருந்தும் என்ற உண்மையின் அடிப்படையில், ஈட்டிய Robux என்பது Roblox Japan வழங்கும் Robux-இல் இருந்து வேறுபட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.பயனர் விதிமுறைகளின் பிரிவு 3c மற்றும் பிரிவு 4-இல் திருத்தங்கள்
பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயனர் விதிமுறைகளின் பிரிவு 3c மற்றும் பிரிவு 4 முழுவதும் திருத்தப்படும்.கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4-இல் திருத்தங்கள்
பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4 முழுவதும் திருத்தப்படும்.சட்ட எல்லை
நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் (ஒரு வணிகமாக அல்லது வணிக நோக்கங்களுக்காக Roblox விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் நபர் தவிர), பயனர் விதிமுறைகளின் பிரிவு 14b நுகர்வோர் ஒப்பந்தச் சட்டத்தின் விதி 10 மீறலின் அளவிற்கு, அது உங்கள் நலன்களை அகற்றிவிடும் என்று கருதப்படுவதால், அந்தப் பிரிவு உங்களுக்குப் பொருந்தாது.கடப்பாட்டிற்கான வரம்புகள்
நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் (ஒரு வணிகமாக அல்லது வணிக நோக்கங்களுக்காக Roblox விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் நபர் தவிர), பயனர் விதிமுறைகளின் பிரிவு 15c, 15d மற்றும் பிரிவு 16-இல் வழங்கப்பட்டுள்ளபடி "பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவில்" என்ற வாக்கியம் "எங்கள் நோக்கத்துடன் கூடிய செயல் அல்லது அப்பட்டமான அலட்சியத்தின் காரணமாக நாங்கள் பொறுப்பானால் தவிர" என்றே புரிந்துகொள்ளப்படும்.விலை மற்றும் வரி
நீங்கள் roblox.test1709.icu தளத்தில் Robux மற்றும் Roblox சந்தாவை வாங்கும்போது, பதிவுகளின்படி Roblox Japan நிறுவனமே வர்த்தகராக இருக்கும். வாங்கிய நேரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விலையே செலுத்த வேண்டிய விலையாக இருக்கும், மேலும் வாங்கிய சமயத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, Roblox Japan நிறுவனம் கணக்கிட்டபடி பொருந்தக்கூடிய ஜாப்பனீஸ் நுகர்வோர் வரி சேர்க்கப்பட்டதாகவே இருக்கும்.முன்னுரிமை
Roblox விதிமுறைகளுக்கும் கூடுதல் விதிகளுக்கும் இடையே வேறுபாடுகள் அல்லது முரண்பாடு இருந்தால், கூடுதல் விதிகளே செல்லுபடியாகும்.பிற்சேர்க்கை
<பயனர் விதிமுறைகளின் பிரிவு 3c>
- Robux-ஐப்பெறுதல் மற்றும் பயன்படுத்துதல். பல வழிகளில் ஒன்றின் மூலம் சேவைகளில் Robux-ஐப் பெறலாம். இவற்றின் மூலம் ஒரு பயனர் Robux-ஐப் பெறலாம்: (i) வாங்குவதன் மூலம் அல்லது Roblox-இல் இருந்து பிற வழிகளில் Robux-ஐப் பெறுவதன் மூலம்; (ii) Roblox சந்தாவை வாங்குவதன் மூலம்; (iii) தனித்துவமான ஆதாயமாக Roblox வழங்கும் Robux-ஐப் பெறுவதற்காக Roblox பிற பயனர்களுடன் விர்ச்சுவல் ஐட்டங்களை டிரேடிங் செய்ய வைப்பதற்காக விர்ச்சுவல் ஐட்டங்களுக்கான டிரேடிங் அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், அல்லது (iv) Roblox அறிமுகப்படுத்தும் வேறு வழிகளில். கூடுதலாக, கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4-இல் இன்னும் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளபடி ஈட்டிய Robux-ஐ ஒரு கிரியேட்டர் பெறலாம்.
<பயனர் விதிமுறைகளின் பிரிவு 4>
-
விர்ச்சுவல் உள்ளடக்கத்தைப் பெறுதல். Roblox மற்றும்/அல்லது கிரியேட்டர்கள் வழங்கும் “விர்ச்சுவல் ஐட்டங்களையும்” (உங்கள் அவதாருக்கான உடைகள் அல்லது டிஜிட்டல் ஐட்டங்கள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல)), “அனுபவத்திற்குள் கிடைக்கும் ஐட்டங்களையும்” (கேம் பாஸ்கள், சிறப்புத் திறன்கள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல)), பிற உள்ளடக்கத்தையும் (அனுபவம் மற்றும் தனிப்பட்ட சர்வர் அணுகல் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல)) (மொத்தமாக “விர்ச்சுவல் உள்ளடக்கம்” என்று குறிப்பிடப்படும்) சேவைகளில் மட்டுமே நீங்கள் பெறலாம். சேவைகளில் விர்ச்சுவல் உள்ளடக்கத்தைப் பெறுவது உங்கள் தனிப்பட்ட பொழுதுபோக்கிற்காக மட்டுமே, மேலும் பொருந்துமென்றால் ஏதேனும் கூடுதல் விதிமுறைகளில் பிற விதமாகக் குறிப்பிட்டால் தவிர, உங்களுக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையே அது சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பந்தம் எதையும் உருவாக்குவதில்லை. அதோடு, எந்தச் சூழ்நிலையிலும் சேவைகள் தொடர்பாக உங்களுக்கும் எந்தவொரு கிரியேட்டருக்கும் இடையே ஒப்பந்தம் எதுவும் உருவாகாது. விர்ச்சுவல் உள்ளடக்கம் நிஜ உலகில் சம மதிப்பு கொண்டதல்ல, மேலும் சேவைகளில் செய்யும் எந்தப் பரிவர்த்தனையின் அடிப்படையிலும் எந்தவொரு விர்ச்சுவல் உள்ளடக்கத்திலும் உள்ளடக்கத்திற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய அறிவுசார் உரிமைகள் எதையும் நீங்கள் பெறுவதில்லை.
நீங்கள் மார்க்கெட்பிளேஸ் அல்லது அனுபவத்திற்குள் விர்ச்சுவல் உள்ளடக்கத்தைப் பெற Robux-ஐ செலவிடும்போது, சேவைகளின் மூலம் Robux பெறப்பட்டு, உங்கள் கணக்கு பேலன்ஸில் இருந்து உடனடியாகக் கழிக்கப்படும். அத்தகைய டிரான்ஸ்ஃபர்கள் அனைத்தும் இறுதியானவை மற்றும் Roblox தனது கொள்கைகள் அல்லது நடைமுறைகள் மூலம் அனுமதித்தால் தவிர, அல்லது சட்டத்தின்படி அவசியமானால் தவிர பணம் திருப்பித் தரப்படாதவை மற்றும் மீட்க முடியாதவை ஆகும்.
- UGC சந்தாக்கள் என்பவை குறிப்பிட்ட சில கூடுதல் பலன்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக Roblox வழங்குகின்ற தானாகப் புதுப்பிக்கப்படும் சந்தாக்களாகும். நீங்கள் ஒரு UGC சந்தாவை வாங்கும்போது, உங்கள் சந்தா தானாகப் புதுப்பிக்கப்படும் என்பதையும், நீங்கள் UGC சந்தாவை ரத்துசெய்யும் வரை அதற்கேற்ப தனது பேமெண்ட் வழங்குநர் மூலமாக Robloxஉங்கள் பேமெண்ட் முறையில் கட்டணம் விதிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். சந்தாக்கள் அமைப்புகள் பக்கத்திற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் UGC சந்தாவை ரத்துசெய்துகொள்ளலாம். உங்கள் UGC சந்தாவை நீங்கள் ரத்துசெய்தாலும், நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்திய நாட்கள் வரை அந்தப் பலன்களைப் பெற்று மகிழலாம். UGC சந்தாக்களின் பர்ச்சேஸ்கள் அனைத்தும் இறுதியானவை மற்றும் Roblox தனது கொள்கைகள் அல்லது நடைமுறைகள் மூலம் அனுமதித்தால் தவிர, அல்லது சட்டத்தின்படி அவசியமானால் தவிர பணம் திருப்பித் தரப்படாதவை மற்றும் பிறருக்க மாற்றித்தர முடியாதவை ஆகும்.
- விர்ச்சுவல் உள்ளடக்கத்தையும் UGC சந்தாக்களையும் விற்பனை செய்தல்.
- பயனர்களுக்கு. Roblox சந்தாவை வைத்திருக்கும் பயனர்கள் Roblox இடம் குறிப்பிட்ட சில Roblox உருவாக்கிய விர்ச்சுவல் உள்ளடக்கங்களை மீண்டும் வாங்கக் கோரவும் சேவைகளில் அத்தகைய உள்ளடக்கங்களை மறுவிற்பனை செய்யக் கோரவும் (“மீண்டும் வாங்குதல் மற்றும் மறுவிற்பனை செய்தல்”) Roblox அனுமதிக்கிறது. ஒரு பயனர் மார்க்கெட்பிளேஸிற்குள் மட்டுமே அத்தகைய விர்ச்சுவல் உள்ளடக்கத்தின் மீண்டும் வாங்குதல் மற்றும் மறுவிற்பனையில் ஈடுபடலாம். மீண்டும் வாங்குதல் மற்றும் மறுவிற்பனைக் கோரிக்கைகள் அனைத்தும் இறுதியானவை, சட்டத்தால் அவசியமானால் தவிர திரும்பப்பெற முடியாதவை ஆகும். (விர்ச்சுவல் உள்ளடக்கத்தை எப்படி மறுவிற்பனை செய்வது என்பது பற்றிய விரிவான விளக்கத்திற்கு இங்கே பார்க்கவும்.)
- கிரியேட்டர்களுக்கு. விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் UGC சந்தாக்களை ஒரு கிரியேட்டர் உருவாக்கி வெளியிடலாம், மற்றும் கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4 மற்றும் UGC சந்தா பயன்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க, அத்தகைய விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் UGC சந்தாக்களை Roblox விற்பனை செய்யவும் அனுமதிக்கலாம்.
- டிரேடிங் விர்ச்சுவல் உள்ளடக்கம். Roblox சந்தாவைக் கொண்டுள்ள பயனர்கள், விர்ச்சுவல் ஐட்டங்கள் டிரேடிங் செயல்பாடுகளைப் பயன்படுத்தி, Roblox-ஆல் உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட விர்ச்சுவல் உள்ளடக்கங்களை ("வரையறுக்கப்பட்ட ஐட்டங்கள்") பிற வரையறுக்கப்பட்ட ஐட்டங்களுடன் டிரேடிங் செய்ய ("வரையறுக்கப்பட்ட ஐட்டங்கள் எக்ஸ்சேஞ்ச் சேவைகள்") சேவைகளை வழங்குகிறது. இந்தச் சூழலில், பயனர்கள் வரையறுக்கப்பட்ட ஐட்டங்களை பிற வரையறுக்கப்பட்ட ஐட்டங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்வது மட்டுமின்றி, பிற வரையறுக்கப்பட்ட ஐட்டங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள Robux மற்றும் வரையறுக்கப்பட்ட ஐட்டங்களையும் சேர்த்தும் பயன்படுத்த முடியும். வரையறுக்கப்பட்ட ஐட்டங்கள் எக்ஸ்சேஞ்ச் சேவைகள் என்பவை Roblox மற்றும் பயனர்களுக்கு இடையே நடைபெறும் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய அத்தகைய சேவைகளாகும், அவற்றில் பரிமாற்றப்பட வேண்டிய ஐட்டங்களை பயனர்களிடம் இருந்து Roblox மீண்டும் வாங்கி, Roblox இடம் இருந்து பிற வரையறுக்கப்பட்ட ஐட்டங்களை பயனர்கள் வாங்கிக்கொள்ள முடியும். பயனர்களுக்கு இடையே நேரடியாக பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாது. வரையறுக்கப்பட்ட ஐட்டங்கள் எக்ஸ்சேஞ்ச் சேவைகளில் பரிமாற்றப்பட வேண்டிய ஐட்டங்களின் ஒரு பகுதியாக Robux பயன்படுத்தப்படும்போது, அதற்காக ஒரு கட்டணத்தைப் பெற்றுக்கொள்ள Roblox-க்கு உரிமையுள்ளது. இருப்பினும், அந்த டிரேடிங்கின் ஒரு பகுதியாக Robux எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றால், அந்தப் பரிவர்த்தனை தொடர்பாக Roblox எந்தக் கட்டணத்தையும் பெறாது. (Roblox-இன் டிரேடிங் சிஸ்டம் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டணங்கள் பற்றிய விரிவான விளக்கத்திற்கு இங்கே பார்க்கவும்.)
- விர்ச்சுவல் உள்ளடக்கத்தை அகற்றுதல். தனது விருப்புரிமையின்பேரில் (அனுபவங்கள், விர்ச்சுவல் உள்ளடக்கம், UGC சந்தாக்கள், மற்றும் UGC உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல)) எந்தவொரு உள்ளடக்கத்தின் கிடைக்கும் தன்மையையும் இடைநீக்கம் செய்வதற்கு அல்லது Roblox சேவைகளில் இருந்தும் உங்கள் கணக்கில் இருந்தும் அகற்றுவதற்கு உரிமையுள்ளது. அத்தகைய இடைநீக்கம் அல்லது அகற்றல் காரணமாக ஏற்படும் எந்த இழப்புகளுக்கும் எந்தப் பயனருக்கும் Roblox பொறுப்பாகாது, மேலும் சட்டப்படி அவசியமானால் தவிர, அகற்றப்பட்ட அல்லது இடைநீக்கப்பட்ட உள்ளடக்கத்திற்காக பயனர் செலவிட்ட Robux அல்லது பிற நிதிகள் எதையும் Roblox திருப்பியளிக்க வேண்டியதில்லை.
<கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4>
- Roblox கிரியேட்டர் பொருளாதாரம்
-
Robux.
- Robux-இன் அவசியம். பிளாட்ஃபார்மில் Roblox வழங்கும் சேவைகளை வாங்குவதற்காக மட்டுமே Robux பயன்படுத்தப்படலாம். Roblox தவிர வேறு எந்தக் கிரியேட்டர் அல்லது பிற நபர்களிடம் இருந்து எந்தப் பொருட்களையும் அல்லது சேவைகளையும் வாங்குவதற்கு Robux-ஐப் பயன்படுத்த முடியாது.
- ஈட்டிய Robux-ஐ வழங்குதல். கிரியேட்டர்கள் சேவைகளில் உருவாக்கிய குறிப்பிட்ட UGC-ஐ (விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் அனுபவங்களுக்கான அணுகல் உட்பட; "கிரியேட்டர் ஐட்டங்கள்") வெளியிடுவதை சாத்தியமாக்குவதற்காக Roblox சேவைகளை வழங்குகிறது. கிரியேட்டர் ஐட்டங்களை Roblox விற்பனை செய்தால் அல்லது பணமாக்கினால், Roblox தனித்துவமான ஆதாயங்களாக கிரியேட்டர்களுக்கு ஈட்டிய Robux-ஐ ("ஈட்டிய Robux") வழங்கலாம். குறிப்பிட்ட சில UGC-ஐ பிளாட்ஃபார்மில் ஒரு கிரியேட்டர் உருவாக்கி வெளியிடும்போது (தனியாகவோ அல்லது குழுவுடனோ) மற்றும் (a) UGC-இன் அணுகல் மற்றும் உபயோகத்தை அனுமதிக்கின்ற சேவையை Roblox விற்பனை செய்தால், (b) வேறு ஏதேனம் வழியில் UGC பணமாக்கப்பட்டால், அல்லது (c) ஈடுபாடு அடிப்படையிலான பே-அவுட்கள் ("EBP" அல்லது "பிரீமியம் பே-அவுட்கள்") மூலம் கூடுதல் ஈட்டிய Robux உருவாக்கப்பட்டால் ஈட்டிய Robux வழங்கப்படலாம். பிற வழிகளிலும் (Roblox சந்தா, பரிந்துரைப்பு போனஸ், கிஃப்ட் கார்டு வாங்குதல் அல்லது நீங்கள் உருவாக்காத விர்ச்சுவல் உள்ளடக்கத்தை Roblox-டிரேடிங்/விற்பனை செய்தல் போன்றவற்றின் மூலம் தனித்துவமான ஆதாயங்களாக உட்பட) Robux வழங்கப்படலாம், இருந்தாலும் அவை ஈட்டிய Robux அல்ல. தனித்துவமான ஆதாயமாக வழங்கப்பட்ட ஏதேனும் ஈட்டிய Robux அல்லது அத்தகைய பிற Robux எதுவும் ("பிரத்தியேகமாக வழங்கப்பட்ட Robux") Roblox விதிமுறைகள் அல்லது பிற பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகளின் மீறலின் மூலம் பெறப்பட்டவை என்று கண்டறியப்பட்டால், அப்படிப் பிரத்தியேகமாக வழங்கப்பட்ட Robux-ஐ Roblox அகற்றிவிடலாம். UGC-ஐப் பணமாக்குவது பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கே உள்ள டெவலப்பர் வழிகாட்டிகளைப் படிக்கவும்.
-
UGC-இன் அணுகல் மற்றும் உபயோகத்தை இயக்குவதற்காக Roblox சேவைகளை விற்பனை செய்தல். சேவைகளில் தாங்கள் உருவாக்கிய (i) அனுபவங்கள்; (ii) விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் (iii) பிற UGC-ஐ வெளியிட கிரியேட்டர்களை Roblox அனுமதிக்கிறது, மேலும் பின்வருபவற்றுக்கு உட்பட்டு, UGC-இன் அணுகல் மற்றும் உபயோகத்தை இயக்குவதற்காக சேவைகளை Roblox விற்பனை செய்யக்கூடும்:
-
பொறுப்புகளுக்கான பங்களிப்புகள் மற்றும் தனித்துவமான ஆதாயங்கள்: இந்த அம்சங்கள் சேவைகளில் அனைத்து UGC-இன் (2D விர்ச்சுவல் ஐட்டங்கள் ("கிளாஸிக் குளோத்திங்" என்றும் அழைக்கப்படும்) அணுகல் மற்றும் உபயோகத்தை இயக்குவதற்காக தனது சேவைகளை Roblox விற்பனை செய்வதற்குப் பொருந்தும் ஒவ்வொரு அம்சத்திற்கும் செய்யப்படும் பங்களிப்பின் அளவைப் பொறுத்தும், பொருந்தக்கூடிய விற்பனையின் மூலம் Roblox-க்குக் கிடைக்கக்கூடிய வருவாயைப் பொருத்தும், Roblox தனித்துவமான ஆதாயங்களை வழங்கலாம்:
- கிரியேட்டர்: Roblox அணுகல்/உபயோக உரிமைகளை விற்பனை செய்கின்ற UGC-ஐ உருவாக்கிய பயனர் அல்லது குழுவே கிரியேட்டர்.
- விற்பனையாளர்/விநியோகஸ்தர்: UGC-ஐ அணுகுவதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமைகளை விற்கும் தரப்பு எப்போதுமே Roblox மட்டுமே.
- பிளாட்ஃபார்ம்: பிளாட்ஃபார்மை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் சேவைகளை வழங்கும் தரப்பு எப்போதும் Roblox மட்டுமே.
மேலே விவரிக்கப்பட்ட தனித்துவமான ஆதாயங்கள் என்பது பேன்ட்டுகள், ஷர்ட்டுகள், தி-ஷர்ட்டுகள் போன்ற கிளசிங் உடைகளின் விற்பனைக்குப் பொருந்தாது. மார்க்கெட்பிளேஸில் விற்கப்படும் ஏதேனும் கிளாசிக் உடைகளுக்கு தனித்துவமான ஆதாயங்கள் கிரியேட்டருக்கும் பிளாட்ஃபார்முக்கும் இடையே தீர்மானிக்கப்படும்.
- தனித்துவமான ஆதாயங்களுக்கான மாற்றங்கள். Roblox கிரியேட்டருக்கு (ஏதேனும் தகுந்த வழியில்) அறிவித்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் தனித்துவமான ஆதாயங்களை மாற்றலாம்.
- கிரியேட்டர் பொறுப்பு. கிரியேட்டர் உருவாக்கிய அனுபவங்கள், விர்ச்சுவல் உள்ளடக்கம் அல்லது பிற UGC-ஐ சேவைகளில் உள்ள மற்ற பயனர்கள் பயன்படுத்தி மகிழ்வதற்காக கிரியேட்டர் வெளியிடலாம். சேவைகளின் விற்பனையாளர் என்ற முறையில், அத்தகைய UGC-ஐ அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் தேவையான சேவைகளை பிற பயனர்களுக்கு Roblox வழங்கலாம். சேவைகளின் மூலம் கிரியேட்டர் UGC-ஐ வெளியிட்டு, அதற்கு Roblox இடம் இருந்து தனித்துவமான ஆதயங்களாக ஈட்டிய Robux-ஐப் பெற்றிருந்தால், ஒரு கிரியேட்டர் ஈட்டிய Robux-ஐப் பெற்ற ஏதேனும் UGC-க்காக ஒரு பயனருக்கு (அல்லது மற்றொரு கிரியேட்டருக்கு) Robux அல்லது உண்மையான பணத்தை Roblox திருப்பித் தந்தால், கிரியேட்டரிடம் இருந்து அதற்கு சமமான ஈட்டிய Robux-ஐக் கழித்துக்கொள்ள அல்லது பிடித்துக்கொள்ள Roblox-க்கு உரிமை உள்ளது.
-
ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டங்கள். பயனரின் இருப்பிடத்தைப் பொறுத்து, “ரேன்டம்” விர்ச்சுவல் ஐட்டங்களைப் (இவை ஒவ்வொன்றும் “ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டம்” எனப்படும்) பெற (Robux கொண்டு அல்லது பிற வழிகளில்) பயனர்களை அனுமதிக்கின்ற அனுபவங்களை வழங்க கிரியேட்டர் தேர்வு செய்யலாம். ஒரு கிரியேட்டர் பயனருக்கு ஒரு ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கினால், ஒரு பயனர் ஒரு ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு வகை ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டத்தையும் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி பயனர்களுக்கு கிரியேட்டர் தெரிவிக்க வேண்டும்.
உதாரணமாக (உதாரணத்திற்கு மட்டும்), ஒரு கிரியேட்டரின் அனுபவம் ஒரு பயனர் ஒரு விர்ச்சுவல் மார்பிளைப் பெற அனுமதித்து, அந்த மார்பிளை ஒரு குளத்தில் எறிவதன் மூலம் ஒரு ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டத்தைப் பயனர் பெற முடியும் என்றால், அந்த பயனர் மார்பிளை குளத்தில் எறியும் முன்பே, ஒவ்வொரு வகை ரேன்டம் விர்ச்சுவல் ஐட்டத்தையும் பயனர் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி கிரியேட்டர் தெரிவிக்க வேண்டும்.
-
- டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் திட்டம். குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கின்ற மற்றும் DevEx திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இங்கு வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (“DevEx விதிமுறைகள்”) ஏற்றுக்கொள்கின்ற கிரியேட்டர்களை டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் (“DevEx Program”) பங்கேற்க Roblox அனுமதிக்கிறது. எந்தவொரு கிரியேட்டரும் சேவைகளைப் பயன்படுத்தி கோடிங் செய்யக் கற்றுக்கொள்ளவும், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்வதற்காக அனுபவங்களையோ அல்லது பொருட்களையோ உருவாக்கவும், மேலும் சில ஈட்டிய Robux-ஐயும் கூடப் பெற முடியும் என்றாலும், வெற்றிகரமான கிரியேட்டர்கள் மட்டுமே DevEx மூலம் பணம் ஈட்டுவதற்கான (DevEx விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள) உயர் தகுதிகளைப் பூர்த்தி செய்ய முடியும். பொதுவாக இந்த அளவு வெற்றி பெறுவதற்கு, அதக நேரமும், உழைப்பும், திறமையும், உத்தியும் அவசியம். அவை எல்லாம் இருந்தாலும், பணம் சம்பாதிக்க முடியும் என்று உத்தரவாதம் கிடையாது. Roblox தனது முழு விருப்புரிமையின்பேரில் உருவாக்கியுள்ள குறிப்பிட்ட சில தேவைப்பாடுகள், கொள்கைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு DevEx திட்டத்தில் பங்கேற்கும் கிரியேட்டர்கள், Roblox தனது முழு விருப்புரிமையின்பேரில் (DevEx விதிமுறைகளின் எக்ஸ்சேஞ்ச் விகிதம் மற்றும் பொதுத் தேவைகள், கொள்கைகள் மற்றும் வரம்புகள்) தீர்மானிக்கும் தொகைப்படி, உண்மையான பணத்தற்கு மாற்றாக ஈட்டிய Robux-ஐ வழங்கலாம் .
- EBP அல்லது பிரீமியம் பே-அவுட்கள். EBP அல்லது பிரீமியம் பே-அவுட்கள் என்பது, தகுதிபெறும் குறிப்பிட்ட சில கிரியேட்டர்கள் தங்கள் அனுபவம் எந்த அளவிற்கு ஈடுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதன் அடிப்படையில் கூடுதலாக ஈட்டிய Robux-ஐப் பெற உதவுகின்ற ஒரு திட்டமாகும். EBP அல்லது பிரீமியம் பே-அவுட்கள் திட்டத்தை Roblox எப்போது வேண்டுமானாலும், தன் முழு விருப்புரிமையின்பேரில் மாற்றலாம் அல்லது நிறுத்தலாம், அபப்டி நிறுத்துவதால் அல்லது மாற்றுவதால் எந்தக் கிரியேட்டருக்கும் கடப்பாடு எதுவும் நிறுவனத்திற்கு இருக்காது. EBP திட்டம் பற்றிய விரிவான தகவலை இங்கே பார்க்கலாம்.
- பொறுப்புத்துறப்பு. பயனர்கள் பயன்படுத்தி மகிழக்கூடிய, நேரம் செலவிடக்கூடிய அனுபவங்கள் அல்லது UGC-ஐ உருவாக்குவது கடினமான விஷயம், அதற்கு அதிக நேரம் எடுக்கலாம். கிரியேட்டரின் அனுபவம் அல்லது UGC அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெறுவதில் வெற்றியடையும் என்றோ, கிரியேட்டர் ஓர் அனுபவத்தை உருவாக்குவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும், அல்லது இயக்குவதற்கும் செலவிட்ட நேரம், உழைப்பு, பணம் ஆகிய எதுவும் நிதிரீதியாக வெற்றிகரமாக இருக்கும் என்றோ Roblox உறுதியளிக்கவில்லை.
பிற்சேர்க்கை C (ஐரோப்பிய யூனியன்/ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி)
முன்னுரிமை
Roblox விதிமுறைகளுக்கும் கூடுதல் விதிகளுக்கும் இடையே வேறுபாடுகள் அல்லது முரண்பாடு இருந்தால், கூடுதல் விதிகள் செல்லுபடியாகும்.சட்டப்பூர்வ ஒப்பந்தம்
- Roblox விதிமுறைகளில் எதுவும் முரண்படவில்லை என்றாலும், Roblox விதிமுறைகளுக்கான பயனரின் ஒப்பந்தம் தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நடைபெறுவதாகக் கருதப்படுகிறது.
- பயனர் தனது பிறந்த தேதியை வழங்கி, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுத்து, "பதிவுசெய்" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் பிளாட்ஃபார்மில் பதிவு செய்யலாம். பயனர் தனது கணக்கு அமைப்புகள் வாயிலாக எந்த நேரத்திலும் குறிப்பிட்ட பதிவுத் தகவல்களை மாற்றியமைக்கலாம். பயனர் Roblox விதிமுறைகளை இங்கே அணுகலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.
- வேறுவிதமாக ஒப்புக்கொள்ளப்பட்டால் தவிர, பயனர் எப்போது வேண்டுமானாலும் சேவைகளின் உபயோகம் தொடர்பாக Roblox உடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை நிறுத்தலாம். நிறுத்தப்படும் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளைப் பொறுத்தது அமையும்.
Robux மற்றும் விர்ச்சுவல் ஐட்டங்களை வாங்குதல்
பயனர் Robux-ஐப் பயன்படுத்தி சேவைகளில் விர்ச்சுவல் உள்ளடக்கத்தை வாங்க முடியும். பயனர் சேவைகளுக்குள் காட்டப்படும் விலைக்கு Robux-ஐ வாங்கலாம். கிடைக்கக்கூடிய Robux தொகைகளில் பயனர் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது, பயனர் தனது கணக்கிற்குள் பர்ச்சேஸை முடிக்கவும், கிடைக்கக்கூடிய கட்டண முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் கேட்கப்படும். தற்போது, Roblox டெபிட் / கிரெடிட் கார்டு, PayPal, கிஃப்ட் கார்டுகள் (Roblox-இன் உலாவி செயலிக்கு), Google Play, iTunes, Amazon (Roblox-இன் மொபைல் செயலிகளுக்கு), அத்துடன் Roblox-இன் Xbox One செயலிக்கான செயலிக்குள் நடைபெறும் பர்ச்சேஸ்கள் உள்ளிட்ட பல கட்டண விருப்பங்களை வழங்குகிறது. Roblox-இன் தகுந்த விருப்புரிமையின்பேரில், Roblox கிடைக்கக்கூடிய கட்டண முறைகளை அவ்வப்போது திருத்தலாம். பயனர் "பணம் செலுத்து" என்ற பட்டனை (அல்லது இதேபோல் வழங்கப்பட்டுள்ள பிற பர்ச்சேஸ் பட்டனை) கிளிக் செய்து பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிக்கப்படும்போது பர்ச்சேஸ் ஒப்பந்தம் இறுதியாகும். Roblox விதிமுறைகள், குறிப்பாக பயனர் விதிமுறைகளின் பிரிவு 4 (a) மற்றும் கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4 ஆகியவற்றிலிருந்து விலகும் வகையில், கிரியேட்டர்களுக்கும் Roblox இடையே ஓர் ஒப்பந்த உறவு இருக்கும். கிரியேட்டர்களுக்கும் பயனர்களுக்கும் இடையே நேரடி ஒப்பந்த உறவு எதுவும் இருக்காது. பயனர் Robux செலுத்தி விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் பிற விஷயங்களைப் பெற்றால், அத்தகைய பெறுதல்கள் எப்போதும் பயனர் மற்றும் Roblox-க்கு இடையே இறுதியாகும், மேலும் கிரியேட்டர்கள் எப்போதும் Roblox சார்பாகச் செயல்படுவார்கள்.Robux-இல் முழு உரிமை
பயனர் விதிமுறைகள் பிரிவு 3(e) இலிருந்து விலகலாக, மற்றும் பயனர் Roblox வழிகாட்டுதல் அல்லது கொள்கையை மீறுவது அல்லது பயனர் Roblox விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மீறுவது தொடர்பாகத் தவிர, Roblox Robux-இன் மீதான Roblox-இன் முழுமையான உரிமையை Roblox-இன் தகுந்த விருப்புரிமையின்பேரில் எதிர்கால நடைமுறைப்படுத்தலுக்காக மட்டுமே பயன்படுத்தலாம் (அதாவது பயனர் ஏற்கனவே வைத்திருக்கும் செல்லுபடியாகும் Robux-இல் தாக்கத்தை ஏற்படுத்தாது), மேலும் எந்த அறிவிப்பு, பணத்தைத் திரும்ப வழங்குதல் எதுவும் இல்லாமல், இழப்பீடு அல்லது Roblux இந்தப் பிற்சேர்க்கை C அல்லது கட்டுப்படுத்தும் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் பயனருக்குக் கொண்டிருக்கக்கூடிய கடப்பாடு ஆகியவற்றை பாதிக்காமல். பயனர் விதிமுறைகள் பிரிவு 3(e)-இன் மீதமுள்ள விதிகள் பாதிக்கப்படாமல் இருக்கும்.DevEx
கிரியேட்டர் விதிமுறைகள் பிரிவு 4(c)-இலிருந்து விலகும் விதமாக, பயனர் Roblox நிர்ணயித்த மாற்று விகிதத்தின் அடிப்படையில் உண்மையான நாணயத்திற்கு ஈட்டிய Robux-ஐ ரிடீம் செய்துகொள்ள முடியும், மேலும் Roblox-இன் தகுந்த விருப்புரிமையின்பேரில் Roblox நிறுவியுள்ள தேவைகள், நடைமுறைகள் மற்றும் வரம்புகளின் அடிப்படையில் அவ்வப்போது திருத்தப்படலாம் (எ.கா. பணவீக்க ஏற்ற இறக்கங்களை ஈடுசெய்ய). DevEx திட்டத்தின் தற்போதைய மாற்று விகிதம் மற்றும் பொதுவான தேவைகள், கொள்கைகள் மற்றும் வரம்புகள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன.பயனரின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் பணம் திரும்பப் பெறும் தன்மை
- சேவைகள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அல்லது விவரிக்கப்பட்டுள்ளபடி இல்லாவிட்டால் அல்லது Roblox உடனான பயனர் ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை என்றால், பயனர் கூடுதல் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் தீர்வுகளைக் கொண்டிருக்கலாம்.
- Roblox விதிமுறைகளில் உள்ள எதுவும், பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் பயனர்கள் வைத்திருக்கக்கூடிய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு சட்டப்பூர்வ உரிமைகளையும் கட்டுப்படுத்தாது.
கடப்பாட்டிற்கான வரம்புகள்
பயனர் விதிமுறைகள் பிரிவுகள் 15(b)-(c) மற்றும் 16 மற்றும் கிரியேட்டர் விதிமுறைகள் பிரிவு 13 ஆகியவை பொருந்தாது. கூடுதலாக, பயனர் விதிமுறைகளின் 2(g), 3(c) மற்றும் (e), 4(d), 6(b), 11(b)-(c), 15(a) பிரிவுகளில் மற்றும் கிரியேட்டர் விதிமுறைகளின் 5(a)(ii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கடப்பாட்டின் வரம்புகள் பொருந்தாது. அதற்கு பதிலாக, Roblox இந்தப் பிரிவின்படி பிரத்தியேகமாக சேதங்களுக்குப் பொறுப்பேற்கும்.
- Roblox-இன் சட்டப்பூர்வ பிரதிநிதி அல்லது நியமிக்கப்பட்ட ஏஜென்ட்டால் மேற்கொள்ளப்பட்ட மீறலின் அடிப்படையில் மரணம், உடல் காயம் அல்லது உடல்நல பாதிப்பு ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களுக்கும், உத்தரவாதமான தன்மை இல்லாததால் அல்லது மோசடி நோக்கத்தால் ஏற்படும் சேதங்களுக்கும் Roblox-இன் கடப்பாடு வரம்பற்றதாகும்.
- Roblox, Roblox-இன் சட்டப்பூர்வ பிரதிநிதி அல்லது Roblox-இன் நியமிக்கப்பட்ட ஏஜென்ட்டால் உள்நோக்கம் அல்லது அப்பட்டமான அலட்சியத்தால் ஏற்படும் சேதங்களுக்கு Roblox-இன் கடப்பாடு வரம்பற்றது.
- ஒப்பந்தத்தின் பிரதானக் கடமையின் ஒரு சிறிய அலட்சிய மீறல் ஏற்பட்டால், Roblox இந்தப் பிற்சேர்க்கை C-இன் பிரிவு 7A, B மற்றும் D-இல் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளைத் தவிர, பொதுவாக எதிர்பார்க்கக்கூடிய சேதத்தின் அளவிற்கு மட்டுமே Roblox பொறுப்பாகும். ஒப்பந்தத்தின்படி கடமைகள் என்பது சுருக்கமாக, முதலில் ஒப்பந்தத்தை முறையாக நிறைவேற்றுவதை சாத்தியமாக்குகின்ற மற்றும் ஓர் ஒப்பந்தத் தரப்பு தொடர்ந்து நிறைவேற்றப்பட நம்பியிருக்கக்கூடிய கடமைகள் ஆகும்.
- கட்டாயமான பொருந்தக்கூடிய சட்டத்தின்படி கடப்பாடு பாதிக்கப்படாமல் இருக்கும்.
- சட்டப்பூர்வ வரம்புகள் பொருந்தும்பட்சத்தில், இந்தப் பிற்சேர்க்கை C-இன் பிரிவு 7A, B மற்றும் D-இன் சூழ்நிலைகள் தவிர, ஏற்படும் சேதங்களுக்கான கிளைம்களுக்கான வரம்புக் காலம் ஒரு (1) வருடமாக இருக்கும்.
நிர்வகிக்கும் சட்டம், சட்ட எல்லை மற்றும் இடம்.
- பயனர் விதிமுறைகள் பிரிவு 14-இலிருந்து விலகும் விதமாக, பயனரின் வசிப்பிடத்தின் கட்டாயச் சட்டம் கலிபோர்னியா சட்டத்தை விட சாதகமாக இருக்கும் அளவிற்கு, பயனரின் வசிப்பிடச் சட்டம் பொருந்தும்.
- பிரிவு. பிரிவு.17 ஒழுங்குமுறை EU 1215/2012-இன் அர்த்தத்தில், Roblox-க்கும் பயனருக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒரு நுகர்வோர் ஒப்பந்தமாகக் கருதப்படும் அளவிற்கு, பயனர் விதிமுறைகளின் பிரிவு 14-க்கு இணங்க, சட்ட எல்லை மற்றும் இடத்திற்கான தெரிவு பொருந்தாது.
சர்ச்சைகளின் தீர்வு / நடுவர் தீர்வு
- பயனர் ஒரு நுகர்வோராக இருந்தால் (அதாவது, Roblox உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, பயனரின் வர்த்தகம், வணிகம், கைவினை அல்லது தொழிலுக்கு வெளியே உள்ள நோக்கங்களுக்காகச் செயல்படும் ஒரு தனிநபர்), பயனர் விதிமுறைகளின் பிரிவு 13(b) மற்றும் (c) பொருந்தாது, மேலும் பயனர் விதிமுறைகளின் பிரிவு 12 மற்றும் 13(a) மற்றும் கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 7(b) எந்தவொரு தரப்பின் நீதிமன்றங்களுக்குச் செல்லும் செயல்பாட்டை விலக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.
- Roblox நுகர்வோர் நடுவர் குழுவுடன் எந்தவொரு மாற்று சர்ச்சைத் தீர்வுத் திட்டங்களிலும் பங்கேற்கத் தேவையில்லை அல்லது விரும்பவும் இல்லை. அதற்குபதில், பயனர் விதிமுறைகளின் பிரிவு 13(a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி எந்தவொரு முரண்பாடுகளையும் தீர்க்க Roblox கடுமையாகப் பணிபுரிகிறது. பொருந்தக்கூடிய இடங்களில், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் பிரிவு 21-இன் படி, ஐரோப்பிய ஒன்றியப் பயனர்கள் சான்றளிக்கப்பட்ட, நீதிமன்றத்திற்கு வெளியே அமைந்த சர்ச்சைத் தீர்வு அமைப்புகளைப் பயன்படுத்தும் உரிமைக்கு இந்தப் பிரிவு எந்தவித விலக்கையும் ஏற்படுத்தவில்லை. மேலும் தகவலுக்கு, https://en.help.roblox.test1709.icu/hc/ta/articles/13061336948244-EU-Digital-Services-Act என்ற தளத்தைப் பார்க்கவும்.
EEA பயனர்களுக்கான அறிவிப்பு.
பயனர் விதிமுறைகளின் பிரிவு 18 பொருந்தாது.தொடர்ந்து செல்லுபடியாதல்
Roblox விதிமுறைகளின் பிரிவு 19(b)-இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளுடன் கூடுதலாக, இந்தப் பிற்சேர்க்கை C-இன் 7-வது பிரிவும், ஒப்பந்த நிறுத்தத்திற்குப் பிறகும் நீடிக்கும்.மின்னணுத் தகவல்தொடர்புகளுக்கான ஒப்புதல்
பயனர் விதிமுறைகளின பிரிவு 19(f) பொருந்தாது. Roblox ஒரு தயாரிப்பு அல்லது சேவையை விற்பனை செய்யும் சூழலில் பயனரின் மின்னஞ்சல் முகவரியைப் பெற்றிருந்தால், அதே போன்ற Roblox-இன் சொந்தத் தயாரிப்புகள் அல்லது சேவைகளை நேரடியாக மார்க்கெட்டிங் செய்வதற்கு Roblox அதைப் பயன்படுத்தலாம், ஆனால் பயனரின் மின்னஞ்சல் முகவரியை அப்படிப் பயன்படுத்துவதற்கு கட்டணமின்றியும், எளிதான விதத்திலும், ஆட்சேபம் தெரிவிக்க தெளிவாகவும் தனித்துவமாகவும், ஒருவேளை அப்படிப் பயன்படுத்துவதற்கு ஆரம்பத்தில் பயனர் மறுக்கவில்லை என்றால், ஒவ்வொரு மெசேஜின்போதும் பயனருக்கு Roblox வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்.விலகுவதற்கான உரிமை
பயனர் ஒரு நுகர்வோராக இருந்தால் (அதாவது, Roblox உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, பயனரின் வர்த்தகம், வணிகம், கைவினை அல்லது தொழிலுக்கு வெளியே உள்ள நோக்கங்களுக்காகச் செயல்படும் ஒரு தனிநபர்), பயனர் பின்வரும் நிபந்தனைகளின் கீழ், இறுதிசெய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் திரும்பப்பெறலாம்.
- விலகுவதற்கான உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்
-
விலகுவதற்கான உரிமை. கீழே உள்ள பிரிவு 13D-க்கு உட்பட்டு, இந்த ஒப்பந்தத்திலிருந்து 14 நாட்களுக்குள் எந்த காரணமும் தெரிவிக்காமல் விலக பயனருக்கு உரிமை உள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியான நாளிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகு விலகுவதற்கான அவகாசம் காலாவதியாகும். விலகுவதற்கான உரிமையைப் பயன்படுத்த, பயனர் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான பயனரின் முடிவை ஒரு தெளிவான அறிக்கை (எ.கா. தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதம்) மூலம் Roblox-க்குத் (Roblox Corporation, Customer Support, 3150 S. Delaware St., San Mateo, CA 94403, அல்லது (888) 858-2569) தெரிவிக்க வேண்டும். பயனர் கீழே குறிப்பாக வழங்கப்பட்டுள்ள மாதிரி விலகல் படிவத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் அது கட்டாயமில்லை. எங்கள் எங்கள் இணையதளத்தில் மாதிரி விலகல் படிவம் அல்லது வாடிக்கையாளர் உதவிப் படிவத்தின் மூலம் வேறு ஏதேனும் தெளிவான அறிக்கையை நீங்கள் மின்னணு முறையில் நிரப்பியும் சமர்ப்பிக்கலாம். நீங்கள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்தினால், அத்தகைய விலகலைப் பெற்றதற்கான ஒப்புதலை நீடிக்கும் ஊடகத்தில் (எ.கா. கடிதம் மூலம்) தாமதமின்றி உங்களுக்குத் தெரிவிப்போம்.
விலகல் காலக்கெடுவைப் பூர்த்தி செய்ய, பயனர், விலகலுக்கான அவகாசக் காலம் முடிவதற்குள், பயனரின் விலகும் உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பான பயனரின் தகவலை அனுப்பினால் போதுமானது.
-
விலகுவதன் விளைவுகள். இந்த ஒப்பந்தத்திலிருந்து பயனர் விலகினால், டெலிவரிக்கான செலவுகள் உட்பட பயனரிடம் இருந்து பெற்ற பேமெண்ட்டுகள் அனைத்தையும் (Roblox வழங்கும் செலவு குறைவான வழக்கமான டெலிவரி வகை இல்லாமல், பயனர் தேர்வுசெய்த டெலிவரி வகையின் காரணமாக ஏற்பட்ட கூடுதல் செலவுகள் இதில் சேராது), நியாயமற்ற தாமதம் ஏதுமின்றியும், எந்தச் சூழ்நிலையிலும் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற பயனரின் முடிவு Roblox-க்குத் தெரிவிக்கப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களுக்கு மிகாமல், Roblox பயனருக்குத் திரும்ப வழங்க வேண்டும். பயனர் வேறுவிதமாக வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டால், Roblox தொடக்கப் பரிவர்த்தனைக்குப் பயனர் பயன்படுத்திய அதே கட்டண முறையைப் பயன்படுத்தி அத்தகைய பணத்தைத் திரும்ப வழங்கும்; எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பணத்தை அப்படித் திரும்பப் பெறுவதற்கு பயனருக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது.
விலகும் காலத்தின் போது சேவைகளின் செயல்திறனைத் தொடங்க நீங்கள் கோரியிருந்தால், ஒப்பந்தத்தின் முழு கவரேஜுடன் ஒப்பிடுகையில், இந்த ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் விலகுவதை எங்களுக்குத் தெரிவிக்கும் வரை, வழங்கப்பட்ட சேவைக்கு ஏற்ப ஒரு தொகையை எங்களுக்குச் செலுத்த வேண்டும்.
-
-
மாதிரி விலகல் படிவம்
(ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் விலக விரும்பினால் மட்டுமே இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி அனுப்பவும்)
அனுப்ப வேண்டிய முகவரி: Roblox Corporation, Customer Support, 3150 S. Delaware St., San Mateo, CA 94403.
- பின்வரும் பொருட்களின் விற்பனைக்கான (*)/பின்வரும் சேவைகளை வழங்குவதற்கான(*) எனது/எங்களது(*) ஒப்பந்தத்திலிருந்து நான்/நாங்கள்(*) விலகுவதாக இதன் மூலம் நான்/நாங்கள்(*) அறிவிப்பை வழங்குகிறோம்,
- ஆர்டர் செய்யப்பட்டது(*)/பெறப்பட்டது(*)
- நுகர்வோர் பெயர்
- நுகர்வோர் முகவரி- நுகர்வோர் கையொப்பம் (இந்தப் படிவம் தாள் வடிவில் அறிவிக்கப்பட்டால் மட்டுமே)
- தேதி____
(*) தேவையானபடி நீக்கிவிடவும். - விலகுவதற்கான உரிமையிலிருந்து விதிவிலக்குகள். பயனரின் குறிப்பிடல்களின்படி செய்யப்பட்ட அல்லது தெளிவாகத் தனிப்பயனாக்கப்பட்ட பொருட்களை வழங்குவதற்கான தொலைதூர அல்லது வளாகத்திற்கு வெளியிலான ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை, விலகுவதற்கான உரிமை இல்லாமல் போகலாம்.
-
விலகுவதற்கான உரிமையின் காலாவதி.விலகுவதற்கான உரிமை பின்வரும் சூழல்களில் காலாவதியாகக்கூடியது என்பதை நினைவில் கொள்ளவும், பின்வரும் சந்தர்ப்பங்களில்:
- சேவை ஒப்பந்தங்களுக்கு - சேவை முழுவதுமாக நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆனால் முன்பே பயனரின் வெளிப்படையான ஒப்புதலுடனும், Roblox ஒப்பந்தத்தை முழுவதுமாக நிறைவேற்றியதும், விலகுவதற்கான உரிமையை பயனர் இழந்துவிடுவார் என்பதைப் புரிந்துகொண்டும் மட்டுமே சேவையின் நிறைவேற்றம் தொடங்கியது என்றால் மட்டுமே, ஒப்பந்தம் பணம் செலுத்த வேண்டிய கடப்பாட்டின் கீழ் பயனரை நிறுத்துகிறது என்றால்.
- புலனாகும் ஊடகத்தில் வழங்கப்படாத டிஜிட்டல் உள்ளடக்கத்தை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் - சேவை நிறைவேற்றம் தொடங்கிவிட்டு, மற்றும் பின்வரும் சூழல்களில் பணம் செலுத்த வேண்டிய கடப்பாட்டின் கீழ் பயனரை நிறுத்துகிறது என்றால்: (i) விலகுவதற்கான காலகட்டத்தின்போது பயனர் சேவை நிறைவேற்றத்தைத் தொடங்குவதற்கு வெளிப்படையாக ஒப்புதல் அளித்திருந்தால்; (ii) இதன் மூலம் பயனரின் விலகுவதற்கான உரிமையை பயனர் இழக்கிறார் என்பதைப் பயனர் புரிந்துகொண்டுள்ளார் என்றால்; மற்றும் (iii) விலகல் காலம் முடிவதற்கு முன்பு Roblox ஒப்பந்த நிறைவேற்றத்தைத் தொடங்குவதற்கு பயனர் ஒப்புதல் அளித்ததையும், விலகுவதற்கான உரிமையின் காலாவதி பற்றிப் புரிந்துகொண்டதற்கான உறுதிப்படுத்தலையும் குறிப்பிடுகின்ற, ஒப்பந்தத்தின் உறுதிப்படுத்தலை Roblox பயனருக்கு வழங்கியிருந்தால்.
- விலகுவதற்கான உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்
பதிப்புரிமை
Roblox விதிமுறைகளில் உள்ள எதுவும், குறிப்பாக கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2(b) தொடர்பாக, பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டாய ஊதிய உரிமைகளைப் பாதிக்காது.
பிளாட்ஃபார்ம் மற்றும் சேவைகள் மற்றும் வழங்கப்பட்ட வேறு எந்த வகையான உள்ளடக்கத்தின் உரை மற்றும் தரவுச் செயலாக்க உரிமையும் Roblox நிறுவனத்திற்கே உள்ளது.இணக்கமான சாதனங்கள்
பயங்கரவாத உள்ளடக்கத்தை ஆன்லைன் மூலம் பரப்புவது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறை
இங்கே காணக்கூடிய, பயங்கரவாத உள்ளடக்கத்தின் பரவலைக் கையாள்வது பற்றிய ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஒழுங்குமுறை (EU) 2021/784 மற்றும் 29 ஏப்ரல் 2021-இன் ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கு இணங்க, ஜெர்மனியில் DP-Dock COR Services GmbH-ஐ பிரதிநிதியாக Roblox நியமித்துள்ளது.மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்துதல்
பயனர் விதிமுறைகளின் பிரிவு 2(g) உடன் கூடுதலாக, Roblox-இன் மேல்முறையீடு அமைப்பு அல்லது சட்டவிரோத உள்ளடக்க அறிவிப்புப் படிவத்தை மீண்டும் மீண்டும், மோசமாகத் தவறாகப் பயன்படுத்தியுள்ள பயனர்கள் அல்லது பயனர் அல்லாதவர்கள் சமர்ப்பிக்கும் (i) மேல்முறையீடுகள் அல்லது (ii) சட்டவிரோத உள்ளடக்க அறிவிப்புகளைச் செயலாக்க Roblox மறுக்கலாம். இத்தகைய தவறான பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டுகள்: அடிக்கடி ஆதாரமற்ற அறிவிப்புகள் அல்லது மேல்முறையீடுகளை வழங்குதல், அல்லது எந்த தகவலும் இல்லாமல் அதிக அளவு மேல்முறையீடுகள் அல்லது அறிவிப்புகளை சமர்ப்பித்தல் உட்பட, மேல்முறையீடுகள் அல்லது அறிவிப்பு அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை. அப்படி மறுக்கப்படும்போது, பயனர் மேல்முறையீட்டு முறை அல்லது சட்டவிரோத உள்ளடக்க அறிவிப்புப் படிவத்தை இதுவரை பயன்படுத்திய விதம் மற்றும் தவறான பயன்பாட்டின் தீவிரம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படலாம். மீறலின் அளவைப் பொறுத்து மறுப்பின் கால அளவு மாறலாம். Roblox சட்டவிரோத உள்ளடக்கத்தை மீண்டும் மீண்டும் வெளியிடும் பயனர்களின் கணக்குகளை இடைநீக்கலாம் அல்லது நிறுத்தலாம். அப்படி இடைநீக்கப்படும்போதும் நிறுத்தப்படும்போதும், இதுவரை பயனர் செய்துள்ள உள்ளடக்க மீறல்களும் தவறான பயன்பாட்டின் தீவிரமும் கருத்தில் கொள்ளப்படலாம். மீறலின் அளவைப் பொறுத்து இடைநீக்கத்தின் கால அளவு மாறலாம். இடைநீக்கம் அல்லது நிறுத்தம் குறித்து முன்கூட்டியே Roblox உங்களுக்குத் தெரிவிக்கும், (அப்படிச் செய்வது எங்களுக்குப் பொருத்தமற்றதாக இருந்தால் தவிர), அத்தகைய நடவடிக்கையுடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், மேல்முறையீடு செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.விர்ச்சுவல் உள்ளடக்கத்தின் பரிந்துரைகள் மற்றும் ரேங்கிங்
Roblox அம்சத்தைப் பொறுத்து (எ.கா. மார்க்கெட்பிளேஸ் மற்றும் அனுபவத் தேடல் போன்ற அம்சங்கள்), பயனர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க வெவ்வேறு காரணிகளை Roblox பயன்படுத்துகிறது. பொருந்தக்கூடிய தேடல் அல்லது பரிந்துரை அம்சத்தைப் பொறுத்து, காரணிகளின் வகை மற்றும் அவை ஒவ்வொன்றுக்கும் பயன்படுத்தப்படும் ஒப்பீட்டு முக்கியத்துவம் மாறுபடும். அதுமட்டுமின்றி, சில அம்சங்களுக்கு, பயனர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு வழங்கப்படும் முடிவுகள் அல்லது பரிந்துரைகளின் வரிசையை மாற்றியமைக்கும் வசதியை Roblox வழங்குகிறது, இது தேடல் அல்லது பரிந்துரை அம்சத்திற்கு அருகில் இருக்கும். Roblox-இல் பரிந்துரைகள் மற்றும் ரேங்கிங் எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கே பார்க்கவும்.அறிவிப்பு மற்றும் மேல்முறையீடு
பயனர் விதிமுறைகள் பிரிவு 2(f) உடன் கூடுதலாக, Roblox விர்ச்சுவல் உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் போதெல்லாம், Roblox அத்தகைய முடிவுகளை பயனருக்கு அறிவிக்கும் மற்றும் பயனர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். அத்தகைய முடிவுகளை எடுக்கும்போது நடப்பு மீறலைக் கருத்தில் கொள்வதோடு மட்டுமல்லாமல், Roblox பயனரின் கடந்தகால Roblox உபயோகத்தையும், பயனர் மீண்டும் மீண்டும் Roblox கொள்கைகளை மீறியுள்ளாரா என்பதையும் கருத்தில் கொள்ளும். சில கொள்கைகளைத் தொடர்ந்து மீறுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் (அதாவது, எச்சரிக்கை, அதைத் தொடர்ந்து காலக்கெடு, அதைத் தொடர்ந்து இடைநீக்கம் போன்றவை). E.U. பயனர்கள் Roblox-இன் ஆரம்ப நிலை முடிவுக்குப் பிறகு 6 மாதங்கள் வரை அத்தகைய முடிவுகளை மேல்முறையீடு செய்யலாம். Roblox மேல்முறையீட்டு கோரிக்கையை மதிப்பாய்வு செய்யும்போது, மீறலின் தீவிரம், பயனரின் மேல்முறையீட்டுக்கான காரணம் மற்றும் தளத்தில் பயனரின் நடத்தை ஆகியவற்றை முழுமையாகக் கருத்தில் கொள்கிறது. சில சூழ்நிலைகளில், மேல்முறையீடுகள் உடனடியாகப் பொருந்தாமல் போகலாம் என்பதை நினைவில் கொள்ளவும் - எடுத்துக்காட்டாக, இடைநீக்கம் ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில் முன்பே விதிக்கப்பட்ட 20 நிமிட இடைநிறுத்தம் போன்ற விளைவுகள்.பிரான்சில் வசிப்பவர்கள்
பயனர் விதிமுறைகள் பிரிவு 13.a-இல் விவரிக்கப்பட்டுள்ள கட்டாய முறைசாரா சர்ச்சைத் தீர்வுச் செயல்முறையை முடித்த பிறகும், ஒரு சர்ச்சை தொடர்ந்தால், பிரான்சில் வசிப்பவர்கள் இந்த விஷயத்தை பின்வரும் இடையீட்டாளரிடம் கட்டணமின்றிக் கொண்டு செல்லலாம்: IEAM (Institut d'Expertise, d'Arbitrage et de Médiation), 31bis-33 rue Daru 75008 Paris, https://www.ieam.eu/demande-de-mediation.
பிற்சேர்க்கை D (வியட்நாம்)
இந்தப் பகுதி A-இல் உள்ள துணை விதிகள் வியட்நாமில் உள்ள பயனர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்குப் பொருந்தும். Roblox விதிமுறைகளுக்கும் இந்தக் கூடுதல் விதிகளுக்கும் இடையே வேறுபாடுகள் அல்லது முரண்பாடு இருந்தால், கூடுதல் விதிகளே செல்லுபடியாகும்.
பகுதி A – வியட்நாமில் உள்ள பயனர்கள்
- வியட்நாம் பிளேயர் விதிமுறைகள் வியட்நாமில் உள்ள பயனர்கள் Roblox-VNG செயலி மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் (“Roblox Vietnam”). Roblox Vietnam நிறுவனம் வியட்நாமில் Minh Phuong Thinh Communication Company Limited ("வியட்நாம் வெளியீட்டாளர்") நிறுவனத்தால் வெளியிடப்பட்டு இயக்கப்படுகிறது, இது Roblox Vietnam உபயோகத்திற்குப் பொருந்தும் தனித்தனி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் Roblox பயனர் விதிமுறைகள் என்பதற்குப் பதிலாக உள்ளது. அனைத்துப் பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, Roblox Vietnam-இல் உங்கள் செயல்பாடுகள் சமூகத் தரநிலைகளுக்கு இணங்க வேண்டும்.
-
வியட்நாமில் உள்ள கிரியேட்டர்கள்வியட்நாமில் உள்ள கிரியேட்டர்கள் Roblox Studio மற்றும் தொடர்புடைய சேவைகளைப் பயன்படுத்தி அனுபவங்களையும் விர்ச்சுவல் உள்ளடக்கத்தையும் உருவாக்கலாம். Roblox Studio மற்றும் தொடர்புடைய சேவைகள் Roblox Corporation நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. நீங்கள் வியட்நாமில் ஒரு கிரியேட்டராக இருந்தால், Roblox Studio மற்றும் தொடர்புடைய சேவைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் கிடைக்கச் செய்யும் ஏதேனும் அனுபவங்கள் மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கம் ஆகியவற்றின் உபயோகமானது, Roblox கிரியேட்டர் விதிமுறைகளால் (Roblox VNG-இல் உள்ள வெளியீட்டைப் பொறுத்து, இந்தக் கூடுதல் விதிகளின் பகுதி B-ஆல் திருத்தப்பட்டபடி) நிர்வகிக்கப்படுகிறது.
Roblox வழங்கும் சில கிரியேட்டர் தொடர்பான சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது, டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் கிரியேட்டர் ஸ்டோர் விதிமுறைகள் போன்ற (ஆனால் அவை மட்டுமே அல்ல) அந்த சேவைகளுக்குப் பொருந்தக்கூடிய கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.
பகுதி B - Roblox VIETNAM வழியாக கிரியேட்டரின் UGC-ஐ வெளியிடுதல்
Roblox Vietnam மூலம் கிரியேட்டரின் UGC-ஐ வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் இந்தப் பகுதி B-இல் உள்ள கூடுதல் விதிகள் பொருந்தும். வியட்நாமுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எல்லாக் கிரியேட்டர்களுக்கும் இவை பொருந்தும். Roblox கிரியேட்டர் விதிமுறைகளுக்கும் இந்தக் கூடுதல் விதிகளுக்கும் இடையே வேறுபாடுகள் அல்லது முரண்பாடு இருந்தால், கூடுதல் விதிகளே செல்லுபடியாகும்.
- வெளியீடு. உள்ளூர் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதற்காக, Roblox Vietnam மற்றும் அதனுடன் தொடர்புடைய UGC ஆகியவை வியட்நாம் வெளியீட்டாளரால் வியட்நாமில் வெளியிடப்பட்டு இயக்கப்படுகின்றன. உங்கள் கிரியேட்டரின் UGC, Roblox Vietnam பயனர்களுக்கு ("வியட்நாம் பயனர்கள்") Roblox-இன் துணை உரிமதாரராக Roblox கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2(b)ii இன் கீழ் வியட்நாம் வெளியீட்டாளரால் கிடைக்கச் செய்யப்படலாம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.
- பர்ச்சேஸ்கள். உள்ளூர் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதற்காக, வியட்நாம் பிளேயர்கள் UGC-ஐ நேரடியாக கிரியேட்டரிடம் இருந்து வாங்க முடியாது. அதற்கு பதிலாக அவர்கள் வியட்நாம் வெளியீட்டாளரிடமிருந்தே வாங்க வேண்டும். ஒரு வியட்நாம் பிளேயர் வியட்நாம் வெளியீட்டாளரிடமிருந்து கிரியேட்டரின் UGC-ஐ (Robux-க்காகவோ அல்லது கட்டணம் இல்லாமலோ) வாங்கினால், வியட்நாம் பிளேயர் கிரியேட்டரின் UGC-ஐ வாங்கியதால் கிரியேட்டருக்கும் அந்த வியட்நாம் பிளேயருக்கும் இடையே எந்த வகையான ஒப்பந்த உறவும் ஏற்படாது. அதற்கு பதில், கிரியேட்டரின் UGC வியட்நாம் வெளியீட்டாளரால் வியட்நாம் பிளேயருக்கு உள் உரிமத்திற்கு வழங்கப்படும். ஈட்டிய Robux மற்றும் தொடர்புடைய Robux ஒதுக்கீடு ஆகியவற்றைப் பெறுவதற்கான படைப்பாளரின் தகுதியைக் கணக்கிடும் நோக்கங்களுக்காக, Roblox கிரியேட்டர் விதிமுறைகள் பிரிவு 4(b)-இன் கீழ், அத்தகைய பர்ச்சேஸ் பரிவர்த்தனை வியட்நாமுக்கு வெளியே உள்ள பிளேயருக்கு கிரியேட்டரிடம் இருந்து நேரடி விற்பனைக்குப் பொருந்தும் அதே விதத்தில் நடத்தப்படும். Roblox கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2(b) மற்றும் 4 ஆகியவை, இந்தக் கூடுதல் விதிகளுடன் முரண்படும் அளவிற்கு, Roblox Vietnam-இன் கீழ் கிரியேட்டரின் UGC-இன் வெளியீடு, விநியோகம் அல்லது பர்ச்சேஸ் தொடர்பாக அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றன.
- Roblox வியட்நாமை மார்க்கெட்டிங் செய்வதற்காக கிரியேட்டரின் UGC-ஐப்பயன்படுத்துவதற்கான உரிமம். கிரியேட்டரின் UGC-இல் கிரியேட்டருக்கு இருக்கக்கூடிய அனைத்துப் பதிப்புரிமைகளும் கிரியேட்டருக்கே இருக்கும். இதன் மூலம் கிரியேட்டர் Roblox-க்கு ஒரு நிரந்தரமான, திரும்பப்பெற முடியாத, பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத, பிறருக்கு மாற்றித்தரக்கூடிய உரிமத்தை வழங்க ஒப்புக்கொள்கிறார். இதில் எந்தவொரு நபர் அல்லது அமைப்புக்கும் (வியட்நாம் பதிப்பாளர் உட்பட, ஆனால் அதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை) பல நிலைகளில் உள் உரிமமளிக்கும் அதிகாரத்துடன், கிரியேட்டர் GDPR அல்லது பிற தனியுரிமைச் சட்டங்களின் கீழ் மறக்கப்படும் உரிமையைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, Roblox வியட்நாம் அல்லது சேவைகளின் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பாக தற்போதுள்ள அல்லது இனிமேல் உருவாக்கப்படக்கூடிய எந்தவொரு ஊடகம் அல்லது விநியோக சேனலிலும் கிரியேட்டரின் UGC மற்றும் தொடர்புடைய பயனர்பெயரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தலாம். Roblox Vietnam அல்லது சேவைகளை விளம்பரப்படுத்துவதற்காக வணிகநோக்கற்ற மற்றும் கல்விப் பயன்பாடுகளுக்காக கிரியேட்டரின் UGC-ஐ Roblox பயன்படுத்தலாம் (மேலும் அந்தப் பயன்பாடு வணிக நோக்கற்றதா அல்லது கல்வி சார்ந்ததா என்பதை Roblox நியாயமான வகையில் தீர்மானிக்கும்).
- கிரியேட்டரின் UGC மதிப்பாய்வு. சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, Vietnam-இல் எந்தவொரு கிரியேட்டரின் UGC வியட்நாம் வெளியீட்டாளரால் விநியோகிக்கப்படுவதை அனுமதிக்க எந்தக் கடப்பாடும் Roblox-க்கு இல்லை, மேலும் Roblox Vietnam-இல் கிரியேட்டரின் UGC எதையும் வெளியிட வேண்டிய கடப்பாடு வியட்நாம் வெளியீட்டாளருக்கும் இல்லை. அனுபவங்கள் மற்றும் விர்ச்சுவல் உள்ளடக்கம் வியட்நாமில் வெளியிடப் பொருத்தமாக உள்ளதா என்று பார்க்க, Roblox, வியட்நாம் வெளியீட்டாளர் மற்றும்/அல்லது உள்ளூர் ஒழுங்குமுறை அதிகாரிகள் மதிப்பாய்வு செய்யக்கூடும் (வெளியீட்டிற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகு ஏதேனும் நேரத்திலோ). Roblox மற்றும் வியட்நாம் வெளியீட்டாளர் ஆகிய இரு தரப்பும், எப்போது வேண்டுமானாலும் மற்றும் எந்தக் காரணத்திற்காகவும், Roblox Vietnam-இல் கிரியேட்டரின் UGC-ஐ வடிகட்ட, அதன் விநியோகம் மற்றும் வெளியீட்டை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடைநிறுத்த அல்லது நிறுத்த முழுமையான விருப்புரிமையைக் கொண்டிருப்பார்கள். அத்தகைய நடவடிக்கை தொடர்பான Roblox மற்றும் வியட்நாம் வெளியீட்டாளரின் தீர்மானமே இறுதியானது. Roblox தனது தனிப்பட்ட விருப்புரிமையின் பேரில், இந்தப் பிரிவிற்கு இணங்க எடுக்கப்பட்ட ஏதேனும் நடவடிக்கை தொடர்பாக கிரியேட்டரைத் தொடர்புகொள்ளக்கூடும், மேலும் கிரியேட்டரின் UGC-ஐச் சரிசெய்ய அல்லது திருத்தவும், அதனை Roblox Vietnam-இல் வெளியிடுவதற்காக மீண்டும் சமர்ப்பிக்கவும் கிரியேட்டருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.
பிற்சேர்க்கை E (யுனைட்டெட் கிங்டம்)
முன்னுரிமை
Roblox விதிமுறைகளுக்கும் கூடுதல் விதிகளுக்கும் இடையே வேறுபாடுகள் அல்லது முரண்பாடு இருந்தால், கூடுதல் விதிகள் செல்லுபடியாகும்.சட்டப்பூர்வ ஒப்பந்தம்
- Roblox விதிமுறைகளில் எதுவும் முரண்படவில்லை என்றாலும், Roblox விதிமுறைகளுக்கான பயனரின் ஒப்பந்தம் தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நடைபெறுவதாகக் கருதப்படுகிறது.
- பயனர் தனது பிறந்த தேதியை வழங்கி, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுத்து, "பதிவுசெய்" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் பிளாட்ஃபார்மில் பதிவு செய்யலாம். பயனர் தனது கணக்கு அமைப்புகள் வாயிலாக எந்த நேரத்திலும் குறிப்பிட்ட பதிவுத் தகவல்களை மாற்றியமைக்கலாம். பயனர் Roblox விதிமுறைகளை இங்கே அணுகலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.
- வேறுவிதமாக ஒப்புக்கொள்ளப்பட்டால் தவிர, பயனர் எப்போது வேண்டுமானாலும் சேவைகளின் உபயோகம் தொடர்பாக Roblox உடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை நிறுத்தலாம். நிறுத்தப்படும் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளைப் பொறுத்தது அமையும்.
Robux மற்றும் விர்ச்சுவல் ஐட்டங்களை வாங்குதல்
பயனர் Robux-ஐப் பயன்படுத்தி சேவைகளில் விர்ச்சுவல் உள்ளடக்கத்தை வாங்க முடியும். பயனர் சேவைகளுக்குள் காட்டப்படும் விலைக்கு Robux-ஐ வாங்கலாம். கிடைக்கக்கூடிய Robux தொகைகளில் பயனர் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது, பயனர் தனது கணக்கிற்குள் பர்ச்சேஸை முடிக்கவும், கிடைக்கக்கூடிய கட்டண முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் கேட்கப்படும். தற்போது, Roblox டெபிட் / கிரெடிட் கார்டு, PayPal, கிஃப்ட் கார்டுகள் (Roblox-இன் உலாவி செயலிக்கு), Google Play, iTunes, Amazon (Roblox-இன் மொபைல் செயலிகளுக்கு), அத்துடன் Roblox-இன் Xbox One செயலிக்கான செயலிக்குள் நடைபெறும் பர்ச்சேஸ்கள் உள்ளிட்ட பல கட்டண விருப்பங்களை வழங்குகிறது. Roblox-இன் தகுந்த விருப்புரிமையின்பேரில், Roblox கிடைக்கக்கூடிய கட்டண முறைகளை அவ்வப்போது திருத்தலாம். பயனர் "பணம் செலுத்து" என்ற பட்டனை (அல்லது இதேபோல் வழங்கப்பட்டுள்ள பிற பர்ச்சேஸ் பட்டனை) கிளிக் செய்து பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிக்கப்படும்போது பர்ச்சேஸ் ஒப்பந்தம் இறுதியாகும். Roblox விதிமுறைகள், குறிப்பாக பயனர் விதிமுறைகளின் பிரிவு 4 (a) மற்றும் கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 4 ஆகியவற்றிலிருந்து விலகும் வகையில், கிரியேட்டர்களுக்கும் Roblox இடையே ஓர் ஒப்பந்த உறவு இருக்கும். கிரியேட்டர்களுக்கும் பயனர்களுக்கும் இடையே நேரடி ஒப்பந்த உறவு எதுவும் இருக்காது. பயனர் Robux செலுத்தி விர்ச்சுவல் உள்ளடக்கம் மற்றும் பிற விஷயங்களைப் பெற்றால், அத்தகைய பெறுதல்கள் எப்போதும் பயனர் மற்றும் Roblox-க்கு இடையே இறுதியாகும், மேலும் கிரியேட்டர்கள் எப்போதும் Roblox சார்பாகச் செயல்படுவார்கள்.Robux-இல் முழு உரிமை
பயனர் விதிமுறைகள் பிரிவு 3(e) இலிருந்து விலகலாக, மற்றும் பயனர் Roblox வழிகாட்டுதல் அல்லது கொள்கையை மீறுவது அல்லது பயனர் Roblox விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மீறுவது தொடர்பாகத் தவிர, Roblox Robux-இன் மீதான Roblox-இன் முழுமையான உரிமையை Roblox-இன் தகுந்த விருப்புரிமையின்பேரில் எதிர்கால நடைமுறைப்படுத்தலுக்காக மட்டுமே பயன்படுத்தலாம் (அதாவது பயனர் ஏற்கனவே வைத்திருக்கும் செல்லுபடியாகும் Robux-இல் தாக்கத்தை ஏற்படுத்தாது), மேலும் எந்த அறிவிப்பு, பணத்தைத் திரும்ப வழங்குதல் எதுவும் இல்லாமல், இழப்பீடு அல்லது Roblux இந்தப் பிற்சேர்க்கை E அல்லது கட்டுப்படுத்தும் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் பயனருக்குக் கொண்டிருக்கக்கூடிய கடப்பாடு ஆகியவற்றை பாதிக்காமல். பயனர் விதிமுறைகள் பிரிவு 3(e)-இன் மீதமுள்ள விதிகள் பாதிக்கப்படாமல் இருக்கும்.DevEx
கிரியேட்டர் விதிமுறைகள் பிரிவு 4(c)-இலிருந்து விலகும் விதமாக, பயனர் Roblox நிர்ணயித்த மாற்று விகிதத்தின் அடிப்படையில் உண்மையான நாணயத்திற்கு ஈட்டிய Robux-ஐ ரிடீம் செய்துகொள்ள முடியும், மேலும் Roblox-இன் தகுந்த விருப்புரிமையின்பேரில் Roblox நிறுவியுள்ள தேவைகள், நடைமுறைகள் மற்றும் வரம்புகளின் அடிப்படையில் அவ்வப்போது திருத்தப்படலாம் (எ.கா. பணவீக்க ஏற்ற இறக்கங்களை ஈடுசெய்ய). DevEx திட்டத்தின் தற்போதைய மாற்று விகிதம் மற்றும் பொதுவான தேவைகள், கொள்கைகள் மற்றும் வரம்புகள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன.பயனரின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் பணம் திரும்பப் பெறும் தன்மை
- சேவைகள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அல்லது விவரிக்கப்பட்டுள்ளபடி இல்லாவிட்டால் அல்லது Roblox உடனான பயனர் ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை என்றால், பயனர் கூடுதல் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் தீர்வுகளைக் கொண்டிருக்கலாம்.
- Roblox விதிமுறைகளில் உள்ள எதுவும், பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் பயனர்கள் வைத்திருக்கக்கூடிய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு சட்டப்பூர்வ உரிமைகளையும் கட்டுப்படுத்தாது.
கடப்பாட்டிற்கான வரம்புகள்
பயனர் விதிமுறைகள் பிரிவுகள் 15(b)-(c) மற்றும் 16 மற்றும் கிரியேட்டர் விதிமுறைகள் பிரிவு 13 ஆகியவை பொருந்தாது. கூடுதலாக, பயனர் விதிமுறைகளின் 2(g), 3(c) மற்றும் (e), 4(d), 6(b), 11(b)-(c), 15(a) பிரிவுகளில் மற்றும் கிரியேட்டர் விதிமுறைகளின் 5(a)(ii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கடப்பாட்டின் வரம்புகள் பொருந்தாது. அதற்கு பதிலாக, Roblox இந்தப் பிரிவின்படி பிரத்தியேகமாக சேதங்களுக்குப் பொறுப்பேற்கும்.
- Roblox-இன் சட்டப்பூர்வ பிரதிநிதி அல்லது நியமிக்கப்பட்ட ஏஜென்ட்டால் மேற்கொள்ளப்பட்ட மீறலின் அடிப்படையில் மரணம், உடல் காயம் அல்லது உடல்நல பாதிப்பு ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களுக்கும், உத்தரவாதமான தன்மை இல்லாததால் அல்லது மோசடி நோக்கத்தால் ஏற்படும் சேதங்களுக்கும் Roblox-இன் கடப்பாடு வரம்பற்றதாகும்.
- Roblox, Roblox-இன் சட்டப்பூர்வ பிரதிநிதி அல்லது Roblox-இன் நியமிக்கப்பட்ட ஏஜென்ட்டால் உள்நோக்கம் அல்லது அப்பட்டமான அலட்சியத்தால் ஏற்படும் சேதங்களுக்கு Roblox-இன் கடப்பாடு வரம்பற்றது.
- ஒப்பந்தத்தின் பிரதானக் கடமையின் ஒரு சிறிய அலட்சிய மீறல் ஏற்பட்டால், Roblox இந்தப் பிற்சேர்க்கை E-இன் பிரிவு 7A, B மற்றும் D-இல் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளைத் தவிர, பொதுவாக எதிர்பார்க்கக்கூடிய சேதத்தின் அளவிற்கு மட்டுமே Roblox பொறுப்பாகும். ஒப்பந்தத்தின்படி கடமைகள் என்பது சுருக்கமாக, முதலில் ஒப்பந்தத்தை முறையாக நிறைவேற்றுவதை சாத்தியமாக்குகின்ற மற்றும் ஓர் ஒப்பந்தத் தரப்பு தொடர்ந்து நிறைவேற்றப்பட நம்பியிருக்கக்கூடிய கடமைகள் ஆகும்.
- கட்டாயமான பொருந்தக்கூடிய சட்டத்தின்படி கடப்பாடு பாதிக்கப்படாமல் இருக்கும்.
- சட்டப்பூர்வ வரம்புகள் பொருந்தும்பட்சத்தில், இந்தப் பிற்சேர்க்கை E-இன் பிரிவு 7A, B மற்றும் D-இன் சூழ்நிலைகளைத் தவிர, ஏற்படும் சேதங்களுக்கான கிளைம்களுக்கான வரம்புக் காலம் ஒரு (1) வருடமாக இருக்கும்.
நிர்வகிக்கும் சட்டம், சட்ட எல்லை மற்றும் இடம்.
- பயனர் விதிமுறைகள் பிரிவு 14-இலிருந்து விலகும் விதமாக, பயனரின் வசிப்பிடத்தின் கட்டாயச் சட்டம் கலிபோர்னியா சட்டத்தை விட சாதகமாக இருக்கும் அளவிற்கு, பயனரின் வசிப்பிடச் சட்டம் பொருந்தும்.
- பயனர் தனது வர்த்தகம், வணிகம், கைவினை அல்லது தொழில் ஆகியவற்றிற்கு வெளியிலான நோக்கங்களுக்காக செயல்படும் ஒரு நுகர்வோராக இருக்கும் பட்சத்தில், பயனர் விதிமுறைகளின் பிரிவு 14-இன் படி சட்ட எல்லை மற்றும் இடத்தின் தெரிவு பொருந்தாது.
சர்ச்சைகளின் தீர்வு / நடுவர் தீர்வு
- பயனர் ஒரு நுகர்வோராக இருந்தால் (அதாவது, Roblox உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, பயனரின் வர்த்தகம், வணிகம், கைவினை அல்லது தொழிலுக்கு வெளியே உள்ள நோக்கங்களுக்காகச் செயல்படும் ஒரு தனிநபர்), பயனர் விதிமுறைகளின் பிரிவு 13(b) மற்றும் (c) பொருந்தாது, மேலும் பயனர் விதிமுறைகளின் பிரிவு 13 மற்றும் 14(a) மற்றும் கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 7(b) எந்தவொரு தரப்பின் நீதிமன்றங்களுக்குச் செல்லும் செயல்பாட்டை விலக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.
- Roblox நுகர்வோர் நடுவர் குழுவுடன் எந்தவொரு மாற்று சர்ச்சைத் தீர்வுத் திட்டங்களிலும் பங்கேற்கத் தேவையில்லை அல்லது விரும்பவும் இல்லை. அதற்குபதில், பயனர் விதிமுறைகளின் பிரிவு 13(a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி எந்தவொரு முரண்பாடுகளையும் தீர்க்க Roblox கடுமையாகப் பணிபுரிகிறது.
UK பயனர்களுக்கான அறிவிப்பு
பயனர் விதிமுறைகளின் பிரிவு 18 பொருந்தாது.தொடர்ந்து செல்லுபடியாதல்
Roblox விதிமுறைகளின் பிரிவு 19(b)-இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளுடன் கூடுதலாக, இந்தப் பிற்சேர்க்கை E-இன் 7-வது பிரிவும், ஒப்பந்த நிறுத்தத்திற்குப் பிறகும் நீடிக்கும்.மின்னணுத் தகவல்தொடர்புகளுக்கான ஒப்புதல்
பயனர் விதிமுறைகளின பிரிவு 19(f) பொருந்தாது. Roblox ஒரு தயாரிப்பு அல்லது சேவையை விற்பனை செய்யும் சூழலில் பயனரின் மின்னஞ்சல் முகவரியைப் பெற்றிருந்தால், அதே போன்ற Roblox-இன் சொந்தத் தயாரிப்புகள் அல்லது சேவைகளை நேரடியாக மார்க்கெட்டிங் செய்வதற்கு Roblox அதைப் பயன்படுத்தலாம், ஆனால் பயனரின் மின்னஞ்சல் முகவரியை அப்படிப் பயன்படுத்துவதற்கு கட்டணமின்றியும், எளிதான விதத்திலும், ஆட்சேபம் தெரிவிக்க தெளிவாகவும் தனித்துவமாகவும், ஒருவேளை அப்படிப் பயன்படுத்துவதற்கு ஆரம்பத்தில் பயனர் மறுக்கவில்லை என்றால், ஒவ்வொரு மெசேஜின்போதும் பயனருக்கு Roblox வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்.விலகுவதற்கான உரிமை
பயனர் ஒரு நுகர்வோராக இருந்தால் (அதாவது, Roblox உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, பயனரின் வர்த்தகம், வணிகம், கைவினை அல்லது தொழிலுக்கு வெளியே உள்ள நோக்கங்களுக்காகச் செயல்படும் ஒரு தனிநபர்), பயனர் பின்வரும் நிபந்தனைகளின் கீழ், இறுதிசெய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் திரும்பப்பெறலாம்.
- விலகுவதற்கான உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்
-
விலகுவதற்கான உரிமை. கீழே உள்ள பிரிவு 13D-க்கு உட்பட்டு, இந்த ஒப்பந்தத்திலிருந்து 14 நாட்களுக்குள் எந்த காரணமும் தெரிவிக்காமல் விலக பயனருக்கு உரிமை உள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியான நாளிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகு விலகுவதற்கான அவகாசம் காலாவதியாகும். விலகுவதற்கான உரிமையைப் பயன்படுத்த, பயனர் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான பயனரின் முடிவை ஒரு தெளிவான அறிக்கை (எ.கா. தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதம்) மூலம் Roblox-க்குத் (Roblox Corporation, Customer Support, 3150 S. Delaware St., San Mateo, CA 94403, அல்லது (888) 858-2569) தெரிவிக்க வேண்டும். பயனர் கீழே குறிப்பாக வழங்கப்பட்டுள்ள மாதிரி விலகல் படிவத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் அது கட்டாயமில்லை. எங்கள் எங்கள் இணையதளத்தில் மாதிரி விலகல் படிவம் அல்லது வாடிக்கையாளர் உதவிப் படிவத்தின் மூலம் வேறு ஏதேனும் தெளிவான அறிக்கையை நீங்கள் மின்னணு முறையில் நிரப்பியும் சமர்ப்பிக்கலாம். நீங்கள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்தினால், அத்தகைய விலகலைப் பெற்றதற்கான ஒப்புதலை நீடிக்கும் ஊடகத்தில் (எ.கா. கடிதம் மூலம்) தாமதமின்றி உங்களுக்குத் தெரிவிப்போம்.
விலகல் காலக்கெடுவைப் பூர்த்தி செய்ய, பயனர், விலகலுக்கான அவகாசக் காலம் முடிவதற்குள், பயனரின் விலகும் உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பான பயனரின் தகவலை அனுப்பினால் போதுமானது.
-
விலகுவதன் விளைவுகள். இந்த ஒப்பந்தத்திலிருந்து பயனர் விலகினால், டெலிவரிக்கான செலவுகள் உட்பட பயனரிடம் இருந்து பெற்ற பேமெண்ட்டுகள் அனைத்தையும் (Roblox வழங்கும் செலவு குறைவான வழக்கமான டெலிவரி வகை இல்லாமல், பயனர் தேர்வுசெய்த டெலிவரி வகையின் காரணமாக ஏற்பட்ட கூடுதல் செலவுகள் இதில் சேராது), நியாயமற்ற தாமதம் ஏதுமின்றியும், எந்தச் சூழ்நிலையிலும் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற பயனரின் முடிவு Roblox-க்குத் தெரிவிக்கப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களுக்கு மிகாமல், Roblox பயனருக்குத் திரும்ப வழங்க வேண்டும். பயனர் வேறுவிதமாக வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டால், Roblox தொடக்கப் பரிவர்த்தனைக்குப் பயனர் பயன்படுத்திய அதே கட்டண முறையைப் பயன்படுத்தி அத்தகைய பணத்தைத் திரும்ப வழங்கும்; எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பணத்தை அப்படித் திரும்பப் பெறுவதற்கு பயனருக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது.
விலகும் காலத்தின் போது சேவைகளின் செயல்திறனைத் தொடங்க நீங்கள் கோரியிருந்தால், ஒப்பந்தத்தின் முழு கவரேஜுடன் ஒப்பிடுகையில், இந்த ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் விலகுவதை எங்களுக்குத் தெரிவிக்கும் வரை, வழங்கப்பட்ட சேவைக்கு ஏற்ப ஒரு தொகையை எங்களுக்குச் செலுத்த வேண்டும்.
-
-
மாதிரி விலகல் படிவம்
(ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் விலக விரும்பினால் மட்டுமே இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி அனுப்பவும்)
அனுப்ப வேண்டிய முகவரி: Roblox Corporation, Customer Support, 3150 S. Delaware St., San Mateo, CA 94403.
- பின்வரும் பொருட்களின் விற்பனைக்கான (*)/பின்வரும் சேவைகளை வழங்குவதற்கான(*) எனது/எங்களது(*) ஒப்பந்தத்திலிருந்து நான்/நாங்கள்(*) விலகுவதாக இதன் மூலம் நான்/நாங்கள்(*) அறிவிப்பை வழங்குகிறோம்,
- ஆர்டர் செய்யப்பட்டது(*)/பெறப்பட்டது(*)
- நுகர்வோர் பெயர்
- நுகர்வோர் முகவரி- நுகர்வோர் கையொப்பம் (இந்தப் படிவம் தாள் வடிவில் அறிவிக்கப்பட்டால் மட்டுமே)
- தேதி____
(*) தேவையானபடி நீக்கிவிடவும். - விலகுவதற்கான உரிமையிலிருந்து விதிவிலக்குகள். பயனரின் குறிப்பிடல்களின்படி செய்யப்பட்ட அல்லது தெளிவாகத் தனிப்பயனாக்கப்பட்ட பொருட்களை வழங்குவதற்கான தொலைதூர அல்லது வளாகத்திற்கு வெளியிலான ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை, விலகுவதற்கான உரிமை இல்லாமல் போகலாம்.
-
விலகுவதற்கான உரிமையின் காலாவதி.விலகுவதற்கான உரிமை பின்வரும் சூழல்களில் காலாவதியாகக்கூடியது என்பதை நினைவில் கொள்ளவும், பின்வரும் சந்தர்ப்பங்களில்:
- சேவை ஒப்பந்தங்களுக்கு - சேவை முழுவதுமாக நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆனால் முன்பே பயனரின் வெளிப்படையான ஒப்புதலுடனும், Roblox ஒப்பந்தத்தை முழுவதுமாக நிறைவேற்றியதும், விலகுவதற்கான உரிமையை பயனர் இழந்துவிடுவார் என்பதைப் புரிந்துகொண்டும் மட்டுமே சேவையின் நிறைவேற்றம் தொடங்கியது என்றால் மட்டுமே, ஒப்பந்தம் பணம் செலுத்த வேண்டிய கடப்பாட்டின் கீழ் பயனரை நிறுத்துகிறது என்றால்.
- புலனாகும் ஊடகத்தில் வழங்கப்படாத டிஜிட்டல் உள்ளடக்கத்தை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் - சேவை நிறைவேற்றம் தொடங்கிவிட்டு, மற்றும் பின்வரும் சூழல்களில் பணம் செலுத்த வேண்டிய கடப்பாட்டின் கீழ் பயனரை நிறுத்துகிறது என்றால்: (i) விலகுவதற்கான காலகட்டத்தின்போது பயனர் சேவை நிறைவேற்றத்தைத் தொடங்குவதற்கு வெளிப்படையாக ஒப்புதல் அளித்திருந்தால்; (ii) இதன் மூலம் பயனரின் விலகுவதற்கான உரிமையை பயனர் இழக்கிறார் என்பதைப் பயனர் புரிந்துகொண்டுள்ளார் என்றால்; மற்றும் (iii) விலகல் காலம் முடிவதற்கு முன்பு Roblox ஒப்பந்த நிறைவேற்றத்தைத் தொடங்குவதற்கு பயனர் ஒப்புதல் அளித்ததையும், விலகுவதற்கான உரிமையின் காலாவதி பற்றிப் புரிந்துகொண்டதற்கான உறுதிப்படுத்தலையும் குறிப்பிடுகின்ற, ஒப்பந்தத்தின் உறுதிப்படுத்தலை Roblox பயனருக்கு வழங்கியிருந்தால்.
- விலகுவதற்கான உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்
பதிப்புரிமை
Roblox விதிமுறைகளில் உள்ள எதுவும், குறிப்பாக கிரியேட்டர் விதிமுறைகளின் பிரிவு 2(b) தொடர்பாக, பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டாய ஊதிய உரிமைகளைப் பாதிக்காது.
பிளாட்ஃபார்ம் மற்றும் சேவைகள் மற்றும் வழங்கப்பட்ட வேறு எந்த வகையான உள்ளடக்கத்தின் உரை மற்றும் தரவுச் செயலாக்க உரிமையும் Roblox நிறுவனத்திற்கே உள்ளது.இணக்கமான சாதனங்கள்
மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்துதல்
பயனர் விதிமுறைகளின் பிரிவு 2(g) உடன் கூடுதலாக, Roblox-இன் புகார்கள் மற்றும் மேல்முறையீடு அமைப்பு அல்லது சட்டவிரோத உள்ளடக்க அறிவிப்புப் படிவத்தை மீண்டும் மீண்டும், மோசமாகத் தவறாகப் பயன்படுத்தியுள்ள பயனர்கள் அல்லது பயனர் அல்லாதவர்கள் சமர்ப்பிக்கும் (i) மேல்முறையீடுகள் (ii) சட்டவிரோத உள்ளடக்க அறிவிப்புகள் அல்லது (iii) பிற புகார்களைச் செயலாக்க Roblox மறுக்கலாம். இத்தகைய தவறான பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டுகள்: வெளிப்படையாக அடிப்படையற்ற புகார்கள், அடிக்கடி ஆதாரமற்ற அறிவிப்புகள் அல்லது மேல்முறையீடுகளை வழங்குதல், அல்லது எந்த தகவலும் இல்லாமல் அதிக அளவு மேல்முறையீடுகள் அல்லது அறிவிப்புகளை சமர்ப்பித்தல் உட்பட, மேல்முறையீடுகள் அல்லது அறிவிப்பு அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை. அப்படி மறுக்கப்படும்போது, பயனர் மேல்முறையீட்டு முறை அல்லது சட்டவிரோத உள்ளடக்க அறிவிப்புப் படிவத்தை இதுவரை பயன்படுத்திய விதம் மற்றும் தவறான பயன்பாட்டின் தீவிரம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படலாம். மீறலின் அளவைப் பொறுத்து மறுப்பின் கால அளவு மாறலாம். Roblox சட்டவிரோத உள்ளடக்கத்தை மீண்டும் மீண்டும் வெளியிடும் பயனர்களின் கணக்குகளை இடைநீக்கலாம் அல்லது நிறுத்தலாம். அப்படி இடைநீக்கப்படும்போதும் நிறுத்தப்படும்போதும், இதுவரை பயனர் செய்துள்ள உள்ளடக்க மீறல்களும் தவறான பயன்பாட்டின் தீவிரமும் கருத்தில் கொள்ளப்படலாம். மீறலின் அளவைப் பொறுத்து இடைநீக்கத்தின் கால அளவு மாறலாம். இடைநீக்கம் அல்லது நிறுத்தம் குறித்து முன்கூட்டியே Roblox உங்களுக்குத் தெரிவிக்கும், (அப்படிச் செய்வது எங்களுக்குப் பொருத்தமற்றதாக இருந்தால் தவிர), அத்தகைய நடவடிக்கையுடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், மேல்முறையீடு செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.விர்ச்சுவல் உள்ளடக்கத்தின் பரிந்துரைகள் மற்றும் ரேங்கிங்
Roblox அம்சத்தைப் பொறுத்து (எ.கா. மார்க்கெட்பிளேஸ் மற்றும் அனுபவத் தேடல் போன்ற அம்சங்கள்), பயனர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க வெவ்வேறு காரணிகளை Roblox பயன்படுத்துகிறது. பொருந்தக்கூடிய தேடல் அல்லது பரிந்துரை அம்சத்தைப் பொறுத்து, காரணிகளின் வகை மற்றும் அவை ஒவ்வொன்றுக்கும் பயன்படுத்தப்படும் ஒப்பீட்டு முக்கியத்துவம் மாறுபடும். அதுமட்டுமின்றி, சில அம்சங்களுக்கு, பயனர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு வழங்கப்படும் முடிவுகள் அல்லது பரிந்துரைகளின் வரிசையை மாற்றியமைக்கும் வசதியை Roblox வழங்குகிறது, இது தேடல் அல்லது பரிந்துரை அம்சத்திற்கு அருகில் இருக்கும். Roblox-இல் பரிந்துரைகள் மற்றும் ரேங்கிங் எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கே பார்க்கவும்.அறிவிப்பு மற்றும் மேல்முறையீடு
பயனர் விதிமுறைகள் பிரிவு 2(f) உடன் கூடுதலாக, Roblox விர்ச்சுவல் உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் போதெல்லாம், Roblox அத்தகைய முடிவுகளை பயனருக்கு அறிவிக்கும் மற்றும் பயனர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். அத்தகைய முடிவுகளை எடுக்கும்போது நடப்பு மீறலைக் கருத்தில் கொள்வதோடு மட்டுமல்லாமல், Roblox பயனரின் கடந்தகால Roblox உபயோகத்தையும், பயனர் மீண்டும் மீண்டும் Roblox கொள்கைகளை மீறியுள்ளாரா என்பதையும் கருத்தில் கொள்ளும். சில கொள்கைகளைத் தொடர்ந்து மீறுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் (அதாவது, எச்சரிக்கை, அதைத் தொடர்ந்து காலக்கெடு, அதைத் தொடர்ந்து இடைநீக்கம் போன்றவை). Roblox மேல்முறையீட்டு கோரிக்கையை மதிப்பாய்வு செய்யும்போது, மீறலின் தீவிரம், பயனரின் மேல்முறையீட்டுக்கான காரணம் மற்றும் தளத்தில் பயனரின் நடத்தை ஆகியவற்றை முழுமையாகக் கருத்தில் கொள்கிறது. சில சூழ்நிலைகளில், மேல்முறையீடுகள் உடனடியாகப் பொருந்தாமல் போகலாம் என்பதை நினைவில் கொள்ளவும் - எடுத்துக்காட்டாக, இடைநீக்கம் ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில் முன்பே விதிக்கப்பட்ட 20 நிமிட இடைநிறுத்தம் போன்ற விளைவுகள்.ஒப்பந்த மீறலுக்காக கிளைம் செய்வதற்கான பயனரின் உரிமை
ஒப்பந்த மீறலுக்காக Roblox-க்கு எதிராக கிளைம் சமர்ப்பிப்பதற்கு பயனருக்கு உரிமை இருக்கலாம். உதாரணத்திற்கு, Roblox பயனரின் உள்ளடக்கத்தை தவறுதலாக நீக்கினால் அல்லது கட்டுப்படுத்தினால் அல்லது இந்த விதிமுறைகளை மீறி பயனரை தவறுதலாக இடைநீக்கம் செய்தால் அல்லது தடைசெய்தால், ஒப்பந்த மீறலுக்கான கிளைமை சமர்ப்பிக்க பயனருக்கு உரிமை உள்ளது.ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்குதல்
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், 2023-இன் படி (“OSA”) Roblox அதன் பயன்பாட்டு விதிமுறைகளில் சில தகவல்களைச் சேர்க்க வேண்டியது அவசியம். இந்தத் தகவல் இந்தப் பிற்சேர்க்கை E-இன் OSA இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
பிற்சேர்க்கை F (ஆஸ்திரேலியா)
முன்னுரிமை
Roblox விதிமுறைகளுக்கும் இந்தக் கூடுதல் விதிகளுக்கும் இடையே வேறுபாடுகள் அல்லது முரண்பாடு இருக்கும் அளவிற்கு, கூடுதல் விதிகளே செல்லுபடியாகும்.ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்குதல்
- ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், 2021 (Cth)-இன் கீழ் (“AU OSA”), எங்கள் இறுதிப் பயனர்களை சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடுகள் Roblox-க்கு உள்ளன. AU OSA கட்டமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்ட உள்ளடக்கம் பின்வருமாறு பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
-
“வகை 1A மெட்டீரியல்”, இது பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றாகும்:
- குழந்தை பாலியல்நோக்கு சார்ந்த மெட்டீரியல்;
- பயங்கரவாத ஆதரவு மெட்டீரியல்; அல்லது
- அதீத குற்றம் மற்றும் வன்முறை சார்ந்த மெட்டீரியல்.
Roblox-இன் "குழந்தைகளின் பாலியல் நோக்கு பயன்பாடு", "பயங்கரவாதம் மற்றும் வன்முறையான தீவிரவாதம்", "வன்முறை உள்ளடக்கம் மற்றும் கோரம்" ஆகிய சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்ட வகை 1A உள்ளடக்கத்தையும் உள்ளடக்கியது.
-
“வகை 1B மெட்டீரியல்”, இது பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றாகும்:
- குற்றம் மற்றும் வன்முறை சார்ந்த மெட்டீரியல்; அல்லது
- போதைப்பொருள் தொடர்பான மெட்டீரியல்.
Roblox-இன் “வன்முறை உள்ளடக்கம் மற்றும் கோரம்” மற்றும் “சட்டவிரோத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பொருட்கள்” ஆகிய சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ள வகை 1B மெட்டீரியலையும் உள்ளடக்குகின்றன.
-
“வகை 1C மெட்டீரியல்”, என்பது குறிப்பிட்ட பாலியல் ஈர்ப்புப் பழக்கவழக்கங்கள் அல்லது கற்பனைகளை விவரிக்கும் அல்லது சித்தரிக்கின்ற, மற்றும் வகை 1A மெட்டீரியலாக இல்லாத எந்தவொரு வகை 1 மெட்டீரியலையும் குறிக்கும்.
Roblox-இன் "தொந்தரவு மற்றும் பாரபட்சம்", "ரொமாண்டிக் மற்றும் பாலியல் உள்ளடக்கம்", “வன்முறை உள்ளடக்கம் மற்றும் கோரம்” மற்றும் “சட்டவிரோத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பொருட்கள்”, "தற்கொலை, சுய தீங்கு மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தை" ஆகிய சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ள வகை 1C மெட்டீரியலையும் உள்ளடக்குகின்றன.
-
“வகை 2A மெட்டீரியல்”, என்பது பரஸ்பர சம்மதத்துடன் வயதுவந்தோர் இடையே நடைபெறும் உண்மையான (நடிப்பு அல்ல) பாலியல் செயல்பாட்டைச் சித்தரிக்கும் ஒரு திரைப்படமாகும்.
Roblox-இன் “ரொமாண்டிக் மற்றும் பாலியல் உள்ளடக்கம்” சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ள வகை 2A மெட்டீரியலையும் உள்ளடக்குகின்றன.
-
“வகை 2B மெட்டீரியல்”, என்பது அதிகத் தாக்கமுள்ள பாலியல் ரீதியான வெளிப்படையான செயல்பாட்டைச் சித்தரிக்கும் (அத்கத் தாக்கமுள்ள நிர்வாணம் உட்பட) வகை 2 மெட்டீரியல் ஆகும்.
Roblox-இன் “ரொமாண்டிக் மற்றும் பாலியல் உள்ளடக்கம்” சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மேலும் பிற வகையான மீறல்களுடன் சேர்த்து, AU OSA கட்டமைப்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ள வகை 2B மெட்டீரியலையும் உள்ளடக்குகின்றன.
-
- AU OSA-இன் கீழ், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளில் சில விதிகளைச் சேர்க்க வேண்டும். இந்த விதிகள் Roblox விதிமுறைகளில் (சமூகத் தரநிலைகளை உள்ளடக்கியது) உள்ளன.
- சமூகத் தரநிலைகள், வகை 1A, வகை 1B, வகை 1C, வகை 2A, வகை 2B மெட்டீரியல் உள்ளிட்ட சில வகை உள்ளடக்கங்களையும், மேலும் சேவைகளில் ஒருவரின் அனுமதியின்றி அந்தரங்கப் படங்களைப் பகிர்தல், குழந்தைகளைத் தவறான வழியில் வழிநடத்துதல் அல்லது பாலியல் ரீதியாக மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது, சேவை வழியாக மெட்டீரியலைப் பகிர்வதையும் தடை செய்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு, நீங்கள் அல்லது உங்கள் கணக்கைப் பயன்படுத்தும் வேறொரு நபர் இவற்றைச் செய்ய சேவைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்:
- வகை 1A மெட்டீரியல், வகை 1B மெட்டீரியல், வகை 1C மெட்டீரியல், வகை 2A மெட்டீரியல் அல்லது வகை 2B மெட்டீரியல் ஆகியவற்றைக் கோருதல், அணுகுதல், விநியோகித்தல் அல்லது சேமித்து வைத்தல்; அல்லது
- சேவைகளில் ஒருவரின் அனுமதியின்றி அந்தரங்கப் படங்களைப் பகிர்தல், குழந்தைகளைத் தவறான வழியில் வழிநடத்துதல் அல்லது பாலியல் ரீதியாக மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது, சேவை வழியாக மெட்டீரியலைப் பகிர்தல்.
- பயனர் விதிமுறைகளின் பிரிவு 2(c)-க்கு இணங்க, உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிலும் சேவைகளிலும் மேற்கொள்ளப்படும் எந்தச் செயலுக்கும் நீங்களே பொறுப்பு. ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு, உங்கள் கணக்கின் மூலம் சேவைகளைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரும் Roblox விதிமுறைகளுக்கு இணங்குவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
- Roblox விதிமுறைகளின் கீழ் உங்கள் மற்ற கடமைகளை இந்தப் பிற்சேர்க்கை F எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.
- ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், 2021 (Cth)-இன் கீழ் (“AU OSA”), எங்கள் இறுதிப் பயனர்களை சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடுகள் Roblox-க்கு உள்ளன. AU OSA கட்டமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்ட உள்ளடக்கம் பின்வருமாறு பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
OSA பின்னிணைப்பு
இளைய பயனர்களுக்கான இந்த OSA பிற்சேர்க்கையின் சுருக்கம்:Roblox உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், தீங்கு விளைவிக்கின்ற, சட்டத்திற்கு எதிரான உள்ளடக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் பல விஷயங்களைச் செய்கிறது, நாங்கள் அதை கீழே விரிவாக விளக்கியுள்ளோம். Roblox-இல் இருக்கும் உள்ளடக்கம் எங்கள் விதிகளை மீறவில்லை என்பதைச் சரிபார்க்க நாங்கள் தொழில்நுட்பத்தையும் மதிப்பீட்டாளர்களையும் பயன்படுத்துகிறோம். தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அகற்றி, அதிலிருந்து உங்களைப் பாதுகாக்க நாங்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கிறோம். உதாரணமாக, அனுபவங்களில் பதிவேற்றப்பட்ட படங்கள் தகுந்தவையா என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம். Roblox-இல் நீங்கள் பார்க்கும் எதையும் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், அது எங்கள் விதிகளை மீறுவதாக நினைத்தால், நீங்கள் அதைப் புகாரளிக்கலாம், உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்களை ஆதரிக்கக்கூடிய ஒரு பெரியவரிடம் பேச வேண்டும். Roblox அனைத்துப் பயனர்களையும் சட்டவிரோத உள்ளடக்கத்திலிருந்து எப்படிப் பாதுகாக்கிறது என்பதை இந்தப் பிற்சேர்க்கையின் பிரிவு 1 விவரிக்கிறது. 18 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட, பயனர்களை சிறுவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கத்திலிருந்து Roblox எப்படிப் பாதுகாக்கிறது என்பதை இந்தப் பிற்சேர்க்கையின் பிரிவு 2 விவரிக்கிறது.
மேலே உள்ள பத்தி Roblox விதிமுறைகளின் ஒரு பகுதி அல்ல. இது எங்கள் இள வயதுப் பயனர்கள் இந்தப் பிற்சேர்க்கையைப் புரிந்துகொள்ள உதவுவதற்கானது, மேலும் அந்த நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
UK ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் Roblox-இன் கடமைகள்
எங்கள் பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிவில் ஆன்லைன் சூழலை உருவாக்குவதை Roblox நோக்கமாகக் கொண்டுள்ளது.
- OSA-வின் கீழ் Roblox சில வகையான சட்டவிரோத உள்ளடக்கத்திலிருந்து UK பயனர்களைப் பாதுகாக்க குறிப்பிட்ட கடமைகளைக் கொண்டுள்ளது, இதை OSA "முன்னுரிமையான சட்டவிரோத உள்ளடக்கம்" என்று குறிப்பிடுகிறது, மேலும் இதை நாங்கள் எப்படிச் செய்கிறோம் என்பதை Roblox பயனர்களுக்கு விளக்க வேண்டும். இதில் பயங்கரவாத உள்ளடக்கம் மற்றும் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக (CSEA) உள்ளடக்கம் மற்றும் பிற வகையான சட்டவிரோத உள்ளடக்கங்களும் அடங்கும். இந்த வகை உள்ளடக்கத்திலிருந்து பயனர்களைப் பாதுகாக்க நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் அல்லது கீழே நகர்த்தலாம்.
- OSA-வின் கீழ் சில வகையான சட்டவிரோத உள்ளடக்கத்திலிருந்து UK பயனர்களைப் பாதுகாக்க Roblox குறிப்பிட்ட சில கடமைகளைக் கொண்டுள்ளது, இவற்றை OSA "முதன்மையான முன்னுரிமை உள்ளடக்கம்", "முன்னுரிமை உள்ளடக்கம்" மற்றும் "நியமிக்கப்படாத உள்ளடக்கம்" என்று குறிப்பிடுகிறது, மேலும் இதை நாங்கள் எப்படிச் செய்கிறோம் என்பதை Roblox பயனர்களுக்கு விளக்க வேண்டும். தற்கொலை மற்றும் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல், சாப்பிடுவது தொடர்பான கோளறு உள்ளடக்கம், ஆபாச உள்ளடக்கம், துஷ்பிரயோகம் மற்றும் வெறுப்பு உள்ளடக்கம், அதோடு சிறுவர்களுக்குத் திங்கு விளைவிக்கின்ற பிற வகை உள்ளடக்கங்கள் ஆகியவை இதிலடங்கும். இந்த வகை உள்ளடக்கத்திலிருந்து பயனர்களைப் பாதுகாக்க நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் அல்லது கீழே நகர்த்தலாம்.
- Roblox தொடர்புடைய புகார்களை OSA-இன் கீழ் முறையாகக் கையாண்டு தீர்ப்பதை உறுதிசெய்ய உதவும் கொள்கைகள் மற்றும் செயல்முறைகளைக் கொண்டுள்ளது. மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் அல்லது கீழே நகர்த்தலாம்.
பிரிவு 1: சட்டவிரோத உள்ளடக்கம்
சட்டவிரோத உள்ளடக்கத்திலிருந்து தனிநபர்களை பாதுகாக்க Roblox எப்படி உதவுகிறது
முன்னுரிமை சட்டவிரோத உள்ளடக்கம் உள்ளிட்ட சட்டவிரோத உள்ளடக்கத்திலிருந்து பயனர்களைப் பாதுகாக்க உதவும் வகையில், Roblox பல நடவடிக்கைகளை எடுக்கிறது, தானியங்கு மற்றும் நபர்கள் மூலமான தணிக்கை உள்ளிட்ட பல அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது.
Roblox-இல் பல அடுக்குத் தணிக்கை அமைப்பு உள்ளது, இது Roblox-இல் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் சமூகத் தரநிலைகளை மீறும் சாத்தியம் உள்ளதா என்று கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது:
- உரைக்கு, உரை வடிகட்டிகள் மற்றும் முக்கிய வார்த்தைகளின் பட்டியல்கள் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த முறைகளால் அடையாளம் காணப்படும் உரையை ஒரு பயனர் அனுப்ப முயற்சித்தால், அந்த உரை வடிகட்டப்பட்டு, மீறுகின்ற உள்ளடக்கத்தை மற்ற பயனர்கள் அணுகாதபடி தடுக்கும்.
- அவதார்கள் மற்றும் அவதார் ஆக்சஸரிகள் உள்ளிட்ட விஷுவல் உள்ளடக்கங்களுக்கு, பல கோணங்களில் இருந்து 3D பொருட்களின் படங்களை எடுத்து, மதிப்பாய்வுக்காக தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொடியிடும் ஒரு கண்டறிதல் தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
- குரல் அரட்டைக்கு, குரலை உரையாக மாற்ற தானியங்கி பேச்சு அடையாளம் காணும் அம்சத்தைப் பயன்படுத்துகிறோம், பின்னர் மீறும் வார்த்தைப் பிரயோகங்களை வகைப்படுத்தவும் கண்டறியவும் எங்களிடம் உள்ள AI மாடலைப் பயன்படுத்துகிறோம். இது நிகழ்நேரத்தில் செய்யப்படுகிறது, Roblox-இல் குரல் அரட்டைகளில் எங்கள் சமூகத் தரநிலைகளை மீறும் பயனர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்தல் அல்லது தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.
பயனர் நடத்தையுடன் இணைந்து சமூகத் தரநிலைகள், பரந்த அளவிலான AI அல்காரிதங்களுக்கு உதவுகின்றன. தரத்தை மேம்படுத்துவதிலும் மிகவும் கடினமான முடிவுகளைக் கையாள்வதிலும் கவனம் செலுத்தும் ஆயிரக்கணக்கான தணிக்கையாளர்களைக் கொண்ட குழுவால் அந்த அல்காரிதங்கள் ஆதரிக்கப்படுகின்றன. எங்கள் பயனர்கள் தாங்கள் கவலைப்படுகின்ற எந்தவொரு செயல்பாட்டையும் Roblox-க்கு நேரடியாகப் புகாரளிக்க நாங்கள் மிகவும் ஊக்குவிக்கிறோம். அடையாளம் காணப்பட்ட உள்ளடக்கம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, மீறல்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்போம். எங்கள் சமூகத் தரநிலைகளை கடுமையாக அல்லது மீண்டும் மீண்டும் மீறும் பயனர்களை Roblox இடைநீக்கம் செய்யலாம் அல்லது நிரந்தரமாகத் தடை செய்யலாம்.
CSEA உள்ளடக்கம்
Roblox "குழந்தை சபாலியல் நோக்கு பயன்பாடு்" சமூகத் தரநிலை ("CE சமூகத் தரநிலை") பரந்த அளவில் உள்ளது, மற்றும் பிற வகையான மீறல்களுடன் OSA ஆல் வரையறுக்கப்பட்டபடி CSEA உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கிறது.
Roblox CE சமூகத் தரநிலையை மீறக்கூடிய உள்ளடக்கம் மற்றும் நடத்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான உரை வடிகட்டுதல், குரல் கட்டுப்பாடு, உள்ளடக்கக் கட்டுப்பாடு மற்றும் பிற தானியங்கு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது, அவற்றுள் இவையும் அடங்கும்:
- CSEA உள்ளடக்கத்தை குறிப்பாக வடிகட்ட வடிவமைக்கப்பட்ட தானியங்கு அம்சங்களைப் பயன்படுத்துதல்;
- பிரச்சனைக்குரிய மொழிப் பிரயோகம், எங்கள் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் சாத்தியமான நிகழ்வுகள் மற்றும் மீறும் உள்ளடக்கத்தை அடையாளம் காண உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட AI மூலம் இயங்கும் கருவிகளின் தொகுப்பைக் கொண்டு, வெளியிடப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனுபவங்களை மதிப்பீடு செய்தல்;
- பதிவேற்றுவதற்கு முன் படங்கள் உள்ளிட்ட உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்தல்; மற்றும்
- பொருத்தமற்ற நடத்தையிலிருந்து பயனர்களை முன்கூட்டியே தடுக்கவும் பாதுகாக்கவும் தகவல்பரிமாற்றங்களை மதிப்பாய்வு செய்து கண்காணிக்கும் ஸ்கேனிங் அல்காரிதங்கள்.
கூடுதலாக, PhotoDNA மற்றும் Google-இன் Content Safety API-ஐப் பயன்படுத்தி, குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத் தன்மை கொண்ட படங்கள் உள்ளதா என்று படங்கள் மற்றும் வீடியோக்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த அமைப்புகள் கொடியிட்டால், சரிபார்ப்புக்காக சரிபார்க்க பயிற்சி பெற்ற முகவர்களுக்கு உள்ளடக்கம் அனுப்பப்படும். உள்ளடக்கம் CSEA உள்ளடக்கம் என உறுதிப்படுத்தப்பட்டால், மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் இந்த உள்ளடக்கம் காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்குப் புகாரளிக்கப்படும்.
இந்தத் தானியங்கு அம்சங்கள், தளத்தில் CSEA உள்ளடக்கம் இருக்கும் நேரத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. Roblox CE சமூகத் தரநிலையை மீறும் உள்ளடக்கத்தை தானியங்கு அம்சங்கள் மூலம் அடையாளம் காணும் அல்லது அறிக்கைகள் மூலம் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் இடங்களில், Roblox அதை விரைவாக நீக்குகிறது.
எங்கள் CE சமூகத் தரநிலையை கடுமையாக அல்லது மீண்டும் மீண்டும் மீறும் பயனர்களை Roblox இடைநீக்கம் செய்யலாம் அல்லது நிரந்தரமாகத் தடை செய்யலாம்.
பயங்கரவாத உள்ளடக்கம்
Roblox-இன் "பயங்கரவாதம் மற்றும் வன்முறையான தீவிரவாதம்" சமூகத் தரநிலை ("TVE சமூகத் தரநிலைகள்") பரந்த அளவில் உள்ளது, மற்றும் பிற வகையான மீறல்களுடன், OSA-ஆல் வரையறுக்கப்பட்டபடி பயங்கரவாத உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கிறது.
Roblox TVE சமூகத் தரநிலையை மீறக்கூடிய உள்ளடக்கம் மற்றும் நடத்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான உரை வடிகட்டுதல், குரல் கட்டுப்பாடு, உள்ளடக்கக் கட்டுப்பாடு மற்றும் பிற தானியங்கு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது, அவற்றுள் இவையும் அடங்கும்:
- பயங்கரவாத அமைப்புகள் மற்றும் வெகுஜன வன்முறையைப் புனிதப்படுத்துகின்ற மற்றும் தொடர்புடைய உள்ளடக்கத்தைக் குறிப்பாக வடிகட்ட வடிவமைக்கப்பட்ட தானியங்கு அம்சங்களைப் பயன்படுத்துதல்;
- பிரச்சனைக்குரிய மொழிப் பிரயோகம், எங்கள் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் சாத்தியமான நிகழ்வுகள் மற்றும் மீறும் உள்ளடக்கத்தை அடையாளம் காண வடிவமைக்கப்பட்ட AI மூலம் இயங்கும் கருவிகளின் தொகுப்பைக் கொண்டு, வெளியிடப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனுபவங்களை மதிப்பீடு செய்தல்;
- பதிவேற்றுவதற்கு முன் படங்கள் உள்ளிட்ட உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்தல்; மற்றும்
- பொருத்தமற்ற நடத்தையிலிருந்து பயனர்களை முன்கூட்டியே தடுக்கவும் பாதுகாக்கவும் தகவல்பரிமாற்றங்களை மதிப்பாய்வு செய்து கண்காணிக்கும் ஸ்கேனிங் அல்காரிதங்கள்.
இந்தத் தானியங்கு அம்சங்கள், தளத்தில் பயங்கரவாத உள்ளடக்கம் இருக்கும் நேரத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. Roblox TVE சமூகத் தரநிலையை மீறும் உள்ளடக்கத்தை தானியங்கு அம்சங்கள் மூலம் அடையாளம் காணும் அல்லது அறிக்கைகள் மூலம் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் இடங்களில், Roblox அதை விரைவாக நீக்குகிறது.
TVE சமூகத் தரநிலைகளை கடுமையாக அல்லது மீண்டும் மீண்டும் மீறும் பயனர்களை Roblox இடைநீக்கம் செய்யலாம் அல்லது நிரந்தரமாகத் தடை செய்யலாம்.
பிற முன்னுரிமை சட்டவிரோத உள்ளடக்கம்
OSA வரையறுத்துள்ள பிற வகையான முன்னுரிமை சட்டவிரோத உள்ளடக்கங்கள் பெரும்பாலும் எங்கள் சமூகத் தரநிலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எங்கள் சமூகத் தரநிலைகளுடன் கூடுதலாக, ஆயுதங்கள், சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் முன்னுரிமை சட்டவிரோத உள்ளடக்கக்கமாகக் கருதப்படக்கூடிய பிற பொருட்கள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்துவதையோ கோருவதையோ எங்கள் விளம்பரத் தரநிலைகள் தடைசெய்கின்றன.
Roblox பல்வேறு வகையான உரை வடிகட்டுதல், குரல் கட்டுப்பாடு, உள்ளடக்கக் கட்டுப்பாடு மற்றும் TVE சமூகத் தரநிலகளை மீறக்கூடிய உள்ளடக்கம் மற்றும் நடத்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண வடிவமைக்கப்பட்ட பிற தானியங்கு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது, அவற்றுள் இவையும் அடங்கும்:
- உள்ளடக்கத்தை குறிப்பாக வடிகட்ட வடிவமைக்கப்பட்ட தானியங்கு அம்சங்களைப் பயன்படுத்துதல்;
- பிரச்சனைக்குரிய மொழிப் பிரயோகம், எங்கள் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் சாத்தியமான நிகழ்வுகள் மற்றும் மீறும் உள்ளடக்கத்தை அடையாளம் காண வடிவமைக்கப்பட்ட AI மூலம் இயங்கும் கருவிகளின் தொகுப்பைக் கொண்டு, வெளியிடப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனுபவங்களை மதிப்பீடு செய்தல்;
- பதிவேற்றுவதற்கு முன் படங்கள் உள்ளிட்ட உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்தல்; மற்றும்
- பொருத்தமற்ற நடத்தையிலிருந்து பயனர்களை முன்கூட்டியே தடுக்கவும் பாதுகாக்கவும் தகவல்பரிமாற்றங்களை மதிப்பாய்வு செய்து கண்காணிக்கும் ஸ்கேனிங் அல்காரிதங்கள்.
இந்தத் தானியங்கு நடவடிக்கைகள் தளத்தில் பிற முன்னுரிமை சட்டவிரோத உள்ளடக்கம் இருக்கும் நேரத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. Roblox தனது சமூகத் தரநிலைகளை மீறும் உள்ளடக்கத்தை தானியங்கு அம்சங்கள் மூலம் அடையாளம் காணும் அல்லது அறிக்கைகள் மூலம் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் இடங்களில், Roblox அதை விரைவாக நீக்குகிறது.
எங்கள் சமூகத் தரநிலைகளை கடுமையாக அல்லது மீண்டும் மீண்டும் மீறும் பயனர்களை Roblox இடைநீக்கம் செய்யலாம் அல்லது நிரந்தரமாகத் தடை செய்யலாம்.
பிரிவு 2: குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்
குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து தனிநபர்களைப் பாதுகாக்க Roblox எப்படி உதவுகிறது
குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய முன்னுரிமை சட்டவிரோத உள்ளடக்கம், முன்னுரிமை உள்ளடக்கம் மற்றும் நியமிக்கப்படாத உள்ளடக்கத்தில் இருந்து பயனர்களைப் பாதுகாக்க சட்டவிரோத உள்ளடக்கத்திலிருந்து பயனர்களைப் பாதுகாக்க உதவும் வகையில், Roblox பல நடவடிக்கைகளை எடுக்கிறது, தானியங்கு மற்றும் நபர்கள் மூலமான தணிக்கை உள்ளிட்ட பல அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது. குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் இந்த வகையான அனைத்து உள்ளடக்கங்களையும், குழந்தைகள் மற்றும் பயனர்களுக்கு பொதுவாகத் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் பிற வகையான உள்ளடக்கங்களையும் எங்கள் சமூகத் தரநிலைகள் தடைசெய்கின்றன.
Roblox-இல் பல அடுக்குத் தணிக்கை அமைப்பு உள்ளது, இது பிளாட்ஃபார்மில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் சமூகத் தரநிலைகளை மீறும் சாத்தியம் உள்ளதா என்று கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது:
- உரைக்கு, உரை வடிகட்டிகள் மற்றும் முக்கிய வார்த்தைகளின் பட்டியல்கள் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த முறைகளால் அடையாளம் காணப்படும் உரையை ஒரு பயனர்கள் அனுப்ப முயற்சித்தால், அந்த உரை வடிகட்டப்பட்டு, மீறுகின்ற உள்ளடக்கத்தை மற்ற பயனர்கள் அணுகாதபடி தடுக்கும்.
- அவதார்கள் மற்றும் அவதார் ஆக்சஸரிகள் உள்ளிட்ட விஷுவல் உள்ளடக்கங்களுக்கு, பல கோணங்களில் இருந்து 3D பொருட்களின் படங்களை எடுத்து, மதிப்பாய்வுக்காக தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொடியிடும் ஒரு கண்டறிதல் தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
- குரல் அரட்டைக்கு, குரலை உரையாக மாற்ற தானியங்கி பேச்சு அடையாளம் காணும் அம்சத்தைப் பயன்படுத்துகிறோம், பின்னர் மீறும் வார்த்தைப் பிரயோகங்களை வகைப்படுத்தவும் கண்டறியவும் எங்களிடம் உள்ள AI மாடலைப் பயன்படுத்துகிறோம். இது நிகழ்நேரத்தில் செய்யப்படுகிறது, Roblox-இல் குரல் அரட்டைகளில் எங்கள் சமூகத் தரநிலைகளை மீறும் பயனர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்தல் அல்லது தடை செய்தல் போன்ற அடுத்த நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.
பயனர் நடத்தையுடன் இணைந்து சமூகத் தரநிலைகள், பரந்த அளவிலான AI அல்காரிதங்களுக்கு உதவுகின்றன. தரத்தை மேம்படுத்துவதிலும் மிகவும் கடினமான முடிவுகளைக் கையாள்வதிலும் கவனம் செலுத்தும் ஆயிரக்கணக்கான தணிக்கையாளர்களைக் கொண்ட குழுவால் அந்த அல்காரிதங்கள் ஆதரிக்கப்படுகின்றன.
எங்கள் பயனர்கள் தாங்கள் கவலைப்படுகின்ற எந்தவொரு செயல்பாட்டையும் Roblox-க்கு நேரடியாகப் புகாரளிக்கவும் செய்யலாம். புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, மீறல்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்போம்.
OSA தேவைகளைச் சாராமல், 18 வயதுக்குட்பட்ட பயனர்கள் உட்பட, பயனர்களைப் பாதுகாக்க உதவும் கூடுதல் நடவடிக்கைகளையும் Roblox எடுக்கிறது, பொதுவாக அவர்களுக்குப் பொருத்தமற்றதாக Roblox கருதும் அல்லது அவர்கள் பார்க்க விரும்பாத உள்ளடக்கத்திலிருந்து இவர்களைப் பாதுகாக்கும், உதாரணத்திற்கு:
- Roblox உள்ளடக்க முதிர்வு நிலை ரேட்டிங்குகளைப் பயன்படுத்துகிறது, இது பயனர்கள் தாங்கள் அணுகும் அனுபவங்களைப் பற்றி விவரமாக முடிவுகளை எடுக்க உதவுகிறது, அவர்கள் பார்க்க விரும்பாத உள்ளடக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது. எங்கள் முதிர்வு நிலை ரேட்டிங்குகள் (குறைந்தபட்சம், லேசானது, மிதமானது, கட்டுப்படுத்தப்பட்டது) மற்றும் உள்ளடக்க விளக்கங்கள் (எடுத்துக்காட்டாக, கடுமையான மொழி, வன்முறை, இரத்தம்) அனுபவத்தின் பக்கங்களில் தோன்றும், மேலும் வயதுப் பிரிவு மற்றும் பிராந்திய உள்ளடக்கக் கொள்கைகளின் அடிப்படையில் முகப்பு மற்றும் டிஸ்கவர் பக்கங்களில் பயனர்களுக்கு அனுபவங்களைப் பரிந்துரைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அனுபவ உள்ளடக்கம் மற்றும் பயனர்கள் உரை மற்றும் குரல் அரட்டையில் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதற்கும் Roblox-இன் மொழிக் கொள்கைகள் பொருந்தும்.
- பயனர்களை Roblox-இல் இருந்து வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்ல முயற்சிக்கும் உரையாடல்களை அடையாளம் காண உதவும் கண்டறிதல் அமைப்புகளை Roblox பயன்படுத்துகிறது.
- Roblox பயனர்களின் அனுபவங்களை அவர்களின் வயதின் அடிப்படையில் (9-க்குக் கீழ் மற்றும் 9-13 வயதுக்குட்பட்டவர்கள், 13-17 வயதுக்குட்பட்டவர்கள், வயது 17 மற்றும் 18+ வயதுடையவர்கள்) வடிவமைக்கிறது. உதாரணமாக, 13 வயதுக்குட்பட்ட பயனர்கள் சில அரட்டை அம்சங்களை அணுக பெற்றோரின் அனுமதி தேவை, மேலும் மதிப்பிடப்படாத அனுபவங்களை அவர்களால் தேடவோ அல்லது விளையாடவோ முடியாது. மேலும் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
- 17+ அனுபவங்கள் போன்ற சில குறிப்பிட்ட பிளாட்ஃபார்ம் அம்சங்களை அணுக, பயனர்கள் தங்கள் வயதைச் சரிபார்க்க Roblox கோருகிறது.
- குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிளாட்ஃபார்மில் பாதுகாப்பான மற்றும் வயதுக்கு ஏற்ற அனுபவத்தை வடிவமைக்க உதவும், வலுவான பெற்றோர் கட்டுப்பாடுகளை Roblox வழங்குகிறது. பெற்றோருக்குத் தங்கள் குழந்தை Roblox-இல் எவ்வாறு தொடர்பு கொள்கிறார் என்பதைக் காட்டும் வகையில் இந்தக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெற்றோர் கட்டுப்பாடுகளை இயக்க, பெற்றோர்கள் தங்களுக்கென Roblox கணக்கை (தங்கள் சொந்த சாதனத்தில்) உருவாக்கி, அதை எங்கள் கணக்கு இணைப்பு அம்சத்தின் மூலம் தங்கள் குழந்தையின் கணக்குடன் இணைக்கலாம். இணைத்தபிறகு பெற்றோர்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கலாம், எல்லைகளை அமைக்கலாம், தங்கள் குழந்தை அணுகக்கூடிய அனுபவங்களின் முதிர்ச்சி நிலைகளை நிர்வகிக்கலாம் மற்றும் அமைப்புகளை நிகழ்நேரத்தில் புதுப்பிக்கலாம். மேலும் விவரங்களை இங்கு மற்றும்இங்கும் பார்க்கலாம்.
முதன்மை முன்னுரிமை உள்ளடக்கம் (தற்கொலை, சுய-தீங்கு, சாப்பிடுவதில் கோளாறு மற்றும் ஆபாசப் படங்கள்)
OSA வரையறுத்துள்ளபடி முதன்மை முன்னுரிமை உள்ளடக்கத்தை எங்கள் சமூகத் தரநிலைகள் தடைசெய்கின்றன:
- தற்கொலை, சுய காயம் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தை தொடர்பான சமூகத் தரநிலை, பரந்த அளவில் உள்ளது, மற்றும் பிற வகையான மீறல்களுடன் OSA-ஆல் வரையறுக்கப்பட்டபடி தற்கொலை, சுய தீங்கு மற்றும் உண்ணுதல் கோளாறு தொடர்பான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கிறது.
- ரொமாண்டிக் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்க சமூகத் தரநிலை பரந்த அளவில் உள்ளது, மற்றும் பிற வகையான மீறல்களுடன் OSA-ஆல் வரையறுக்கப்பட்டபடி ஆபாச உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கிறது.
தற்கொலை, சுய காயம் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தை தொடர்பான சமூகத் தரநிலை மற்றும்/அல்லது ரொமாண்டிக் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்க சமூகத் தரநிலையை மீறக்கூடிய உள்ளடக்கத்தையும் நடத்தையையும் முன்கூட்டியே கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான உரை வடிகட்டுதல், குரல் தணிக்கை, உள்ளடக்கத் தணிக்கை மற்றும் பிற தானியங்கு அமைப்புகளை Roblox பயன்படுத்துகிறது, அவற்றுள் இவையும் அடங்கும்:
- சேவைகளில் (உரை, படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ உட்பட) உள்ளடக்கத்தைக் கண்காணித்து தணிக்கை செய்ய, அதில் மீறும் உள்ளடக்கம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவும் மனித மதிப்பாய்வு மற்றும் AI மூலம் இயங்கும் கருவிகளின் சேர்க்கை. உரை அடிப்படையிலான தகவல் பரிமாற்றங்களில் உள்ள அடையாளம் காணப்பட்ட மீறல் உள்ளடக்கத்தை, மற்ற பயனர்கள் பார்ப்பதற்கு முன்பே, AI கருவிகள் மதிப்பாய்வு செய்து தடுக்கின்றன, மேலும் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தைக் கொண்ட உரையாடல்களை மேலும் மதிப்பாய்வு செய்வதற்காக மதிப்பீட்டாளர்களிடம் கொடியிடுகின்றன.
- விதிமீறல் என முன்பு அடையாளம் காணப்பட்ட சொத்துகளைப் போலவே இருக்கின்ற அல்லது ஒத்த (சொத்தைப் பொறுத்து) சொத்துகளை அடையாளம் கண்டு பதிவேற்றங்களைத் தடுப்பதற்காக கண்டறிதல் நுட்பங்களைப் பயன்படுத்துதல்.
- குரல் அரட்டையை உரையாக மாற்ற தானியங்கு பேச்சு அடையாளம் காணும் கருவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட சில மீறல் உள்ளடக்கத்தை வகைப்படுத்திக் கண்டறிய எங்கள் சொந்த AI மாடலைப் பயன்படுத்துதல். இது நிகழ்நேரத்தில் செய்யப்படுகிறது, Roblox பயனருக்கு 'நினைவூட்டல்' அனுப்புவது அல்லது பயனரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கிறது.
பயனர்கள் முதன்மை முன்னுரிமை உள்ளடக்கத்தை எதிர்கொள்வதைத் தடுக்க இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. Roblox எங்கள் சமூகத் தரநிலைகளை மீறும் உள்ளடக்கத்தை தானியங்கு அம்சங்கள் மூலம் அடையாளம் காணும் அல்லது அறிக்கைகள் மூலம் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் இடங்களில், Roblox அதை விரைவாக நீக்குகிறது.
எங்கள் சமூகத் தரநிலைகளை மீறும் பயனர்கள் எச்சரிக்கைகள், உள்ளடக்கம் அகற்றப்படுதல் மற்றும்/அல்லது கணக்கு அளவிலான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் அல்லது பொருத்தமான இடங்களில் பயனுள்ள தகவல்கள் அனுப்பப்படலாம்.
முதன்மை முன்னுரிமை உள்ளடக்கம் குறித்து Roblox-க்குத் தெரியப்படுத்தப்படும் பட்சத்தில், நாங்கள் உள்ளக விசாரணைகளையும் செய்து பொருத்தமான சூழல்களில் நடவடிக்கை எடுக்கக்கூடும். உடனடி சுய தீங்கு விளைவிக்கக்கூடியதாக நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இருப்பதாக Roblox நம்பினால், தகுந்த சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு புகாரளிப்பதும் இதில் அடங்கலாம்.
முன்னுரிமை உள்ளடக்கம் (தவறான பயன்பாடு மற்றும் வெறுப்பு, கொடுமைப்படுத்துதல், வன்முறை, தீங்கு விளைவிக்கும் பொருட்கள், ஆபத்தான சாகசங்கள் மற்றும் சவால்கள்)
OSA வரையறுத்துள்ளபடி முதன்மை முன்னுரிமை உள்ளடக்கத்தை எங்கள் சமூகத் தரநிலைகள் உள்ளடக்குகின்றன:
- பாரபட்சம், இகழ்தல், வெறுப்புப் பேச்சு தொடர்பான சமூகத் தரநிலை பரந்த அளவில் உள்ளது, மற்றும் பிற வகையான மீறல்களுடன் OSA-ஆல் வரையறுக்கப்பட்டபடி தவறான பயன்பாடு மற்றும் வெறுப்பு சார்ந்த உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கிறது.
- அச்சுறுத்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்துதல் மற்றும் வன்முறையான உள்ளடக்கம் மற்றும் கோரம் தொடர்பான சமூகத் தரநிலைகள் பரந்த அளவில் உள்ளன, மற்றும் பிற வகையான மீறல்களுடன் OSA-ஆல் வரையறுக்கப்பட்டபடி கொடுமைப்படுத்துதல் மற்றும் வன்முறையான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கின்றன. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களையும் துன்புறுத்தல்களையும் தடுப்பது என்பது எங்கள் சமூகத் தரநிலைகளின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும்: எந்த வகையான கொடுமைப்படுத்துதல், பின்தொடர்தல் அல்லது தீங்கு விளைவிப்பதாக மிரட்டுதல் அல்லது அச்சுறுத்தல் ஆகிய எதுவும் அனுமதிக்கப்படாது.
- தற்கொலை, சுய காயம் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தை மற்றும் சட்டவிரோதமான மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான சமூகத் தரநிலைகள், பரந்த அளவில் உள்ளன, மற்றும் பிற வகையான மீறல்களுடன் OSA-ஆல் வரையறுக்கப்பட்ட தீங்கு விளைவிக்கின்ற பொருட்கள் தொடர்பான உள்ளடக்கம் மற்றும் ஆபத்தான சாகசங்கள் மற்றும் சவால்கள் தொடர்பான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கின்றன.
பாரபட்சம், இகழ்தல், வெறுப்புப் பேச்சு, அச்சுறுத்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்துதல், வன்முறையான உள்ளடக்கம் மற்றும் கோரம், தற்கொலை, சுய காயம் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தை மற்றும்/அல்லது சட்டவிரோதமான மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான சமூகத் தரநிலைகளை மீறக்கூடிய உள்ளடக்கத்தையும் நடத்தைகளையும் முன்கூட்டியே கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்ட உரை வடிகட்டுதல், குரல் தணிக்கை, உள்ளடக்கத் தணிக்கை மற்றும் பிற தானியங்கு அமைப்புகளை Roblox பயன்படுத்துகிறது, அவற்றுள் இவையும் அடங்கும்:
- சேவைகளில் (உரை, படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ உட்பட) உள்ளடக்கத்தைக் கண்காணித்து தணிக்கை செய்ய, அதில் மீறும் உள்ளடக்கம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவும் மனித மதிப்பாய்வு மற்றும் AI மூலம் இயங்கும் கருவிகளின் சேர்க்கை. உரை அடிப்படையிலான தகவல் பரிமாற்றங்களில் உள்ள அடையாளம் காணப்பட்ட மீறல் உள்ளடக்கத்தை, மற்றவர் பார்ப்பதற்கு முன்பே, AI கருவிகள் மதிப்பாய்வு செய்து தடுக்கின்றன, மேலும் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தைக் கொண்ட உரையாடல்களை மேலும் மதிப்பாய்வு செய்வதற்காக மதிப்பீட்டாளர்களிடம் கொடியிடுகின்றன.
- விதிமீறல் என முன்பு அடையாளம் காணப்பட்ட சொத்துகளைப் போலவே இருக்கின்ற அல்லது ஒத்த (சொத்தைப் பொறுத்து) சொத்துகளை அடையாளம் கண்டு பதிவேற்றங்களைத் தடுப்பதற்காக கண்டறிதல் நுட்பங்களைப் பயன்படுத்துதல்.
- குரல் அரட்டையை உரையாக மாற்ற தானியங்கு பேச்சு அடையாளம் காணும் கருவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட சில மீறல் உள்ளடக்கத்தை வகைப்படுத்திக் கண்டறிய உதவுவதற்காக எங்கள் சொந்த AI மாடலைப் பயன்படுத்துதல். இது நிகழ்நேரத்தில் செய்யப்படுகிறது, Roblox பயனருக்கு 'நினைவூட்டல்' அனுப்புவது அல்லது பயனரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கிறது.
பயனர்கள் முதன்மை முன்னுரிமை உள்ளடக்கத்தை எதிர்கொள்வதிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. Roblox எங்கள் சமூகத் தரநிலைகளை மீறும் உள்ளடக்கத்தை தானியங்கு அம்சங்கள் மூலம் அடையாளம் காணும் அல்லது அறிக்கைகள் மூலம் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் இடங்களில், Roblox அதை விரைவாக நீக்குகிறது.
எங்கள் சமூகத் தரநிலைகளை மீறும் பயனர்கள் எச்சரிக்கைகள், உள்ளடக்கம் அகற்றப்படுதல் மற்றும்/அல்லது கணக்கு அளவிலான கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
சாத்தியமான முதன்மை உள்ளடக்கம் குறித்து Roblox-க்குத் தெரியப்படுத்தப்படும் பட்சத்தில், நாங்கள் உள்ளக விசாரணைகளையும் செய்து பொருத்தமான சூழல்களில் நடவடிக்கை எடுக்கக்கூடும். உடனடித் தீங்கு விளைவிக்கக்கூடியதாக நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இருப்பதாக Roblox நம்பினால், தகுந்த சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு புகாரளிப்பதும் இதில் அடங்கலாம்.
நியமிக்கப்படாத உள்ளடக்கம் (மனச்சோர்வு, உடல் ரீதியான பாரபட்சம்)
Roblox-இன் சமூகத் தரநிலைகள், Ofcom-ஆல் அடையாளம் காணப்பட்ட நியமிக்கப்படாத உள்ளடக்கத்தை உள்ளடக்குகிறது:
- தற்கொலை, சுய காயம் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தை தொடர்பான சமூகத் தரநிலை, பரந்த அளவில் உள்ளது, மற்றும் பிற வகையான மீறல்களுடன் Ofcom-ஆல் வரையறுக்கப்பட்டபடி மனச்சோர்வு தொடர்பான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கிறது.
- அச்சுறுத்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்துதல் தொடர்பான சமூகத் தரநிலை பரந்த அளவில் உள்ளது, மற்றும் பிற வகையான மீறல்களுடன் Ofcom-ஆல் வரையறுக்கப்பட்டபடி உடல் ரீதியான பாரபட்சம் தொடர்பான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கிறது.
Roblox அச்சுறுத்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்துதல் மற்றும்/அல்லது தற்கொலை, சுய காயம் மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தை தொடர்பான சமூகத் தரநிலகளை மீறக்கூடிய உள்ளடக்கம் மற்றும் நடத்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான உரை வடிகட்டுதல், குரல் கட்டுப்பாடு, உள்ளடக்கக் கட்டுப்பாடு மற்றும் பிற தானியங்கு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது, அவற்றுள் இவையும் அடங்கும்:
- சேவைகளில் (உரை, படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ உட்பட) உள்ளடக்கத்தைக் கண்காணித்து தணிக்கை செய்ய, அதில் மீறும் உள்ளடக்கம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவும் மனித மதிப்பாய்வு மற்றும் AI மூலம் இயங்கும் கருவிகளின் சேர்க்கை. உரை அடிப்படையிலான தகவல் பரிமாற்றங்களில் உள்ள அடையாளம் காணப்பட்ட மீறல் உள்ளடக்கத்தை, மற்ற பயனர்கள் பார்ப்பதற்கு முன்பே, AI கருவிகள் மதிப்பாய்வு செய்து தடுக்கின்றன, மேலும் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தைக் கொண்ட உரையாடல்களை மேலும் மதிப்பாய்வு செய்வதற்காக மதிப்பீட்டாளர்களிடம் கொடியிடுகின்றன.
- விதிமீறல் என முன்பு அடையாளம் காணப்பட்ட சொத்துகளைப் போலவே இருக்கின்ற அல்லது ஒத்த (சொத்தைப் பொறுத்து) சொத்துகளை அடையாளம் கண்டு பதிவேற்றங்களைத் தடுப்பதற்காக கண்டறிதல் நுட்பங்களைப் பயன்படுத்துதல்.
- குரல் அரட்டையை உரையாக மாற்ற தானியங்கு பேச்சு அடையாளம் காணும் கருவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட சில மீறல் உள்ளடக்கத்தை வகைப்படுத்திக் கண்டறிய எங்கள் சொந்த AI மாடலைப் பயன்படுத்துதல். இது நிகழ்நேரத்தில் செய்யப்படுகிறது, Roblox பயனருக்கு 'நினைவூட்டல்' அனுப்புவது அல்லது பயனரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்கிறது.
பயனர்கள் நியமிக்கப்படாத உள்ளடக்கத்தை எதிர்கொள்வதிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. Roblox எங்கள் சமூகத் தரநிலைகளை மீறும் உள்ளடக்கத்தை தானியங்கு அம்சங்கள் மூலம் அடையாளம் காணும் அல்லது அறிக்கைகள் மூலம் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் இடங்களில், Roblox அதை விரைவாக நீக்குகிறது.
எங்கள் சமூகத் தரநிலைகளை மீறும் பயனர்கள் எச்சரிக்கைகள், உள்ளடக்கம் அகற்றப்படுதல் மற்றும்/அல்லது கணக்கு அளவிலான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் அல்லது பொருத்தமான இடங்களில் பயனுள்ள தகவல்கள் அனுப்பப்படலாம்.
சாத்தியமான நியமிக்கப்படாத உள்ளடக்கம் குறித்து Roblox-க்குத் தெரியப்படுத்தப்படும் பட்சத்தில், நாங்கள் உள்ளக விசாரணைகளையும் செய்து பொருத்தமான சூழல்களில் நடவடிக்கை எடுக்கக்கூடும். உடனடி சுய தீங்கு விளைவிக்கக்கூடியதாக நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இருப்பதாக Roblox நம்பினால், தகுந்த சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு புகாரளிப்பதும் இதில் அடங்கலாம்.
சம்பந்தப்பட்ட புகாரை எவ்வாறு சமர்ப்பிப்பது
Roblox தொடர்புடைய புகார்களை OSA-இன் கீழ் முறையாகக் கையாண்டு தீர்ப்பதை உறுதிசெய்வதற்கான கொள்கைகள் மற்றும் செயல்முறைகளைக் கொண்டுள்ளது.
UK பயனர்கள் UK சட்டங்களின் கீழ் சட்டவிரோதமானது என்று சந்தேகிக்கும் உள்ளடக்கத்தைப் பற்றி எங்கள் புகாரளிப்பு அம்சத்தைப் பயன்படுத்தி இங்கே புகாரளிக்கலாம், மேலும் நாங்கள் வழங்கும் செயல்முறையைப் பயன்படுத்தி பிற OSA-சார்ந்த புகார்களை சமர்ப்பிக்கலாம். நாங்கள் வழங்கும் புகாரளிக்கும் அம்சத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சந்தேகிக்கும் உள்ளடக்கத்தைப் பற்றி UK பயனர்கள் புகாரளிக்க முடியும். மேலும் விவரங்கள் இங்கே கிடைக்கும். முடிவுகளை மேல்முறையீடு செய்வது எப்படி என்பது பற்றிய மேலும் விவரங்கள் இங்கே கிடைக்கும்.