அமலுக்கு வரும் தேதி: ஏப்ரல் 30, 2026
Roblox Corporation மற்றும் அதன் இணை நிறுவனங்கள் (“Roblox”, “நாங்கள்” அல்லது “எங்கள்”) வழங்கும் சந்தாத் தயாரிப்புகளுக்கான (“சந்தா”) உங்கள் அணுகலையும் உபயோகத்தையும் இந்த Roblox சந்தா விதிமுறைகள் (“சந்தா விதிமுறைகள்”) நிர்வகிக்கின்றன.
ஒரு சந்தாவை வாங்குவதன் மூலம், இந்த சந்தா விதிமுறைகளைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு சம்மதிப்பதாக நீங்கள் தெரிவிக்கிறீர்கள். இந்த சந்தா விதிமுறைகளே உங்களுக்கும் (“பயனர்”, “உங்கள்” அல்லது “நீங்கள்”) Roblox நிறுவனத்திற்கும் இடையே கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாகும். நீங்கள் இந்த சந்தா விதிமுறைகள் எதையேனும் ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீங்கள் சந்தாவை அணுகவோ பயன்படுத்தவோ கூடாது.
இந்த சந்தா விதிமுறைகள், இந்த சந்தா விதிமுறைகளில் குறிப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள Roblox பயன்பாட்டு விதிமுறைகளக்குக் (“பயன்பாட்டு விதிமுறைகள்”) கூடுதலானவை. இந்த சந்தா விதிமுறைகளுக்கும் பயன்பாட்டு விதிமுறைகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு இருந்தால், சந்தாவிற்கான அணுகல் மற்றும் உபயோகம் தொடர்பாக இந்த சந்தா விதிமுறைகளே கட்டுப்படுத்தும். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள, ஆனால் வரையறுக்கப்படாத பெரிய எழுத்தில் தொடங்கும் சொற்கள், பயன்பாட்டு விதிமுறைகளில் கொடுக்கப்பட்டுள்ள அதே அர்த்தத்தையே கொண்டிருக்கும்.
பொதுவானவை
தகுதிநிலை: சந்தாக்கள் தனிநபர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட, வணிகமல்லாத உபயோகத்திற்காகவே வழங்கப்படுகின்றன. நாங்கள் சந்தாவை வழங்கும் நாடுகளில் வசிக்கும் நபர்கள் மட்டுமே சந்தாவை வாங்கத் தகுதி பெறுவார்கள்.
வயது வரம்பு: சந்தாவை வாங்குவதற்கு நீங்கள் 18 வயது (அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் முதிர் சட்ட வயது) நிரம்பியவராக இருக்க வேண்டும்.் நீங்கள் 18 வயதுக்குக் (அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் முதிர் சட்ட வயது) குறைவானவராக இருந்தால், உங்களுக்காக சந்தாவை வாங்க உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் உதவி தேவைப்படும்.
சந்தா பலன்கள்
ஒவ்வொரு சந்தாவின் விளக்கத்தையும், அவற்றுடன் இணைந்த பலன்களையும் எங்கள் இணையதளத்தில் நீங்கள் பார்க்கலாம். Roblox நிறுவனத்துக்கு அதன் சொந்த விருப்புரிமையின்பேரில், எப்போது வேண்டுமானாலும் எந்தக் காரணத்திற்காகவும் சந்தா நன்மைகளைப் புதுப்பிக்க உரிமை உண்டு. அவ்வப்போது, போனஸ் நன்மை போன்ற கூடுதல் நன்மைகளையும் Roblox வழங்கலாம். அத்தகைய போனஸ் நன்மைகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று உத்தரவாதம் கிடையாது, அவை எல்லாப் பயனர்களுக்கும் கிடைத்துவிடாது, மேலும் முற்றிலும் Roblox-இன் விருப்புரிமையின்பேரில் ஒவ்வொரு மாதமும் அவை மாறக்கூடும், தொடர்வது நிறுத்தப்படலாம்.சந்தாக் கட்டணங்கள் மற்றும் பேமெண்ட்
தானியங்குப் புதுப்பிப்பு: ஒவ்வொரு பில்லிங் காலத்தின் தொடக்கத்திலும் உங்கள் சந்தா தானாகப் புதுப்பிக்கப்படும், நீங்கள் ரத்துசெய்யும் வரை முடிவில்லாமல் இது தொடரும்.
சந்தாக் கட்டணங்கள்: நீங்கள் ஒரு சந்தாவை வாங்கும்போது, தேர்ந்தெடுத்த சந்தாவுக்கான கட்டணங்களை (“சந்தாக் கட்டணங்கள்”) நீங்கள் செலுத்த வேண்டும். பொருந்தக்கூடிய சட்டம் அல்லது பிற வழிகளில் வாங்கும் சமயத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, பொருந்தக்கூடிய ஏதேனும் வரிகள் எதுவும் சந்தாக் கட்டணங்களில் அடங்காது. பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியமானால், சந்தாவுக்காக உங்களிடம் இருந்து நாங்கள் வரிகளை விதித்து வசூலிப்போம். உங்கள் சட்ட எல்லை மற்றும் உங்கள் வங்கிச் சேவை வழங்குநரைப் பொறுத்து, ஒரு சந்தாவை நீங்கள் வாங்கும்போது, உங்களுக்குக் கூடுதல் கட்டணங்கள் (எ.கா. வெளிநாட்டுப் பரிவர்த்தனைக் கட்டணம்) விதிக்கப்படலாம். சந்தாக் கட்டணங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் அல்லது பிராந்தியத்திற்கும் வேறுபடக்கூடும், மேலும் நீங்கள் வசிக்கும் நாட்டை மாற்றினால் உங்கள் சந்தாக் கட்டணத்தைப் புதுப்பிக்க எங்களுக்கு உரிமை உள்ளது.
உங்களுக்கு நியாயமான முன் அறிவிப்பை வழங்கிய பிறகு, எப்போது வேண்டுமானாலும் சந்தாக் கட்டணங்களை மாற்ற அல்லது புதிய கட்டணங்களைச் சேர்க்க எங்களுக்கு உரிமை உள்ளது. வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, சந்தாக் கட்டணங்களில் செய்யப்படும் மாற்றங்கள் உங்கள் அடுத்த பில்லிங் காலத்தின்போது அமலுக்கு வரும். விலை மாற்றத்தை நீங்கள் ஏற்காவிட்டால், விலை மாற்றம் அமலுக்கு வரும் முன்பு உங்கள் சந்தாவை நீங்கள் ரத்துசெய்துவிட வேண்டும். சந்தாவைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், புதுப்பிக்கப்பட்ட, தொடர் சந்தாக் கட்டணத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வதைத் தெரிவிக்கிறீர்கள்.
பேமெண்ட்: நீங்கள் ஒரு சந்தாவை வாங்கும்போது, ஒரு பேமெண்ட் முறையைத் தேர்ந்தெடுக்குமாறு உங்களிடம் கேட்கப்படும் இந்தப் பேமெண்ட் தகவலை Roblox-க்கு வழங்குவதன் மூலம், நீங்கள் பெரியவர் என்றும், நீங்கள் தேர்ந்தெடுத்த பேமெண்ட் முறையைப் பயன்படுத்த உங்களுக்கு அங்கீகாரம் உள்ளது என்றும், நீங்கள் வழங்கக்கூடிய பேமெண்ட் தகவல் எதுவும் துல்லியமானது என்றும் நீங்கள் தெரிவிக்கிறீர்கள். ஒரு சந்தாவை வாங்குவதன் மூலம், சந்தாக் கட்டணங்களுக்குப் பணம் செலுத்துவதற்காக உங்கள் பேமெண்ட் தகவலைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும், நீங்கள் சந்தாவை ரத்துசெய்யும் வரை, தொடர்ச்சியான முறையில் நீங்கள் தேர்ந்தெடுத்த பேமெண்ட் முறையில் சந்தாக் கட்டணத்தைத் தானாக வசூலித்துக்கொள்ளவும் நீங்கள் Roblox அல்லது நியமிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பேமெண்ட் வழங்குநரை அங்கீகரிக்கிறீர்கள்.
பணம் திருப்பியளித்தல், உரிமை மாற்றுதல் மற்றும் விலகுதல் சந்தாக்களுக்குச் செலுத்திய பணத்தைத் திரும்பப்பெற முடியாது, அவற்றை பிறருக்கு மாற்றித்தரவும் முடியாது. சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவில், உங்கள் ஆரம்ப பர்ச்சேஸிற்குப் பிறகு கிடைக்கக்கூடிய விலகுவதற்கான உரிமை அல்லது "கூலிங் ஆஃப்" காலம் (எடுத்துக்கட்டாக, ஐரோப்பிய யூனியனில் இருப்பவர்களுக்கு 14 நாள் அவகாசம்) போன்ற, மற்றபடி உங்களுக்கு உரிமையளிக்கின்ற ஏதேனும் சட்டப்பூர்வ உரிமைகளை விலக்கிக்கொள்ள நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். விலக்கிக்கொள்ள முடியாததாக இருக்கும் அளவிற்கு, அத்தகைய உரிமைகள் தொடர்ந்து பொருந்தக்கூடும், கீழே உள்ள ரத்துசெய்தல் தகவலைப் பயன்படுத்தி நீங்கள் விலகிக்கொள்ளலாம்.
ரத்துசெய்தல்கள்
நீங்கள் சந்தாவை வாங்கப் பயன்படுத்திய பிளாட்ஃபார்ம் வழியாக, இங்கே உள்ள வழிமுறையைப் பின்பற்றி எப்போது வேண்டுமானாலும் உணல் சந்தாவை நீங்கள் ரத்துசெய்துகொள்ள முடியும். உங்கள் சந்தா தானாகவே புதுப்பிக்கப்படாமல் இருக்கவும், உங்கள் சந்தாவின் அடுத்த பில்லிங் காலத்திற்கான கட்டணம் உங்களிடம் வசூலிக்கப்படாமல் இருக்கவும், உங்கள் அடுத்த பில்லிங் தேதிக்கு முன்னதாகவே உங்கள் சந்தாவை நீங்கள் ரத்துசெய்ய வேண்டும். உங்கள் சந்தாவை நீங்கள் ரத்துசெய்யும் பட்சத்தில், வேறு விதமாகக் குறிப்பிடப்படாதவரை, அந்த ரத்து நடவடிக்கை உங்கள் தற்போதைய பில்லிங் காலத்தின் முடிவில் நடைமுறைக்கு வரும். நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்திய காலத்திற்கு உங்கள் சந்தாவைப் பயன்படுத்தவும் அணுகவும் உங்களுக்குத் தொடர்ந்து அனுமதி உண்டு. உங்கள் சந்தா முடியும்போது, அந்தச் சந்தா அல்லது அதனுடன் தொடர்புடைய நன்மைகளுக்கான அணுகல் உங்களுக்கு இனி இருக்காது. அப்போதைய சந்தாக் கட்டண விலையில் நீங்கள் மீண்டும் அந்தச் சந்தாவில் சேர்ந்து கொள்ளலாம்.
நிறுத்துதல் மற்றும் இடைநீக்குதல்
Roblox நிறுவனத்துக்கு அதன் சொந்த விருப்புரிமையின்பேரில், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சந்தாவிற்கான அணுகலை (அல்லது அதன் ஒரு பகுதியை) இடைநீக்கம் செய்ய அல்லது முழுமையாக நிறுத்த உரிமை உண்டு. இடைநீக்கம் செய்தல் அல்லது நிறுத்தப்படுவதற்கான காரணங்களில் பின்வருவன அடங்கும் (ஆனால் இவை மட்டுமே அல்ல): (i) இந்தச் சந்தா விதிமுறைகளை மீறுதல்; (ii) உங்களின் கோரிக்கை; (iii) நீங்கள் செலுத்த வேண்டிய சந்தாக் கட்டணத்தைச் செலுத்தத் தவறுதல்; (iv) சேவையிலோ சந்தாவிலோ ஏற்படும் எதிர்பாராத தொழில்நுட்ப அல்லது பாதுகாப்புப் பிரச்சனைகள்; அல்லது (v) சட்ட அமலாக்கத்துறை அல்லது பிற அரசு ஏஜென்சிகளின் சட்டப்பூர்வ கோரிக்கைகள். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் இதற்கு மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கக்கூடும். மேல்முறையீட்டுச் செயல்முறையைத் தொடங்க, Roblox உதவிப் படிவத்தைப் பயன்படுத்தி Roblox உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.
சர்ச்சைத் தீர்வு
முக்கியம்: கட்டுப்படுத்தும் கட்டாய முறைசாரா சர்ச்சைத் தீர்வு, நடுவர் தீர்வு மற்றும் கூட்டு நடவடிக்கைத் தள்ளுபடி விதிமுறைகள் உள்ளிட்டவை பயன்பாட்டு விதிமுறைகளில் உள்ளன. நீங்கள் யுனைட்டெட் ஸ்டேட்ஸில் வசிப்பவராக இருந்தால், இந்த நடுவர் தீர்வு மற்றும் கூட்டு நடவடிக்கைத் தள்ளுபடி விதிமுறைகள் உங்களுக்குப் பொருந்தும். இந்த சந்தா விதிமுறைகளிலிருந்து எழுகின்ற அல்லது அது தொடர்பான எந்தவொரு சர்ச்சையோ அல்லது கிளைமோ பயன்பாட்டு விதிமுறைகளில் உள்ள சர்ச்சைத் தீர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட பயன்பாடு
Roblox நிறுவனத்திற்கோ அல்லது பிற Roblox பயனர்களுக்கோ சட்டவிரோதமான, தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது ஏமாற்றக்கூடிய எந்தவொரு வகையிலும் இந்த சந்தாவைப் பயன்படுத்த மாட்டீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
உங்கள் சந்தாவின் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு என்பதைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் சந்தா உங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகவோ அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு மீறல் நடந்ததாகவோ நீங்கள் கருதக் காரணம் இருந்தால், உடனடியாக Roblox-க்குத் தெரிவிக்க ஒப்புக்கொள்கிறீர்கள் (மேலும் கேட்டுகொள்ளப்பட்டால் அதற்கான ஆவணப்படுத்திய ஆதாரங்களை வழங்கவும் சம்மதிக்கிறீர்கள்). உங்கள் நடவடிக்கையாலோ நீங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியதாலோ, உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ உங்கள் சந்தாவை வேறொருவர் பயன்படுத்துவது போன்ற உங்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கும் Roblox பொறுப்பாகாது.
உங்கள் உண்மையான புவியிருப்பிடத்தை மறைக்கும் அல்லது தவறான இருப்பிட விவரங்களை வழங்கும் எந்தவொரு வழிமுறை அல்லது தொழில்நுட்பத்தையும் (உதாரணமாக, விர்ச்சுவல் பிரைவெட் நெட்வொர்க் (VPN )) பயன்படுத்தி நீங்கள் சந்தாவை வாங்கக்கூடாது.
சந்தா விதிமுறைகளில் மாற்றம்
இந்த சந்தா விதிமுறைகளை அவ்வப்போது எங்களது தனிப்பட்ட விருப்பத்தின்படி மாற்றுவதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம். இந்த சந்தா விதிமுறைகளில் நாங்கள் மாற்றங்களைச் செய்தால், சந்தா விதிமுறைகளின் மிகச் சமீபத்திய பதிப்பை எங்களது இணையதளத்தில் பதிவிடுவோம், அது நடைமுறைக்கு வரும் தேதியைப் பதிவிடுவோம், மேலும் அவ்வாறு செய்வது அவசியம் என்றோ தகுந்தது என்றோ நாங்கள் கருதினால் உங்களுக்கு அது குறித்து அறிவிப்போம். இந்த மாற்றங்களை நீங்கள் ஏற்கவோ சம்மதிக்கவோ இல்லையென்றால், உங்கள் சந்தாவை நீங்கள் ரத்து செய்யலாம். சந்தாவைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், புதுப்பிக்கப்பட்ட எந்தவொரு சந்தா விதிமுறைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகிறீர்கள்.
பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்குதல், முக்கியமான பாதுகாப்பு ஆபத்துகளைக் கையாளுதல் அல்லது பெரிய அளவிலான பொருளாதார அல்லது தொழில்நுட்ப சுமைகளைத் தவிர்த்தல் போன்ற காரணங்கள் உட்பட, எந்தவொரு நாட்டிலோ அல்லது பிராந்தியத்திலோ இந்த சந்தாவில் மாற்றங்கள் செய்யவோ அல்லது அதை அகற்றவோ, வரம்புக்குட்படுத்தவோ, கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது தொடர்வதை நிறுத்தவோ Roblox-க்கு இருக்கும் அதிகாரத்தை இந்த சந்தா விதிமுறைகள் எந்த வகையிலும் குறைக்காது. எந்தவொரு நாட்டிலோ அல்லது பிராந்தியத்திலோ இந்த சந்தாவையோ அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதியையோ அகற்றவோ, கணிசமாக வரம்புக்குட்படுத்தவோ, கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது தொடர்வதை நிறுத்தவோ நாங்கள் முடிவு செய்தால், அது குறித்து உங்களுக்கு நியாயமான முன்னறிவிப்பை வழங்குவோம்.
அறிவிப்பு
Roblox உங்களுக்கு வழங்கும் அறிவிப்புகள் எதுவும் எலக்ட்ரானிக் முறையில் இந்த வழிகளில் வழங்கப்படும்: (i) நீங்கள் கடைசியாக வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம்; அல்லது (ii) சேவைகளைப் பயன்படுத்தும்போது அல்லது அவற்றில் அறிவிப்பை வெளியிடுவதன் மூலம்; அல்லது (iii) Roblox-இன் சொந்த விருப்புரிமையின்பேரில் தகுந்தது எனக் கருதப்படும் வேறு ஏதேனும் முறைகளில். எங்களின் அறிவிப்புகள் மற்றும் பிற தகவல்தொடர்புகளுக்கான உங்கள் தொடர்புத் தகவல்கள் உட்பட துல்லியமான, தற்போதைய மற்றும் முழுமையான தகவல்களை வழங்கவும் பராமரிக்கவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
தொடர்புத் தகவல்கள்
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், Roblox உதவிப் படிவத்தைப் பயன்படுத்தி Roblox உதவிக் குழுவை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.