சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் சுருக்கவுரை
நாங்கள் சில மாற்றங்களைக் கொண்டு வருவதால், அதற்கு ஏற்ப எங்களது Roblox தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கையை, நவம்பர் 1, 2026 முதல் புதுப்பிக்கிறோம்.
நாங்கள் செய்துள்ள மாற்றங்களின் முக்கிய சுருக்கவுரை பின்வருமாறு:
- சில அம்சங்களுக்கான அணுகலில் பிராந்தியத்திற்கு ஏற்ப இருக்கும் வேறுபாடுகளை விவரிக்கும் வாசகங்களை நாங்கள் சேர்த்துள்ளோம்.
- ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தரவைச் சேகரிப்பது குறித்த தகவல்களை நாங்கள் சேர்த்துள்ளோம்.
- அதிகாரிகளுடன் தகவலைப் பகிர்வதற்கான எங்கள் நடைமுறைகளை விவரிக்கும் பகுதியைச் சேர்த்துள்ளோம்.
வரவிருக்கும் மாற்றங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முழுமையான தனியுரிமைக் கொள்கையை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
Roblox தனியுரிமைக் கொள்கைக்கு உங்களை வரவேற்கிறோம்
இந்த தனியுரிமைக் கொள்கை உங்களுக்கானதா?
நீங்கள் Roblox அனுபவங்களில் கேம்களை உருவாக்கினாலோ அல்லது விளையாடினாலோ, உங்கள் வயது அல்லது இருப்பிடம் எதுவாக இருந்தாலும், இந்தத் தனியுரிமைக் கொள்கை உங்களுக்கு பொருந்தும். இது 13 வயதுக்கு உட்பட்ட பயனர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கும் பொருந்தும். இந்தக் கொள்கை Roblox சேவைகளை உள்ளடக்கியது.இந்தத் தனியுரிமைக் கொள்கையில் என்ன உள்ளடங்குகிறது?
இந்தக் கொள்கை உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உங்களுக்கு உள்ள உரிமைகளைப் பற்றி விவரிக்கிறது. உங்கள் பெயர், இருப்பிடம் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற உங்களை அடையாளம் காணக்கூடிய தகவல்களுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியும் என்று இது விளக்குகிறது. இந்தத் தனியுரிமைக் கொள்கையில், உங்கள் தகவல்களை நாங்கள் எப்போது, எப்படிப் பயன்படுத்துகிறோம் - அவற்றைச் சேகரித்தல், பதிவு செய்தல், ஒழுங்கமைத்தல், சேமித்தல் மற்றும் பகிர்தல் உள்ளிட்ட விவரங்களை உங்களுக்குத் தெரிவிப்போம்.
நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிர்வகிப்பதற்கான பல்வேறு உரிமைகள் அல்லது விருப்பங்கள் உங்களுக்கு இருக்கலாம், அவற்றை இந்தக் கொள்கை விரிவாக விளக்குகிறது. இந்தக் தனியுரிமைக் கொள்கையின் பிரிவுகள் 1-5 இல் உள்ள தகவல்களுக்கும், பிரிவு 7 இல் உள்ள இருப்பிடம் சார்ந்த தகவல்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்படும் பட்சத்தில், பிரிவு 7 இல் உள்ள தகவல்களே மேலோங்கும் (செல்லுபடியாகும்).இந்தத் தனியுரிமைக் கொள்கை எங்கே பொருந்தும்?
நீங்கள் Roblox-ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது பற்றி நீங்கள் இங்கே தெரிந்துகொள்ளலாம். Roblox-ஐ பயன்படுத்துவத்தில் பின்வருவன உள்ளடங்கும்:
- roblox.test1709.icu முகவரியைக் கொண்ட இணையதளங்கள்
- எங்களது மொபைல், விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் கன்சோல் ஆப்ஸ்
- Roblox பிளேயர் மற்றும் Roblox Studio
- இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள மற்ற Roblox அம்சங்கள்
ஆனால் நீங்கள் எங்களது சேவைகளை விட்டு வெளியேறினால், இந்த தனியுரிமைக் கொள்கை இனி பொருந்தாது. எங்கள் இணையதளம் அல்லது ஆப்பிலிருந்து நீங்கள் பிற இணையதளங்கள் அல்லது ஆப்களுக்குச் சென்றிருந்தாலும், அவற்றில் நீங்கள் காண்பவற்றிற்கோ அல்லது அவற்றின் தனியுரிமைக் கொள்கைகளுக்கோ நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் வேறொரு தளம் அல்லது ஆப்பிற்குச் செல்லும்போது, நீங்கள் Roblox-லிருந்து வெளியேறுகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கும் செய்தியை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கலாம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான கேள்விகள் அல்லது கோரிக்கைகளுடன் எங்களைத் தொடர்பு கொள்ள, எங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எங்களது எங்கள் வாடிக்கையாளர் ஆதரவுபடிவத்தின் மூலம் கேள்வியைச் சமர்ப்பிப்பதன் வாயிலாக நீங்கள் மின்னணு முறையில் Roblox-ஐத் தொடர்புகொள்ளலாம். நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால், உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யச் சொல்லுங்கள்.
US:
தொலைபேசி: (888) 858 - BLOX
எங்களுக்கு எழுத வேண்டிய முகவரி்:
Roblox கார்ப்பரேஷன்
கவனம்: Roblox பிரைவசி மேனேஜர்
முகவரி: 3150 S. டெலாவேர் செயின்ட்
சான் மேடியோ, கலிபோர்னியா, 94403
privacy@roblox.test1709.icuEEA, UK அல்லது சுவிட்சர்லாந்து:
நீங்கள் ஐரோப்பிய பொருளாதார மண்டலம் (EEA), யுனைடெட் கிங்டம் அல்லது சுவிட்சர்லாந்தில் இருந்தால்: roblox@gdpr-rep.com ஐத் தொடர்பு கொள்ளவும் (ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆர்டிகல்ஸ் 27 EU மற்றும் UK GDPR-ன் படி எங்களது பிரதிநிதி)
EEA:
DP-Dock GmbH
கவனம்: Roblox கார்ப்பரேஷன்
பல்லின்டம் 39 / எக்கே ஜங்ஃபெர்ன்ஸ்டீக்
20095 ஹாம்பர்க், ஜெர்மனிUK:
DP டேட்டா புரொடெக்ஷன் சர்வீசஸ் UK லிமிடெட்.
கவனம்: Roblox கார்ப்பரேஷன்
16 கிரேட் குயின் ஸ்ட்ரீட்
கோவென்ட் கார்டன், லண்டன், WC2B 5AH, யுனைடெட் கிங்டம்ஆர்டிகல் 37 GDPR-ன் படி, EU-இல் உள்ள எங்களது தரவு பாதுகாப்பு அதிகாரியை இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம்:
DP Dock DPO சர்வீசஸ் GmbH
- Roblox
Grüffkamp 10
24159 கீல், ஜெர்மனி
roblox@dp-officer.comநீங்கள் பிரேசிலில் இருந்தால் dpo.roblox@leonardi.adv.br என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் எங்களது பிரேசிலிய தரவு பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் கொரியாவில் இருந்தால், கூடுதல் தகவல்கள் கொரிய குடியரசு பயனர்களுக்கான தனியுரிமைக் கொள்கை இணைப்பில் உள்ளன.
நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், நீங்கள் வசிக்கும் மாகாணத்தை பொறுத்து கூடுதல் விதிகள் பொருந்தக்கூடும். அமெரிக்க மாநிலச் சட்டங்களின் கீழ் உங்களுக்குக் கிடைக்கும் உரிமைகளைப் பற்றி மேலும் அறிய, அமெரிக்க மாகாண தனியுரிமைக் கொள்கை இணைப்பிற்கு செல்லவும்.
இந்தத் தனியுரிமைக் கொள்கையின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு முன், இதில் உள்ள சில குறிப்பிட்ட சொற்களுக்கென்று தனிப்பட்ட அர்த்தங்கள் உள்ளன.
- "சிறுவர்கள்" அல்லது "சிறுவர்" என்பது 13 வயதுக்கு உட்பட்ட எந்தவொரு பயனரையும் குறிக்கும்
- "மைனர்" அல்லது "மைனர் யூசர்" என்பது, தங்கள் வசிப்பிடம் அல்லது மாநிலத்தின் சட்டப்பூர்வ வயது வரம்பை அடையாத, சர்வீஸை பயன்படுத்தும் ஒரு பயனரை குறிக்கும்
- "தனிப்பட்ட தகவல்கள்" என்பது ஒரு நபரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலையும் குறிக்கும், குறிப்பாக பெயர், அடையாள எண், இருப்பிடத் தரவு அல்லது ஆன்லைன் அடையாளங்காட்டி போன்ற ஒரு குறிப்பைக் கொண்டு அடையாளம் காண்பதைக் குறிக்கும்.
- "பிளாட்ஃபார்ம்" என்பது கற்பனை உலகமான எங்களது Roblox தளத்தைக் குறிக்கும்
- "தனியுரிமைக் கொள்கை" அல்லது "கொள்கை" என்பது இந்த Roblox தனியுரிமைக் கொள்கையைக் குறிக்கும்
- "பிராசஸிங்" என்பது தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், பதிவு செய்தல், ஒழுங்கமைத்தல், கட்டமைத்தல், சேமித்தல், மாற்றியமைத்தல் அல்லது எந்த வகையான வெளிப்படுத்துதலையும் செய்தல் போன்ற செயல்பாடுகளைக் குறிக்கும்.
- "சேவை" என்பது பிளாட்ஃபார்ம் அனுபவங்களை உருவாக்க பயனர்களை அனுமதிப்பது, மற்றவர்களுடன் இணைவது மற்றும் உங்களால் அல்லது பிற பயனர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைப் பயன்படுத்துவது போன்ற Roblox வழங்கும் ஏதேனும் ஒரு சேவை அல்லது அப்ளிக்கேஷனைக் குறிக்கும். இதில் roblox.test1709.icu டொமைனில் உள்ள இணையதளங்கள், எங்களது Roblox மொபைல், விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் கன்சோல்கள், Roblox பிளேயர், Roblox ஸ்டுடியோ மற்றும் இந்தத் தனியுரிமைக் கொள்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட இணைப்பு வழங்கப்பட்டுள்ள எங்களது பிற இணையதளங்கள், தயாரிப்புகள், மென்பொருள்கள், அப்ளிக்கேஷன்கள், உள்ளடக்கங்கள், டேட்டா ஃபீட்கள் மற்றும் பிற சேவைகள் உள்ளடங்கும்.
இந்தக் கொள்கையில் வரையறுக்கப்படாத மற்ற பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்கள் Roblox டிக்ஷ்னரியில் வரையறுக்கப்பட்டுள்ளன மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள அர்த்தத்தைக் கொண்டிருக்கும். இந்தக் கொள்கையின் ஆங்கில பதிப்பிற்கும் பிற மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புகளுக்கும் இடையே ஏதேனும் முக்கியமான அல்லது முரண்பாடு இருப்பதாகத் தெரிந்தால், ஆங்கில பதிப்பே இறுதி முடிவாக இருக்கும்.
நீங்கள் 13 வயதுக்கு உட்பட்டவரா அல்லது 13 வயதுக்கு உட்பட்ட ஒருவருக்குப் பொறுப்பானவரா?
நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கில் சில அம்சங்களுக்கான உங்கள் அணுகல் கட்டுப்படுத்தப்படும். குழந்தைகளின் பிரைவசியைப் பாதுகாப்பதில் Roblox கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறது. தனியுரிமைக் கொள்கையின் இந்தப் பகுதி உங்களுக்காக மட்டுமே.
முதலில், அனுமதியைப் பெறுங்கள்
நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால், Roblox-ஐப் பயன்படுத்த உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் அனுமதி பெறவும். அவர்களின் அனுமதி இல்லாமல் நீங்கள் எங்களது சேவைகளைப் பயன்படுத்தக் கூடாது.லிமிட்களை செட் செய்யவும்
நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், நண்பர்களுடன் மட்டுமே உரையாடுவது அல்லது எந்தவித உரையாடல்களையும் அனுமதிக்காமல் இருப்பது போன்ற செயல்பாடுகளின் மூலம், உங்களுடன் யார் தொடர்பு கொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்த Roblox கம்யூனிகேஷன் அமைப்புகள் உங்களை அனுமதிக்கின்றன. நீங்கள் உங்கள் கணக்கைக் கட்டுப்படுத்தவும் முடியும், இது சாட் மற்றும் பொதுக் கருத்துகளைத் தெரிவிப்பதை முடக்குவதுடன், ஒரு கணக்கைச் சில குறிப்பிட்ட வடிகட்டப்பட்ட அனுபவங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தும்.
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் – உங்கள் குழந்தை Roblox-இல் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களை நீங்கள் கண்காணிக்குமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்கு உதவக்கூடிய சில கருவிகள் எங்களிடம் உள்ளன – நீங்கள் Roblox-இன் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி இங்கேதெரிந்து கொள்ளலாம்.
வயதிற்கு ஏற்ற தனியுரிமை அமைப்புகள்
13 வயதுக்குக் குறைவான நபர்களுக்கான தனியுரிமை அமைப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது. இந்தப் பிரைவசி பயன்முறையில் இருக்கும்போது, சில தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் எச்சரிக்கைகள் போன்ற குறிப்பிட்ட அம்சங்கள் முடக்கப்படும். நீங்கள் 13 வயதை அடையும்போது, 13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனர்களுக்கு ஏற்ற கூடுதல் அம்சங்களை நீங்கள் செயல்படுத்திக்கொள்ள முடியும் (இருப்பினும் உங்களுக்கு 18 வயதாகும் வரை விளம்பரங்களை நாங்கள் தனிப்பயனாக்க மாட்டோம்).நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால் நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராக இருந்து ஒரு கணக்கை உருவாக்கினால், நீங்கள் Roblox-ஐப் பயன்படுத்துவதற்காக சில தகவல்களை, (இவைCOPPA ஆல் வரையறுக்கப்பட்டபடி தனிப்பட்ட தகவல்கள் அல்லாதவை) நாங்கள் கேட்கிறோம்.
நாங்கள் சேகரிப்பவை:
- உங்கள் பயனர் பெயர் (தேவை). உங்கள் கணக்கை உருவாக்கவும் Roblox சர்வீஸை இயக்கவும் இது எங்களுக்குத் தேவைப்படுகிறது. நாங்கள் உங்கள் பயனர் பெயரை ை Robloxக்கு வெளியே உங்களை அடையாளம் காண பயன்படுத்த மாட்டோம்.
- உங்கள் கடவுச்சொல் (தேவை). உங்கள் கணக்கில் உள்நுழையவும் Roblox சர்வீஸை இயக்கவும் இது எங்களுக்குத் தேவைப்படுகிறது.
- உங்கள் பிறந்த தேதி (தேவைு). உங்கள் கணக்கில் உங்கள் வயதிற்கு ஏற்ற சில இயல்புநிலை அமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்துவோம்.
- உங்கள் பாலினம் (விருப்பப்பட்டால் வழங்கலாம்). உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்துவோம்
கூடுதல் கணக்கு பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் கட்டுப்பாடுகளுக்காக, கணக்கு அமைப்புகளில் அல்லது லாக்-அவுட் செய்யும் போது உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மின்னஞ்சல் முகவரியை வழங்குவதற்கான விருப்பம் உங்களுக்கு உள்ளது. குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியை வழங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள், ஆனால் கணக்கை உருவாக்குவதற்கு அது அவசியமில்லை. பெற்றோரின் மின்னஞ்சல் முகவரிகள், உங்கள் கணக்கு மற்றும் Roblox பிளாட்ஃபார்மின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்காக சேகரிக்கப்படுகின்றன. நீங்கள் உள்நுழைவதற்கு உங்கள் பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியை நாங்கள் பயன்படுத்தலாம். உங்கள் கணக்கை மதிப்பாய்வு செய்யக் கோருவது போன்ற கணக்கு தொடர்பான விஷயங்களைப் பற்றி அவர்களுடன் தொடர்புகொள்ள உங்கள் பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம்.
நிறுவன உள்ளக் செயல்பாடுகள்
சிறுவர்கள் Roblox-இல் பதிவுசெய்யும்போது, நிறுவனச் செயல்பாடுகளுக்காகவும் உங்களுக்கும் பிற பயனர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கும், நிரந்தர அடையாளங்காட்டிகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட சில வகை தனிப்பட்ட தகவல்களையும் நாங்கள் சேகரிப்போம். நிரந்தர அடையாளங்காட்டிகள் என்பவற்றில், உங்கள் சாதனத்தை Roblox உடன் இணைக்கத் தேவைப்படுகின்ற IP முகவரி, தனித்துவமான சாதன அடையாளங்காட்டிகள் போன்ற தரவுகள் அடங்கும். உங்களையும் உங்கள் சாதனத்தையும், உங்கள் குடும்பத்தினரின் சாதனத்தையும் அடையாளம் கண்டுகொள்ள நிரந்தர அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்த முடியும். தொடர இருக்கும் நிறுவனச் செயல்பாடுகளுக்காக, நிரந்தர அடையாளங்காட்டிகளையும், பதிவுசெய்யும்போது உங்களிடம் நாங்கள் கேட்கும் தகவல்களையும் Roblox சேகரிக்கிறது:
- Roblox-இன் செயல்பாட்டைப் பராமரித்தல் அல்லது பகுப்பாய்வு செய்தல்;
- நெட்வொர்க் தகவல்தொடர்பை மேற்கொள்ளுதல்;
- Roblox பயனர்களை அங்கீகரித்தல், அதிலுள்ள உள்ளடக்கத்தை தனிப்பயனாக்குதல்;
- சூழலுக்கு ஏற்ற விளம்பரங்களைக் காண்பித்தல், விளம்பரங்களின் இடைவெளிக்கு வரம்பமைப்பதும் இதில் அடங்கும்;
- Roblox-இன் பாதுகாப்பு அல்லது அதன் முழுமைத்தன்மையைப் பாதுகாத்தல்
- சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்தல்.
மேலே உள்ள நோக்கங்கள் தவிர, வேறு எந்த நோக்கங்களுக்காகவும் நிரந்தர அடையாளங்காட்டிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்காக தொழில்நுட்ப ரீதியான, ஒப்பந்த ரீதியான, மற்றும் பிற நடவடிக்கைகளை Roblox செயல்படுத்துகிறது.
சேவை வழங்குநர்கள்
நிறுவனச் செயல்பாடுகளை நிறைவேற்ற சேவை வழங்குநர்களை Roblox சார்ந்துள்ளது. சில சூழல்களில், 13 வயதுக்குக் கீழுள்ள பயனர்களிடம் இருந்து பெற்ற நிரந்தர அடையாளங்காட்டிகளை இந்தத் தரப்புகள் செயலாக்கலாம். இந்த நிறுவனச் செயல்பாடுகளுக்கு உதவிடும் வகையில் சேவை வழங்குநர்கள் நிரந்தர அடையாளங்காட்டிகளைச் செயலாக்குவது, ஒப்பந்தத் தேவைப்பாடுகளுக்கும், தகவலின் பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் முழுமைத் தன்மையைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கும் உட்பட்டே இருக்கும்.
எங்களுக்கு வேறு எந்தக் கூடுதல் தனிப்பட்ட தகவல்கள் தேவையில்லை
நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால், உங்கள் கணக்கை உருவாக்க அல்லது பாதுகாக்கத் தேவையான தகவல்களை மட்டுமே நாங்கள் உங்களிடம் கேட்போம். உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்கினால், நாங்கள் பின்வருபவற்றை மேற்கொள்வோம்:
- உங்களிடமிருந்து நாங்கள் சேகரித்த கூடுதல் தனிப்பட்ட தகவல்களை நீக்குவோம் (சட்டம் எங்களை வைத்திருக்கச் சொன்னால் தவிர),
- உங்கள் கணக்கை ரத்து செய்வோம், அல்லது
- உங்கள் கணக்கில் வயதிற்கு ஏற்ற பாதுகாப்புகளைச் செயல்படுத்துவோம்
பயனர்கள் எங்களது பொதுவான மற்றும் கருத்துத் தெரிவிக்கும் பகுதிகளில் (உதாரணமாக சாட், ஃபோரம்கள், குரூப் வால்கள், தனிப்பட்ட போஸ்ட்கள்) எதையும் பதிவிடும்போது, நாங்கள் அவற்றை வடிகட்டி பின்வருவனவற்றை நீக்குகிறோம்:
- முகவரிகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள்
- பிஷிங் முயற்சிகள் (அதாவது யாராவது உங்களை ஏமாற்றி உங்களது தனிப்பட்ட தகவலைப் பெற முயற்சிப்பது)
- அபத்தமான வார்த்தைகள், அடல்ட் அல்லது ஆபாசமான கருத்துகள்
மேற்கூறிய வடிகட்டலை வழங்க, எங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எங்களால் இயன்றவரை மனித மற்றும் தானியங்கி சோதனைகளைப் பயன்படுத்துகிறோம் – ஆனால் அனைத்து வடிகட்டுதல் தொழில்நுட்பங்களைப் போலவே, இந்த அமைப்புகளும் 100% செயல்புரியாது.
தரவைத் தக்கவைத்தல்
உங்கள் தகவலை நாங்கள் எந்த நோக்கங்களுக்காக சேகரித்தோமோ அந்தக் குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றவும், நிரந்தர அடையாளங்காட்டிகளை முடிவிலாமல் தக்கவைப்பதைத் தடுக்கவும் நியாயமாகத் தேவைப்படும் காலத்திற்கு மட்டுமே தரவைத் தக்கவைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தக்கவைப்புக் கொள்கையை Roblox பின்பற்றுகிறது. தகவைப்புக் கொள்கையுடன் கூடுதலாக, நாங்கள் செயலாக்கும் தரவை நிர்வகிப்பதற்கு அணுகல் கட்டுப்பாடுகள், நோக்கத்திற்கு ஏற்ப டேகிங் செய்தல், பணியாளர் பயிற்சிகள், தரவை வகைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் Roblox பயன்படுத்துகிறது. உங்களிடம் இருந்து சேகரித்த நிரந்தர அடையாளங்காட்டிகளை, எங்களுடைய குறிப்பிட்ட பிசினஸ் தேவைகளின் அடிப்படையில், வெவ்வேறு கால அளவிற்கு Roblox தக்கவைக்கலாம், அந்த நோக்கங்களில் உள்ளங்குபவை:
கணக்கைப் பராமரித்தல், பாதுகாப்பு உள்ளிட்ட Roblox சேவைகளை வழங்குதல்
Roblox தனது சேவைகளை வழங்குவதற்காக, பயனர்களைப் பற்றிய நிரந்தர அடையாளங்காட்டிகளைச் செயலாக்குகிறது. உங்கள் கணக்கைப் பராமரிப்பதற்காக, (எ.கா. உங்கள் கணக்கின் உள்ளமைவு மற்றும் செயல்பாட்டு வரலாற்றை நினைவில் வைத்துக்கொள்ளுதல்), நீங்கள் கணக்கை வைத்திருக்கும் காலம் வரை நிரந்தர அடையாளங்காட்டிகளை Roblox சேகரித்து வைக்கும். நீங்கள் உங்கள் கணக்கை நீக்கும்போது, Roblox தனது சிஸ்டங்களில் இருந்து உங்கள் தரவை நிரந்தரமாக நீக்கும் செயலைத் தொடங்கும். பாதுகாப்பு நோக்கங்களுக்காக (எ.கா ரோபாட்களைத் தடுத்தல்), கணக்கை நீக்கி இரண்டு வருடங்கள் வரை நிரந்தர அடையாளங்காட்டிகளை Roblox செயலாக்கக்கூடும்.
வயது உறுதிப்படுத்தல்
பயனர்களின் வயதை மதிப்பீடு செய்வதற்காக வயது உறுதிப்படுத்தல் செயல்முறையை நிறைவுசெய்ய, செல்ஃபி போன்ற படங்கள் உள்ளிட்ட உங்களைப் பற்றிய தகவல்களை Roblox செகரிக்கக்கூடும். பயனர்களின் வயதை மதிப்பீடு செய்வதற்காக சேகரிக்கப்படும் முகம் சார்ந்த வயதுக கணிப்பைச் செய்வதற்காக எடுக்கப்படும் படங்கள் போன்ற தகவல்கள், வயதுச் சரிபார்ப்பு செயல்முறை நிறைவடைந்ததும் நீக்கப்படும். Roblox முகம் சார்ந்த மீடியா பதிவுக் கொள்கையில் Roblox-இன் நடைமுறைகள் பற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம்.
பெற்றோர் கணக்குகளுடன் இணைத்தல்
பெற்றோர் கணக்கை உருவாக்குவதற்காக நீங்கள் உங்கள் பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியை Roblox-க்கு வழங்கியிருந்தால், இணைக்கும் செயல்முறையை பெற்றோர் நிறைவு செய்யாவிட்டால், 24 மணிநேரத்திற்குள் Roblox உங்கள் பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியை நீக்கிவிடும்..
சட்டப்பூர்வக் கடமைகளை நிறைவேற்றுதல்
சட்டம் அல்லது ஒழுங்குமுறைக்கு இணங்குவதற்கு அவசியம் என்றால், தகவல்களை Roblox நீண்ட காலமும் தக்கவைக்கக்கூடும்.
தனியுரிமை தொடர்பிலான மாற்றங்களைச் செய்ய நீங்கள் விரும்பினால் எங்களிடம் கேட்கவும்
உங்கள் குழந்தையின் கணக்கில் மாற்றங்களைச் செய்யும்படி அல்லது உங்களிடமிருந்தோ அல்லது உங்கள் குழந்தையிடமிருந்தோ சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்களை மதிப்பாய்வு செய்ய, நீக்க அல்லது அவற்றின் மேலதிக சேகரிப்பு அல்லது பயன்பாட்டைத் தடுக்க நீங்கள் Roblox-இடம் கோரிக்கை விடுக்கலாம். கோரிக்கையை விடுக்க, எங்களது வாடிக்கையாளர் ஆதரவு படிவத்தைப்பூர்த்தி செய்யுங்கள்.
அமெரிக்காவில் வசித்து கொண்டு மேலும் அறிய விரும்புகிறீர்களா?
நாங்கள் குழந்தைகளின் ஆன்லைன் பிரைவசி பாதுகாப்புச் சட்டத்திற்கு (COPPA) இணங்குகிறோம். COPPA குறித்து மேலும் அறிய, நீங்கள் அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனின் COPPA இணையதளத்தைப் பார்வையிடலாம்: https://www.ftc.gov/news-events/topics/protecting-consumer-privacy-security/kids-privacy-coppakidSAFE சீல் திட்டத்தின் இந்த எளிய வழிகாட்டியைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் COPPA பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம் – www.kidsafeseal.com/knowaboutcoppa.html
உங்கள் தகவல்களை நாங்கள் சேகரிக்கும்போது
Roblox கணக்கை அமைத்தல்
Roblox அனுபவத்தில் சேருவதற்கான உங்கள் முதல் படி, ஒரு Roblox கணக்கை அமைப்பதாகும். உங்கள் கணக்கில் உள்நுழையவும், Roblox-இல் உள்ள அம்சங்களை அணுகவும், தனிப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்போம். உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க, உங்கள் பிறந்தநாள் மற்றும் பாலினத்தையும் (பாலினம் விருப்பரீதியிலானது) நாங்கள் கேட்கிறோம். தகுதியுள்ள பயனர்கள் தங்கள் கணக்கின் காட்சிப் பெயரில் சில தனிப்பட்ட தகவல்களைச் சேர்க்க அமைக்கலாம்.
பதிவு செய்வதற்கான மூன்று முக்கிய விதிகள்:
- உங்கள் பயனர் பெயரில் உங்கள் சொந்தப் பெயர் அல்லது பிற தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த வேண்டாம்.
- ஊகிக்க எளிதான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
- உங்கள் கடவுச்சொல்லை உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் பகிரலாம், ஆனால் அதை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.
உங்கள் பயனர் பெயரை Roblox-இல் உங்கள் செயல்பாடுகளுக்கு வெளியே உங்களை அடையாளம் காண நாங்கள் பயன்படுத்துவதில்லை.
நாங்கள் உங்களிடம் மின்னஞ்சல் முகவரியைக் கேட்பதற்கான காரணம்:
உங்களிடம் கணக்கு இருந்தால், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க வேண்டியிருந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் (அல்லது நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால் உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மின்னஞ்சல் முகவரியைச்) சேர்க்கலாம்.
உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க அல்லது கூடுதல் அம்சங்களைச் செயல்படுத்த உங்கள் மின்னஞ்சலைக் கேட்கலாம். மின்னஞ்சல் முகவரி எங்களுக்குத் தேவைப்படுவதற்கான முக்கிய காரணம் பாதுகாப்பு ஆகும், ஏனெனில் கணக்குகள் உண்மையானவை என்பதை நாங்கள் அதன் மூலம்தான் சரிபார்க்கிறோம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் - மின்னஞ்சல் முகவரி மாற்றப்பட்டால், நீங்கள் முன்பு பயன்படுத்திய முகவரிக்கு நாங்கள் ஒரு அறிவிப்பு மின்னஞ்சலை அனுப்புவோம்.
உங்களிடம் 13+ கணக்கு இருந்து, உங்கள் பிறந்தநாளை 13 வயதிற்குட்பட்டவராக மாற்றினால், Roblox உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களிடமிருந்து முன்பு சேகரிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளின் ஹாஷை சேமிக்கும். இந்த ஹாஷ் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மீண்டும் கட்டமைக்கப்படவோ அல்லது உங்களைத் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்படவோ முடியாது, மேலும் எதிர்காலத்தில் உங்களை அங்கீகரிக்க மட்டுமே பயன்படுத்தப்படும்.
உங்கள் தொலைபேசி எண்ணைப் பகிர்தல்
நீங்கள் ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுக்கத் தேர்வுசெய்தால், நீங்கள் உள்நுழைவதற்கு முன்பு உங்கள் எண்ணை உறுதிப்படுத்துமாறு கேட்டு ஒரு குறுஞ்செய்தியை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். தொலைந்த அல்லது மறந்த கடவுச்சொல்லை மீட்டெடுப்பது, ஒரு அம்சத்தை அணுகுவது அல்லது மொபைல் வழியாக உள்நுழைவது உட்பட பாதுகாப்பு மற்றும் கணக்கு அணுகலுக்காக உங்கள் தொலைபேசி எண்ணை நாங்கள் பயன்படுத்துவோம். மோசடியைத் தடுக்கவும், உங்களை அல்லது உங்கள் வயர்லெஸ் சாதனத்தை அடையாளம் காண அவர்களுக்கு உதவுவதற்காகவும், உங்கள் வணிக உறவின் காலத்திற்கு, உங்கள் கணக்கு மற்றும் உங்கள் வயர்லெஸ் சாதனம் பற்றிய தகவல்களை Roblox அல்லது அதன் சேவை வழங்குநருக்குப் பயன்படுத்த அல்லது வெளியிட உங்கள் வயர்லெஸ் கேரியருக்கு நீங்கள் அங்கீகாரம் அளிக்கிறீர்கள்.
கூடுதலாக, உங்களின் வெளிப்படையான மற்றும் தகவலறிந்த ஒப்புதலுடன், Roblox-ஐப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு உங்களை ஒரு நண்பராகப் பரிந்துரைக்க உங்கள் தொலைபேசி எண்ணை நாங்கள் பயன்படுத்தலாம். உங்கள் நண்பர்களின் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் தொடர்புப் பெயருடன் நீங்கள் பரிந்துரைக்கப்படுவீர்கள், அதில் உங்கள் உண்மையான பெயரும் இருக்கலாம். உங்கள் தொலைபேசி எண்ணை Roblox-இல் நண்பர்களால் கண்டறியப்படுவதை நாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், இந்த அம்சத்தை இயக்க வேண்டாம் அல்லது எந்த நேரத்திலும் அதை முடக்கவும். கண்டறியும் தன்மை அம்சம் சில இடங்களில் கிடைக்காமல் போகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
Roblox-இல் வாங்குபவை
நீங்கள் Robux அல்லது பிரீமியம் சந்தாக்களை வாங்கலாம் மற்றும் எங்களிடம் உள்ள கட்டண முறைகளிலிருந்து எவ்வாறு பணம் செலுத்துவது என்பதைத் தேர்வுசெய்யலாம். நீங்கள் பணம் செலுத்தும்போது, நீங்கள் (அல்லது நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால் உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்) பின்வருபவை போன்ற தனிப்பட்ட தகவல்கள் உட்பட பில்லிங் தகவல்களை வழங்க வேண்டும்:
- Robux வாங்குவதற்குப் பொறுப்பான நபரின் பெயர்
- அவர்களின் பில்லிங் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள், அதாவது மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்
- கிரெடிட் கார்டு அல்லது பிற கட்டணத் தகவல்கள்
எங்கள் கட்டணச் செயலிகள் (உதாரணமாக, Paypal) பரிவர்த்தனைகளை நிர்வகிக்கின்றன, அவை அவற்றின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைளுக்கு உட்பட்டவை. அவர்களின் கொள்கைகள் அவர்கள் சேகரித்து பயன்படுத்தும் தனிப்பட்ட தகவல்கள் எவை என்பதை விளக்கும். உதாரணமாக, ஏதேனும் பில்லிங் சிக்கல்கள் அல்லது விசாரணைகளைத் தீர்க்கும் வகையில் உங்கள் பில்லிங் தகவல்கள், பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் கொள்முதல் வரலாற்றை அவர்கள் சேகரித்து பயன்படுத்தலாம். சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றவும், எங்கள் தளத்தின் ஒருமைப்பாட்டை ஆதரிக்கவும், வாங்குதல்கள் தொடர்பான சில தகவல்களை Roblox பெறுகிறது. பணம் செலுத்துதல் மற்றும் ஒருமைப்பாடு நோக்கங்களுக்காக உங்கள் பில்லிங் முகவரியையும் Roblox சேகரிக்கலாம்.
எதிர்கால வாங்குதல்களை எளிதாக்க, உங்கள் பில்லிங் தகவல்களை எங்கள் கட்டணச் செயலிகள் ஒன்றில் சேமிக்க நீங்கள் தேர்வு செய்யலாம், அவ்வாறான நிலையில், உங்கள் முழுமையான சேமித்த பில்லிங் தகவல்களை Roblox சேமிக்கவோ அல்லது அணுகவோ முடியாது. மற்றொரு Roblox பயனர் சார்பாக நீங்கள் Robux வாங்கினால், பரிவர்த்தனை குறித்து உங்களுடன் தொடர்புகொள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் போன்ற தொடர்புத் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.
உள்ளடக்கத்தை இடுகையிடுதல்
சாட்கள், ஃபோரம்கள், குரூப் வால்கள், தனிப்பட்ட போஸ்ட்கள் அல்லது பிற அம்சங்கள் மூலம் Roblox-இல் கருத்துகள், செய்திகள் அல்லது பிற உள்ளடக்கத்தை நீங்கள் இடுகையிடலாம். 13 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனர்கள் Roblox-இல் ஆடியோ அம்சங்களையும் பயன்படுத்தலாம். நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கம், உங்கள் சாட் அல்லது ஆடியோ உட்பட, மற்ற பயனர்களால் பிடிக்கப்படலாம் அல்லது பகிரப்படலாம். எங்களின் சமூகத் தரநிலைகளை பூர்த்தி செய்கிறதா மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்குகிறதா என்பதைச் சரிபார்க்க, நீங்கள் சொல்வதையும் எழுதுவதையும் நாங்கள் கண்காணிக்கிறோம். உள்ளடக்கம் எங்கள் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று நாங்கள் கண்டால், உதாரணமாக, அது பொருத்தமற்றது, தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கியது அல்லது Roblox-இல் பயனர்கள் வைத்திருப்பதற்கு ஏற்றதல்ல என்று நாங்கள் நம்பினால், அதை மாற்றவோ அல்லது அகற்றவோ எங்களுக்கு உரிமை உண்டு. சட்டம் அனுமதிக்கும் இடங்களில், எங்கள் பிளாட்ஃபார்மில் உள்ளடக்கத்தை வடிகட்டுவதை மேம்படுத்த, நீங்கள் மற்றும் பிற பயனர்கள் இடுகையிட்ட உள்ளடக்கத்தை நாங்கள் பயிற்சி அல்லது உதவிக்காகப் பயன்படுத்தலாம். எங்கள் பிளாட்ஃபார்மில் பாதுகாப்பை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். Roblox-இல் ஒரு சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்கவும், உங்களிடமிருந்தோ அல்லது உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்தோ உங்கள் கணக்கு பற்றிய கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவும் நாங்கள் இந்தத் தரவைப் பயன்படுத்தலாம்.கேள்விகள் கேட்பது அல்லது தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவது
நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யும்போது, உங்களின் மின்னஞ்சல் முகவரி (அல்லது நீங்கள் 13 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்கள் பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் மின்னஞ்சல் முகவரி), பயனர் பெயர் மற்றும் நீங்கள் வழங்கும் பிற விவரங்களை நாங்கள் சேகரிக்கிறோம்:- வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளுதல்
- ஒரு பிரச்சனையைப் பற்றிப் புகார் செய்யும்போது
- தொழில்நுட்ப ஆதரவைக் கோருதல்
- எங்களிடம் கேள்விகள் கேட்பது அல்லது கருத்துகளைத் தெரிவித்தல்
உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், நீங்கள் கேட்கும் ஆதரவு அல்லது உதவியை வழங்கவும் இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம். 13 வயதிற்கு உட்பட்ட பயனர்களுக்கு, எங்கள் பதில்களை அனுப்பும்போது உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். உங்கள் கணக்கைப் பற்றிய கூடுதல் கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்ற உள் பயன்பாட்டிற்காக மட்டும், தொழில்நுட்ப ஆதரவு கேள்விகளின் பதிவுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாங்கள் வைத்திருக்கிறோம்.
Roblox அம்சங்களைப் பயன்படுத்துதல்
நீங்கள் குறிப்பிட்ட Roblox அம்சங்களைப் பயன்படுத்தும்போது நாங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தலாம். சில அம்சங்களுக்கான அணுகலை வழங்க, உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் நீங்கள் எங்களுக்கு வழங்கும் உங்களின் சரிபார்க்கப்பட்ட பிறந்த தேதி போன்ற பிற தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம்.சமூக ஊடக இணைப்புகள் (13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்கள்)
உங்கள் Roblox கணக்கில் உங்கள் பிற சமூக ஊடக சுயவிவரங்களுக்கான இணைப்புகளை நீங்கள் சேர்க்கலாம். இது இந்த இணைப்புகளை மற்ற பயனர்களுடன் பகிர உங்களை அனுமதிக்கிறது. உங்கள் கணக்குடன் தொடர்புடைய சமூக ஊடக இணைப்புகளை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை நீங்களே கட்டுப்படுத்தலாம்.
நீங்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தும்போது:
- உங்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பற்றிய தகவல்களை எங்களால் பார்க்க முடியும்.
Roblox அல்லாத இணையதளம் அல்லது சேவையில் உள்நுழைய உங்கள் Roblox ID-யைப் பயன்படுத்தி, பின்னர் உங்கள் Roblox கணக்கை நீக்கினால், அந்த இணையதளம் அல்லது சேவைக்கான அணுகலை நீங்கள் இழக்க நேரிடலாம்.
ஆடியோ அம்சங்கள் (13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்)
நீங்கள் Roblox-இன் ஆடியோ அம்சங்களைப் பயன்படுத்தினால், உங்கள் சாதனத்தின் மூலம் சேகரிக்கப்படும் ஆடியோவை நாங்கள் கண்காணிப்போம், சேகரிப்போம், பயன்படுத்துவோம் மற்றும் சேமிப்போம்.
- குரல் வழி உரையாடலை செயல்படுத்த,
- எங்கள் சேவைகளில் துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்களைக் கண்டறிந்து தடுப்பது உட்பட, குரல் சார்ந்த சேவைகளைப் பாதுகாப்பானதாக மாற்ற
- பொருந்தக்கூடிய சட்டத்தின்படி, பயிற்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்குத் தெரிவிக்க
- எங்கள் சேவைகளின் மூலம் படைப்பாளர்கள் மற்றும் பயனர்கள் உருவாக்கும் ஸ்கிரீன் ரெக்கார்டிங்குகள் தொடர்பாக
உங்கள் பிராந்தியத்தில் பொருந்தும் சட்டங்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, இந்தக் கொள்கையின் பிரிவு 7-ஐப் பார்வையிடவும்.இருப்பிடம் சார்ந்த சேவைகள் (13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்)
உங்களுக்கு 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்தால், இருப்பிடம் சார்ந்த சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்வதன் மூலம் வழங்கப்படும் சேவைகளை நாங்கள் வழங்கும்பொருட்டு, உங்கள் புவிஇருப்பிடத் தகவலை நாங்கள் சேகரித்து கண்காணிக்கலாம்.
நீங்கள் ஒவ்வொரு முறை திரும்பும்போதும் உங்களை அடையாளம் காண உங்கள் சாதனம் அல்லது உலாவியில் உள்ள ஒரு அடையாளங்காட்டி மூலம் இந்தத் தகவலை நாங்கள் சேகரிக்கிறோம். உங்கள் இருப்பிடத் தகவலை நாங்கள் சேகரிப்பதை நிறுத்த, உங்கள் சாதன அமைப்புகளைப் புதுப்பிக்கலாம், சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்தலாம் அல்லது எங்கள் மொபைல் ஆப்ஸை நீக்கலாம்.
VR பிளாட்ஃபார்மில் இணைதல்
நீங்கள் ஒரு VR பிளாட்ஃபார்மில் எங்கள் அனுபவங்களில் இணைந்தால், உங்கள் உடல் அசைவு குறித்த தகவல்களை நாங்கள் சேகரிப்போம், இதனால் அந்த அனுபவத்தில் அதைப் பயன்படுத்த முடியும். இந்தத் தகவல் அனுபவத்தை வழங்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தகவலை நாங்கள் சேமிப்பதில்லை.
கேமரா வசதியுள்ள அம்சங்கள் மற்றும் பதிவேற்றங்கள் (13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்)
உங்கள் கேமராவைப் பயன்படுத்த வேண்டிய அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்ட உள்ளடக்கத்தைப் பதிவேற்ற அனுமதிக்கும் Roblox அம்சங்களை நீங்கள் பயன்படுத்தினால், பாதுகாப்புக் காரணங்களுக்காக உள்ளடக்கத்தைச் செயலாக்குவது உட்பட, அந்த அம்சத்தின் நோக்கத்தை நிறைவேற்ற அந்த உள்ளடக்கத்தை நாங்கள் சேகரிப்போம், செயலாக்குவோம் மற்றும் சேமிப்போம். அனிமேஷன் கீ பிரேம்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் வீடியோ உங்கள் சாதனத்திலேயே செயலாக்கப்படுகிறது, மேலும் அது Roblox அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் பகிரப்படாது. கூடுதல் தகவலுக்கு, Roblox ஃபேஷியல் அனிமேஷன் பிரைவசி நோட்டீஸ் ஐப் பார்க்கவும். Roblox ID சரிபார்ப்பை எவ்வாறு பயன்படுதுகிறது என்பதன் மீதான கூடுதல் தகவலுக்கு, Roblox ஃபேஷியல் மீடியா கேப்சர் பிரைவசி நோட்டீஸ் ஐப் பார்க்கவும்.
காண்டாக்ட் இம்போர்ட்டர் (13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்)
நீங்கள் காண்டாக்ட் இம்போர்ட்டர் வசதியைத் தேர்வுசெய்தால், உங்கள் மொபைல் போனில் உள்ள தொடர்புகளின் முதல் பெயர், கடைசிப் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை Roblox-உடன் பகிர்வீர்கள். எங்களது சர்வீஸில் உங்கள் நண்பர்களுடன் இணைவதற்கு இந்த வசதி உதவுகிறது. நீங்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தினால், உங்கள் தொடர்புகளை ஒத்திசைக்க, உங்கள் முகவரிப் புத்தகத்தில் உள்ள தகவல்களை அவ்வப்போது நாங்கள் தானாகவே அணுகி சேகரிப்போம். ஏற்கனவே உள்ள Roblox பயனர்களுடன் பொருந்தினால் மட்டுமே அத்தகைய தகவல்கள் எங்களிடம் வைக்கப்படும். எங்களது காண்டாக்ட் இம்போர்ட்டர் வசதி உங்களுக்கு 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது இருந்தால் மட்டுமே கிடைக்கும், மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் இது கிடைக்காமல் போகலாம்.
கிரியேட்டர் ஈவென்ட்ஸ் (13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்)
நீங்கள் ஒரு கிரியேட்டரால் நடத்தப்படும் விர்ச்சுவல் ஈவென்ட்டில் நீங்கள் சேர்ந்தால், உங்கள் பயனர் பெயர், மின்னஞ்சல் மற்றும் Roblox பயனர் ID போன்ற தரவு அந்த நிகழ்வை நடத்தும் நிறுவனத்துடன் பகிரப்படலாம். அந்த அனுபவத்தில் நீங்கள் உள்நுழைய அனுமதிப்பதற்காக இது செய்யப்படுகிறது. கிரியேட்டர் ஈவென்ட்டின் போது உங்களின் செயல்பாடுகள், அந்த மூன்றாம் தரப்பு தளத்தின் தனியுரிமைக் கொள்கை மற்றும் Roblox சமூகத் தரநிலைகளுக்கு உட்பட்டது. உங்களுக்கு 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது இருந்தால் மட்டுமே கிரியேட்டர் ஈவென்ட்ஸ் கிடைக்கும்.
எங்கள் அனுபவங்களுடன் ஈடுபடுதல்
உங்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், எங்கள் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்கவும், நீங்கள் சேவைகளுடன் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரித்து, அந்தத் தகவலை உங்கள் கணக்குடன் இணைக்கிறோம். உதாரணமாக, நாங்கள் பின்வருபவற்றை செய்யலாம்:
- எங்கள் விதிமுறைகளை மீறுவதைக் கண்டறியவும், அத்தகைய மீறல்களைக் கண்டறியும் எங்கள் திறனை மேம்படுத்தவும் உங்கள் கேம் நிலையிலிருந்து தகவல்களைச் சேகரிக்கலாம்.
- பாதுகாப்பு மற்றும் தற்காப்பு காரணங்களுக்காக உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் போது உங்களின் நடத்தை குறித்த தகவல்களைச் சேகரிக்கலாம்.
- உங்களுக்குப் பிடித்தமான கேம்களைப் பரிந்துரைப்பதற்காக, நீங்கள் விளையாடும் கேம்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம்
- நீங்கள் ஒரு UGC-ஐ வாங்கினால், பகிர்தல், வர்த்தகம் செய்தல் அல்லது அது தொடர்பான பரிவர்த்தனையில் ஈடுபட்டால், உங்கள் பயனர் பெயர் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் போன்ற தகவல்களை அந்த UGC படைப்பாளர் அல்லது அதன் அடுத்தடுத்த உரிமையாளர்களுடன் பகிரலாம்.
- குக்கீகள் மூலம் உங்கள் சாதனத்திலிருந்து தகவல்களைச் சேகரிப்போம் - "குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்கள்" என்பதைப் பார்க்கவும்.
பிற அம்சங்களுக்குச் சந்தா செலுத்துதல் (13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்)
13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனர்களுக்குக் கிடைக்கும் பிற அம்சங்கள் அல்லது செயல்பாடுகளுக்கு நீங்கள் சந்தா செலுத்தும்போது, என்ன தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன மற்றும் அந்தத் தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்த உத்தேசித்துள்ளோம் என்பதைத் தெரிவிப்போம்.
போட்டிகள், விளம்பரங்கள் மற்றும் ஆராய்ச்சி
போட்டிகள் அல்லது விளம்பரங்களில் பங்கேற்பது
நீங்கள் போட்டிகள் அல்லது விளம்பரங்களில் (உதாரணமாக: போட்டிகள், குலுக்கல்கள், பரிசுகள்) பங்கேற்றால், தள்ளுபடிகள் அல்லது பரிசுகளைப் பெற தகுதிபெறுவதற்கு உங்கள் பெயர், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் போன்ற தொடர்புத் தகவல்கள் தேவைப்படலாம். மூன்றாம் தரப்பு வழங்குநரால் வழங்கப்பட்ட கிஃப்ட் கார்டை நீங்கள் பெற்றால், குறிப்பிட்ட தொடர்புத் தகவல்கள் அந்த வழங்குநருடன் பகிரப்படலாம்; மேலும் அவை இந்தக் கொள்கை மற்றும் வழங்குநரின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி பயன்படுத்தப்படும். உலகின் சில இடங்களில், வெற்றியாளர்களைப் பற்றிய தகவல்களைப் பகிரங்கமாகப் பகிர வேண்டும் என்று சட்டம் எங்களைக் கோருகிறது.ஆராய்ச்சியில் பங்கேற்பது
நீங்கள் ஆராய்ச்சி அல்லது ஆய்வுகளில் பங்கேற்கத் தேர்வுசெய்தால், இந்தக் கருத்துக்கணிப்புகள் உங்களின் விருப்பு வெறுப்புகள், அனுபவ ஆர்வங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள், பொதுவான பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள் மற்றும் பிற வாழ்க்கை முறை தகவல்கள் அல்லது விருப்பங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம். இந்தக் கருத்துக்கணிப்புகள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கலாம்.விளம்பரம்
Roblox-இல் விளம்பரங்களைக் காட்டுவதற்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயலாக்குகிறோம். குறிப்பாக, Roblox-இல் உங்களுக்கு எந்த விளம்பரங்களைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பயன்படுத்துகிறோம்.
Roblox-இல் உங்களுக்கு நேரடியாக விளம்பரங்களைக் காட்ட Roblox அதன் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படலாம்.
18 வயதுக்குக் குறைவான பயனர்கள் தனிப்பயனாக்காத விளம்பரங்களை மட்டுமே பார்ப்பார்கள். 18 மற்றும் அதற்கு அதிக வயதுடைய பயனர்கள் Roblox-இல் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களைப் பார்ப்பார்கள் (தேவையான சூழல்களில் ஒப்புதலுடன்). உங்கள் வயது 18 அல்லது அதற்கு மேல் என்றால், உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் காட்டப்பட வேண்டுமா என்பதை Roblox அமைப்புகளில் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
Roblox-இல் விளம்பரங்களை வெளியிட நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் பெயர், மின்னஞ்சல், முகவரி, நிதித் தகவல்கள், வணிகம் மற்றும்/அல்லது வரித் தகவல் போன்ற கூடுதல் தகவல்களை நாங்கள் சேகரிப்போம். உங்களுக்கு விளம்பரக் கணக்கை வழங்குவதும், சம்பந்தப்பட்ட விளம்பரத் திட்டங்களில் உங்களைச் சேர்ப்பதும், பேமெண்ட் தொடர்பான இன்வாய்ஸ்கள் அல்லது தகவல்களை உங்களுக்கு அனுப்புவதும், வரிச் சட்டங்கள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்குவதும் இந்தத் தகவலைச் சேகரிப்பதன் நோக்கமாகும்.
நீங்கள் ஒரு டெவலப்பர் அல்லது கிரியேட்டராக இருந்தால்
Roblox டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் பங்கேற்க, நீங்கள் எங்களுக்கு IRS W-9 படிவத்தை (அமெரிக்க வரி செலுத்துபவர்களுக்கு) அல்லது W-8 படிவத்தை (அமெரிக்கர் அல்லாத வரி செலுத்துபவர்களுக்கு) வழங்க வேண்டும். ஒரு மூன்றாம் தரப்பு விற்பனையாளர் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை வழங்கி உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் கேட்கலாம். இந்த அம்சம் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலதிக தகவலுக்கு, எங்களது டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் பயன்பாட்டு விதிமுறைகளைப் பார்க்கவும்.உங்கள் தகவல்களைச் சேகரிப்பதற்கான பிற நோக்கங்கள்
மேலே பட்டியலிடப்பட்டுள்ள நோக்கங்களுடன் கூடுதலாக, சட்டத்தால் அனுமதிக்கப்பட்டபடி, இந்த பொதுவான நோக்கங்களுக்காகவும் நாங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துகிறோம்:
உங்கள் கணக்கையும் எங்கள் சேவைகளையும் நிர்வகிக்க உங்களை அனுமதிக்க
- உங்கள் Roblox கணக்கை நிர்வகிக்க அல்லது உங்கள் அமைப்புகளை புதுப்பிக்க உங்களை அனுமதிக்க
- எங்கள் சேவைகளைப் பற்றி தெரிவிக்க உங்களுடன் தொடர்பு கொள்ள
உங்களுக்கு விஷயங்களைச் சிறந்ததாக மாற்ற
- எங்கள் சேவையை இயக்க, பராமரிக்க, தனிப்பயனாக்க மற்றும் மேம்படுத்த
- தொடர்புடைய தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்ய
- தொழில்நுட்ப ஆதரவு அல்லது வாடிக்கையாளர் சேவையை வழங்க
எங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் உங்களைப் பாதுகாக்க
- பாதுகாப்புச் சிக்கல்களைக் கண்டறியவும், தீங்கிழைக்கும், ஏமாற்றும் அல்லது சட்டவிரோதமான செயல்களுக்கு எதிராகப் பாதுகாக்கவும், அந்தச் செயலுக்குப் பொறுப்பான எவர் மீதும் வழக்குத் தொடரவும்
- பிழைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து சரிசெய்ய
- பொருத்தமானபடி, உங்களுக்கு அம்சங்களுக்கான அணுகலை வழங்க அல்லது Roblox-க்கான உங்களின் அணுகலைக் கட்டுப்படுத்த
- எங்களது அல்லது எங்கள் பயனர்களின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது தற்காப்பைப் பாதுகாக்க
சட்டம் மற்றும் எங்கள் கொள்கைகளுக்கு இணங்க
- தொடர்புகள் மற்றும் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யவும், மற்றும் பிற இணக்கப் பணிகளை மேற்கொள்ளவும்
- சட்டம், எங்களது பயன்பாட்டு விதிமுறைகள், அல்லது சேவையின் பயன்பாடு குறித்து நாங்கள் விதித்துள்ள வேறு ஏதேனும் கட்டுப்பாடுகளுக்கு இணங்கச் செயல்பட
கோரப்படும்போது தனிப்பட்ட தகவல்களை Roblox-க்கு வழங்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை. இருப்பினும், கோரப்பட்ட தகவல்களை வழங்க நீங்கள் மறுத்தால், எங்களால் சில சேவைகளையும் அம்சங்களையும் உங்களுக்கு வழங்க முடியாமல் போகலாம்.
குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்கள்
குக்கீகள் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள்
பெரும்பாலான இணையதளங்களைப் போலவே, எங்களது சேவைகளைச் சிறப்பாக வழங்க நாங்களும் குக்கீகள் மற்றும் பிற நிலையான இணைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.
குக்கீகள்
குக்கீ என்பது நீங்கள் ஒரு இணையதளத்தைப் பார்வையிடும்போது உங்கள் கணினி அல்லது சாதனத்தில் வைக்கப்படும் ஒரு உரை கோப்பு ஆகும். நீங்கள் செய்யும் செயல்களையும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளையும் (உதாரணமாக: உள்நுழைவுத் தகவல், மொழி, எழுத்துரு அளவு) நினைவில் வைத்திருக்க இது இணையதளத்திற்கு உதவுகிறது. குக்கீகள் உங்கள் அனுபவத்தை மிகவும் வசதியானதாக மாற்றுகின்றன – உதாரணமாக, குக்கீ உங்கள் உள்நுழைவு விவரங்களை நினைவில் வைத்திருந்தால், ஒவ்வொரு முறை தளத்தைப் பார்வையிடும்போதும் அவற்றை மீண்டும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை. சில குக்கீகள் மற்றவற்றை விட நீண்ட காலம் இருக்கும்:
- நீங்கள் பிரவுசரை மூடும் ஒவ்வொரு முறையும் செஷன் குக்கீகள் நீக்கப்படும்
- நிலையான குக்கீகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சாதனத்திலேயே இருக்கும்.
நீங்கள் பார்வையிடும் இணைய சேவையகத்தின் உரிமையாளரால் அமைக்கப்படும் குக்கீ 'முதல் தரப்பு குக்கீ' என்றும், பிற களங்களின் உரிமையாளர்களால் அமைக்கப்படும் குக்கீகள் 'மூன்றாம் தரப்பு குக்கீகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
பிக்சல் டேகுகள்/இணைய பீக்கன்கள்
ஒரு பிக்சல் டேக் அல்லது இணைய பீக்கான் என்பது நீங்கள் ஒரு இணையப் பக்கத்தில் என்ன செய்கிறீர்கள் என்பதை அதன் உரிமையாளருக்குத் தெரிவிக்கும் ஒரு குறியீட்டுத் துண்டாகும் நீங்கள் எந்த இணையப் பக்கங்களைப் பார்வையிட்டீர்கள் அல்லது எந்த விளம்பரங்களைக் கிளிக் செய்தீர்கள் போன்ற தகவல்களைப் பிக்சல் டேகுகள் வழங்குகின்றன.
நாங்கள் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம்
உங்களை அடையாளம் காணவும் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கவும் குக்கீகள் போன்ற தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். நீங்கள் எங்களது தளங்களைப் பார்வையிடும்போதோ அல்லது எங்களது சேவைகளைப் பயன்படுத்தும்போதோ, நாங்களும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடும்.
நீங்கள் பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் மென்பொருள் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம், உதாரணமாக:
- பிரவுசர் அல்லது டிவைஸின் வகை
- எங்களது சேவைகளுக்கு உங்களை இணைத்த அல்லது பரிந்துரைத்த இணையதளம் அல்லது ஆதாரம்
- உங்கள் IP முகவரி, சாதன ID அல்லது உங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்தை அடையாளம் காணும் பிற அடையாளங்காட்டி – நீங்கள் சாதனத்தை மூடும்போது இந்த குக்கீ நீக்கப்படாது
- உங்கள் கணினி அல்லது சாதனத்தின் இயக்க முறைமை (ஆப்பரேட்டிங் சிஸ்டம்)
இந்தத் தொழில்நுட்பங்கள் எங்களை பின்வருபவற்றை செய்ய அனுமதிக்கின்றன:
- உங்கள் விருப்பத்தேர்வுகள், கணக்கு அமைப்புகள் மற்றும் சில லாகின் தகவல்களைப் பதிவுசெய்து வைத்திருக்க (உங்கள் வசதிக்காக, உதாரணமாக, இது நீங்கள் ஒவ்வொரு முறை வரும்போதும் செட்டிங்ஸை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பிற்கும் உதவும்)
- நீங்கள் சர்வீசஸை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களைச் சேகரிக்க, உதாரணமாக, எங்கள் ஆப்பை நீங்கள் எவ்வாறு அல்லது எங்கிருந்து பதிவிறக்கம் செய்தீர்கள் என்பது போன்ற விவரங்கள்
- உங்கள் மொபைல் சாதனத்தில் சாஃப்ட்வேர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த தகவல்களைச் சேகரிக்க
- நீங்கள் எந்த அம்சங்களைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் எங்கள் சர்வீசஸ் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பது பற்றிய தகவல்களைச் சேகரிக்க
- சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டறிவதன் மூலம், பேமெண்ட் மோசடி மற்றும் பிற தவறான செயல்களிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க முயற்சிக்க
- வயது, இருப்பிடம் போன்ற டெமோகிராஃபிக் தகவல்களைச் சேகரிக்க
- இது போன்ற பிற ஃபங்க்ஷன்ஸைச் செய்யவும்.
இந்தத் தனியுரிமைக் கொள்கையில் கொடுக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே நாங்கள் குக்கீகள் அல்லது அது போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.
EEA-வில் குக்கீ உரிமைகள்
நீங்கள் EEA IP முகவரியுடன் எங்கள் வலைதளத்தைப் பார்வையிடும்போது, உங்கள் ஒப்புதலைக் கேட்கும் குக்கீ பேனர் தோன்றும். குக்கீ பேனரில் உள்ள “மேனேஜ் குக்கீ பிரிஃபரன்சஸ்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விருப்பத்தை நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் விருப்பங்களை நாங்கள் குக்கீ வடிவத்தில் சேமிப்போம். இந்த குக்கீ ஒரு வருட காலத்திற்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். மேலதிக தகவலுக்கு, கீழே உள்ள பிரிவு 7-ஐப் பாருங்கள்.
உங்கள் குக்கீ விருப்பங்கள்
Roblox.com-இல், உங்கள் குக்கீ விருப்பங்களை அணுக பக்கத்தின் கீழே உள்ள அடிக்குறிப்பில் இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்யவும். மற்ற அனைத்து தளங்களுக்கும், அதன் அமைப்புகளை அணுக குக்கீ பேனரைக் காட்ட, உங்கள் குக்கீகளை அழித்துவிட்டு பிரவுசரை ரெஃப்ரெஷ் செய்யவும்.
பெரும்பாலான இணைய மற்றும் மொபைல் சாதன பிரவுசர்கள் தானாகவே குக்கீகளை ஏற்றுக்கொள்கின்றன, ஆனால் குக்கீகளை ஏற்காதவாறு அல்லது ஒரு குக்கீ அமைக்கப்படும் முன் உங்களுக்கு எச்சரிக்கை வருமாறு உங்கள் பிரவுசர் அமைப்புகளை நீங்கள் மாற்றலாம்.
பிரவுசர் நிறுவனங்கள் குக்கீகளை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதைப் பற்றி மேலும் அறிய அவற்றின் தகவல்களைப் பயன்படுத்தவும்.
Google Chrome: https://support.google.com/chrome/answer/95647?hl=en-GB,
Microsoft Edge: https://support.microsoft.com/en-us/microsoft-edge/delete-cookies-in-microsoft-edge-63947406-40ac-c3b8-57b9-2a946a29ae09,
Mozilla Firefox:https://support.mozilla.org/en-US/kb/cookies-information-websites-store-on-your-computer,
Safari(டெஸ்க்டாப்): https://support.apple.com/kb/PH5042?locale=en_US,
Safari (மொபைல்): https://support.apple.com/en-us/HT201265,
Android பிரவுசர்: https://support.google.com/nexus/answer/54068,
Opera: https://www.opera.com/help.
என்ற வலைதளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் குக்கீகளைப் பற்றி மேலும் அறியலாம்,https://www.allaboutcookies.org/, இது உங்கள் டிவைஸில் ஏற்கனவே உள்ள குக்கீகளை எவ்வாறு தடுப்பது அல்லது அழிப்பது என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்கும்.பயன்படுத்தப்படும் குக்கீகளைத் தடுப்பதன் மூலம் அல்லது அழிப்பதன் மூலம், உங்கள் சேவை அனுபவத்தை நீங்கள் குறைக்கக்கூடும். உங்களால் லாக்-இன் செய்ய முடியாமல் போகலாம் அல்லது Roblox-ஐ அனுபவிக்க முடியாமல் போகலாம்.
நீங்கள் EEA IP முகவரியுடன் எங்கள் வலைதளத்தைப் பார்வையிடும்போது, உங்கள் ஒப்புதலைக் கேட்கும் குக்கீ பேனர் தோன்றும். குக்கீ பேனரில் உள்ள “மேனேஜ் குக்கீ பிரிஃபரன்சஸ்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விருப்பத்தை நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் விருப்பங்களை நாங்கள் குக்கீ வடிவத்தில் சேமிப்போம். இந்த குக்கீ ஒரு வருட காலத்திற்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள பிரிவு 7-ஐப் பார்க்கவும்.
நிறுவனங்கள் தங்களின் வலைதளங்களில் உங்களைக் கண்காணிப்பதைத் தடுக்க
எங்கள் வலைதளங்களில் விளம்பரம் தொடர்பான கண்காணிப்பை முடக்குமாறு நீங்கள் எங்களை அல்லது மூன்றாம் தரப்பினரைக் கேட்கலாம். இந்தக் கண்காணிப்பை முடக்க, நாங்களோ அல்லது மூன்றாம் தரப்பினரோ உங்கள் பிரவுசரில் ஒரு விலகல் குக்கீயை அமைக்க வேண்டியிருக்கலாம். விளம்பரம் தொடர்பான கண்காணிப்பை முழுமையாக முடக்க விரும்பினால், குக்கீகளை ஏற்றுக்கொள்வதற்கு உங்கள் பிரவுசர் அமைப்புகளை நீங்கள் மாற்ற வேண்டியிருக்கலாம். எங்கள் சேவைகள் "டு நாட் டிராக் (DNT)" சிக்னல்களுக்குப் பதிலளிக்காது என்பதை நினைவில் கொள்க.எங்கள் கார்ப்பரேட் வலைதளங்களில் அல்லது வேலை விண்ணப்பங்களில்
எக்ஸ்பீரியன்ஸ்கள் அல்லது 13 வயதிற்குட்பட்ட பயனர்களைப் பற்றிய தகவல்களை வழங்கும் இந்தத் தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையின் பகுதிகள், கார்ப்பரேட் வலைதளங்களுக்குப் பொருந்தாது.
வேலை வாய்ப்புகள் குறித்து நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களை நாங்கள் கேட்கலாம். அல்லது இந்தத் தகவலுடன் கூடிய CV அல்லது வேலை விண்ணப்பத்தை நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம். உங்களுக்கு கார்ப்பரேட் தொடர்பான தகவல்களை அனுப்ப அல்லது உங்கள் வேலை விண்ணப்பத்திற்குப் பதிலளிக்க இந்தத் தகவலைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு. வருங்கால ஊழியர்களுக்கான Roblox கேரியர் சென்டர் போன்ற ஒரு மெய்நிகர் தளத்தில் நீங்கள் Roblox உடன் ஈடுபடும்போது, அந்த அனுபவத்தை வழங்குவதற்காக அத்தகைய தளம் பதிவு செய்யப்படலாம்.
எங்கள் கார்ப்பரேட் வலைதளங்கள் அவற்றைப் பார்வையிடும் எந்தவொரு பயனருக்கும் பொதுவான நிறுவனத் தகவலை வழங்குகின்றன – அவை corp.roblox.test1709.icu, blog.roblox.test1709.icu மற்றும் அவற்றின் சப்-டொமைன் பெயர்களைப் பயன்படுத்துகின்றன. இந்தத் தளங்களில், Roblox-இன் கார்ப்பரேட் பக்கம், பத்திரிகை தகவல், தொழில் தகவல் மற்றும் பிற பொதுவான வாடிக்கையாளர் தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் கார்ப்பரேட் வலைதளங்கள் எந்தவிதமான அனுபவங்களையும் வழங்குவதில்லை.
உங்கள் தகவலைப் பராமரித்தல்
பாதுகாப்பு நடவடிக்கைகள்
எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட தகவல் அல்லது பிற முக்கியமான தகவல்களை இழப்பு, தவறான பயன்பாடு அல்லது மாற்றத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வைத்துள்ளோம். தகவல் இழப்பு, தவறான பயன்பாடு அல்லது மாற்றம் ஒருபோதும் ஏற்படாது என்று எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாவிட்டாலும், அதைத் தடுக்க நாங்கள் நியாயமான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
இணையத்தில் தகவல்களை அனுப்புவது அல்லது சேமிப்பது 100% பாதுகாப்பானது அல்ல, எனவே நீங்கள் எங்களுடன் பகிரும் எந்தவொரு தகவலின் பாதுகாப்பிற்கும் எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது. பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவு வரை, தற்செயலாகத் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
உங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பிற்கு ஆபத்து இருந்தால் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்
பாதுகாப்பு, தனிநபர் தகவல் பாதுகாப்பு மற்றும் கணக்கு மேலாண்மை பற்றி நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல்கள் அல்லது பிற செய்திகளை அனுப்பலாம். சட்டத்தின் கீழ் தரவு மீறல் எனக் கருதப்படக்கூடிய ஒரு சம்பவத்தைப் பற்றி நாங்கள் அறிந்தால், சட்டத்திற்கு இணங்க நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.உங்கள் தகவலை நாங்கள் எவ்வளவு காலம் வைத்திருப்போம்
குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் வரை உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வைத்திருக்கலாம்; சில நேரங்களில் நீங்கள் Roblox-இன் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும் வைத்திருக்கலாம். உங்கள் தனிப்பட்ட தகவல் எங்களுக்குத் தேவைப்படாதபோது, அந்தத் தகவலை நாங்கள் அடையாளம் காண முடியாதவாறு மாற்றுவோம் அல்லது அழித்துவிடுவோம். நாங்கள் உங்கள் தகவலை வைத்திருக்க வேண்டியதற்கான காரணங்கள் இங்கே உள்ளன:
சிக்கல்களைத் தீர்ப்பதற்காக
- பில்லிங் தகராறுகள் அல்லது விசாரணைகளைத் தீர்ப்பதற்காக நாங்கள் பில்லிங் தகவல் மற்றும் பரிவர்த்தனை வரலாறுகளை வைத்திருக்கிறோம்.
- எந்தவொரு வாடிக்கையாளர் சேவை சிக்கல்களையும் தீர்க்கவும், எங்களது சர்வீஸை வழங்கவும், மேம்படுத்தவும் மற்றும் உருவாக்கவும் பயனர் கணக்கு வரலாற்றை நாங்கள் வைத்திருக்கிறோம்.
எங்கள் சேவைகளைப் பாதுகாப்பானதாக மாற்ற
- Roblox-ஐத் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கும் தேவையற்ற நபர்களைத் தடுப்பது போன்ற, எங்கள் சர்வீஸைப் பாதுகாப்பானதாகவும் உறுதித்தன்மையுடனும் மாற்ற உதவும் எனில், நாங்கள் தகவல்களை வைத்திருக்கலாம்.
சட்ட காரணங்களுக்காக
- சட்ட ரீதியான தற்காப்புகளை நிறுவுதல், தணிக்கைகளை நடத்துதல், முறையான வணிக நோக்கங்களைப் பின்பற்றுதல், எங்கள் ஒப்பந்தங்களை அமல்படுத்துதல், எங்களது உரிமைகளைப் பயன்படுத்துதல் அல்லது சட்டக் கடமைகளுக்கு இணங்குதல் போன்ற சட்ட காரணங்களுக்காக நாங்கள் தகவல்களை வைத்திருக்கலாம்.
மற்ற பயனர்கள் உங்கள் தகவலை வைத்திருக்க அனுமதித்தல்
- மற்ற பயனர்கள் எங்களது பிளாட்ஃபார்மில் பொதுப்படையாகப் பகிரப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் விர்ச்சுவல் பொருட்களை வைத்திருக்கலாம் (உதாரணமாக, நீங்கள் ஒரு விர்ச்சுவல் சர்ட்டை உருவாக்கி அதை மற்றொரு பயனருக்கு விற்றால், அந்த விர்ச்சுவல் சர்ட்டை பிளாட்ஃபார்மில் தொடர்ந்து இருக்கும், ஏனெனில் இப்போது மற்றொரு பயனர் அதை வைத்துள்ளார்).
உங்கள் தகவலை நாங்கள் எங்கே சேமிக்கிறோம்
Roblox அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டது. உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்களை அமெரிக்காவில் உள்ள எங்களது பாதுகாப்பான சர்வர்களுக்கு அனுப்புகிறோம். அங்கே நாங்கள் அதைச் சேமித்து பயன்படுத்துகிறோம். தகவலைச் செயலாக்க இந்தச் சேமிப்பு எங்களுக்குத் தேவையானது.
நாங்கள் உங்களிடமிருந்து சேகரிக்கும் தகவல்களை எங்களது மற்ற அலுவலகங்களுக்கும், இந்தத் தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையின் பிரிவு 4-இல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாம் தரப்பினருக்கும் மாற்றலாம் – இவை உங்கள் பிராந்தியத்திற்கு வெளியே இருக்கலாம். எங்களது முகவர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களும் உங்கள் தகவலைப் பயன்படுத்தலாம். அமெரிக்கா அல்லது பிற நாடுகளின் தரவு பாதுகாப்புச் சட்டங்கள் நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டங்களுக்கு இணையாக இருக்காது.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எங்கு மாற்றினாலும், உங்கள் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுப்போம். பொருந்தக்கூடிய சட்டங்கள் தேவைப்படும் பட்சத்தில், எல்லை தாண்டிய தரவு மாற்றங்களைச் செயல்படுத்த முறையான சர்வதேசத் தரவு பரிமாற்ற வழிமுறையை நாங்கள் பயன்படுத்துவோம்.
தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கை மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள்
நாங்கள் அவ்வப்போது இந்தத் தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையைப் புதுப்பிப்போம், எனவே இந்தப் பக்கத்தை நீங்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். இந்தப் பக்கத்தின் கீழே மிகச் சமீபத்திய பதிப்பின் தேதியை நாங்கள் எப்போதும் வெளியிடுவோம்.
நாங்கள் ஏதேனும் முக்கிய மாற்றங்களைச் செய்தால், மின்னஞ்சல் மூலமாகவோ (எங்களிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் மின்னஞ்சல் முகவரி இருந்தால்) அல்லது மாற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பு இந்த வலைதளம் அல்லது செயலியில் ஒரு முக்கிய அறிவிப்பைக் காட்டுவதன் மூலமாகவோ உங்களுக்குத் தெரிவிப்போம். இந்தத் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கொள்கையில் முன்பு தெரிவிக்கப்படாத உங்கள் தனிப்பட்ட தகவலின் புதிய முக்கியப் பயன்பாடுகளை இந்த மாற்றங்கள் உள்ளடக்கியிருந்தால், சட்டப்படி தேவைப்படும் இடங்களில் உங்கள் ஒப்புதலை அல்லது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் ஒப்புதலைப் பெறுவோம்.நீங்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் கூடுதல் தகவல்கள்
நீங்கள் சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் வசிப்பவராக இருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவல் அல்லது தரவு செயலாக்கத்திற்கு பொருந்தும் உரிமைகள் குறித்து உங்களுக்கு கூடுதல் விருப்பங்கள் இருக்கலாம். இந்தப் பிரிவு நீங்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் கூடுதல் தகவல்களைக் கொண்டுள்ளது.
உங்கள் உரிமைகளைச் செயல்படுத்த அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல் குறித்து மற்றொரு கோரிக்கையை விடுக்க நீங்கள் விரும்பினால், அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல் குறித்து நாங்கள் மற்றொரு கோரிக்கையைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், வாடிக்கையாளர் ஆதரவு படிவத்தைப் பூர்த்தி செய்யவும். நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால், உங்கள் பெற்றோர் அல்லது காப்பாளரை இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யச் சொல்லுங்கள்.
நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால்
நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால்,கூடுதல் தகவலுக்கு எங்களது அமெரிக்க மாகாண தனியுரிமைக் கொள்கை இணைப்பு பக்கத்தைப் பார்வையிடவும்.நீங்கள் கொரியக் குடியரசில் வசிப்பவராக இருந்தால்
நீங்கள் கொரியாவில் இருந்தால், கூடுதல் தகவல்கள் கொரிய குடியரசு பயனர்களுக்கான தனியுரிமைக் கொள்கை இணைப்பில் உள்ளன.நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி (EEA), ஐக்கிய இராச்சியம் (UK) அல்லது சுவிட்சர்லாந்தில் வசிப்பவராக இருந்தால்
தனிப்பட்ட தகவல்களின் வகைகள் மற்றும் தரவு செயலாக்க நோக்கங்கள்
எங்கள் வலைதளங்கள் மற்றும் ஆப்ஸைைப் பார்வையிடும்போது, மற்றும்/அல்லது எங்களது சேவைகள் மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது, கீழே குறிப்பிடப்பட்டுள்ள சட்ட அடிப்படைகளுக்கு உட்பட்டு பின்வரும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயலாக்கலாம்:
Roblox கணக்கை அமைத்தல்
- உங்கள் கணக்கை உருவாக்க பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல். இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்திறன்") ஆகும்.
- கூடுதல் சரிபார்ப்பு மற்றும்/அல்லது சில அம்சங்களைச் செயல்படுத்த நீங்கள் எங்களுக்கு வழங்கிய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தகவல்கள். இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்திறன்") மற்றும் f ("முறையான ஆர்வம்") GDPR. பாதுகாப்பான மற்றும் உறுதியான சர்வீஸை வழங்குவதில், குறிப்பாகக் குழந்தைகளைப் பாதுகாப்பதில் Roblox-க்கு முறையான ஆர்வம் உள்ளது.
- நீங்கள் ஒரு போன் நம்பரை வழங்க விரும்பினால், பாதுகாப்பு மற்றும் கணக்கு அணுகல் நோக்கங்களுக்காக அந்த போன் நம்பரை நாங்கள் பயன்படுத்துவோம்; இது மொபைல் மூலம் லாக்-இன் செய்யவும் மற்றும் தொலைந்த அல்லது மறந்த கடவுச்சொல்லை மீட்டெடுக்கவும் உங்களை அனுமதிக்கும். மோசடியைத் தடுக்கவும், உங்களை அல்லது உங்கள் வயர்லெஸ் சாதனத்தை அடையாளம் காண அவர்களுக்கு உதவுவதற்காகவும், உங்கள் வணிக உறவின் காலத்திற்கு, உங்கள் கணக்கு மற்றும் உங்கள் வயர்லெஸ் சாதனம் பற்றிய தகவல்களை Roblox அல்லது அதன் சேவை வழங்குநருக்குப் பயன்படுத்த அல்லது வெளியிட உங்கள் வயர்லெஸ் கேரியருக்கு நீங்கள் அங்கீகாரம் அளிக்கிறீர்கள். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல்”) மற்றும் f (“முறையான ஆர்வம்”) GDPR. உங்கள் மொபைல் சாதனம் மூலம் எங்களது சேவைகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிப்பதிலும், பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மற்றும் மோசடியைத் தடுப்பதிலும் எங்களுக்கு முறையான ஆர்வம் உள்ளது. கூடுதலாக, உங்கள் ஒப்புதலுடன், Roblox-ஐப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு உங்களை ஒரு நண்பராகப் பரிந்துரைக்க உங்கள் போன் நம்பரை நாங்கள் பயன்படுத்தலாம். உங்கள் தொலைபேசி எண்ணின் அடிப்படையில் நண்பர் பரிந்துரைகள் மற்றும் கண்டறியும் தன்மைக்கான சட்டப்பூர்வ அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு a GDPR (“ஒப்புதல்”).
Roblox-இல் வாங்குபவை
- உங்களுக்காகவோ அல்லது மற்றொரு பயனருக்காகவோ நீங்கள் 'டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச்'-இல் பங்கேற்கும்போது அல்லது Robux அல்லது பிரீமியம் சந்தாக்களை வாங்கும்போது, உங்கள் பெயர், பில்லிங் முகவரி, கிரெடிட் கார்டு அல்லது பிற கட்டணத் தகவல் மற்றும் பில்லிங் தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர் மூலம் உங்கள் கிரெடிட் கார்டு எண் போன்ற தகவல்களைச் சேமிக்க நீங்கள் விரும்பலாம்; அத்தகைய சந்தர்ப்பங்களில் அந்தத் தகவல் Roblox-ஆல் சேமிக்கப்படாது; அது அந்த மூன்றாம் தரப்பு கூட்டாளரிடம் சேமிக்கப்படும். மற்றொரு Roblox பயனர் சார்பாக நீங்கள் Robux வாங்கினால், பரிவர்த்தனை குறித்து உங்களுடன் தொடர்புகொள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் போன்ற தொடர்புத் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“ஒப்பந்தத்தின் செயல்பாடு”). நாங்கள் பில்லிங் முகவரிகளைச் சேகரிக்கலாம் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் கொள்முதல் மற்றும் கட்டண வரலாற்றைத் தக்கவைக்கலாம். இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான சட்ட அடிப்படை, பில்லிங் மற்றும் விசாரணைகளைத் தீர்க்கும் திறனைப் பெறுவதற்கான எங்களது முறையான ஆர்வம் ஆகும், பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு f GDPR (“முறையான ஆர்வம்”).
உள்ளடக்கத்தை இடுகையிடுதல்
- Roblox-இல் பொதுவான சாட்கள், ஃபோரம்கள், குரூப் சுவர்கள், தனிப்பட்ட பதிவுகள் போன்றவற்றின் மூலம் நீங்கள் பதிவிடும் அல்லது அனுப்பும் கருத்துகள் அல்லது செய்திகள். அநாகரீகமான சொற்கள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிற பொருத்தமற்ற உரையாடல்களை அகற்றும் நோக்கத்திற்காக, இந்தத் தகவல்களைக் கண்காணிக்கவும், வடிகட்டவும் மற்றும் சீரமைக்கவும் நாங்கள் இந்தத் தகவலைச் செயலாக்குகிறோம். கூடுதலாக, எங்களது வடிகட்டி தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்-வடிகட்டப்பட்ட கருத்துகள் மற்றும் செய்திகளை நாங்கள் பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை, நீங்கள் பதிவிடும் சட்டவிரோதக் கருத்துகளால் ஏற்படக்கூடிய பொறுப்பு கோரிக்கைகளில் இருந்து எங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான Roblox-இன் முறையான ஆர்வம் ஆகும், பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு. f GDPR (“முறையான ஆர்வம்”). ஃபோரம்கள் மற்றும் எங்களால் வழங்கப்படும் இது போன்ற பிற வழிகளில் நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும், மற்ற பயனர்கள் உட்பட இந்த ஃபோரமை அணுகக்கூடிய எவருக்கும் கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் பதிவிடும் தனிப்பட்ட தகவல்களை இந்த ஃபோரம்களின் பிற பயனர்கள் படிக்கலாம், சேகரிக்கலாம் அல்லது பயன்படுத்தலாம்; மேலும் கோரப்படாத செய்திகளை அனுப்பவும் அவை பயன்படுத்தப்படலாம்.
கேள்விகள் கேட்பது அல்லது தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவது
- எங்களது வாடிக்கையாளர் சர்வீஸைத் தொடர்பு கொள்வது தொடர்பான தகவல்கள், உதாரணமாக நீங்கள் ஒரு சிக்கலைப் புகாரளிக்கும் போது, கேள்விகள், கவலைகள் அல்லது கருத்துகளைச் சமர்ப்பிக்கும் போது. உங்கள் தொடர்புகளுக்குப் பதிலளிக்கவும், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அல்லது பிற வாடிக்கையாளர் ஆதரவை வழங்கவும் உங்களது மின்னஞ்சல் முகவரி, உங்கள் பெயர் மற்றும் உங்கள் விசாரணை அல்லது கவலை தொடர்பான தகவல்களை நாங்கள் செயலாக்கலாம். இந்தச் செயலாக்க நடவடிக்கை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR ("ஒப்பந்தத்தின் செயல்திறன்"), எங்களது வாடிக்கையாளர் சர்வீஸைத் தொடர்பு கொள்வதற்கான ஆரம்ப நோக்கத்தைப் பொறுத்து.
Roblox அம்சங்களைப் பயன்படுத்துதல்
- உங்கள் கணக்கில் நீங்கள் சேர்க்கும் சமூக ஊடக இணைப்புகள். நீங்கள் இந்த அம்சங்களைப் பயன்படுத்தும்போது, உங்கள் சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து சில தகவல்கள் Roblox-ஆல் அணுகப்படலாம் அல்லது அதனுடன் பகிரப்படலாம். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படைகள் பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்திறன்") ஆகும். மூன்றாம் தரப்பு இணையதளம் அல்லது சர்வீஸில் லாக்-இன் செய்ய உங்கள் Roblox சான்றுகளை நீங்கள் பயன்படுத்தி, பின்னர் உங்கள் Roblox கணக்கை நீக்கினால், அத்தகைய மூன்றாம் தரப்பு இணையதளம் அல்லது சர்வீஸிற்கான அணுகலை நீங்கள் இழக்க நேரிடும்.
- நீங்கள் Roblox-இன் ஆடியோ அம்சங்களைப் பயன்படுத்தும்போது, வாய்ஸ் சேவைகள் போன்ற அம்சங்களைச் செயல்படுத்தவும் மற்றும் Roblox-ஐப் பாதுகாப்பானதாக மாற்றவும் உங்களது ஆடியோ பதிவை நாங்கள் சேகரிக்கலாம், செயலாக்கலாம் மற்றும் சேமிக்கலாம். EEA பயனர்களின் பிரைவேட் சர்வர் வாய்ஸ் சாட் பதிவுகளைப் பயன்படுத்தி, பயிற்சி அளிப்பதிலோ அல்லது தயாரிப்பு மேம்பாட்டிலோ நாங்கள் ஈடுபட மாட்டோம். தரவுக்கான அடிப்படைகள் பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b (“ஒப்பந்தத்தின் செயல்திறன்”) GDPR மற்றும் பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம். 1 உட்பிரிவு f (“முறையான ஆர்வம்”). உங்கள் ஒப்புதலுடன், பயிற்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்காக நாங்கள் வாய்ஸ் பதிவுகளைப் பயன்படுத்துவோம். பயிற்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்காக இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம்் 1 உட்பிரிவு a (“ஒப்புதல்”) ஆகும்.
- நீங்கள் இருப்பிட அடிப்படையிலான சேவைகளைக் (13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்கள்) கோரும்போது அல்லது அதற்குச் சம்மதிக்கும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்வதைச் சார்ந்திருக்கும் சேவைகளை வழங்குவதற்காக, உங்கள் புவிஇருப்பிடத் தகவலை நாங்கள் சேகரிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்காக உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குதல் அல்லது விளம்பரங்களைத் தனிப்பயனாக்குதல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். நீங்கள் ஒவ்வொரு முறை திரும்பும்போதும் உங்களை அடையாளம் காண உங்கள் சாதனம் அல்லது உலாவியில் உள்ள ஒரு அடையாளங்காட்டி மூலம் இந்தத் தகவலை நாங்கள் சேகரிக்கிறோம். எங்கள் இருப்பிடத் தகவலைச் சேகரிப்பதை நிறுத்துவதற்கு, உங்கள் சாதனத்தின் அமைப்புகளைப் புதுப்பிக்கலாம், சர்வீஸைப் பயன்படுத்துவதை நிறுத்தலாம் அல்லது எங்கள் மொபைல் ஆப்ஸ் நிறுவலை நீக்கலாம். இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்திறன்") ஆகும்.
- நீங்கள் ஒரு VR பிளாட்ஃபார்மில் எங்களது அனுபவங்களில் இணையும்போது, அந்த அனுபவத்தில் உங்கள் அசைவுகளைப் பிரதிபலிப்பதற்காக உங்களது உடல் அசைவுத் தகவல்களை நாங்கள் சேகரிப்போம். இந்தத் தகவல் சேவையை வழங்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்றும் சேமிக்கப்படுவதில்லை. இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்திறன்") ஆகும்.
- ஒரு கிரியேட்டரால் நடத்தப்படும் விர்ச்சுவல் நிகழ்வில் நீங்கள் சேர்ந்தால், உங்கள் பயனர்பெயர், மின்னஞ்சல் மற்றும் Roblox பயனர் ID போன்ற தரவுகள் நிகழ்வுகளை நடத்தும் மூன்றாம் தரப்பு தளத்துடன் பகிரப்படலாம். அத்தகைய தரவு நீங்கள் அந்த அனுபவத்தில் லாக்-இன் செய்ய அனுமதிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கிரியேட்டர் நிகழ்வின் போது உங்களது செயல்பாடுகள், அந்த மூன்றாம் தரப்பு தளத்தின் தனியுரிமைக் கொள்கை மற்றும் சமூகத் தரநிலைகளுக்கு உட்பட்டது. இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்திறன்") மற்றும் எங்கள் சேவையின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை ஆதரிக்க f ("முறையான ஆர்வம்") GDPR.
- உங்கள் கேமரா அல்லது உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதைப் பயன்படுத்த வேண்டிய கூடுதல் அம்சங்களுக்குத் தேவையான தகவல்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோ உட்பட, உங்களது தனிப்பட்ட தகவலைக் கொண்டிருக்கும். இந்த அம்சங்களைப் பயன்படுத்தவும், உங்களது தனிப்பட்ட தகவலைக் கொண்டுள்ள உள்ளடக்கத்தைப் பதிவேற்றவும் நீங்கள் முடிவு செய்தால், அந்த அம்சத்தின் நோக்கத்தை நிறைவேற்றத் தேவையான காலம் வரை மட்டுமே அந்த உள்ளடக்கத்தை நாங்கள் சேகரிப்போம், செயலாக்குவோம் மற்றும் சேமிப்போம். இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்திறன்") ஆகும். ID சரிபார்ப்பு போன்ற சில பதிவேற்றங்களுக்கு, உங்களது ஒப்புதலின் அடிப்படையில் நீங்கள் பதிவேற்றும் தரவை Roblox செயலாக்குகிறது, பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு a அல்லது பிரிவு 9 துணைப்பிரிவு 2 வாக்கியம் a (“ஒப்புதல்”) ஆகும். கூடுதல் தகவலுக்கு,Roblox ஃபேசியல் அனிமேஷன் பிரைவசி நோட்டீஸ் மற்றும் Roblox ஃபேசியல் மீடியா கேப்சர் பிரைவசி நோட்டீஸ் ஆகியவற்றைப் பார்க்கவும்.
- குழந்தைகளைத் தவிர மற்ற பயனர்களுக்குக் கிடைக்கக்கூடிய பிற அம்சங்கள் அல்லது செயல்பாடுகளுக்குத் தேவையான தகவல்கள். எங்கள் சேவைகளில் அவ்வப்போது பிற அம்சங்கள் அல்லது செயல்பாடுகளை நாங்கள் வழங்கலாம், மேலும் அத்தகைய அம்சங்கள் தொடர்பாக நீங்கள் தனிப்பட்ட தகவலைச் சமர்ப்பிக்கலாம் அல்லது பதிவேற்றலாம். அத்தகைய அம்சங்களுக்காகச் சேகரிக்கப்படும் தரவு மற்றும் அவற்றின் நோக்கம் ஆகியவை தரவு சேகரிக்கப்படும் நேரத்தில் தெளிவாகத் தெரியும். இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்திறன்") ஆகும்.
- நீங்கள் காண்டாக்ட் இம்போர்ட்டர் அம்சத்தைத் தேர்வுசெய்தால், எங்கள் சேவையில் நீங்கள் பதிவுசெய்யும் போதோ அல்லது பிற நேரங்களிலோ, உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள முகவரிப் புத்தகத்தில் உள்ள உங்கள் தொடர்புகளின் முதல் மற்றும் கடைசிப் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை Roblox-உடன் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள். எங்களது சர்வீஸில் உங்கள் நண்பர்களுடன் இணைவதற்கு இந்த வசதி உதவுகிறது. இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“ஒப்பந்தத்தின் செயல்பாடு”).
- எங்களது எக்ஸ்பீரியன்ஸ்களுடன் தொடர்புகொள்வது. உங்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், எங்கள் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்கவும், நீங்கள் சேவைகளுடன் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரித்து, அந்தத் தகவலை உங்கள் கணக்குடன் இணைக்கிறோம். உதாரணமாக, எங்கள் விதிமுறைகளை மீறுவதைக் கண்டறியவும் மற்றும் அத்தகைய மீறல்களைக் கண்டறியும் எங்களது திறனை மேம்படுத்தவும் ஒரு பயனரின் கேம் நிலையிலிருந்து தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம்; பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக உங்கள் டிவைஸுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது உங்கள் நடத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம்; உங்களுக்கு ஒத்த பரிந்துரைகளை வழங்க உங்கள் தேடல் வரலாற்றிலிருந்து தகவல்களைச் சேகரிக்கலாம்; நீங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட பொருளைப் பெற்றால், அல்லது நீங்கள் வாங்குதல், பகிர்தல், வர்த்தகம் செய்தல் அல்லது UGC தொடர்பான பரிவர்த்தனையில் ஈடுபட்டால், உங்கள் பயனர்பெயர் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் போன்ற தகவல்களை UGC கிரியேட்டர் அல்லது அடுத்தடுத்த உரிமையாளர்களுடன் பகிரலாம். இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b (“ஒப்பந்தத்தின் செயல்திறன்”) மற்றும் f (“முறையான ஆர்வம்”). பாதுகாப்பு அல்லது மதிப்பாய்வு நோக்கங்களுக்காக எங்கள் அனுபவங்களுடனான உங்கள் தொடர்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு f ("முறையான ஆர்வம்").
போட்டிகள், விளம்பரங்கள் மற்றும் ஆராய்ச்சி
- நீங்கள் தன்னார்வ ஆராய்ச்சி அல்லது கருத்துக்கணிப்புகள் அல்லது ஆய்வகளில் பதிலளிக்கும்போது அல்லது பங்கேற்கும்போது. இந்தக் கருத்துக்கணிப்பு உங்கள் விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள், அனுபவ ஆர்வங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள், பொதுவான பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள் மற்றும் பிற வாழ்க்கைமுறை தகவல்கள் அல்லது விருப்பங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம். இந்தக் கருத்துக்கணிப்புகள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கலாம். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு a GDPR (“ஒப்புதல்”).
- எங்கள் சேவையில் நாங்கள் அவ்வப்போது நடத்தக்கூடிய அல்லது ஸ்பான்சர் செய்யக்கூடிய போட்டிகள், போட்டிகள், ஸ்வீப்ஸ்டேக்குகள், கிவ்அவேகள், பரிசு குலுக்கல்கள் அல்லது பிற விளம்பரங்களில் நீங்கள் பங்கேற்பது தொடர்பான தகவல்கள். பரிசு வழங்கும் நோக்கங்களுக்காக சில தொடர்புத் தகவல்களையும் (உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும்/அல்லது தொலைபேசி எண் போன்றவை), அத்துடன் குறிப்பிட்ட விளம்பரத்திற்குத் தேவையான பிற தகவல்கள் அல்லது உள்ளடக்கத்தையும் நாங்கள் செயலாக்கலாம். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“ஒப்பந்தத்தின் செயல்பாடு”).
விளம்பரம்
- Roblox-இல் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைத் தனிப்பயனாக்க நாங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குகிறோம். Roblox-இல் உங்களுக்கு எந்த விளம்பரங்களைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, கூட்டாளர்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் மற்றும் பெறும் தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த நடைமுறைகள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்கி தனிப்பயனாக்கிய விளம்பரங்களைக் காண்பிப்பதை உள்ளடக்கியிருக்கும் வரையில், அந்தச் செயலாக்கத்திற்கான சட்டப்பூர்வ அடிப்படை: பிரிவு 6, பகுதி 1 வாக்கியம். 1 உட்பிரிவு a GDPR (“ஒப்புதல்”). Roblox-இல் 18 வயதுக்குக் குறைவான பயனர்களுக்கு விளம்பரங்களை நாங்கள் தனிப்பயனாக்கம் செய்வதில்லை. Roblox-இல் தனிப்பயனாக்காத விளம்பரங்களைக் காட்டுவதற்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயலாக்குகிறோம். இந்த நடைமுறைகள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதை உள்ளடக்கியிருக்கும் வரையில், அந்தச் செயலாக்கத்திற்கான சட்டப்பூர்வ அடிப்படை: பிரிவு 6, பகுதி 1 வாக்கியம். 1 உட்பிரிவு f GDPR (“முறையான ஆர்வம்”).
- Roblox-இல் உங்களுக்கு நேரடியாக விளம்பரங்களைக் காட்ட Roblox அதன் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படலாம். இந்த நடைமுறைகள் தனிப்பயனாக்கிய விளம்பரங்களைக் காண்பிப்பதற்காக தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதை உள்ளடக்கியிருக்கும் வரையில், அந்தச் செயலாக்கத்திற்கான சட்டப்பூர்வ அடிப்படை: பிரிவு 6, பகுதி 1 வாக்கியம். 1 உட்பிரிவு. a GDPR (“ஒப்புதல்”). இந்த நடைமுறைகள் தனிப்பயனாக்காத விளம்பரங்களைக் காண்பிப்பதற்காக தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதை உள்ளடக்கியிருக்கும் வரையில், அந்தச் செயலாக்கத்திற்கான சட்டப்பூர்வ அடிப்படை: பிரிவு 6, பகுதி 1 வாக்கியம். 1 உட்பிரிவு f GDPR (“முறையான ஆர்வம்”).
- உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றிச் சேகரிக்கப்பட்ட தகவல்களை, விளம்பரங்களின் செயல்திறனை அளவிடவும் மேம்படுத்தவும் Roblox செயலாக்கும். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு f GDPR (“முறையான ஆர்வம்”).
- புதிய பயனர்களை எங்களது இணையதளங்களுக்குக் கொண்டு வருவதற்கும், எங்களது பயனர் எண்ணிக்கையைப் பராமரிக்கவும் மற்றும் அதிகரிக்கவும், பிற தளங்கள் மற்றும் செயலிகளில் (உதாரணமாக, சமூக ஊடகத் தளங்கள் வழியாக) எங்களது சேவைகளை சந்தைப்படுத்த, நாங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்கலாம். இந்த நடைமுறைகள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதை உள்ளடக்கியிருக்கும் வரையில், அந்தச் செயலாக்கத்திற்கான சட்டப்பூர்வ அடிப்படை: பிரிவு 6, பகுதி 1 வாக்கியம். 1 உட்பிரிவு a GDPR (“ஒப்புதல்”).
- Roblox-இல் விளம்பரங்களை வெளியிட நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்காக ஒரு விளம்பரக் கணக்கை உருவாக்கவும், சம்பந்தப்பட்ட திட்டத்தில் உங்களைச் சேர்க்கவும், இன்வாய்ஸ்கள் அல்லது பேமெண்ட் தொடர்பான தகவல்களை உங்களுக்கு அனுப்பவும் கூடுதல் தகவல்களை (உங்கள் பெயர், மின்னஞ்சல், முகவரி, நிதித் தகவல்கள், வணிகம் மற்றும்/அல்லது வரித் தகவல் போன்ற) நாங்கள் சேகரிப்போம். இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“ஒப்பந்தத்தின் செயல்பாடு”). நாங்கள் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் கொள்முதல் மற்றும் கட்டண வரலாற்றையும் வைத்திருக்கலாம். இந்தத் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதற்கான சட்ட அடிப்படை, பின்விளைவுத் தகராறுகள் மற்றும் விசாரணைகளைத் தீர்க்க முடிவதில் எங்களுக்கிருக்கும் முறையான ஆர்வம் ஆகும், பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு f GDPR (“முறையான ஆர்வம்”). எங்கள் வரிச் சட்டங்களின் கீழ் வரும் கடமைகள் உள்ளிட்ட சட்டப்பூர்வக் கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் தகவல்களை நாங்கள் சேகரித்துத் தக்கவைத்துக் கொள்வோம். இந்தத் தனிப்பட்ட தகவலைச் செயலாக்குவதற்கான அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு c GDPR (“சட்டப்பூர்வக் கடமை”).
நீங்கள் ஒரு டெவலப்பர் அல்லது கிரியேட்டராக இருந்தால்
- எங்கள் Roblox டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் பங்கேற்பதற்குத் தேவையான தகவல்கள், அதாவது IRS W-9 படிவம் (அமெரிக்க வரி செலுத்துபவர்களுக்கு) அல்லது W-8 படிவத்தை (அமெரிக்கர் அல்லாத வரி செலுத்துபவர்களுக்கு) வழங்க வேண்டும். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு f GDPR (“முறையான ஆர்வம்”) அமெரிக்கா சட்டத் தேவைகள் தொடர்பானவை. சட்டப்பூர்வத் தேவைகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவின் பணமோசடி எதிர்ப்புச் சட்டங்களுக்கு இணங்குவது எங்களது முறையான ஆர்வமாகும்.
உங்கள் தகவல்களைச் சேகரிப்பதற்கான பிற நோக்கங்கள்
பின்வருபவை உட்பட பிற முறையான நோக்கங்களுக்காக நாங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துச் செயலாக்குகிறோம். உங்கள் கணக்கையும் எங்களது சேவைகளையும் நீங்கள் நிர்வகிக்க அனுமதிப்பதற்கும், உங்களுக்கான விஷயங்களைச் சிறப்பாக மாற்றுவதற்கும், எங்களது தளத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் உங்களைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் தரவுகளைச் சேகரித்துச் செயலாக்குகிறோம். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு f GDPR (“முறையான ஆர்வம்”). நாங்கள் சட்டத்திற்கும் எங்களது கொள்கைகளுக்கும் இணங்குவதற்காகவும் தரவுகளைப் பயன்படுத்துகிறோம். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“ஒப்பந்தத்தின் செயல்திறன்”) மற்றும் பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“ஒப்பந்தத்தின் செயல்திறன்”) ஆகும்.
குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்கள்
- நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் சில குக்கீகள் இணையதளத்தின் அடிப்படைச் செயல்பாட்டிற்கு அவசியமானவை, எனவே அவற்றை செயலிழக்கச் செய்ய முடியாது. இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“ஒப்பந்தத்தின் செயல்திறன்”) மற்றும் பிரிவு. 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு f GDPR (“முறையான ஆர்வம்”), ஏனெனில் சேவைகளின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில் எங்களுக்கு முறையான ஆர்வம் உள்ளது. நீங்கள் முன்னதாக அத்தகைய பயன்பாட்டிற்குச் சம்மதம் தெரிவித்திருந்தால் மட்டுமே நாங்கள் விருப்பரீதியிலானு குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் EEA IP முகவரியுடன் எங்கள் வலைதளத்தைப் பார்வையிடும்போது, உங்கள் ஒப்புதலைக் கேட்கும் குக்கீ பேனர் தோன்றும். குக்கீ பேனரில் உள்ள “மேனேஜ் குக்கீ பிரிஃபரன்சஸ்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விருப்பத்தை நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் விருப்பங்களை நாங்கள் குக்கீ வடிவத்தில் சேமிப்போம். இந்த குக்கீ ஒரு வருட காலத்திற்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு a GDPR (“ஒப்புதல்”). கூடுதலாக, உங்கள் பிரவுசர் அமைப்புகளைப் பயன்படுத்தியும் நீங்கள் குக்கீகளை நிர்வகிக்கலாம். குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு மேலே உள்ள பிரிவு 3-ஐப் பார்க்கவும்.
எங்கள் கார்ப்பரேட் வலைதளங்களில் அல்லது வேலை விண்ணப்பங்களில்
- உங்களால் வழங்கப்பட்ட உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, வேலைவாய்ப்பு விவரங்கள், CV, ரெஸ்யூம் அல்லது உங்களது வேலைவாய்ப்பு வரலாறு குறித்த பிற விவரங்கள் போன்ற உங்கள் வேலை விண்ணப்பம் தொடர்பான தகவல்கள். உங்கள் வேலை விண்ணப்பத்தைச் செயலாக்குவதற்கும் அதற்குப் பதிலளிப்பதற்கும் இந்தத் தகவலை நாங்கள் செயலாக்குவோம். வருங்கால ஊழியர்களுக்கான Roblox கேரியர் சென்டர் போன்ற ஒரு மெய்நிகர் தளத்தில் நீங்கள் Roblox உடன் ஈடுபடும்போது, அந்த அனுபவத்தை வழங்குவதற்காக அத்தகைய தளம் பதிவு செய்யப்படலாம். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“எங்களுடன் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கு தேவையானது”) ஆகும்.
தானியங்கி முடிவெடுத்தல் (ஆட்டோமேட்டட் டிசிஷன் மேக்கிங்)
உங்களைப் பற்றிய சட்ட ரீதியான விளைவுகளை உருவாக்கும் அல்லது அதே போன்ற குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் தானியங்கி முடிவெடுத்தலுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை என்பதைக் கருத்தில் கொள்க.
குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பெற்றோரின் சம்மதம்
13 வயதிற்குட்பட்ட பயனர்கள் சர்வீஸில் பதிவு செய்யும்போது, (இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, ஒரு "குழந்தை") அவர்களது கணக்கு இயல்பாகவே தனியுரிமைப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மாற்றப்படும் என்பதைக் கருத்தில் கொள்க. இதன் பொருள், இந்தப் பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் சில வகை அறிவிப்பு எச்சரிக்கைகளுக்கான அணுகல் இருக்காது.
Robloxஸில் ஒரு குழந்தை ஒரு கணக்கை உருவாக்கும்போது, நாங்கள் பயனர் பெயர், கடவுச்சொல், பிறந்த தேதி மற்றும் பாலினம் (பாலினம் விருப்பரீதியிலானது) ஆகியவற்றைச் செயலாக்கலாம். கணக்கு உருவாக்கத்தைத் தவிர்த்து, பயனர்கள் விருப்பப்பட்டால் பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியை வழங்கலாம். பயனர் சேவையை அணுகுவதற்கும் மற்றும் குழந்தையின் கணக்கைப் பற்றிப் பெற்றோருடன் தொடர்புகொள்வதற்கும் (பெற்றோரின் மின்னஞ்சல் வழங்கப்பட்டிருந்தால்) இந்தத் தகவலை நாங்கள் செயலாக்குகிறோம். உதாரணமாக, குழந்தையின் கணக்கைப் பற்றிய மின்னஞ்சல் அறிவிப்பையும், கணக்கை ஆய்வு செய்து அமைப்புகளைப் புதுப்பிக்குமாறு பெற்றோருக்கு அழைப்பையும் அனுப்பப் பெற்றோரின் மின்னஞ்சலை நாங்கள் பயன்படுத்தலாம். சேவையை அணுகுவதற்குப் பதிவு செய்யும் போது குழந்தை வழங்கும் பிறந்த தேதியை, Roblox இல் உள்ள எந்த வசதிகளைக் குழந்தை அணுக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் மற்றும் குழந்தைக்கு எப்போது 13 வயது பூர்த்தியாகும் என்பதைக் கண்டறிந்து எங்கள் சேவையில் உள்ள வசதிகளுக்கு விரிவான அணுகலை வழங்கவும் நாங்கள் பயன்படுத்தலாம். இந்தச் செயலாக்க நடவடிக்கை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b GDPR (“ஒப்பந்தத்தின் செயல்பாடு”). பொதுவாக, இந்தத் தனியுரிமைக் கொள்கையில் கூறப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காகத் தவிர, ஒரு குழந்தையின் கணக்கிலிருந்து கணக்குத் தகவலை (தனிப்பட்ட தகவல்கள் உட்பட) நாங்கள் பயன்படுத்த மாட்டோம் அல்லது பகிர மாட்டோம், மேலும் சட்டத்தால் தேவைப்பட்டால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் முன் சரிபார்க்கக்கூடிய ஒப்புதலுடன் மட்டுமே பயன்படுத்துவோம் (பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு a மற்றும் பிரிவு 8 துணைப்பிரிவு 1 GDPR).
தரவுப் பகிர்வு
Roblox சார்பாகச் சேவைகளைச் செய்ய பணியமர்த்தப்பட்ட எங்கள் மூன்றாம் தரப்பு முகவர்கள், ஒப்பந்ததாரர்கள் அல்லது சேவை வழங்குநர்களுடன் பில்லிங் தகவல் அல்லது பயனர் பெயர்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் உட்பட பயனர்களின் தகவலை Roblox பகிரலாம்.
இந்த வழங்குநர்கள் சேவையின் சில செயல்பாடுகளை இயக்கலாம் அல்லது ஆதரிக்கலாம். நாங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களைப் பயன்படுத்தக்கூடிய செயல்பாடுகளின் விளக்கப் பட்டியல் மற்றும் இந்தச் செயல்பாடுகளைச் செய்ய நாங்கள் பயன்படுத்தக்கூடிய வழங்குநர்களின் பெயர்கள் கீழே உள்ளன:
- கணக்கு ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு (உதாரணமாக, பர்சோனா);
- பகுப்பாய்வு சேவைகள் (உதாரணமாக, Google LLC);
- பயனர் கையகப்படுத்தல் சேவைகள் (உதாரணமாக, AppsFlyer);
- கம்யூனிட்டி ஃபில்டரிங் மற்றும் மாடரேஷன் சேவைகள்;
- வாடிக்கையாளர் ஆதரவு சேவைகள்;
- கருத்துக்கணிப்புகள் மற்றும் விளம்பரங்கள் (உதாரணமாக, Reach3);
- பில்லிங் சேவைகள் மற்றும் பேமெண்ட் கேட்வே வழங்குநர்கள் (உதாரணமாக, Kount, Worldpay, PayPal, Incomm, Blackhawk, Google, Apple, Amazon, Windows Store, Xbox, Playstation, Meta Quest, Xsolla) மற்றும்
- ஹோஸ்டிங் மற்றும் உள்ளடக்க விநியோக நெட்வர்க் சேவைகள் (உதாரணமாக, AWS, Equinix, CenturyLink, YouTube, Vimeo).
இந்தத் தரவு பரிமாற்றம் மற்றும் செயலாக்க நடவடிக்கையின் சட்டப்பூர்வ அடிப்படை, அந்தந்த மூன்றாம் தரப்பு முகவர்களுடன் நாங்கள் மேற்கொண்ட தரவுச் செயலாக்க ஒப்பந்தங்களுடன் இணைந்த GDPR இன் பிரிவு 28 ஆகும். இந்த முகவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அவர்களுடன் பகிரப்பட்ட தகவலை அவர்கள் பணியமர்த்தப்பட்ட குறிப்பிட்ட பணிகளுக்காகவும் மற்றும் இந்தத் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்கவும் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள், வேறு எந்த நோக்கங்களுக்காகவும் அல்ல. தனிப்பட்ட தகவல்களை அணுகக்கூடிய அனைத்து சேவை வழங்கநர்களும், நாங்கள் அவர்களுடன் பகிரும் தகவலைப் பாதுகாக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய Roblox நடவடிக்கைகளை எடுக்கிறது.
மேலும், நீங்கள் பயன்படுத்தும் எக்ஸ்பீரியன்ஸ்களை உருவாக்கியவர்கள் அல்லது நீங்கள் ஈடுபடும் உள்ளடக்கத்தை உருவாக்கியவர்கள், உங்கள் பயனர் பெயர், காட்சி பெயர், பயனர் ID, கேம் மேட்ரிக்ஸ், UGC பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் உங்கள் பிராந்திய இருப்பிடம் (இதை உங்கள் IP முகவரி அடிப்படையில் நாங்கள் தீர்மானிக்கிறோம்) ஆகியவற்றை அணுக முடியும். நாங்கள் உங்கள் IP முகவரியைக் கிரியேட்டர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம். கிரியேட்டர்களின் பிளேயர் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும், அவர்களின் அனுபவங்கள் நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தவும், பிளேயர்களின் பிராந்திய இருப்பிடத் தகவலை நாங்கள் கிரியேட்டர்களுக்கு வழங்குகிறோம். இந்தச் செயலாக்க நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்பாடு"), பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம். 1 உட்பிரிவு தொடர்புடைய EEA அல்லது உறுப்பு நாட்டுச் சட்டத்தின் இணக்கமான c (“சட்டப்பூர்வ கடப்பாட்டுடன் இணங்குதல்”) மற்றும் உட்பிரிவு f (“சட்டப்பூர்வ ஆர்வம்”) GDPR ஆகும். EEA அல்லாத சட்டப்பூர்வ கடப்பாடுகளுக்கு இணங்குவது கிரியேட்டர்களின் சட்டப்பூர்வ ஆர்வமாகும்.
பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க, உங்களுக்காக விளம்பரங்களைத் தேர்ந்தெடுக்க அல்லது விளம்பரத் திறனை அளவிட மற்றும் மேம்படுத்த, உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட தகவலை விளம்பரதாரர்கள் மற்றும்/அல்லது விளம்பர அளவீட்டு நிறுவனங்களுடன் Roblox வெளிப்படுத்தலாம். மூன்றாம் தரப்பு விளம்பரக் கூட்டாளர்களுக்குத் தகவலை வெளிப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அடிப்படை பிரிவு 6 துணைபிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு (“ஒப்புதல்”) ஆகும் விளம்பர அளவீட்டு நோக்கங்களுக்காக வெளிப்படுத்தப்படும் தரவுகளில் தொடர்பு அடையாளங்காட்டிகள் மற்றும் சாதன அடையாளங்காட்டிகள் அடங்கும். இந்தச் செயலாக்க நடவடிக்கையின் சட்டப்பூர்வ அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு வாக்கியம் 1 உட்பிரிவு. f (“முறையான ஆர்வம்”).
Roblox-இல் ஒரு வர்த்தகத் தயாரிப்பை வாங்க நீங்கள் ஒரு வர்த்தக வழங்குநருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டால், பரிவர்த்தனையை நிறைவு செய்ய Roblox மற்றும் அந்த வர்த்தக வழங்குநர் உங்கள் கொள்முதல் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டியிருக்கும். இதில் Roblox அல்லது வர்த்தக வழங்குநர் ஒரு பரிவர்த்தனை அடையாளங்காட்டியை உருவாக்குவார்கள்; இது ஒரு கொள்முதல் முடிந்துவிட்டதா என்பது போன்ற பரிவர்த்தனை குறித்த சில தகவல்களை இரு தரப்பினரும் உறுதிப்படுத்த அனுமதிக்கிறது. ஒரு ஃபுல்பில்மென்ட் பார்ட்னர் மூலம் நீங்கள் செய்யும் வாங்குதலை எளிதாக்குவதற்குத் தேவைப்படும் தரவுப் பகிர்வுக்கான சட்டப்பூர்வ அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு b ("ஒப்பந்தத்தின் செயல்திறன்") ஆகும்.
சட்டப்பூர்வ வெளிப்படுத்துதல்
எங்கள் சேவையில் வழங்கப்படும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சப்போனாக்கள் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இணங்குவதற்காக, சேவையில் உங்கள் தகவல்தொடர்புகளின் உள்ளடக்கம் உட்பட உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வெளிப்படுத்தலாம். உதாரணமாக டிஜிட்டல் சேவைகள் சட்டம், பிரிவு 18 மற்றும் UK ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தகவல் அறிவிப்புகளின் கீழ் Roblox செய்ய வேண்டிய கடமைகளுடன் இணங்கும்பட்சத்தில். கூடுதலாக, பயனர் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக நாங்கள் நம்பினால், சட்டப்பூர்வக் காரணங்களுக்காக அல்லது ஒரு குற்றத்தைத் தடுப்பதற்காக, Roblox தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கையின் பிரிவு 4-க்கு இணங்கவும், சட்ட அமலாக்க முகமைகள், ஒழுங்குமுறை அமைப்புகள் அல்லது பிற பொது முகமைகளின் (பள்ளிகள் அல்லது குழந்தைகள் சேவைகள் உட்பட) கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, உள்ளடக்கம் உட்பட உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வெளிப்படுத்தலாம்; அத்தகைய வெளிப்படுத்துதலுக்கான சட்டப்பூர்வ அடிப்படை பிரிவு 6 துணைப்பிரிவு 1 வாக்கியம் 1 உட்பிரிவு. தொடர்புடைய EEA அல்லது உறுப்பு நாட்டுச் சட்டத்தின் இணக்கமான c (“சட்டப்பூர்வ கடப்பாட்டுடன் இணங்குதல்”) மற்றும் உட்பிரிவு f (“சட்டப்பூர்வ ஆர்வம்”) GDPR ஆகும். U.S. சட்டத்தின் சட்டப்பூர்வ தேவைகளுக்கு இணங்குவது எங்களது சட்டப்பூர்வ ஆர்வமாகும். மேலும், இந்த நோக்கங்களில் எங்களுக்கு சட்டப்பூர்வ ஆர்வம் உள்ளது.உங்கள் தனிப்பட்ட தகவல்களின் சேமிப்பு மற்றும் சர்வதேச பரிமாற்றம்
Roblox அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் சேகரிக்கும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அமெரிக்காவில் அமைந்துள்ள பாதுகாப்பான சர்வர்களுக்கு அனுப்பப்பட்டு சேமிக்கப்படுகின்றன. தகவலைச் செயலாக்க அத்தகைய சேமிப்பு அவசியம். எங்களது முகவர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் சிலர் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு வெளியே, உதாரணமாக அமெரிக்காவில் உள்ளனர். அமெரிக்கா அல்லது பிற நாடுகளின் தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் உங்கள் வசிப்பிட நாட்டில் உள்ளதைப் போல விரிவானதாகவோ அல்லது அதற்கு இணையானதாகவோ இருக்காது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எங்கு மாற்றினாலும், உங்கள் தனியுரிமை உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுப்போம், உதாரணமாக மூன்றாம் தரப்பினருடன் EU தரநிலை ஒப்பந்த உட்பிரிவுகளை முடித்தல்.தரவு உரிமையாளராக உங்கள் உரிமைகள்
நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியை சேர்ந்த பயனராக இருந்தால், பின்வரும் சில அல்லது அனைத்து உரிமைகளையும் பயன்படுத்த உங்களுக்கு உரிமை இருக்கலாம்:
- (i) உங்கள் தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளனவா என்ற தகவல் மற்றும் (ii) செயலாக்கத்தின் நோக்கங்கள், சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தகவல்களின் வகைகள் மற்றும் தரவுப் பெறுநர்கள் மற்றும் சாத்தியமான சேமிப்புக் காலங்கள் உட்பட சேமிக்கப்பட்டுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்களின் அணுகல் அல்லது நகல்களைக் கோருதல்;
- தனிப்பட்ட தகவல்களைத் திருத்தவோ, நீக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ கோருதல், உதாரணமாக (i) அது முழுமையற்றதாகவோ அல்லது துல்லியமற்றதாகவோ இருந்தால், (ii) அது சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்கு இனி தேவைப்படாவிட்டால், அல்லது (iii) செயலாக்கத்திற்கு அடிப்படையாக இருந்த ஒப்புதல் திரும்பப் பெறப்பட்டால்;
- வழங்க மறுத்தல் மற்றும் — அத்தகைய திரும்பப் பெறுதலுக்கு முன் நடந்த தரவுச் செயலாக்க நடவடிக்கைகளில் பாதிப்பு இல்லாமல் — உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதற்கான உங்கள் ஒப்புதலை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறுதல்;
- உங்களது குறிப்பிட்ட சூழ்நிலை தொடர்பான காரணங்களுக்காக, உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதை எதிர்த்தல், அத்தகைய செயலாக்கமானது எங்களது அல்லது மூன்றாம் தரப்பினரின் சட்டப்பூர்வ ஆர்வங்களின் அடிப்படையில் அல்லது பொது நலன் கருதி மேற்கொள்ளப்படும் ஒரு பணியின் அடிப்படையில் அமைந்திருந்தால். இந்தச் சூழலில், உங்களது குறிப்பிட்ட சூழ்நிலை பற்றிய தகவலை எங்களுக்கு வழங்கவும். நீங்கள் வழங்கிய உண்மைகளை ஆய்வு செய்த பிறகு, உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதை நாங்கள் நிறுத்துவோம் அல்லது தொடர்ந்து செயலாக்குவதற்கான எங்களது கட்டாய சட்டப்பூர்வ காரணங்களை உங்களுக்குத் தெரிவிப்போம்;
- நேரடி சந்தைப்படுத்துதலுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதை எப்போது வேண்டுமானாலும் எதிர்த்தல்;
- (i) நீங்கள் எங்களுக்கு வழங்கிய உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை ஒரு கட்டமைக்கப்பட்ட, பொதுவாகப் பயன்படுத்தப்படும் மற்றும் இயந்திரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் பெறுவதற்கும் மற்றும் (ii) எங்களது தரப்பிலிருந்து எந்தத் தடையுமின்றி அந்தத் தரவை மற்றொரு கட்டுப்பாட்டாளருக்கு அனுப்புவதற்கும் கோருதல். தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமான இடங்களில், தனிப்பட்ட தகவல்களை எங்களிடமிருந்து நேரடியாக மற்றொரு கட்டுப்பாட்டாளருக்கு மாற்றச் செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு.
- நீங்கள் (i) மேலே குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளைப் பயன்படுத்தலாம், (ii) ஏதேனும் கேள்விகளை எழுப்பலாம், அல்லது (iii) பிரிவு 1 இல் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விவரங்களின் கீழ் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் எங்கள் தரவுச் செயலாக்கம் குறித்த ஏதேனும் புகார்களைத் தெரிவிக்கலாம். 1.
மேலும், உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவது தொடர்பான உங்கள் உரிமைகளில் ஏதேனும் சாத்தியமான மீறல்கள் ஏற்பட்டால் நீங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கலாம், அத்துடன் தகுதியுள்ள தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளிடம் புகார்களைத் தெரிவிக்கலாம்.
நீங்கள் பிரேசிலில் வசிப்பவராக இருந்தால்
தனிப்பட்ட தகவல்களின் வகைகள் மற்றும் தரவு செயலாக்க நோக்கங்கள்
எங்கள் வலைத்தளங்கள் மற்றும் ஆப்ஸைப் பார்வையிடும்போது, மற்றும்/அல்லது எங்கள் சேவைகள் மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது, பின்வரும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயலாக்கலாம்:
Roblox கணக்கை அமைத்தல்
- உங்கள் கணக்கை உருவாக்க பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்.
- கூடுதல் சரிபார்ப்பு மற்றும்/அல்லது சில அம்சங்களைச் செயல்படுத்த நீங்கள் எங்களுக்கு வழங்கிய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தகவல்கள். பாதுகாப்பான மற்றும் உறுதியான சர்வீஸை வழங்குவதில், குறிப்பாகக் குழந்தைகளைப் பாதுகாப்பதில் Roblox-க்கு முறையான ஆர்வம் உள்ளது.
- நீங்கள் ஒரு போன் நம்பரை வழங்க விரும்பினால், பாதுகாப்பு மற்றும் கணக்கு அணுகல் நோக்கங்களுக்காக அந்த போன் நம்பரை நாங்கள் பயன்படுத்துவோம்; இது மொபைல் மூலம் லாக்-இன் செய்யவும் மற்றும் தொலைந்த அல்லது மறந்த கடவுச்சொல்லை மீட்டெடுக்கவும் உங்களை அனுமதிக்கும். மோசடியைத் தடுக்கவும், உங்களை அல்லது உங்கள் வயர்லெஸ் சாதனத்தை அடையாளம் காண அவர்களுக்கு உதவுவதற்காகவும், உங்கள் வணிக உறவின் காலத்திற்கு, உங்கள் கணக்கு மற்றும் உங்கள் வயர்லெஸ் சாதனம் பற்றிய தகவல்களை Roblox அல்லது அதன் சேவை வழங்குநருக்குப் பயன்படுத்த அல்லது வெளியிட உங்கள் வயர்லெஸ் கேரியருக்கு நீங்கள் அங்கீகாரம் அளிக்கிறீர்கள். உங்கள் மொபைல் சாதனம் மூலம் எங்களது சேவைகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிப்பதிலும், பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மற்றும் மோசடியைத் தடுப்பதிலும் எங்களுக்கு முறையான ஆர்வம் உள்ளது. கூடுதலாக, உங்களின் வெளிப்படையான மற்றும் தகவலறிந்த ஒப்புதலுடன், Roblox-ஐப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு உங்களை ஒரு நண்பராகப் பரிந்துரைக்க உங்கள் தொலைபேசி எண்ணை நாங்கள் பயன்படுத்தலாம்.
Roblox-இல் வாங்குபவை
- உங்களுக்காகவோ அல்லது மற்றொரு பயனருக்காகவோ நீங்கள் 'டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச்'-இல் பங்கேற்கும்போது அல்லது Robux அல்லது பிரீமியம் சந்தாக்களை வாங்கும்போது, உங்கள் பெயர், பில்லிங் முகவரி, கிரெடிட் கார்டு அல்லது பிற கட்டணத் தகவல் மற்றும் பில்லிங் தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர் மூலம் உங்கள் கிரெடிட் கார்டு எண் போன்ற தகவல்களைச் சேமிக்க நீங்கள் விரும்பலாம்; அத்தகைய சந்தர்ப்பங்களில் அந்தத் தகவல் Roblox-ஆல் சேமிக்கப்படாது; அது அந்த மூன்றாம் தரப்பு கூட்டாளரிடம் சேமிக்கப்படும். நாங்கள் பில்லிங் முகவரிகளைச் சேகரிக்கலாம் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் கொள்முதல் மற்றும் கட்டண வரலாற்றைத் தக்கவைக்கலாம். மற்றொரு Roblox பயனர் சார்பாக நீங்கள் Robux வாங்கினால், பரிவர்த்தனை குறித்து உங்களுடன் தொடர்புகொள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் போன்ற தொடர்புத் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.
உள்ளடக்கத்தை இடுகையிடுதல்
- Roblox-இல் பொதுவான சாட்கள், ஃபோரம்கள், குரூப் சுவர்கள், தனிப்பட்ட பதிவுகள் போன்றவற்றின் மூலம் நீங்கள் பதிவிடும் அல்லது அனுப்பும் கருத்துகள் அல்லது செய்திகள். அநாகரீகமான சொற்கள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிற பொருத்தமற்ற உரையாடல்களை அகற்றும் நோக்கத்திற்காக, இந்தத் தகவல்களைக் கண்காணிக்கவும், வடிகட்டவும் மற்றும் சீரமைக்கவும் நாங்கள் இந்தத் தகவலைச் செயலாக்குகிறோம். கூடுதலாக, எங்களது வடிகட்டி தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்-வடிகட்டப்பட்ட கருத்துகள் மற்றும் செய்திகளை நாங்கள் பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஃபோரம்கள் மற்றும் எங்களால் வழங்கப்படும் இது போன்ற பிற வழிகளில் நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும், மற்ற பயனர்கள் உட்பட இந்த ஃபோரமை அணுகக்கூடிய எவருக்கும் கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் பதிவிடும் தனிப்பட்ட தகவல்களை இந்த ஃபோரம்களின் பிற பயனர்கள் படிக்கலாம், சேகரிக்கலாம் அல்லது பயன்படுத்தலாம்; மேலும் கோரப்படாத செய்திகளை அனுப்பவும் அவை பயன்படுத்தப்படலாம்.
கேள்விகள் கேட்பது அல்லது தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவது
- எங்களது வாடிக்கையாளர் சர்வீஸைத் தொடர்பு கொள்வது தொடர்பான தகவல்கள், உதாரணமாக நீங்கள் ஒரு சிக்கலைப் புகாரளிக்கும் போது, கேள்விகள், கவலைகள் அல்லது கருத்துகளைச் சமர்ப்பிக்கும் போது. உங்கள் தொடர்புகளுக்குப் பதிலளிக்கவும், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அல்லது பிற வாடிக்கையாளர் ஆதரவை வழங்கவும் உங்களது மின்னஞ்சல் முகவரி, உங்கள் பெயர் மற்றும் உங்கள் விசாரணை அல்லது கவலை தொடர்பான தகவல்களை நாங்கள் செயலாக்கலாம்.
Roblox அம்சங்களைப் பயன்படுத்துதல்
உங்கள் கணக்கில் நீங்கள் சேர்க்கும் சமூக ஊடக இணைப்புகள். Google, Facebook அல்லது Twitterபோன்ற மூன்றாம் தரப்பு பிளக்-இன்களை நீங்கள் பயன்படுத்துவது அல்லது அவற்றுடன் தொடர்புகொள்வது தொடர்பான தகவல்கள். நீங்கள் இந்த அம்சங்களைப் பயன்படுத்தும்போது, உங்கள் சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து சில தகவல்கள் Roblox-ஆல் அணுகப்படலாம் அல்லது அதனுடன் பகிரப்படலாம். அதேபோல், நீங்கள் Roblox-ஐப் பயன்படுத்துவது குறித்த சில தகவல்கள் அந்தத் தளங்களில் உள்ள உங்கள் சுயவிவரத்தில் வெளியிடப்படலாம். மூன்றாம் தரப்பு இணையதளம் அல்லது சர்வீஸில் லாக்-இன் செய்ய உங்கள் Roblox சான்றுகளை நீங்கள் பயன்படுத்தி, பின்னர் உங்கள் Roblox கணக்கை நீக்கினால், அத்தகைய மூன்றாம் தரப்பு இணையதளம் அல்லது சர்வீஸிற்கான அணுகலை நீங்கள் இழக்க நேரிடும்.
- நீங்கள் Roblox-இன் ஆடியோ அம்சங்களைப் பயன்படுத்தும்போது, குரல் சேவைகளைச் செயல்படுத்தவும் Roblox-ஐப் பாதுகாப்பானதாக மாற்றவும் உங்களது ஆடியோ பதிவை நாங்கள் சேகரிக்கலாம், செயலாக்கலாம் மற்றும் சேமிக்கலாம். பிரேசில் பயனர்களின் தனிப்பட்ட சர்வர் வாய்ஸ் சாட்டைப் பதிவுகளைக் கொண்டு பயிற்சி அல்லது தயாரிப்பு மேம்பாட்டில் நாங்கள் ஈடுபட மாட்டோம். உங்கள் ஒப்புதலுடன், பயிற்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்காக நாங்கள் வாய்ஸ் பதிவுகளைப் பயன்படுத்துவோம்.
- நீங்கள் இருப்பிட அடிப்படையிலான சேவைகளைக் (13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்கள்) கோரும்போது அல்லது அதற்குச் சம்மதிக்கும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்வதைச் சார்ந்திருக்கும் சேவைகளை வழங்குவதற்காக, உங்கள் புவிஇருப்பிடத் தகவலை நாங்கள் சேகரிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்காக உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குதல் அல்லது விளம்பரங்களைத் தனிப்பயனாக்குதல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். நீங்கள் ஒவ்வொரு முறை திரும்பும்போதும் உங்களை அடையாளம் காண உங்கள் சாதனம் அல்லது உலாவியில் உள்ள ஒரு அடையாளங்காட்டி மூலம் இந்தத் தகவலை நாங்கள் சேகரிக்கிறோம். எங்கள் இருப்பிடத் தகவலைச் சேகரிப்பதை நிறுத்துவதற்கு, உங்கள் சாதனத்தின் அமைப்புகளைப் புதுப்பிக்கலாம், சர்வீஸைப் பயன்படுத்துவதை நிறுத்தலாம் அல்லது எங்கள் மொபைல் ஆப்ஸ் நிறுவலை நீக்கலாம்.
- நீங்கள் ஒரு VR பிளாட்ஃபார்மில் எங்களது அனுபவங்களில் இணையும்போது, அந்த அனுபவத்தில் உங்கள் அசைவுகளைப் பிரதிபலிப்பதற்காக உங்களது உடல் அசைவுத் தகவல்களை நாங்கள் சேகரிப்போம். இந்தத் தகவல் சேவையை வழங்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்றும் சேமிக்கப்படுவதில்லை.
- ஒரு கிரியேட்டரால் நடத்தப்படும் விர்ச்சுவல் நிகழ்வில் நீங்கள் சேர்ந்தால், உங்கள் பயனர்பெயர், மின்னஞ்சல் மற்றும் Roblox பயனர் ID போன்ற தரவுகள் நிகழ்வுகளை நடத்தும் மூன்றாம் தரப்பு தளத்துடன் பகிரப்படலாம். அத்தகைய தரவு நீங்கள் அந்த அனுபவத்தில் லாக்-இன் செய்ய அனுமதிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கிரியேட்டர் நிகழ்வின் போது உங்களது செயல்பாடுகள், அந்த மூன்றாம் தரப்பு தளத்தின் தனியுரிமைக் கொள்கை மற்றும் சமூகத் தரநிலைகளுக்கு உட்பட்டது.
- உங்கள் கேமராவைப் பயன்படுத்த வேண்டிய அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்களைப் பதிவேற்ற வேண்டிய கூடுதல் அம்சங்களுக்குத் தேவையான தகவல்கள். இந்த அம்சங்களைப் பயன்படுத்தவும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றவும் நீங்கள் முடிவு செய்தால், அந்த அம்சத்தின் நோக்கத்தை நிறைவேற்ற அந்த உள்ளடக்கத்தை நாங்கள் சேகரிப்போம், செயலாக்குவோம் மற்றும் சேமிப்போம். கூடுதல் தகவலுக்கு,Roblox ஃபேசியல் அனிமேஷன் பிரைவசி நோட்டீஸ் மற்றும் Roblox ஃபேசியல் மீடியா கேப்சர் பிரைவசி நோட்டீஸ் ஆகியவற்றைப் பார்க்கவும்.
- குழந்தைகளைத் தவிர மற்ற பயனர்களுக்குக் கிடைக்கக்கூடிய பிற அம்சங்கள் அல்லது செயல்பாடுகளுக்குத் தேவையான தகவல்கள். எங்கள் சேவைகளில் அவ்வப்போது பிற அம்சங்கள் அல்லது செயல்பாடுகளை நாங்கள் வழங்கலாம், மேலும் அத்தகைய அம்சங்கள் தொடர்பாக நீங்கள் தனிப்பட்ட தகவலைச் சமர்ப்பிக்கலாம் அல்லது பதிவேற்றலாம். அத்தகைய அம்சங்களுக்காகச் சேகரிக்கப்படும் தரவு மற்றும் அவற்றின் நோக்கம் ஆகியவை தரவு சேகரிக்கப்படும் நேரத்தில் தெளிவாகத் தெரியும்.
- நீங்கள் காண்டாக்ட் இம்போர்ட்டர் அம்சத்தைத் தேர்வுசெய்தால், எங்கள் சேவையில் நீங்கள் பதிவுசெய்யும் போதோ அல்லது பிற நேரங்களிலோ, உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள முகவரிப் புத்தகத்தில் உள்ள உங்கள் தொடர்புகளின் முதல் மற்றும் கடைசிப் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை Roblox-உடன் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள். எங்களது சர்வீஸில் உங்கள் நண்பர்களுடன் இணைவதற்கு இந்த வசதி உதவுகிறது.
- எங்களது எக்ஸ்பீரியன்ஸ்களுடன் தொடர்புகொள்வது. உங்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், எங்கள் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்கவும், நீங்கள் சேவைகளுடன் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரித்து, அந்தத் தகவலை உங்கள் கணக்குடன் இணைக்கிறோம். உதாரணமாக, எங்கள் விதிமுறைகளை மீறுவதைக் கண்டறியவும் மற்றும் அத்தகைய மீறல்களைக் கண்டறியும் எங்களது திறனை மேம்படுத்தவும் ஒரு பயனரின் கேம் நிலையிலிருந்து தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம்; பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக உங்கள் டிவைஸுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது உங்கள் நடத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம்; உங்களுக்கு ஒத்த பரிந்துரைகளை வழங்க உங்கள் தேடல் வரலாற்றிலிருந்து தகவல்களைச் சேகரிக்கலாம்; நீங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட பொருளைப் பெற்றால், அல்லது நீங்கள் வாங்குதல், பகிர்தல், வர்த்தகம் செய்தல் அல்லது UGC தொடர்பான பரிவர்த்தனையில் ஈடுபட்டால், உங்கள் பயனர்பெயர் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் போன்ற தகவல்களை UGC கிரியேட்டர் அல்லது அடுத்தடுத்த உரிமையாளர்களுடன் பகிரலாம்.
போட்டிகள், விளம்பரங்கள் மற்றும் ஆராய்ச்சி
- நீங்கள் தன்னார்வ ஆராய்ச்சி அல்லது கருத்துக்கணிப்புகள் அல்லது ஆய்வகளில் பதிலளிக்கும்போது அல்லது பங்கேற்கும்போது. இந்தக் கருத்துக்கணிப்பு உங்கள் விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள், அனுபவ ஆர்வங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள், பொதுவான பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள் மற்றும் பிற வாழ்க்கைமுறை தகவல்கள் அல்லது விருப்பங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம். இந்தக் கருத்துக்கணிப்புகள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கலாம்.
- எங்கள் சேவையில் நாங்கள் அவ்வப்போது நடத்தக்கூடிய அல்லது ஸ்பான்சர் செய்யக்கூடிய போட்டிகள், போட்டிகள், ஸ்வீப்ஸ்டேக்குகள், கிவ்அவேகள், பரிசு குலுக்கல்கள் அல்லது பிற விளம்பரங்களில் நீங்கள் பங்கேற்பது தொடர்பான தகவல்கள். பரிசு வழங்கும் நோக்கங்களுக்காக சில தொடர்புத் தகவல்களையும் (உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும்/அல்லது தொலைபேசி எண் போன்றவை), அத்துடன் குறிப்பிட்ட விளம்பரத்திற்குத் தேவையான பிற தகவல்கள் அல்லது உள்ளடக்கத்தையும் நாங்கள் செயலாக்கலாம்.
விளம்பரம்
- Roblox-இல் விளம்பரங்களைக் காட்டுவதற்காக தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயலாக்குகிறோம். Roblox-இல் உங்களுக்கு எந்த விளம்பரங்களைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, கூட்டாளர்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் மற்றும் பெறும் தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, Roblox-இல் உங்களுக்கு நேரடியாக விளம்பரங்களைக் காண்பிக்க Roblox கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படலாம். Roblox-இல் 18 வயதுக்குக் குறைவான பயனர்களுக்கு விளம்பரங்களை நாங்கள் தனிப்பயனாக்கம் செய்வதில்லை.
- உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றிச் சேகரிக்கப்பட்ட தகவல்களை, விளம்பரங்களின் செயல்திறனை அளவிடவும் மேம்படுத்தவும் Roblox செயலாக்கும்.
- புதிய பயனர்களை எங்களது இணையதளங்களுக்குக் கொண்டு வருவதற்கும், எங்களது பயனர் எண்ணிக்கையைப் பராமரிக்கவும் மற்றும் அதிகரிக்கவும், பிற தளங்கள் மற்றும் செயலிகளில் (உதாரணமாக, சமூக ஊடகத் தளங்கள் வழியாக) எங்களது சேவைகளை சந்தைப்படுத்த, நாங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்கலாம்.
- நீங்கள் ஒரு விளம்பரக் கணக்கை உருவாக்கத் தேர்வு செய்யும்போது, அந்த கணக்கை உருவாக்குவதற்காக உங்கள் கணக்கிற்கான கூடுதல் தகவல்களை (பெயர், மின்னஞ்சல், முகவரி, வணிகத் தகவல் போன்றவை) நாங்கள் சேகரிக்கலாம். நாங்கள் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் கொள்முதல் மற்றும் கட்டண வரலாற்றையும் வைத்திருக்கலாம்.
நீங்கள் ஒரு டெவலப்பர் அல்லது கிரியேட்டராக இருந்தால்
- எங்கள் Roblox டெவலப்பர் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் பங்கேற்பதற்குத் தேவையான தகவல்கள், அதாவது IRS W-9 படிவம் (அமெரிக்க வரி செலுத்துபவர்களுக்கு) அல்லது W-8 படிவத்தை (அமெரிக்கர் அல்லாத வரி செலுத்துபவர்களுக்கு) வழங்க வேண்டும். சட்டப்பூர்வத் தேவைகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவின் பணமோசடி எதிர்ப்புச் சட்டங்களுக்கு இணங்குவது எங்களது முறையான ஆர்வமாகும்.
உங்கள் தகவல்களைச் சேகரிப்பதற்கான பிற நோக்கங்கள்
- உள்நுழைவுத் தகவல், இதில் உங்கள் IP முகவரி, சாதன வகை, பயனர்பெயர், கடவுச்சொல், நீங்கள் பார்வையிட்ட தேதி மற்றும் நேரம், உங்கள் பிரவுசர் வெர்ஷன் பற்றிய தகவல், மொழி அமைப்புகள் உட்பட உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல், MAC முகவரிகள் மற்றும் பயனர் ID ஆகியவை அடங்கும். உங்களுக்கு எங்கள் சேவையை வழங்க இந்தத் தகவலை நாங்கள் செயலாக்குவோம். சேவைகளின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது எங்களது நியாயமான நலன்களில் ஒன்றாகும்.
- கணக்குத் தகவல், எ.கா. உங்கள் பெயர், பயனர்பெயர், உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் விவரங்கள், பிராந்திய இருப்பிடத் தகவல், பயனரால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம், எங்களுக்கு வழங்க நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொடர்பு விவரங்கள் மற்றும் நாங்கள் வழங்கும் சேவையில் பங்கேற்பதற்காகப் பயன்படுத்தப்படும் பிற தனிப்பட்ட தகவல்கள் போன்றவை. உங்களுக்கு எங்கள் சேவைகளை வழங்க இந்தத் தகவலை நாங்கள் செயலாக்குகிறோம்.
குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்கள்
- நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் சில குக்கீகள் இணையதளத்தின் அடிப்படைச் செயல்பாட்டிற்கு அவசியமானவை, எனவே அவற்றை செயலிழக்கச் செய்ய முடியாது. நீங்கள் முன்னதாக அத்தகைய பயன்பாட்டிற்குச் சம்மதம் தெரிவித்திருந்தால் மட்டுமே நாங்கள் விருப்பரீதியிலானு குக்கீகளைப் பயன்படுத்துவோம். குக்கீ பேனரில் உள்ள “மேனேஜ் குக்கீ பிரிஃபரன்சஸ்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விருப்பத்தை நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் விருப்பங்களை நாங்கள் குக்கீ வடிவத்தில் சேமிப்போம். இந்த குக்கீ ஒரு வருட காலத்திற்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். கூடுதலாக, உங்கள் பிரவுசர் அமைப்புகளைப் பயன்படுத்தியும் நீங்கள் குக்கீகளை நிர்வகிக்கலாம். குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு மேலே உள்ள பிரிவு 3-ஐப் பார்க்கவும்.
எங்கள் கார்ப்பரேட் வலைதளங்களில் அல்லது வேலை விண்ணப்பங்களில்
- உங்களால் வழங்கப்பட்ட உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, வேலைவாய்ப்பு விவரங்கள், CV, ரெஸ்யூம் அல்லது உங்களது வேலைவாய்ப்பு வரலாறு குறித்த பிற விவரங்கள் போன்ற உங்கள் வேலை விண்ணப்பம் தொடர்பான தகவல்கள். வருங்கால ஊழியர்களுக்கான Roblox கேரியர் சென்டர் போன்ற ஒரு மெய்நிகர் தளத்தில் நீங்கள் Roblox உடன் ஈடுபடும்போது, அந்த அனுபவத்தை வழங்குவதற்காக அத்தகைய தளம் பதிவு செய்யப்படலாம். உங்கள் வேலை விண்ணப்பத்தைச் செயலாக்குவதற்கும் அதற்குப் பதிலளிப்பதற்கும் இந்தத் தகவலை நாங்கள் செயலாக்குவோம்.
தானியங்கி முடிவெடுத்தல் (ஆட்டோமேட்டட் டிசிஷன் மேக்கிங்)
உங்களைப் பற்றிய சட்ட ரீதியான விளைவுகளை உருவாக்கும் அல்லது அதே போன்ற குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் தானியங்கி முடிவெடுத்தலுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை என்பதைக் கருத்தில் கொள்க.குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பெற்றோரின் சம்மதம்
13 வயதிற்குட்பட்ட பயனர்கள் இந்தச் சேவையில் பதிவு செய்யும்போது, அவர்களின் கணக்கு தானாகவே முன்னிருப்பாகத் தனியுரிமைப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மாற்றப்படும் என்பதைக் கவனிக்கவும். இதன் பொருள், இந்தப் பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் சில வகை அறிவிப்பு எச்சரிக்கைகளுக்கான அணுகல் இருக்காது.
Robloxஸில் ஒரு குழந்தை ஒரு கணக்கை உருவாக்கும்போது, நாங்கள் பயனர் பெயர், கடவுச்சொல், பிறந்த தேதி மற்றும் பாலினம் (பாலினம் விருப்பரீதியிலானது) ஆகியவற்றைச் செயலாக்கலாம். கணக்கு உருவாக்கத்தில் இருந்து தனியாக, பயனர்கள் விருப்பத்தின் பேரில் சேவையை அணுகுவதற்கான அனுமதியை வழங்கலாம் மற்றும் குழந்தையின் கணக்கைப் பற்றி பெற்றோருடன் தொடர்புகொள்ளலாம் (பெற்றோரின் மின்னஞ்சல் வழங்கப்பட்டிருந்தால்). உதாரணமாக, குழந்தையின் கணக்கைப் பற்றிய மின்னஞ்சல் அறிவிப்பை அனுப்பவும் மற்றும் பெற்றோர் தங்கள் குழந்தையின் கணக்கை ஆய்வு செய்து அமைப்புகளைப் புதுப்பிப்பதற்கான அழைப்பை அனுப்பவும் பெற்றோரின் மின்னஞ்சலை நாங்கள் பயன்படுத்தலாம். சேவையை அணுகுவதற்குப் பதிவு செய்யும் போது குழந்தை வழங்கும் பிறந்த தேதியை, Roblox இல் உள்ள எந்த வசதிகளைக் குழந்தை அணுக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் மற்றும் குழந்தைக்கு எப்போது 13 வயது பூர்த்தியாகும் என்பதைக் கண்டறிந்து எங்கள் சேவையில் உள்ள வசதிகளுக்கு விரிவான அணுகலை வழங்கவும் நாங்கள் பயன்படுத்தலாம்.
பொதுவாக, இந்தப் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காகத் தவிர மற்றும் பொருந்தக்கூடிய இடங்களில், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் முன்னரே சரிபார்க்கப்பட்ட ஒப்புதலுடன் மட்டுமே குழந்தையின் கணக்கிலிருந்து கணக்குத் தகவலை (தனிப்பட்ட தகவல்கள் உட்பட) நாங்கள் பயன்படுத்த மாட்டோம் அல்லது பகிர மாட்டோம்.
தரவுப் பகிர்வு
Roblox சார்பாகச் சேவைகளைச் செய்ய பணியமர்த்தப்பட்ட எங்கள் மூன்றாம் தரப்பு முகவர்கள், ஒப்பந்ததாரர்கள் அல்லது சேவை வழங்குநர்களுடன் பில்லிங் தகவல் அல்லது பயனர் பெயர்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் உட்பட பயனர்களின் தகவலை Roblox பகிரலாம்.
இந்த வழங்குநர்கள் சேவையின் சில செயல்பாடுகளை இயக்கலாம் அல்லது ஆதரிக்கலாம். நாங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களைப் பயன்படுத்தக்கூடிய செயல்பாடுகளின் விளக்கப் பட்டியல் மற்றும் இந்தச் செயல்பாடுகளைச் செய்ய நாங்கள் பயன்படுத்தக்கூடிய வழங்குநர்களின் பெயர்கள் கீழே உள்ளன:
- கணக்கு ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு (உதாரணமாக, பர்சோனா);
- பகுப்பாய்வு சேவைகள் (உதாரணமாக, Google LLC);
- பயனர் கையகப்படுத்தல் சேவைகள் (உதாரணமாக, AppsFlyer);
- கம்யூனிட்டி ஃபில்டரிங் மற்றும் மாடரேஷன் சேவைகள்;
- வாடிக்கையாளர் ஆதரவு சேவைகள்;
- கருத்துக்கணிப்புகள் மற்றும் விளம்பரங்கள் (உதாரணமாக, Reach3);
- பில்லிங் சேவைகள் மற்றும் பேமெண்ட் கேட்வே வழங்குநர்கள் (உதாரணமாக, Kount, Worldpay, PayPal, Incomm, Blackhawk, Google, Apple, Amazon, Windows Store, Xbox, Playstation, Meta Quest, Xsolla) மற்றும்
- ஹோஸ்டிங் மற்றும் உள்ளடக்க விநியோக நெட்வர்க் சேவைகள் (உதாரணமாக, AWS, Equinix, CenturyLink, YouTube, Vimeo).
இந்த முகவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அவர்களுடன் பகிரப்பட்ட தகவலை அவர்கள் பணியமர்த்தப்பட்ட குறிப்பிட்ட பணிகளுக்காகவும் மற்றும் இந்தத் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்கவும் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள், வேறு எந்த நோக்கங்களுக்காகவும் அல்ல. தனிப்பட்ட தகவல்களை அணுகக்கூடிய அனைத்து சேவை வழங்கநர்களும், நாங்கள் அவர்களுடன் பகிரும் தகவலைப் பாதுகாக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய Roblox நடவடிக்கைகளை எடுக்கிறது.
மேலும், நீங்கள் பயன்படுத்தும் எக்ஸ்பீரியன்ஸ்களை உருவாக்கியவர்கள் அல்லது நீங்கள் ஈடுபடும் உள்ளடக்கத்தை உருவாக்கியவர்கள், உங்கள் பயனர் பெயர், காட்சி பெயர், பயனர் ID, கேம் மேட்ரிக்ஸ், UGC பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் உங்கள் பிராந்திய இருப்பிடம் (இதை உங்கள் IP முகவரி அடிப்படையில் நாங்கள் தீர்மானிக்கிறோம்) ஆகியவற்றை அணுக முடியும். நாங்கள் உங்கள் IP முகவரியைக் கிரியேட்டர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம். கிரியேட்டர்களின் பிளேயர் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும், அவர்களின் அனுபவங்கள் நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தவும், பிளேயர்களின் பிராந்திய இருப்பிடத் தகவலை நாங்கள் கிரியேட்டர்களுக்கு வழங்குகிறோம்.
பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க, உங்களுக்காக விளம்பரங்களைத் தேர்ந்தெடுக்க அல்லது விளம்பரத் திறனை அளவிட மற்றும் மேம்படுத்த, உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட தகவலை விளம்பரதாரர்கள் மற்றும்/அல்லது விளம்பர அளவீட்டு நிறுவனங்களுடன் Roblox வெளிப்படுத்தலாம். இந்த நோக்கத்திற்காக வெளிப்படுத்தப்படும் தரவுகளில் தொடர்பு அடையாளங்காட்டிகள் மற்றும் சாதன அடையாளங்காட்டிகள் அடங்கும்.
Roblox-இல் ஒரு வர்த்தகத் தயாரிப்பை வாங்க நீங்கள் ஒரு வர்த்தக வழங்குநருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டால், பரிவர்த்தனையை நிறைவு செய்ய Roblox மற்றும் அந்த வர்த்தக வழங்குநர் உங்கள் கொள்முதல் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டியிருக்கும். இதில் Roblox அல்லது வர்த்தக வழங்குநர் ஒரு பரிவர்த்தனை அடையாளங்காட்டியை உருவாக்குவார்கள்; இது ஒரு கொள்முதல் முடிந்துவிட்டதா என்பது போன்ற பரிவர்த்தனை குறித்த சில தகவல்களை இரு தரப்பினரும் உறுதிப்படுத்த அனுமதிக்கிறது.
சட்டப்பூர்வ வெளிப்படுத்துதல்
எங்கள் சேவையில் வழங்கப்படும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சப்போனாக்கள் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இணங்குவதற்காக, சேவையில் உங்கள் தகவல்தொடர்புகளின் உள்ளடக்கம் உட்பட உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வெளிப்படுத்தலாம். கூடுதலாக, பயனர் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக நாங்கள் நம்பினால், சட்டப்பூர்வக் காரணங்களுக்காக அல்லது ஒரு குற்றத்தைத் தடுப்பதற்காக, Roblox தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கையின் பிரிவு 4-க்கு இணங்கவும், சட்ட அமலாக்க முகமைகள், ஒழுங்குமுறை அமைப்புகள் அல்லது பிற பொது முகமைகளின் (பள்ளிகள் அல்லது குழந்தைகள் சேவைகள் உட்பட) கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, உள்ளடக்கம் உட்பட உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வெளிப்படுத்தலாம்;உங்கள் தனிப்பட்ட தகவல்களின் சேமிப்பு மற்றும் சர்வதேச பரிமாற்றம்
Roblox அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் சேகரிக்கும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அமெரிக்காவில் அமைந்துள்ள பாதுகாப்பான சர்வர்களுக்கு அனுப்பப்பட்டு சேமிக்கப்படுகின்றன. தகவலைச் செயலாக்க அத்தகைய சேமிப்பு அவசியம்.
எங்களது சில ஏஜெண்டுகள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் பிரேசிலுக்கு வெளியே, உதாரணமாக அமெரிக்காவில் உள்ளனர். அமெரிக்கா அல்லது பிற நாடுகளின் தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் பிரேசிலில் உள்ளதைப் போல விரிவானதாகவோ அல்லது அதற்கு இணையானதாகவோ இருக்காது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எங்கு மாற்றினாலும், பிரேசிலிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டப்பூர்வமான சர்வதேச இடமாற்ற பொறிமுறையை நாங்கள் சார்ந்திருப்பதை உறுதி செய்ய நியாயமான நடவடிக்கைகளை எடுப்போம்.
தரவு உரிமையாளராக உங்கள் உரிமைகள்
பிரேசிலில் வசிக்கும் ஒரு தரவுப் பொருள் என்ற முறையில், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான உரிமைகள் உங்களுக்கு உள்ளன. உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதில் உங்களுக்குத் தெளிவும் வெளிப்படைத்தன்மையும் இருப்பதை உறுதிசெய்ய, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி சில வழிமுறைகளை நாங்கள் வழங்குகிறோம். தரவு உரிமையாளர்் என்ற முறையில், உங்களுக்கு பின்வரும் உரிமைகள் உள்ளன:
- உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயலாக்குகிறோமா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகவும்.
- முழுமையற்ற, துல்லியமற்ற அல்லது காலாவதியான தனிப்பட்ட தகவல்களைத் திருத்தவும்.
- தேவையற்ற, அதிகப்படியான தனிப்பட்ட தகவல்கள் அல்லது LGPD-க்கு இணங்காத வகையில் செயலாக்கப்பட்ட தரவுகளை அநாமதேயமாக்குதல், முடக்குதல் அல்லது நீக்குதல்.
- மேற்பார்வை அதிகாரசபையின் விதிமுறைகளின்படி, எக்ஸ்பிரஸ் கோரிக்கை மற்றும் எங்களது வர்த்தக ரகசியங்களுக்கு உட்பட்டு, உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றொரு சேவை வழங்குநருக்கு மாற்றிக் கொள்ளுதல்
- பொருந்தக்கூடிய இடங்களில், உங்கள் ஒப்புதல் திரும்பப் பெறப்பட்டால், அந்த ஒப்புதலின் கீழ் செயலாக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை நீக்குதல்
- நாங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைக் கோருதல்
- ஒப்புதல் வழங்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அவ்வாறு செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தகவல்களைக் கோருதல்
- பொருந்தக்கூடிய இடங்களில், உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறுதல்
- உங்களது தனிப்பட்ட தகவல்களை நாங்கள் யாருடன் பகிர்கிறோம் என்பது பற்றிய தகவல்களைக் கோருதல்
- LGPD-இன் விதிகளுக்கு முரணான செயலாக்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல்
உங்கள் கோரிக்கைகள் எதற்கும் பதிலளிப்பதற்கு முன், உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த சில தகவல்களை வழங்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்கலாம். உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்த பின்னரே உங்கள் கோரிக்கைக்கு நாங்கள் பதிலளிப்போம்.
இந்த உரிமைகள் முழுமையானவை அல்ல என்பதையும், சில சூழ்நிலைகளில் பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். உதாரணமாக, சட்டபூர்வமான, ஒப்பந்தம் சார்ந்த மற்றும்/அல்லது ஒழுங்குமுறை கடமைகளுக்கு இணங்குவதற்கும், நீதித்துறை, நிர்வாக மற்றும் நடுவர் நடவடிக்கைகளில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்துவதற்கும், மற்றும் சட்டப்படி தேவைப்படும் பிற சந்தர்ப்பங்களிலும், தனிப்பட்ட தகவல்களை நீக்கவோ, எதிர்க்கவோ, முடக்கவோ அல்லது அநாமதேயமாக்கவோ நீங்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும், நாங்கள் அவற்றைத் தொடர்ந்து செயலாக்கலாம் மற்றும் வைத்திருக்கலாம். உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த அல்லது கேள்விகளைக் கேட்க, இந்த வாடிக்கையாளர் ஆதரவு படிவம் பூர்த்தி செய்வதன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் தனியுரிமை உரிமைகள் குறித்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, dpo.roblox@leonardi.adv.br, என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அல்லது பிரிவு 1-இல் விவரிக்கப்பட்டுள்ளபடி எங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் எங்களது பிரேசிலிய தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும்.