கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 30, 2026
இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் திட்டத்தின் பயன்பாட்டு விதிமுறைகள் (“நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள்”)என்பவை, உங்களுக்கும் அல்லது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற சமூகத்திற்கும் (“கிரியேட்டர்”) Roblox நிறுவனத்திற்கும் செய்துகொள்கின்ற ஓர் ஒப்பந்தமாகும். இந்தத் திட்ட விதிமுறைகள் Roblox பயன்பாட்டு விதிமுறைகளை (“Roblox விதிமுறைகள்”) குறிப்பாக உள்ளடக்கியவை, ஆகவே அவற்றையும் படித்துப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளுக்கும் Roblox விதிமுறைகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருக்குமளவில், இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளே கட்டுப்படுத்துபவையாக இருக்கும். அடுத்ததாக வரும் இந்தப் பகுதி மிக முக்கியமானது:
இந்த விதிமுறைகளை கவனமாகப் படிக்கவும். தனிநபராகவோ கூட்டுச் செயலாகவோ நீதிமன்றத்திற்குச் செல்லும் உரிமை இல்லாமல், பெரும்பாலான சர்ச்சைகளுக்கு கட்டுப்படுத்தும் நடுவர் தீர்வுக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்ட ஏற்கிறீர்கள். மேலும் தகவலுக்கு, Roblox விதிமுறைகளின் பிரிவு 11-ஐப் பாருங்கள்.
எங்கள் முழு விருப்புரிமையின்பேரில் இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளை நாங்கள் அவ்வப்போது புதுப்பிக்கலாம். காலப்போக்கில் எங்கள் சேவைகள் பரிணமித்து வருவதால், எங்கள் முழு விருப்புரிமையின்பேரில் எப்போது வேண்டுமானாலும், நீட்டிக்கப்பட்ட சேவைகள் உட்பட சேவைகள் அனைத்தையுமோ அல்லது அவற்றின் பகுதியையோ நாங்கள் மாற்றலாம் அல்லது தொடர்வதை நிறுத்தலாம். பொருந்தக்கூடிய சட்டத்திற்குத் தேவையான அளவில், முக்கியமான புதுப்பிப்புகள் அல்லது மாற்றங்கள் பற்றி, தகுந்த அறிவிப்பு முறை ஏதேனும் ஒன்றின் வழியாக உங்களுக்கு Roblox தகுந்த முன்னறிவிப்பை வழங்கும், அதே சமயம் முக்கியமல்லாத மாற்றங்கள், அம்சங்களுக்கான புதுப்பிப்புகள் அல்லது சட்டக் காரணங்களுக்காக செய்யப்படும் மாற்றங்கள் (Roblox தீர்மானிக்கும்படி) அறிவிப்பு இல்லாமல் உடனடியாகவே நடைமுறைக்கு வருவதாகவே கருதப்படும். உங்கள் புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்து நீட்டிக்கப்பட்ட சேவைகள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.
இந்தப் பக்கத்தின் மேல் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள "கடைசியாகப் புதுப்பித்த" தேதி முதல் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். கடைசியாகப் புதுப்பித்த தேதிக்குப் பிறகும் நீங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகளைத் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) தொடர்ந்து பயன்படுத்தினால், அந்த மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக் கொள்வதாகக் கருதப்படும்.
1. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல். இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், பின்வரும் விதிமுறைகளுக்குக் கட்டுப்படவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்: இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், நீட்டிக்கப்பட்ட சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
2. வரையறுக்கப்பட்ட சொற்கள். கீழே வரையறுக்கப்படாத, பெரிய எழுத்துகளில் உள்ள சொற்கள் ஏதேனும் இருந்தால், அவை Roblox அகராதியில் வரையறுக்கப்பட்டபடியே பொருள் குறிக்கும்.
- “கிரியேட்டர் மையம்” என்பது https://create.roblox.test1709.icu என்ற தளத்தில் Roblox வழங்கும் சேவையைக் குறிக்கிறது.
- “நீட்டிக்கப்பட்ட சேவைகள்” என்பது Roblox as “நீட்டிக்கப்பட்ட சேவைகளின்” அம்சங்கள் தொகுப்பின் ஒரு பகுதியாக Roblox உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் சேவைகளாகும். நீட்டிக்கப்பட்ட சேவைகள் Roblox விதிமுறைகளின்கீழ் சேவைகளாகக் கருதப்படுகின்றன. நீட்டிக்கப்பட்ட சேவைகளில் மூன்றாம் தரப்பு சேவைகள் உள்ளடங்காது.
- “நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கு” என்பது நீட்டிக்கப்பட்ட சேவைகளின் குறிப்பிட்ட கூறுகள் மற்றும் அம்சங்களை அணுகுவதற்காக, நீட்டிக்கப்பட்ட சேவைகளுக்கு ஒரு பயனர் பதிவுசெய்யும்போது உருவாக்கப்படும் கணக்கைக் குறிக்கும்.
- “கட்டணம்” என்பது நீட்டிக்கப்பட்ட சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதன் பகுதியாக, Roblox-க்கு நீங்கள் அவ்வப்போது செலுத்த வேண்டியிருக்கக்கூடிய பேமெண்ட்டுகளைக் (ஏதேனும் வரிவர்த்தனை வரிகள் உட்பட) குறிக்கும்.
- “Roblox கணக்கு” என்பது Roblox வழங்கும் சேவைகளையும் செயலிகளையும் அணுகுவதற்காக Roblox சேவையில் உருவாக்கப்பட்ட ஒரு பயனரின் கணக்கைக் குறிக்கும்.
- “விதிமுறை” என்பது பிரிவு 10(a)-இல் மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளின் விதிமுறையைக் குறிக்கும்.
- “நிறுத்தப்படும் தேதி” என்பது பொருந்தக்கூடிய வகையில் பிரிவு 10(b) அல்லது 10 (c)-க்கு இணங்க, ஒரு தரப்பு மற்றொன்றுக்கு வழங்கும் அறிவிப்பில் உள்ளபடி நிறுத்தம் அமலுக்கு வரும் தேதியைக் குறிக்கும்.
- “பரிவர்த்தனை வரிகள்” என்பது விற்பனை, பயன்பாடு, மதிப்புக்கூட்டு, தீர்வை, மொத்த வருவாய், மதிப்பு சதவீதம், சரக்குகள் மற்றும் சேவைகள், இறக்குமதித் தீர்வை, சுங்கக் கட்டணங்கள் மற்றும் பிற வரிகள் என எந்தப் பெயரிலும் இருப்பவை, மற்றும் எந்த வகையிலும் எந்த நாட்டிலும், மாநிலத்திலும் அல்லது உள்ளூரிலும் வழங்கப்படும் எது தொடர்பாகவும் விதிக்கப்படுகின்ற பரிவர்த்தனை வரிகள் அல்லது எந்த வகையான கட்டணங்களையும் குறிக்கும். நீங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக நேரும் ஏதேனும் வரி தாக்கல் செய்வது மற்றும் செலுத்துவது உட்பட, பொருந்தக்கூடிய ஏதேனும் மற்றும் அனைத்து வரிச் சட்டங்களுக்கும் இணங்குவதற்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் அத்தகைய பொருந்தக்கூடிய வரிகளை தாக்கல் செய்வதும், செலுத்துவதும் உங்கள் பொறுப்பாகும். நீட்டிக்கப்பட்ட சேவைகள் விற்பனை விலைகள் பொருந்தக்கூடிய பரிவர்த்தனை வரிகள் சேர்க்கப்படாதவை.
- “டேட்டா ஸ்டோர்ஸ்” என்பது ஒரு பிளேயரின் இன்வெண்ட்ரியில் இருக்கும் விஷயங்கள் போன்ற, பல செஷன்களுக்கு இடையே இழக்காமல் வைத்திருக்க வேண்டிய தரவைச் சேமித்து வைக்க உதவுகின்ற, Roblox வழங்கும் ஒரு சேவையைக் குறிக்கும்.
3. தகுதித் தேவைகள். இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதுடன் கூடுதலாக, நீட்டிக்கப்பட்ட சேவைகள் திட்டத்தில் பங்கேற்று, நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கை உருவாக்குவதற்கு, நீங்கள் காலகட்டத்தின் போது (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) பின்வரும் தேவைகளையும் பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும்:
- நீங்கள் குறைந்தபட்சம் பதினெட்டு (18) அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் முதிர் வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
- உங்களிடம் Roblox கனக்கும் Roblox கணக்குடன் இணைக்கப்பட்ட செல்லுபடியான மின்னஞ்சல் முகவரியும் இருக்க வேண்டும்;
- உங்களிடம் செல்லுபடியான ID இருக்க வேண்டும்;
- உங்கள் மதிப்பீட்டின் நிலை “நம்பகமானவர்” என்று இருக்க வேண்டும்; மற்றும்
- ஒரு கார்ப்பரேஷன், லிமிடெட் லையபிலிட்டி நிறுவனம், பார்ட்னர்ஷிப் அல்லது சட்டப்பூர்வ அமைப்பு நிறுவனத்தின் சார்பாக இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், அந்த அமைப்பின் சார்பாகச் செயல்படுவதற்கான அதிகாரம் உங்களுக்கு உள்ளது என்றும், அத்தகைய அமைப்பு இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறது என்றும் நீங்கள் தெரிவிக்கிறீர்கள். அத்தகைய சூழ்நிலையில், “நீங்கள்” , “உங்கள்” ஆகிய சொற்கள் அந்த அமைப்பைக் குறிப்பவையாகும்.
4. பொருந்தக்கூடிய விதிமுறைகளுக்கு இணங்குதல்
- பொதுவானவை. இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளுக்கு இணங்க, நீட்டிக்கப்பட்ட சேவைகளை நீங்கள் அணுகலாம், பயன்படுத்தலாம்.
- மூன்றாம் தரப்பு சேவைகள். நீட்டிக்கப்பட்ட சேவைகள் தொடர்பாக ஏதேனும் மூன்றாம் தரப்பு சேவைகளை Roblox உங்களுக்குக் கிடைக்கச் செய்தால், அந்த மூன்றாம் தரப்பு சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது அத்தகைய மூன்றாம் தரப்பு சேவை வழங்கிய மற்றும் Roblox விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.
5. உங்கள் பொறுப்புகள்
- தொழில்நுட்ப உதவி. உங்கள் அனுபவங்களை இயக்குவது, ஒருங்கிணைப்பது, அதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவது ஆகியவற்றுக்கு நீங்களே பொறுப்பு. பொருந்தக்கூடிய சட்டப்படி அவசியமாகும் அளவில், தொழில்நுட்ப உதவி அல்லது பிற சேவைகளை வழங்க வேண்டிய கடமை Roblox-க்கு இல்லை.
- இணக்கம். உங்கள் அனுபவங்களும் நீட்டிக்கப்பட்ட சேவைகளின் உபயோகமும் இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்குவதை உறுதிசெய்து கொள்வதற்கு நீங்களே முற்றிலும் பொறுப்பு. உங்கள் அனுபவங்களும் நீட்டிக்கப்பட்ட சேவைகளின் உபயோகமும் இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்குவதை உறுதிசெய்து கொள்வதற்கு நீங்களே முற்றிலும் பொறுப்பாகும். ஏதேனும் மூன்றாம் தரப்பு நீட்டிக்கப்பட்ட சேவைகளைப் பயன்படுத்துவது அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில், நிர்வாகத்தின் கீழ் அல்லது மேற்பார்வையின் கீழ் இருப்பதற்கும், மற்ற வழிகளில் அத்தகைய தரப்பினர் இந்த விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து கொள்வதற்கும் நீங்களே பொறுப்பு என்பதை நீங்கள் அறிந்து ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்களும், உங்கள் கட்டுப்பாட்டின், நிர்வாகத்தின் மற்றும் மேற்பார்வையின் கீழ் எந்தவொரு மூன்றாம் தரப்பும் பின்வரும் வழிகளில் நீட்டிக்கப்பட்ட சேவைகளைப் பயன்படுத்த மாட்டீர்கள் அல்லது பயன்படுத்த அனுமதிக்க மாட்டீர்கள்: (i) உங்கள் அனுபவங்கள் அல்லது சேவைகளுடன் தொடர்பாக (ii) கட்டணங்கள் விதிக்கப்படுவதை அல்லது உபயோக வரம்புகள் அல்லது ஒதுக்கீடுகளைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட விதத்தில்; அல்லது (iii) ஏதேனும் மூன்றாம் தரப்பினரின் உரிமைகள், பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டம் அல்லது Roblox விதிமுறைகளை மீறும் விதத்தில்.
- துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல். உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கு தொடர்பாக துல்லியமான, முழுமையான மற்றும் நடப்புத் தகவலை (கீழே உள்ள பிரிவு 7-இல் மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி ஏதேனும் பேமெண்ட் முறைத் தகவல் உட்பட) எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டியதும், இந்தத் தகவலை எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் வைத்திருப்பதும் முக்கியமாகும். நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கை நாங்கள் இடைநீக்கம் செய்ய வேண்டியிருக்கலாம் அல்லது நிறுத்த வேண்டியிருக்கலாம்.
- அனுபவங்களில் நீட்டிக்கப்பட்ட சேவைகளை இயக்குதல். தகுதித் தேவைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்திசெய்து, நீட்டிக்கப்பட்ட சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்குவதற்காக உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கை அமைத்ததும், உங்கள் அனுபவங்களில் அத்தகைய நீட்டிக்கப்பட்ட சேவைகளைச் (அல்லது பொருந்தக்கூடிய வகையில் அதன் ஏதேனும் பகுதியை) செயல்படுத்துவதற்கு நீங்களே பொறுப்பாகும். கிரியேட்டர் மையத்தில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் அனுபவத்திற்கான டாஷ்போர்டில் கிடைக்கின்ற சேவை இயக்குதல் பக்கத்தில், தகுந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் அம்சத்திற்கு அருகில் இருக்கும் நிலைமாற்றம் பட்டனின் நிலையை மாற்றுவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகளை இயக்கலாம் (அல்லது முடக்கலாம்).
- குழுக்கள்; ஒன்றுக்கு மேற்பட்ட அனுபவங்கள். கிரியேட்டர்களின் குழுவின் (எ.கா. குழுவிற்குச் சொந்தமான அனுபவம்) ("குழு") சார்பாக இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், அந்தக் குழுவின் சார்பாகச் செயல்படுவதற்கான அதிகாரம் உங்களுக்கு உள்ளது என்றும், அத்தகைய குழு இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறது என்றும் நீங்கள் தெரிவிக்கிறீர்கள். அத்தகைய சூழ்நிலையில், “நீங்கள்” , “உங்கள்” ஆகிய சொற்கள் அந்தக் குழுவைக் குறிப்பவையாகும். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட அனுபவங்கள் (அந்த அனுபவங்களில் குழுவிற்குச் சொந்தமான அனுபவங்கள் ஏதேனும் இருந்தாலும் இல்லாவிட்டாலும்), இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வது, உங்களுக்குச் சொந்தமான அனுபவங்கள் எல்லாவற்றுக்காகவும் நீங்கள் இவற்றை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும் என்பதை இதன் மூலம் அறிந்து ஏற்றுக்கொள்கிறீர்கள்.
6. பராமரிப்பு. நீட்டிக்கப்பட்ட சேவைகளில் Roblox அவ்வப்போது, அப்கிரேடுகள், பேட்ச்கள், பிழை திருத்தங்கள் அல்லது பிற பராமரிப்புச் செயல்களைச் செய்யக்கூடும் பராமரிப்பு”). திட்டமிடப்பட்ட பராமரிப்பு பற்றி (அவசரப் பராமரிப்பு தவிர) உங்களுக்கு முன்கூட்டிய அறிவிப்பை வழங்க வணிகரீதியாக தகுந்த முயற்சிகளை Roblox பயன்படுத்தும், Roblox உங்களுக்குத் தெரிவிக்கும் பராமரிப்புத் தேவைகளுக்கு இணங்குவதற்கு தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
7. கட்டணங்கள் மற்றும் பேமெண்ட்டுகள்
- நீட்டிக்கப்பட்ட சேவைக் கட்டணங்கள். நீட்டிக்கப்பட்ட சேவைகளை (அல்லது அவற்றின் குறிப்பிட்ட பகுதிகளை) நீங்கள் பயன்படுத்துவதற்காக Roblox-க்கு நீங்கள் கட்டணங்கள் செலுத்த வேண்டும், அத்தகைய கட்டணங்களைச் செலுத்த நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். ஒவ்வொரு நீட்டிக்கப்பட்ட சேவை ஒவ்வொன்ருக்கான கட்டணங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் விலைகள் பக்கத்தில் உள்ளபடி இருக்கும். பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவில், எப்போது வேண்டுமானாலும் முன்கூட்டிய அறிவிப்பிற்குப் பிறகு, ஏற்கனவே உள்ள ஏதேனும் நீட்டிக்கப்பட்ட சேவைகள் அம்சத்திகு Roblox கட்டணங்களை அதிகரிக்கலாம் அல்லது புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்தலாம.் ஏதேனும் புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் பொருந்தக்கூடிய நீட்டிக்கப்பட்ட சேவை அம்சத்திற்கு சம்பந்தப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலிருந்து அல்லது அத்தகைய தேதி எதுவும் குறிப்பிடப்படாதபட்சத்தில் உடனடியாகப் பொருந்தும்.
- பேமெண்ட் முறை. நீட்டிக்கப்பட்ட சேவைகளுக்கான பதிவுச் செயல்முறையின் பகுதியாக, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது Roblox ஏற்கக்கூடிய பிற பேமெண்ட் முறைகளை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம், மேலும் Roblox ஏற்கக்கூடிய பிற மாற்று பேமெண்ட் முறைகளையும் உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கில் நீங்கள் இணைக்க முடியும் (இது ஒவ்வொன்றும் ஒரு “பேமெண்ட் முறை”). நீங்கள் தேர்வுசெய்த பேமெண்ட் முறையின் தகவலைச் (எ.கா. கிரெடிட் கார்டு தகவல்) சேமித்து வைப்பதற்கு நீங்கள் Roblox-இன் மூன்றாம் தரப்பு பேமெண்ட் சேவை வழங்குநரை அங்கீகரிக்கிறீர்கள். நீங்கள் வழங்கிய பேமெண்ட் முறைகள் அனைத்தையும் பயன்படுத்த உங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என நீங்கள் தெரிவித்து உறுதியளிக்கிறீர்கள். நீட்டிக்கப்பட்ட சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதற்காக (அத்தகைய ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஒரு "பரிவர்த்தனை") உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செல்லுபடியான பேமெண்ட் முறையைப் பயன்படுத்திக் கட்டணம் விதிக்க எங்கள் மூன்றாம் தரப்பு பேமெண்ட் சேவை வழங்குநரை நீங்கள் வெளிப்படையாக அங்கீகரிக்கிறீர்கள். உங்கள் பரிவர்த்தனை தொடர்பான கூடுதல் தகவலை வழங்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்கலாம், இதில் உங்கள் அடையாளம் அல்லது பில்லிங் முகவரியைச் சரிபார்ப்பதும் அடங்கும், ஆனால் அது மட்டுமே அல்ல. ஒரு பரிவர்த்தனையைத் துவக்குவதன் மூலம், இந்த ஒப்பந்தத்தில் உள்ள பேமெண்ட் மற்றும் பில்லிங் கொள்கைகள், நீட்டிக்கப்பட்ட சேவைகள் விலைப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள விலை விவரங்கள், அத்தகைய கட்டணங்களுக்குப் பொருந்தக்கூடியவை என்று பிற வழிகளில் Roblox உங்களுக்குத் தெரிவித்திருக்கக்கூடிய பிற ஏதேனும் கொள்கைகள் ஆகியவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். பரிவர்த்தனைகளுக்குச் செய்யப்படும் பேமெண்ட் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, பணம் திரும்பப்பெற முடியாதவை, பிறருக்கு மாற்றிக்கொடுக்க முடியாதவை.
- பில்லிங். நாள்காட்டி மாதத்தின் முடிவில் அல்லது Roblox குறிப்பிட்ட வேறு கால அளவின் முடிவில், (“கட்டணம் திரளும் காலம்”), கட்டணம் திரளும் காலத்தின்போதான உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் உபயோகத்தின் அடிப்படையிலான எல்லாக் கட்டனங்களுக்காகவும் உங்களுக்கு Roblox ஓர் எலக்ட்ரானிக் பில்லை வழங்கும். எங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், பேமெண்ட் செலுத்தாததால் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அல்லது உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கு மோசடியானதாக இருக்கக்கூடும் என்று நியாயமான முறையில் Roblox தீர்மானித்தால், உங்களுக்கு குறைந்த இடைவெளிகளில் நாங்கள் இன்வாய்ஸ் செய்யக்கூடும். இன்வாய்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள நாணயத்திலேயே கட்டணங்கள் அனைத்தையும் செலுத்த நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். கட்டணம் திரளும் காலத்தின் முடிவில் உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி கட்டணங்கள் அனைத்தையும் உடனடியாக விதிக்க (அதை நீங்கள் செலுத்துவீர்கள்) நீங்கள் Roblox அல்லது எங்கள் மூன்றாம் தரப்பு பேமெண்ட் சேவை பிராசசர் நிறுவனத்தை அங்கீகரிக்கிறீர்கள். சட்டத்தால் அவசியமானால் தவிர, கட்டணங்கள் அனைத்தையும் செலுத்த வேண்டிய உங்கள் கடப்பாடு ரத்துசெய்ய முடியாதது. நீட்டிக்கப்பட்ட சேவைகளின் உங்கள் உபயோகம் குறித்த Roblox-இன் அளவீடே இறுதியானது. உங்கள் உபயோகத்தின் அளவீடு ஏதேனும் வரம்பு அல்லது கிரியேட்டர் மையத்தில் உள்ள உங்கள் அமைப்புகளில் நீங்கள் தேர்ந்தெடுத்த எல்லையை நெருங்கினால் உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட பில்களை வழங்க Roblox-க்கு எந்தக் கடமையும் Roblox-க்குக் கிடையாது. உங்கள் உபயோக வரம்பு, Roblox-இன் இன்வாய்ஸில் உள்ள ஏதேனும் பர்ச்சேஸ் ஆர்டர் எண் அல்லது மற்றவை பற்றி Roblox உங்களுக்கு அறிவிப்பை அனுப்ப வேண்டிய அவசியம் எதுவும் இல்லாமலே, எல்லாக் கட்டணங்களையும் செலுத்த வேண்டியது உங்கள் கடமையாகும்.
- பேமெண்ட் செய்யத் தவறுதல். நீங்கள் தேர்வுசெய்த பேமெண்ட் முறையின் மூலம் செய்யப்பட்ட பேமெண்ட் நிராகரிக்கப்பட்டால், மறுக்கப்பட்டால் அல்லது Roblox அல்லது எங்கள் மூன்றாம் தரப்பு பேமெண்ட் சேவை வழங்குநருக்குக் கிடைக்காமல் போனால் அல்லது ஏதேனும் காரணத்தால் பணம் செலுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டால்: (i) உங்கள் பேமெண்ட் சரியாக செயலாக்கப்படும் வரை நீட்டிக்கப்பட்ட சேவைகளுக்கான உங்கள் அணுகலை நாங்கள் முடக்கலாம், கட்டுப்படுத்தலாம், தடுக்கலாம், இடைநீக்கலாம் அல்லது நிறுத்தலாம் (ஒவ்வொன்றிலும் முழுமையாகவோ பகுதியாகவோ இது செய்யப்படலாம்); (ii) கட்டணங்கள் தொடர்ந்து சேர்ந்துகொண்டே வரக்கூடும், மேலும் அத்தகைய நிராகரிப்பு, மறுப்பு, திருப்பி அனுப்பப்படுதல் போன்ற காரணங்களால் தொகைகளை வசூலிக்க எங்களுக்கு நேரும் ஏதேனும் கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற செலவினங்களை எங்களுக்கு ஈடுசெய்ய வேண்டியது உங்கள் கடமையாகும்; மற்றும் (iii) பேமெண்ட் செலுத்த வேண்டிய தேதியில் இருந்து அது முழுமையாகச் செலுத்தப்படும் வரை, சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவில் தாமதத்திற்கான கட்டணங்களை நாங்கள் வசூலிக்கலாம்.
- ஓவரேஜ் கட்டணங்கள். குறிப்பிட்ட சேவைகளுக்கான இயல்புநிலை வரம்புகளை நீங்கள் மீறிவிட்டு, கட்டணங்கள் சேர்ந்துவிடும்பட்சத்தில், எங்கள் பதிவுகளில் உங்களுக்கான செல்லுபடியான பேமெண்ட் முறை எதுவும் இல்லாமல் போனால், கூடுதல் சேவை உபயோகத்திற்கு ஏற்ற அளவில் உங்கள் Robux பேலன்ஸில் இருந்து Robux-ஐக் கழித்துக்கொள்ள நீங்கள் Roblox-ஐ அங்கீகரிக்கிறீர்கள். அப்படிக் கழித்துக்கொள்வது பற்றி Roblox உங்களுக்கு அறிவிப்பை வழங்கும். உங்கள் Robux பேலன்ஸ் நீங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு போதுமானதாக இல்லாவிட்டால், நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தும் வரை Roblox (a) Robux செலவிடும் வசதியை இடைநிறுத்தி வைக்கலாம் மற்றும் (b) பொருந்தக்கூடிய சேவை வரம்புகளை மீறிவிட்ட அனுபவங்களை தனிப்பட்டவையாக மாற்றி அமைக்கலாம். இயல்புநிலை வரம்புகளுக்குக் கூடுதலாக சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தினால், அது இந்த இழப்பீட்டு அங்கீகரிப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.
- பேமெண்ட் சர்ச்சைகள் & பணம் திருப்பி வழங்கல்கள். நீங்கள் Roblox-க்கு செலுத்திய கட்டணங்கள் தொடர்பாக ஏதேனும் சர்ச்சை இருந்தால், Roblox நல்ல நம்பிக்கையின் பேரில் சர்ச்சையை மதிப்பாய்வு செய்து எங்கள் தரப்பு தான் குறிப்பிட்ட பில்லிங் துல்லியக் குறைக்குக் காரணம் என்று தீர்மானித்தால், நாங்கள் திருத்தப்பட்ட இன்வாய்ஸை உங்களுக்கு அனுப்ப மாட்டோம், மாறாக சர்ச்சைக்குரிய அந்தத் தொகையை உங்களுக்குத் திருப்பி வழங்குவோம். இந்தப் பிரிவின் கீழ் பில்லிங் துல்லியக் குறைகள் காரணமாக நாங்கள் பணம் திருப்பியளிக்கும்போது, நீட்டிக்கப்பட்ட சேவைகளுக்கான ரொக்கமாக மட்டுமே வழங்குவோம். இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகளில் எதுவும் எந்தத் தரப்பிற்கும் கிரெடிட்டை நீட்டிக்கும் கடப்பாட்டை எங்களுக்கு ஏற்படுத்தாது. இந்தப் பிரிவில் அல்லது கீழே உள்ள பிரிவு 10(C)-இல் விவரிக்கப்பட்டுள்ளபடி தவிர்த்து, நீட்டிக்கப்பட்ட சேவைகளுக்காக Roblox-க்கு நீங்கள் செலுத்திய கட்டணங்களின் எந்தப் பகுதிக்கான வேறு எந்தக் கிரெடிட்டையும் (அல்லது பணம் திருப்பி வழங்கலையும்) நீங்கள் பெறமாட்டீர்கள். சர்ச்சையைச் சமர்ப்பிக்க https://www.roblox.test1709.icu/support என்ற தளத்தில் Roblox உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.
- பரிவர்த்தனை வரிகள். பரிவர்த்தனை வரிகள் எதற்கும் நீங்களே பொறுப்பு, மற்றும் பரிவர்த்தனை வரிகளுக்கான கழிவு எதுவும் இல்லாமல் கட்டணங்களுக்கான பணத்தை நீங்கள் Roblox-க்கு செலுத்துவீர்கள். பரிவர்த்தனை வரிகள் எதையேனும் வசூலிப்பது அல்லது செலுத்துவது Roblox-இன் கடமை என்றாகிவிட்டால், பரிவர்த்தனை வரிகள் உங்களுக்கு இன்வாய்ஸ் செய்யப்படும், அந்தப் பரிவர்த்தனை வரிகளை Roblox-க்கு நீங்கள் செலுத்துவீர்கள். பொருந்தக்கூடிய சட்ட எல்லைகளில் பொருந்தக்கூடிய வரி ஒழுங்குமுறைகளுக்கு Roblox இணங்குவதை உறுதிசெய்துகொள்வதற்காகத் தேவைப்படுகின்ற பொருந்தக்கூடிய ஏதேனும் வரி அடையாளத் தகவலை எங்களுக்கு வழங்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் தவறாகத் தகவல் தெரிவித்ததன் காரணமாக செலுத்த வேண்டி வரும் வரிகள், வட்டிகள், அபராதங்கள் அல்லது தண்டனைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு (அல்லது அதற்காக Roblox-க்கு ரியிம்பர்ஸ்மென்ட் வழங்குவதற்கு) நீங்கள் மட்டுமே முற்றிலும் பொறுப்பாகும்
8. அறிவுசார் சொத்து உரிமைகள்.
- Roblox IP. உங்களுக்கும் Roblox நிறுவனத்திற்கும் இடையே, நீட்டிக்கப்பட்ட சேவைகளில் மற்றும் அவற்றுக்கான எல்லா உரிமைகளையும் Roblox நிறுவனமே தக்கவைத்துக் கொள்கிறது, அவை Roblox அறிவுசார் சொத்தாக இருக்கும். நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, Roblox அறிவுசார் சொத்து அல்லது பிற அறிவுசார் சொத்துக்கான மறைமுகமான அல்லது பிற வகையிலான எந்தவித உரிமைகளையோ அல்லது பிற அறிவுசார் சொத்து உரிமைகளையோ உங்களுக்கு Roblox வழங்கவில்லை.
- குழு உரிமைத்துவத்தை மாற்றிக்கொடுத்தல். உங்களுக்கு சொந்தமாக இருக்கும் ஏதேனும் குழு(க்களின்) உரிமைத்துவத்தை வேறு பயனருக்கு மாற்றிக்கொடுக்க நீங்கள் நினைத்தால், தற்போதைய உரிமையாளர் என்ற முறையில் நீங்கள் உரிமை மாற்றச் செயல்முறையைத் தொடங்குவதற்கு சில நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். அத்தகைய குழு(க்களுக்கு) இயக்கப்பட்டிருக்கும் ஏதேனும் நீட்டிக்கப்பட்ட சேவைகளை முடக்குவது, அத்தகைய குழு(க்களுக்காக) செலுத்த வேண்டிய ஏதேனும் நிலுவைத் தொகைகளை செலுத்துவது ஆகியவை அத்தகைய நிபந்தனைகளில் அடங்கும், ஆனால் இவை மட்டுமே அல்ல. அப்படிச் செய்யத் தவறினால், நீங்கள் உரிமை மாற்றச் செயல்முறையைத் தொடங்க முடியாதபடி தடுக்கப்படும்.
9. இடைநீக்கம். இந்த விதிமுறைகளில் உள்ள வேறு ஏதேனும் விதிமுறைகளின் பொதுவான தன்மையை வரம்புக்குட்படுத்தாமல், நீட்டிக்கப்பட்ட சேவைகளின் அல்லது உங்கள் கட்டுப்பாட்டில், நிர்வாகத்தில் அல்லது மேற்பார்வையில் இருக்கும் ஏதேனும் மூன்றாம் தரப்பின் சேவைகளின் உங்கள் உபயோகம், நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள் அல்லது Roblox விதிமுறைகளை மீறுவதாக Roblox-க்குத் தெரியவந்தால், அது குறித்து Roblox உங்களுக்குத் தெரிவித்து மீறலைச் சரிசெய்யுமாறு கோரும். மீறலைச் சரிசெய்துகொள்ளுமாறு Roblox உங்களிடம் கோரியபிறகும் நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், Roblox மீறல் சரிசெய்யப்படும் வரை, நீட்டிக்கப்பட்ட சேவைகளுக்கான உங்கள் அணுகல் மற்றும் அதன் உபயோகம் அனைத்தையும் அல்லது பகுதியை Roblox முடக்கலாம், வரம்புக்குட்படுத்தலாம் அல்லது பிற வழிகளில் இடைநீக்கலாம். இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளின் பிற பகுதிகள் முரண்பட்டாலும், பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்குவதற்கு, முக்கியமான பாதுகாப்பு ஆபத்தை எதிர்கொள்வதற்கு அல்லது பெரிய பொருளாதார அல்லது முக்கிய தொழில்நுட்ப சுமையைத் தவிர்ப்பதற்கு இடைநீக்கம் அவசியம் என்று நியாயமான வகையில் Roblox நம்பினால், நீட்டிக்கப்பட்ட சேவைகள் முழுவதும் அல்லது பகுதியின் உங்கள் உபயோகம் அல்லது அதற்கான அணுகலை உடனடியாக Roblox முடக்கலாம், வரம்புக்குட்படுத்தலாம் அல்லது பிற வழிகளில் இடைநீக்கலாம். இடைநீக்கத்திற்குக் காரணமாக அமைந்த சூழ்நிலை சரியானதும், ஏதேனும் இடைநீக்கத்தை Roblox அகற்றலாம்.
10. கால அளவு மற்றும் நிறுத்துதல்
- கால அளவு. இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள் நீங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளை ஏற்கும்போது அல்லது முதன் முதலில் நீங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகளைப் பதிவிரக்கும்போது, நிறுவும்போது அல்லது அணுகும்போது தொடங்கி, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி நிறுத்தும் வரை தொடரும் (“கால அளவு”).
- Roblox தரப்பில் நிறுத்துதல். தனது சௌகரியத்திற்காக எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு முப்பது நாள் (30) முன்கூட்டிய எழுத்துப்பூர்வ அறிவிப்பின் பேரில் இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட சேவைகளை Roblox நிறுத்தக்கூடும். பொருந்தக்கூடிய சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவில், பின்வரும் சூழ்நிலைகளில் தனது சொந்த விருப்புரிமையின்பேரில் உங்களுக்கு எழுத்துப்பூர்வ முன்னறிவிப்பை வழங்கிவிட்டு, Roblox இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளை உடனடியாக நிறுத்தலாம், (முழுமையாக அல்லது பகுதியாக) நீட்டிக்கப்பட்ட சேவைகளின் உங்கள் உபயோகம் அல்லது அணுகலை இடைநிறுத்தலாம், மாற்றலாம் கட்டுப்படுத்தலாம் அல்லது நிறுத்தலாம்: (i) இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள் அல்லது Roblox விதிமுறைகள் எதையேனும் நீங்களோ உங்கள் கட்டுப்பாட்டில், நிர்வாகத்தில் அல்லது மேற்பார்வையில் இருக்கும் ஏதேனும் மூன்றாம் தரப்போ இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள் அல்லது Roblox விதிமுறைகளின் விதிகள் எதையேனும் மீறினால்; (ii) நீங்கள் Roblox-க்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அல்லது பிற தொகைகளை பொருந்தக்கூடிய நிலுவைத் தேதிக்குள் செலுத்தாமல் போன பிறகு (பதிவுசெய்த பேமெண்ட் முறை பேமெண்ட்டுக்காக வெற்றிகரமாக பிராசஸ் செய்யப்படாமல் தோல்வியடைவது உட்பட), பேமெண்ட் செய்யவில்லை என்பதற்கான அறிவிப்பை (மின்னஞ்சல் மூலமாக அல்லது உங்கள் கிரியேட்டர் மையத்தின் செயல்பாடுகள் பக்கத்தில்) நீங்கள் பெற்றிருந்து, அந்த அறிவிப்பைப் பெற்ற பிறகு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் கூடுதல் அவகாச காலத்திற்குள் அத்தகைய தொகை(களை) நீங்கள் செலுத்தாமல் போனால்; (iii) பிரிவு 3-இல் விவரிக்கபப்ட்டுள்ள தகுதி நிபந்தனைகள் எதையேனும் நீங்கள் இப்போது பூர்த்திசெய்யாமல் அல்லது திருப்திப்படுத்தாமல் இருந்தால்; அல்லது (iv) Roblox விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் பிற காரணத்திற்காக. தெளிவுபடுத்தலுக்காக, உங்கள் Roblox கணக்கிற்கான தகுதித் தேவைகள் உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கிற்கான தேவைகளில் இருந்து வேறுபட்டவை என்பதால், உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கின் நிறுத்தம் அல்லது இடைநீக்கம் உங்கள் Roblox கணக்கைத் தானாக நிறுத்தவோ இடைநீக்கவோ செய்யாது; இருப்பினும், உங்கள் Roblox கணக்கு நிறுத்தப்பட்டால், உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கும் நிறுத்தப்படும் அல்லது உங்கள் Roblox கணக்கு இடைநீக்கப்பட்டால் உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இடைநீக்கப்படும்.
-
கிரியேட்டர் தரப்பில் நிறுத்துதல். நீட்டிக்கப்பட்ட சேவைகளைப் பயன்படுத்துவதை நீங்களும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்த முடியும். கிரியேட்டர் மையத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றி, கிரியேட்டர் மையத்தில் உங்கள் அனுபவத்தின் கீழ் நீட்டிக்கப்பட்ட சேவைகள் பக்கத்தில் உபயோகத்தை முடக்குவதன் மூலம், நீங்கள் இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.
- நிறுத்தப்படும் தேதி வரை சேர்ந்த, செலுத்த வேண்டிய மீதமுள்ள கட்டணங்கள் அனைத்தையும் (அதோடு, பொருந்தக்கூடிய பரிவர்த்தனை வரிகளையும்) செலுத்துவதற்கு தொடர்ந்து நீங்களே பொறுப்பாக இருப்பீர்கள். நீங்கள் நிறுத்தினால், நீட்டிக்கப்பட்ட சேவைகளைப் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமை மேலும் மாற்றங்கள் எதுவுமின்றி உடனடியாக முடிந்துவிடும்.
- பிராந்தியம் சார்ந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தவிர்த்து, நீட்டிக்கப்பட்ட சேவைகளின் உங்கள் உபயோகத்தை அல்லது இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளை நீங்கள் நிறுத்தினால், Roblox-க்கு செலுத்தப்பட்ட கட்டணங்கள் எதையும் திரும்பப்பெற நீங்கள் தகுதிபெறமாட்டீர்கள்.
- நிறுத்தத்தின் விளைவு. இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள் நிறுத்தப்பட்டால்: (i) இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, நீட்டிக்கப்பட்ட சேவைகளுக்கான உரிமைகள் மற்றும் அணுகல் அனைத்தும் முடிந்துவிடும்; மேலும் (ii) இறுதி மின்னணு பில்லை நீங்கள் பெறும்போது அல்லது இறுதி இன்வாய்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளபடி Roblox-க்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் அனைத்தும் உடனடியாக செலுத்த வேண்டியவை ஆகும்.
- தொடர்ந்து செல்லுபடியாதல். நீட்டிக்கப்பட்ட சேவைகள் அல்லது உங்கள் நீட்டிக்கப்பட்ட சேவைகள் கணக்கு அல்லது Roblox கணக்கு நிறுத்தப்படும்போது அல்லது தொடர்ச்சி நிறுத்தப்படும்போது, இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளின் பின்வரும் பிரிவுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்: பிரிவுகள் 7 (மீதமுள்ள கட்டணங்களைச் செலுத்துவது தொடர்பாக (ஏதேனும் இருந்தால்)), 8, 10(d), 10(e), 11, 13, 14 மற்றும் 15.
11. வாரண்டி பொறுப்புதுறப்பு. நீட்டிக்கப்பட்ட சேவைகள் “உள்ளது உள்ளபடி” என்ற அடிப்படையிலும், “கிடைப்பதற்கு ஏற்ப” என்ற அடிப்படையிலும், அவற்றின் குறைகள் அனைத்துடனும் வெளிப்படையான அல்லது மறைமுகமான வாரண்டி அல்லது நிபந்தனை எதுவும் இல்லாமலுமே வழங்கப்படுகின்றன. பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவில், நீட்டிக்கப்பட்ட சேவைகளின் ஏதேனும் பகுதி தொடர்பாக, வர்த்தகத்திற்கு ஏற்ற தன்மை, குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும் தன்மை மற்றும் திருப்திகரமான தரம் குறித்த மறைமுக வாரண்டிகள் உட்பட (ஆனால் அவை மட்டுமே அல்ல), வெளிப்படையான அல்லது மறைமுகமான, சட்டப்பூர்வமான அல்லது பிற வகையிலான, எந்த வகையான அல்லது தன்மை கொண்ட எந்தவொரு மற்றும் அனைத்து வாரண்டிகளையும் ROBLOX வெளிப்படையாகப் பொறுப்புதுறக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள். நீட்டிக்கப்பட்ட சேவைகள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றிக் கிடைக்கும், அது பாதுகாப்பாக அல்லது பிழைகள் இல்லாமல் இருக்கும் என்றெல்லாம் நாங்கள் எந்த வாரண்டியும் வழங்கவில்லை.
12. பீட்டா சேவைகள். பீட்டா சேவைகள் எதுவும் “உள்ளது உள்ளபடி” என்ற அடிப்படையிலும், “கிடைப்பதற்கு ஏற்ப” என்ற அடிப்படையிலும், அவற்றின் குறைகள் அனைத்துடனும் வெளிப்படையான அல்லது மறைமுகமான வாரண்டி எதுவும் இல்லாமலுமே வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு வணிகரீதியாக வெளியிடப்படும் முன்பு Roblox கிடைக்கச் செய்கின்ற எந்தவொரு தொழில்நுட்பம், மென்பொருள், சேவைகள் அல்லது பிற அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்தும்போது (“பீட்டா சேவைகள்”), முற்றிலும் ஆபத்துகளுக்குத் துணிந்தே பயன்படுத்துகிறீர்கள், இதில் தெரிந்த மற்றும் தெரியாத பிழைகளும் அடங்கலாம். எந்தவொரு கால அளவிற்கும் கட்டணத்துடன் அல்லது கடானமின்ரி பீட்டா சேவைகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டியது அல்லது பீட்டா சேவைகளைக் கிடைக்கச் செய்வதும் கூட, Roblox-இன் கடமை அல்ல. நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மேற்கொள்ளப்படும் ஏதேனும் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட, நீட்டிக்கப்பட்ட சேவைகளின் உங்கள் உபயோகம் தொடர்பான உங்கள் கடமைகள் உங்கள் பீட்டா சேவைகளின் உபயோகத்திற்கும் பொருந்தும்.
13. இழப்பீட்டிலிருந்து பாதுகாத்தல். எந்த வழிகளிலும் பின்வருபவை தொடர்பாகவும் நேரும் நியாயமான வழக்கறிஞர் கட்டணங்கள் மற்றும் செலவுகள் உட்பட எல்லாக் கிளைம்கள், கடப்பாடு, சேதம், இழப்பு மற்றும் செலவிலிருந்தும் இணை நிறுவனத் தரப்புகளை இழப்பீடுகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் மற்றும் காப்பளிப்பீர்கள்: (a) நீட்டிக்கப்பட்ட சேவைகளின் உங்கள் அணுகல், பயன்பாடு அல்லது பயன்படுத்தியதாகக் கருதப்படுதல்; (b) (i) இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளின் ஏதேனும் பகுதியை, (ii) இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் பிரதிநித்துவப்படுத்தல், வாரண்டி அல்லது உடன்பாடு, அல்லது (iii) பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டம் அல்லது ஒழுங்குமுறையை நீங்கள் மீறுதல். இழப்பீட்டிலிருந்து நீங்கள் பாதுகாக்க வேண்டிய விஷயம் எதிலும் Roblox-இன் சொந்த செலவில் பிரத்தியேகமாக தற்காப்பு நிலையை எடுத்து, கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள Roblox-க்கு முழு உரிமை உள்ளது (அந்த விஷயத்தில் இழப்பீட்டிலிருந்து காக்க வேண்டிய உங்கள் கடமையை இது வரம்புக்கு உட்படுத்தாது), அபப்டி நடக்கும் பட்சத்தில், அந்தக் கிளைம் தொடர்பாக Roblox-இன் தற்காப்பு நடவடிக்கைக்கு நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
14. கடப்பாட்டிர்கான வரம்பு. சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவிற்கு, எந்தச் சூழ்நிலையிலும் மறைமுகமான, தற்செயலான, பிரத்தியேகமான, விளைவான அல்லது தண்டனையாக நேருகின்ற சேதங்கள் (இலாபங்கள், நற்பெயரின் இழப்பு அல்லது வேறு ஏதேனும் புலனாகாத இழப்புக்கான சேதங்கள் உட்பட) எதுவும், வாரண்டி, ஒப்பந்தம், உரிமைத் தீங்கு (அலட்சியம் உட்பட), சட்டம் சார்ந்த அல்லது வேறு ஏதேனும் சட்டப்பூர்வக் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தாலும், மேலும் சேதம் குறித்து ROBLOX-க்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்களுக்கு இணை நிறுவனத் தரப்புகள் பொறுப்பாக மாட்டார்கள்.
சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச அளவில், எல்லாக் கிளைம்களுக்கும் (வாரண்டி கிளைம்கள் உட்பட) அல்லது இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளில் இருந்து அல்லது அது தொடர்பாக நேரும் செயல் காரணங்கள் அனைத்துக்கும், இணை நிறுவனத் தரப்புகள் உங்களுக்குக் கொண்டிருக்கக்கூடிய ஒட்டுமொத்தக் கடப்பாடு பின்வரும் வரம்புக்கு உட்பட்டே இருக்கும்: (A) நீங்கள் ஒரு கிளைம் குறித்து Roblox-க்குத் தெரிவித்த நேரத்திற்கு முந்தைய பன்னிரண்டு மாதகால கட்டத்திற்கு இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளின் கீழ் Roblox-க்கு நீங்கள் செலுத்திய அல்லது செலுத்த வேண்டிய மொத்தத் தொகை; அல்லது (B) நீங்கள் ஒரு கிளைம் குறித்து Roblox-க்குத் தெரிவித்த நேரத்திற்கு முந்தைய பன்னிரண்டு மாத கால கட்டத்தில் இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகளின் கீழ் நீங்கள் Roblox-க்கு நீங்கள் செலுத்திய அல்லது செலுத்த வேண்டிய மொத்தத் தொகை; அல்லது (B) நீங்கள் ஒரு கிளைம் குறித்து Roblox-க்குத் தெரிவித்த நேரத்திற்கு முந்தைய பன்னிரண்டு மாத கால கட்டத்தில் Roblox-க்கு நீங்கள் தெரிவித்த நேரத்திற்கு முந்தைய பன்னிரண்டு மாத கால கட்டத்தில் நீங்கள் Roblox-க்கு எந்தக் கட்டணமும் செலுத்தாதபட்சத்தில்: $1,000 USD.
15. நிர்வகிக்கும் சட்டம். இங்கு வேறு விதமாகக் குறிப்பிட்டால் தவிர, சட்டத்தின் முரண்பாட்டுக் கோட்பாடுகளைப் பொருட்படுத்தாமல், இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் விதிமுறைகள் கலிபோர்னியா மாநிலத்தின் சட்டங்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன. சிறு கிளைம்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் தவிர, Roblox விதிமுறைகளின் பிரிவு 11-இல் விவரிக்கப்பட்டுள்ளபடி நடுவர் தீர்வு ஒப்பந்தத்திற்கு உட்படாத சர்ச்சை எதுவும் (ஏதேனும் காரணத்தால் நடுவர் தீர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த முடியாததாக ஆவது உட்பட) ஃபெடரல் அல்லது கலிபோர்னியா மாநிலத்தின் சான் மேட்டியோ கவுண்ட்டி நீதிமன்றங்களில் மட்டுமே தாக்கல் செய்யப்பட முடியும். மேலும் ஐரோப்பிய யூனியனின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை வேறுவிதமாகக் குறிப்பிட்டால் தவிர, அத்தகைய நோக்கங்களுக்கு அந்த நீதிமன்றங்களின் சட்ட எல்லைக்கு நீங்களும் Roblox நிறுவனமும் ஒப்புக்கொள்கிறீர்கள்.